வியாழன், 11 அக்டோபர், 2012


PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்

 
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!


நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.

ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும்  2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.

இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு...  மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!

'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது.  நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........

"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம்  பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.

அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)

இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்... 

தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!

அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது.  அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.

சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம்  யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர். 

இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி...  நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..? 

அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
 .
மேலும்,  விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.

அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால்  அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.

இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.

கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.

முஹம்மது ஆஷிக் Citizen of the world என்ற இணையதளத்தில் 

திங்கள், 1 அக்டோபர், 2012

குர்ஆனில் எழுத்து பிழைகள் -விவாதம் டிஎன்டிஜே VS தூத்துக்குடிஉலமா சபை



பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,,,
தூத்துக்குடியில் டிஎன்டிஜே வும் ஷேக் அப்துல்லா ஜமாலியின் ஜமாத்துல் உலாம சபையும் குர்ஆனில் எழுத்து பிழைகளா ?என்ற தலைப்பில் விவாதத்தை நேற்று  துவக்கினார்கள் .நேற்றைய விவாதத்தில் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்று இதுவரை எந்த முஸ்லிம்களும் சொன்னதில்லை ,யூதர்கள் மட்டுமே அவ்வாறு சொல்லி வருகின்றனர் என்று ஜமாலி தரப்பினர் குற்றசாட்டு வைத்து அதற்கு  answering islam  என்ற இணைய தளத்தில் இருந்து பிரின்ட் அவுட் எடுத்து ஆதாரம் வைத்தனர்.
குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை ஹிஜ்ரி 5ஆம் நூற்றாண்டில் பாக்கியான் என்னும் முஸ்லிம் அறிஞர் கூறியதையும் இப்னு ஹுதைபா,தப்ரி கூறியுள்ளதையும் ஆதாரமாக டிஎன்டிஜே எடுத்துவைத்து அவர்கள் வாதத்தை உடைத்ததோடு நில்லாது அவர்கள் கூறிய யூதனும் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை நேரடியாக கூறாமல் ,ஒரு முஸ்லிம் அறிஞரின் கருத்தையே எடுத்து மேற்கோள் காட்டி கூறியுள்ளதையும்  நிருபித்து ஜமாலி குருப்பின் ஆதாரங்களை தவிடுபொடியாக்கினார்கள் .
அடுத்து குர்ஆனில் நுன்ஜி என்று வரக்கூடிய சொல்லில் நூன் விடுபட்டு நுஜி என்று எழுதப்பட்டிருப்பதையும் அதில் விடுபட்ட நூன் சிறிதாக மேலே சேர்க்கப்பட்டிருப்பதையும் எடுத்து வைத்து குர்ஆனில் பிழை உண்டு என்று தங்கள் வாதத்தை நிலை நிறுத்தினார்கள் இதை மறுக்க பல திரிபு வாதங்களை எடுத்து வைத்து சமாளிக்க முயன்ற ஜமாலி வகையறாக்களின் வாதங்கள் சல்லடையாக்கப்பட்டது 
மேலும் ஜமாலி மாணவர் முஸ்தபா என்பவர் லாகின்ன ,போன்ற நாலு சொற்களை  மட்டுமே வைத்துக் கொண்டு அதிலுள்ள பிழைகளை சொல்லுமாறு மீண்டும் மீண்டும் வேண்டி வந்தார் .அவர் அவ்வாறு கோருவது தவறு..ஏனெனில் தலைப்பு குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டுஎன்றும் இல்லை என்றும் என்பதே .அவ்வாறிருக்க எழுத்து பிழைகள் எதுவானாலும் சொல்லலாம்.குர்ஆனில் பிழையான வார்த்தைகள் என்று சொல்லப்பட்ட லாகின்ன ,போன்ற சொல்லில் பிழை இல்லை என்பது மட்டுமே தலைப்பாக இருந்தால் அந்த சொற்களோடு நிற்க முடியும்  ஆனால் அதற்கு மாற்றமாக குர்ஆனில் எழுத்து பிழைகள் இல்லை என்று பொதுவாக சொல்லி விட்டு நான்கு சொற்களில் மட்டுமே நிற்பது தலைப்புக்கு மாற்றமானது 
இறுதியில் லாகின்ன என்ற சொல் எழுதப்பட்ட நிலையிலும் உள்ள.தவறுகள் விளக்கப்பட்டது.அத்ற்கு கடைசி வாதத்தில் லாகின்ன கேட்டு துடித்துக் கொண்டிருந்த முஸ்தபா கடைசி 15 நிமிடங்களையும் அவர் எடுத்து அதற்கு விளக்கம் தந்திருக்க வேண்டும் .ஆனால் ஜமாலி குறுக்கிட்டு சொதப்பி அதன் பின்னர் முஸ்தபாவும் உளறி நேரம் முடிந்தது .

விவாதம் 2 வது  நாள் 

லாக்கின்ன,லிதஸ்லூவ ,லி யப்லூவ ,வ நப்லூவ என்ற சொற்களில் உள்ள பிழைகள்பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த முஸ்தபா முதலில் சொல்லப்பட்ட லாக்கின்ன என்ற சொல்லில் உள்ள பிழையை கூட நிருபிக்க முடியாமல் தவித்தார். அந்த ஒரு சொல்லில் கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த ஆய்வுகள் அவருக்கு கைகொடுக்கவில்லை .ஆக டிஎன்டிஜே தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட னுஞ்சி என்ற சொல் பிழையாக நுஜி என்று எழுதப்பட்டுள்ளதை அவர்களால் மறுத்து  ஆதாரங்கள் தரமுடியவில்லை .மேலும் அவர்கள் தர்ஜுமாவில் சொல்லப்பட்டுள்ள 19 பிழைகளில்  நான்கை மட்டும்  விளக்கம் கேட்டு வற்புறுத்தி வந்த முஸ்தபா அதில் ஒன்றை கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க இயலாமற் சகாபாக்களை குறை  சொல்லிவிட்டார்கள் என்று ஆரம்ப முழக்கத்தையே இறுதி முழக்கமாக முழங்கிக் கொண்டு சென்றார்.

இரண்டு விவாதங்கள் நடத்தி அதில் தனது கொள்கைகளை நிலை நிறுத்தமுடியாமல் வெறும் சால்ஜாப்புகளையும் ,வெளிப்படையான சமாளிப்புகளையும் வைத்து வாதாடிய ஜமாலி இந்த விவாதத்தில் கலந்து கொண்டார். இவர் கலந்து கொள்வதை ரகசியமாக வைத்து பெரிய ஒரு பூச்சாண்டி காட்டுவது போல தங்களைத்தானே ஏமாற்றிக் கொண்டனர்.  ,பீஜேயுடன் யாரும் விவாதிக்க முன்வராத நிலையில் ஜமாலி தனது கோமாளித்தன வாதங்களுடன் களியக்காவிளை விவாதம் நடத்தி அதில் தன்னைத்தானே வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட சர்க்கஸ் கோமாளி விவாதம் நடத்திய பிறகு அறியாத மக்களிடம் பிரபல்யம் ஆகி அதன் மூலம் பல் இடங்களில் கூட்டங்கள் நடத்த offer கிடைத்தது .இஸ்லாத்திற்கு புதிதாக வந்தவர்களுக்கு முஸ்லிம்களிடையே கிடைக்கும் மரியாதை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தி பண அறுவடை செய்து கொண்ட பெரியார் தாசன் போல ,அதன் பின்னர் பெரியார்தாசனும் பாக்கரும் முகவரி இல்லாமற் போனது போல ஜமாலி நிலையும் கேட்பார் இல்லாமற் போயிற்று.அடுத்து அவர் ,உருவம் அற்ற இறைவன் என்பது முஸ்லிமகள் மத்தியில் ஊறிப்போன விஷயம் அதற்கு மாற்றமான கருத்துடைய பீஜே யுடன் அதன் பின்னர் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் நடத்திய விவாதமும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை .
அதன் பின்னர் ,குர்ஆனில் பிழைகள் என்று பீஜே சொல்லுகிறார். முஸ்லிம்களே 
அய்யையையோ இது அபத்தம் என்று கூறி நாம் நேரடியாக அழைத்தால் அவர் நோக்கம் புரிந்து ஜமாலியின் விளம்பர வேட்டைக்கு பலியாகிவிடக் கூடாது என்று டிஎன்டிஜே மறுத்துவிடும் என்பதால் ,தனது மாணவர் ஜிப்பாவுக்குள் ஒழிந்து கொண்டு விவாதத்திற்கு ஒப்பந்தம் போட்டு கள்ளத்தனமாக் விவாதத்தில் கலந்து கொண்டார்.
விவாதத்தில் எப்போதும் பீஜே அவர்களின் பல வாதங்களை மறுத்து சால்ஜாப்புகளுடன் சமாளித்து வரும் ஜமாலி ,பீஜேயின் வாதங்களால் அவர் மாறியிருக்கும் நிலையை பகிரங்கமாக இறைவன் வெளிப்படுத்தி விட்டான் களியக்காவிளை விவாதத்திர்க்கான கடித பரிமாற்றங்களில் உள்ள கடிதங்களில்  786/92 என்று பிஸ்மில்லாஹ்வுக்கும் கிர்கரிக்கும் அப்ஜத் முறையில் எழுதிய அவர் இப்போது அவர் 786 என்று எழுதுவதில்லை என்றும் பிஸ்மில்லாஹ் என்றுதான் உண்ண முடியும் 786 என்று சொல்லி உண்ண முடியுமா? என்று கேட்டு நீங்கள்தான் நபி [ஸல்] அவர்கள்  சொல்லுக்கு மாற்றமாக இறைவனின் திருப் பெயரால் ,,, என்று எழுதுவதாகவும் கூறினார் .இதை அவர் சொன்னதும் அதை ரசித்து அவர்கள் தரப்பில் வந்த பார்வையாளர்கள் சிரித்தனர்..அதன் பிறகு அங்கு வந்த பார்வையாளர் ஒருவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் 786 எழுதியுள்ளதையும் சுட்டி காட்டி அந்த அட்டையை பீ ஜெவிடம் கொடுத்தார்.இந்த அடையாள அட்டையில் 786 எழுதியதற்கும் ஜமாலிக்கும்  எவ்வித தொடர்பும் இல்லை யென்பது வேறு விஷயம் .அதைப்போல அங்கு வந்த மக்களுக்கு அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்தெரியாது என்பதும் மற்றொரு விஷயம்..ஆனால் களியக்காவிளை விவாதத்திற்கு முன்னர் 786/92 என்று எழுதியதோடு அந்தவிவாததில் அப்ஜதுக்கு ஆதரவாக வாதாடிய ஜமாலி இன்று நாம் 1980-90 களில் 786 ஐ கேலி செய்தது போல இன்று அவரும் கேலி செய்ததோடு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ,,,,,,,என்று தான் எழுத வேண்டும் என்று திருநெல்வேலிக்கார னுக்கே அல்வா கொடுத்தார் போல நமக்கே பிஸ்மில்லாஹ் பற்றி சொல்லுமளவில் மாறிவிட்டார் .அல்ஹம்துலில்லாஹ் 
முஸ்தபா நல்ல வாதங்களுடன் விவாதிக்க வந்திருந்தால் ,அவர் தனது வாதத்தில் பீஜே தர்ஜுமாவில் அறிவிக்கப்பட்டுள்ள 19 பிழைகளையும் அடுக்கி அவைகளில் பிழைகள் இல்லை என்பதற்கான தனது ஆதாரங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும் .அதோடு நில்லாது அவர் எதிர் பார்க்காத நிலையில் பீஜே தரப்பினர் பிழைக்கு கூடுதலாக வைத்த னுஞ்சி பற்றியும் அவர் இறுதியில் பேசியிருக்க வேண்டும் .ஆனால் அதற்கு திராணியற்ற அவர் தனது ஈராண்டு ஆய்வு செய்த லாக்கின்ன போன்ற நாலு சொற்களையாவது அவராகவே முன்வந்து பிழைகள் இல்லை என்பதையும் நிருபித்து காட்டியிருக்க வேண்டும்.மாறாக லாகின்ன போன்ற நாலு சொற்களில் உள்ள பிழைகள் சொல்லுங்கள் என்று எதிர் தரப்பினரிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தது அவர் அறைவேக்காடாகவே வந்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது .எவ்விதத்திலும் எதிர்கொள்ளாமற் பீஜே  தரப்பினருக்கு பாடம் நடத்துவதாக நடித்துக் காண்பித்தார். அதை அவர்கள் தரப்பினர் படம் எடுத்துள்ளார்கள் .படபிடிப்பில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் அவரது தரப்பில் வந்திருந்த மக்களும் நாரே தக்பீர் கோசங்கள் முழங்க கர கோசத்துடன் சென்றனர்.