புதன், 22 டிசம்பர், 2010

வாக்கிங் மேரேஜ் அல்லது லிவ்விங் டுகெதர்


செங்கொடி,
///நீங்கள் மீள்பார்வை செய்யாவிடினும், உங்கள் தவறான நிலைப்பாடுகளால் நீங்கள் இடறும்போது கம்யூனிஸ்ட்கள் எங்கள் கரம் நீளும் உங்களைத் தாங்கிப் பிடிக்க, ஏனென்றால் அது எங்கள் கடமை///முதலில் உங்களது போலி கம்யுனிஸ்ட்களை தாங்கி பிடியுங்கள்.அதற்க்கான வலு உங்கள் கரங்களுக்கு இருக்கிறதா என்று பாருங்கள்.எனக்கு நான் நம்பும் வல்லமை மிக்க அல்லாஹ்  உள்ளான். 
முதலில் நீங்கள் ஒரு வித்தியாசத்தை பார்க்கவேண்டும்.பண்டைய காலத்து ஆய்வு நூல்கள் ஒரு நபர் தனது ஆய்வுக்கு உட்பட்டு தனக்கு கிடைத்ததை அவ்வாறாகவே தந்திருப்பார்.மேலும் அது ஒரு தனி மனித சக்திதான்.ஆனால் ஹதீத் தொகுப்புகள் வரலாற்று நூல்களை விட ஆதாரப்பூர்வமானவை.ஒரு மனிதனிடமிருந்து செய்திகள் பெறும்போது அந்த மனிதனின் செயல்பாடுகள்,ஞாபக சக்தி,அவருக்கு அந்த செய்தி கிடைத்த வழி,என்று பல்வேறு கோணங்களில் ஆராயிந்து எழுதப் பட்டதோடு அதன் பின் அந்நூல்கள் பற்றி ஆய்வு செய்து அந்நூல்கள் பற்றிய  விளக்க நூல்கள் எழுதப் பட்டுள்ளன.ஒரு மனிதரின் சொல்,செயல்,அறவுரைகள்,பற்றி உண்மை நிலை அறிந்து கொள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப் பட்டன.உலகத்தில் இதுபோன்று எந்த பிரச்னைகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளனவா எண்பது சந்தேகமே. போன நூற்றாண்டு மனிதர்களைப் பற்றியே பக்கம்,பக்கமாக மறுப்பு எழுதும் நிலை. ஆனால் முகம்மதுநபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமாக வைக்கப் பட்டுள்ளது.அவைகள் கதைகள் என்று அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் கதை என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.
///ஆதாரம் என்ன என்று கேட்பதெல்லாம் பதில் சொல்வதினின்று நழுவும் ஒரு உத்தி. /// 
ஆதாரம்  கேட்டால் அதைத் தருவதுதான் சரி.ஆதாரம் தராமல் இருக்க இப்படி ஒரு உத்தியா? 
///உங்களின் நோக்கம் சோசலிச கால ரஷ்யாவையும் மகஇக வையும் இழிவு படுத்தவேண்டும் என்பதாகத்தான் தெரிகிறது///
கம்யுனிசம் தான் தீர்வு என்று சொல்லக் கூடியவர்கள் அந்த கம்யுனிசத்தின் அடையாளங்களான உங்கள் ம.க.இ.க வையும் உங்களது அபிமானா ரஷ்யாவை பற்றித்தான் கேட்கமுடியும்.ஆணாதிக்க ஒழிய அரும்பாடு படும் போலி பொது உடமைவாதிகளை தவிர்த்து, உங்களிடம் பெண்களின் பங்கு எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள  கேட்பது தவறா?
.//குருப்ஸ்கயா உட்பட யாரைப் பற்றியும் உங்களுக்கு நான் சொல்லவும் போவதில்லை///
எங்கப்பன் குதிருக்குள் இருக்கிறார் என்பதை நான் சொல்லப் போவதும் இல்லை.நன்றி 
 ///எந்த சோசலிச தலைவர் பாலியல் குற்றம் செய்தார்? கூற முடியுமா உங்களால்?///
உங்களது மார்க்ஸ் அவர்கட்கு மனைவி மூலம் ஏழு குழந்தைகளும் ,வேலைக்கார துணைவி மூலம் ஒரு குழந்தையும் உண்டு என்று நான் கேள்விபட்டது உண்மையா?
/// காமம் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒருவித உணர்ச்சி, ஒருவனுக்குள் இருக்கும் தனியுடமை, ஆணாதிக்க எண்ணங்கள் அந்த உணர்ச்சியை கேடான வழிகளில் பயன்படுத்தி குற்றம் செய்யத்தூண்டுகிறது என்பது தான் ///
 இதைத்தான் மிருகங்களிலும் பெண் இனங்களை ஆணினம்  துரத்திக் கொண்டு அலைகின்றன அப்படியெனின் அதவும் ஆணாதிக்கமா? என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்.                             பெண் களுக்கென்று  இயற்கையான சில குணங்கள்  உண்டு என்பது போல் ஆண்களுக்கும் இயற்கையான  குணங்களில் காம வெறியுனர்வும் ஒன்று .அதை கட்டுபடுத்துபவன் மனிதனாக இருக்கின்றான் இயலாதவனை இஸ்லாமிய சட்டங்கள் கொண்டு கடுமையாக கண்டித்தால்தான் உண்டு.
 பாலியல் குற்றங்களுக்கு ஆணாதிக்கமும் தனியுடமையும்தான் காரணம் என்றும் அதற்குரிய தீர்வு கம்யுநிசம்தான் என்று கூறி வருகிறீர்கள்.எந்த ஒரு தீர்வுக்கும் முன்மாதிரியையோ, சோதனையோ பரிட்சித்து பார்ப்பதுதான் பொது நியதி.அதே போன்று கம்யுனிச தீர்வுக்கு காட்டுங்கள் என்றால் கம்யுனிச ஆட்சி உலகில் இதுவரை எங்கும் இல்லை என்றும் கம்யுனிச தீர்வுக்கு[ஊருக்கு]செல்லக் கூடிய பாதை சோசலிசம் என்றும் அந்த பாதையின் ஆட்சியும் தற்போது இல்லை ,முன்பு ரஷ்யாவில் இருந்தது என்றும் கூறியுள்ளீர்கள்.உங்களது அமைப்பு ரீதியாக செயல்பட்டு காட்டுங்கள் என்றால் ஒரு தேசத்தாலே முடியாது,உலகம் முழுவதும் கொண்டுவந்தால்தான் செயல் படமுடியும் என்று சொன்னால்,போலி வார்த்தைகளில் மயங்கும் அறுநூறு கோடியில் ,ஆறு கோடிகூட ஏற்று கொள்ளமாட்டார்கள் அல்லவா?கடற்கரை ஓரத்தில் நின்றுகொண்டு கண்ணுக்கு எட்டாத தூரத்தை காட்டி ,அதோ பார்,அங்கேதான் கன்னித்தீவு இருக்கிறது,அங்கே போனால் லைலா கிடைப்பாள் என்றால்,சரி,எப்படி போவது என்று கேட்டால்,முன்பு அங்கு செல்ல சோசலிசம் எண்ணும் பாலம் கட்டினோம் ,கட்டத் தொடங்கிய சில நாட்களிலே பாலம் இடிந்துவிட்டது,இப்போது கப்பல் செய்வதற்கு காகிதத்தை சேர்த்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உங்களது தற்போதைய நிலை. இஸ்லாம் அதற்க்கான தீர்வை மக்கள் மத்தியில் வைத்துவிட்டதோடு செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது.இஸ்லாமிய பாதையில் செல்லும் ஆயிரம் பேருக்கு ௦0 13 பேர் சாலை வீதிகளை மீறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு தண்டனை கொடுத்தும் திருந்தவில்லை என்றால்,உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும்  ஆயிரம் பேருக்கு ஒரு நபர் சாலைவிதிகளை மீறுவது பதிவு இல்லாமல் இருக்கிறது என்ற காரணத்திற்க்காக , கடற்கரைக்கு அழைத்து சென்று கன்னிதீவை காட்டுவீர்களா?
நீங்கள் கம்யுனிச  தீர்வை சொல்லாவிட்டாலும் இப்போது ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.அதாவது தனிவீடு,உடைமைகள் ஒன்றும் கிடையாது,எல்லோரையும் ஒரே பண்ணையில் அடைத்து வைப்பீர்கள்.காலையில் அவர்களை அழைத்து ஏர்பூட்டி உழவைப்பீர்கள். ,மாலையில் பண்ணைக்கு திரும்ப வேண்டும்,இரவில்" வாக்கிங் மேரேஜ்" அல்லது "லிவ்விங் டுகெதர்" போல் விரும்பியவர்களோடு ஆசை,காமம்,இன்பம் இவற்றுக்காக அல்லாமல் இனப் பெருக்கத்திர்க் காக பாலியல் தேவையைதீர்த்து கொள்ள வேண்டும். அதன்மூலம் பிறக்கும் குழந்தைகள் தனி ஒரு பண்ணையில் அடைக்கப்  படுவார்கள். அங்கு அவர்களுக்கு ஒரே மாதிரியான உணவு ,உடை கல்வி கொடுத்து வளர்த்தால் அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிவில் வளருவார்கள். என்று வைத்துக் கொள்வோம்.[ஒரே பசு ஈன்ற,ஒரே தொழுவத்தில் வளர்ந்த மாடுகள் கூட ஒன்று பக்கத்தில் போனாலே முட்டுகிறது,ஒன்று அதில் ஏறி உட்கார்ந்தால் கூட கண்டு கொள்வது கிடையாது]ஆனால் நமது கம்யுனிச பண்ணையில் வளர்ந்த மனிதர்கள் ஒரே அறிவை பெறுவார்களே யானால்,குப்பை கூடுவதும் கூட்டாட்சி பண்ணுவதும் யார்?எண்பது ஒரு ஓரத்தில் இருக்கட்டும் ,அவர்களும் இனபெருக்கதிர்க்காகத்தான் உடலுறவுகள் கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் யார்?ஆண்களும் பெண்களும் சமம் என்பதால்,அங்கே பாத்ரூம்கள்,பெட்ரூம்கள் எல்லா குழந்தைகளுக்கும் பொதுவாகத்தான் இருக்கும் ,அப்படித்தானே,செங்கொடி,அவ்வாறெனின் குழந்தைகளுக்கெல்லாம் குழந்தைகள் பிறந்து விடுவார்கள் என்பதை தீர்க்கதரிசனம் இல்லாமல் அற்பதரிசனமாக  சொல்லிவிடலாம். ஆகஇவைகளை நீங்கள் அனுமதிக்கப் பட்ட பாலியல் செயல்கள்தான் என்றால் கண்மூடி திறப்பதற்குள்,மார்க்ஸ் தத்துவம்,லெனின் ,ஸ்டாலின் காலத்தை கடந்து,குருச்சேவ் ,கோர்பசேவ் காலாத்திர்க்கு  வந்து பழைய    காரசேவு தான் போங்கள். அப்புறம் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம்,   
 ////எல்லா இடங்களிலும் சமையல் கூடங்களையும், குழந்தை வளர்ப்பு மையங்களையும் தொடங்கியது////
இந்த மையங்களில் தான் பிரதம சர்வாதிகார தொழிலாளி,பொலிட்பீரோ தொழிலாளிகள்,அமைச்சர் தொழிலாளிகள்,அரசு அதிகார தொழிலாளிகள் ஆகியோரின் குழந்தைகள் வளர்ந்தார்களா?அவர்கள் இனபெருக்கத்திர்க் காண பாலியல் தேவைகளுக்கு தனியுடமையில் தீர்வுகண்டார்களா?பொது உடமையில் தீர்வு கண்டார்களா? என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறான தீர்வை வைத்து கொண்டு முஸ்லிம் ஆண் தோழரும் பெண் தோழரும் இஸ்லாமிய பதிவில் திருமணம் புரிந்ததை எப்படி புரட்சி திருமணம் என்று செய்தியாக்கிநீர்கள்?உங்களளவில் உங்கள் கொள்கையில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத நீங்கள் 1400.ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் இஸ்லாத்தை விமர்சிக்க தகுதி உள்ளதா என்று சிந்தியுங்கள்.                          



நான் உங்களிடம் பெண்களுக்கு இன்னும் என்ன உரிமைகள் இல்லை என்னென்ன உரிமைகள் வேண்டும் என்பதே ?என்று கேட்டால் இப்படிக் கேட்பதின் மூலம் ஆண்தான் பெண்ணுக்கு சிற்சில சலுகைகளை தேவையைப் பொருத்து வழங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை கோடிட்டுக் காட்டியதன் மூலம் இது ஆணாதிக்க சமூகம் என்பதை நீங்களும் உணர்ந்தே தான் இருக்கிறீர்கள் அல்லவா? நாம் நிகழும் உலகை பற்றி தான் இங்கே பேசுகிறோம்,முன்பு இருந்ததை சொல்லுவதை விட இப்போது என்ன இல்லை என்று சொல்லுங்கள்
 . ////ஆண் தன்னுடைய சம்பளப் பணத்தை சுதந்திரமாக செலவு செய்வது போல் பெண்ணால் செலவு செய்துவிட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினாலே போதும், இந்த சமம் பல்லிளித்துவிடும்////இப்போதைய இளைய சமுதாயத்தை பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்தே வாழுகிறார்கள்.நீங்கள் சொல்லுவது போல் தன்னுடைய சம்பள பணத்தை ஆண்களாலும் சுதந்திரமாக செலவளிக்கமுடியாத சூழ்நிலையும் அதிகரித்துள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு பாமரத்தனமாக தெரியலாம்,ஆனால் எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்
 ////சோசலிசம் நீண்ட காலமாக நடப்பிலிருந்தால் அது எதை தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறதோ அதை அடையும் என்று கூறுவது வெற்றுக்கற்பனையாக ஒருபோதும் இருக்க முடியாது.////

///கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும், அதற்கு நான் தண்டனை தருவேன் என்பதுதான் இஸ்லத்தின் சாராம்சம். ////.கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் என்று இஸ்லாம் உண்மை நிலையை சொல்லுகிறது,அதற்க்கான தண்டனைகளை சொல்லுகிறது.இரண்டு வழிப் பாதையை நான்கு வழி ,எட்டுவழிப்பாதை யாக்கினாலும் விபத்துக்கள் குறையுமே தவிர விபதத்தே நடை பெறாமல் இருக்காது..எங்களிடம் முதலீடு செய்தால் பத்து சதவீத வட்டி என்று விளம்பரம் செய்யும் மோசடி கம்பெனி போல் சோசலிசத்தையும் விளம்பரம் செய்யாதீர்கள். 
 ////பெண்களும் ஆண்களும் ஒரே பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதை (முகம்மது அனுமதித்ததை) உமர் ஏன் தடுத்தார்? அந்த உமரின் ஆட்சியில் பள்ளிவாசல்வரை பாலியல் குற்றங்கள் நீண்டிருந்தது உங்களுக்கு புரியவரும்///
தவறு ,உமரி[ரலி] ஆட்சியில் தடுக்கப் படவில்லை.உமர்[ரலி]அவர்களின் மகன் இப்னுஉமர்[ரலி]அவர்கள் ,,பெண்கள் அதிகமாக சப்தமிட்டு சிரிப்பது போன்ற காரணங்களை மனதிற் கொண்டு ,தனது தந்தையிடம் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்யுமாறு  வேண்டுகிறார்கள்..ஆனால் உமர்[ரலி]அவர்களோ,முகம்மதுநபி[ஸல்]அவர்கள் அனுமதித்ததை நான் ஒருபோதும் தடை செய்ய மாட்டேன்,என்று மறுத்துவிட்டார்கள்.இப்போது உங்களுக்கு புரிய வரும் என்று நினைக்கின்றேன்.  மற்றும் பெண்கள் தகப்பன் இறந்தால் கொள்ளி வைக்க முடியுமா?கணவன் இறந்தால்  மல்லி வைக்க முடியுமா?என்பதெல்லாம் என் முன் உள்ள கேள்விகள் அல்ல.இஸ்லாத்தில் மந்திரங்கள் இல்லை .திருமணத்திற்கு "வலி"எண்ணும் பெண்ணின் பொறுப்பாளர் ஆண்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைதான் இருக்கிறது .ஏனெனில் வாட்ச்மேன் தான் உண்டு.சோஷலிச ரஷ்யாவில்  வாட்ச்விமன் உண்டா?அதனால் சில பொறுப்புகளை யாரிடம் கொடுத்தால் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் வலி"ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
////அரசு பொறுப்பில் பொதுவில் இருந்தால், புதிய குழந்தையின் வரவுக்கு அனைவரும் மகிழ முடியும், இன்னொரு குழந்தையின் இழப்பிற்காக அனைவரும் வருந்தவியலும் ////
அதாவது,அழுது கொண்டே சிரிப்பார்கள்,சிரித்துக் கொண்டே அழுவார்கள்.  ஓ.கே.குழந்தைகள் பெற்றோர் யார் என்று தெரிவார்களா?
///எது இலக்கு(ஊர்) என்பதையும், அந்த இலக்கை சென்றடையும் திசை(வழி) எது என்பதையும் போதிய உள்ளடக்கத்துடன் எடுத்துவைத்திருக்கிறேன்/// 
ஆனால்உங்கள் இலக்கும் கிழக்கும்  எனக்கு என்னவோ பகல் கனவு போல் உள்ளது.
செங்கொடிசார்,உங்க கொள்கையை நூறு சதவீதமன்று,ஒரே ஒரு சதவீதமாவது,உங்களது ம.க.இ.க அளவில் நடத்தி காட்டுங்கள்.
///இஸ்லாமியத்தீர்வை தாராளமாக பின்பற்றலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதுதான் சரியான தீர்வு என்று சொல்லாதீர்கள்///
இஸ்லாத்தின் தீர்வைவிட சிறந்த தீர்வை நிகழும் உலகில் ஆதாரத்துடன் காட்டுங்கள்.அதன் பின் மீள்பார்வை யாருக்கு தேவை என்பதை அறியலாம்.அதன்பின்னர் கீழே நீங்கள் கூறியது போன்று நீங்கள் இருந்தால் மகிழ்ச்சியடைவோம்.

 ////சரி என்றால் தைரியமாக ஏற்கவும், தவறு என்றால் தயக்கமில்லாமல் தள்ளவும் முடியவேண்டும். ஆனால் இரண்டு நிலைகளிலும்(இஸ்லாம், கம்யூனிசம்) இந்த மனப்பான்மை உங்களைப் போன்றோரிடம் இருப்பதில்லை என்பதுதான் வேதனைக்குறியது////
.

1 கருத்து:

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.