புதன், 15 டிசம்பர், 2010

இஸ்லாமிய சட்டங்களை செயலாக்கினால் நபி[ஸல்] கற்று தந்த குரானையும் நபி வழி ,,,,,


செங்கொடி ,மீண்டும்,மீண்டும் நீங்கள் குற்றம் சாட்டிவிட்டால்,அது உண்மையாகிவிடாது, வாதத்தை வலுவாக வைத்துவிட்டால்,குற்றம்சாட்ட அவசியமில்லை,நிசாம் போன்று ஒத்து ஊதா வேண்டிய தேவைக்கும் அவசியமில்லை.மனிதகுலத்தின் தொடக்க காலத்தில் பெண்தான் தலைமை தாங்கினாள் என்றும் ஆண்களும்,பெண்களும் தாங்கள் பாலியல் தேவைகளை தாங்கள் விருப்பத்திற்க் கேற்றவாறு நிறை வேற்றிக் கொண்டனர் என்றும்அதனால் பாலியல் குற்றங்கள் இல்லை என்றும் கூறி உள்ளீர்கள்.இதற்க்கு ஆதாரம் கேட்டேன்.இப்போது அதற்க்கு பண்டைக்கால ஆய்வு நூல்களே ஆதாரம் என்று கற்பனை ஆதாரம் தந்துள்ளீர்கள் ஆய்வுகள் அனைத்தும் உண்மைகள் அல்ல.மேலும் .நேற்றைய சோஷலிச ரஷ்யாவில் ஒரு பெண் தலைவரை கூட உருவாக்க முடிய வில்லை.இன்றுவரை உலக பிரபல்ய பெண்களில் ஒருவர் கூட கம்யுனிஸ்ட்களை காணோம்.என்பது வேறு விஷயம்.ஆதிகாலத்தில் பெண் தலைமையில் பாலியல் குற்றங்கள் இல்லாத காலத்தில் ,எவ்வாறு ஆண்களும் பெண்களும் அவரவர் தேவைக் கேற்றவாறு தேவைப்படும் நேரத்தில் தேவைபாட்டோருடன் பாலியல் தேவைகளை நிறைவேற்றி கொண்டதுபோல் [திருமணம்,பதிவு,இனிசியல் எல்லாம் தேவை இல்லாதவைகள்]இப்போதும் நடந்து கொண்டால் பாலியல் குற்றம் நடைபெறாது என்று சொல்ல வருகிறீர்கள்ஆம் இதுதான் வீரியமான கருத்து.ரஷ்யாவில் இந்த பழைய கலாச்சாரம் பரிசிலனையில் இருந்ததா? இல்லை எனின் அதை நடைமுறை படுத்து முன் சோசலிசம் படுத்து கொண்டதா?
///பெண் தலைமை தாங்கியபோது சமூகம் பொதுவுடமையாய் இருந்தது. அதனால் அங்கு பாலியல் குற்றம் உட்பட எந்தக் குற்றங்களுக்கும் இடமில்லாமல் இருந்தது. ஆண் எந்த விதத்திலும் பெண்ணைவிட தாழ்ந்தவனாக கருதப்படவில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொண்டிருந்தனர். இன்று நாம் வளர்த்தெடுத்திருக்கும் விவசாயம், கட்டடக் கலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெண்களின் கண்டுபிடிப்பாய் இருந்தது.///
இந்த விசயத்திற்கு ஆதாரம் பண்டைய நூல்களில் தான் பார்க்கவேண்டுமா?இல்லை என்றால் ‘லிங்க்’ புகழ் சங்கர் தருவாரா? இது உண்மை என்றால் ஏன் உங்கள் ரஷ்யாவில் சோதனைக்காக ஸ்டாலின்.லெனின்.மாவோ போல ஒரு பெண் தலைவரை உலகுக்கு காட்டமுடியவில்லை.எத்தனை பேர் பொலிட் பீரோவில் பெண்கள் அங்கத்தினராக இருந்தார்கள்?அதில் அதிகாரமிக்கவராக ,ஒளிர் விட்டவராக யாரும் உண்டா?
///பெண்ணிடமிருந்து தலைமை பிடுங்கப்பட்டபின்பு சமூகம் தனியுடமைக்கு மாறுகிறது. கிடைக்கும் பலன்களை பொதுவில் பகிர்ந்த நிலை மாறி தனித்தனி உடமைகளாய் மாறின. ///
இது எப்போது நடந்தது? அதற்க்கு,முந்தைய ,பிந்திய காலத்திலிருந்து ஆதாரம் காட்ட முடியுமா ?
தனியுடமை உருவானதற்கு நீங்கள் சொல்லும் இந்த காரணங்கள் எலாம் வெறும் கற்பனை காவியம். “புரட்சி தலைவி ஆட்சியிலே” என்று சினிமா எடுத்தால் நூறுநாள் ஓட்டலாம் ,நூறு ஆண்டு சோ.ர.போல.’. மற்றபடிபாலியல் குற்றத்திற்கு தனியுடைமைதான் காரணம் என்பது பொது மடமை. இல்லையெனின் உங்களது ம.க.இ..க வுக்கு கிளைகள் தோறும்,மாவட்டந்தோறும்,மாநிலங்கள்தோறும் பெண்களை தலைவராக்கி பொதுவுடமைக்கு முன்மாதிரியாக வழிகாட்டுங்களேன்.நீங்கள் இப்போதே ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டில் சோசலிசத்தையும் பத்து பில்லியன் ஆண்டில் கம்யுநிசத்தையும் கொண்டுவர முடியும். மீண்டும் ஆதிகாலத்தில் பெண் தலைமையாய் இருந்தபோது,,,,,,,,,,,என்று பழைய பல்லவியைபாடாமல் புது பல்லவியை ம,க,இ,க வில் தொடங்குங்கள்.பாலியல் குற்றத்திற்கு தனியுடமை தான் காரணம் என்றால் உங்களது சோஷலிச தலைவர்கள் பாலியர் குற்றம் செய்தது இல்லையா?இல்லை அங்கே அதிகார வர்க்கத்தில் பெண்கள் பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்] 

 ///அவளும் நம்மைப்போன்ற சக பிறவிதான் எனும் எண்ணத்தை எது தடுக்கிறது? அவளுக்கும் நமக்கும் தொடர்பில்லை அவள் யாரோ, நாம் யாரோ, நமக்கு சுகம் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான், அதன் பிறகு அவளுக்கு ஏற்படும் பாதிப்புகள் சமூக ரீதியாகவும் உளரீதியாகவும் அவள் அனுபவிக்கும் துன்பங்கள் என்னுடையதல்ல எனும் எண்ணம் தானே அவனை பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. ///
காமத்திற்கு கண்ணே இல்லாதபோது உள்ளம் எங்கே இருக்கும்?அவளுக்கு ஏற்படும் உடற்கூறு,சமூக,உள ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை பற்றி எண்ணுவதற்கு. இது போன்ற பாலியல் வன்முறைகள் பத்தாயிரத்தில் ஒருவராலே ஏற்படலாம்.அதிலும் ஐம்பது சதவீதம் பெண்களின் அசாதாரண நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம்.இதற்காக மொத்த சமூகத்தின் கொள்கையே மாற்றவேண்டும் என்றால் செங்கொடிகளின் ஆசைக்கு அளவே இல்லையா?சினிமாவில் பெய்யும் மழைக்கு தியேட்டரில் இருப்பவனை குடை பிடிக்க சொல்வீர்கள் போலிருக்கிறது.
.////அவரவர்களுக்கு ஏற்படும் இன்பமும் துன்பமும் அவரவர்களுக்கு எனும் எண்ணம் இருப்பதால் தானே வன்முறை செய்யத் தூண்டுகிறது. இதை தனியுடமை என்று கொள்ளலாமா கூடாதா? ஒரு சமூக‌த்தில் இன்பமும் துன்பமும் பொதுவாக இருந்தால் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது///
ஸ்டாலின்,லெனின்,போன்ற அதிபதிகளும் பொலிட்பீரோ உறுப்பினர்களும் அனுபவித்த இன்பங்களை ரஷ்ய மக்கள் அனைவரும் அனுபவித்தார்களா? மக்கள் அனுபவித்த துன்பங்களை ஸ்டாலின்.லெனின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் அனைவரும் அனுபவித்தார்களா?இங்கே ஒரு வரலாற்று நிகழ்வை பாருங்கள். உமர்[ரலி] அவர்களின் ஆட்சி காலத்தில் அவர் நீண்ட சட்டை அணிந்து மக்களிடையே உரை ஆற்றியபோது,ஒருவர் எழுந்து,ஜனாதிபதியே|நீங்கள் அணிந்திருக்கும் சட்டைக்கான துணி கடந்த போரில் கிடைத்ததுதானே?அவ்வாறெனின், எங்களுக்கு கிடைத்த துணியில்,இடுப்பளவு தான் சட்டை தைக்க முடிந்தது.ஆனால் நீங்களோ கால்கள் வரை சட்டை தைத்து உள்ளீர்கள்.நீங்கள் உங்களுக்கு எங்களைவிட கூடுதலாக துணியை எடுத்து கொண்டீர்களா?என்று கேட்டார்.உடன் உமர்;ரலி]அவர்கள் ,எனது மகனும் கடந்த போரில் கலந்து கொண்டார்.அவருக்கு கிடைத்த பங்கையும் அவர் எனக்கு கொடுத்துவிட்டார். இரண்டு பங்குகளையும் சேர்த்ததே சட்டை தைத்துள்ளேன் என்று கூறினார்.பொது உடமையும் ஜன நாயகமும் ஒருங்கே செயல்பட்டுள்ளதையும் பார்த்தீர்களா? 
நபி[ஸல்] அவர்கள்,நீங்கள் வேறு ஒருபெண்ணால் கவரப் பட்டால்,ஆசைகள் கிளர்ந்தால் உடன் உங்கள் மனைவியிடம் செல்லுங்கள்.என்று உணர்வுகளை தணித்திட தவறுகள் நடக்காமல் தடுக்க மனபக்குவத்தை சொல்லித்தருகிறார்கள்.நபி[ஸல்] அவர்களின் அறவுரை,மக்களை பன்படுத்தியதை  வெவ்வேறு சம்பவங்களில் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட ஒரு நபித் தோழரும் ஒருபெண் தோழரும் தானாகவே வழிய வந்து தண்டனை பெற்று கொண்டதை ஏற்கனவே இன்னொரு பதிவில் சொல்லியுள்ளேன்.. விவேகானந்த சொன்னதாக சொல்வார்கள்,நூறு இளைஞர் களை  தாருங்கள். இந்தியாவை வல்லரசாக மாற்றுகிறேனஎன்று சொன்னதாக கூறுவார்கள்.ஆனால் இன்று நூறென்ன, லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர்.ஆனால் நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்தது போல் ஒரு உமரை போன்று தலைவரைத்தான் காண முடியவில்லை.உமரைப்போன்ற ஒரு ஆட்சியை கொண்டு வந்தால் இஸ்லாமிய சட்டங்களும் ஒழுக்க விதிகளும்  பாலியல் வன்முறைகளை  அடியோடு ஒழித்துவிடும் .


.  . ///நடப்பு உலகில் நிர்வாகம் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் ஆண்களே ஆதிக்கம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். ///
உங்கள்  ரஷ்யாவில் ,ம.க.இ.க.வில் எப்படியோ நமது இந்தியாவில் சூப்பர்பவர் ஒரு பெண்தான் ,ஜனாதிபதி பெண்தான்,பாராளுமன்ற தலைவர் பெண்தான்,எதிர்கட்சிதலைவர் பெண்  தான்,நாட்டிலேயே லாபகரமாக உள்ள ரயில் நிறுவனமும் உங்கள் அபிமான பெண் தலைவரின் கையில்தான்,தமிழகத்தின் எதிர்கட்சியும் பெண்தான் நாட்டிலேயே அல்லது உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல் என்று நாரி கொண்டிருப்பதும் பெண்ணாலும் பெண் ப்ரோக்கராளும்தான் .இன்னும் எல்லாதுறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்.சில அரசு துறைகளில் ஆண்களை பார்ப்பதே அரிதாக உள்ளது.ஆரம்ப கல்வி யில் அனைத்தும் பெண்களே ஆசிரியர்கள், குழந்தைகளை வீட்டில் மட்டுமல்ல ,பள்ளியிலும் அவர்களை வருகால தலைவர்களாக உருவாக்கும் பணி கொடுக்கப் பட்டுள்ளது.குழந்தை பருவத்தில் அவர்களது உள்ளங்களை பக்குவபடுத்தி வளைக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? இவை போக பெண்களுக்கு இன்னும் என்ன உரிமைகள் வேண்டும் சொல்லுங்கள்?
 ///கேவலம் விளையாட்டுப் போட்டிகளில் கூட தங்களையும் இணைத்துக்கொள்ள‌ வேண்டும் என பெண்கள் போராடியதை உலகம் கண்டிருக்கிறது. இப்போதுதான் கடுமையான கட்டுப்பாடுகளையும் சூழல்களையும் மீறி சில பெண்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறார்கள்///ஒரு காலத்தில் இல்லாததை எல்லாம் இப்போது சொல்லி புலம்ப வேண்டாம். காமன் வெல்த் விளையாட்டு போட்டி வீரர்கள் வீராங்கனைகள்,தங்கியிருந்த விடுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஆணுறைகள் ஓரிரு நாளிலே காலியாகிவிட்டதாம்.பாலியல் குற்றங்களால் யாருக்கும் பாதிப்பில்லை.
/// பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்தாலும் கூட குடும்பச்சுமைகளை பெண்ணே செய்ய வேண்டும், ஆண் பொருளீட்டுபவனாக இல்லாவிட்டாலும் குடும்பச்சுமைகளை அவன் செய்யவேண்டியதில்லை. ஏன் சமூகம் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது///
செங்கொடி ,பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்து ,ஆண் ஈட்டுபவனாக இல்லாத வீட்டின் நிலையை நேரில் பார்த்துவிட்டு எழுதுங்கள்.குழந்தை பெறுதலும்,பாலூட்டுவதும் தவிர ,சில இடங்களில் புட்டிபால் முதல் அனைத்தையுமே கணவன் பார்க்கும் நிலை வந்துவிட்டது.ஆணும் ,பெண்ணும் பொருள் ஈட்டுபவகளாக இருந்தால் இருவரும் குடும்ப சுமைகளை பகிர்ந்து கொள்ளும் நிலையே உள்ளது.
 .///ஆணுக்கு காம உணர்வு அதிகம் பெண்ணுக்கு குறைவு என்ற கருதுதலும்,
ஆண்களோ தங்களது சுதந்திர பாலியல் வேட்கைக்காக வாய்ப்பைப் பொருத்து அன்னியப் பெண்களை வேட்டையாடுகிறார்கள். பெண் என்றால் ஆணின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவள் அப்படி ஆணில் கட்டுப்பாட்டில் இல்லாத சமயத்தில் சிக்கிவிட்டால் நம்மால் அனுபவித்துவிட்டு தப்பிவிட முடியும் எனும் ஆணாதிக்க சிந்தனை ஒருவனுக்கு இல்லாவிட்டால் அவனால் ஒரு அன்னியப் பெண்ணை காமப்ப்பார்வை பார்க்கமுடியுமா? ///
ஆண்களில் அனைவரும் இது போன்ற நிலையில் இருப்பவர்களா?ஏதோ ஒரு பத்து  சதவீதம் பேர் இயற்கையாக  அவனிடம் உள்ள காமஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு தவறு செய்கிறான் என்றால் மொத்த ஆண்களும் காமவேட்கையுடன் எழுதுவது சரியா?உங்கள் வாதத்தை நிலை நிறுத்துவதற்காக ஆண்கள் மீது இப்படி  பழிபோடுவது நியாயமா?யார் மீதாவது பழியை போட்டு கற்பனை கோட்டை கம்யுனிசத்தை வலையதலத்திலாவது கொண்டுவர முயற்ச்சிக்க வேண்டாம். [இன்சாஅல்லாஹ் ]


இப்போதைய குடும்ப கட்டமைப்பில் பெயரளவில்தான் ஆண்கள் குடும்ப தலைவராக இருக்கிறார்கள் திருமண நிகழ்ச்சிகளில் முழுக்க பெண்ணாதிக்கம்தான்.பையனை தேர்வு செய்வதும்,பொண்ணை தேர்வுசெய்வதும் மற்ற விசயங்களிலும் பெண்களே முதன்மைபடுத்த படுகிறார்கள். இஸ்லாமியத் திருமணம் [இஸ்லாமியர்களின் திருமணம் அல்ல] .நடந்தால் பெண்ணின் நிலை இன்னும் உயரும்.வரதட்சணை, விருந்து செலவு குறைந்து எளிமையான வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெறுமானால்  பல பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்துகொள்வார்கள். இதனால் பாலியல் குற்றம் வெகுவாக குறையும்.இப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இல்லாமல் இருக்கிறாள்.?இன்னும் என்ன சுதந்திரம் இல்லாமல் உள்ளது? இன்னும் என்ன உரிமை வேண்டும்?என்ன சுதந்திரம் வேண்டும்?  முன்பு உரிமைகள் இல்லாத காலத்தைவிட இப்போதுதான் பாலியல் வன்முறை அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.இன்னும் நீங்கள் விஜய்டிவியின் நீயா?நானா? நிகழ்ச்சிகளை பார்த்தால்,மிச்சம் இருக்கும் ஆணாதிக்கமும் அழிந்துவருவதை பார்க்கமுடியும்.பத்து சதவீத பெண்கள் கணவனை மீறி செயல்படுவதே தனது உரிமையாககொள்ளுகிறார்கள். முப்பது சதவீத பெண்கள் கணவனுக்கு சமமாக தன்னை நினைத்து கொள்ளுகிறார்கள், முப்பது சதவீத பெண்கள் கணவனையே தன்னின் பெருமையாக கொள்ளுகிறார்கள். .இருபது சதவீத பெண்களை கணவன் அடக்கி ஆள்கிறான் இங்கே ஆணாதிக்கம் எங்கே உள்ளது?காலப் போக்கில் மறைந்துவிடும்.ஆனால் பாலியல் குற்றங்கள் ,வன்முறைகள் இப்போதைய விட கூடுமேதவிர நிச்சயம் குறையவே செய்யாது.
நான் மழை பெய்கிறது என்று சொன்னது,ஆடைகுறைவைத்தான் .நீங்கள் பாலியல் குற்றம் ஆடை குறைவினாலும் ஏற்படும் ,என்பதை முதலில் மறுத்து ,பின் அது எவ்வாறு ஏற்படும் என்று விளக்கி ஏற்று கொண்டதைத்தான் அந்த உதாரணம் கூறுகிறது.பாலியல் தேவை  இனப்பெருக்கத்திற்கு மட்டும் என்று கூறியநீங்கள் , பின் அது காமம்,இன்பம்,என்பதுதான் பாலியல்  தேவை முதலிடம் வகிக்கிறது என்பதை விளக்கத்துடன் ஏற்று கொண்டதைத்தான் மழை உதாரணம் பொருந்தும்.இப்போதும் தனியுடமை,ஆணாதிக்கம் காரணம் இல்லை ,ஆம் ,மழை பெய்யவில்லை என்று சொன்னால்,சினிமாவில் மழை பெய்வதை காட்டியுள்ளீர்கள். நண்பர் சங்கர் காட்டிய சீனா சுட்டியிலும் ஏரிக்கரை மக்கள் மத்தியில் சுற்றுலா பயணிகளை தடை செய்துவிட்டதாக கூறுகிறது.ஒரு ஐந்து வருடங்களுக்கு அங்கு சுற்றுலா பயணிகளை அனுமதியுங்கள் .அப்புறம் ஆணாதிக்கமா,தனியுடமையா ,காம ஆதிக்கமா என்பது தெளிவாக தெரியும்.


///100 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலவில் இருந்த சோசலிசத்தைக் கொண்டு பழைய ஜார் காலத்திய ரஷ்யாவைவிட சோசலிச காலத்து ரஷ்யாவில் பாலியல் குற்றங்களை குறைத்துக்காட்டினோம். 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒரு நாட்டில் சோசலிசம் அமலில் இருந்தால் அது உலகம் முழுவதிலும் தாக்கம் செலுத்தி, மக்களை போராடத்தூண்டி புரட்சியை நடத்தி சோசலிச சமூகமாக மாற்றியிருக்கும்///
கம்யுனிச ஆரம்பகால கவர்ச்சி கோசத்தில் மயங்கிய மக்கள் ,அதன் சுய ரூபம் தெரிய துவங்கியதும் விரட்டிவிட்டார்கள்.நூறாண்டுகளுக்குள் முடிவுக்கு  வந்துவிட்ட போலி கம்யுனிஸ்ட் ஆகிவிட்ட கொள்கையை  எப்படி சார்,1400  ஆண்டுகளுக்கு கற்பனைபண்ணி கதை சொல்லியுள்ளீர்? நானும் சொல்லுகிறேன் எங்கள் தவ்ஹித் ஜமாஅத் கையில் உலகம் வந்தால்,நூறாண்டுகளுக்கு குறைவான காலத்திலே உமர்[ரலி]ஆட்சியை கொண்டுவந்து இறையருளால் குற்றமற்ற உலகமாய் மாற்றி காட்டுவோம்.
பாலியல் குற்றங்களுக்கு காரணமென்ன என்பதை இணையதலத்தைவிட்டும் ,உங்களது உயரிய கொள்கைகளை விட்டும் ஒழிந்து ,யதார்த்தத்தை  பாருங்கள்.ஒவ்வொரு பகுதியிலும் உள்ள லோக்கல் தினசரி செய்தி தாள்களை பாருங்கள் ,இன்று மாலை முரசு தலைப்பு செய்தி "பெண்ணின் காம வெறி;குடும்பமே நாசம்." நீங்கள் ஓராண்டு தினசரிகளில் பாலியல் வன்முறை செய்திகளை ,மேலோட்டமாகவும் ,காண வேண்டாம்,ஆழமாகவும் சிந்திக்க வேண்டாம் நடுநிலையோடு பார்த்தால் உண்மைபுரியும்.ரொம்பவும் ஆழமாக சிந்தித்தால் நிகழ  உலகில் நிலவும் பிரச்சனையின் சாராம்சம் தெரியாது.ஏற்கனவே எதை படித்து ஊறியுல்லோமோ அதுவே மனக்கண் முன் தெரியும். பாலியல் குற்றங்களுக்கு கம்யுனிச தீர்வு தீர்வாகாது என்பதை  நான் எப்படி நிருபிப்பது? நீங்கள் லோக்கல் தினசரிகளை படித்து அதில் வரும் பாலியல் வன்முறை செய்திகளுக்கு  தனியுடமையும் ஆணாதிக்கமும் தான் காரணங்கள் என்று நீங்கள் நிருபித்தாலே போதும். 
சவுதியில் பாலியல் குற்றங்கள் சோஷலிச காலத்திய ரஷ்யாவை விட குறைவு என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்.வெளிநாட்டவர்களின் தாக்கத்தினாலும் அங்கு இன்று பாலியல் குற்றங்கள் பெருகி இருக்கலாம். ஆனாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டால் அங்கு குறைவு என்பதை புரிந்து கொள்ள முடியும், சவூதி அரசை நான் எடுத்தது ஏனென்றால் ஓரளவு இஸ்லாமிய சட்டங்களை அமல் படுத்தும் நாடாக இருப்பதாலேயே. 1980 க்கு முந்தைய சவூதி அரசைவிட திறம்பட இஸ்லாமிய சட்டங்களை செயலாக்கினால் நபி[ஸல்] கற்று தந்த குரானையும் நபி வழி சொல்,செயல்.அங்கீகாரங்களை யும் பின் பற்றினால் பாலியல் குற்றங்கள் என்ன அனைத்தும் குற்றங்களும் இல்லாமற்போகும்.{மன்னர் பெயசல் காலத்தில் மன்னர் குடும்பத்து இளம்பெண்ணுக்கு  பாலியல் குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது.}
.கம்யுனிசம் என்றால் நூறாண்டு கூட செயல் படுத்த முடியாத ஒன்று .ஆணும் பெண்ணும் சமம் என்பார்கள். ,ஆனால் நூறாண்டு கால ஆட்சியில் ஒருபெண் கூட பெயர் சொல்லுமளவுக்கு தலைவராக முடியாதது.,தனி ஒருமனிதனுக்கு கூட துயர் வராமல் காப்போம் என்று கூறுவது,,ஆனால் அடுத்த நாட்டில் புகுந்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிப்பது, தனி நாடுகேட்டால் குளிர்பிரதேசங்களுக்கு அனுப்பி சாகவிடுவது, சர்வாதிகாரி யாக செயல்படுவது,இதைவிட வேறு என்ன தெரிந்துகொள்ளுமாறு செயல்பட்டு விட்டீர்கள்? கிரக்கிக்கத் தெரியவில்லை உளவாங்கி கொள்ள தெரியவில்லை,அப்படியெனில் செயல்முறை விளக்கம் வேண்டும் என்றால் நடைமுறை படுத்த முடியாத ஒன்று என சொல்லவருகீறிர்கள்.
.///உலகில் பெண்ணாதிக்கம் என்ற ஒன்று எப்போதும் நிலவில் இருந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், அதன் பிறகிலிருந்து இன்றுவரை ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வருகிறான். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? ///
ஆதியில் என்றால் எப்போது பெண் தலைமை தாங்கினாள்?அப்ப்போது பாலியல் வன்முறை இல்லவே இல்லை என்பது போன்றவற்றுக்கு ஆதாரம் கேட்டால்,பண்டைய சமுதாய ஆய்வுநூல்களை பார்க்கசொன்னால் எந்த நூலோ எங்கே பார்ப்பதோ? சீனாவில் ஒரு ஏரிக்கரை யை வைத்து உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்பது நல்ல கற்பனை. காயல்பட்டினம்,கீழக்கரை,அதிராம்பட்டினம் போன்ற ஊர்களில் திருமணம் முடிந்த பின்னர் ஆண் , பெண் வீட்டில்தான் தங்குகிறான்.பெண் கணவரது வீட்டுக்கு வரமாட்டாள். இதை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் அனைவரும் இப்படித்தான் இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?.
///ஒரு சமூக‌த்தில் இன்பமும் துன்பமும் பொதுவாக இருந்தால் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது.///ஒரு வீட்டுக்காரனுக்கு அழகான குழந்தை பிறந்திருக்கிறது,அடுத்த வீட்டுக்காரனுக்கு அவன் ஒரே பையன் பள்ளிசெல்லும் வழியில் விபத்தில் இறந்துவிட்டான் ,இப்போது இன்பத்தையும் துன்பத்தையும் எப்படி பொதுவாக்குவது?காலையில் இருந்து மதியம் வரை இருவரும் இன்பமாக இருக்கவேண்டும் .மதியத்திலிருந்து மாலை வரை துன்பமாக இருக்கவேண்டும்.என்பது போலவா? இப்படி சொன்னால் ,நீங்கள் மேலோட்டமாக சிந்தித்து உள்ளீர்கள்,உங்களுக்கு புரிதல் இல்லை.என்பீர்கள்.
///அப்படியான பொதுவாக இருந்த சமூக‌த்திலிருந்து தனியுடமை ரீதியில் சமூகம் பிரிந்து போனதினால் தான் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன/// இப்படி கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்பது வேறு விஷயம்.காட்டில் வாழும் சாமியாரை விட நாட்டில் வாழும் சாமியார் தான் தப்பு தண்டா பண்ணுகிறான். .சூழ்நிலைகளில் சிக்காதவரை 95 சதவீத மக்கள் கற்புக்கரசர்கல்தான். மனிதனின் காம உணர்வுகளுக்கு முன் பொது உடமையாவது, கத்தரிக்கையாவது. உங்கள் வீட்டில் பிறந்த எல்லோருக்கும் ஒரே அறிவில், ஒரே உணர்வில் ,ஒரே பொருளாதரத்தில் ஒரே கொள்கையில் இருக்கிறீர்களா? நீங்கள் யார் என்று சொல்லுங்கள் உங்கள் தனிமனித வாழ்க்கை வைத்துத்தான் உங்கள் எழுத்துக்களை நம்ப முடியும்.
.செங்கொடி ,போகாத ஊருக்கு வழி சொன்னாலும் பரவாஇல்லை.நீங்களோ இல்லாத ஊருக்கு வழி சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.முதலில் கம்யுனிஸ்ட்டை காட்டுங்கள்.பிறகு தீர்வை சொல்லுங்கள்.அதுவரை இஸ்லாமிய தீர்வையே கடைபிடிக்க முயற்ச்சி செய்வோம.. [
நண்பர் இப்ராஹிம்,
மீண்டும் மீண்டும் உங்களை குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் உங்கள் பதிலிலிருக்கும் வீரியமின்மை என்னை சோர்வடையச் செய்கிறது. உங்களின் பதிலை பொதுமைப்படுத்திப் பார்த்தால் உலகில் ஆணாதிக்கம் என்ற ஒன்று இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. மட்டுமல்லாது, ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதற்கு மாற்றீடாக காமாதிக்கம் எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர்கள். நான் கூறியிருக்கும் பதிலை கிரகித்துக்கொள்ளாமல் பதில் சொல்ல வேண்டும் என்று மட்டுமே முயன்றிருக்கிறீர்கள்.
என்னுடைய December4, 2010 at 10:57 மாலை பின்னூட்டத்தில் முதலிரண்டு பத்திகளில் தனியுடமைக்கும் பாலியல் குற்றங்களும் உள்ள தொடர்பு, உலகில் ஆணாதிக்கமே நிலவிவருகிறது என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறேன். அதற்கு நீங்கள் கேட்டபடி ஆதாரம் தரவேண்டுமென்றால் அது கம்யூனிச நூல்களாகவே இருக்கும் அதனால் பண்டைய உறவுமுறைகள் குறித்த‌, சமுதாய ஆய்வு நூல்கள் எதனையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம். படித்துப்பார்த்தால் நான் கூறியிருப்பதன் சாரம் கொஞ்சமாவது உங்களுக்கு புரியவரும். சரி தனியுடமை, ஆணாதிக்கம் குறித்த என்னுடைய கருத்துக்கு உங்களின் மறுப்பு என்ன? என்று பார்ப்போம். \\பாலியல் குற்றம் நடப்பதும் ,ஒருவர் மறுப்பின் பாலியல் வன்முறை ஏற்படுவதும் ஆணாதிக்கமும் இல்லை,பெண்ணாதிக்கமும் இல்லை.அது காமஆதிக்கம். ஆணாதிக்கம் இல்லை என்று சொல்லிவிட்டேன்//\\உங்கள் ஆய்வில் ஆணாதிக்கம் தெரிகிறது. எனது ஆய்வில் காமாதிக்கம் தெரிகிறது .இங்கே ஆணாதிக்கம் என்பது மன முரண்டுதான் தவிர,வேறொன்றுமில்லை//\\ஆணினத்திற்கு காம உணர்வு அதிகம் .மிருகங்களில் கூட ஆணினமே பாலியல் தேவையை நாடி அலைகிறது.ஒரு பெண் நாயை பல ஆண் நாய்கள் துரத்துவதை சாதரணமாக காணலாம். இதை நீங்கள் ஆணாதிக்கம் என்பது சரியன்று.காமாதிக்கம் என்பதே சரி// இவைகளில் ஆணாதிக்கம் இல்லை என்பதற்காக நீங்கள் எடுத்துவைத்திருக்கும் மறுப்புவாதம் என்ன? ஒன்றுமில்லை.
பாலியல் குற்றம் என்பதில் நீங்கள் பார்க்கமறுக்கும் பார்வை: ஒருவனுக்கு ஒரு பெண்ணை அவளின் விருப்பத்தை மீறி தன்னுடைய சுகத்தை மட்டும் முன்னிருத்தி செயல்படத்தூண்டும் தூண்டுதல் எப்படி ஏற்படுகிறது என்பதுதான். அவளும் நம்மைப்போன்ற சக பிறவிதான் எனும் எண்ணத்தை எது தடுக்கிறது? அவளுக்கும் நமக்கும் தொடர்பில்லை அவள் யாரோ, நாம் யாரோ, நமக்கு சுகம் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான், அதன் பிறகு அவளுக்கு ஏற்படும் பாதிப்புகள் சமூக ரீதியாகவும் உளரீதியாகவும் அவள் அனுபவிக்கும் துன்பங்கள் என்னுடையதல்ல எனும் எண்ணம் தானே அவனை பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. அதாவது ஆணும், பெண்ணும் கொள்ளும் கூடலில் (அது வன்முறையிலானதாக இருந்தாலும், இல்லையென்றாலும்) அவரவர்களுக்கு ஏற்படும் இன்பமும் துன்பமும் அவரவர்களுக்கு எனும் எண்ணம் இருப்பதால் தானே வன்முறை செய்யத் தூண்டுகிறது. இதை தனியுடமை என்று கொள்ளலாமா கூடாதா? ஒரு சமூக‌த்தில் இன்பமும் துன்பமும் பொதுவாக இருந்தால் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது. அப்படியான பொதுவாக இருந்த சமூக‌த்திலிருந்து தனியுடமை ரீதியில் சமூகம் பிரிந்து போனதினால் தான் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன. இந்த தனியுடமை எண்ணம் இன்றுவரை வேரூன்றி நிற்கிறது என்பதால் தான் எவ்வளவு கடுமையான சட்டங்களைப் போட்டு எத்தனை நீண்ட காலம் நடைமுறைப்படுத்தியிருந்த போதிலும் பாலியல் குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கமுடியவில்லை. ஏனென்றால் பாலியல் குற்றங்கள் தனியுடமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. தனியுடமையை சமூகத்தில் தக்கவைத்துக்கொண்டு சட்டங்கள், ஒழுக்க விதிகள் என்று எதனைக் கொண்டுவந்து தலைகீழாக நின்றாலும் பாலியல் வன்முறைகளை முற்றிலுமாக நீக்க முடியாது.
ஆணாதிக்கம் என்பது என்ன? நடப்பு உலகில் நிர்வாகம் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் ஆண்களே ஆதிக்கம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இயற்றப்படும் சட்டங்கள், செய்யப்படும் வசதிகள் அனைத்தும் ஆணின் வாய்ப்பை உறுதி செய்யும் விதத்திலேயே செய்யப்படுகின்றன. ஒரு ஆண் தனித்தன்மை மிக்கவனாக சுதந்திரமானவனாக இருக்கிறான். இதே சுதந்திரமும், தனித்தன்மையும் பெண்ணுக்கு இருக்கிறதா? நீங்கள் சுலபமாக சொல்லிவிடமுடியும். ஆணுக்கு கொடுக்கும் சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் பெண்ணுக்கும் கொடுத்தால் சமூகம் கெட்டுப் போய்விடும் என்று. ஏன்? ஆண் வெளிப்படுத்தும் வேட்கையைப் போலவே பெண்ணும் வெளிப்படுத்தினால்…..? ஆக சமூக ஒழுங்கே பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்திலேயே கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண் பாலியல் குற்றத்தை செய்யும் போது அவன் மீது சமூகம் பார்க்கும் பார்வைக்கும், அதே போன்ற பாலியல் குற்றத்தை பெண் செய்தால் சமூகம் அவளைப் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண் எந்த அளவுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாளோ அந்த அளவுக்கு சமூகம் ஒழுங்குடன் இருக்கிறது என்பதுதான் ஆணின் பார்வையாக இருக்கிறது. எனவே ஆணுடன் ஒப்பிடும்போது பெண் அறிவில் குறைந்தவளாகவும், ஆற்றலில் குறைந்தவளாகவும், எதிர்கொள்ளும் துணிவில் குறைந்தவளாகவும் இருப்பதற்காக குடும்பச்சுமைகள் அனைத்தும் பெண்கள் தலையில் சுமத்தப்படுகிறது. குழந்தை வளர்ப்பு, வீடு சூழல் பராமரிப்பு, சமையல் உள்ளிட்ட பணிகளை பெண்களுக்கென்று ஒதுக்கி, ஆண் பொருளாதரம் ஈட்டல் என்பதை கையிலெடுத்துக்கொண்டான். அதனாலேயே பொருளாதர பலம் மிக்கவனாகவும் ஆனதால் பெண் இன்னும் ஆணைச் சார்ந்தே இருப்பவனாகிப் போனாள். ஆணாதிக்கமும் இல்லை பெண்ணாதிக்கமும் இல்லை எனக் கூறும் நீங்கள், இப்படி சிந்தித்துப்பாருங்களேன். இது பொருளிய உலகாக இருப்பதனால் யார் பொருளாதாரம் ஈட்டுகிறார்களோ அவர்கள் குடும்பச் சுமைகள் அதாவது குழந்தை வளர்ப்பு, வீடு பராமரிப்பு, சமையல் போன்றவற்றை செய்யவேண்டியதில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? ஆனால் நடப்பு உலகில் என்ன மாதிரி இருக்கிறது? பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்தாலும் கூட குடும்பச்சுமைகளை பெண்ணே செய்ய வேண்டும், ஆண் பொருளீட்டுபவனாக இல்லாவிட்டாலும் குடும்பச்சுமைகளை அவன் செய்யவேண்டியதில்லை. ஏன் சமூகம் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது? இந்த ஒற்றைக் கேள்வியை நீங்கள் புரிந்துகொண்டால் போதும், ஆணாதிக்கம் என்றால் என்ன? இந்த உலகில் ஆணாதிக்கம் நிலவுகிறதா இல்லையா? என்பதை புரிந்து கொள்ளலாம். இதைத்தான் நீங்கள் உட்பட மதவாதிகள் பெண் இயல்பிலேயே பலவீனமாக படைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறீகள். ஆணுக்கு காம உணர்வு அதிகம் பெண்ணுக்கு குறைவு என்ற கருதுதலும், பெண்ணே குழந்தையை பெற்றெடுக்க வேண்டியவளாக இருப்பதும் சேர்ந்து பெண்ணை ஆணின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவளாக கட்டமைக்க, ஆண்களோ தங்களது சுதந்திர பாலியல் வேட்கைக்காக வாய்ப்பைப் பொருத்து அன்னியப் பெண்களை வேட்டையாடுகிறார்கள். பெண் என்றால் ஆணின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவள் அப்படி ஆணில் கட்டுப்பாட்டில் இல்லாத சமயத்தில் சிக்கிவிட்டால் நம்மால் அனுபவித்துவிட்டு தப்பிவிட முடியும் எனும் ஆணாதிக்க சிந்தனை ஒருவனுக்கு இல்லாவிட்டால் அவனால் ஒரு அன்னியப் பெண்ணை காமப்ப்பார்வை பார்க்கமுடியுமா? இந்த ஆணாதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டு ஆண்டவன் போட்ட சட்டத்தைக் கொண்டு தண்டித்தாலும், ஆள்பவன் போடும் சட்டத்தைக் கொண்டு தண்டித்தாலும் பாலியல் வன்முறைகளை சமூகத்திலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட முடியாது.
இவைதான் சமூகத்தில் பாலியல் குற்றங்களுக்கான அடிப்படைகளாக இருக்கின்றன. இந்த அடிப்படைகளை நீங்கள் புரிந்து கொள்ளாதது தான் ஆடை, பழக்க வழக்கங்கள் போன்ற மேம்போக்கான காரணங்களை பாலியல் வன்முறைக்கான காரணமாக எண்ணுகிறீர்கள். இதையே ஒரு உதாரணத்தின் மூலம் தோராயமாக நீங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். \\நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,”கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள்// ஆம். நீங்கள் மழைபெய்யும் காட்சியை மட்டும் கண்டுவிட்டு மழை பொழிகிறது என்கிறீர்கள். நான் அதை நுணுகி ஆய்ந்து அதன் காரணங்களை விளக்குகிறேன். காரணங்களை நீக்கினால் தான் விளைவுகளைத் தடுக்க முடியும் என்கிறேன். இதைக் கொண்டு எளிமையாக ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமும் காரணமாக இருப்பதால் அந்த இரண்டையும் சமூகத்திலிருந்து நீக்குவதுதான் பாலியல் குற்றங்களை நீக்குதற்கான தீர்வு என்கிறது கம்யூனிசம். ஆனால் ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் தக்கவைத்துக்கொண்டு பெண்களை புர்கா அணிய வைப்பதன் மூலமும் கடுமையான சட்டங்களை நடைமுறைப் படுத்துவதின் மூலமும் பாலியல் குற்றங்களையும் நீக்கிவிட முடியும் என்பது இஸ்லாமியத் தீர்வு. இந்த இரண்டில் எது மேம்போக்கானது? எது ஆழமானது? நான் கம்யூனிசத்தீர்வுகளே சரியானதாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது என்பதை இதுவரையிலான பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் நீங்கள் இஸ்லாமியத்தீர்வு சரியானது என்பதற்கான ஆழமான வாதங்களை எடுத்துவைக்காமல் என்னுடைய வாதங்களை மேம்போக்காக மறுப்பதிலேயே ஆர்வம் செலுத்துகிறீர்கள்.
\\குறுகியகாலமே நடைமுறையில் இருந்து காணாமல் போகிவிட்ட ,நடைமுறைபடுத்த இயலாத சோசலிசத்தையும் அதன்மூலம் தான் பாலியல் வன்முறைக்கு தீர்வுகாணமுடியும் என்பதையும் மறு பரிசிலனை செய்யத் தயாரா?// நிச்சயமாக. கம்யூனிசம் தரும் தீர்வை தவறு என நீங்கள் நிரூபித்துவிட்டால் அடுத்த கணமே சரியான தீர்வை நோக்கி நகர்ந்து விடுவதில் எந்தப் பிழையும் இல்லை. நான் தயார். நீங்கள் தயாரா என்பதுதான் கேள்வி. இஸ்லாமியத்தீர்வு என்ன? குரான் குறிப்பிடும் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும், பெண்கள் பிற அன்னிய ஆடவர்முன்னால் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பது தானே. 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக சௌதியில் இது நடைமுறையில் இருக்கிறது. உங்கள் வாதத்தை அப்படியே நான் ஒத்துக்கொள்கிறேன் என்று கூட வைத்துக்கொள்வோம். மற்ற நாடுகளைவிட சௌதியில் பாலியல் குற்றங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்றே கொள்வோம்(ஒரு வாதத்திற்கு) ஆக இஸ்லாமியத் தீர்வினால் பாலியல் குற்றங்களை கொஞ்சம் குறைக்கலாமே தவிர இல்லாமல் செய்ய முடியாது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? ஆனால் இதையே 100 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலவில் இருந்த சோசலிசத்தைக் கொண்டு பழைய ஜார் காலத்திய ரஷ்யாவைவிட சோசலிச காலத்து ரஷ்யாவில் பாலியல் குற்றங்களை குறைத்துக்காட்டினோம். 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒரு நாட்டில் சோசலிசம் அமலில் இருந்தால் அது உலகம் முழுவதிலும் தாக்கம் செலுத்தி, மக்களை போராடத்தூண்டி புரட்சியை நடத்தி சோசலிச சமூகமாக மாற்றியிருக்கும். முதலாளித்துவ சீரழிவுகளுக்கு மீண்டும் திரும்ப முடியாத தூரத்தில் சென்று பாலியல் மட்டுமல்ல அனைத்துவித குற்றங்களையும் சமூகத்திலிருந்து நீக்கிக் காட்டியிருக்கும். ஏனென்றால் அது அடிப்படையான விசயங்களைக் கொண்டிருக்கிறது, மதங்களைப் போல் மேம்போக்கானவைகளையல்ல.
இந்தமுறை நான் உங்கள் வாதங்களை வரிக்கு வரி எடுத்துக்கொண்டு பதிலளிக்கவில்லை. பொதுவாக வைத்து நான் த‌ந்திருக்கும் இந்த விளக்கங்களே அவை எல்லாவற்றிற்குமான பதிலை உள்ளடக்கியிருக்கிறது என்பதால் தனித்தனியே மீண்டும் விளக்குவது நேர விரயமாக இருக்கும் என எண்ணுகிறேன். தனித்தனியே விளக்க வேண்டுமென்றாலும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.