செவ்வாய், 19 மார்ச், 2013

பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும்

பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவார்கள் என்று பழமொழி கேள்விபட்டிருப்பீர்கள் .இந்த பழமொழி உங்களுக்கு புரியவில்லை என்றால் நமதூர் சம்பவத்தை பாருங்கள் புரியும். தவ்ஹித் கொள்கையிலிருந்த பல இளைஞர்களை ஊர் ஒற்றுமை என்ற பெயரில் பிரித்து சென்றார்கள். அவர்களை தக்கவைக்க நாங்கள் மீலாது விழா கொண்டாடவில்லை ,மார்க்க பிரச்சார கூட்டம்தான் நடத்துகிறோம் என்று பாம்புக்கு தலையை காட்டுவது போல மார்க்க விழிப்புணர்வு கூட்டம் என்ற தலைப்பில் நோட்டிஸ் ..
ஊரில் சில சுன்னத் ஜமாஅத் பெரியவர்களை ஏமாற்ற நாங்கள் மீலாது விழாதான் நடத்துகிறோம் என்று காட்ட மீலாது விழா பேனர் அதாவது மீனுக்கு வாலை ஆட்டுவது போல .

நோட்டிசில் என்ன விளம்பரம் செய்கிறார்களோ அதைத்தான் விழா மேடையிலும் பேனர் கட்டியிருப்பார்கள் .நோட்டிசில் மதரசா ஆண்டுவிழா விழிப்புணர்வு கூட்டம் .மேடையில் மீலாது விழா ?இதென்ன வினோதம் ? நாங்களும் தவ்ஹித் காரர்கள் என்று காட்ட இரண்டு பேர் தொப்பி இல்லாமல் ,நாங்கள் சுன்னத்துதான் என்று காட்டத் சிலர் தொப்பி அணிந்தவர்களாக ,இவர்கள் ஏமாற்றுவது யாரை ? 
அல்லாஹ்வையா?அவனது அடியார்களையா ?
ஆரோக்கியமான விமர்சனம் வரவேற்போம் .நான் வைஸ் இப்ராஹிம் face bookஇருந்துதான் காப்பி பேஸ்ட் பண்ணியுள்ளேன் .இன்சா அல்லாஹ் விளக்கம். நாளை 

அல்லாஹ்வின் நல்லடியார்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்…..)
      இவர் திருந்தவே மாட்டார் போல் தெரிகிறது. பிரபல (பொய்)கதையாசிரியர் சின்னையா அவர்கள் தற்போது புது கதை ஒன்றை அவருடைய வெப்சைட்டில் வெளியிட்டுள்ளார். தலைப்பு : பாம்புக்கு தலையாம்,மீனுக்கு வாலாம். ஃபோட்டோவுடன் போட்டுள்ளார்.  அதனுடன் தனது சொந்த சரக்கையும் (பொய்யை) சேர்த்துள்ளார். இப்படியே எப்பப் பார்தாலும் எல்லா விசயத்திலும் சம்பந்தமில்லாமல் பொய் சொல்வது, அவதூறு பரப்புவது,வதந்தியை கிளப்பி விடுவது அவருக்கு சர்வசாதாரண விசயமாகிவிட்டது. அது (பொய்) இறைவனின் சாபம் இறங்கக்கூடிய விஷயம் என்பதை அவர் உணர்ந்து திருந்துற மாதிரி தெரியவில்லை. ஏனென்றால் இந்த வருட மதரஸா ஆண்டு விழா நடக்கும் பொழுது அவர் வெளியிட்ட ஃபோட்டோவில் இருக்கிற இஃப்திகார் ஹஸரத் ஊரிலேயே இல்லை. அவர் சிலோனில் உள்ளார். அவர் ஸ்ரீலங்கா போய் நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இது ஊரில் உள்ள அனைவருக்கும் நல்லாவே தெரியும். இவ்ளோக்கும் காசியார் சின்னையாவிடமும் பயணம் சொல்லிவிட்டு தான் போயி ருக்கார். ஆனாலும் இதை ஒரு வேலைன்னு பழைய போட்டோ ஒன்றை எடுத்துட்டு வந்து, அதோடு இப்ப அடிச்ச நோட்டிசையும் இணைத்து இவரு சொந்தமா ஒரு தலைப்பு போட்டு கதைரெடி பண்ணி போட்டுள்ளார். இதில் இவருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை. ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்றும் தெரியவில்லை. அந்த ஹஸரத் ஊரில் இல்லாத விஷயம் உள்ளூரில் உள்ளவர்களுக்கு மட்டும் தானே தெரியும் என்று அதனால் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் துணிந்து பொய் சொல்றாரு. ஆனால் இவரு பொய் சொல்லிட்டு, பள்ளிவாசல் நிர்வாகி களை பார்த்து மீனுக்கு வால், பாம்புக்கு தலை, தவளைக்கு குடல் என்று பொய்க்கதை எழுதி உள்ளார்.
          ஆனால் இவர்தான் வேறு ஜமாத்தில் பொறுப்பு வகித்துக் கொண்டே இந்த பள்ளியிலும் நிர்வாகியாக இருந்தார். மீனுக்கு வாலும், பாம்புக்கு தலையும் என்று தன்னுடைய சுயலாபத்திர்காக டபுள்கேம் ஆடியவர் இவர்தான் என்று எல்லோருக்கும் தெரியும்.
          நான் தவ்கீதுவாதி என்று ஏமாற்றிவரும் இவர் பள்ளிவாசல் நிர்வாகியாக இருக்கும் பொழுது ஏதாவது மாற்றங்கள் செய்தாரா. ஒண்ணுமே செய்யவில்லை.
Ø  பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?
Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....?(ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  

அல்ஹம்துலில்லாஹ்...... அல்லாஹ் தான் நாடியவைகளை தனது நல்லடியார் களை கொண்டு செய்து முடிக்கிறான்.   

    இப்படி பல மாற்றங்களை கொண்டு வந்தது தற்போது இருக்கிற ஜமாத்தான்.உண்மையிலேயே தௌகீதுவாதியாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் சந்தோஷத்தை தான் அளிக்கும். ஆனால் பொறா மை   பிடித்த இவரை போன்ற டபுள் கேம் ஆடும் முனாஃபிக் தான் பொய் சொல்லி குறைகூறிக்கொண்டு அலைவார்கள்.இதை கொஞ்சம்   அறிவை பயன்படுத்தி சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இது புரியும். அவரின் போலி தௌகீத் வேசமும் புரியும். இப்பொழுது அதுவும் கலைந்து விட்டது. வட்டி விவகாரத்தில் அந்த பதவியை விட்டு துரத்தி அடித்துவிட்டார்கள். இப்போது கூறுங்கள் பொய்க் கதையாசிரியர் ஏமாற்றுவது யாரை... அல்லாஹ்-வையா...? அவனது அடியார்களையா..? 
                                                                இப்படிக்கு, 
                                  காசியார் கூறிய பிரிந்து சென்றவர்கள் .      Photo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.