வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

P.J VS சைபுத்தீன் ரசாதி விவாதஒப்பந்தம்

ஆன்லைன் பீஜே விலிருந்து காப்பி செய்யப்பட்டது.
விவாதஒப்பந்தம்

இராமநாதபுரம் மரைக்காயற்பட்டினத்தில் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் 26.08.2012 அன்று ஷேக் அப்துல் காதிர் மகன் சைபுத்தீன் ரசாதிக்கும் பீர் முஹம்மதுவுடைய மகன் ஜைனல் ஆபிதினுக்குமிடையே கீழ்கண்டவாறு விவாத ஒப்பந்தம் செய்யப்பட்டது .
ஒப்பந்த விதிமுறைகள் இருதரப்பாலும் பேசி ஒப்புக் கொள்ளப்பட்டு இருதரப்பாலும் தனித் தனியாக வீடியோ பதிவு செய்யப்பட்டது வீடியோவில் இரு தரப்புகளும் ஒப்புக் கொண்ட விதிமுறையின்படிகீழ்க் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .
வீடியோவில் இருதரப்புகளும் ஒப்புக் கொள்ளப்பட்ட படி 101 தலைப்புகளில் விவாதம் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது .
முதல்கட்டமாக நடக்கும் விவாதத்தில் முதல்  தலைப்பாக இஜ்மாஹ்  மார்க்கத்தின் ஆதாரமாகுமா?என்ற தலைப்பில் ஒரு நாளும் இரண்டாவது தலைப்பாக மார்க்கம் சொல்லுவதில் பீஜே செய்த பொய் பித்தலாட்டங்கள் மற்றும் மார்க்கம் சொல்லுவதி சைபுத்தீன் ரசாதி செய்த பொய் மற்றும் பித்தலாட்டங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாட்களும் ஆக மொத்தம் மூன்று நாட்கள் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.இந்த விவாதம் திருச்சியில் நடைபெறும்.
கையொப்பம் ;பீ.ஜைனுல் ஆபிதீன் .                           கையொப்பம் ;  சைபுத்தின் ரசாதி

2013 ஆம் ஆண்டு ஜனவரி 25 லிருந்து பிப்ரவரி 15க்குள் நடத்தும் வகையில் இரு தரப்பிலும் தலா மூன்று நபர்கள் கொண்ட பொருப்பாளர்கள் விவாதம் செய்யும் இடத்தை முடிவு செய்ய வேண்டும்.அரங்கம் முன்பதிவு செய்யப்படும் நாள்களில் விவாதம் நடைபெறும் இன்சா அல்லாஹ் .
மீதமுள்ள 99 தலைப்புகளுக்கான விவாதத்தின் தேதியும் இடமும் முதல் கட்ட விவாதத்தின் முடிவில் இருவரும் சேர்ந்து பேசி முடிவு செய்து அறிவித்து விட வேண்டும்.
மீதமுள்ள 99 தலைப்புகளில் பட்டியலையும் பேசப்பட்ட விவாதத்தின் அனைத்து விதி முறைகளையும் முழுமையாக இரு தரப்பினரும் தனித்தனியாக தொகுத்து இருதரப்பும் சரி பார்த்து மீண்டும் முழுமையாக எழுதி மீண்டும் முழு ஒப்பந்தத்தில் இருதரப்பும் கையொப்பம் இடவேண்டும்.
இதனை நாங்கள் இருவரும் மனப்பூர்வமகா ஏற்றுக் கொண்டு கையொப்பமிடுகிறோம் .

கையொப்பம் ;பீ.ஜைனுல் ஆபிதீன்      கையொப்பம் ;சைபுத்தின்ரசாதி

விவாத ஏற்பாடு குழு
ஜனவரி 2013 நடைபெறும் விவாதத்திற்கு மண்டபம் மற்றும் ஒளி,ஒலி சாதனங்கள் ஏற்பாடு செய்வதற்கு என்  சார்பாக பின்வரும் மூன்று நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் .
நசிர் அஹ்மத்  தொலைபேசி  9994022287
அல்பா நசிர்      தொலைபேசி  9443410833
பக்கீர் முஹம்மது அல்தாபி ;தொலைபேசி;7358834427
                                        இப்படிக்கு ,
                                 பீ ஜைனுல் ஆபிதீன் கையொப்பம்
30.08.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.