ஞாயிறு, 28 நவம்பர், 2010
வெள்ளி, 26 நவம்பர், 2010
சென்கொடியுடன் விவாதம்
அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திருப் பெயரால்,
அன்புமிக்கவர்களே,இங்கே சகோதரர் செங்கொடியின் அழைப்பை ஏற்று விவாதத்தை தொடங்குகிறேன்.அவர் தேர்ந்தெடுத்த விவாதத் தலைப்பிலே, துணை தலைப்பையும்,அதை பல பிரிவாக்கி அவற்றில் முதலில் பாலியல் குற்றங்கள்,அதற்க்கான காரணங்கள்,தீர்வுகள் என்பது பற்றி இஸ்லாத்தின் பார்வை பற்றி கேட்டுள்ளார்.நான் பல நூல்களை ஆயிந்து அறிந்தவன் அல்ல. நான் கடந்த பல வருடங்களாக சகோதரர் பீ.ஜே அவர்களின் சொற்பொழிவுகள் ,எழுத்துக்கள் மூலம் அறிந்தவற்றில் ,மனதில் தங்கியதை வைத்தே இங்கு விவாதம் செய்ய விழைகிறேன் இறைவனின் துணையோடு. ஆதாரங்கள்,மேலதிகமான விளக்கங்கள் தேவை ஏற்படும்போது காலதாமதம் ஏற்படாத வண்ணம் மூன்று நாட்களுக்குள்ளே பதிலளிக்க முயலுகிறேன்.
"ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது மூன்றவதாக அங்கு சைத்தான் இருக்கிறான்" என்ற நபிமொழி பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தீர்வுகளையும் ரத்தின சுருக்கமாக சொல்லும் முகமாய் நம் முன் காட்சி தருகிறது.ஒரு பெண்ணை சந்திக்கும் வேளையில் இயல்பான பார்வை மிகைக்கும்போது பாலியல் குற்றம் தனது கணக்கை துவங்க தயாராகிறது.ஒரு உயர் அதிகாரி,சக பெண் அதிகாரியின் பின்னழகை எத்தனை தடவைகள் தான் கண்களால் ரசிப்பது என்ற நிலையின் அனிச்சை செயலாக கைகள் தாண்டவமாடும்போது பாலியல் குற்றம் செயலாக்கம் பெறுகிறது.பாலியல் குற்றங்கள் அங்கு இங்கு என்றல்லாமல் எங்கெங்கும் நடந்து கொண்டிருக்கும் பரவலான செயலாகிவிட்டது. இஸ்லாம் ஒரு பெண்ணை இயல்பான பார்வையை விட கூடுதலாக பார்வை அதிகரிப்பதையே கண் செய்யும் பாலியல் குற்றமாக சொல்லுகிறது.உடைகளும் அது அணியப்படும் விதங்களும் பாலியல் குற்றத்திற்கு கதவுகளை திறந்துவிடுகின்றன. சினிமாவிலும் ,டிவிகளிலும் உடலழகை காட்டும் நடிகைகளின் உடைகளைப் போலவே டிசைன் செய்யப்பட்ட உடைகளை பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளுக்கு அணிந்து அழகு பார்க்க துணிந்து விட்டனர்.
பஸ்ஸில்,ட்ரெயினில்,விழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் பாலியல் தவறுகளை விரும்பாதவனுக்கும் அழைப்பிதழ் கொடுக்கிறது.செல்போன்களும் இன்டர்நேட்களும் பாலியல் குற்றங்களை நண்பர்கள் கூடிக்குலாவும் டி பார்ட்டிகளாக்கிவிட்டன.அவர்கள் மத்தியில் பாலியல் குற்றங்கள் நட்பின் நடவடிக்கைகளாகி விட்டன.ஐ.டி.யின் தாக்கம் பெற்றோரர்களை துச்சமென மதிக்க ஊக்கம் தந்துவிட்டது.பெற்றோரும் பணம் போதும் என்ற மனம் கொண்டோராக மாறிவிட்டனர்.சமிபத்தில் ஒரு பெண்டாக்டர் தன்னிடம் பிளஸ் டூ மாணவி தனது பள்ளி தோழனுடன் டி அன்சி செய்யவந்ததையும் அதற்க்கு அவர் மறுத்தபோது தன்னை இன்று மாலை பெண்பார்க்க மாப்பிள்ளை விட்டார் வர இருப்பதாகவும் கூறியதை கேட்கும்போது பாலியல் குற்றங்கள் தடுக்க இயலாத குற்றங்களாக விசுவ ரூபம் எடுத்துள்ளது.டெல்லி,பெங்களூரில் தினசரி நடக்கும் கற்பழிப்புகள் போலீசாரின் பார்வைக்கு வராமலே மறைக்கப்படுகின்றன.பாலியல் பாவங்கள் அன்றாட டி,காப்பி குடிப்பது போல் ,வாக்கின்க் போல், கிரிக்கெட் ஆடுவதுபோல் பாவத்திற்கு அப்பாற்ப்பட்ட செயலாக மாறிவிட்டது.
இருபாலினரும் மனம் ஒருமித்து பார்வைகளை பகிர்ந்து கொண்டாலுமே அதை பாலியல் குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.ஆனால் இன்றைய சமுதாயமோ இருவரில் ஒருவர் முரண்பட்டாலே அதனால் வரும் விளைவுகளையே பாலியல் குற்றமாக கருதுகிறது.கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்பது போல் ஒட்டு மொத்த சமுதாயமும் பாலியல் குற்றம் நடை பெறுவதற்கான காரணங்களை,சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை தேடினால் அது எங்கிருந்து ,எப்படி கிடைக்கும் ?பாலியல் தீர்வுகளை சொன்னால் அது பெண்ணடிமை,என்ற கோசம் ஓங்கி ஒலிப்பதை காணமுடிகிறது.இஸ்லாம் மிக மென்மையாகவும்,கடினம் காட்ட வேண்டிய இடத்தில் கடினமாகவும் பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை சொல்லுகிறது.ஆனால் இன்று அந்த தீர்வுகளை சவூதி அராபியாவைதவிர மற்ற இஸ்லாமிய நாடுகளே கைவிட்டுவிட்டன.அதை ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது.ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்,சவுதிஅரபியாவை பின்பற்றினால் பாலியல் குற்றங்களை வெகுவாக குறைத்திடலாம் என்று.நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்?
முகம்மதுநபி[ஸல்]அவர்கள்,மக்களை எந்த அளவுக்கு பண்படுத்தினார்கள் என்பதற்கு ஓரிரு சம்பவங்களை சொல்லுகிறேன்.ஒரு நபிதோழர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து தான் விபச்சாரம் செய்துவிட்டதாகவும் அதற்குரிய தண்டனை வழங்குமாறும் வேண்டுகிறார். நபி[ஸல்] அவர்கள் புன்னகைத்தவாறு இருந்தார்கள். அவரோ மீண்டும் தவறைச்சொல்லி தண்டனை கேட்கிறார்.மீண்டும் புன்னகைத்தே இருக்க,மூன்றாவது முறையாக கேட்கப்படவே அந்த நபித் தோழருக்கு தண்டனை நிறை வேற்றப்படுகிறது.இதே போன்றே ஒரு பெண்ணும் தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் குழந்தை உண்டாகி விட்டதாகவும் தனக்கு தண்டனை வழங்குமாறும் வேண்டினார்.நபி[ஸல்]அவர்கள் குழந்தை பெற்று விட்டு வருமாறு வேண்டுகிறார்.குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் அந்த பெண் தண்டனை கேட்கிறார். அக்குழந்தைக்கு பாலூட்டும் காலம் முடித்துவிட்டு வருமாறு வேண்டுகிறார்.பாலூட்டும் காலம் முடிந்த பிறகு அதாவது இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் நபி[ஸல்] அவர்களிடம் தானாகவே வழிய வந்து தண்டனை பெறுகிறார். இவ்வாறாகவே முகம்மதுநபி[ஸல்] அவர்களால் மக்களை பண்படுத்தியது எந்த சட்டங்களோ,எந்த வழிமுறைகளோ,அவற்றினை மக்கள் மத்தியில் படிப்படியாக நடைமுறை படுத்தினால் பாலியல் குற்றங்களுக்கு அதுவே தீர்வாக அமைந்துவிடும்.

இடு
வியாழன், 25 நவம்பர், 2010
ஹஜ்ஜு பெருநாள் கூட்டுகுர்பானி –வரவு -செலவு
2010 - நவம்பர்
ஹஜ்ஜு பெருநாள் கூட்டுகுர்பானி –வரவு -செலவு
வரவு | & | ig | செல்வு | & | ig |
பங்கு 1 க்கு rs.1100.வீதம் 112 பங்குகள் | 123200 | - | 17 மாடு களுக்கான கிரயம் | 108757 | - |
1 மாட்டுக்கு தனி நபர் கொடுத்தது | 6000 | - | போக்குவரத்து செலவு . | 1210 | |
தமாம் கூடுதல் வரவு | 595 | - | 3 நபருக்கான சம்பளம் | 900 | - |
12 ஆட்டு தோல் விற்றுவரவு | 1800 | - | 17 மாட்டு உறிப்பு,வெட்டு கூலி | 14320 | - |
17 மாட்டு தோல் விற்றுவரவு | 8925 | - | மண்டப வாடகை | 500 | - |
மொத்தம் | 140520 | - | மொத்தம் | 125692 | - |
மீதி இருப்பு | 14828 | - |
செவ்வாய், 16 நவம்பர், 2010
காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,
இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்
கடந்த பல வருடங்கள் கேரளாவில் பல இடங்களில் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடப்பட்ட போது காலண்டருக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்று கொள்ளாத சென்னை தலைமை காஜி இப்போதோ மகராஷ்டிரா வில் பிறை பார்த்தால் காலண்டரில் போட்டபடி பெருநாள் என்று அறிவித்துவிட்டார்.அதே சமயத்தில் காலண்டரில் 18 தேதி என்று இருந்தால் இன்று தமிழகத்தில் எங்கும் பிறை காணப் படவில்லை அதனால் 18 தேதி தான் பெருநாள் என்று அறிவித்திருப்பார்.முன்பு ஒருதடவை நமதூரில் பிறை பார்க்கப் பட்ட சமயத்தில் கூட காலண்டருக்கு மாற்றமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொள்ளஅப்போது மறுத்துவிட்டார்.அப்போது முதல் நாள் திருநெல்வேலி ,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களிலும் மறுநாள் மற்ற மாவட்டங்களிலும் பெருநாள் நடந்தது.ஆக சுன்னத் ஜமாத்தினரும் அதை ஏற்றுகொண்டனர்.ஆயின் இனி இவர்கள் பிறை பார்த்து நோம்பு வையுங்கள்,பிறை பார்த்து நோம்பு விடுங்கள் என்ற நபிமொழிக்கு மாற்றமாக "காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,காலண்டரைப்பார்த்து நோம்பு விடுங்கள் . காலண்டரைப்பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் " சென்னை தலைமை காஜியின் கூற்றை நடைமுறை படுத்தலாம் .சுன்னத் ஜமாஅத் ,மத்ஹப் ஜமாத்தாக நில்லாமல் இப்போது காஜி ஜமாத்தாக மாறிவிட்டது.

ஞாயிறு, 14 நவம்பர், 2010
பிறை பார்த்து கொண்டாடுவோம் பெருநாளை .
பிறை பார்த்து கொண்டாடுவோம் பெருநாளை .
‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோன்பு மற்றும் பெருநாட்கள் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அமைந்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமீப காலமாக இலங்கை, சவூதி என்று பிற நாடுகளையோ அல்லது கேரளா, கர்நாடகா என்று பிற மாநிலங்களையோ பிறை விஷயத்தில் பின்பற்றாமல் தமிழக அளவில் பிறை பார்த்து நோன்பு வைத்து வருவதால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.
கடந்த நோன்பு மற்றும் நோன்புப் பெருநாளில் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால் அல்லாஹ்வின் அருளால் தமிழகமெங்கும் ஒரே நாளில் நோன்பும், பெருநாளும் அமைந்தது.
தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதந்தோறும் பிறையைப் பார்த்து வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) அன்று பிறை தென்படுகிறதா என்று பார்த்த போது, தமிழகமெங்கும் மேகமூட்டமாக இருந்ததால் அன்று பிறை தென்படவில்லை.
‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907
மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக முழுமையாக்குங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி நமக்கு முன்னால் உள்ள ஒரே வழி துல்கஅதா மாதத்தை முப்பதாக முழுமைப்படுத்துவது தான்.
இதன் அடிப்படையில், திங்கள்கிழமை துல்கஅதா மாதத்தின் முப்பதாம் நாள் ஆகும். செவ்வாய்கிழமை (09.11.2010) அன்று துல்ஹஜ் பிறை 1 ஆகும். எனவே 17ம் தேதி அரஃபா நோன்பும், 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று துல்ஹஜ் பிறை 10 அன்று ஹஜ் பெருநாளும் வருகின்றது.
அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறும் அடிப்படையில் நாம் செயல்படுவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டின் அரஃபா நோன்பு மற்றும் ஹஜ் பெருநாளை அமைத்துக் கொள்வோமாக!
பொதுவாக முஸ்லிம்களிடம், ஹஜ் பெருநாளுக்காகப் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும் இருந்து வருகின்றது. இது தவறாகும்.
காரணம், குர்பானி கொடுப்பவர்கள் பிறை தென்பட்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம், முடிகளைக் களையக் கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இத்துடன் துல்ஹஜ் பிறை 9ல் நோன்பு நோற்பதும் சுன்னத்தாகும்.
எனவே இந்த வணக்கங்களைச் செய்வதற்காக துல்ஹஜ் பிறை 1 துவங்கியதும் மக்களுக்குப் பிறையை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை யாரும் பிறையை அறிவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். எனவே தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பைச் செய்கின்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் அடிப்படையில் 18.11.2010 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடி, நமது குர்பானி கடமைகளை நிறைவேற்றுவோமாக!
ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும். தமது பகுதி அல்லாத வேறு பகுதிகளில் பார்க்கப்படும் பிறை நமது பகுதியில் பார்த்த பிறையாக முடியாது.
”பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906
பிறையை கண்களால் பார்த்துதான் நோன்பை துவக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது உலகில் எங்காவது பார்த்த பிறையை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? என்பதற்கும் இந்த ஹதீஸில் விடையிருக்கிறது.
உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.
உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.
உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.
எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ
பகுதி எது என்பது குறித்து பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முடிவில் மொழியாலும் தனி நிர்வாகத்தாலும் ஒருங்கிணைக்க்கப்பட்டுள்ள தமிழகம் என்பது நமது பகுதி என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அது போல் சுன்னத் ஜமாஅத்தினரும் இந்த அடிப்படையில் தான் முடிவு செய்து வந்தனர்.
கடந்த பல வருடங்களில் வட மாநிலங்களில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் நொன்பு நோற்ற போது தமிழகத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தினரும் நாமும் அதை ஏற்காமல் தமிழகத்தில் பிறை காணப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து வந்துள்ளோம்.
டெல்லிக்கு ஒரு பெருநாள் சென்னைக்கு ஒரு பெரு நாள் என பல வருடங்களாக இருந்து வந்ததை நாம் மறந்து விட முடியாது.
அந்த அடிப்படையில் இந்த மாதம் தமிழகம் முழுவதும் நாம் சல்லடை போட்டு விசாரித்ததில் எங்கும் பிறை பார்க்கப்படவில்லை என்பது உறுதியானது. பிறை காணப்படாத போது இதற்கு முன் நாம் எவ்வாறு முடிவு எடுத்து வந்தோமோ அவ்வாறு முடிவு எடுப்பது தான் முரண்பாடு இல்லாத கொள்கை முடிவாக இருக்க முடியும்.
இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் எங்கும் பிறை காணப்படாத நிலையில் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டதைப் பின்பற்றி முடிவு செய்தால் எதிர் காலத்தில் ஆண்டு தோறும் மீண்டும் குழப்பங்கள் தொடர் கதையாகி விடும். நபிவழியை மீறியதாகவும் ஆகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறது
சனி, 13 நவம்பர், 2010
Muslim population ‘rising 10 times faster than rest of society’ according to official research collated for The Times. Muslim World: how Muslims are taking over the world via population growth. for every 1 non-Muslim child born there are 8 Muslim children born in the world and that number is conservative. Think about that. The Muslims don’t have to do anything, they will rule the world by virtue of their numbers. 2025 world Muslim population (PROJECTED) will be 30%. Muslim population has steadily grown from 13% in 1800 to 16% in 1850 to 20% in 1900 to 25% in 1947 and anywhere between 30 to 33% today taking into account the geographical area of pre-partitioned India. நீங்கள் கொடுத்துள்ள இந்த ஆதாரத்தை நான் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை.தாங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? 8 முஸ்லிம் குழந்தைகளுக்கு ஒரு முஸ்லிம் அல்லாத குழந்தை பிறக்கிறது என்பது கின்னசில் இடம் பெறவேண்டிய பொய்
.
.
- >>>இந்த உலகத்தில் மதத்தின் பேரில் மக்களை கொன்ற முதல் மனிதர் நபிகள் நாயகம். வேறு யாரவது மதத்தின் பேரில் மக்களை இப்படி கொன்று இருந்தால் நீங்கள் சொல்லலாம். மனிதனை கொன்று மதத்தை சொன்னவரை வேறு எந்த மதிலும் பார்க்க முடியாது.<<< இப்படி உளறி கொண்டிருப்பதர்க்குதான் ஆதாரம் கேட்டால் அதே உளறல் ஆதார மாகிவிடுமா?நபிகள் நாயகம் மதத்திற்காக யாரையும் கொல்லவே இல்லை.
- அவ்வாறு எனின் ,அவர்களுடன் கிறித்தவர்கள்,யூதர்கள் எங்ஙனம் வாழ்ந்திருக்க முடியும் ?ஒரு இறை நிராகரிப்பாளர் பள்ளிவாசலில் வேண்டுமென்றே சிறுநீர் கழித்து விட்டார்.உடன் அவரை தோழர்கள் அவரைத்தாக்கிவிட முனைந்தனர்.ஆனால் நபி[ஸல்] அதை தடுத்து அவரை பள்ளிவாசலில் கட்டிவைத்து விடுகிறார். மூன்றாவது நாள் அவர் விடுவிக்கப்படுகிறார்.மூன்று நாள் அங்கு நடந்தவைகளை கவனித்த அவர் குளித்து விட்டு வந்து முஸ்லிமாகி விடுகிறார்.நான் இது வரை உங்களைப்போல ஒரு மோசமான மனிதர் இருக்க முடியாது என்று எண்ணி இருந்தேன்,ஆனால் இப்போது சொல்லுகிறேன் உங்களைப்போல் ஒரு அன்பான மனிதரை பார்க்க முடியாது என்று கூறி இஸ்லாத்தில் இணைத்தார்.இஸ்லாத்திற்கு எதிராக பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோது இஸ்லாத்தில் இணைந்ததற்காக முதலில் யாசர் என்ற நபிதோழர் கொல்லபட்டார். யூதர்கள் இயேசுவை நிலத்தகராருக்காக கொன்றார்களா?இலையெனில் குடும்பத்தகறாரா ?
வரலாற்று சூழ்நிலை மட்டும் தான் என்று சொன்னார்களா?பல பொருள் தரக்கூடிய அரபு சொற்கள் இருப்பதால் அரபு கற்று இருப்பது நல்லது.பீ.ஜே சொல்லும் விளக்கம் தவறு என்று வாதிடுவீர்களானால் அப்போது அரபு மொழி தெரிந்து இருப்பது அவசியம் ,அரபு மொழி தெரியாமல் உங்களால் தீர்க்கமாக கருத்து தெரிவிக்க முடியாது.லக்கும் தீனுக்கும் "என்பதற்கு அர்த்தம் தெரிந்துதான் கேட்கிறார் ,விளக்கம் தெரியாமல் மத சகிப்புத்தன்மை என்றெல்லாம் எப்படி பேச முடிகிறது.? .மத சகிப்பு முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்க் காகத்தான் அந்த வசனங்களை தினசரி வித்ரு தொழுகையில் ஓத வேண்டும் என நபி[ஸல்]அவர்கள் கூறியுள்ளார்கள்.அதனால் தான் அடுத்த கேள்விக்கு சென்றேன் இதில் மழுப்பல் ஒன்றுமில்லை.எங்கள் நேசர் [அவுலியா]பீ.ஜே அவர்கள் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லவில்லை.இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை இறைவனும் அவனின் தூதரும் சொல்லியுள்ளதை பறைசாற்றியுள்ளார்.ஆனால் அந்த உருவம் எப்படி இருக்கும் என்று குர்ஆனிலும் ,நபிமொழிகளிலும் வரைந்து காட்டப்படவில்லை.விளக்கப்படவுமில்லை. உலக வாழ்க்கைக்கு அதுதேவையுமில்லை.என்பதாலே.நாங்கள் வணங்கும் இறைவன் ,எங்கள் இறைவனின் உருவம் எங்களுக்கு தேவை இல்லை என்னும்போது டெண்மார்க்கனுக்கு என்ன வந்து விட்டது.உங்களுக்கு தேவை இல்லாத ஒன்றை உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் பெயரில் வெளியிடுவதிலோ நீங்கள் அனுமதிப்பீர்களா?
முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கொண்டு வந்த வாழ்வியல் பற்றி விமர்சிக்க வழி இல்லாததால் .சாதாரண மர மண்டைகள் கூட கேட்கக்கூடிய கடவுள் கருப்பா சிவப்பா அடிப்படையிலான கேள்விகளை பெரிய அறிவு ஜீவியாக ஆராய்ச்சியாளராக காட்டிக்கொண்டு கம்யுனிசத்தை முஸ்லிம்களிடையே திணித்திடலாம் என அவருடைய கற்பனை கோட்டையை நிறுவிவிட இஸ்லாத்தின் வாயிலாக வருகிறார்.இந்த கற்பனைகோட்டை அந்த மறுமை நாள் வரை இருக்காது இன்சால்லாஹ் வரும் காலங்களில் இவைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் இஸ்லாமிய அறிஞர் களால் தூள் தூளாக்கப்படும்
செவ்வாய், 9 நவம்பர், 2010
- S.Ibrahim, on நவம்பர்9, 2010 at 8:41 AM said:anonymaous நன்றிகள்,ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.சாமியாரின் நல்லபாம்பு உடலெல்லாம் அடிபட்டு ரத்தம் வடிய சாமியாரிடம் வருகிறது .சாமியார் பாம்பிடம் கேட்கிறார்,”என்ன இப்படி ரத்தகோரையுடன்”?என்று. பாம்பு சொல்லுகிறது,தாங்கள் தானே யாரையும் கொட்டக் கூடாது என்று சொன்னீர்கள்.அதனால் அடி வாங்கி கொண்டு தப்பி வந்துவிட்டேன் என்றதாம். உடன் சாமியார் சொன்னார் ,கொட்டவேண்டாம் என்றுதான் சொன்னேன்.சீறவும் கூடாது என்று சொல்லவில்லையே ,அடிபட்டு சாகவும் சொல்லவில்லையே ,என்றாராம் .
நல்ல அறிவும் ஆய்வும் உள்ளவர்களாக இருந்துகொண்டு தில்லமுல்லு ஸ்டைலில் கருத்து தெரிவிப்பது நியாயமல்ல.அனானிமஸ் ,வல்லோனின் அடிமைக்காகவும்.சங்கருக்காகவும் இந்த குர்ஆன் வசனங்களையும் ,இரு வேறு கருத்துடைய முஸ்லிம் ஹதீத்களையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.இஸ்லாத்தை விமர்சித்தே தீரவேண்டும் என்று தீர்க்கமான சிந்தனையை கைவிட்டு நடுநிலையோடு ஆராயுங்கள் குர்ஆனுக்கு விரிவுரையான தப்சீர் இப்னு கசிர் பாருங்கள்.’நன்கு கூர்ந்து கவனியுங்கள் , GOD no where என்பது GOD now here என்று தெளிவாக தெரியும்
>>>ஆதாரம் தந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்? இஸ்லாத்தை விட்டு விலகிவிடுவீர்களா? <<< வல்லோனின் அடிமையே | இல்லாத ஆதாரத்தை எப்படி தர முடியும்? இஸ்லாத்தை நான் அரை வேக்காட்டுத்தனமாக உங்களைப் போன்று புரிந்து இருந்தால் அல்லவா அதை விட்டு விலக வேண்டும்?
சங்கர் சார் ,ரஷ்யா ஆப்கானை கைப்பற்றி அட்டூழியம் பண்ணியது மிகப்பெரும் தீவிர வாதம் .இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும் - S.Ibrahim, on நவம்பர்9, 2010 at 9:28 AM said:பரயோசை ,ஆதாரம் கேட்பது நீங்கள் எந்த ஹதீதை எப்படி புரிந்து உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்டு பதில் சொல்லுவதற்குத்தான்.உங்கள் மன இச்சைப்படி வசனங்களையும் ஹதீத்களையும் புரிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் பண்ணுவதால் தான் . ..இங்கே தில்லு முல்லை பண்ணியவரை காணவில்லை.ஏன் ?ஆதாரங்கள் அடிபட்டுப் போனதாலே .இஸ்லாத்தை பற்றி விளக்கம் அளிக்க எங்களுக்குத்தான் உரிமை உண்டு.நீங்கள் நினைத்தவாறே இஸ்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும் .நாங்கள் ஒன்று ஆதாரத்தை புதியதாக கொண்டு வரவில்லை. பழைய நூல்களில் இருந்தே விளக்கங்களை எடுத்து வைத்துள்ளோம்.இன்னும் இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் ஆழமமாக விவாதிக்க வேண்டுமானால் அரபியை கற்று பேசுவதே சிறந்தது..
- SANKAR, on நவம்பர்9, 2010 at 10:22 AM said://.இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும்.//
நண்பர் இப்ராஹிம்
நான் அப்படி கேள்விகள் இருப்பதாக குறிப்பிட்டேனே தவிர அது என் கருத்து அல்ல. தீவிரவாதம் என்பது பற்றி பேசுவது அவசியமில்லை..அப்படி குறிப்பிட்டதாக நீங்கள் நினைத்தால் வருந்துகிறேன். மன்னிக்கவும்.இங்கு தோழர் பிஜே விடம் விவாதிக்க விருப்பமில்லை என்றும் இணையத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார். இப்போது நீங்கள் விவாதம் செய்கிறீர்கள் நன்றி. சில கேள்விகள்1. ஹதிதுகள் முழுமையாக தொகுக்கப்பட்ட்து எந்த கலிபாகாலத்தில்?2.ஹதிதுகளை ஏற்று கொள்வது பற்றி அல்லா குரானில் அனுமதி அளித்து உள்ளாரா?3 இதைபற்றி தோழர் எழுதிய ஹதிதுகளும் அதன் பிரச்சினைகளும் என்ற பதிவிற்கு ஏதாவது மறுப்பு கட்டுரை வெளியிடப்ப் பட்டு உள்ளதா?4. முதலில் ஹதிதுகள் தொகுக்கப் பட்டது,சரி பர்ர்க்கப் பட்டது மற்றும் ஏன் வெவேறு பிரிவு மக்கள் வெவ்வேறு ஹதிதுகளை பயன் படுத்துகிறார்கள்?
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
\\ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது// இந்த இரண்டு இடங்களிலும் குரான் குறிப்பிடும் தீர்வு என நீங்கள் முன்மொழிந்திருப்பது ௧) ஆணும் பெண்ணும் தனித்திருக்கக்கூடாது, ௨) பெண்கள் புர்கா அணிந்துகொள்வது. இந்த இரண்டுமே அடிப்படையற்றது. ஆணும் பெண்ணும் தனித்திருப்பது என்பது இன்றைய முதலாளிய சமூகத்தில் சாதாரணமானது. வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதால் ஆண் பெண் தனித்திருப்பதையே தவிர்க்கவேண்டும் என்பது சரியற்ற ஒன்றாகவே இருக்கும். பாலியல் குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் ஆணாதிக்கப் பார்வைதான் பெண்கள் புர்கா அணிவதை தீர்வு என்று சொல்ல முடியும். பாலியல் வன்முறைக்கான குற்றத்தை ஆண்களிடம் வைத்துக்கொண்டு பெண்களை புர்கா அணியச் சொல்வது எப்படி தீர்வாக முடியும்?