செவ்வாய், 16 நவம்பர், 2010

காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,

இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்
           கடந்த பல வருடங்கள் கேரளாவில் பல இடங்களில் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடப்பட்ட  போது காலண்டருக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்று கொள்ளாத சென்னை தலைமை காஜி இப்போதோ மகராஷ்டிரா வில் பிறை பார்த்தால் காலண்டரில் போட்டபடி பெருநாள் என்று அறிவித்துவிட்டார்.அதே சமயத்தில் காலண்டரில் 18 தேதி என்று இருந்தால் இன்று தமிழகத்தில் எங்கும் பிறை காணப் படவில்லை அதனால் 18 தேதி தான் பெருநாள் என்று அறிவித்திருப்பார்.முன்பு ஒருதடவை நமதூரில் பிறை பார்க்கப் பட்ட சமயத்தில் கூட காலண்டருக்கு மாற்றமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொள்ளஅப்போது மறுத்துவிட்டார்.அப்போது முதல் நாள் திருநெல்வேலி ,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களிலும் மறுநாள் மற்ற மாவட்டங்களிலும் பெருநாள் நடந்தது.ஆக சுன்னத் ஜமாத்தினரும் அதை ஏற்றுகொண்டனர்.ஆயின் இனி இவர்கள் பிறை பார்த்து நோம்பு வையுங்கள்,பிறை பார்த்து நோம்பு விடுங்கள் என்ற நபிமொழிக்கு  மாற்றமாக "காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,காலண்டரைப்பார்த்து நோம்பு விடுங்கள் .  காலண்டரைப்பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் "    சென்னை தலைமை காஜியின்   கூற்றை நடைமுறை படுத்தலாம் .சுன்னத்  ஜமாஅத் ,மத்ஹப் ஜமாத்தாக நில்லாமல் இப்போது காஜி ஜமாத்தாக மாறிவிட்டது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.