புதன், 2 மார்ச், 2011

அப்பட்டமான பொய்.எது?


  1. நண்பர் இப்ராஹிம்,
    உங்கள் பதிவில் இருப்பதை தொகுத்துப் பார்த்தால் அதில் மூன்று குறிப்புகள் இருக்கின்றன. ௧) ஆணாதிக்கம் இல்லாத காலத்தில் பாலியல் குற்றங்கள் இல்லை என்பதற்கு நான் ஆதாரம் தரவில்லை. ௨) சோசலிசம் கற்பனை, நடைமுறை சாத்தியமில்லாதது. ௩) போராட்டங்கள் சோசலிசத்திற்கான பாதையல்ல.
    ௧) அப்பட்டமான, கலப்படமில்லாத பொய். ஒரு நூலைக் குறிப்பிட்டால் அதை படித்துப்பார்க்கக் கூட முடியாமல் இருந்துவிட்டு, மீண்டும் அதை குறிப்பிட்டு அறிவுறுத்திய பின்னரும் அமைதியாய் இருந்துவிட்டு இப்போது ஆதாரம் தரவில்லை என்பது பொய் மட்டுமல்ல கள்ளத்தனமும் கூட.
    ௨) சாத்தியம் தான் என்பதை இன்றைய நடைமுறைகளை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறேன். அதை ஒப்புக்கு மறுக்க வேண்டும் என்பதற்காக குப்புறப்படுக்கிறார்கள், மல்லாக்க படுக்கிறார்கள் என்றெல்லாம் உளறினீர்கள். முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ‌ அரசுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதே சோசலிசத்திற்கான முதற்படி அது உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. கற்பனை, சாத்தியமில்லை, பில்லியன் ஆண்டு என வார்த்தைகளால் கூறியதைத் தவிர அதை தக்க விளக்கங்களுடன் வாதமாகக் கூட முன்வைக்க முடியாமல்; அதேநேரம் நான் எடுத்துவைத்த வாதங்களைக்கூட தர்க்க ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ மறுக்கமுடியாமல் இருந்துவிட்டு இயந்திரகதியில் திரும்பத்திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருப்பதற்கு பெயர் விவாதமல்ல.
    ௩) போராட்டங்கள் தான் சோசலிசத்தை கொண்டுவரும். சோசலிசம் குறித்து குறைந்தபட்ச அறிவாவது இருந்தால், அரசு என்றால் என்ன? மக்கள் ஏன் போராடுகிறார்கள்? என்பது கொஞ்சமேனும் விளங்கும். அது இல்லாதபட்சத்தில் உங்களைப் போல் வெற்றுக் கூச்சலே மிஞ்சும்.
    அடுத்து ஹதீஸ்கதை குறித்து, எடுத்துவைக்கும் கேள்விகளை பரிசீலிக்காமல் நம்பிக்கையை மட்டுமே பதிலாக கூறிக்கொண்டிருந்ததாலும், விவாதத்தின் கருவான பாலியல் குற்றங்களை ஒதுக்கிவிட்டு ஹதீஸ்களையே முதன்மையாக எடுத்துக்கொண்டு விவாதித்ததாலும் நானாகவே அறிவித்துவிட்டு விலகிவிட்டேன். அதேநேரம் விவாதத்திற்கு இது தொடர்பில்லாதது என நீங்கள் சுட்டிக்காட்டியிருந்தால் அதை விமர்சனமாக ஏற்றுக்கொண்டு விளக்கம்கூறி விலகுவதிலும் எனக்கு ஆட்சேபம் இருந்திருக்காது. விவாத மையத்தை விட்டு விலகுவதற்கான வாய்ப்பாக உங்களுக்கு அது தெரிந்ததால் நீங்கள் தொடர்ந்தீர்கள். உங்கள் எண்ணம் புரிந்ததால் நான் விலகிக்கொண்டேன். மட்டுமல்லாமல், இதுகுறித்த விளக்கத்திற்கு இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. அப்போது உங்கள் பெயரைக் குறிப்பிட்டே நான் என் விளக்கங்களைக் கூறுகிறேன்.
    மற்றப்படி உங்கள் பதிவை பதிலளிக்கும் தகுதியுடன் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனென்றால் பலமுறை கூறியும் ஒப்புக்குக்கூட பரிசீலிக்காத வழமையான பதில்கள். உங்கள் மீது நான் வைத்த குற்றச்சாட்டுகள் அந்த‌ப்படியே தொடர்கின்றன.
    என்ன கேட்கப்படுகிறதோ அதை விடுத்து வேறொன்றாக திரித்து பதில் கூறுவது. \\ஒழுக்க மீறலில் எந்த காலகட்டத்திலும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது தவறு. பெண்கள் ஆண்களைப்போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை பார்த்தல் பெண்களின் பாலியல் குற்றங்கள் வளர்ச்சிவிகிதம் ஆண்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.இன்னும் சொல்லப்போனால் பொறியியல் கல்லூரிகளில் பார்த்தால் பாலியல் வன்முறை அல்லாத குற்றங்களில் இருபாலரும் சமமமாக இருப்பார்கள்..இன்னும் சில ஆண்டுகளில் பெண்களிடம் புரட்சி ஏற்ப்பட்டு நீங்கள் எதிர்பார்க்கும் ஒப்பீடு விழுக்காடு கிடைக்கும்// அன்றிலிருந்து இன்றுவரை ஏன் ஆண்கள் பாலியல் குற்றங்களை அதிகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்? எனும் கேள்விக்கு கொஞ்சம் பொருங்கள் நாளை சமமாகிவிடுவார்கள் எனும் ரீதியில் இருக்கிறது பதில். ஏன்? எனும் கேள்வி எப்போது? என்பதாக திரிக்கப்பட்டிருக்கிறது.
    கேட்க்கப்பட்ட கேள்விகளை கண்டு கொள்ளாமல் விடுவது.\\பலமானவன் பலவீனனை ஆதிக்கம் செய்வது பொது நியதி என்று நீங்கள் கூறும் போது உங்கள் உதாரணப்படியே உங்களைவிட பலமான திருடன் உங்களின் பலவீனத்தை பயன்படுத்தி உங்கள் பணத்தை பறித்தால் அதை பொது நியதி என ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வீர்களா? என்பது தான் கேள்வியேயல்லாமல் என்ன செய்யமுடியும் என்று உங்கள் இயலாமை இங்கு கேட்கப்படவில்லை// இந்தக் கேள்விக்கு பதில் எங்கே?
    எத்தனை முறை கேட்டாலும் சுற்றிவளைத்தே பதில் கூறுவது.\\கேள்வி கேட்டு அதற்கு பத்திரிக்கை செய்தி போன்று ஒன்றை பதிலாக கூறி பின் நேரடியாக கூறுங்கள் என்று கேட்டு அதன் பின்னரும் சுற்றிவளைத்துத்தான் பதில் கூறுவீர்கள் என்றால் அது என்ன விதமான மனோநிலை. ….. இல்லையென்றால் எப்படி? சுற்றிவளைக்காமல் பதில் கூறுங்கள்// இப்படி மாறிமாறி கேட்டபிறகும் கூட‌ \\ஒரு ஆணுக்கு அந்நிய பெண்ணிடமும் உறவு பெண்ணிடமும் காம உணர்வை வேறுபடுத்தி காட்டுவது ஆணாதிக்கம் என்றால் ஒரு பெண்ணுக்கு உறவு ஆணிடமும் அந்நிய ஆணிடமும் காம உணர்வை வேறுபடுத்தி காட்டுவது எது?பகுத்தறிவா?இல்லையா?// என்று சுற்றியிருப்பது.
    கேள்வியில் மொத்த சாரத்தை விட்டுவிட்டு தோதுவான வரியை எடுத்து அதற்கு பதில் கூறுவது. \\//அதற்கும் பதில் கூறினால், நீங்கள் அதைப் பிடித்துக்கொண்டு திசைமாற்றி செல்வீர்கள் என்பதால்/// இதே பதிலை ஹதித் விசயத்தில் ஆரம்பத்திலே சொல்லியிருக்கலாமே// இந்தப் பத்தியில் மதம் குறித்த கேள்விக்கு மதத்திலிருந்தும் பொதுவான கேள்விகளுக்கு பொதுவிலிருந்தும் பதிலளிக்க வேண்டும் என்பதை மறுத்த உங்கள் கூற்றுக்கான மறுவிளக்கமாக சொல்லியிருந்தேன். அதைப் பற்றி எதையுமே கூறாமல் தனித்த ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு பதில் கூறியிருப்பது.
    திசை மாற்றும் உத்தியுடன் புதுப்புது அர்த்தங்களைக் கூறுவது.\\போராட்டங்கள் எல்லாம் எப்படி சுயநலமும் அல்லவோ அதுபோல் பொது நலமும் அல்ல// ஆதாவது போராட்டங்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொதுந‌லமும் அல்ல, முழுக்கமுழுக்க சுயநலமுமல்ல என்பதுதான் நீங்கள் கூறவந்தது என்றால் அதுவே பொதுநல சிந்தனை அதாவது பொதுவுடமைச் சிந்தனை இன்னும் மிச்சமிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டது போலாகிவிடும். இதை உணர்ந்து கவனமாக “முழுக்கமுழுக்க” என்பதை பயன்படுத்தாமல் சுயநலமுமல்ல, பொதுநலமுமல்ல என்று புதிதாக எதையோ கூறுவது போல கூறியிருப்பது.
    மேற்கண்டவை எல்லாம் வகைக்கு ஒரு எடுத்துக்காட்டாக‌ உங்கள் கடைசி பதிவிலிருந்து நான் எடுத்துக் காட்டியிருப்பது. இன்னும் எவ்வளவு மிச்சமிருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
    ஆக என்னதான் விளக்கங்களுடன் வாதம் செய்தாலும் மதம் பிடித்த நிலையை விட்டு இறங்கக்கூடாது என்பதற்காக கண்டதையும் கூறி காலம் கடத்தும் உங்களுடன் விவாதம் செய்வதைவிட செய்யாமலிருப்பதே சிறந்தது. ஆனாலும், நேர்மையாக நீங்கள் பதிலளிப்பீர்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றாலும் கூட‌ கட்டக் கடைசியாக உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என எண்ணுகிறேன். தொடக்கத்திலிருந்து இறுதிவரை மீண்டும் ஒருமுறை படித்துப்பார்த்து நான் செய்திருக்கும் வாதங்களை உள்வாங்கி நேர்மையுடன், பரிசீலிக்கும் தன்மையுடன் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூற முன்வாருங்கள். அல்லாவிடின், இதுவே கடைசியாக இருக்கட்டும்,
    செங்கொடி

  2. செங்கொடி
    ௧.அப்பட்டமான பொய்.எது?ஒருவர் தன வாதத்தை முன் வைக்கும்போது அதற்க்கு ஆதாரம் கேட்டால் இன்ன நூலை படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதுதான் ஆதாரமா?அந்நூலில் இருந்து ஆதாரத்தை எடுத்துவைப்பது ஆதாரமா? இஸ்லாத்தை பற்றி பேசும்போது குர் ஆனை பார்த்தது கொள்ளுங்கள் ஹதித் நூல்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் ஏற்று கொள்வீர்களா? மேலும் நீங்கள் சொன்ன நூலில் உள்ளதை படித்துவிட்டுவிளக்கம் கேட்டால் முழு நூலையும் படித்துபாருங்கள் என்றால் இதுதான் ஆதாரம் தரும் நாகரீகமா?
    ௨ ,இன்றைய நடைமுறைகளை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிராராம்.என்ன நடைமுறை .திருமணம் செய்வது உடலுறவுக்கான அங்கீகாரம் ,காலையில் பல் துலக்குவது ,கழிப்பறை செல்வது எப்படி நடை முறை ஆகியதோ அதைப்போல சோசலிசமும் நடை முறையாகிவிடும் .இது ஒரு விளக்கமா?

    . ////எதை மனிதன் புரிந்து கொள்ளாமலிருக்கிறானோ அதில் தான் கொள்கைகள் சார்ந்து பேதமிருக்கும். எதை புரிந்து கொண்டானோ அதில் பேதம் தீர்ந்து நடைமுறையாகிவிடும். புரிந்துகொள்ளும் மனோநிலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதே பிரச்சனை////
    நான் மட்டுமா புரிந்து கொள்ளும் மனோ நிலையில் இல்லை ,உங்களைப் போன்ற ௦.0௦.0000001.சதவிகிதத்தை தவிர மற்ற மக்களும் புரிந்துகொள்ளும் மனோ நிலையில் இல்லை. புரிந்தவர்களும் புரியாதவர்களின் மனோ நிலைக்கு வந்துவிட்டார்கள்.ஆக சோசலிசம் என்பது நடைமுறை சாத்தியமே இல்லை என்பதில் உள்ள உண்மையை புரிந்துகொண்டு :வெற்று வாதத்தை நிலை நிறுத்த ஆத்திரம் படுவது ஏனோ?சரி அதிருக்கட்டும் புரிந்து கொள்ளும் மனோ நிலையில் நான் இல்லைதான் .நீங்களும் உங்கள் சகாக்களும் இருக்கிறார்கள் அல்லவா ?உங்களிடம் கொள்கை சார்ந்த பேதம் நீங்கி எதையெல்லாம் நடைமுறையில் கொண்டு வந்துள்ளீர்கள்? சொற்ப உங்களால் நடைமுறைபடுத்த முடியாததை உலகம் முழுவதும் நடைமுறையாகிவிடும் என்றால் இது பில்லியன் ஆண்டு கனவா இல்லையா?
    ௩) போராட்டங்கள் தான் சோசலிசத்தை கொண்டுவரும். குழந்தை பிறந்த உடனே போராட்டம் ஆரம்பித்து விட்டது ஏன் இன்னும் சோசலிசம் வரவில்லை.?
    . சிந்தனையாளன் அக்டோபர் 2009 ” நகரங்களில் அரசுத் தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளர்களுக்கும், பிற தொழிலாளர்களுக்கும் இடையில் வாழ்க்கைத் தரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தது. மேலும் தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர்கள் உரிய பங்கு பெறவிடாமல் கட்சியினர் எதிர்த்து வந்தனர். இவற்றால் நகரங்களிலும் தொழிலாளர்களிடையே மனக்கசப்பு வளர்ந்து வந்தது. டெங்சியோபிங் ஒரு தந்திரமிக்க அரசியல் வல்லுநர். மாவோவிற்குப் பின் ஏற்பட்ட நிலையற்ற தன்மையை அவர் பயன்படுத்திக் கொண்டார். “அய்க்கியம் மற்றும் நிலையான தன்மை’ என்ற தனது முழக்கத்தின் அடிப்படையில் மிக விரைவில் தனது இழந்த உரிமைகளை மீட்டுக் கொண்டார். 1978இன் பிற்பகுதியில் மாவோவிற்குப் பின் சீனாவின் பெரும் தலைவராக உருவானார்”
    சோசலிசம் கொடிகட்டி பரந்த நாளிலே சீனாவில் சோசலிசம் இல்லை என்கிறார் ஒரு சோஷலிச சிந்தனையாளன்.
    போராட்டங்கள் நடந்து கொண்டுதானிருக்கும்.ஆனால் நீங்கள் சொல்லலும் சோசலிசம் வராது வரவே வராது.மக்கள் ஒவ்வொரு பகுதியினரும் அவர்கள் எதற்காக போராடுகிர்ரர்களோ அது கிடைத்ததும் திருப்தியாகிவிடுவர்.இன்னொரு பகுதி மக்கள் அவர்கள் தேவைக்காக போராடும்போது மற்றபகுதி மக்களுக்கு அது எதிராக இருக்கும்போது அந்த போராட்டத்தை மற்றமக்கள் எதிர்க்கிறார்கள். ஒகேனேக்கல் தண்ணீர் கேட்டு தமிழகம் போராட்டம் நடத்தினால் கன்னடம் கொடுக்காதே என்று போராட்டம் நடத்தினால் அதற்க்கு பெயர் சொசியளிசமா?மிச்சமாகும் தண்ணீரை பற்றாக்குறை மக்களுக்கு கொடுக்க மறுப்பது சோசலிசமா? மீனவர்களுக்கு ஐடி துறையினர் போராடினால் அதற்க்கு பெயர் சோசலிசமா?இவர்களின் வாழ்க்கை தரத்திற்கு இணையாக மீனவர்களின் வாழ்க்கைதரம் உயர போராடுவார்களா? மீனவர்களும் மனிதர்கள்தானே அவர்களைப்போல் நாமும் வாழ்ந்து மிச்ச பணத்தில் இவர்களது வீட்டின் கழிப்பறை செலவில் பிளாட்பார மக்களுக்கு வீடு கட்டி கொடுப்பார்களா? பிளாட்பாரத்தை படுக்கையறையாக்கி காலம் கடத்தும் மக்களை சொகுசு காரில் கடக்கும் ஐடி துறையினர் நினைவில் கொண்டதுண்டா ?சிலருக்கு போராடுவதும் பகட்டுத்தான் .சிலருக்கு எழுதுவது பொழுதுபோக்கு..அரசு செலவில் மருத்துவம் படித்தவன் கிராமங்களுக்கு சென்று ஒரு ஆண்டு பணிபுரி என்றால் வெளிநாட்டு காசுக்கு ஏங்கி பண்ணுகிற போராட்டம் சொசளித்திர்க்கு வழி வகுக்குமா?இப்போது போராட்டம் என்பது போர்ட் காரில் போகிறவன் மெர்சிடஸ் கார் வாங்கவே ஒழிய செருப்பு இல்லாதவன் கால்களுக்காக அல்ல
    .

    ////அன்றிலிருந்து இன்றுவரை ஏன் ஆண்கள் பாலியல் குற்றங்களை அதிகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்?///
    ஏன் என்பதற்கும் காரணம் கூறியிருக்கிறேன் நீங்கள் எதிர்பார்க்கும் ஒப்பீடு விழுக்காடுக்கும் காரணம் கூறியிருக்கிறேன் பெரிய பையன் ஐம்பதினாயிரம் வாங்குகிறான் சின்ன பையன் ஏன் நாற்பதினாயிரம் வாங்குகிறான் என்று கேட்டால் இன்னும் இரண்டாண்டுகள் அனுபவம் கிடைத்ததும் அவனுக்கும் ஐம்பதினாயிரம் கிடைத்துவிடும் என்பதுதான் பதிலாக இருக்கும் இங்கே ஏன் என்ற கேள்விக்கு எப்போது என்பது பதிலாக வில்லையா?
    \பலமானவன் பலவீனனை ஆதிக்கம் செய்வது பொது நியதி என்று நீங்கள் கூறும் போது உங்கள் உதாரணப்படியே உங்களைவிட பலமான திருடன் உங்களின் பலவீனத்தை பயன்படுத்தி உங்கள் பணத்தை பறித்தால் அதை பொது நியதி என ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வீர்களா? என்பது தான் கேள்வியேயல்லாமல் என்ன செய்யமுடியும் என்று உங்கள் இயலாமை இங்கு கேட்கப்படவில்லை// இந்தக் கேள்விக்கு பதில் எங்கே?
    பாலியல் வன்முறை நடந்துவிட்டால் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லவில்லையே பிறகு எதற்கு இந்த கேள்வி ?

    ///இதோடு தொடர்பாக இன்னொரு கேள்வியும் இருந்ததே அதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? மாட்டிக்கொள்ள நேரும் என்பதாலா? ஆண் பலமானவன், பெண் பலவீனமானவள் என்கிறீர்கள், ஆதிக்கம் செய்வது பொது நியதி என்கிறீர்கள். என்றால், பெண் மீது ஆண் செய்யும் ஆதிக்கம் ஆணாதிக்கம் இல்லாமல் வேறென்ன?////
    அவ்வாறெனின்,பலமான ஆண் ,பலவீனமான ஆண் மீது செய்யும் ஆதிக்கத்திற்கு என்ன பெயர்? இதற்க்கு தாங்கள் பதில் சொல்லவில்லையே ஏன்?
    ////ஒரு ஆணுக்கு அந்நிய பெண்ணிடமும் உறவு பெண்ணிடமும் காம உணர்வை வேறுபடுத்தி காட்டுவது ஆணாதிக்கம் என்றால் ஒரு பெண்ணுக்கு உறவு ஆணிடமும் அந்நிய ஆணிடமும் காம உணர்வை வேறுபடுத்தி காட்டுவது எது?பகுத்தறிவா?இல்லையா?// என்று சுற்றியிருப்பது////
    நீங்கள் ஆணுக்கு கேட்ட கேள்வியை நான் பெண்ணுக்கும் பொதுவாக்கியுள்ளேன்.இதில் சுற்றல் என்ன இருக்கிறது?இங்கே பதில் சொல்ல இயலாமல் சுற்றுவது தாங்களே ! முடித்தால் மறுத்து பாருங்கள்.
    ///கேள்வியில் மொத்த சாரத்தை விட்டுவிட்டு தோதுவான வரியை எடுத்து அதற்கு பதில் கூறுவது. \\//அதற்கும் பதில் கூறினால், நீங்கள் அதைப் பிடித்துக்கொண்டு திசைமாற்றி செல்வீர்கள் என்பதால்/// இதே பதிலை ஹதித் விசயத்தில் ஆரம்பத்திலே சொல்லியிருக்கலாமே/////
    கேள்வியின் மொத்த சாரமே அந்தவரியில்தான் உள்ளது நான் தந்திருக்கும் பதில் மொத்த சாரத்திற்கும் பொருந்துகிறதா என்று பாருங்கள்
    நீங்கள் சித்தாந்தத்தில் சிலந்தியாகி அதிலேயே வலை பின்னுகிறீர்கள் .நான் பூச்சியும் அல்ல ,சிலந்தியும் அல்ல நான் நடந்ததை ;நடந்து கொண்டிருப்பதை ;நடக்க இருப்பதில் சாத்தியமானதை சொல்லியிருக்கிறேன் .சரி காணுவது உங்கள் தளத்தின் உங்கள் அபிமான வாசகர்கள் .இதுவே கடைசியாக இருந்தால் சரி. உங்கள் கடைசியிலும் தவறு காணின் தொடரும்



    .

    1. நண்பர்களே, தோழர்களே,

      நண்பர் இப்ராஹீமுடன் நடந்துவரும் இந்த விவாதத்தை இதற்கு மேலும் தொடர்வதில் பொருளில்லை எனக் கருதுகிறேன். பலமுறை சுட்டிக்காட்டியும் அவர் தன்னுடைய போக்கிலிருந்து மாறுபவராக இல்லர். தன்னுடைய நிலைப்பாட்டை உரத்து வாதிப்பது என்பது வேறு, விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதற்காக திசைமாறி, திசைமாற்றி, வம்படியாய் பிடிவாதம் செய்வதென்பது வேறு. விவாதத்தின் பயனே மாற்றுக்கருத்தை பரிசீலித்துப்பார்ப்பதிலும், பரிசீலிக்க வைப்பதிலும் இருக்கிறது. மாறாக வறட்டுப் பிடிவாதத்தால் நேரம் தான் வீணாகிறது. கேட்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்பது உத்திரவாதமில்லாத நிலையில் எந்த அடிப்படையில் தொடர்ந்து கேள்விகள் கேட்பது. கொடுக்கும் விளக்கங்கள் கொஞ்சமும் புரிந்துகொள்ளப்படாது எனும் நிலையில் எந்த அடிப்படையில் தொடர்ந்து விளக்கங்கள் அளிப்பது. எனவே தான் தொடர்வதில் பயனில்லை எனும் முடிவுக்கு வந்திருக்கிறேன்.

      ஏன் அவர் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். இஸ்லாம் குறித்த தொடர் தொடங்கியதிலிருந்து நேரடிவாதத்திற்கு வாருங்கள் எனும் அழைப்பு, அழைப்பு எனும் எல்லையைக் கடந்து வந்து கொண்டிருந்தது. இறுதியில் நான் அவ்வாறு நேரடி வாதத்தில் பங்கேற்பதில்லை என்று தெளிவித்திருந்தேன். அதன்பிறகு எழுத்து விவாதத்திற்கு அவர்கள் ஏன் தயாராக இல்லை எனும் கேள்வி எழுகிறது. இதற்கு பதில் சொல்லும் முகமாகத்தான் நண்பர் இப்ராஹிம் இங்கு விவாதத்திற்கு முன்வந்ததையும், நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய தளத்தில் எழுதத் தொடங்கியதையும் நான் பார்க்கிறேன். இப்படி ஒரு நோக்கம் இருந்திருக்கக் கூடும் என்பதால் தான் நவம்பரில் தொடங்கிய இந்த விவாதத்தில் சற்றேறக் குறைய பாதிக்குப்பிறகு முழுமையாக திசைமாறி அவர் மழுப்புவாதத்தில் மூழ்கிப்போனார். இன்னொரு காரணமாக, எழுத்து விவாதத்தில் இஸ்லாமியத்தீர்வை மிகைத்ததாக காட்ட முடியவில்லை என்றான நிலையில் எழுத்து விவாதம் சரியானதல்ல நேரடி விவாதமே சரியானது என காண்பிப்பதற்காக விவாதத்தின் திசையில் குழப்பத்தை ஏற்படுத்தி அனர்த்தங்களை நிகழ்த்துகிறார். இந்த இரண்டைத்தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். நான் இந்த விவாதத்தை தொடரவேண்டாம் என முடிவெடுத்ததில் இந்த காரணங்களும் தொழிற்படுகின்றன.

      மட்டுமல்லாது, இந்த விவாதம் தொடர்ந்தாலும் சில மாதங்களல்ல சில ஆண்டுகள் ஆனாலும் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதற்கு அவரின் இந்தப் பதிவிலிருந்தும் மீண்டுமொரு சான்று. இதோ, “பலமானவன் பலவீனனை ஆதிக்கம் செய்வது பொது நியதி என்று நீங்கள் கூறும் போது உங்கள் உதாரணப்படியே உங்களைவிட பலமான திருடன் உங்களின் பலவீனத்தை பயன்படுத்தி உங்கள் பணத்தை பறித்தால் அதை பொது நியதி என ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வீர்களா? என்பது தான் கேள்வியேயல்லாமல் என்ன செய்யமுடியும் என்று உங்கள் இயலாமை இங்கு கேட்கப்படவில்லை. இந்தக் கேள்விக்கு பதில் எங்கே?” பாலியல் வன்முறை நடந்துவிட்டால் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லவில்லையே பிறகு எதற்கு இந்த கேள்வி?

      கட்டக்கடைசியான வாய்ப்பு என நான் தெரிவித்திருந்த பிறகும் கூட அவர் மீது நான் வைத்த குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. மாறாக அவற்றையே தொடரவும் செய்திருக்கிறார். அவருடைய பதிவை நான் மேற்கூறிய காரணங்களால் அலட்சியம் செய்கிறேன். எனினும் கடைசி வாய்ப்பை வழங்கியது நான் எனும் அடிப்படையில் இரண்டுக்கு மட்டும் விளக்கமளித்து முடித்துக்கொள்கிறேன்.

      ஒரு நூலைக்கூட முழுமையாக படிக்க முடியாதவர் எந்த அடிப்படையில் ஆதாரம் கேட்கிறார்? அவர் ஆதாரம் கேட்பது எதன் பொருட்டு, என்பதை மறந்துவிட்டாரா? வரலாற்று காலத்திற்கு பிற்பட்ட ஏதேனும் ஒரு சம்பவத்திற்கு ஆதாரம் என்றால் இன்ன நூலில் இன்ன இடத்தில் இருக்கிறது என்று கூறலாம். ஆனால் இவர் ஆதாரம் கேட்பது ஒரு சம்பவமும் இல்லை, வரலாற்றுக்கு உட்பட்ட காலமும் இல்லை. வராலாற்று காலத்திற்கு முற்பட்ட மனிதர்களின் பாலியல் இயல்புகள் குறித்து ஆதாரம் கேட்கிறார். அதற்கு ஆய்வு நூல்களைத்தான் சான்றாக கூறமுடியும், கூறப்பட்டது. இதையே, இன்ன நூலில் இன்ன இடத்தில் இப்படி கூறப்பட்டிருக்கிறது என்று ஆதாரமாக கூறினாலும் இவர்களின் அடுத்த கேள்வி என்ன மாதிரியாக இருக்கும் என்பதற்கு இந்த செங்கொடி தளத்திலேயே ஆதாரம் இருக்கிறது. அது இந்த விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் இருக்கிறது. சரி, ஆதாரம் என்று ஏதாவது இருந்தால் மட்டும் தான் இதை புரிந்துகொள்ள முடியுமா? தொடக்க காலத்தில் மனிதர்களுக்கு பாலியல் தேவை என்பது வயிற்றுப் பசியைப் போல உடல்ரீதியான ஒன்றுதான், இன்பம் என்பதுபோல் மன ரீதியான முதிர்ச்சியை மனிதன் அற்றைய காலங்களில் வாய்க்கப் பெற்றிருக்கவில்லை. மட்டுமல்லாது, சமூக ரீதியான கட்டுப்பாடுகளும் பெரிய அளவில் இல்லை. எனவே பாலியல் குற்றங்களுக்கான தேவை எதுவும் அந்த சமூகத்தில் இருந்திருக்காது என்பதைக் கண்டுணர்வதற்கு பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையும் இல்லை. ஆகவே இவர்கள் ஆதாரம் என்று கேட்பது புரிதலுக்காகவோ, விவாதத்தை மேம்படுத்திச் செல்வதற்காகவோ அல்ல. வெறுமனே தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் ஒரு உத்தி, அவ்வளவு தான். இதை நான் புதிதாக கூறவில்லை, ஏற்கனவே விவாதத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டும் இருக்கிறது.

      மாவோவிற்குப் பிறகான சீனா குறித்து ஒன்றை வெட்டி ஒட்டியிருக்கிறார். ஆதாவது ஒரு சோசலிச நாடு சோசலிசத்திலிருந்து நழுவியிருக்கிறது என்கிறார். ஆம், இந்த உலகைப் பொருத்தவரை சோசலிசம் என்பது பலம்வாய்ந்த முதலாளித்துவத்திற்கு முன்னால் ஒரு குழந்தை. சோசலிச முறை ஏற்பட்ட நாடுகளில் உள்நாட்டு சதிகளாலும், வெளிநாட்டு சக்திகளாலும் பின்னடைவை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இதை இனி சோசலிசம் வராது என்பதற்கான தரவாக கொள்ளமுடியுமா? முடியாது. எப்படியென்றால் சோசலிசம் ஆட்சியாளர்களை அல்ல மக்களையே அடிப்படையாக கொண்டிருக்கிறது. எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழவே செய்வார்கள். அவர்கள் கிளர்ந்தெழுந்து நடத்தும் போராட்டங்கள் சுயநலம் கொண்டதாக இருக்கலாம், குறுகிய நலனை கொண்டதாக இருக்கலாம், தொலைநோக்கு பார்வையின்றி இருக்கலாம், ஒருங்கிணைந்ததாக, சமரசமற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேறும். ஏனென்றால் சோசலிசத்தைத்தவிர உலகிலிருக்கும் அத்தனை இசங்களும், மதங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் மக்கள் நலனை, மெய்யான விடுதலையை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. காவல்துறையும் இராணுவமும் மக்களின் போராட்டங்களை தாக்கிச் சீர்குலைத்தாலும் மீண்டும் மீண்டும் உலகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதே அதற்கான சான்று.

      விவாதத்தை தொடரவேண்டாம் எனும் என்னுடைய இந்த முடிவை விமர்சிக்க விரும்புபவர்கள் யாரும் தயக்கமின்றி விமர்சிக்கலாம். என்னுடைய முடிவு தவறு என்பதற்கு தகுந்த காரணங்களைக் கூறினால் அதை பரிசீலிக்க ஆயத்தமாக இருக்கிறேன். முடிவின் மீது மட்டுமல்ல மொத்தமாக இந்த விவாதத்தின் மீதான உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.

      தோழமையுடன்
      செங்கொடி

    2. நண்பர்களே ,
      செங்கொடியின் இந்த முடிவை வரவேற்கிறேன். இப்ராஹீம் போன்ற எண்ணற்ற நண்பர்களின் நேரம் வீணாவதை தவிர்த்திருக்கிறார்.
      இப்ராஹீம் ஆரம்பத்தில் சொதப்பியது போல் இருந்தாலும் இரண்டு மூன்று பதிவுக்கு பின்னால் மிக சிறப்பாக பதிலளித்து சோசலிசத்தை தோலுரித்தார். எழுத்து எழுத்து என்று கொக்கரித்த சென்கொடிக்கு சற்றும் சளைக்காமல் தன்னுடைய காலத்தை விரயம் செய்து சாட்டையடி கொடுத்தது இதற்கு முன்னால் விவாதம் செய்தவர்களை விட அதிக பட்ச முயற்சி. இதற்கே இப்படி என்றால் நேரடி விவாதம் என்றால் செங்கொடி ஓடி விடுவார் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. என்றாலும் நண்பர் செங்கொடி இப்படி மூளையை அடகு வைப்பதை விட்டு விட்டு சிந்திக்க வேண்டுகிறேன். ஒரு வேளை நீங்கள் பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தால் இஸ்லாத்தை அந்த கால கட்டதோடு ஒப்பிட்டு ஆதார பூர்வமான ஹதீஸ்களின் துணையோடு ஒரு முறை படித்து பாருங்கள். நான் சிறுது காலத்திற்கு முன்பு வரை கம் யு நிசத்தை அதிகமாக விரும்பியன் தான் என்பதை நான் கூறினால் உங்களால் நம்ப முடியாது. ஆனால் அது உண்மை . மாமனிதர் முகமதின் வாழ்க்கையையும் இஸ்லாம் உலகத்திற்கும் கொடுத்த அற்புத வாழ்க்கை நெறி முறைகளையும் சிந்தித்து பார்க்கும் எவருக்கும் இஸ்லாத்தை குறை கூற மனம் வராது. மற்ற கொள்கைகளை விட இதை மிக சிறந்ததாக தான் ஒப்பு கொள்வார்கள். நம்பிக்கை சம்பந்த பட்ட விசயங்களை விட்டு விட்டு முதலில் வாழ்க்கை நெறி முறைகளை சிந்தித்து பார்த்தல் உங்களுக்கு உண்மை புரியும்.
      இப்படிக்கு ,
      மனித நேயன்.
    3. விவாதம் பற்றிய விமர்சனம்
      இஸ்லாம் விமர்சிக்கப்படுவதற்கு காரண்மே அதன் ஷாரியா சட்டமே.ஷாரியாவில் மொத்தம் நான்கு வகை உண்டு.
      Hanbali: This is the most conservative school of Shari’a. It is used in Saudi Arabia and some states in Northern Nigeria.
      Hanifi: This is the most liberal school, and is relatively open to modern ideas.
      Maliki: This is based on the practices of the people of Medina during Muhammad’s lifetime.
      Shafi’i: This is a conservative school that emphasizes on the opinions of the companions of the Prophet Muhammad.
      இந்தியாவில் உள்ள் இஸ்லாமியர்கள் பாலியல் குற்றங்கள் உட்பட அனைத்து கிரிமினல் குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தையே பின் பற்றுகின்றனர்.குடும்ப,சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு மட்டுமே ஷரியா இந்திய முஸ்லிம்களல் பயன் படுத்தப் படுகிறது.
      இஸ்லாமே தீர்வு என்றால் எந்த சட்டம் பயன் படுத்தப் பட வேண்டும்?
      இதற்கு நண்பர் இப்ராஹிம் சவுதி சட்டம் என்று கூறினார்
      ஒவ்வொரு சட்டமும் குறங்களை வரையறுத்து,விசாரித்து உறுதி செய்யும் முறையில், அதற்கேற்ற தண்டனை வழங்குகின்றனர்.
      பாலியல் குற்றம் நடப்பதற்கு காரணம் ஆணாதிக்கமே(தோழர்) ,காமாதிக்கமே(இப்ராஹிம்) என்று கூறினர்.இதன் பிறகு ஒரு முன்னேற்றமும் இல்லை.
      ஆணாதிக்கம் என்றால் ஆண் பெண்ணை தனது இச்சைக்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒரு மனோபாவம் என்றால்,காமாதிக்கம் என்பதை இந்த ஆதிக்கம் இருபாலாருக்கும் பொதுவனது என்றும் கூறுகின்ற்னர்.
      இதில் எது சரி என்று பார்க்க எனது சில கேள்விகள்.இருவரும் ஒரு எடுத்துக்காட்டுடன்,ஆதாரபூர்வமாக பதிலளித்து விவாதத்தின் முடிவை வாசிக்கும் நண்பர்களிடம் விட்டு விடலாம்.
      1.பாலியல் குற்றங்கள் என்பது பொது உடமை சட்டம்(சவுதி ஷாரியா) எப்படி வரையறுக்கப் படுகிறது?
      2.குற்றங்கள் நிரூபிக்கப்பட தேவையான ஆவணங்கள் என்ன?
      3.குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டனைகள் என்ன?
      எதுவுமே நடைமுறையில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்துதான் முடிவெடுக்க வேண்டும்.நடைமுறைக்கு ஒத்து வராத விஷயங்கள் மாற்றப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.