புதன், 23 பிப்ரவரி, 2011


செங்கொடி,நீங்கள் எதை ஆணாதிக்கம் என்று சொல்லுகிறீர்களோ அந்த ஆணாதிக்கம் மக்களிடம் குறைந்து வருகிறது என்றே குறிப்பிட்டுள்ளேன் .ஆணாதிக்கத்தினால் பாலியல் வன்முறை ஏற்படவில்லை என்பதையும் மறுத்துவருகிறேன். ஆனால்  ஆணாதிக்கம் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கவேண்டும் ,
"ஆண்களுக்கு பெண்கள் மீது உரிமைகள் இருப்பதே போன்றே பெண்களுக்கும் ஆண்கள் மீது உரிமைகள் உண்டு ,இருப்பினும் பெண்களை விட ஆண்களுக்கு ஒரு உயர்வு உண்டு,,,," {அல்குர்ஆன்2;228} இறைவன் கூறும் இந்த உயர்வைத்தான் ஆணாதிக்கம் என்பதற்கு சரியான விளக்கமாக இருக்கும்.ஆணும் பெண்ணும்.அனைத்திலும் சரி நிகர் சமம் என்றால் எந்த குடும்பமும் சரிவர செயல்படாது.நீங்கள் செயல்படுத்தும் வாழ்க்கையில் இந்த வரம்பில் நீங்களும் செயல்பட்டு வருகிறீர்கள்.இல்லையெனின் உங்களது மனைவியை வேளைக்கு அனுப்பாமல் நீங்கள் மட்டும் வேளைக்கு செல்லமாட்டீர்கள்.குடும்பமோ நிறுவனங்களோ அமைப்புகளோ ஒரு நாடோ சரிவர செயல் பட ஏனையோரை கட்டுபடுத்தக் கூடிய ஆளுமை வேண்டும் இந்த ஆளுமையை இறைவன் மேற் சொன்ன வசனத்தில் கூறுகிறான் .அந்த ஆளுமை தான் சரியான ஆணாதிக்கத்தின் விளக்கமாகும்.நீங்கள் எதையெல்லாம் சரி எனக் கொண்டீர்களோ அதையெல்லாம் நான் சரியென்று கொள்ள முடியாது.முகம்மது நபி[ஸல்] அவர்களிடமிருந்த ஆணாதிக்கம் ,அபூபக்கர் [ரலி]உமர்[ரலி]உத்மான் [ரலி] அலி[ரலி] அவர்களிடமிருந்த ஆணாதிக்கம் நம்மிடமும்   வரவேண்டும் 

௧. ///தகுந்த காரணமோ, அவசியமோ இன்றி எப்படி ஒரு ஆணால் எந்த அன்னியப்பெண்ணுடனும் கலவிக்கு தயாராகிவிட முடிகிறது?///
தகுந்த காரணமோ,அவசியமோ இன்றி எப்படி ஒரு பெண்ணால்   எந்த அந்நிய ஆணுடனும் கலவிக்கு தயாராகிவிட முடிகிறது?
////பெண்ணுக்கு ஏற்படவிருக்கும் சமூக ரீதியான சுமைகளோ, உடல்ரீதியான பாதிப்புகளோ எதுவும் ஒரு ஆணை சலனப்படுத்தாமல் அன்னியப் பெண்ணுடன் கலவியில் ஈடுபடும் சிந்தனை எப்படி ஏற்பட்டது?///பெண்ணுக்கு தனக்கு ஏற்படும் சமூக,உடல் ரீதியாக ஏற்படப்போகும்  பாதிப்புகள் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாமல் ஒரு ஆணை கலவிக்கு அழைத்ததோ ,அதே காமாதிக்கம் தான் ,அதே காமாதிக்க  சிந்தனைதான் ஆணுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும்
//நீங்கள் சாலையில் நடந்து செல்லும்போது உங்களைவிட பலமான ஒருவன் உங்களை அடித்து உதைத்தால் அதை பொது நியதி என்று கூறமுடியுமா உங்களால்?////
ஒருபெண்ணை பலமான ஆண் அவளிடம் கற்பை பறிப்பது போலவே ,என்னிடம் பலமான  திருடன் பணத்தை பறிக்கும்போது நான் என்ன செய்ய முடியும்?


2. .எந்தச் சமூகத்தில் எடுத்துக்கொண்டாலும், எந்தக் காலகட்டத்தில் எடுத்துக்கொண்டாலும் பெண்களின் விழுக்காட்டோடு ஒப்பிடும் போது பலமடங்கு ஆண்கள் ஒழுக்கத்தை மீற தயாராக இருக்கிறார்கள் என்பது ஏன்? 
பெண்களின்  பல  ஒழுக்க  மீறல்கள் அவர்களின் நலன் கருது மறைக்கப்படுவதும் .இன்னும் பல மிகவும் ரகசியமாக ஒழுக்க மீறல்கள் உள்ளதாலும் பெண்களின் விழுக்காடு குறைவாக இருப்பது   போல் தெரியும்/
.ஆணைவிட அதிக சமூக கட்டுப்பாடுகளை மதித்து பெண்கள் ஒழுங்கு காக்கும்போது, குறைவான கட்டுப்பாடுகளைக் கூட காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஆண் ஒழுக்கம் கெட்டுப்போவதேன்?
 அதிகமான சமூக கட்டுப்பாடுகளே அதிகமான ஒழுக்கத்தை பின்பற்ற செய்யும்.கூடுதலான சமூக கட்டுப்பாடுகளே பெண்களின் ஒழுக்கத்தை காப்பாற்றுகின்றன.சமூக கட்டுப்பாடுகள் குறைவே ஆணின் கமாதிக்கத்தை செயலாக்குகிறது.[குர்ஆன் ஆண்களுக்கு கூறும் ஒழுக்கத்தை பின் பற்றினால் இது தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது}
///ஒரு பெண்ணின் ஒழுக்கக்கேடு ஏன் பல ஆண்களைக் கெடுக்க வேண்டும்?///
ஆண்களுக்கு பெண்கள் கிடைப்பது அரிது ,அதனால் கிடைக்கும் பெண்களை அவன் விடுவதில்லை,ஒழுக்கேடான பெண்கள் தங்களது ஒழுக்க கேடு நடவடிக்கைகளுக்கு ஆட்டோ .டாகசிகளையோ  நாடுகின்றனர்.ஆட்டோ டாக்சி டிரைவர்கள் பெண்கள் கிடையாது. ஆண்களாகிய இவர்களுக்கு அந்த பெண்களின் கள்ள தொடர்புகள் அதிகமாக தெரிந்து இருக்கின்றன. இதை காரணம் காட்டி அந்த டிரைவர்களும் தங்களது காம உணர்வுகளுக்கு இரையை அந்த பெண்களிடம் எதிர் பார்க்கின்றனர் .பல பெண்கள் தன்னைவிட பொருளாதார மற்றும் ஏனைய தகுதிகளிலும் குறைவான டிரைவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும்போது பாலியல் வன்முறை ஏற்படுகிறது இப்பொது அதிகமான பாலியல் வன்முறைகளுக்கு டிரைவர்களே காரணமாக இருக்கின்றனர்
௩.குழந்தை பிறப்பு காரணமாக நான் குறிப்பிடவில்லை.ஒரு பெண் தனக்கு பாலியல் உணர்வுகளுக்கு தீர்வு தேடும் சமயத்தில் அவளுக்கு இருக்கும் சமூக கட்டுப்பாடுகளை பற்றி கவலை கொள்வதில்லை.ஒரு பெண் அழைக்கும் போது உடன் ஆணும் இணங்கி விடுகிறான் .இதுவும் பாலியல் குற்றம் எனினும் வன்முறை  இல்லை.ஆனால் ஆணுக்கு பாலியல் தேவை ஏற்படும்போது அவனுக்கு இணக்கமானவாளாக  இருந்தாலும் கூட தனது சமூக கட்டுப்பாடு பற்றிய பயம் அவளை மறுக்க செய்கிறது.இதைத்தான் பெண்ணுக்கு எளிது ஆணுக்கு கடினம் என்கிறேன்
///ஒரு பெண்ணின் ஒழுக்கக்கேடு ஏன் பல ஆண்களைக் கெடுக்க வேண்டும்?//// 
சமூக கட்டுப்பாடுகளை தூக்கியெறியும் பெண்களுக்கு சமூக கட்டுப்பாடு குறைவாக உள்ள ஆண் எளிதாக கிடைத்துவிடுவான். சமூக கட்டுப்பாடு குறைவாக உள்ள ஆண்களுக்கு  சமூக கட்டுப்பாடு அதிகமாக உள்ள பெண்கள் எளிதாக கிடைக்க மாட்டாள். அவ்வாறிருருக்க சமூக கட்டுபாடுகளை மீறிவரும்  ஒழுக்க கேடான பெண்களை ஆராதரிக்க ஆண்கள் கூட்டம் மொய்க்கவே செய்யும்.    
 .////இன்றைய நிலையில் ஆணின் அளவுக்கு சமமாக ஏன் பெண்ணும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதில்லை////
உடற்கூறு ரீதியாக  இருக்கலாம் . எளிதில் இன்புறும் ஆணுக்கு பெண்கள் கிடைத்தால் போதும் என்ற நிலை. ஆனால் பெண்களோ மெல்ல இன்புறுதலுக்கு  இணையான ஆண்களை தேடுதல் காரணமாக  இருக்கலாம். .
///மதம் சார்ந்து கேட்டால் மதம் சார்ந்து பதில் கூறவேண்டும், பொதுவாக கேட்டால் பொதுவாக பதில் கூறவேண்டும். இதை நீங்கள் ஏற்கிறீர்களா மறுக்கிறீர்களா? ஒற்றை வார்த்தையில் பதில் கூறுங்கள். ////
மறுக்கிறேன் .
\\இஸ்லாத்தில் இது போன்று உள்ள பாகப் பிரிவினை சட்டம் தனியுடைமையை நோக்கித்தான் பயணிக்கிறது// என்றும் கூறியிருக்கிறீர்கள் \\நீங்கள் சொல்லும் பொதுவுடைமை பயணம் இஸ்லாமிய ஜங்சன் இல் துவங்குவதால்//
இதில் முரண்பாடு இல்லை.குர்ஆன கூறும் பொதுவுடமையில் நில்லாமல் அங்கிருந்து தனியுடைமையை நோக்கியே செல்லுகிறது என்றுதான் கூறியுள்ளேன் 
பாலுக்காக குழந்தையின் அழுகைகூட ஒருவகை போராட்டம்தான் அதற்காக குழந்தைகளெல்லாம் சோசலிசத்தை நோக்கி பயணிக்கிறார்கள் என்பதன்று,.ஒருவேளை கஞ்சிக்கு காசு இல்லாமல் ப்ளாட்பார மக்கள் துயருகிரார்களே என்பதற்காக பாங்க ஊழியர்கள் போராட வில்லை. ஐயோ மீனவர்களை கொல்லுகிரார்களே என்பதற்காகவா கனிமொழியும் திமுகவினரும் போராடினார்கள் ?போராடினால் தனக்கு என்ன ஆதாயம் என்ற ஒவ்வொருவரின் சுயநல சிந்தனைகளின் தொகுப்பே இப்போதைய போராட்டங்கள். மற்றும் போராட தூண்டும் தலைவர்கள் .என்னதான் தனியுடமை சிறகடித்து பறந்தாலும்  பொதுநல சிந்தனைகள் மிச்சமாயில்லை. நிரம்பவே இருக்கிறது அதற்க்கு பொதுவுடைமை என்று பெயர் வைக்க வேண்டாம்.அவைகள் பொதுநலனில் உள்ள ஈடுபாடுகள் .இந்தசிலரில் பலரை  பொதுநலனில் அவர்களை அக்கறை படவைத்ததும் மதங்களே ..சோஷலிச ஆட்சியின் வடுகுறிகள் அந்த மக்களிடம் மாறவில்லை. அவ்வாறிருக்க ,மற்ற மக்களிடம் அதன் அறிகுறியை எப்படி காணமுடியும்? தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் இசத்தை கொண்டுவருகிறீர்கள். அதே சமயத்தில் நீவிர் கூறும்  பாகபிரிவினை இஸ்லாத்தை ஒட்டியுள்ளது என்றால் மதத்தை பற்றி நீட்டி முழக்கதீர்கள் என்று ஆவேசப்படுகிறீர்கள். 
////நீங்கள் கூறியிருக்கும் பதிலிலிருந்து உறவுப்பெண்கள், அன்னியப் பெண்கள் என்று பிரித்துப்பார்த்து பாலியல் குற்றம் செய்கிறான் என்று கொண்டால் அவனிடம் இருப்பது காமாஅதிக்கம் அல்ல ஆணாதிக்கம்தான் என்பது உறுதியாகிறது////
உறவினரிடம் ஒருவன் பாலியல் தேவையை தீர்ப்பவனாக இருந்தால் அவன் மனித நிலையிலிருந்து மாறிவிடுவான் ..ஆதலின் அவனது பகுத்தறிவே அவனது காமத்திக்கத்தை அந்நிய பெண்ணிடம் திரும்ப செய்கிறது.
தூங்காத நகரம் என்று மதுரைக்கு பெயர் உண்டு .கால் செண்டர்வந்த பிறகு சிலருக்கு தூக்க நேரங்கள் மாறியிருக்க்ன்றன.

இரவு தூக்கம் ,உடலுறவு,பல் துலக்குதல் போன்ற இயற்கையின் செயல்களை கம்யுனிச கொள்கைளை நடைமுறை படுத்தலுக்கு எடுத்து காட்டியதாலே காலால் நடப்பதையும் சொல்லியிருக்கலாமே என்று கூறினேன். ஒருவனால் தூக்கம் இல்லாமல் வாழ முடியாது.., திருமணம்  இல்லாமல் உடலுறவு கொள்ள முடியும் .இதில் என்ன தொடர்ச்சி இருக்கிறது?இயற்கைதேவைகளை நிறைவேற்றுவதர்க்கான அணுகுமுறைகளை நடைமுறை படுத்தலையும் கொள்கை சார்ந்த நடைமுறை படுத்தலையும் எங்ஙனம் ஒன்றாக கொள்ளமுடியும்?
///மக்கள் பல்வேறு கொள்கைகள், மதங்களில் இருந்தாலும் ஒரே நடைமுறையை பின்பற்றச் செய்யமுடியும் என காட்டப்பட்டிருக்கிறது, ////
காட்டப்படவில்லை .பல்வேறு கொள்கைகள் இருந்தாலும் திருமணம் என்ற நடைமுறையை அவரவர் கொள்கையின் வழிமுறைகளிலே பின்பற்றப்படுகிறது.பசி இயற்க்கை.அதை தீர்க்க உண்ணுவது நடைமுறை .உணவு அவரவர் கொள்கையின்படி இருக்கவில்லையா?உண்ணும் வேளைகள் வித்தியாசப்படவில்லையா? தூங்குவதர்க்கான படுக்கைகள் வித்தியாசப்படவில்லையா? அம்மன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கல்பனா சாவ்லா வாக மாறினாலும் ,ஜீனத் அம்மன் என்று கேலி செய்தாலும் உங்கள் பொதுவுடைமை கொள்கையை ஒருநாளும் உங்கள் வீட்டிற்குள்ளேயே  நடைமுறைபடுத்த முடியாது.
 ////மக்களிடம் பொதுவுடமைச் சிந்தனை இன்னும் மிச்சமிருக்கிறது என்பது காட்டப்பட்டிருக்கிறது, மக்கள் சோசலிசத்தை நோக்கி பயணப்படுவார்கள் என்று காட்டப்பட்டிருக்கிறது////
தனிஉடமை மக்களிடம் உள்ள பொதுநலன் பற்றிய சிந்தனைகளை நீங்களாகவே வலிய  வந்து பொதுவுடமையின் மிச்சமுள்ள சிந்தனை என்று அலட்டிக்கொள்வது நியாயமா? 
////பாலியல் குற்றங்களுக்கு காரணம் ஆணாதிக்கம் தான் என காட்டப்பட்டிருக்கிறது///
பாலியல் குற்றங்களுக்கு ஆணாதிக்கமும் தனியுடமை என்று சொன்ன நீங்கள் இப்போது ஆணாதிக்கம் மட்டுமே என்ற நிலையில் வந்துவிட்டீர்கள்.அந்நிய பெண்ணையும் உறவு பெண்ணையும் பிரித்து காட்டுவது ஆணாதிக்கமின்மை அல்ல. பகுத்தறிவே அங்கு அவனது காமாதிகத்தை மட்டுபடுத்துகிறது.
ஆக ஆணாதிக்கம் தான் என்று சொன்னது தவறு என சரி காணப்பட்டுள்ளது 
 .. ////இனியும் நீங்கள் சாத்தியமில்லை என்றோ பில்லியன் ஆண்டு என்றோ வறட்டுக் கிண்டலடிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை//// 
இப்படியெல்லாம் பகல் கனவை வெளிபடுத்தியிருக்கவேண்டாம்.
///நான் கூறுவதிலிருந்து வரிகளை பிய்த்துப்போட்டு மறுப்பளிப்பது ஒருபுறம் இருக்கட்டும். இவைகளை மறுப்பதற்கான உங்கள் வாதம் என்ன? அதையும் கொஞ்சம் கூறுங்களேன் கேட்டுப்பார்ப்போம்////
பாலியல் குற்றங்களுக்கான காரணம் ஆணாதிக்கமும் தனியுடமையும் தான் என்பதே உங்களது வாதம் அதை மறுக்கும் முகமாக உங்களது வாதத்திலுள்ள சாற்றுக்கு பதில் சொல்லிவிட்டு சக்கையை கழிப்பதுதானே எனது வாதம், வேறு எதை கொஞ்சம் கேட்கிறீர்கள்?
என் கையில் இருக்கும் நெய்யை வைத்து நாங்கள் இருநூறு கோடிமக்கள் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறோம்..எங்களது ஆரோக்கியம் உங்கள் கத்தல் முப்பது டெசிபல் என்ன ,முன்னூறு கோடி யாக இருந்தாலும் எங்களுக்கு அவசியமில்லை. மலையிடம் மோதுபவனைப் பார்த்து பரிதாபவே பட முடியும் .என்னை போன்றவர்கள் மண்டை உடைவதைப் பார்த்து வேண்டாம் என்று அறிவுறுத்தவே முடியும்.
மல்லி வைத்த பங்களக்காரி வாடிப்போன மல்லியை குப்பையில் தூக்கி எறிந்தால் ,மலத்தில் விழுந்த வாடிய மல்லியை மணக்குதே என்று தலையில் வைத்து ஆடுபவள் பைத்தியக்காரியா?அந்த வழியாக மூக்கை பொத்தி சென்றவன் பைத்தியாக்காரானா என்று வாசிக்கும் மக்கள் தான் முடிவு பண்ணவேண்டும்
.   ////உங்களுக்கு தைரியமோ, தகுதியோ, திறனோ வாய்த்திருந்தால் எப்படி இஸ்லாம் முடை நாற்றமடிக்கிறது என்று காட்டியிருக்கிறேனோ, அது போல கம்யூனிசம் குறித்து உங்களால் எதையாவது காட்டமுடியுமா என முயன்றுபாருங்கள். முடியாவிடின் திறந்து கிடப்பதை மூடிக்கொள்ளுங்கள்//// 
நிழலுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் செங்கொடி ,நான் போஸ்ட் மார்ட்டம் பண்ண விரும்பவில்லை.உறவினர்களே அடக்கம் பண்ணிவிட்டு சென்ற பிறகு கூலிக்கு மாரடிப்பவர்கள் கேட்டு என்ன ஆகப் போகிறது?
நாங்கள் நெய்யால் சமைத்து சாப்பிட்ட பிரியாணியை உண்ணு கழித்த பிறகு செப்டிக் டான்க்  சுத்தம் செய்பவர்களுக்கு முடை நாற்றம் தான் வீசும் பிரியாணியா மணக்கும் ?.
   செங்கொடி, on பெப்ரவரி25, 2011 at 2:02 AM said:

நண்பர் இப்ராஹிம்,

பாலியல் குற்றங்களுக்கு இஸ்லாமா? கம்யூனிசமா? எது சரியான தீர்வு எனும் த‌லைப்பில் தொடங்கிய இவ்விவாதத்தில், அதில் ஒரு பாதியான இஸ்லாமில் தீர்வு என்று ஒன்றுமில்லை என்றும் அது கூறும் சட்டத்தண்டனைகள் உதவாது என்றும் ஆகிவிட்டது. இந்தநிலையில் கம்யூனிசத்தீர்வான ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் நீக்குவது என்பது குறித்தே தற்போது வாதித்து வருகிறோம். இதில் இதுவரை ஆணாதிக்கம் காரணமல்ல எனக் கூறிவந்த நீங்கள், இப்போது ஆணாதிக்கம் என்பதற்கு புதிய விளக்கத்தையும் அளிக்கிறீர்கள். என்றால் இதன் காரணமென்ன? காமாதிக்கம் போன்ற புதுப்புது காரணங்களை உருவாக்கிக் கொண்டு வந்திருந்தாலும் அதை தகுந்த காரண ரீதியாக வாதமாக முன்வைக்க முடியாமல் நான் கூறுவதை மறுப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதையே உங்களின் மொத்த வாதமாகவும் வைத்து வருகிறீர்கள். ஏற்கனவே இஸ்லாமிய தீர்வு குறித்து பேசமுடியாமலிருக்கும் நீங்கள் இதையும் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் என்ன செய்வது என்பதால் பற்பல உத்திகளைக் கையாண்டு காலம் கடத்துவதை செய்துவருகிறீர்கள். உங்கள் வாதத்தை மொத்தமாக பார்க்கும் போது இந்த முடிவுக்குத்தான் வரவேண்டியதிருக்கிறது.
௧) பதிலை வைப்பதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்வது.
௨) என்ன கேட்கப்படுகிறதோ அதை விடுத்து வேறொன்றாக திரித்து பதில் கூறுவது.
௩) கேட்க்கப்பட்ட கேள்விகளை கண்டு கொள்ளாமல் விடுவது.
௪) எத்தனை முறை கேட்டாலும் சுற்றிவளைத்தே பதில் கூறுவது.
௫) கேள்வியில் மொத்த சாரத்தை விட்டுவிட்டு தோதுவான வரியை எடுத்து அதற்கு பதில் கூறுவது.
௬) திசை மாற்றும் உத்தியுடன் புதுப்புது அர்த்தங்களைக் கூறுவது.
இவற்றில் தற்போதையு புது உத்தியான கடைசியிலுள்ளதைத் தவிர ஏனையவற்றை நான் பல முறை சுட்டிக்காட்டியிருந்தும் தொடர்ந்து அதையே செய்துவருகிறீர்கள் என்பது உங்களின் கடைசி பதிவிலும் தெரிகிறது. விவாதத்தில் நேர்மையிருந்தால் இந்தக் கேள்விகளுக்கு ஏன் நம்மிடம் பதில் இல்லை எனும் சிந்தனை வந்திருக்கும், அதன் தொடர்ச்சியாக பரிசீலனை வந்திருக்கும். ஆனால் மதமே உங்களை ஆக்கிரமித்திருப்பதால் இஸ்லாமியத்தீர்வை நிருவ முடியாது என்றாகிவிட்ட நிலையில் பதில் கூற முடியாத கேள்விகளை தவிர்க்கவும், மதத்திற்கு எதிரானவைகளை ஏற்றுக்கொள்ள நேர்வதிலிருந்து தப்பிக்கவும் மேற்கண்ட உத்திகள் மூலம் பதில் என்ற பெயரில் எதையாவது கூறி காலங்கடத்திக் கொண்டே செல்வதில் உங்கள் முனைப்புகளை செலுத்திவருகிறீர்கள். ஆனால் இந்த விவாதப் பகுதியை நாமிருவர் மட்டுமல்ல பலரும் தொடர்ந்து படித்து வருகிறார்கள். எனவே காலங்கடத்தும் உத்திகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதும், இந்த விவாதத்தை முடிவை நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதும், உங்களின் பொறுப்பை நீங்கள் உணர்வதிலேயே இருக்கிறது.

இனி உங்கள் பதில்களை பார்க்கலாம், \\நீங்கள் எதை ஆணாதிக்கம் என்று சொல்லுகிறீர்களோ அந்த ஆணாதிக்கம் மக்களிடம் குறைந்து வருகிறது என்றே குறிப்பிட்டுள்ளேன்// உங்கள் முதல்வரியே இப்படி தொடங்குகிறது. ஆக நான் எதை ஆணாதிக்கம் என்று சொல்கிறேனோ அதுவும் நீங்கள் இப்போது பயன்படுத்தும் ஆணாதிக்கம் என்பதும் வேறுவேறானது அப்படித்தானே. அந்தவகையில், பாலியல் வன்முறையில் ஆணாதிக்கம் இருக்க காரணம் என நீங்கள் கூறிய ஆணாதிக்கமும்; மிச்சம் இருக்கும் ஆணாதிக்கமும் அழிந்துவருவதை பார்க்கமுடியும் என்பதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஆணாதிக்கமும்; இங்கே ஆணாதிக்கம் எங்கே உள்ளது?காலப் போக்கில் மறைந்துவிடும் என்பதில் நீங்கள் கூறிய ஆணாதிக்கமும்; உலகில் ஆணாதிக்கம் குறைந்துவருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதில் நீங்கள் குறிப்பிடும் ஆணாதிக்கமும் இப்போது நீங்கள் குறிப்பிடும் ஆணாதிக்கத்திலிருந்து வேறுபட்டது அப்படித்தானே. இதைத்தான் நான் கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன், உலகம் முழுவதும் ஆணாதிக்கம் என்பதை என்ன பொருளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதோ, இந்த விவாதத்தில் தொடக்கத்திலிருந்து ஆணாதிக்கம் என்பதை நானும் நீங்களும் என்ன பொருளில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமோ அதை மாற்றி இப்போது ஆணாதிக்கம் என்று நீங்கள் புது விளக்கம் கொடுப்பதற்கு என்ன அவசியம் வந்திருக்கிறது? முகம்மது உள்ளிட்டு அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகியோரிடம் இருந்தது ஆணாதிக்கம் என்று இஸ்லாமிய அறிஞர்களே கூட‌ இதுவரை யாரும் குறிப்பிட்டிருக்காத நிலையில்; ஆளுமை என்பதையும் ஆதிக்கம் என்பதையும் குழப்பிக்கொண்டு, இந்த புது விளக்கத்தை நீங்கள் கொடுக்கவேண்டிய தேவை என்ன? ஒரு எல்லைக்குமேல் ஆணாதிக்கத்தை மறுக்க முடியாது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். ஆனால் அதை உங்களால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாது, ஒப்புக்கொள்ள நேர்ந்தால் அதை நீக்குவதைத்தவிர பாலியல் குற்றங்களுக்கு வேறு தீர்வில்லை என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதை உங்களை ஆக்கிரமித்திருக்கும் மதம் அனுமதிக்காது. எனவே தான் நீங்கள் ஆணாதிக்கம் என்பதற்கு புது விளக்கம் கொடுக்கிறீர்கள். இந்த விவாதத்தில் தொடக்கத்தில் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஆணாதிக்கம் என்பதன் பொருளை மாற்றி புதுப் பொருள் கொடுத்தால் குழப்பம் வருமேயன்றி முடிவு வராது. ஆகவே தொடக்கத்திலிருந்து என்ன பொருளில் பயன்படுத்துகிறோமோ அதே பொருளிலேயே தொடர்ந்து பயன்படுத்தியாக வேண்டும். இதைத்தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

\\தகுந்த காரணமோ, அவசியமோ இன்றி எப்படி ஒரு ஆணால் எந்த அன்னியப்பெண்ணுடனும் கலவிக்கு தயாராகிவிட முடிகிறது?தகுந்த காரணமோ,அவசியமோ இன்றி எப்படி ஒரு பெண்ணால் எந்த அந்நிய ஆணுடனும் கலவிக்கு தயாராகிவிட முடிகிறது?// கேள்வியின் பால் மாற்றி கேட்டுவிட்டால் அது பதிலாகிவிடுமா? பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பெண்களில் நுகர்வுக்காக ஈடுபடுவது மிகச் சொற்பமான அளவில் விதிவிலக்காக இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு அழுத்தமான தேவை செயல்படுகிறது. இயல்பான காம உணர்வு தீர்க்கப்படாமை, உயிர்வாழ்வதற்கு அதைத்தவிர வேறு வழியில்லை எனும் தவறான புரிதல், ஆண்களால் வஞ்சிக்கப்படுதல் போன்ற ஆழமான காரணங்கள் தொழிற்படுகின்றன. ஆனால் ஒரு ஆண் பாலியல் குற்றம் செய்வதற்கு இது போன்ற எந்தக் காரணமும் அவசியமின்றி பெரும்பாலான ஆண்கள் அன்னியப் பெண்களுடன் கலக்கத் தயாராக இருக்கிறார்கள். இது ஏன்? என்பது தான் கேள்வி. இது உங்களுக்கு தெரியாது என்றெல்லாம் கூறமுடியாது. கூறினால் நீங்கள் ஆணாதிக்கமே என்பதை ஒப்புக்கொள்ள நேரும். அதனால் தான் பதில் கூறாமல் தப்பித்து ஓடப்பார்க்கிறீர்கள். ஆனால் நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.

\\பெண்ணுக்கு தனக்கு ஏற்படும் சமூக,உடல் ரீதியாக ஏற்படப்போகும் பாதிப்புகள் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாமல் ஒரு ஆணை கலவிக்கு அழைத்ததோ ,அதே காமாதிக்கம் தான்,அதே காமாதிக்க சிந்தனைதான் ஆணுக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும்// ஆணை கலவிக்கு அழைக்க பெண்ணுக்கு ஏற்படும் தேவைக்கும் அதையே ஆண் செய்யும் தேவைக்கும் இடையிலுள்ள வித்தியாசம் அனைவருக்கும் புரிந்தது தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான காமத்தேவை என நீங்கள் சமாளிக்கும் உங்கள் நிலையின்படி பார்த்தாலும் குற்றம் எனவரும் போது ஆண் அதிகரித்துவிடுகிறானே எப்படி? என்பதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதற்கு உடல்பலம் என்பதை மட்டுமே நீங்கள் காரணமாகச் சொல்ல முன்வந்தால்; உலகின் எல்லாப் பெண்களும் எல்லா ஆண்களையும் விடவா பலவீனர்களாக இருக்கிறார்கள்? ஆண் ஈடுபடும் வன்முறைகளில் ஒரு விழுக்காடு கூட‌ பெண் ஈடுபடுவதில்லை. உலகின் இந்த யதார்த்தம் உங்களை உராய்ந்தால் பெண்ணுக்கு காமத் தேவையாகவும் அதுவே ஆணுக்கு (உங்கள் மொழியில்)காம ஆதிக்கமாகவும் இருக்கிறது என்பது உங்களுக்கு புரியும். பெண்ணுக்கு தேவையாக இருப்பது ஆணுக்கு ஆதிக்கமாவதால் தான் அது பொதுவான காமாதிக்கமாக இல்லாமல் ஆணுக்கான ஆதிக்கமாக இருக்கிறது. விளக்கங்கள் மட்டுமே உங்களுக்கு போதுமானதாக இருக்காது. ஏனென்றால் புரிந்துகொண்டே மறுப்பவர்களல்லவா நீங்கள், அதனால் தான் கேள்விகள். உங்களிடமிருந்து பதில் வந்தே ஆக வேண்டும்.

\\ஒருபெண்ணை பலமான ஆண் அவளிடம் கற்பை பறிப்பது போலவே ,என்னிடம் பலமான திருடன் பணத்தை பறிக்கும்போது நான் என்ன செய்ய முடியும்?// நீங்கள் என்ன செய்யமுடியும் என்பது கேட்கப்படவே இல்லையே. பலமானவன் பலவீனனை ஆதிக்கம் செய்வது பொது நியதி என்று நீங்கள் கூறும் போது உங்கள் உதாரணப்படியே உங்களைவிட பலமான திருடன் உங்களின் பலவீனத்தை பயன்படுத்தி உங்கள் பணத்தை பறித்தால் அதை பொது நியதி என ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வீர்களா? என்பது தான் கேள்வியேயல்லாமல் என்ன செய்யமுடியும் என்று உங்கள் இயலாமை இங்கு கேட்கப்படவில்லை. இதுவும் உங்களுக்கு புரிகிறது. பதில்சொல்ல முடியாது என்பதால் அதை திரிக்கிறீர்கள். ஆனால் பதில் சொல்லியாக வேண்டும். இது பொது நியதி என ஒப்புகிறீர்களா மறுக்கிறீர்களா? இதோடு தொடர்பாக இன்னொரு கேள்வியும் இருந்ததே அதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? மாட்டிக்கொள்ள நேரும் என்பதாலா? ஆண் பலமானவன், பெண் பலவீனமானவள் என்கிறீர்கள், ஆதிக்கம் செய்வது பொது நியதி என்கிறீர்கள். என்றால், பெண் மீது ஆண் செய்யும் ஆதிக்கம் ஆணாதிக்கம் இல்லாமல் வேறென்ன?

\\பெண்களின் பல ஒழுக்க மீறல்கள் அவர்களின் நலன் கருது மறைக்கப்படுவதும் .இன்னும் பல மிகவும் ரகசியமாக ஒழுக்க மீறல்கள் உள்ளதாலும் பெண்களின் விழுக்காடு குறைவாக இருப்பது போல் தெரியும்// ஆனால் ஆணின் அளவுக்கு பெண்ணும் ஒழுக்க மீறல்கள் செய்கிறாள் என்பது தானா நீங்கள் கூறவருவது? மறுக்கவேண்டும் என்பதற்காக அப்பட்டமான பொய்யையும்கூட கூசாமல் கூறுவது எனும் முடிவுக்கு நீங்கள் வந்திருப்பது புரிகிறது. ஆண் செய்யும் பாலியல் குற்றங்கள் மறைக்கப்படுவதில்லையா? சமூகத்தில் பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளும் பாதிப்புகளுமே ஆணின் வரம்பு மீறல்களை வெளியில் கூறமுடியாமல் செய்கிறது. இது ஆணை பாதுகாக்கிறது. மட்டுமல்லாமல், கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் ஒரு ஆணுடன் பெண் போட்டியிட்டாலே அவளை ஒழுக்கம் கெட்டவளாக சித்தரிப்பது தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில், அதற்கு நேர்மாறாக பெண் பாதுகாக்கப்படுவதாக புழுகுகிறீர்கள். ஒரு குடும்பம் எனும் அளவில் சில நேரங்களில் மறைக்கப்படுகின்றன, ஆணின் குற்றங்களும் கூட இவ்வாறு மறைக்கப்படுகின்றன. சில காரணங்களை முன்னிட்டு, சில பயன்களுக்காக, அந்தந்த குடும்பங்களில் எற்படவிருக்கும் விளைவுகளைப் பொருத்து ஆண்களின் குற்றமானாலும், பெண்களின் குற்றமானலும் மறைக்கப்படுகின்றன. இதை பெண்கள் பாதுகாக்கப்படுவதாக எடுத்துக்காட்டும் உங்களுக்கு, இந்த உலகில் பொதுவாக இருக்கும் பெண்களுக்கு எதிரான தன்மைகள் ஏன் தெரியவில்லை? தெரியவில்லை என்பதைவிட தெரிந்ததாக நீங்கள் காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்பதுதான் சரி. இப்போது என்னுடைய கேள்வியை பாருங்கள், \\எந்தச் சமூகத்தில் எடுத்துக்கொண்டாலும், எந்தக் காலகட்டத்தில் எடுத்துக்கொண்டாலும் பெண்களின் விழுக்காட்டோடு ஒப்பிடும் போது பலமடங்கு ஆண்கள் ஒழுக்கத்தை மீற தயாராக இருக்கிறார்கள் என்பது ஏன்?// இனி பதிலைக் கூறுங்கள்.

\\அதிகமான சமூக கட்டுப்பாடுகளே அதிகமான ஒழுக்கத்தை பின்பற்ற செய்யும்.கூடுதலான சமூக கட்டுப்பாடுகளே பெண்களின் ஒழுக்கத்தை காப்பாற்றுகின்றன.சமூக கட்டுப்பாடுகள் குறைவே ஆணின் கமாதிக்கத்தை செயலாக்குகிறது// பதிலாக எதையாவது கூறினால் போதும் என்ற நிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள் என்பதையே இந்தப்பதில் காட்டுகிறது. ஒரு இடத்தில் பெண்ணின் குற்றம் மறைக்கப்படுகிறது அதனால்தான் அது குறைவாக இருப்பது போல தோன்றுகிறது என்கிறீர்கள். மறு இடத்தில், அதிகமான கட்டுப்பாடுகள் பெண்ணின் ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றன என எழுதுகிறீர்கள். உங்கள் பதிலே ஒன்றை ஒன்று மறுத்து நிற்கிறது. பெண்களுக்கு அதிகமான சமூகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதன் காரணமே ஆணாதிக்கம் தான். தனக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டுமென்பதற்காகவே அதிகமான சமூக கட்டுப்பாடுகள், கலாச்சாரம் என்ற பெயரிலான வரம்புகள், மரபு என்ற பெயரிலான அடக்குமுறைகள் பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கின்றன. உங்களின் கூற்றுப்படியே பார்த்தோமென்றால் அதிகமான கட்டுப்படுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பெண்ணை ஒழுக்கம் காக்கச் செய்திருக்கிறது என்றால், அதிகமான ஒழுக்கமீறல்களைச் செய்யும் ஆண்களுக்கல்லவா அது தேவைப்படுகிறது. ஆணாதிக்கம் என்ற ஒன்று உலகில் இல்லாதிருந்தால் கட்டுப்பாடுகள் யார் அதிகமாக மீறல்களைச் செய்கிறார்களோ அவர்கள் மீதே விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் எப்போதுமே பாலியல் வரம்புமீறல்களை ஆணகளே அதிக அளவில் செய்திருக்க கட்டுப்பாடுகள் பெண்கள் மீது விதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இதன் காரணம் ஆணாதிக்கம் என்று விளங்குகிறதே. எல்லாக் காலகட்டத்திலும் ஆண்கள் பாலியல் குற்றங்களில் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். அது வெளியில் தெரியாமல் மறைக்கப்படவேண்டும் என்பதற்காகவே பெண்கள் மீதான கட்டுப்பாடுகள். ஆக பெண்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளே ஆணாதிக்கத்தை தக்கவைக்கிறது. ஆனால் நீங்களோ கட்டுப்பாடுகள் தான் பெண்களைக் காக்கிறது என்கிறீர்கள். எப்போதும் எதையும் மேலோட்டமாக பார்ப்பதே உங்களின் வழக்கம். அதனால் தான் குறைவான கட்டுப்பாடுகள் ஆண்களை குற்றம் செய்ய காரணமாகிறது என்று பொருள்பட கூறுகிறீர்கள். உங்கள் பதிலில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சமூக கட்டுப்பாடுகள் வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லாத பட்சத்தில், ஏன் எப்போதும் ஆண்கள் அதிக பாலியல் குற்ற‌ங்களைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கான பதிலை நீங்கள் தேடியாக வேண்டும்.

\\ஒரு பெண்ணின் ஒழுக்கக்கேடு ஏன் பல ஆண்களைக் கெடுக்க வேண்டும்?// என்பதற்கு இரண்டு இடங்களில் பதில் கூறியிருக்கிறீர்கள். ஒரு இடத்தில் ஆட்டோ, டாக்சி, டிரைவர்கள் என்று ஏதேதோ கூறியிருக்கிறீர்கள். இன்னொரு இடத்தில், ஆண் எளிதாக கிடைப்பான், மொய்ப்பார்கள் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் இரண்டிலுமே ஆழமில்லாத பார்வைகள். ஆண் ஏன் அப்படி அலைபவனாக இருக்கிறான் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஆனால் நீங்களோ சம்பவங்களினூடாக ஆண் அலைபவனாக இருக்கிறான் என்று கூறிக்காட்டியிருக்கிறீர்கள். ஏன் அப்படி இருக்கிறான் என்பது தான் நீங்கள் பதில் கூற வேண்டிய கேள்வி.

\\குழந்தை பிறப்பு என்பதை மட்டும் தவிர்த்துவிட்டால் எளிது கடினம் என்பது மறைந்து சமமாகிவிடும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் குழந்தை பிறப்பை தவிர்ப்பதென்பது வெகு சுலபமானது. அப்படியென்றால் ஆணுக்கு கடினம் பெண்ணுக்கு எளிது என்பது தற்காலத்தில் செல்லுபடியாகும் சூத்திரமாக இருக்க முடியது. ஆனால் யதார்த்தம் அப்படி அல்ல இது எப்படி நேர்ந்தது?// இது கேள்வி. இதற்கு உங்கள் பதில், \\குழந்தை பிறப்பு காரணமாக நான் குறிப்பிடவில்லை.ஒரு பெண் தனக்கு பாலியல் உணர்வுகளுக்கு தீர்வு தேடும் சமயத்தில் அவளுக்கு இருக்கும் சமூக கட்டுப்பாடுகளை பற்றி கவலை கொள்வதில்லை.ஒரு பெண் அழைக்கும் போது உடன் ஆணும் இணங்கி விடுகிறான் .இதுவும் பாலியல் குற்றம் எனினும் வன்முறை இல்லை.ஆனால் ஆணுக்கு பாலியல் தேவை ஏற்படும்போது அவனுக்கு இணக்கமானவாளாக இருந்தாலும் கூட தனது சமூக கட்டுப்பாடு பற்றிய பயம் அவளை மறுக்க செய்கிறது.இதைத்தான் பெண்ணுக்கு எளிது ஆணுக்கு கடினம் என்கிறேன்// கேள்வியில் எல்லையை பதில் தொடவே இல்லை. சமூகக் கட்டுப்பாடு பெண்னை பயங்கொள்ளச் செய்கிறது என்கிறீர்கள், தேவையின் போது சமூகக் கட்டுப்பாடுகளை பற்றி கவலை கொள்வதில்லை என்கிறீர்கள். ஆனால் இந்த மாறுபட்ட நிலை, பெண்ணின் தேவைக்கும் ஆணின் அலட்சியத்திற்கு இடையிலிருந்து எழுகிறது என்பதை மட்டும் உணராதது போல் நடிக்கிறீர்கள். குழந்தை பிறப்பதை குறிப்பிடவில்லை என்று கூறும் நீங்கள், அது இல்லாவிட்டால் பெண் பயங்கொள்ள அவசியம் இருக்காது என்பதை இன்னும் எவ்வள‌வு நாள் கழித்து விளங்கிக்கொள்வீர்கள்? கேள்வி என்ன? எந்த பயம் பெண்ணை தடுக்கிறது என நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ, அந்த பயத்தை இன்றைய தொழில் நுட்பம் இல்லாமல் ஆக்கியிருக்கிறது என்பது தான் நான் கூற வருவது. ஆக தொழில்நுட்பம் பெண்ணின் பயத்தை தேவையற்றதாக்கியிருக்கிறது எனும் நிலையிலும் ஆணின் அளவுக்கு பெண் பாலியல் குற்றம் செய்பவளாக இல்லை என்பது தான் உலக யதார்த்தம். இது பாலியல் குற்றங்களின் காரணம் ஆணாதிக்கம் தான் என்பதை தெளிவாக விளக்கப்படுத்திக் காட்டுகிறது.

\\எளிதில் இன்புறும் ஆணுக்கு பெண்கள் கிடைத்தால் போதும் என்ற நிலை. ஆனால் பெண்களோ மெல்ல இன்புறுதலுக்கு இணையான ஆண்களை தேடுதல் காரணமாக இருக்கலாம்// சிட்டுக்குருவி லேகிய வைத்தியன் ரேஞ்சுக்கு இருக்கிறது உங்கள் பதில். இதை \\ஆணின் அளவுக்கு சமமாக ஏன் பெண்ணும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதில்லை// என்பதற்கு நீங்கள் பதிலாக கூறியிருக்கிறீர்கள். உங்கள் பதிலின்படி பார்த்தால், ஆண் கிடைக்கும் முதல் பெண்ணுடன் திருப்தியடைந்துவிடுகிறான். ஆனால் பெண்ணோ இணையான ஆண்கள் கிடைக்கும் வரை தேடுதலை தொடர்பவளாக இருக்கிறாள். பாலியல் குற்றத்தில் ஈடுபடாமல் பெண்ணால் இதை கண்டுணர முடியாது என்பதால் பாலியல் குற்றத்தில் ஆணின் அளவைவிட பெண்ணின் அளவு அதிகமாக இருக்கவேண்டும். ஆனால் யதார்த்தம் இப்படி இல்லை என்பதைத்தான் நான் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறேன். யதார்த்தத்தில் ஆணுக்கு ஒரு பெண் போதுமானவளாக இல்லை. தினந்தோறும் புதுப்புது பெண்களாக கிடைத்தாலும் கூட ஆணின் காமம் திருப்தியடைவதில்லை. ஆனால் பெண்ணுக்கு தேவை தீர்ந்ததும் அவளின் காமம் திருப்தியடைந்துவிடுகிறது. இதுதான் உலகில் ஆணை அன்றும் இன்றும் என்றும் பாலியல் குற்றங்கள் புரிப‌வனாக நீடிக்க வைத்திருக்கிறது. ஆணின் இந்த பாலியல் குற்றத்தை தடுக்க வேண்டுமென்றால் அவனை தூண்டிக்கொண்டிருக்கும் ஆணாதிக்கத்தை நீக்காதவரை சாத்தியமில்லை. யதார்த்தம் இப்படி இருக்க நீங்களோ லேகிய‌ வைத்தியனுடன் எப்படி சமாளிக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

\\கேள்வி கேட்டு அதற்கு பத்திரிக்கை செய்தி போன்று ஒன்றை பதிலாக கூறி பின் நேரடியாக கூறுங்கள் என்று கேட்டு அதன் பின்னரும் சுற்றிவளைத்துத்தான் பதில் கூறுவீர்கள் என்றால் அது என்ன விதமான மனோநிலை. ….. இல்லையென்றால் எப்படி? சுற்றிவளைக்காமல் பதில் கூறுங்கள்// இப்படி எடுத்துக்காட்டி கேட்டபின்னும் \\உறவினரிடம் ஒருவன் பாலியல் தேவையை தீர்ப்பவனாக இருந்தால் அவன் மனித நிலையிலிருந்து மாறிவிடுவான் ..ஆதலின் அவனது பகுத்தறிவே அவனது காமத்திக்கத்தை அந்நிய பெண்ணிடம் திரும்ப செய்கிறது// என்று பதில் கூறுவதற்கு வெட்கப்படவேண்டாமா? காமாதிக்கமே பாலியல் வன்முறைக்கு காரணமென்றால் உறவுப் பெண்ணிடமும் அன்னியப் பெண்ணிடமும் ஒரே மாதிரியான காம உணர்வு ஆணுக்கு ஏற்பட வேண்டும். ஆணாதிக்கமாக இருந்தால் மட்டுமே அவனுடைய காமத்தில் பேதம் வரும். ஆக கேள்வி ஒரே மாதிரியான காமம் வருமா? வித்தியாசப்படுமா? என்பது மட்டுமே. இதன் பிறகும் நீங்கள் வட்டமடித்தால் நீங்கள் ஆணாதிக்கம் என்பதை ஒத்துக்கொண்டதாகவே நான் எடுத்துக்கொள்வேன். நீங்கள் தாவித்தாவிச் செல்லும் இடங்களிலெல்லாம் வந்து கேட்டுக்கொண்டிருப்பதற்கு நான் ஒன்றும் பைத்தியன் அல்லன்.

அடுத்து நான் தனியுடமையை விட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். பாலியல் குற்றங்களுக்கு ஆணாதிக்கமும் தனியுடமையுமே காரணமாக இருக்கின்றன என்பதில் எந்தவிதமான மாற்றமும் என்னிடம் இல்லை. இங்கு ஆணாதிக்கத்தையே பிரதானமாக எடுத்துக்கொண்டு விவாதித்துக் கொண்டிருப்பதால் அதை மட்டும் குறிப்பிட்டிருந்தேன். தனித்தனியாக குறிப்பிட்டாலும், இரண்டையும் சேர்த்து குறிப்பிட்டாலும், ஒன்றை மட்டுமே சுட்டியிருந்தாலும் சாராம்சத்தில் பாலியல் குற்றங்களுக்கான காரணம் இரண்டும்தான் என்பதில் ஐயமோ, மாற்றமோ இல்லை. வெறும் வார்த்தைகளில் இல்லை அதன் பொருள்களிலேயே விவாதம் நகர்கிறது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.

மதத்திலிருந்து கேட்டால் மதத்திலிருந்தும் பொதுவாக கேட்டால் பொதுவாகவும் பதில் கூறவேண்டும் என்பதை மறுக்கிறீர்கள். அதாவது மதத்தையும் பொதுவானவற்றையும் குழப்பி பதிலளிக்கும் வசதியை கேட்கிறீர்களா? முந்திய விவாதத்திலிருந்து ஒன்றைப் பார்க்கலாம். உலகில் ஆணாதிக்கம் இல்லை என்றீர்கள் அதற்குப் பதிலாக இந்திய கலாச்சாரத்தில் இருக்கும் கணவன் மரணித்து விட்டால் பூ பொட்டு வைக்க சமூகம் அனுமதி மறுப்பதை சுட்டிக்காட்டினால் இஸ்லாத்தில் அவ்வாறு இல்லை என்றீர்கள். அதாவது உலகிலிருக்கும் ஆணாதிக்கத்தை காட்டினால் ஏற்கவோ மறுக்கவோ செய்வதிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாத்தை இழுத்து வந்தீர்கள். ஆக உங்களின் நிலையில் வறட்டுத்தனமாய் நிற்பதற்கு மதத்தையும் பொதுவானவற்றையும் கலக்க எண்ணுகிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது. இரண்டையும் கலந்து பதில் கூறினால் இதிலிருந்து அதற்கும் அதிலிருந்து இதற்கும் தாவித்தாவிச்சென்று இந்த விவாதத்தை நீர்த்துப்போக வைப்பதற்கு அது பயன்படுமேயன்றி, சீரிய முறையில் நடத்துவதற்குப் பயன்படாது. எனவே அதை நான் ஏற்க மறுக்கிறேன். இப்படி கூறியிருப்பதன் மூலம் இஸ்லாத்தைப்பற்றி கூறக்கூடாது என்பது என்னுடைய நிலையல்ல. உங்கள் வாதத்தை நிலை நிறுத்துவதற்கு உங்களின் வாதமாக மதத்தைப்பற்றி நீங்கள் தாராளமாக எடுத்து வைக்கலாம். அதற்கு நான் பதிலளிக்க சித்தமாக இருக்கிறேன். ஆனால் நான் ஒரு பொதுவான விசயத்தில் கேள்வி எழுப்பியிருக்கும் போது அதை நீங்கள் பொதுவானதிலிருந்தே மறுக்க வேண்டும். அப்படி செய்துவிட்டு மேல்விளக்கமாக மதத்திலிருந்தும் பதில் கூறலாம் தவறில்லை. ஆனால் நான் எழுப்பிய பொதுவான ஒன்றை மதத்தை முன்னிருத்தி மறுக்கக்கூடாது. இதன் காரணமாகவே உங்களின் பதிவில் ஓரிரு இடங்களில் நீங்கள் மதத்தை நுழைத்திருப்பதற்கு பதில் கூறாமல் தவிர்த்து விட்டிருக்கிறேன். அதற்கும் பதில் கூறினால், நீங்கள் அதைப் பிடித்துக்கொண்டு திசைமாற்றி செல்வீர்கள் என்பதால்.

சுயநலங்களுக்காகவும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டங்கள் எல்லாமே சுயந‌லமல்ல. போராட்டங்கள் என்பதில் முக்கியமான விசயமே மக்கள் ஒன்றிணைவது தான். தனியுடமை மக்களை தனித்தனியாக சிதறுண்டு போக வைத்துக்கொண்டிருக்கும்போது பொது நோக்கத்திற்காக அரசை எதிர்த்து போரடுகிறார்கள். ஒரு பினாயக் சென் பொய்க்குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டதற்காக இந்தியாவெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. இதில் என்ன சுயநலம் இருக்கிறது? மீனவர்களுக்காக ஐடி துறையினர் போராடினார்கள். இதில் என்ன சுயநலம் இருக்கிறது? பாபரி மசூதி கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போராடுகிறார்கள். இதில் என்ன சுயநலம் இருக்கிறது? ஈராக் மக்களுக்காக, பாலஸ்தீன மக்களுக்காக இந்தியாவில் போராட்டங்கள் நடக்கின்றன. இதில் என்ன சுயநலம் இருக்கிறது? ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய மக்களும் கூட கலந்து கொண்டார்கள். இதில் என்ன சுயநலம் இருக்கிறது? அரசை எதிர்த்து மக்கள் கிளர்வது சோசலிசத்தை நோக்கிய பாதைதான். இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை, மறுப்பதைத்தவிர வேறு வழியில்லை எனும் கட்டாய‌ நிலையிலிருக்கும் மதவாதிகளைத்தவிர.

\\சோஷலிச ஆட்சியின் வடுகுறிகள் அந்த மக்களிடம் மாறவில்லை. அவ்வாறிருக்க ,மற்ற மக்களிடம் அதன் அறிகுறியை எப்படி காணமுடியும்?// எதற்கான பதிலாக இதைக் கூறியுள்ளீர்கள்? தொடர்பின்றி உளறுவதை நிறுத்துங்கள். சோசலிசம் இருந்த நாடுகளிலும் இன்றைய முதலாளித்துவ அரசுகளை எதிர்த்து போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

\\தனிஉடமை மக்களிடம் உள்ள பொதுநலன் பற்றிய சிந்தனைகளை நீங்களாகவே வலிய வந்து பொதுவுடமையின் மிச்சமுள்ள சிந்தனை என்று அலட்டிக்கொள்வது நியாயமா?// பரிதாபப் படுகிறேன் உங்களை நினைத்து. பொது நலன் பற்றிய சிந்தனை என்பதற்கும் பொதுவுடமை சிந்தனை என்பதற்கும் இடையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூர வித்தியாசம் இருப்பதைப் போல அங்கலாய்த்துக்கொள்கிறீர்கள். பொதுநலச் சிந்தனையும் பொதுவுடமைச் சிந்தனையும் ஒன்றுதான். பொதுவுடமை என்பது சற்று விரிந்த பொருள் கொண்டது அவ்வளவுதான் வித்தியாசம். இந்த வித்தியாசம் கூட உங்களுக்குத் தெரியாது. இதை மறுக்க வேண்டுமே என்ன செய்வது என்று சிந்திக்கையில் உங்களுக்கு பொது நலன் எனும் வார்த்தை கிடைத்திருக்கிறது. அதையே மறுப்பாக வைத்து விட்டீர்கள். தனியுடமை என்பதை சுயநலம் என்று கொண்டால் பொதுவுடமை என்பது பொதுநலம் என்றாகும். வாய்ப்புக் கிடைத்தால் இந்த பொருள் வித்தியாசத்தை கண்டுபிடித்ததற்காக உங்களுக்கு முனைவர் பட்டம் தர‌ பரிந்துறைக்கிறேன்.

\\ஒருவனால் தூக்கம் இல்லாமல் வாழ முடியாது.., திருமணம் இல்லாமல் உடலுறவு கொள்ள முடியும் .இதில் என்ன தொடர்ச்சி இருக்கிறது?இயற்கைதேவைகளை நிறைவேற்றுவதர்க்கான அணுகுமுறைகளை நடைமுறை படுத்தலையும் கொள்கை சார்ந்த நடைமுறை படுத்தலையும் எங்ஙனம் ஒன்றாக கொள்ளமுடியும்?// இயற்கைத்தேவைகளை நிறைவேற்றுவதை நான் குறிப்பிடவில்லை அதிலிருக்கும் நடைமுறை ஒழுங்கைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். தூக்கமில்லாமல் ஒருவனால் வாழமுடியாது என்பது இயற்கை. ஆனால் வேறு வேறு நாடுகளில் வேறு வேறு நேரங்களை நடைமுறையாக கொண்டிருக்கலாம். அவ்வாறில்லாமல் பின்னிரவில் மட்டுமே தூங்கவேண்டும் எனும் நடைமுறை எப்படி ஏற்பட்டது? திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறவு கொள்ள முடியும், அது இயறகை சார்ந்தது. ஆனால் உலகம் முழுவதிலும் திருமணம் உடலுறவுக்கான அனுமதி எனும் நடைமுறை எப்படி ஏற்பட்டது? யாரும் சட்டம் போட்டு ஏற்பட்டதா இது? நாடுகள், மதங்கள், இனங்கள் எனும் பேதம் தாண்டி ஒரே மாதிரியான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்னமாதிரியான புரிதல் இந்த நடைமுறையை ஏற்படுத்தியதோ அதே போன்று சமூகத்திலிருக்கும் ஆணாதிக்கம் போன்ற‌ தீமைகளை களைவதற்கான புரிதல்களை ஒரு சோசலிச அரசு படிப்படியாக ஏற்படுத்தும். மட்டுமல்லாது அந்த சமூகத்தீமைகள் எங்கிருந்து தோன்றி எந்த அடிப்படையில் நீடிக்கிறதோ அவைகளைக் கண்டறிந்து மாற்றுவதை கொள்கையாக கொண்டிருக்கிறது. ஆனால் புரிதல்களோ, அறியும் தேடல்களோ இல்லாமல் மறுக்க வேண்டும் என்பதற்காக, மக்கள் மல்லாந்து படுக்கிறார்கள் குப்புறப்படுக்கிறார்கள் என்பது போன்ற பேதங்களை துப்பறிந்து கண்டுபிடிக்கும் உங்களைப் போன்றவர்களை காலம் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறது. பாவம் அது அவர்களுக்குத்தான் தெரிவதில்லை.

செங்கொடி
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

செங்கொடி ,
நீங்கள் கற்பனையில் அதிகமாகவே பயணிக்கிறீர்கள். நான் இஸ்லாம் வீட்டளவில் ,நாட்டளவில் நடப்பதை சொன்னால் நீங்கள் ஏட்டளவில் சொல்லி நிறுவிவிட்டேன் என்று குதுகாலிப்பதை என்னவென்று சொல்லுவது ?ஆணாதிக்கமும் ,தனியுடமையும் நீக்கிவிட்டால் பாலியல் குற்றங்கள் இருக்காது என்பதற்கு ஆதாரம் தாருங்கள் என்று கேட்டால் இதுவரை உங்களால் தரமுடியவில்லை.பண்டைய காலத்தில் பெண் தலைமையில் மக்கள் வாழ்ந்த காலத்தில் பாலியல் குற்றங்கள் நடக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டால் இது வரை பதில் இல்லை .உங்களது பொதுவுடைமை பாதை சோஷலிச ஆட்சி நடை பெற்ற காலங்களில்  பாலியல் குற்றங்கள் மற்ற முதலாளித்துவ நாட்டை விட குறைவாக இருந்ததா என்பதற்கான ஆதாரங்கேட்டால் அது திசை திருப்பும் வழி என்று கூற வருகிறீர்கள்..சீன ஏரிக்கரை மக்களை பெரிய நகரங்களில் ஓராண்டுகாலம் குடியமர்த்துங்கள் .பின்னர் அவர்கள் ஏரிக்கரையை தேடி செல்கிறார்களா என்று பார்ப்போம்.
இஸ்லாமிய ஒழுக்கங்களையும் ,பாலியல் குற்றங்களுக்கு கடும் சட்டங்களையும் பொது உடைமைவாதிகள் எல்லாம் ஆடிப்போகும் அளவுக்கு ஆட்சி செய்த உமர்[ரலி] போன்று ஆட்சி செய்தால் நிச்சயம் பாலியல் குற்றங்கள் என்ன அனைத்தும் குற்றங்களும் மிகக் குறைந்துவிடும் ,இருக்கவே இருக்காது என்று உங்களைப்போல் நான் கதைஅளக்க தயாராக இல்லை.உங்களது கற்பனை தீர்வுகளை தவிர்த்து பார்த்தால் இப்போதைக்கு இஸ்லாமிய தீர்வைவிட ஒன்றுமில்லை .நிஜ தீர்வு கைவசம் இல்லாத உங்களது நிலையில் உங்களது கற்பனை தீர்வையும் இல்லாமற் செய்துவிட வேண்டும் என்று தான் இப்போது விவாதித்து வருகிறோம்.என்பதை முதலில் தாங்கள் உணரவேண்டும். 
நீங்கள் கூறும் ஆணாதிக்கம் இல்லாமற் இருந்த காலம் எது?அப்போது பாலியல் வன்முறைகளே இல்லாமலிருந்ததா ?நீங்கள் கூறும் ஆணாதிக்கத்தை இல்லாமல்  எப்படி செய்வீர்கள்? அப்படி இல்லாமற் போகும் காலத்தில் பாலியல் வன்முறைகளே நடக்காது என்பது எதன் அடிப்படையில்? சோஷலிச ஆட்சி இப்போது இந்தியாவில் ஏற்படுமானால் சமூக சூழ் நிலைக்கு ஏற்ப உங்களது சட்டங்கள் எப்படி இருக்கும் ?{உங்களது கற்பனைகளை விட என் கற்பனை நியாயமானதுதான்}
உங்களது ஆணாதிக்க ஒழிப்பிற்கு எனது யோசனை என்னவென்றால் ஒரு  வருடம் நீங்கள் வெளிநாட்டில் வேலைக்கு சென்றால் உங்களது மனைவி சமைத்துப் போட்டு குழந்தைகளை கவனிப்பார்கள் .மறு வருடம் உங்கள் மனைவியை வெளிநாட்டிர்க்கோ உள்நாட்டிலோ வேலைக்கு அனுப்புங்கள் நீங்கள் சமைத்துப் போட்டு குழந்தைகளை கவனியுங்கள் .இவ்வாறு நீங்களும் ஏனைய தோழர்களும் செய்தால் அதை பார்க்கும் மற்ற பெண்களும் தங்களது கணவர்களைப் பார்த்து ,"அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தீர்களா?"என்ற நிலை ஏற்படும். பெண்களால் தான் எல்லா மாற்றங்களும் ஏற்படும் .கருணாநிதியை அவரது மனைவி மஞ்சள் துண்டு அணிவிக்க செய்து பகுத்தறிவை குழிதோண்டி புதைக்க வைக்கவில்லையா? இதைப்போன்று ஒரு சமூக மாற்றத்தை ஏற்பாடு செய் முயற்சி செய்யுங்கள் .அப்புறம் உங்களது வாதத்தை கொண்டு வாருங்கள்.
அடுத்து உங்களது கேள்விகளைப் பார்ப்போம் , \\எந்தச் சமூகத்தில் எடுத்துக்கொண்டாலும், எந்தக் காலகட்டத்தில் எடுத்துக்கொண்டாலும் பெண்களின் விழுக்காட்டோடு ஒப்பிடும் போது பலமடங்கு ஆண்கள் ஒழுக்கத்தை மீற தயாராக இருக்கிறார்கள் என்பது ஏன்?// இனி பதிலைக் கூறுங்கள்////
பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல எல்லா குற்றங்களிலும் ஆண்கள் அதிகமாகவே இருக்கிறார்கள் .ஒழுக்க மீறலில் எந்த காலகட்டத்திலும் ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்   என்பது தவறு. பெண்கள் ஆண்களைப்போல் வேலைக்கு செல்ல ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை பார்த்தல் பெண்களின் பாலியல் குற்றங்கள் வளர்ச்சிவிகிதம் ஆண்களை  விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.இன்னும் சொல்லப்போனால் பொறியியல்  கல்லூரிகளில் பார்த்தால் பாலியல் வன்முறை அல்லாத குற்றங்களில் இருபாலரும் சமமமாக இருப்பார்கள்..இன்னும் சில ஆண்டுகளில் பெண்களிடம் புரட்சி ஏற்ப்பட்டு நீங்கள் எதிர்பார்க்கும் ஒப்பீடு விழுக்காடு கிடைக்கும். மேலும் எல்லா ஆண்களும் எல்லா பெண்களைவிட பலமானவர்கள் அல்ல என்பது உண்மைதான்.விதிவிலக்கை பொதுவாக்குவது சரியன்று.மேலும் இஸ்லாம் பாலியல் குற்றங்கள் செய்த ஆண்களையும் பெண்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறது.ஆனால் சமூகமோ ஆணுடைய குற்றங்களை லீலைகளாகவும் பெண்களை பாவிகளாகவும் பார்க்கிறது.  இதுவும் ஆண்கள் ஒழுக்க மீறல்கள் அதிகமாக இருக்க காரணங்களில் ஓன்று..இம்மாதிரியான  சமூக பார்வைகளை இஸ்லாத்தின் மூலம் ஒழிக்கமுடியும்.
 ///இதோடு தொடர்பாக இன்னொரு கேள்வியும் இருந்ததே அதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? மாட்டிக்கொள்ள நேரும் என்பதாலா? ஆண் பலமானவன், பெண் பலவீனமானவள் என்கிறீர்கள், ஆதிக்கம் செய்வது பொது நியதி என்கிறீர்கள். என்றால், பெண் மீது ஆண் செய்யும் ஆதிக்கம் ஆணாதிக்கம் இல்லாமல் வேறென்ன?////
அவ்வாறெனின்,பலமான ஆண் ,பலவீனமான ஆண் மீது செய்யும் ஆதிக்கத்திற்கு என்ன பெயர்?

////யதார்த்தத்தில் ஆணுக்கு ஒரு பெண் போதுமானவளாக இல்லை. தினந்தோறும் புதுப்புது பெண்களாக கிடைத்தாலும் கூட ஆணின் காமம் திருப்தியடைவதில்லை. ஆனால் பெண்ணுக்கு தேவை தீர்ந்ததும் அவளின் காமம் திருப்தியடைந்துவிடுகிறது////


இதைத்தான் நான் கூறுகிறேன்,ஆணுக்கும் பெண்ணுக்கும் காம நுகர்வில் பேதமிருக்கிறது.இந்த பேதத்திற்கு நீங்கக் மார்க்சியத்திற்கு சாதகமாக ஆணாதிக்கம் என்று சொன்னால் அதுவே  எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமா? .


////காமாதிக்கமே பாலியல் வன்முறைக்கு காரணமென்றால் உறவுப் பெண்ணிடமும் அன்னியப் பெண்ணிடமும் ஒரே மாதிரியான காம உணர்வு ஆணுக்கு ஏற்பட வேண்டும். ஆணாதிக்கமாக இருந்தால் மட்டுமே அவனுடைய காமத்தில் பேதம் வரும். ஆக கேள்வி ஒரே மாதிரியான காமம் வருமா? வித்தியாசப்படுமா?////


ஒரு ஆணுக்கு அந்நிய பெண்ணிடமும் உறவு பெண்ணிடமும் காம உணர்வை வேறுபடுத்தி காட்டுவது ஆணாதிக்கம் என்றால் ஒரு பெண்ணுக்கு உறவு ஆணிடமும் அந்நிய ஆணிடமும் காம உணர்வை வேறுபடுத்தி காட்டுவது எது?பகுத்தறிவா?இல்லையா? 





///உங்கள் பதிலில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் பெண்களைவிட ஆண்களுக்கு அதிக சமூக கட்டுப்பாடுகள் வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? //// 
ஆண்கள் ஒழுக்க மீறல்களுக்கு எது காரணமாக் இருக்கிறதோ ,அது விசயமாக கட்டுப்பாடுகள் ஆண்களுக்கு கொண்டு வந்தால் ,அந்த கட்டுபாடுகள் பெண்களின் கட்டுபாடுகளைவிட கூடுதலாக இருந்தாலும் ஏற்றுக்  கொள்ளக்கொடியதே .அந்த கட்டுபாடுகள் இப்போது சட்டவடிவில் தான் கொண்டு வர இயலும்.
. ///யதார்த்தத்தில் ஆணுக்கு ஒரு பெண் போதுமானவளாக இல்லை. தினந்தோறும் புதுப்புது பெண்களாக கிடைத்தாலும் கூட ஆணின் காமம் திருப்தியடைவதில்லை. ஆனால் பெண்ணுக்கு தேவை தீர்ந்ததும் அவளின் காமம் திருப்தியடைந்துவிடுகிறது.////
ஆணுக்கும் பெண்ணுக்கும் சம காம நுகர்வு இல்லை என்பதையே இது வெளிபடுத்துகிறது..அதைப்போல் உடைகளை அணிவதிலும் அதற்க்கான தேடுதல் களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நுகர்வு இல்லை.மேலும் மூட நம்பிக்கைகளில் ,மற்றும் மத ஐதீகம்களை பின்பற்றுவதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது.இதை ஒப்புகொள்கிறீர்களா?  .
 //அதற்கும் பதில் கூறினால், நீங்கள் அதைப் பிடித்துக்கொண்டு திசைமாற்றி செல்வீர்கள் என்பதால்/// 
இதே பதிலை ஹதித் விசயத்தில் ஆரம்பத்திலே சொல்லியிருக்கலாமே ,முயன்றவரை மறுத்துப் பார்ப்பது ,முடியாவிட்டால் இப்படி சமாளிப்பது .சரி போகட்டும் 
///போராட்டங்கள் எல்லாமே சுயந‌லமல்ல. போராட்டங்கள் என்பதில் முக்கியமான விசயமே மக்கள் ஒன்றிணைவது தான். தனியுடமை மக்களை தனித்தனியாக சிதறுண்டு போக வைத்துக்கொண்டிருக்கும்போது பொது நோக்கத்திற்காக அரசை எதிர்த்து போரடுகிறார்கள்./// 
போராட்டங்கள் எல்லாம் எப்படி சுயநலமும் அல்லவோ  அதுபோல் பொது நலமும் அல்ல ,அதைப்போல் உங்களது சோசலிசத்தை தேடியும் அல்ல.{இடையிடையே காமடி வேண்டாம்}ஜனநாயகத்தில் உள்ள அவர்களின் உரிமைகளை கோரியே போராடுகிறார்கள். .பொதுநலனில் கவனம் செலுத்துபவர்கள் எல்லாம் மார்க்சின் பொது உடமைவாதிகளா? என்ற எனது கேள்விக்கு எடுத்து காட்டுகளுடன் பதில் சொல்லி முனைவர் பட்டம் தர பரிந்துரைக்கவும்.
///மீனவர்களுக்காக ஐடி துறையினர் போராடினார்கள். இதில் என்ன சுயநலம் இருக்கிறது?/// 
இதெல்லாம் சும்மா கண்காட்சிகள்  
///திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறவு கொள்ள முடியும், அது இயறகை சார்ந்தது. ஆனால் உலகம் முழுவதிலும் திருமணம் உடலுறவுக்கான அனுமதி எனும் நடைமுறை எப்படி ஏற்பட்டது? யாரும் சட்டம் போட்டு ஏற்பட்டதா இது? ///
என்னத்தைஎல்லாமோ காரணம் காட்டி இதெலாம் சோஷலிச நடை முறை படுத்தும் வழிதான் என்று பம்மாத்து பண்ண வேண்டாம் விவாதம் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கவேண்டும் .ஏட்டளவில் கதைபேசுவதாக இருக்க கூடாது  என்று நிபந்தனை விதித்திருக்க வேண்டும் 
நிகழ உலகில் நிலவும் பாலியல் குற்றங்களுக்கு தீர்வை நிகழக் கூடியதாக சொல்லுங்கள்.ஒரு வேளை உணவுக்கு வழி காணத்   தெரியாத மார்க்சின் கற்பனைகளைக் கொண்டு நிகழ் உலகில் நிலவும்   பிரச்னைகளுக்கு கனவு தீர்வுகளை சொல்ல வேண்டாம் .உங்கள் கனவில் நான் குறுக்கிடவில்லை ஆனால் அதையே தீர்வு என்று ஆட்டம் போடுவது ரொம்பவும் ஓவராகத் தெரியவில்லையா? நிகழ் கால தீர்வு சொல்வீர்களானால் தொடர்வோம் கனவுலக தீர்வைத்தவிர வேறு ஒன்றும் இல்லைஎன்றால் முடித்துகொள்வதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.