வெள்ளி, 22 மார்ச், 2013

நல்ல,அல்ல ,நொல்ல ?அடியார்களின் பொய்கள்.2



  ///பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?

Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....?(ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  ///
திருடன் ஓடும்பொழுது தப்பிபதற்காக மற்றவர்களை திருடன் என்று சொல்லி ஓடுவானாம் .அதைப்போல் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பொய்யர்களும் நான் பொய் சொல்லுவதாக அவர்கள பச்சை பொய்யை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள் .
2008 நோன்பு பெருநாள் அன்று லுஹர்க்கு பிறகு கூடிய ஜமாஅத் கூட்டத்தில் இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றும் மவ்லூத் ஓதாத ஆலிமைத்தான் இமாமாக நியமிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது .அதன் படி காஜா நிஜாமுத்தீன் தாவூதி நீக்கப்பட்டு உபைப் என்ற தப்லிக் காரர் இமாமாக நியமிக்கப்பட்டார்.இது ஊரறிந்த உண்மை .மேலும் அதன் பிறகு பள்ளிவாசலில் மவ்லூது ஓதியவர்களை,அப்துல் ,காசிம் மற்றும் டிஎன்டிஜே சகோதரர்கள் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலில் மவ்லூது ஓதுவதற்கு முற்று புள்ளி வைத்தார்கள் .
அதோடு மட்டுமல்லாமல் ,இமாமை நாங்கள் கண்ணியப்படுத்துவோம் என்று வக்ப் தேர்தலில் அரசியல்வாதிகள் போல் வாக்குறுதி கொடுத்த இவர்கள் ,உபைப் மவ்லவியை ,குடிகாரனும் கூறாத வார்த்தையால் கேவலப் படுத்தியதும் ,இமாம் வேலையிலிருந்து விலகி சென்றுவிட்டார். அதன் பிறகு சைபுல்லா என்ற பெயரில் வந்த சைபுஸ்சைத்தான் என்பவர் இமாமகா வந்து போலிஸ் ஸ்டேசன் வரை விவகாரம் சென்றது .SPஆபிஸில் புகார் கொடுத்து முரப்பநாடு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் நடந்த இருதரப்பு கூட்டத்தில் ,இனிஎந்த காலத்திலும் மவ்லூது போன்ற ஷிர்க்கான காரியங்களில் ஈடுபடுபவர்களை இமாமாக நியமிக்கக் கூடாது என்று நிர்வாக தரப்பிலும் ,இனி 2 வது ஜமாத்தாக வக்தில் தொழுகை நடத்தக் கூடாது என்று டிஎன்டிஜே தரப்பிலும் வாக்குமூலம் பெறப்பட்டு ஒப்பந்தம் ஆனது இது அனைவரும் அறிந்த விஷயம் .அதற்க்கான நகலும் எங்களிடமும் அவர்களிடமும் உ;ள்ளது பிரித்து சென்றவர்கள் எழுதிய தளத்திலும் அதன் நகல் உள்ளது இப்படியான ஒரு வெட்ட வெளிச்சமான உண்மைக்கு மாறாக நாங்கள்தான் மவ்லூது ஓதாதவரை இமாமாக நியமித்ததாக பச்சை பசலேன பொய் சொல்லுகிறார்கள் .இவ்வளவு கேடுகெட்ட பொய்யை சொல்லிவிட்டு தங்களைத்தானே நல்லடியார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் .ஆக இவர்கள் நல்லடியார்கள என்ற வார்த்தையை வைத்து இஸ்லாத்தையே கேலி செய்கிறார்கள் .பிரிந்து சென்றவர்களே ,இந்த பிரித்து சென்ற பூசணிக்காய் பொய்யர்களை நம்பி ஏமாறாதீர்கள் .பகிரங்கமாக இப்படி பொய் சொல்லுபவர்கள் ,இன்னும் என்னைப்பற்றியும் ,தவ்ஹித் ஜமாஅத் பற்றியும் மறைமுகமாக் என்ன பொய்களெல்லாம் சொல்லியிருப்பார்களோ ,அல்லாஹ்வே அறிந்தவன்.
பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதை அவர்கள் கொண்டுவந்தார்களாம் .
தலித்கள் ,இஸ்லாத்திலும் கிறித்தவத்திலும் புத்தமதத்திலும் அதிகமாக சேருவதை அறிந்த அரசு அவர்களுக்கு சலுகைகள் அளித்தது போல ,நாம் திடல் தொழுகை வைக்காவிட்டால் பல இளைஞர்கள் டிஎன்டிஜே திடல் தொழுகையில் கலந்து கொள்வார்கள் ,இதனால் அங்கு கூட்டம் அதிகமாகி நமக்கு கூட்டம் குறைந்துவிடும் என்று பிரித்து சென்றவர்கள் நிர்வாகிகளை சரிகட்டி திடல் தொழுகை வைத்தார்கள்.இடத்தை மாற்றிக் கொண்டீர்கள் தவிர நபி வழியில் தொழுகை நடத்தினீர்களா? பெருநாள் தொழுகைக்கு நபி ஸல் அவர்கள் ஒரு குத்பாவை காட்டி தந்திருக்கையில் வழக்கம் போலவே மூன்று [3 ]குத்பாக்கள் உடன் நபி வழியில் இல்லாத தக்பீர் முழக்கத்துடன் தொழுகை நடத்திவிட்டு தவ்ஹித் கொள்கையில் நடைவண்டி
ஓட்டுகிறார்களாம் .
//// ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?////
டிஎண்டிஜெவினர் பிரியாத சமயத்தில் கடைசி பத்தில் பள்ளிவாசலில் வைத்தே ஜமாத்துடன் அதிகாலை 3 மணியளவில் இரவு தொழுகை நடத்தினார்கள் .பிரிந்த பிறகு தவ்ஹித் மர்கசில் அதைப்போல லவுட் ஸ்பீக்கரில் தொழுகை நடத்தியதும் போட்டியாக தொழுகை நடத்துகிறீர்களே தவிர இன்னும் அதை நபிவழியில் இல்லாத தஹஜ்ஜத் தொழுகை என்றும் தராவிஹ் ,வித்ரு என்று தொழுது முடித்துவிட்டு,வித்ருக்கு பிறகு வேறு தொழுகைஇல்லை என்ற ஹதிதுக்கு மாற்றமாக   மீண்டும் தஹஜ்ஜத் என்ற பெயரில் தொழுகை நடத்துவதை நபிவழி போல பெருமைவேறு அடிக்கிறீர்களா?
///மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  /////
கருப்பாக இருக்கிறவனை வெள்ளைசாமி என்று பெயர் வைத்தால் அவன் வெள்ளையாகிவிடுவானா ?
வருடத்திற்கு ஒருமுறை மீலாது விழா நடக்கும் அதேவேளையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துகிறேர்கள் என்றால் வருடத்திற்கு ஒருமுறை மார்க்க விழித்துவிட்டு,அப்புறம் தூங்கிவிடுகிறதா?
சரி அந்த விழாவில் ,பேசியவர்கள் யார்? அவர்கள் கொள்கை என்ன ? பேசியது என்ன?அவர்களின் பேச்சினால் விழிப்புணர்வு வந்ததா? இல்லை அங்கேயே பலர் தூங்கினார்களா? என்பதை கொஞ்சம் சொல்லுங்கள் ,உங்களது வண்டவாளம் வெளுத்துவிடும் . இது மீலாது விழாதான் என்றும் எந்த கொம்பனாலும் அதை நிறுத்தமுடியாது என்றும் குண்டூசி தரமாக இல்லை ,ஆணித்தரமகா பேசியதை  வாய்மூடி கேட்டீர்களா?அல்லது டீ விநியோகம் பண்ணினீர்களா? வெட்கமாக இல்லையா ?உங்களுக்கு அதை மீலாது விழா அல்ல என்று சொல்லுவதற்கு ? மவ்லூது பாகவதர் மற்றும் தரிக்கா சன்னிதானம் சர்க்காரின் அடிப்பொடி  ,இன்னொரு கப்சா கலக்கல் இவர்கள் மூன்றுபேரும் ஆற்றிய சொற்பொழிவுகளைத்தான் இவர்கள் தவ்ஹித் முழக்கம் என்றுசொல்லுகிறார்களா? திங்க கிழமை நோம்பு வைப்பதே நபி ஸல் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறத்தான் என்ற கதையை கேட்டு வாயை பிளந்து கொண்டிருந்தீர்களா? அல்லது நமதூரில் ரபியுல் அவ்வழ 12 எந்த கிழமை வந்தாலும் அதற்கு பிறகு வரும் திங்கள் கிழமை தான் கந்தூரி சாப்பாட்டு நடக்கிறது பிறகு நோம்பு வைப்பது எங்ஙனம் என்று அற்ப கேள்வியாவது கேட்டிருக்கக் கூடாதா?
//// பல மாற்றங்களை கொண்டு வந்தது தற்போது இருக்கிற ஜமாத்தான்.உண்மையிலேயே தௌகீதுவாதியாக இருப்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் சந்தோஷத்தை தான் அளிக்கும். ///
எந்த உண்மையான தவ்ஹித்வாதிகளுக்கு மவ்லூது பாகவதர் ,சர்க்கார்மற்றும் காசிமி  ஆகியோரின் சொற்பொழிவு சந்தோசத்தை கொடுத்தது ?சொல்லுங்கள் 
///ஆனால் பொறா மை   பிடித்த இவரை போன்ற டபுள் கேம் ஆடும் முனாஃபிக் தான் பொய் சொல்லி குறைகூறிக்கொண்டு அலைவார்கள்.இதை கொஞ்சம்   அறிவை பயன்படுத்தி சிந்தித்து பார்ப்பவர்களுக்கு இது புரியும்.////
இந்த மூவர்களின் சொற்பொழிவுகளை  தவ்ஹித் முழக்கம் என்று கூறும் மேற்கண்டதை எழுதிய முனாபிக்குகளுக்கே சந்தோசத்தை கொடுத்திருக்கிறது.
இந்த மூவர்களின் பேச்சை நீங்கள் கூறும் உண்மையான தவ்ஹித்வாதிகளிடம் கேட்டுத்தான் எழுதிஉள்ளேன்.
///அவரின் போலி தௌகீத் வேசமும் புரியும். இப்பொழுது அதுவும் கலைந்து விட்டது. வட்டி விவகாரத்தில் அந்த பதவியை விட்டு துரத்தி அடித்துவிட்டார்கள். இப்போது கூறுங்கள் பொய்க் கதையாசிரியர் ஏமாற்றுவது யாரை... அல்லாஹ்-வையா...? அவனது அடியார்களையா..? ///
இன்சாஅல்லாஹ் நாளை இதுபற்றி விளக்கம் அளிப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.