செவ்வாய், 11 ஜனவரி, 2011

இலவச மருத்துவ முகாம் .படங்கள்.




ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாத்தும் நெல்லை ஷிபா கிளினிக்கும் கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் நடந்த இலவச மருத்துவ முகாம் .படங்கள்.


திங்கள், 10 ஜனவரி, 2011

இப்பேரண்டம் பெருவெடிப்பிலிருந்து உருவானது என்பதே யூகம் தான்.

நண்பர் இப்ராஹிம்,

ஹதீஸ்கள் கதை என்றால் அது கதையல்ல என அந்த ஹதீஸிலிருந்தே ஆதாரம்(!) காட்டுகிறீர்கள். ஹதீஸ்கள் கதைகள் தாம் என நான் எந்த அடிப்படையில் கூறுகிறேன்? உங்களுக்கு எவைஎவைகளெலாம் நம்பிக்கைகளாக இருக்கிறதோ அவையவைகளை அதேவிதத்தில் நானும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என நீங்கள் எதிர்பார்ப்பது சரியா? ஒரு ஹதீஸ் என்றால் அதற்கு தோராயமாக ஏழுபேர் அறிவிப்பாளர்களாக இருக்கிறார்கள். அதில் கடைசியிலுள்ளவர் தொகுத்தவரிடம் நேரடியாக கூறியவர் என்றால் கடைசி மூவரின் நடத்தைகள் ஓரளவுக்கு தொகுக்கப்பட்டுளன என்று கொண்டாலும் முதல் மூவரின் நடத்தைகளுக்கு எந்த நம்பகத்தனமையும் இல்லை. இதைத்தான் அந்த ஹதீஸிலிருந்தே வார்த்தைகள் கூட மாறாமல் மனனம் செய்யப்பட்டது என்று கூறுகிறீர்கள். அதாவது ஹதீஸின் நம்பகத்தன்மைக்கு அந்த ஹதீஸே சான்று. இது ஒரு புறமிருக்கட்டும், புஹாரி தோராயமாக ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அதிலிருந்து 7500 ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார். தான் சேகரித்தவற்றிலிருந்து பெரும்பான்மையான ஹதீஸ்களை நீக்கியதற்கான அடிப்படை தனிமனித நடத்தைகள். அதிலும் எல்லா அறிவிப்பாளர்களின் நடத்தைகளயும் அவ்வாறு சோதித்தறியவில்லை, அது இயல்வதும் சத்தியமல்ல எனும் நிலையில். இதைத்தான் நீங்கள் அந்த ஹதீஸ்களிலிருந்தே எடுத்துக்காட்டி உங்கள் நம்பிக்கையைக் கூறுகிறீர்கள். ஹதீஸ்கள் வரலாறு என நம்பிவிட்டால் அங்கு பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால் ஐயம் வந்தால் எந்த வழியில் சோதிப்பது? ஆக சோதித்தறிய எந்த வழிமுறைகளும் இல்லாத, வேறு எதிலும் இடம்பெறாத‌ இவைகளை வரலாறு என்பதா? செவிவழிக் கதைகள் என்பதா? என்ன ஒரு வித்தியாசம் ஹதீஸ்கதைகளுக்கு சொன்னது யாரெல்லாம் என்ற அட்டவணை இருக்கிறது, நடப்பு கதைகளுக்கு அவ்வாறான அட்டவணை இல்லை. அடுத்து உங்கள் எடுத்துக்காட்டுக்கு வருவோம், ஜோதிபாசு போலி கம்யூனிசவாதி என்பது ஒருபுறமிருக்கட்டும். ஜோதிபாசு நல்லவர், வல்லவர் தொடர்ச்சியாக சொல்கிறார்கள் எனக் கொள்வோம், ஒரு இருநூறு ஆண்டுகள் கழித்து ஒருவர் இன்னின்னார்களெல்லாம் ஜோதிபாசு நல்லவர் எனக் கூறினார்கள் என்று தொகுத்து எழுதி இது தான் ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு என்று கூறினால் அதை அப்படி எடுத்துக்கொள்ளமுடியுமா? உலக அளவில் மன்னர்களின் வரலாறுகள் எப்படி எழுதப்பட்டுள்ளன. எழுதிய வரலாற்றுடன் கல்வெட்டுகள், கட்டிய கட்டிடங்கள் போன்றவைகளோடு சரிபார்த்து, பல்வேறு வரலாற்றசிரியர்கள் எழுதியதை ஒப்பீடு செய்து ஒரு தோராயமான உருவம் கொடுக்கப்பட்டுள்ளன. அதையும்கூட அறுதியானது என கூறிவிட முடியாது, இப்பொது இருப்பதற்கு எதிரான ஒரு சான்று கிடைத்தால், ஒரு கல்வெட்டோ, பட்டயமோ கண்டெடுக்கப்பட்டால் அதையொட்டி அந்த வரலாறு திருத்தப்படும். ஆனால் ஹதீஸ்களில் இப்படி எதுவும் இல்லை என்பதுடன், ஒற்றைக் கடவுளை, முகம்மதை நம்புபவர்களிடையே கூட எது உண்மையான ஹதீஸ் என்பதில் பேதமிருக்கிறது. இது தான் உண்மை என கூறுவதற்குக்கூட அந்த அறிவிப்பாளர் வரிசை தான் ஆதாரமாக இருக்கிறது. அடுத்து குரான் மாற்றப்பட்டிருக்கிறது எனும் பொருளில் கூட ஹதீஸ் இருக்கிறது, பால்குடி வசனம் குறித்து ஆய்ஷா அறிவித்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருக்கிறது. இதை அப்படியே வரலாறு எனக் கொண்டால் குரான் மாற்றப்பட்டுள்ளது என்பது உண்மையாகும். அப்படியில்லை என்றால் ஹதீஸின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும். அதனால் ஹதீஸ்களை அப்படியே வரலாறு என்பதைவிட ஹதீஸ்கதை என்பதே பொருத்தமானது.

ஆனால், தொடக்க கால மனிதகுல ஆய்வுகள் என்பவை இத்தன்மையவை அல்ல. இவைகளுக்கான ஆதாரம், இன்னார் சொன்னார், இப்படி பதிவு செய்யப்பட்டது என்று கூற முடியாது. ஏனென்றால் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தியவை அவை. தொல்லியல் ஆய்வுகள் மூலம் இதை உறுதி செய்கிறார்கள். ஒரு மட்பாண்டத்தின் துண்டொன்று கிடைத்தால் அதைக்கொண்டு பயன்படுத்திய மண், அந்த மண்ணில் விளைந்திருக்கக்கூடிய தாவரங்கள், அந்த தாவரங்களைச் சூழ்ந்திக்கும் விலங்கு வகைகள் என்று ஒன்றைத்தொட்டு ஒன்றாக அந்த ஆய்வுகள் விரிந்து கொண்டே செல்லும். உடைந்து ஒட்டிய ஒரு எலும்பைக் கொண்டு அவர்களின் சமூக வாழ்வையும் முடியாதவர்களை பேணியதையும் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்கள். ஈமச்சடங்குடன் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கொண்டு சமூகஉறவு முறைகள், ஆண் பெண் தொடர்புகளை முன்வைத்திருக்கிறார்கள். தொடக்கத்தில் மனிதவரலாறு பெண்வழிச் சமுதாயமாகவே இருந்தது என்பதற்கு எல்லா வரலாற்றாய்வாளர்களுமே சான்றுகளை வைத்திருக்கிறார்கள். தொன்மை மரபில் இறையியலின் தொடக்கமாக சூலடைந்த பெண்களை புனிதப்படுத்தும் சடங்குகள், உருவுகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள். இவைகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல்முறையில் செய்யப்பட்ட யூகம் தான் ஆண் பெண் உறவு முறைகள், பெண்ணின் தலைமைத்துவம், பாலியல் தேவைகள் எப்படி பகிரப்பட்டன என்பன குறித்த ஆய்வுகள். ஆம் இவைகள் யூகம் தான். ஆனால் உலக வரலாற்றைச் சொல்ல இதைவிட சிறந்த முறைகள் இன்னும் காணப்படவில்லை. நாளை புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அந்த புதிய முறைகள் மூலமும் ஆய்வுகள் செய்து உறுதிப்படுத்தப்படும். இதை யூகம் என நீங்கள் ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இப்பேரண்டம் பெருவெடிப்பிலிருந்து உருவானது என்பதே யூகம் தான். ஆனால் இந்த நிலைகளுடன் ஹதீஸின் நிலைகளை ஒப்பிட முடியுமா?

செவிவழிக்கதை கைவழிக்கதை என்பதெல்லாம் எதன் மூலம் பரவியது என்பதைக் கொண்டல்ல, அது அறிவியல் ரீதியாக இருக்கிறதா என்பதைக் கொண்டே முடிவு செய்ய முடியும். ‘ஏ’ யிடமிருந்து ‘பி’கேட்டார், ‘பி’ யிடமிருந்து ‘சி’ கேட்டார் என்பதைவிட ஏயிடமிருந்து கேட்டதைத்தான் பி சியிடம் சொன்னார் என்பதை சரிபார்க்க நம்பிக்கையைத்தவிர வேறொன்றுமில்லை. அதற்கு நம்பிக்கை போதுமானதல்ல என்பதற்கு புஹாரி எத்தனை ஹதீஸ்களை சேகரித்தார் எத்தனை ஹதீஸ்களை தள்ளினார் என்பதைப் பாருங்கள். ஹதீஸ்களின் நம்பகத்தன்மைக்கு அறிவிப்பாளர்களின் நடத்தைகள் மட்டும் போதுமானதல்ல. அறிவியல் ரீதியான உரைகல் வேண்டும் என்பதற்கு தான் சேகரித்தவற்றுள் அறிவியலலாத வழிமுறைகளிலேயே 98 விழுக்காடு ஹதீஸ்களை கற்பனை என்று ஒதுக்க வேண்டிய நிலையில் புஹாரி இருந்திருக்கிறார் என்பதே சான்று.

சரி ஒரு ஒப்பீட்டுக்காக இரண்டிலும் நம்பகத்தன்மை இல்லாமலிருக்கிறது என்று கொள்வோம். ஹதீஸின் வழிமுறையா? வரலாற்றாய்வு வழிமுறையா? எதை சரிகாண்பது எனும் நிலையில் நான் இரண்டையும் ஒரே விதத்தில் மதித்து அறிவியல் வழிமுறையை கொண்டு நிற்பதால் வரலாற்றாய்வு முறையை தேர்ந்தெடுக்கிறேன். ஆனால் நீங்களோ இரண்டையும் ஒரே நிலையில் வைக்காமல் ஐயத்தின் பலனை ஹதீஸில் சாதகமாகவும், வரலாற்றாய்வில் பாதகமாகவும் கொள்கிறீர்கள். ஹதீஸ் கதையில்லை என நீங்கள் கூறினால் அறிவியல் ரீதியான சான்றுகளை தாருங்கள் பரிசீலிக்கலாம். அல்லது வரலாற்றாய்வு முறைகளை அறிவியலுக்கு முரணானவை என நிருவுங்கள் பரிசீலிக்கலாம். பரிசீலித்து எது சரியோ அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆய்வுகள் உண்மைக்கு பக்கத்தில் வரலாம், உண்மையாக முடியாது எனக்கூறும் நீங்கள் ஹதீஸில் கூறப்பட்டிருப்பவைகளே ஹதீஸின் உண்மைத்தன்மைக்கு ஆதாரம் என்கிறீர்கள். சிந்தனை செய்யுங்கள். அதே நேரம் ஏங்கல்ஸின் நூலை படிக்க முன்வந்திருக்கிறீர்கள், வரவேற்கிறேன். நாடகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதல்ல அந்நூல். முழுவதும் படியுங்கள், பின்னர் பேசுவோம். இன்னும் நல்ல நூல்கள் நிறைய இருக்கின்றன.

\\நீங்கள் அப்படி என்ன பொல்லாத கேள்விகேட்டீர்கள்?//\\கம்யூனிசத்தின் தீர்வான இந்த அடிப்படைகள் தவறு என்றால், ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?// என்பது தான் நான் வைத்த கேள்வி. இதற்குத்துணையாகத்தான் முகம்மது என்ன முன்மாதிரியைக் காட்டினார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. துணைக்கேள்விக்கு விரிவாக பதில் கூற முன்வந்த‌ நீங்கள் முதன்மையான கேள்வியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது ஏன்? துணைக்கேள்வியிலும் முகம்மது என்ன முன்மாதிரியைக் காட்டினார் என்றுதான் கேட்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ முகம்மது ஒரு அழகிய முன்மாதிரி என நீங்கள் கற்ற பாலபாடத்தை திரும்ப ஒப்பித்தீர்கள். முஸ்லீம்களுக்கு முகம்மது முன்மாதிரி. ஆனால் முகம்மது என்ன முன்மாதிரியைக் காட்டினார். நீங்கள் கூறுகிறீர்களே கம்யூனிசத்தீர்வை செயல்படுத்திக்காட்டுங்கள் பின்னர் பார்க்கலாம் என்று. முகம்மதுவின் கோரிக்கைக்கு அன்றைய அரபிகள் செவிசாய்க்க மறுத்து, நீங்கள் இஸ்லாத்தை செயல்படுதிக்காட்டுங்கள் பின்னர் பார்க்கலாம் எனக் கூறியிருந்தால் முகம்மது முஸ்லீம்களுக்கு முன்மாதிரியாக ஆகியிருக்க முடியாது. அவர் கூறுவதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டதால்தான் முஸ்லீமாக முடிந்தது. இதைத்தான் உங்களிடமும் கூறுகிறோம் கம்யூனிச கொள்கைகளை பரிசீலித்துப்பாருங்கள். முகம்மது தன் சமகால அரபுகளை ஒரு ஒழுங்கிற்கு கொண்டுவர விரும்பினார். அதற்காக போராடினார், அதை செயல்படுத்திக்காட்டினார். அவரிடம் தீர்வு என்று ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர் எதைக்கூறினாரோ அதை செயல்படுத்திய பின்னரும் குற்றங்கள் தொடர்கின்றன. அவர் சட்டங்களை இயற்றி ஒழுங்குபடுத்தினார் அவ்வளவுதான். இதைத்தான் சோசலிசமும் செய்திருக்கிறது. அது தெளிவாகவே கூறுகிறது. சட்டம் போடுவது தீர்வல்ல என்று. அதுதான் அழுத்தம் திருத்தமாக இன்றும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. அதைத்தான் அந்தக் கேள்வி கேட்கிறது ஏன் இன்னும் பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியவில்லை? சட்டங்கள் போட்டு சற்று குறைத்து விடுவதால் அது தீர்வாகி விடுமா? கம்யூனிசத்தை தவிர யாரிடமும் எந்தத்தீர்வும் இல்லை. அது கூறும் அடிப்படைகளை, தீர்வுகளை பரிசீலித்துப்பார்க்கும் துணிவு இல்லை. அதனால் தான் இஸ்லாமே தீர்வு என வாதம் செய்ய வந்த நீங்கள் கடைசி வரை குற்றங்கள் இருக்கும் அதை தவிர்க்க முடியாது என்கிறீர்கள். அது தான் மெய், இஸ்லாத்திடம் ஒரு தீர்வும் இல்லை. அது செய்வதெல்லாம் சட்டங்கள் போட்டு நழுக்கிச் செல்வது தான். இதை பரிசீலனை செய்யும் துணிவு ஏன் இல்லை?

நான் திரித்து பதில் கூறியிருக்கிறேனா? \\மிருகங்களிலும் பெண் இனங்களை ஆணினம் துரத்திக் கொண்டு அலைகின்றன அப்படியெனின் அதவும் ஆணாதிக்கமா? என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்// இது உங்கள் கேள்வி. இதற்கு முன்னால் நான் பதிலளிக்கவில்லை என நீங்கள் குறிப்பிட்ட கேள்வி இதோ \\ஒரு பெண் நாயை பல ஆண் நாய்கள் துரத்துவதை சாதரணமாக காணலாம். இதை நீங்கள் ஆணாதிக்கம் என்பது சரியன்று.காமாதிக்கம் என்பதே சரி// நீங்கள் நாயைக் குறிப்பிட்டதால் தான் அதையே நானும் குறிப்பிட்டுப் பதில் சொல்லியிருக்கிறேன். ஆனால் இதை நான் நாயோடு முடித்துக்கொள்ளவில்லை. எல்லா விலங்குகளையும் பொதுமைப்படுத்தியே கூறியுள்ளேன். \\மனிதனின் உறவில் உடல்தேவையை விட மனத்தேவையே அதிக பங்கு வகிக்கிறது. ஆனால் மிருகங்களில் இந்த நிலை இல்லை, உறவுக்கான உடலியல் தேவை இல்லாத வரை எந்த ஆண்விலங்கும் பெண்விலங்கை அணுகாது// விலங்குக்கும் மனிதனுக்கும் கலவியில் உள்ள வேறுபாடு எது என்பதையும், ஆணாதிக்கம் எங்கு தொடங்குகிறது என்பதையும் தெளிவாக இது பிரித்துக்காட்டுகிறது. இதை ஏன் நீங்கள் பரிசீலனை செய்யவில்லை. உங்கள் கேள்விக்கே வருவோம். விலங்குகளில் ஏன் ஆண்கள் பெண்களை துரத்துகின்றன? பெண்கள் ஆண்களை துரத்துவதில்லை? பெண்களை கவர வேண்டிய தேவை விலங்களில் ஆண்களுக்கெ இயற்கையாக இருக்கிறது. ஆண் மான்களுக்கு கொம்பு, ஆண் யானைகளுக்கு கொம்பு, மதம், ஆண் மயிலுக்கு தோகை, ஆண்சிங்கத்திற்கு பிடறி, ஆண் குரங்குகள் பிற ஆண்களோடு சண்டையிட்டு வெல்ல வேண்டும் ஆனால் இவை விலங்குகளின் ஆணாதிக்காமாக ஆகாது. ஏனென்றால் அவைகள் மனத்தூண்டுதலாலல்ல, உடற்தூண்டுதலாலேயே செயல்படுகின்றன. மாறாக‌ மனிதனில் ஆணைக் கவருமாறு பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அலங்காரம் செய்துகொள்ள‌ம், கவர்ச்சியாக இருக்கவும் பெண் கட்டாயப்படுத்தப்படுகிறாள். ஆனால் தொடக்கத்தில் இந்த நிலை இல்லை. பெண்ணைக் கவர்வதற்காகவே ஆண் தன்னை பலசாலியாக்கிக் கொண்டான். அதனாலேயே பெண்ணை அடிமைப்படுத்திக் கொண்டான். ஆகவே விலங்குகளிடமல்ல மனிதர்களிடமே ஆணாதிக்கம் நிலவுகிறது என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, மனத்தேவைகளே அவனை வழிநடத்துகிறது, இரண்டு, இயல்பான பெண்ணை ஆண் கவர வேண்டும் என்பதை மாற்றி பெண்ணே ஆணைக் கவர வேண்டும் என்றாக்கியிருக்கிறான். இதற்கு பதில் கூறுகிறேன் என்று “எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ஆண்கள் நல்ல சட்டையணிந்து தலைவாரிக்கொண்டு சைட் அடிக்கச் செல்வதில்லையா?” என்று கூறாதீர்கள், நான் கேட்பதிலுள்ள அடிப்படையை உணருங்கள்.

இஸ்லாத்தால் பாலியல் குற்றங்கள் ஒழிக்க முடியாது என்று ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். இப்போது கம்யூனிசம் கூறும் தீர்வு குறித்து பேச வேண்டும் என்றால், அதன் அடிப்படையான ஆணாதிக்கம், தனியுடமை என்பது குறித்த தெளிவுகள் வேண்டும். தொடக்கத்திலிருந்தே ஆணாதிக்கம் உலகில் இல்லை என மேலோட்டமாக கூறிவருகிறீர்கள். நெருக்கிப்பிடித்தால் இஸ்லாத்தில் இல்லை என்கிறீர்கள். இதில் உங்கள் நிலைபாடு என்ன? தெளிவாக கூறிவிடுங்கள் என்று கேட்டிருந்தேன், பதில் கூறவில்லை. நம்முடைய விவாதத்திற்கு இந்தக் கேள்வி மிக அவசியமான ஒன்று.

\\கம்யுனிசம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.மக்களுக்கு ஒவ்வாதது.அனைவரும் சமம்.எல்லாமே மக்களுக்கு சொந்தம் தொழிலாளியே மன்னன் .என்று மக்களை ஏமாற்றும் செப்படி வித்தை மக்களிடம் எடுபடாதது. மக்களின் சுதந்திரத்தை பறிக்கக் கூடியது.கொல்லப்பட்டவர்களின் கணக்கும் சர்வாதிகார தொழிலாளிக்கு மட்டுமே தெரியக் கூடியது என்பதால் மக்களால் அடித்து விரட்டப் பட்டது// இது இந்த விவாதத்தோடு தொடர்பில்லாத ஒன்று. நான் ஒன்றை கூறுகிறேன் என்றால் உங்கள் கேள்வியை ஒட்டி தேவைப்படுவதை எடுத்துக்கூறுகிறேன். அப்படிக்க்கூறினால் அதே போன்று நீங்கள் கூற வேண்டும் என்பதற்காக கூறுவது இது. எனவே இது போன்றவைகளை நான் அலட்சியம் செய்கிறேன். ஏற்கனவே ஹதீஸ்களை நோக்கி மெல்ல திரும்பத்தொடங்கியிருக்கும் விவாதத்தை பாலியல் குற்றங்களை நோக்கி திருப்பவேண்டிய தேவையும் இருக்கிறது. அடுத்து, நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கிறேன், எப்போது போராடப் போகிறேன், இணையத் தீர்வு போன்ற உங்கள் சொல்லாடல்களெல்லாம் இந்த விவாதத்திற்கு அவசியமற்றவை.

உங்கள் பதிவை \\இன்னும் பெயரை சொல்லாமலே ,ஊரை சொல்லாமலே நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக கருத்தை சொல்லி கொண்டிருக்கீறீர்கள் என்பதை அறிந்துள்ளேன்// என்று தொடங்கியுள்ளீர்கள். தன்னளவில் தனக்கு சுதந்திரத்தை மறுக்கும் ஒருவன் சுதந்திரமானவனாக இருக்க முடியாது. அதாவது என்னுடைய பல கேள்விகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறீர்கள் என்பதால் உங்கள் மனதில் தோன்றுபவைகளைக் கூட உங்களால் வெளிப்படுத்த முடியவில்லை என நான் கூறியிருந்தேன். அதற்கு நீங்கள் கூறியிருக்கும் பதில் தான் மேற்கண்டது. நான் எந்தப் பெயரில் இருந்தாலும் என்னுடைய எண்ணங்கள் சுதந்திரமாக வெளிவரும். தவிரவும் இணையத்தைப் பொருத்தவரை சொந்தப் பெயரில் எழுதினாலும், புனைபெயரில் எழுதினாலும் அனாமதேயம் தான். முகவரி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நாடோடி தான். பதில் கொடுக்க வேண்டுமென்பதுதான் முக்கியமேயன்றி அதில் புரிதல் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பதை பொட்டிலறைந்தாற்போல் முதல் வரியிலேயே உணர்த்தி விட்டுத்தான் உங்கள் பதிவை ஆரம்பித்துள்ளீர்கள். இதுதான் தொடக்கத்திலிருந்து உங்களிடம் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பது கடைசியாக உங்கள் கவனத்திற்கு.

செங்கொடி

புதன், 5 ஜனவரி, 2011

மனனம் செய்தது செவிவழி கதை என்றால் எழுத பட்டது கை வழி கதையா?

செங்கொடி,இன்னும் பெயரை சொல்லாமலே ,ஊரை சொல்லாமலே நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக கருத்தை சொல்லி கொண்டிருக்கீறீர்கள் என்பதை அறிந்துள்ளேன்.
///நான் இங்கு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். அதற்குத்தான் பதில் வேண்டும். மனனம் செய்தார்கள் பாதுகாத்தார்கள் என்கிறீர்கள் அதைத்தான் நான் செவிவழிக்கதை என்கிறேன்.////
மனனம் செய்தது செவிவழி கதை என்றால் எழுத பட்டது கை வழி கதையா?எழுதியது எல்லாம் வரலாறு  ஆகிவிடுமா?செவி வழி கேட்டதெல்லாம் கதை யாகிவிடுமா? நீங்கள் கூறிய ஏங்கல்ஸ் உடைய புத்தகத்தை யும் ஹதீத் நூல்களையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தாலே ஆதாரப் பூர்வமான செய்திகள் எதில் வரைமுறைகளுடன் உறுதியாக்கப்  பட்டுள்ளது என்பது புரியும் .நான் ஏழு வயதில் மனனம் பண்ணிய பல   குர்ஆன் சூராக்கள இன்னும்[40 ஆண்டுகளுக்கு] பிசிறில்லாமல் மனதில் பதிவு இருக்கிறது , பள்ளியில் தினசரி காலையில் படித்த துதிப் பாடல்கள் இன்னும் மறக்காமல் உள்ளது , பல சுய பிரச்னைகளுக்கு பொது பிரச்னைகள் வியாபாரங்கள் ,மற்ற பணிகளுக்கிடையே என் ஞாபகத்தில் மறக்காமல் உள்ளது எனின்,நபி[ஸல்] காலத்து மக்கள் மிகுந்த நம்பிக்கையோடும் தூய உள்ளத்தோடும் எத்துனை ஆழமாக பதிவு செய்திருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நபி[ஸல்] அவர்கள் ஒரு தோழருக்கு ஒரு விசயத்தை கற்று கொடுக்கும்போது ," நபிய்யி கல்லதி அர்சல்த்த,,,,, "என்று சொல்லி கொடுத்த போது அந்த தோழரோ வ ரசூலி கல்லதி அர்சல்த்த ,,,,,என்று சொல்லுகிறார்.உடன் நபி[ஸல்] அவர்கள் ,நான் நபியி ,என்று சொன்னால் நீயும் நபியி என்றே சொல்லவேண்டும் என்று வலியுறுத்தி கூறுகிரார்.நபி என்றாலும் ரசூல் என்றாலும் ஒரே அர்த்தங்கள் உள்ள வார்த்தைகள் தான் இருப்பினும் மக்கள் வார்த்தை களில் கவனக் குறைவாக இருந்து ஒருவரிடமிருந்து மற்றவரிடம் சொல்லப்படும் போது வார்த்தைகளை மாற்றி கூறி விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்துள்ளார் என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.மேலும் நான் சொன்னதகா எதையாவது யாராவது  பொய் சொன்னால் ,அவர்கள் தங்கும் இடம் நரகமாக இருக்கும். என்று எச்சரித்துள்ளார்கள். ஞாபக குறைவானவர்கள் ஹதீத் பிறருக்கு அறிவிப்பதில் தவிர்ந்து கொண்டுள்ளனர்.நபி[ஸல்[ காலத்தில் யாரெல்லாம் முனாபிக்குகள் என்பதையும் அறிந்தே  வைர்த்திருந்தார்கள். அதைப்போல் அவர்களுக்கும் பின்னும் நபி[ஸல்] சொல்லையும் செயலையும் பற்றி செவ்வனே செயலாற்றுபவர்கள் மக்களால் அடையாளம் காணப் பட்டேவந்தது.D இடமிருந்து புகாரி செய்தி பெறுகிறார் என்றால் அந்த D.யின் மத,ஒழுக்க சம்பந்தமான செயல்பாடுகள் ,ஞாபக சக்தி போன்றவற்றை ஆய்வு  செய்து பின் D க்கு அந்த ஹதீதை சொன்ன C பற்றி இதேபோன்று தகவல்களை திரட்டி அறிந்த பின் C க்கு ஹதீதை சொன்ன B யை பற்றியும் அவ்வாறே A பற்றியும் A என்பவர் நபி[சல்] அவர்களின் காலத்தவரா என்பதையும் ,மேலும் A  B  C  D இவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன வகையில் இருந்தது,என்பது பற்றியும் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது,இவற்றில் குறைகள் இருந்தால் அந்த குறை எங்ஙனம் என்பதும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதற்க்கு பிறகும் இது செவி வழி கதை என்றால் உங்கள் மனம் புண்பட்டுள்ளது என்பதே தெளிவு. 
///சில யூதர்கள் குழப்பம் விளைவிப்பதற்காகவே முஸ்லீமாக மாறி ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள் என்கிறீர்கள், அதைத்தான் நான் பிரித்தறிய முடியாதபடி கலப்படமாகிவிட்டது என்கிறேன்.///
யூதர்கள் முஸ்லிமாக மாறி குழப்பம் செய்தவர்கள் யார் ,உண்மையாளர்கள் யார் என்பதெல்லாம் மிகத் தெளிவாகஅடையாளம் காணப்பட்டு  பதிவு செய்யப் பட்டுள்ளது .பலரை அடையாளம் காண போர்களும் ஒரு வாய்ப்பாக இருந்தன.ஆகவே எது  கலப்படம் ,இட்டுக்கட்டியது ,தொடர் அறுந்து போனது ,பலவீனமானது, பலமானது [ அதிலும் தரம் பிரிக்கப்பட்டது ]என்று பற்பல தர வாரியாக பிரிக்கப்பட்டு ஒரு நபரின் கருத்திற்கு  உட்படாமல் பலரின் ஆய்வுக்கு பின் பதிவுகள் செய்யாப் பட்டவை.
///முகம்மது இறந்த வெகுசில ஆண்டுகளிலே குரான் கற்பனை கலந்துவிட்டது எனும்போது நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்களில் என்ன உண்மைத்தன்மை இருக்கும்?/// கற்பனை கலந்தது என்று சொல்லப்பட்டதை மட்டும் நம்பும் நீவிர் கற்பனை நீக்கப் பட்டதை நம்ப மறுத்தால் கோளாறு உங்களிடம் உள்ளது. குர்ஆனில் ,ஹதீதில் அல்ல .
///முகம்மது இறந்த பிறகான முதல் நூறாண்டுகால அறிவிப்பாளர்களை அதற்கும் நூறாண்டு பிற்பட்ட புஹாரி என்ன விதத்தில் சோதித்திருக்க முடியும்?///
நூராண்டு காலம் என்றால் நூறு அறிவிப்பாளர்களா இருப்பார்கள்.?இரண்டு அறிவிப்பாளர்களே வருவார்கள். அதில் ஒருவர் நபித்தோழர் அவர்கள் அடையாளம் காணப் பட்டவர்.அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் இவர்கள் காலத்தில்  ஹதீத்கள் தொகுப்பாக இல்லாமல் அவர்கள் அறிந்த ஹதீத்களை தனித்தனியாக எழுதி வைக்கும் பழக்கம் ஆரம்பித்தது. இவ்வாறு எழுதி வைத்ததை பார்த்து மீண்டும் மீண்டும் மனனம் செய்து கொள்ள வசதியாக இருந்தது அதை அவர்கள் புத்தகமாக வெளியிடவில்லை ஏன் என்று கேட்க வருகிரீர்களா? அதை மனதில் பதிவு செய்யவே பலருக்கு வாய்ப்பு இருந்ததே தவிர எழுதும் உபகரணங்கள் ,மற்றும் எழுத தெரிதவர்கள் குறைவு..நம்மைவிட நபி[ஸல்] அவர்கள் மீது மிகுந்த அன்பும் பிரியமும் வைத்திருந்த கட்டுப்பாடு மிகுந்த மக்கள் கடும் எச்சரிக்கையோடு ஹதீத்களை தங்கள் மனதில் பதிவு செய்து வந்தனர். .பல ஊடங்கள் இருந்தாலும் கம்யுனிஸ்ட் காரர் ஜோதிபாசு நல்லவர் ,ஜனரஞ்சகமானவர் என்பதை நான் செவி வழியாகவே அறிந்துள்ளேன் .இதை அடுத்து வரக் கூடிய தலைமுறையான எனது பேரனுக்கு சொன்னால் ,அதை அவன் ,அவனது பேரனுக்கு சொன்னால் அது கதையாகுமா? .
///குரான் மாற்றப்பட்டிருக்கிறது என நேரடியாக பொருள் தரும் ஒரு ஹதீஸ் புஹாரியில் இடம்பெற்றதெப்படி?/// ஹதீதை சொன்னால்தானே அதன் தரம் தெரிந்து பதில் சொல்ல முடியும்?
///ஹதீஸ்களின் காலத்தைவிட தபரி போன்றவர்களின் சீராவிற்கு முகம்மதுவின் காலத்தோடு நெருங்கியிருக்கும் நிலையில் அவை புறக்கணிக்கப்பட்டதன் காரணம் காலத்தால் பின்னால் தொகுத்த ஹதீஸ்களோடு முரண்படுகிறது என்பதுதான் காரணமா? என்றால் மன்மோகன் சிங் காலத்தில் கம்ப்யூட்டர் இருக்கிறது என்பது தான் பதிலா?///
இமாம் புகாரியை விட இமாம் சாபி முந்தைய காலத்தவர்.பெண்களை தீண்டினால் தொழுகைக்கான ஒழு முறிந்து விடும் என்ற ஹதீதை வைத்துக் கொண்டு பெண்களை தொட்டாலே ஒழு முறிந்து விடும் என்கிறார் இமாம் சாபி.ஆனால் பின்னர் வந்த இமாம் புகாரிக்கு ,;நபி[ஸல்] அவர்கள் வீட்டில் இரவில் தொழுது கொண்டிருந்த சமயங்களில் குறுக்கே இருந்ததூங்கி கொடிருக்கும்  தனது மனைவியின் கால்களை தனது கையால் தள்ளிவிட்டு தொழுகிறார் ;என்ற ஹதீத் கிடைக்கிறது.இந்த ஹதீதைவைத்துக் கொண்டு இமாம் புகாரி தீண்டினால் என்ற வார்த்தை உடலுறவை தான் குறிக்கும் மற்றபடி தொடுவதனால் ஒழு முறியாது என்ற தனது முடிவை தெரிவித்துள்ளார். அதுதான் சரி என்று இன்றளவும் பின் பற்றப்பட்டு வருகிறது. முந்தியவர் சொன்னது தான் சரி ,பின்னால் வந்தவர் கருத்து தவறு என்பது இங்கு பொருந்துமா? இது போன்று தான் தபரி யும்.
 ///என் கேள்விகளுக்கான பதில் தேடி அதன் விளக்கங்களூடே பயணிக்கிறேன்//// 
உங்கள்    கேள்விகளே தவறு என்று நிருபிக்கப்பட்டுவரும்போது பதிலை தேடிஅலையும் உங்கள் பயணம் தேவை இல்லாமற் போகும்.
 குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் நூலை படித்துப் பார்த்து சொல்லுகிறேன்  
 ///உண்மைதானா என்பதை அறிய வழியில்லாத கதைகளை வரலாறு என அடம்பிடிக்கிறீர்கள். ஆனால் அறிவியல் ரீதியான ஆய்வுகளை அருகில் வரலாம், பக்கத்தில் உட்காரலாம் என பசப்புகிறீர்கள். ///
மேலே நீங்கள் எழுதியுள்ள வார்த்தை முழுக்க உங்களுக்கு மட்டுமே பொருந்தும் 
///ஹதீஸ் குறித்து நான் எழுப்பும் கேள்விகளைப்போல் அதில் எழுப்பமுடியுமா என முயன்று பாருங்க////
ஒரேஸ்தேயா என்ற நாடகத்தை வைத்து வரலாறு பேசும் உங்களது வாதத்திற்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?அந்த நாடகமும் கணவன் மனைவி உறவை விட தாய் மகன் உறவு உயரியது என்ற அடிப்படையை தான் பேசுகிறது.மேலும் உங்கள் ஆசான் மார்க்கனுடைய வாதம் தன்னுடைய பொருளாதார நோக்கத்திற்கு போதுமானதாக இல்லை ,என்பதால் தனது சொந்த கற்பனை  சரக்கு க்கு தானே பொறுப்பு என்கிறார்.அந்த நாடகத்தை எழுதியவரை கவித்துவ கற்பனை என்கிறார், .
 வளமான கவித்துவ கற்பனைக்கு பதிலாக இப்போது தன்னுடைய வழக்கை விளக்குகின்ற வழக்கறிஞரின் வளமான வாதங்கள் கிடைக்க்ன்றன என்று பக்கம் 21 இல் மாக் லென்னான் பற்றி கூறுகிறார். தன்னுடைய வழக்குகளை தயாரிப்பதில் எல்லாவிதமான சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் வாதியின் வழக்கறிஞர் ,பிரதிவாதியின் வழக்கறிஞர் மட்டும் தான் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் முறையான ,சட்ட ரீதியில் மிகவும் சரியான ஆதாரங்களை தர வேண்டும் என்று வற்புறுத்துவது போல் உள்ளது.என்று தங்களது ஆசான் பக்கம் 28 இல் கூறுகிரார். பக்கம் 21 க்குபக்கம் 28  இல் முரண்படுகிறார்.நான் படித்தவரையில் உங்களது ஆசான் அதுதான் உண்மை என்பதாகா கூறவில்லை,அவைகள் யூகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஆக நன்கு ஆதாரப்பூர்வமாக பதியப்பட்டு வேறு எந்த நூற்களில் உண்மையை கண்டறிய இது போன்று ஆய்வு செய்யப்  படாத அளவுக்கு ஆதாரப் பூர்வமாக எழுதப் பட்டஹதீதை கதை என்றும் நாடகத்தையும் யூகங்களையும் கற்பனை காவியத்தையும் ஆதாரம் கேட்டு ஜெர்மன் கோட்டில் வழக்கு தொடுப்பேன் என்று கூறப் பட்டவையும் 
///அறிவியல் பூர்வமான முறைகள் இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள் சோதித்துப் பார்த்துவிடுவோம்.///  உங்கள் அறிவியல் பூர்வத்தை இங்கே சோதித்து பாருங்கள்.  மேலும் அந்த பண்டைய வரலாற்றில் பாலியல் வன்முறை நடை பெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.
. ///புதிய சமூக ஒழுங்குக்கு எதை முன்மாதிரியாக காட்டினார் எனக் கேட்டேன்///
காலையில் எழுந்து சிறுநீர் கழிப்பது முதல்,இரவு படுக்கைஅறை வரை ,பிறந்தது முதல் சவக் குழிக்குள் வைக்கும் வரை தனது சொல்.செயல்.அங்கீகாரம்  மூலம் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியது சமூக ஒழுங்கு இல்லாமல் சம்பிராதைய சடங்கா?.கடவுள் குறித்த மூட நம்பிக்கைகளை போக்கி கடவுள் யார் அவன் பண்புகள் அவனுக்கு ஆற்றவேண்டிய கடமைகள்,என்பது பற்றி தெளிவாக்கி மக்கள் அறிவர்ந்தமாக செயல் பட வழி காட்டினார்.  
///கம்யூனிசம் கூறும் சமத்துவ சமூகம் என்பது மக்களிடம் இல்லாதது. அதனால் தான் உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் தேவை குறித்துப் பேசுகிறது கம்யூனிசம்///
மேலும் கம்யுனிசம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.மக்களுக்கு ஒவ்வாதது.அனைவரும் சமம்.எல்லாமே மக்களுக்கு சொந்தம் தொழிலாளியே மன்னன் .என்று மக்களை ஏமாற்றும் செப்படி வித்தை மக்களிடம் எடுபடாதது. மக்களின் சுதந்திரத்தை பறிக்கக் கூடியது.கொல்லப்பட்டவர்களின் கணக்கும் சர்வாதிகார தொழிலாளிக்கு மட்டுமே தெரியக் கூடியது என்பதால் மக்களால் அடித்து விரட்டப் பட்டது..  
//முகம்மது குறித்து நீளமாக பாசுரம் வாசித்த உங்களால் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்ததா?/// நீங்கள் அப்படி என்ன பொல்லாத கேள்விகேட்டீர்கள்?
அடுத்து நான் கேட்டதற்கு நீங்கள் பதில்சரியாக சொன்னீர்களா? மிருகங்களில் ஆணினம் தான் பெண்ணினத்தை துரத்துகிறது.இது ஆணாதிக்கமா என்று கேட்டதற்கு கார்த்திகை மாதத்தில் பத்து ஆன் நாய்கள் ஒரு பெண் நாயை துரத்தக் காரணம்  பெண் நாய் பற்றாகுறை என்று உங்கள் பாணியில் சொல்லுவதென்றால் கேள்வியை திரித்து பதில் அளிக்கிறீர்கள் .ஆண் நாய்தான் பெண் நாயை துரத்து கிறது ,பெண் நாய் ஆண் நாயை துரத்துவதில்லை ஏன்?ஆண் யானைக்குத்தானே பாலியல் தேவை காரணமாக மதம் பிடிக்கிறது. இது ஆணாதிக்கமா காமத்தின் தாக்கமா?என்பதே கேள்வி?
 சவூதி அரேபியாவில் நிம்மதியாக வேலை குளிரூட்டப் பட்ட அறையில் இருந்து கொண்டு மக்களின் துயர்களை எப்போது களைய போகிறீர்கள்? எப்போது போராட போகிறீர்கள்?
நிகழும் உலகில் நிலவும் பாலியல் வன்முறைக்கு தீர்வு என்பதற்கு இப்போதைய தீர்வைத்தான் சொல்ல வேண்டும் , கோட்பாட்டை வைத்து இணைய தளத்தில் பாலியல் வன்முறைக்கு தீர்வு காண்பீர்களா?நீங்கள் சொல்லும் கம்யுனிஸ்ட் தீர்வே இஸ்லாமிய சட்டப்படி பாலியல் குற்றமாகும் .சமூக சூழ்நிலைக்கேற்ப தீர்வு காண்போம் என்று கூறும் நீங்கள் இப்போதைய இந்தியாவில் நிலவும் சமூக சூழ்நிலைக்கேற்ப பாலியல் வன்முறை ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான சட்டம் கொண்டு வருவீர்கள்?அதை சொல்ல மாட்டீர்களா?
 உலகம் முழுவதும் புரட்சி ஏற்பட்டு ஏங்கல்ஸ் ,மார்க்ஸ் உடைய பண்டைக்கால கோட்பாட்டை கொண்டு வரலாம். அதுவரையில் இப்போதைய உலகில் நம் முன் உள்ளது சோஷலிச காலத்தில் ரஷ்யாவில் பாலியல் குற்றம் குறைவா?இஸ்லாமிய சட்டம் உள்ள சவுதியில் குற்றம் குறைவா? என்று அலசி பார்த்து,பதிவு செயப்பாடது என்பது இரு பக்கமும் இருக்கும் எங்கு குற்றம் குறைவோ உள்ளதோ அதுவே சரியானது என்று முடிவுக்கு வருவோம்.இறைவன் தங்களை மார்க்ஸ் சைத்தானிலிருந்து காப்பாற்றி மீண்டும் முஸ்லிம்மாகி விட அருள் புரிவானாக| 

செவ்வாய், 4 ஜனவரி, 2011

  1. நண்பர் இப்ராஹிம்,
    ஹதீஸ்கள் கதையா? முகம்மது முன்மதிரியாக இருந்தாரா? இந்த இரண்டு கேள்விகள் மட்டுமே தோராயமாக உங்கள் பதிவு மொத்தத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது. இதை மட்டுமே கொண்டு முடித்து விடக்கூடாது என்பதற்காக மேலதிகமாக ஒன்றிரண்டு வார்த்தைகள். கேட்க்கப்பட்ட கேள்விக்கு நேர்மையாக பதில் கூற முனையுங்கள் என கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது எனக்கு. நான் சுதந்திரமானவன் என கூப்பாடு போட்டுவிடுவதால் மட்டுமே ஒருவனுக்கு சுதந்திரத்தின் பொருள் புரிந்திருப்பதாய் கொள்ள முடியுமா? தன் எண்ணங்களை வெளிப்படையாக தைரியமாக கூறமுடியாதவனாக, தனக்குத்தானே சுதந்திரத்தை மறுப்பவனாக இருந்துவிட்டு நான் சுதந்திரமானவன் என கூப்பாடு போடுவதில் பலன் ஒன்றுமில்லை. உங்களால் பதில் கூற முடியவில்லை என்றால், வெளிப்படையாக அதைக் கூறிவிடுங்கள். நேரமாவது மிச்சமாகட்டும். அதை விடுத்து பதில் என்ற பெயரில் உளறி வைப்பது, என்னுடைய நேரத்தை மட்டுமல்ல உங்களுடைய நேரத்தையும் சேர்த்து வீணாக்குகிறது.
    ஹதீஸ்கள் கதையல்ல என்பதற்கு மடக்கி மடக்கி விளக்கமளித்துள்ளீர்கள். ஆனால் அந்த விளக்கங்கள் என் கேள்விகளுக்கு பதிலாக அமைந்திருக்கிறதா? இஸ்லாம் குறித்த தொடரில் ஹதீஸ்கள் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியுள்ளேன் அதை படித்துப்பாருங்கள். நீங்கள் உங்கள் நம்பிக்கையினூடாக கூறியவற்றை நான் ஏற்கனவே கூறிவிட்டேன். நான் இங்கு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். அதற்குத்தான் பதில் வேண்டும். மனனம் செய்தார்கள் பாதுகாத்தார்கள் என்கிறீர்கள் அதைத்தான் நான் செவிவழிக்கதை என்கிறேன். சில யூதர்கள் குழப்பம் விளைவிப்பதற்காகவே முஸ்லீமாக மாறி ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள் என்கிறீர்கள், அதைத்தான் நான் பிரித்தறிய முடியாதபடி கலப்படமாகிவிட்டது என்கிறேன். முகம்மது இறந்த வெகுசில ஆண்டுகளிலே குரான் கற்பனை கலந்துவிட்டது எனும்போது நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்களில் என்ன உண்மைத்தன்மை இருக்கும்? எனக் கேட்டிருக்கிறேன் அதற்கு உங்கள் பதிலென்ன? புஹாரி அப்படி சோதித்தார் இப்படி சோதித்தார் என்கிறீர்கள். முகம்மது இறந்த பிறகான முதல் நூறாண்டுகால அறிவிப்பாளர்களை அதற்கும் நூறாண்டு பிற்பட்ட புஹாரி என்ன விதத்தில் சோதித்திருக்க முடியும்? எனக் கேட்டிருக்கிறேன் அதற்கு உங்கள் பதிலென்ன? ஹதீஸ்களின் சோதனையில் குரானோடு முரண்படுகிறதா எனக் காண்பதும் ஒரு அலகு என்கிறீர்கள். அறிவிப்பாளர்களின் வரிசையும் தன்மையும் தான் அலகுகளாக இருக்கின்றன. அவ்வாறில்லை என்றால், குரான் மாற்றப்பட்டிருக்கிறது என நேரடியாக பொருள் தரும் ஒரு ஹதீஸ் புஹாரியில் இடம்பெற்றதெப்படி? இந்திரா காந்தி கம்ப்யூட்டர் என ஏதேதோ சொல்லியிருக்கிறீர்கள். ஹதீஸ்களின் காலத்தைவிட தபரி போன்றவர்களின் சீராவிற்கு முகம்மதுவின் காலத்தோடு நெருங்கியிருக்கும் நிலையில் அவை புறக்கணிக்கப்பட்டதன் காரணம் காலத்தால் பின்னால் தொகுத்த ஹதீஸ்களோடு முரண்படுகிறது என்பதுதான் காரணமா? என்றால் மன்மோகன் சிங் காலத்தில் கம்ப்யூட்டர் இருக்கிறது என்பது தான் பதிலா?
    இஸ்லாத்தை அறிதல் என்பதன் பொருள் முஸ்லீம்களின் நம்பிக்கைகளை அப்படியே உள்வாங்கிக் கொள்வது என்பதல்ல. நான் இஸ்லாத்தை அறிந்திருக்கிறேன், என் கேள்விகளுக்கான பதில் தேடி அதன் விளக்கங்களூடே பயணிக்கிறேன். அதனால் தான் அறிந்திருப்பதாக கூறுகிறேன். இதற்கு முஸ்லீம்களின் நம்பிகைகள் எனக்கு அவசியமில்லை.
    வரலாற்று ஆய்வுகள் உண்மைக்கு அருகில் வரலாமே தவிர அறுதியிட முடியாது என்கிறீர்கள். அறுதியிட்டுக்கூற உங்களிடம் ஏதும் அறிவியல் பூர்வமான முறைகள் இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள் சோதித்துப் பார்த்துவிடுவோம். உண்மைதானா என்பதை அறிய வழியில்லாத கதைகளை வரலாறு என அடம்பிடிக்கிறீர்கள். ஆனால் அறிவியல் ரீதியான ஆய்வுகளை அருகில் வரலாம், பக்கத்தில் உட்காரலாம் என பசப்புகிறீர்கள். புராதன பெண்வழிச் சமூகம் குறித்து அறிய பல நூல்கள் இருந்தாலும் ஒரு நூலை மட்டும் நான் இப்போது குறிப்பிடுகிறேன். ஆசான் ஏங்கல்ஸின் “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் நூலை படித்துப்பாருங்கள். படித்து, ஹதீஸ் குறித்து நான் எழுப்பும் கேள்விகளைப்போல் அதில் எழுப்பமுடியுமா என முயன்று பாருங்கள்.
    முகம்மது முன்மாதிரி என்பதற்கும் விளக்கங்கள் தந்திருக்கிறீர்கள். புதிய சமூக ஒழுங்குக்கு எதை முன்மாதிரியாக காட்டினார் எனக் கேட்டேன். நீங்கள் சட்டங்களை நிறைவேற்றினார் என்று மடைமாற்றுகிறீர்கள். இஸ்லாம் எனும் வடிவத்திற்கு அவர் காட்டிய முன்மாதிரி ஒன்றுமில்லை, கோட்பாட்டு ரீதியாக அவர் காட்டிய மறுமை, கடவுள் என்பதுதான் அந்த வடிவத்திற்கு அவர் காட்டிய முன்மாதிரி. மறுமை, கடவுள் குறித்த மூட நம்பிக்கைகள் முகம்மது வருவதற்கு முன்பே மக்களிடம் ஊறிப் போனவை. ஆனால் கம்யூனிசம் கூறும் சமத்துவ சமூகம் என்பது மக்களிடம் இல்லாதது. அதனால் தான் உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் தேவை குறித்துப் பேசுகிறது கம்யூனிசம். முகம்மது எப்படி சட்டமியற்றிக் காட்டினாரோ அதேபோல் சோசலிச அரசுகளும் சட்டமியற்றின. மக்களிடம் ஊறிப்போன மூடத்தனங்களை செப்பனிட்டுக் காட்டி கடவுள் மறுமை என செப்படி வித்தை காட்டியது போல் கம்யூனிசம் வித்தை காட்டவில்லை. மக்களின் துயரங்கள் அனைத்தும் எங்கிருந்து பிறக்கின்றன? எதனால் நிலைக்கின்றன? எப்படிப் போக்குவது? என ஆராய்கிறது, அதன் வழிமுறைகளை கோட்பாடாக முன்வைக்கிறது, அதை செயலூக்க, உலகை புரட்சிகரமாக மாற்ற போராடச் சொல்கிறது. பரிசீலித்துப்பார்த்தவர்கள் போராட முன்வருகிறார்கள். மூடத்தனங்களையும் சுரண்டல்தனங்களையும் மூட்டை கட்டி வைத்திருப்பவர்கள் முடங்கி நின்று எதிர்த்துப் பார்க்கிறார்கள். அவர்களை காலம் ஏளனம் செய்கிறது. நிற்க. முகம்மது குறித்து நீளமாக பாசுரம் வாசித்த உங்களால் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்ததா?
    உங்களின் அடுத்த திரிப்பு, நான் உங்களை பதில் கூறுமாறுதான் கேட்கிறேன். நான் விரும்பும் பதிலைக் கூறுங்கள் எனக் கேட்கவில்லை. நான் என்ன கேள்வி கேட்டிருக்கிறேனோ அதற்கான பதிலைக் கூறுங்கள், உங்கள் பதிலைக் கூறுங்கள். நான் என்ன கேட்கிறேன் என்பது உங்களுக்கு புரிந்துதான் இருக்கிறது, ஏனென்றால் மிகச்சரியாக நான் கேட்டிருப்பதைத் தவிர்க்கிறீர்களே. இப்படி நழுவி நழுவி கண்ணாமூச்சி விளையாடி நீங்கள் அடையப் போவது என்ன? உங்கள் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். ஏனென்றால் விவாதிக்க வந்தது எது சரி என்பதை முடிவு செய்வதற்கு காலம் கடத்துவதற்கல்ல. நான் என்ன கேட்டிருக்கிறேன் உணர்ந்து அதற்குப் பதில் தர வேண்டும். ஓரிரு வார்த்தைகளை வெட்டிப்பிடித்து பதில் என்ற பெயரில் எதையாவது கூறி வைப்பது விவாதமாகாது. கடைசி முறையாக உங்களிடம் விவாத நேர்மையை எதிர்பார்க்கிறேன்.
    செங்கொடி

வெள்ளி, 31 டிசம்பர், 2010

முஹம்மது நபி[ஸல்] அவர்களே அழகிய முன்மாதிரி

செங்கொடி 
///முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத் தான் ஹதீஸ்களின் தேவை எழுகிறது///
இஸ்லாத்தை படித்துவிட்டு நீங்கள் இஸ்லாத்தைப்பற்றி எழுதுவதாக துவக்கத்திக் கூறியுள்ளீர்கள்.ஆனால் ஹதீத்கள் பற்றி மேல் குறிப்பிட்ட கருத்துக்கள் முதல் பல கருத்துக்கள் உங்களை அறை வேக்காடு என்பதை படம் பிடித்து காட்டுன்கின்றன.முஹாம்மது நபி[ஸல்]அவர்கள் காலத்திலே எந்த ஒரு உலக விசயங்களும் நபி[ஸல்] அவர்களின் அறிவுரைகளை கேட்டே செய்துள்ளனர்.அவர்களை சந்திக்க முடியாத தூரத்தில் இருந்தவர்கள் கூட அவர்களை சந்தித்தும்,அல்லது உற்ற தோழர்களிடமும் நபி[ஸல்] கருத்துக் களின் அடிப் படையிலேயே செயல் பட்டனர்.நபி[ஸல்] காலத்திற்கு பின்னும் நபிதோழர்கள் தங்களின் வாழ்க்கை தேவைக்கான நபி[ஸல்] சொல்,செயல்,அங்கீகாரங்களை பற்றி நன்றாக மனனம் செய்த அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து அதன் அடிப்படையில்  செயல் பட்டனர்.அவர்கள் மனனம் செய்வதில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.இன்னும் எழுத தெரிந்தவர்கள் தாங்கள் அறிந்த ஹதீத்களை தொகுப்பாக  இல்லாமல் எழுதி வைத்தனர்.சிலர் எழுதுவதால் மனன சக்தி குறைந்துவிடும் என்பதால் எழுதிவைப்பதை தவிர்த்தனர்.எனக்கு கூட செல் போன் உபோயோகிக்காத காலத்தில் சுமார் இருநூறு நம்பர்கள் ஞாபஹத்தில் இருந்தன.செல்போன் மெமரி பயன்படுத்திய பிறகு எனது நம்பரே சில சமயங்களில் மறந்துவிடுகிறது.ஷுஹ்ரி  இமாம் போன்றோர் முறைப்படி தொகுக்காமல் அதிகமான ஹதித்களை எழுதி வைத்திருந்தார்.இஸ்லாத்தை ஒழித்துவிடலாம் என எதிர்த்து பின் இஸ்லாத்தில் இணைந்த யூதர்கள் உட்பட சிலர் மக்களிடம் நபி[ஸல்] சொல்களுக்கு இருந்த செல்வாக்கை அறிந்து நபி[ஸல்] பெயரிலே தங்களது சொந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் உலவ விட்டனர்.ஆனாலும் ஹாதீத்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் ,ஒரு ஹதீதை கேட்கும்போது நபி[ஸல்] அவர்களிடம் அதை முதலில் கேட்டது யார் ,முதல் தனது அறிவுக்கு எட்டும் வரை உள்ள நபர்களையும் மனனம் செய்தனர். அப்துல்லா இப்னு சபா போன்ற யூதர்   ஷீ ஆ க்களுக்கு ஆதரவாக பல பொய்யான ஹதீத்களை பரப்பியவன் ஆவான்.இமாம் மாலிக் ,இமாம் ஷாபி ,இமாம் ஹம்பல் ஆகியோர் ஹதிகளை முறைப்படி தொகுக்க ஆரம்பித்தனர். இவர்களில் மாலிக் இமாம் மட்டுமே பாடங்களை தலைப்பிட்டு எழுதியுள்ளார்.மற்ற இமாம்கள் அறிவிப்பாளர்களின் பெயரில் தலைப்பிட்டு எழுதியுள்ளனர். இவர்கள் ஹதீத்களை முறையான ஆய்வுகள் இல்லாமல் பதிவு செய்தனர்.ஹதீத் அறிவிப்பாளர்கள் வரிசையை ரெபரென்ஸ் க்காக கொடுக்கப்படவில்லை.ஒவ்வொரு ஹதீதும் மத்ன்' இஸ்னாது என்று இரு பகுதிகளாக உள்ளன.மத்ன்  என்றால் ஹதீதின் கருத்து பகுதியாகும்..இஸ்னாது என்பது அறிவிப்பாளர்களின் வரிசை பகுதியாகும்.அதன் பின்னரே ஹதீத்களில் நயவஞ்சகர்களின் ஊடுருவல் மக்களுக்கு புரிய வந்தது பின்னர் வந்த புகாரி,முஸ்லிம் ,திர்மிதி,நஸாயி,இப்னுமாஜா ,அஹ்மது போன்ற நூல்களில் ஹதீத்கள் அதன்தரத்துடன் பதிவு செய்தனர்.செவிவழி பதிவு ஆனாலும் அந்த ஹதீத் அவர்களுக்கு எப்படி கிடைத்தது,அவர்கள் கூறும் நபர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதா என்றெல்லாம் ஆய்ந்தறிந்து பதிவு செய்தனர்.இந்த ஆறு நூல்கள் குரானுக்கு அடுத்த இடத்தில் இருந்தன .இமாம் புகாரி அவர்கள் ஒரு நபி வழி செய்தியை ஒருவரிடம் அறிந்து கொள்வதாக இருந்தால் அவரது ஹதீத் அறிவை பரிட்சித்தே பதிவு செய்வது வழக்கம்.ஒருவரிடம் ஹதீதை பெறும்போது ,தன்னிடம் ஏற்கனவே உள்ள ஹதீதின் கருத்தை கூறி அதன் அறிவிப்பாளர் வரிசையை மாடி கூறி சரி காண்பார். சிலரிடம் ஏற்கனவே தெரிந்த ஹதீதின் ராவிகள் வரிசையை சரியாகா கூறி கருத்தை தவறாக கூறியும் சோதித்து பார்ப்பார்.இமாம் அபு ஹனிபா,இமாம் ஷாபி ,இமாம் மாலிக்,இமாம் ஹன்பலி போன்றோர் நபி தோழர்களுக்கு அடுத்த இடத்தில் மதித்து வந்தாலும் அவர்களது நூல்களை விட சிஹாஹ் சித்தா எனப்படும் புகாரி,முஸ்லிம் போன்ற ஆறு கிதப்களே முன்னிலை வகிக்கின்றன.இதை அப்பாசிய காலத்தில் எழுதியதையும் அவைகள் முதன்மையாக ஏற்கப் பட்டதற்கும் மர்மம் தேட ஒன்றும் இல்லை. இந்திரா காலத்தில் கணினிகளில்    அரசு தஸ்தாவேஜுகளை பதிவு செய்யாமல் மன்மோகன் சிங் காலத்தில் கணினிகளில் பதிவு செய்ததற்கு என்ன மர்மமோ அதே மர்மம்தான் அப்பாசிய காலத்தில் பதிவி செய்யப்பட்ட ஹதீத்கள் ஏற்கப் பட்டதற்கு காரணம்.
 ///நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்கள் அப்படியே உண்மையானவை என்பதை நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.////
ஹதீத்களை மனனம் செய்தவர்கள் ஒவ்வொருவராக மரணம் அடைந்து ,அவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததால் பதிவு செய்வதன் அவசியத்தை உணர்ந்த பின் பதிவு செய்ய ஆரம்பித்தனர். செங்கொடியின் ஒப்புதலுக்காக ஹதீத்கள் காத்து கொண்டிருக்கவில்லை.இப்போதும் குர்ஆனை உச்சரிப்பு,பல விதமான அளவுகளில் நீட்டல்,நிறுத்தல் களுடன் மனனம் செய்தவர்கள் முஸ்லிம்கள் வாழும் தெருக் களில் தலா பத்து பேர் இருப்பார்கள்.போன நூற்றாண்டு மனிதர் பற்றி குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கு போல் பல்டிகள்.அப்போது காசு வாங்கிஅப்படி  சொன்னோம் இப்போது காசு வாங்காமல் ? இப்படி சொல்லுகிறோம் ,இனி எப்படி சொல்லுவார்களோ?உங்களது தன மான இரும்பு கோட்டை  தலைவரை பற்றி சரியான வரலாறு இல்லாதவர்கள், மிக துல்லியமாக ,இன்னார் ஞாபக சக்தி குறைவு உள்ளவர்.இன்னாரின் தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு இல்லை,இந்த  ஆசிரியரின் காலம் இது அவரின் மாணவர் காலம் இது அதனால் தொடர்புக்கு வாய்ப்பு இருக்கிரது,இன்னார் இத்தனை காலம் வரை நன்றாக இருந்தார்,அதன்பின் மனம் குழம்பியவாராக காணப்பட்டார்,என்றெல்லாம் ஆய்வு செய்ய பட்டது. ஷீ ஆ க்களின் நூல்களில் இது போன்று ஆய்வுகள் இல்லாமல் வெறுமனே சொல்லப்பட்டிருக்கும். 
       /// குரானோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என நீங்கள் தர்க்கித்து வருகிறீர்கள்/// ஆம் ஹதீத்கள் வடிகட்டுவதர்க்காக எடுக்கப்பட்ட அளவுகளில் குர்ஆன் முரண்பாடு ஒன்று. மற்ற தலைவர்கள் பற்றி அவதூறோ ,குற்ற சாட்டோ மறைக்கப்பட்டிருக்கும்  ஆனால் முகம்மதுநபி[ஸல்] அவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு செய்யப் பட்டு அந்த செய்திகளின் தரம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருக்கும்.இங்கே செவிவழியில் பதிவு செய்யப் பட்டது போல் முன் காலத்தில் பதிவு செய்யப்பட்டதை ஒரு விசயத்தை உங்களால் கூற முடியுமா?
///காலந்தோறும் கிடைக்கும் புதுப்புது ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி எழுந்த முடிவுகளை கதைகளைப் போல் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் பழங்காலத்தைக் கண்டுணர இதைவிட சிறந்த ஆய்வுமுறை உலகில் இல்லை///
இந்த ஆய்வுகளெல்லாம் யூகங்கள் தான்.இப்படித்தான் என்று உறுதியிட்டு கூறமுடியாது.உண்மைகளை i நெருங்க முடியுமே தவிர அதுதான் உண்மை என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.
. ////நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க ,,,,,,,,,,,,,,,                            ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம்// உங்களுக்கு தமிழ் தெரியும் தானே. இதன் பொருள் என்ன என்பது உங்களுக்கு விளங்கவில்லையா///இல்லை கம்யுனிஸ்ட் நூல்களையே ஆதாரமாக   அதாவது பெண் ஆதிக்க மிக்க சமுதாயமாக பாலியல் குற்றங்கள் நடக்காத சமுதாயமாக வாழ்ந்ததுக்கு ஆதாரம் தாருங்கள் .நானும் அரபியில் கேட்கவில்லை.


முகம்மது ஒரு புதிய சமூக ஒழுங்கை படைக்க விரும்பி தன் மதத்தை பிரச்சாரம் செய்த போது எந்த முன்மாதிரியைக் காட்டினார்?////
முஹம்மது நபி[ஸல்] அவர்களே அழகிய முன்மாதிரியாக திகழ்ந்தார்.அவரை கொலை செய்யவந்தவர் பின்னர் அவர் இறந்தபோது கூட அதை நம்ப முடியாமல் தவித்தார்.உங்களைப் போன்று உலகில் ஒரு வெறுப்பான முகத்தை உலகில் பார்க்கவில்லை என்று சொன்னவர் மூன்றே நாட்களில் முகம்மது[ஸல்]அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தபின் உங்கள் முகத்தைப் போன்று ஒரு விருப்பமான முகத்தை இனி பார்க்கப் போவதுமில்லை என்றார்.தான் செயல்பட்டவாறு மக்களை செயல் படசொன்னார்.செய்ததையே சொன்னார்;சொன்னதையே செய்தார் என்று வெற்று அரசியல் கோசமில்லாமல் தனது வாழ்க்கையையே அதற்க்கு முன்மாதிரியாக்கினார்..அவையில் அமர்ந்திருக்கும்போது உணவை வலதுபுறமாக வழங்கப் படுவதுதான் வழக்கம்.ஒரு முறை முகம்மதுநபி[ஸல்] அவர்களின் வலப்புறம் ஒரு சிறுவன் இருக்கிறார்.இடப்புறத்தில் அபூபக்கர்,உமர் போன்றோர் இருக்கிறார்கள்.இந்நிலையில் உணவு பரிமாறும் வேளையில் நபி[ஸல்] அவர்கள் வலப்பறம் உள்ள சிறுவரிடம் இடதுபுறம் இருக்கும் பெரியவர்களுக்கு முதலில் உணவை வழங்கட்டுமா?என்று கேட்டார்கள்.அதற்க்கு அந்த சிறுவர் வழக்கப்படி வலதுபுறம் இருக்கும் எனக்குத்தான் முதலில் தர வேண்டும் என்றார்.அவ்வாறே முகம்மது நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள்.நோன்பு,தொழுகை ,சக்காத் போன்றவற்றை சொல்லாக்கும்போதே செயலாக்கினார்கள்.அவர்கள் சிறு குழுவாக இருக்கும்போதே குர்ஆன் மூலம் வந்த  செய்திகளை  அமல் படுத்தினார்கள். வேருமநேவ் பிரச்சாரம் செய்து குறைந்த பட்சம் மக்காவை கைப்பற்றிய பிறகு அப்போது இருக்கும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப சட்டம் வகுத்து கொள்ளலாம் என்று பிதற்றி  கொண்டிருக்கவில்லை.இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை செயல்படுத்த இந்திய அரசு அனுமதிக்காத பட்சத்தில் மற்றபடி நாங்கள் இதுவரை எதை இஸ்லாம் என்று சொல்லுகிரமோ அதன்படியே தவ்ஹித் ஜமாஅத் அமைப்பில் செயல்படுத்தி வருகிறோம்.எதையும் மறைக்கவில்லை.ஸ்டாலின் காலத்து ரஷ்யா முன்னேரியதை கண்டு மற்ற நாடுகளெல்லாம் பொதுவுடமையை விரும்பியதாக அறிந்தேன்.நமது தமிழக மக்கள் போல் சிறந்த மக்கள் உலகில் எவரும் இல்லை.எது வெற்றி தருகிறதோ ,எது மகிழ்ச்சி தருகிறதோ அதை மதம் இனம் சாதி,மொழி வேறுபாடு இன்றி உடன் ஏற்றுக் கொள்வார்கள் நீங்களும் மகஇக அளவில் "பெற்றோர் பண்ணை'" "குழந்தைகள் பண்ணை" ஆரம்பித்து உங்களது ஆணாதிக்க ,தனியுடமை ஒழிப்பது மூலம் நீங்கள் அடையும் வெற்றி தமிழகத்தை கவர்ந்து ஒருவேளை நீங்களே முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது.அதை பார்த்து கேரளா போலி கம்யுனிஸ்ட் ஒரிஜினலாக மாறிவிடும் இந்தியாவே மாறி ,பின்னர் உலகமே மாறிவிடும் .பெண் ஆதிக்க மிக்க பொதுவுடைமை சமுதாயத்தில் நீங்கள் உலக தொழிலாள சர்வதிகாரி.
            ////ஆணாதிக்கம். ஒரு பெண்ணால், தந்தையை, சகோதரனை, கணவனை மீறி எதையும் செய்துவிட முடியாது. இந்த விவாதத்தின் தொடக்கத்திலிருந்தே என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலை விடுத்து கேள்வியை திரித்து பதில் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள் ///
நீங்கள் கேட்கும் கேள்விகட்க்கு நீங்கள் எதிர் பார்த்தவாறே நான்  பதில் சொல்லவேண்டும்.இல்லையெனில் கேள்வியை திரித்து பதில் சொல்லுவதையே வழக்கமாக வைத்துள்ளதாக கூறுவதையே உங்கள் வழக்கமாக வைத்துள்ளீர்கள்.இப்ப சகோதரன் சொல்லை கேட்டு நடக்கும் சகோதரி  எங்கு இருக்கிறாள்?சம்பாதிக்கும் பெண் தனது தகப்பனை கேட்பதில்லையே ,நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?
///நிக்காஹாஹ கஃபில்து எனத்தொடங்குவதை ஏன் மந்திரம் என அழைக்கக்கூடாது?///
நாங்கள் இப்படி சொல்வது இல்லை.மனப்பெண்ணின் தகப்பனார் மணமகனிடம் இன்ன மகருக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டீர்களா?என்றுதான் கேட்பார்கள்.இதைத்தான் மத்ஹப் வாதிகள் கபில்த்து',,, என்று முதலில்அரபியிலும் பின் தமிழிலும்  மணமகளின் தந்தைக்கு பதிலாக ஆலிம் கேட்கிறார்.இப்போது எங்கே உள்ளது மந்திரம்? ஆண்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் வாட்ச் மேன் வேலை ஆணாதிக்கத்தின் காரணமாகவா கொடுக்கப் படுகிறது ?அதற்க்கு பதில் சொல்லுங்கள்.வாட்ச்வுமேன் பற்றி நீங்கள் செவியுற்ற இடத்தை சொல்லுங்கள்.
///, உறவுக்கான உடலியல் தேவை இல்லாத வரை எந்த ஆண்விலங்கும் பெண்விலங்கை அணுகாது, அருகருகே இருந்தாலும் கூட. மனிதனோ மனைவியுடன் கலந்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறொரு பெண்ணுடன் வாய்ப்புக்கிடைத்தால் அதை தவறவிடமாட்டார///
ஆணாதிக்கத்தின் செயல்பாட்டுக்கு உதாரணம் சொன்னால் ஒவ்வொரு செயலையும் மிருகத்தோடு ஒப்பிடுவது சரியா?பெண் வெளிப்படுத்தினால்  என்றால் கற்பு நெறி என்பார்கள்.ஆண் என்றால் வீரம் என்பார்கள்.இப்படி நீங்கள்தான் சொல்வீர்கள்.
///ஆணாதிக்கமே இந்த உலகில் இல்லை என வாதிடுகிறீர்கள். இதை மறுத்து உலகில் ஆணாதிக்கமே நிலவுகிறது என்பதை எடுத்துக்கூறினால்///
ஆண்களுக்கு ஏற்றவாறு சில பொறுப்புகள் பெண்களுக்கென்று சில பொறுப்புகள் ,இதை ஆணாதிக்கம் என்றால் கழிப்பறையை பொதுவாக்குவீர்களா?[இது என் மன விகாரம் அல்ல]
///இஸ்லாத்தால் முடியாது என்பது தெளிவாகிவிட்டது. கம்யூனிசத்தால் எப்படி முடியும் என்பது மட்டுமே மிச்சமிருக்கிறது///
நான் இப்புவியில் நிலவுவதை நிகழ் காலத்திலே  தலைப்புகேற்றவாறு சொல்லிவிட்டேன். நீங்களோ இப்போது நிலவும் பாலியல் குற்றங்களுக்கு உங்களது பில்லியன் ஆண்டுக்கான தீர்வை நிலவில் வைத்து காட்டியுள்ளீர்கள்.
///ஆணாதிக்கம், தனியுடமை குறித்த என்னுடைய கேள்விகளுக்கு நேர்மையாக நீங்கள் பதில் கூறும் போது தெளிவாகிவிடும்////
ஓகோ| நீங்களேதான் பேட்ஸ் மேன் ;நீங்கள்தான் அம்பயர் ;நீங்களேதான் ஆடியன்ஸ் ;நான் பவுலர் மட்டுமே .சரி நான் ஆணாதிக்கம் ,தனியுடமை குறித்து உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மையான பதில்களை நீங்களே கூறி  "அந்த தெளிவை " ஆக்கி காட்டுங்கள் 

புதன், 29 டிசம்பர், 2010


  .
ஆறாம்பண்ணை டி.ஏன்.டி.ஜே.கிளை சார்பாக நடந்த கால்நடை மருத்துவ முகாம் 
.
scan copy.jpgஇன்சா அல்லாஹ் வரும் 9.01.2o11 அன்று ஷீபா பாலி கிளினிக்கும் தவ்ஹித் ஜமாத்தும் இணைந்து நடத்தும் இலவச மருத்துமுகாம்.   

திங்கள், 27 டிசம்பர், 2010

, செங்கொடியின் பதில்கள்

  1. நண்பர் இப்ராஹிம்
    \\அவைகள் கதைகள் என்று அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் கதை என்பதற்கு ஆதாரம் தாருங்கள்// ஹதீஸ்கள் என்பவை கதைகள் தாம். முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத் தான் ஹதீஸ்களின் தேவை எழுகிறது. அதாவது மதக்கொள்கைகளே ஆக முதன்மையானவை எனும் நிலையிலிருந்து மாற்றம் பெற்று இஸ்லாமிய ஆட்சித்தலைமை சமூக, அறிவியல் ஆய்வுகளை முற்படுத்தத்தொடங்கிய வேளைகளின் போதாமையை நிறைவு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள் தான் ஹதீஸ்கள். ராஷிதீன் கலீபாக்களின் காலத்தில் தபரி போன்ற வரலாற்றாசிரியர்கள் எழுதிய முகம்மதின் வரலாறை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இஸ்லாமிய உலகம், அதைவிட காலத்தால் பிந்திய அப்பாஸிய கலீபக்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களை குரானுக்கு அடுத்த இடத்தில் ஏற்றுக்கொள்ளும் மர்மம் என்ன? இன்றைக்கு முதன்மையாக கருதப்படும் புஹாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஆறு நூல்களும் ஹதீஸ்களை தொகுக்கத் தொடங்கி நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு வந்தவை அதாவது முகம்மது இறந்து தோராயமாக இருநூற்றைம்பது ஆண்டுகள் கழிந்த பிறகு தொகுக்கப்பட்டவை. இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சம், முன்னர் தொகுக்கப்பட்டிருந்த ஹதீஸ்களில் எது சரியானது என அறிந்து கொள்ள முடியாத படிக்கு கலப்படமாகிவிட்டதால் அதை தெளித்தெடுக்க ஏற்பட்ட வழிமுறைகள் தான் அறிவிப்பாளர்களின் வரிசை மற்றும் குணநலன்கள். இதைத்தான் நீங்கள் லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் செயல்கள் ஆய்வு என விதந்தோதுகிறீர்கள். புஹாரி போன்றவர்களிலிருந்து முன்னோக்கி நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் அறிவித்தவர்கள் பற்றி மெய்யா பொய்யா என ஆராய்வதற்கு வாய்ப்பிருக்கிறது (அதுவும் குறைந்த விழுக்காடு) என்பதை ஓரளவு ஒப்புக்கொண்டாலும் அதற்கு முந்தைய நூறாண்டுகள் அதாவது முகம்மது இறந்த பிறகான முதல் நூறாண்டு அறிவிப்பாளர்களின் மெய்ப்பாடு குறித்து எந்த நம்பகத்தன்மையும் இல்லை. காரணம் ஹதீஸ்களை தொகுக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டதே முகம்மது இறந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத்தான். அதுவரை செவி வழிக் கதைகள் தான். முகம்மது இறந்து சில ஆண்டுகளிலேயே குரான் வசனங்களில் கலப்படம் ஆகிவிட்டது என்பதால் எழுதி தொகுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்ட நிலையில் நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்கள் அப்படியே உண்மையானவை என்பதை நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஷியா, சன்னி பிரிவுகளே தனித்தனியான ஹதீஸ் தொகுப்புகளை பயன்படுத்துகையில், அதுவே உண்மையானவை என்கையில் ஒரு பிரிவினரின் ஹதீஸ்களை உண்மை வரலாறு என்பதை எப்படி ஏற்க முடியும்? ஹதீஸ்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு அதை ஏற்பதா வேண்டாமா என ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையில், வெறும் அறிவிப்பாளர்களின் வாழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட ஹதீஸ்களை வரலாறு என்று எப்படி ஏற்பது? ஹதீஸ்களை அப்படியே வரலாறு என்று எடுத்துக்கொண்டால் குரானே ஐயத்திற்கிடமாகிவிடும். எடுத்துக்காட்டாக ஆய்ஷாவின் பால்குடி வசனம் பற்றிய ஹதீஸ். அதனால் தானே குரானோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என நீங்கள் தர்க்கித்து வருகிறீர்கள். பின்னர் எந்த அடிப்படையில் ஹதீஸ்கள் அப்படியே வரலாறு என எங்களை ஏற்கச்சொல்கிறீர்கள்? குரானின் சில வசனங்களை மக்காவில் சொன்னதா? மதீனாவில் சொன்னதா? என்பதைக்க்கூட ஹதீஸைக் கொண்டு பிரித்தறிய முடியாதிருக்கும் நிலையில் முகம்மதின் வாழ்வை திறந்த புத்தகமாக வைத்திருக்கிறது என்பதெல்லாம் உங்களது நம்பிக்கையாகத்தான் இருக்கமுடியுமேயல்லாது வரலாறாக இருக்கமுடியாது.
    இவ்வாறல்லாது, தொன்மைக்கால மனிதகுல ஆய்வுகள் அறிவியல் தன்மை வாய்ந்தவை, அவை செவி வழிக் கதைகளல்ல. தொன்மங்கள், தொல்லுயிர் எச்சங்கள், படிவுகள் போன்றவைகளை ஆராய்ந்து இன்றும் இருக்கும் பழங்குடியினரின் கலாச்சார மூலங்களை, அவைகளுக்கான வேர்களை தேடி ஒப்பிட்டு, காலந்தோறும் கிடைக்கும் புதுப்புது ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி எழுந்த முடிவுகளை கதைகளைப் போல் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் பழங்காலத்தைக் கண்டுணர இதைவிட சிறந்த ஆய்வுமுறை உலகில் இல்லை. அப்படியே உங்களால் இதை விட சிறந்த ஆய்வு முறையை உங்களால் கூற முடிந்தாலும் அதன் வழியிலும் பரிசீலனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்வதுதான் அறிவியல்.
    இவைகளை கற்கவோ பரிசீலனை செய்யவோ நீங்கள் முன்வராதிருக்கும் நிலையில் ஆதாரம் தா எனக் கேட்பது பதில் சொல்வதினின்றும் நழுவும் உத்தி என நான் குறிப்பிட்டால் அதையே நீங்களும் குறிப்பிட வேண்டும் என்பதற்காக \\ஆதாரம் கேட்டால் அதைத் தருவதுதான் சரி.ஆதாரம் தராமல் இருக்க இப்படி ஒரு உத்தியா?// என்றிருக்கிறீர்கள். ஆனால் ஒன்றை மறைத்துவிட்டீர்கள். அது \\நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க முடியும். ஆனால் அவற்றை நீங்கள் கம்யூனிச நூல்கள் என்று எளிதாக ஒதுக்கிவிடுவீர்கள் என்பதால்தான் பண்டைய சமூக வளர்ச்சி குறித்த எந்த ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம்// உங்களுக்கு தமிழ் தெரியும் தானே. இதன் பொருள் என்ன என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?
    சோசலிச ரஷ்யா குறித்தும் கம்யூனிச இயக்கங்கள் குறித்தும் நீங்கள் கேட்பது அறிந்து கொள்வதற்காகவோ, அதில் தவறிருக்கிறது என சுட்டிக்காட்டுவதோ உங்கள் நோக்கமல்ல என்பதை உங்கள் வார்த்தைகளை கொண்டே தொகுத்துக் காட்டியிருந்தேன். அதோடு மட்டுமல்லாது, \\சோவியத் ரஷ்யாவிலோ, மகஇக விலோ எத்தனை பெண் தலைவர்கள் ……. என்ன செய்யப் போகிறீர்கள்?// என்றும் கூடுதலாக கூறியிருந்தேன். ஆனால் நீங்களோ இவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. உங்கள் நோக்கம்; பதில் சொல்லியது போலும் இருக்க வேண்டும், கேட்ட கேள்வியிலிருந்து நழுவியும் இருக்க வேண்டும் என்பது தான். நேர்மையிருந்திருந்தால் உங்களால் \\ஆணாதிக்க ஒழிய அரும்பாடு படும் ….. தெரிந்து கொள்ள கேட்பது தவறா?// இப்படிக் கூறியிருக்க முடியாது.
    \\ஒரு குழந்தையும் உண்டு என்று நான் கேள்விபட்டது உண்மையா?// நீங்கள் கேள்விப்படுவதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது போன்று மார்க்சிய ஆசான்கள் குறித்த அவதூறுகள் கொஞ்சமல்ல, ஏராளம், ஏராளம் உலவிக்கொண்டிருக்கின்றன உலகில். அத்தனைக்கும் ஆதாரபூர்வமான மறுப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.
    குழந்தை வளர்ப்பு மையங்களில் எந்த பேதமுமின்றி நிர்வாகத்தில் பங்களித்த தோழரின் குழந்தைகளும், தொழிற்சாலையில் உற்பத்தியில் பங்களித்த தோழரின் குழந்தைகளும் ஒன்றாகவே வளர்ந்தனர். குழந்தைகளுக்கிடையில் எந்த பேதமும் காட்டப்படவுமில்லை, கற்பிக்கப்படவுமில்லை. மற்றப்படி பாலியல் தேவையை பொதுவுடமை அடிப்படையில் தீர்வு கண்டார்களா? தனியுடமை அடிப்படையில் தீர்வுகண்டார்களா? என்பதற்கு ஏற்கனவே நான் ஓரளவு பதிலளித்துள்ளேன், \\ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது// இது குறித்து மேலதிக விபரங்களுக்கு கேள்வி பதில் பகுதியில் லிவிங் டுகதர் குறித்து நான் அளித்திருக்கும் பதிலைப் பார்வையிடுங்கள். மற்றப்படி, பண்ணை, வாக்கிங் மேரேஜ் எனத்தொடங்கி நீங்கள் வெளியிட்டிருப்பதெல்லாம் உங்கள் மனவிகாரங்களே. ஏனென்றால், கம்யூனிசம் கூறும் சமூக மாற்றம் என்பது நொடியில் மாற்றப்படும் ஒன்ற‌ல்ல. ஒவ்வொரு படித்தரங்களாக உயரும் அனைத்திற்கும் முன்நிபந்தனைகள் இருக்கின்றன. ‘குன்’ என்றதும் ஆகிவிடும் எனும் உங்கள் வெற்று நம்பிக்கையைப்போல் இதை நீங்கள் கருதிவிட வேண்டாம். மாறாக நீங்கள் கொண்டிருக்கும் கடவுள் நம்பிக்கைதான், மனிதனை சிந்தனையற்று மிருகங்களைப் போல், பொம்மையைப் போல் உலவ விட்டிருக்கிறது.
    \\ஒரு தீர்வுக்கும் முன்மாதிரியையோ, சோதனையோ பரிட்சித்து பார்ப்பதுதான் பொது நியதி.அதே போன்று கம்யுனிச தீர்வுக்கு காட்டுங்கள்//\\இஸ்லாத்தின் தீர்வைவிட சிறந்த தீர்வை நிகழும் உலகில் ஆதாரத்துடன் காட்டுங்கள்// கம்யூனிச தீர்வான தனியுடமையையும், ஆணாதிக்கத்தையும் நீக்குவது தான் பாலியல் குற்றங்களை முற்றிலும் களைவதற்கு சரியானது என்பதை அதன் அடிப்படையை வைத்தே புரிந்து கொள்ளலாம். பாலியல் குற்றங்களின் அடிப்படையாக இருப்பது தனியுடமை, ஆணாதிக்கச் சிந்தனைகளே. அவைகளை நீக்காதவரை பாலியல் குற்றங்களை தடுக்க முடியாது என்பதற்கு, இந்த அடிப்படையை புரிந்துகொள்ளாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி சட்டங்களைத் தீட்டிய அனைத்து சித்தாந்தங்களும், கொள்கைகளும், மத மூட நம்பிக்கைகளும் இன்றுவரை பாலியல் குற்றங்களை தடுக்க முடியாமல் தோல்வியடைந்திருப்பது ஒன்றே போதுமான ஆதாரமாகும். இங்கு தேவை அதை நேர்மையாக பரிசீலித்துப் பார்க்கும் திற‌ம் மட்டுமே. ஒற்றைக் கேள்வி, கம்யூனிசத்தின் தீர்வான இந்த அடிப்படைகள் தவறு என்றால், ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை? முடிந்தால் பதில் கூறிப் பாருங்கள். இல்லை, நீங்கள் நடத்திக் காட்டிய பின்னர் தான் நாங்கள் வருவோம், என்றால் அதற்கும் உங்களிடம் ஒற்றைக் கேள்வி, முகம்மது ஒரு புதிய சமூக ஒழுங்கை படைக்க விரும்பி தன் மதத்தை பிரச்சாரம் செய்த போது எந்த முன்மாதிரியைக் காட்டினார்? எந்த ஒரு புதிய கொள்கையுமே சமூகப் பிரச்சனைகளுக்கு தம் தீர்வை முன்வைக்கும் போது அதை கோட்பாடாகத்தான் முன்வைக்க முடியும். அதைத்தான் கம்யூனிசமும் செய்திருக்கிறது. உங்களால் அதை பரிசீலிக்க முடியுமா என்பதுதான் பிரச்சனை. பரிசீலித்துப் பார்த்து அதில் தவறு கூற முடிந்தால் கூறுங்கள், முடியவில்லை என்றால் ஏற்றுக் கொள்ள முன்வாருங்கள். மாறாக உங்களுக்கு கன்னித்தீவு கதை சொல்ல விருப்பம் என்றால், அது இந்த விவாதக் களத்தில் உங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படப்போவதில்லை.
    \\நாம் நிகழும் உலகை பற்றி தான் இங்கே பேசுகிறோம்,முன்பு இருந்ததை சொல்லுவதை விட இப்போது என்ன இல்லை என்று சொல்லுங்கள்// இதைத்தான் நான் பல இடங்களில் வைத்து விட்டேன். ஆணுக்கு இருக்கும் உரிமைகளுக்குச் சமமாக பெண்ணுக்கு இல்லை, மட்டுமல்லாது பெண்ணுக்கு வழங்கப்படும் சிற்சில சலுகைகள் கூட ஆணாதிக்கத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். தங்களுடைய சம்பளப்பணத்தை ஆண்களாலும் சுதந்திரமாக செலவு செய்யமுடியவில்லை(அவ்வாறல்ல என்றாலும்) என்பது வேறு. நான் கேட்டது ஆண்கள் சுதந்திரமாக செலவு செய்வது போல் பெண்களால் செய்யமுடியுமா? என்பதுதான். ஒருவனுடைய சம்பளப்பணத்தை அவன் விருப்பப்படி செலவு செய்வதற்கு தனிப்பட்ட முறையில் சில நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். இது எல்லோருக்கும் பொருந்தக்கூடியதும் அல்ல. ஆனால் ஒரு பெண் தன் சம்பளப்பணத்தை தன்னுடைய விருப்பப்படி செலவு செய்ய முடியாததற்கு வேலை செய்யும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவில் இருக்கும் காரணம் ஆணாதிக்கம். ஒரு பெண்ணால், தந்தையை, சகோதரனை, கணவனை மீறி எதையும் செய்துவிட முடியாது. இந்த விவாதத்தின் தொடக்கத்திலிருந்தே என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலை விடுத்து கேள்வியை திரித்து பதில் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள் அதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி.
    \\மிருகங்களிலும் பெண் இனங்களை ஆணினம் துரத்திக் கொண்டு அலைகின்றன அப்படியெனின் அதவும் ஆணாதிக்கமா? என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்// இதில் நான் பதில் சொல்ல மறுப்பதாக கூறியுள்ளீர்கள். தவறு, அந்த பதிவில் நான் \\தனித்தனியே விளக்க வேண்டுமென்றாலும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்// என்று குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் என்றால் விரிவாக விளக்கியிருப்பேன். அதனாலென்ன இப்போது கூறுகிறேன். மிருங்களின் பாலியல் உறவை ஆணாதிக்கம் என்று தனித்து கூறமுடியாது. மனித உறவுகளை அப்படி அழைப்பதற்கான முதன்மையான காரணம் மனிதன் உடலுறவு என்பதை உடலியல் தேவையின் அடிப்படையில் என்பதலிருந்து மாற்றி மனவியல் அடிப்படையில் கொண்டுவந்து விட்டான். மனிதனின் உறவில் உடல்தேவையை விட மனத்தேவையே அதிக பங்கு வகிக்கிறது. ஆனால் மிருகங்களில் இந்த நிலை இல்லை, உறவுக்கான உடலியல் தேவை இல்லாத வரை எந்த ஆண்விலங்கும் பெண்விலங்கை அணுகாது, அருகருகே இருந்தாலும் கூட. மனிதனோ மனைவியுடன் கலந்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறொரு பெண்ணுடன் வாய்ப்புக்கிடைத்தால் அதை தவறவிடமாட்டான். ஏனென்றால் அவனுக்கு உடலியல் தேவையை விட மனவியல் தேவையே முதன்மையாக இருக்கிறது. அடுத்து மார்கழி மாத நாய்க்கூட்டத்தை பார்த்து விட்டு அது ஆணாதிக்கமா என்கிறீர்கள். இதை விலங்களின் பொதுக்குணமாக கூறவியலாது. காடுகளில் சுதந்திரமாக உலவும் எந்த மிருகமும் இப்படி ஒன்றின் பின்னே பத்து விரட்டுவதில்லை. இங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களில் பெரும்பாலும் ஆண் நாய்களே, பெண்நாய்களை அதிகம் வளர்ப்பதில்லை. இதனால் ஏற்படும் பற்றாக்குறையினாலேயே ஒன்றை பல விரட்டுகின்றன. இதை ஆணாதிக்கம் என்றும் கூற முடியாது, இதைக்கொண்டு ஒப்பீட்டு மனிதனின் பாலியலலைதலை ஆணாதிக்கமல்ல என தள்ளவும் முடியாது. \\பெண் களுக்கென்று இயற்கையான சில குணங்கள் உண்டு என்பது போல் ஆண்களுக்கும் இயற்கையான குணங்களில் காம வெறியுனர்வும் ஒன்று// இதில் நீங்கள் என்ன கூறவருகிறீர்கள்? காம உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது தான். ஆனால் ஆண் வெளிப்படுத்துவது போல் பெண்ணால் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்துவது ஒழுக்கமல்ல என்றுதான் கற்புநெறி கொண்டு பெண்களை அடக்கி வைத்திருக்கின்றனர். அதே நேரம் அதை ஆண் வெளிப்படுத்தினால் அது வீரமாக கருதப்படும். இது ஆணாதிக்கத்தின் விளைவேயன்றி ஆண்பெண் இயற்கையல்ல.
    நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் முறையாக நான் பதிலளித்து வருகிறேன். ஆனால் அவைகளைக் கவனிக்காமல், பொருட்படுத்தாமல், அவைகளிலிருக்கும் உள்ளீடை புரிந்துகொள்ள முயலாமல், தொடர்ந்து வெறொன்றுக்கு நழுவி வருகிறீர்கள். பல முறை இவைகளை சுட்டிக்காட்டியும் நீங்கள் உங்கள் வழமையை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். தவிரவும் நான் எழுப்பும் கேள்விகளையும் நீங்கள் நீங்கள் வேறொன்றாக திரித்து வருகிறீர்கள். அல்லது கூறப்பட்டிருக்கும் பதிலின் ஏதாவது ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொண்டு அதற்கு எதையாவது பதிலாகக் கூறிவிட்டு ஒட்டுமொத்தமாக நான் கூறவந்திருக்கும் கருத்தை புறக்கணித்து விடுகிறீர்கள். இவை விவாதத்தின் நோக்கத்தையே பாழடிக்கக் கூடியதாகும் என்பதை உணருங்கள்.
    இதுவரை, ஆணாதிக்கமும் தனியுடமையும் பாலியல் குற்றங்களுக்கான அடிப்படையாக இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளேன். இதை நீங்கள் வலிமையுடன் மாற்றுக்கருத்துகளைக்க்கூறி உங்களால் மறுக்க முடியவில்லை. அதேநேரம் மேலோட்டமாக நீங்கள் கூறும் நடப்பு வாதங்களை நான் தெளிவாக மறுத்திருக்கிறேன். ஆணாதிக்கமே இந்த உலகில் இல்லை என வாதிடுகிறீர்கள். இதை மறுத்து உலகில் ஆணாதிக்கமே நிலவுகிறது என்பதை எடுத்துக்கூறினால் அதை மறுக்க முடியாது இஸ்லாத்தில் இல்லை என நழுவுகிறீர்கள். இப்போதும் கூட \\பெண்கள் தகப்பன் இறந்தால் கொள்ளி வைக்க முடியுமா?கணவன் இறந்தால் மல்லி வைக்க முடியுமா?என்பதெல்லாம் என் முன் உள்ள கேள்விகள் அல்ல// என கூறியுள்ளீர்கள். பின் இது யார் முன் உள்ள கேள்வி? ஆணாதிக்கம் இந்த உலகில் இல்லை என கூறுவது நீங்கள் தானே, அப்படியென்றால் இது உங்கள் முன் உள்ள கேள்விதான். இல்லை என்றால் தெளிவாக கூறிவிடுங்கள். உலகில் ஆணாதிக்கம் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதுதான் என் நிலை என்று. இஸ்லாத்தில் இருக்கும் ஆணாதிக்கத்தை நான் உங்கள் கண் முன்னே காட்டுகிறேன். ஆனால் இதைச் சொன்னால் அது அதைச்சொன்னால் இது என்று நழுவாதீர்கள். கடந்த எனது பதிவில் இருந்த பலவற்றிற்கு பதில் கூறாது நகர்ந்து விட்டீர்கள். கேட்கப்படும் கேள்விகளும், அளிக்கப்படும் பதில்களும் உங்களின் பரிசீலனைக்காக அதை நீங்கள் சுலபமாக நீங்கள் நழுவ விட்டுவிட முடியாது. ஒன்று மறுக்க வேண்டும் அல்லது ஒப்புக்கொள்ள வேண்டும். இனியாகிலும் இதை நீங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
    தொடர்ந்து இஸ்லாத்தில் மந்திரம் இல்லை, வாட்ச்மேன் வாட்ச்உமன் என்றெல்லாம் கூறியுள்ளீர்கள். இஸ்லாமிய திருமணத்தில் கூறப்படும் நிக்காஹாஹ கஃபில்து எனத்தொடங்குவதை ஏன் மந்திரம் என அழைக்கக்கூடாது? வாட்ச்உமன்கள் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடாது. இஸ்லாத்தில் யாரிடத்தில் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று ஆண்களுக்கு கொடுக்கப்படுபவை எப்படி ஆணாதிக்கமாக இருக்கிறது என்பதை தேவைப்பட்டால் விளக்குகிறேன்.
    அடுத்து முக்கியமான விசயத்திற்கு நகர்வோம், \\கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் என்று இஸ்லாம் உண்மை நிலையை சொல்லுகிறது,அதற்க்கான தண்டனைகளை சொல்லுகிறது// ஆக கடைசி வரை இஸ்லாத்தால் பாலியல் குற்றங்களை ஒழிக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி. இங்கு பாலியல் குற்றங்களுக்கு எது சரியான தீர்வு எனும் இந்த தொடக்க விவாதத்தில்; இஸ்லாத்தால் கடைசி வரை தீர்வு காண முடியாது மாறாக தண்டனை பயம்காட்டி ஓரளவு குறைக்க மட்டுமே முடியும் என ஏற்றுக்கொண்டதன் மூலம் ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது. இஸ்லாமா? கம்யூனிசமா? என்பதில் இஸ்லாத்தால் முடியாது என்பது தெளிவாகிவிட்டது. கம்யூனிசத்தால் எப்படி முடியும் என்பது மட்டுமே மிச்சமிருக்கிறது. அதுவும் ஆணாதிக்கம், தனியுடமை குறித்த என்னுடைய கேள்விகளுக்கு நேர்மையாக நீங்கள் பதில் கூறும் போது தெளிவாகிவிடும்.
    செங்கொடி
    பின்குறிப்பு: உமர் குறித்து நான் குறிப்பிட்ட ஹதீஸுக்கு ஆதாரத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அது குறித்து விரிவாக பதிவு செய்கிறேன்.