செங்கொடி,இன்னும் பெயரை சொல்லாமலே ,ஊரை சொல்லாமலே நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக கருத்தை சொல்லி கொண்டிருக்கீறீர்கள் என்பதை அறிந்துள்ளேன்.
///நான் இங்கு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறேன். அதற்குத்தான் பதில் வேண்டும். மனனம் செய்தார்கள் பாதுகாத்தார்கள் என்கிறீர்கள் அதைத்தான் நான் செவிவழிக்கதை என்கிறேன்.////
மனனம் செய்தது செவிவழி கதை என்றால் எழுத பட்டது கை வழி கதையா?எழுதியது எல்லாம் வரலாறு ஆகிவிடுமா?செவி வழி கேட்டதெல்லாம் கதை யாகிவிடுமா? நீங்கள் கூறிய ஏங்கல்ஸ் உடைய புத்தகத்தை யும் ஹதீத் நூல்களையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தாலே ஆதாரப் பூர்வமான செய்திகள் எதில் வரைமுறைகளுடன் உறுதியாக்கப் பட்டுள்ளது என்பது புரியும் .நான் ஏழு வயதில் மனனம் பண்ணிய பல குர்ஆன் சூராக்கள இன்னும்[40 ஆண்டுகளுக்கு] பிசிறில்லாமல் மனதில் பதிவு இருக்கிறது , பள்ளியில் தினசரி காலையில் படித்த துதிப் பாடல்கள் இன்னும் மறக்காமல் உள்ளது , பல சுய பிரச்னைகளுக்கு பொது பிரச்னைகள் வியாபாரங்கள் ,மற்ற பணிகளுக்கிடையே என் ஞாபகத்தில் மறக்காமல் உள்ளது எனின்,நபி[ஸல்] காலத்து மக்கள் மிகுந்த நம்பிக்கையோடும் தூய உள்ளத்தோடும் எத்துனை ஆழமாக பதிவு செய்திருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நபி[ஸல்] அவர்கள் ஒரு தோழருக்கு ஒரு விசயத்தை கற்று கொடுக்கும்போது ," நபிய்யி கல்லதி அர்சல்த்த,,,,, "என்று சொல்லி கொடுத்த போது அந்த தோழரோ வ ரசூலி கல்லதி அர்சல்த்த ,,,,,என்று சொல்லுகிறார்.உடன் நபி[ஸல்] அவர்கள் ,நான் நபியி ,என்று சொன்னால் நீயும் நபியி என்றே சொல்லவேண்டும் என்று வலியுறுத்தி கூறுகிரார்.நபி என்றாலும் ரசூல் என்றாலும் ஒரே அர்த்தங்கள் உள்ள வார்த்தைகள் தான் இருப்பினும் மக்கள் வார்த்தை களில் கவனக் குறைவாக இருந்து ஒருவரிடமிருந்து மற்றவரிடம் சொல்லப்படும் போது வார்த்தைகளை மாற்றி கூறி விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்துள்ளார் என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.மேலும் நான் சொன்னதகா எதையாவது யாராவது பொய் சொன்னால் ,அவர்கள் தங்கும் இடம் நரகமாக இருக்கும். என்று எச்சரித்துள்ளார்கள். ஞாபக குறைவானவர்கள் ஹதீத் பிறருக்கு அறிவிப்பதில் தவிர்ந்து கொண்டுள்ளனர்.நபி[ஸல்[ காலத்தில் யாரெல்லாம் முனாபிக்குகள் என்பதையும் அறிந்தே வைர்த்திருந்தார்கள். அதைப்போல் அவர்களுக்கும் பின்னும் நபி[ஸல்] சொல்லையும் செயலையும் பற்றி செவ்வனே செயலாற்றுபவர்கள் மக்களால் அடையாளம் காணப் பட்டேவந்தது.D இடமிருந்து புகாரி செய்தி பெறுகிறார் என்றால் அந்த D.யின் மத,ஒழுக்க சம்பந்தமான செயல்பாடுகள் ,ஞாபக சக்தி போன்றவற்றை ஆய்வு செய்து பின் D க்கு அந்த ஹதீதை சொன்ன C பற்றி இதேபோன்று தகவல்களை திரட்டி அறிந்த பின் C க்கு ஹதீதை சொன்ன B யை பற்றியும் அவ்வாறே A பற்றியும் A என்பவர் நபி[சல்] அவர்களின் காலத்தவரா என்பதையும் ,மேலும் A B C D இவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன வகையில் இருந்தது,என்பது பற்றியும் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது,இவற்றில் குறைகள் இருந்தால் அந்த குறை எங்ஙனம் என்பதும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதற்க்கு பிறகும் இது செவி வழி கதை என்றால் உங்கள் மனம் புண்பட்டுள்ளது என்பதே தெளிவு.
///சில யூதர்கள் குழப்பம் விளைவிப்பதற்காகவே முஸ்லீமாக மாறி ஹதீஸ்களை இட்டுக்கட்டினார்கள் என்கிறீர்கள், அதைத்தான் நான் பிரித்தறிய முடியாதபடி கலப்படமாகிவிட்டது என்கிறேன்.///
யூதர்கள் முஸ்லிமாக மாறி குழப்பம் செய்தவர்கள் யார் ,உண்மையாளர்கள் யார் என்பதெல்லாம் மிகத் தெளிவாகஅடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப் பட்டுள்ளது .பலரை அடையாளம் காண போர்களும் ஒரு வாய்ப்பாக இருந்தன.ஆகவே எது கலப்படம் ,இட்டுக்கட்டியது ,தொடர் அறுந்து போனது ,பலவீனமானது, பலமானது [ அதிலும் தரம் பிரிக்கப்பட்டது ]என்று பற்பல தர வாரியாக பிரிக்கப்பட்டு ஒரு நபரின் கருத்திற்கு உட்படாமல் பலரின் ஆய்வுக்கு பின் பதிவுகள் செய்யாப் பட்டவை.
///முகம்மது இறந்த வெகுசில ஆண்டுகளிலே குரான் கற்பனை கலந்துவிட்டது எனும்போது நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்களில் என்ன உண்மைத்தன்மை இருக்கும்?/// கற்பனை கலந்தது என்று சொல்லப்பட்டதை மட்டும் நம்பும் நீவிர் கற்பனை நீக்கப் பட்டதை நம்ப மறுத்தால் கோளாறு உங்களிடம் உள்ளது. குர்ஆனில் ,ஹதீதில் அல்ல .
///முகம்மது இறந்த பிறகான முதல் நூறாண்டுகால அறிவிப்பாளர்களை அதற்கும் நூறாண்டு பிற்பட்ட புஹாரி என்ன விதத்தில் சோதித்திருக்க முடியும்?///
நூராண்டு காலம் என்றால் நூறு அறிவிப்பாளர்களா இருப்பார்கள்.?இரண்டு அறிவிப்பாளர்களே வருவார்கள். அதில் ஒருவர் நபித்தோழர் அவர்கள் அடையாளம் காணப் பட்டவர்.அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் இவர்கள் காலத்தில் ஹதீத்கள் தொகுப்பாக இல்லாமல் அவர்கள் அறிந்த ஹதீத்களை தனித்தனியாக எழுதி வைக்கும் பழக்கம் ஆரம்பித்தது. இவ்வாறு எழுதி வைத்ததை பார்த்து மீண்டும் மீண்டும் மனனம் செய்து கொள்ள வசதியாக இருந்தது அதை அவர்கள் புத்தகமாக வெளியிடவில்லை ஏன் என்று கேட்க வருகிரீர்களா? அதை மனதில் பதிவு செய்யவே பலருக்கு வாய்ப்பு இருந்ததே தவிர எழுதும் உபகரணங்கள் ,மற்றும் எழுத தெரிதவர்கள் குறைவு..நம்மைவிட நபி[ஸல்] அவர்கள் மீது மிகுந்த அன்பும் பிரியமும் வைத்திருந்த கட்டுப்பாடு மிகுந்த மக்கள் கடும் எச்சரிக்கையோடு ஹதீத்களை தங்கள் மனதில் பதிவு செய்து வந்தனர். .பல ஊடங்கள் இருந்தாலும் கம்யுனிஸ்ட் காரர் ஜோதிபாசு நல்லவர் ,ஜனரஞ்சகமானவர் என்பதை நான் செவி வழியாகவே அறிந்துள்ளேன் .இதை அடுத்து வரக் கூடிய தலைமுறையான எனது பேரனுக்கு சொன்னால் ,அதை அவன் ,அவனது பேரனுக்கு சொன்னால் அது கதையாகுமா? .
///குரான் மாற்றப்பட்டிருக்கிறது என நேரடியாக பொருள் தரும் ஒரு ஹதீஸ் புஹாரியில் இடம்பெற்றதெப்படி?/// ஹதீதை சொன்னால்தானே அதன் தரம் தெரிந்து பதில் சொல்ல முடியும்?
///ஹதீஸ்களின் காலத்தைவிட தபரி போன்றவர்களின் சீராவிற்கு முகம்மதுவின் காலத்தோடு நெருங்கியிருக்கும் நிலையில் அவை புறக்கணிக்கப்பட்டதன் காரணம் காலத்தால் பின்னால் தொகுத்த ஹதீஸ்களோடு முரண்படுகிறது என்பதுதான் காரணமா? என்றால் மன்மோகன் சிங் காலத்தில் கம்ப்யூட்டர் இருக்கிறது என்பது தான் பதிலா?///
இமாம் புகாரியை விட இமாம் சாபி முந்தைய காலத்தவர்.பெண்களை தீண்டினால் தொழுகைக்கான ஒழு முறிந்து விடும் என்ற ஹதீதை வைத்துக் கொண்டு பெண்களை தொட்டாலே ஒழு முறிந்து விடும் என்கிறார் இமாம் சாபி.ஆனால் பின்னர் வந்த இமாம் புகாரிக்கு ,;நபி[ஸல்] அவர்கள் வீட்டில் இரவில் தொழுது கொண்டிருந்த சமயங்களில் குறுக்கே இருந்ததூங்கி கொடிருக்கும் தனது மனைவியின் கால்களை தனது கையால் தள்ளிவிட்டு தொழுகிறார் ;என்ற ஹதீத் கிடைக்கிறது.இந்த ஹதீதைவைத்துக் கொண்டு இமாம் புகாரி தீண்டினால் என்ற வார்த்தை உடலுறவை தான் குறிக்கும் மற்றபடி தொடுவதனால் ஒழு முறியாது என்ற தனது முடிவை தெரிவித்துள்ளார். அதுதான் சரி என்று இன்றளவும் பின் பற்றப்பட்டு வருகிறது. முந்தியவர் சொன்னது தான் சரி ,பின்னால் வந்தவர் கருத்து தவறு என்பது இங்கு பொருந்துமா? இது போன்று தான் தபரி யும்.
///என் கேள்விகளுக்கான பதில் தேடி அதன் விளக்கங்களூடே பயணிக்கிறேன்////
உங்கள் கேள்விகளே தவறு என்று நிருபிக்கப்பட்டுவரும்போது பதிலை தேடிஅலையும் உங்கள் பயணம் தேவை இல்லாமற் போகும்.
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் நூலை படித்துப் பார்த்து சொல்லுகிறேன்
///உண்மைதானா என்பதை அறிய வழியில்லாத கதைகளை வரலாறு என அடம்பிடிக்கிறீர்கள். ஆனால் அறிவியல் ரீதியான ஆய்வுகளை அருகில் வரலாம், பக்கத்தில் உட்காரலாம் என பசப்புகிறீர்கள். ///
மேலே நீங்கள் எழுதியுள்ள வார்த்தை முழுக்க உங்களுக்கு மட்டுமே பொருந்தும்
///ஹதீஸ் குறித்து நான் எழுப்பும் கேள்விகளைப்போல் அதில் எழுப்பமுடியுமா என முயன்று பாருங்க////
ஒரேஸ்தேயா என்ற நாடகத்தை வைத்து வரலாறு பேசும் உங்களது வாதத்திற்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா?அந்த நாடகமும் கணவன் மனைவி உறவை விட தாய் மகன் உறவு உயரியது என்ற அடிப்படையை தான் பேசுகிறது.மேலும் உங்கள் ஆசான் மார்க்கனுடைய வாதம் தன்னுடைய பொருளாதார நோக்கத்திற்கு போதுமானதாக இல்லை ,என்பதால் தனது சொந்த கற்பனை சரக்கு க்கு தானே பொறுப்பு என்கிறார்.அந்த நாடகத்தை எழுதியவரை கவித்துவ கற்பனை என்கிறார், .
வளமான கவித்துவ கற்பனைக்கு பதிலாக இப்போது தன்னுடைய வழக்கை விளக்குகின்ற வழக்கறிஞரின் வளமான வாதங்கள் கிடைக்க்ன்றன என்று பக்கம் 21 இல் மாக் லென்னான் பற்றி கூறுகிறார். தன்னுடைய வழக்குகளை தயாரிப்பதில் எல்லாவிதமான சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் வாதியின் வழக்கறிஞர் ,பிரதிவாதியின் வழக்கறிஞர் மட்டும் தான் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் முறையான ,சட்ட ரீதியில் மிகவும் சரியான ஆதாரங்களை தர வேண்டும் என்று வற்புறுத்துவது போல் உள்ளது.என்று தங்களது ஆசான் பக்கம் 28 இல் கூறுகிரார். பக்கம் 21 க்குபக்கம் 28 இல் முரண்படுகிறார்.நான் படித்தவரையில் உங்களது ஆசான் அதுதான் உண்மை என்பதாகா கூறவில்லை,அவைகள் யூகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஆக நன்கு ஆதாரப்பூர்வமாக பதியப்பட்டு வேறு எந்த நூற்களில் உண்மையை கண்டறிய இது போன்று ஆய்வு செய்யப் படாத அளவுக்கு ஆதாரப் பூர்வமாக எழுதப் பட்டஹதீதை கதை என்றும் நாடகத்தையும் யூகங்களையும் கற்பனை காவியத்தையும் ஆதாரம் கேட்டு ஜெர்மன் கோட்டில் வழக்கு தொடுப்பேன் என்று கூறப் பட்டவையும்
///அறிவியல் பூர்வமான முறைகள் இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள் சோதித்துப் பார்த்துவிடுவோம்./// உங்கள் அறிவியல் பூர்வத்தை இங்கே சோதித்து பாருங்கள். மேலும் அந்த பண்டைய வரலாற்றில் பாலியல் வன்முறை நடை பெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.
. ///புதிய சமூக ஒழுங்குக்கு எதை முன்மாதிரியாக காட்டினார் எனக் கேட்டேன்///
காலையில் எழுந்து சிறுநீர் கழிப்பது முதல்,இரவு படுக்கைஅறை வரை ,பிறந்தது முதல் சவக் குழிக்குள் வைக்கும் வரை தனது சொல்.செயல்.அங்கீகாரம் மூலம் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியது சமூக ஒழுங்கு இல்லாமல் சம்பிராதைய சடங்கா?.கடவுள் குறித்த மூட நம்பிக்கைகளை போக்கி கடவுள் யார் அவன் பண்புகள் அவனுக்கு ஆற்றவேண்டிய கடமைகள்,என்பது பற்றி தெளிவாக்கி மக்கள் அறிவர்ந்தமாக செயல் பட வழி காட்டினார்.
///கம்யூனிசம் கூறும் சமத்துவ சமூகம் என்பது மக்களிடம் இல்லாதது. அதனால் தான் உலகை புரட்சிகரமாக மாற்றியமைக்கும் தேவை குறித்துப் பேசுகிறது கம்யூனிசம்///
மேலும் கம்யுனிசம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.மக்களுக்கு ஒவ்வாதது.அனைவரும் சமம்.எல்லாமே மக்களுக்கு சொந்தம் தொழிலாளியே மன்னன் .என்று மக்களை ஏமாற்றும் செப்படி வித்தை மக்களிடம் எடுபடாதது. மக்களின் சுதந்திரத்தை பறிக்கக் கூடியது.கொல்லப்பட்டவர்களின் கணக்கும் சர்வாதிகார தொழிலாளிக்கு மட்டுமே தெரியக் கூடியது என்பதால் மக்களால் அடித்து விரட்டப் பட்டது..
//முகம்மது குறித்து நீளமாக பாசுரம் வாசித்த உங்களால் நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிந்ததா?/// நீங்கள் அப்படி என்ன பொல்லாத கேள்விகேட்டீர்கள்?
அடுத்து நான் கேட்டதற்கு நீங்கள் பதில்சரியாக சொன்னீர்களா? மிருகங்களில் ஆணினம் தான் பெண்ணினத்தை துரத்துகிறது.இது ஆணாதிக்கமா என்று கேட்டதற்கு கார்த்திகை மாதத்தில் பத்து ஆன் நாய்கள் ஒரு பெண் நாயை துரத்தக் காரணம் பெண் நாய் பற்றாகுறை என்று உங்கள் பாணியில் சொல்லுவதென்றால் கேள்வியை திரித்து பதில் அளிக்கிறீர்கள் .ஆண் நாய்தான் பெண் நாயை துரத்து கிறது ,பெண் நாய் ஆண் நாயை துரத்துவதில்லை ஏன்?ஆண் யானைக்குத்தானே பாலியல் தேவை காரணமாக மதம் பிடிக்கிறது. இது ஆணாதிக்கமா காமத்தின் தாக்கமா?என்பதே கேள்வி?
சவூதி அரேபியாவில் நிம்மதியாக வேலை குளிரூட்டப் பட்ட அறையில் இருந்து கொண்டு மக்களின் துயர்களை எப்போது களைய போகிறீர்கள்? எப்போது போராட போகிறீர்கள்?
நிகழும் உலகில் நிலவும் பாலியல் வன்முறைக்கு தீர்வு என்பதற்கு இப்போதைய தீர்வைத்தான் சொல்ல வேண்டும் , கோட்பாட்டை வைத்து இணைய தளத்தில் பாலியல் வன்முறைக்கு தீர்வு காண்பீர்களா?நீங்கள் சொல்லும் கம்யுனிஸ்ட் தீர்வே இஸ்லாமிய சட்டப்படி பாலியல் குற்றமாகும் .சமூக சூழ்நிலைக்கேற்ப தீர்வு காண்போம் என்று கூறும் நீங்கள் இப்போதைய இந்தியாவில் நிலவும் சமூக சூழ்நிலைக்கேற்ப பாலியல் வன்முறை ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான சட்டம் கொண்டு வருவீர்கள்?அதை சொல்ல மாட்டீர்களா?
உலகம் முழுவதும் புரட்சி ஏற்பட்டு ஏங்கல்ஸ் ,மார்க்ஸ் உடைய பண்டைக்கால கோட்பாட்டை கொண்டு வரலாம். அதுவரையில் இப்போதைய உலகில் நம் முன் உள்ளது சோஷலிச காலத்தில் ரஷ்யாவில் பாலியல் குற்றம் குறைவா?இஸ்லாமிய சட்டம் உள்ள சவுதியில் குற்றம் குறைவா? என்று அலசி பார்த்து,பதிவு செயப்பாடது என்பது இரு பக்கமும் இருக்கும் எங்கு குற்றம் குறைவோ உள்ளதோ அதுவே சரியானது என்று முடிவுக்கு வருவோம்.இறைவன் தங்களை மார்க்ஸ் சைத்தானிலிருந்து காப்பாற்றி மீண்டும் முஸ்லிம்மாகி விட அருள் புரிவானாக|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.