ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வினவுவில் விடை கிடைக்காத வினாக்கள்


  • S.IbrahimAugust 30, 2011 at 7:01 pm 
    65
    //ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன,///
    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா?
    உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
    ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?
  • S.IbrahimAugust 30, 2011 at 7:25 pm 
    66
    கம்யுனிச நாடுகளில் நடை பெரும் அத்தனை குற்றங்களுக்கும் கம்யுநிசம்தான் காரணமா? ஏன் ஜனநாயாக நாடுகள் போல் உங்களது கம்யுனிச நாடுகளில் இன்னும் பெண்தலைவர்கள் உருவாக வில்லை?
    ஹீராவிலிருந்து ஒரு பெண் தனித்து ஹஜ் செய்வார் என்ற நபி[ஸல்] அவர்களின் கூற்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் செயல்படுவார்கள் ,அதை இஸ்லாம் மறுக்காது என்பதற்கு ஆதாரம் அல்லவா?
  • S.IbrahimAugust 30, 2011 at 7:36 pm 
    67
    இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது – அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன.
    ஆம் .மனிதனை நெறிப் படுத்த சமூகமாக வாழ்ந்திட ,இஸ்லாத்தை விட சிறந்த ஒரு வழிகாட்டலை இதுவரை எவராலும் காட்டிட முடியவில்லை..
  • S.IbrahimAugust 30, 2011 at 8:44 pm 
    68
    மார்க்ஸும் (1818-1883), காதலும், குடும்பமும்[4]: மார்க்ஸ் குடும்ப வாழ்க்கையில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார். யூதராகப் பிறந்த இவர் குடும்பம் புரொடஸ்டன்ட் கிருத்துவத்திற்கு மாறியது. ஒரு மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அதிலும் ஒரு அழகியை அவர் காதலித்தாராம். அவர் தனது காதலில் ஏற்பட்ட அனுபவங்கள் வாழ்க்கையில் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. தனது ஒன்பது வயது மகன் இறந்தபோது, அவனை அடக்கம் செய்ய ஒரு சவப்பெட்டியை வாங்கக்கூட அவரிடம் பணம் இல்லாமல் இருந்தததாம்! ஜென்னி வோன் வெஸ்ட்பேலன் (Jஎன்ன்ய் வொன் Wஎச்ட்ப்கலென்) என்ற அந்த மனைவியின் மூலம் பிறந்த ஏழு குழந்தைகளில் மூன்றுதான் பிழைத்து பெரியவர்களாக வளர்ந்தனராம். இதனிடையில் ஹெலன் டெமுத் என்ற தனது வேலைக்காரி மூலமும் பிறந்த ஒரு மகன் இருந்தானாம்[5]. ஆகவே அத்தகைய ஏழ்மையிலும் இவருக்கு காதல், கலவி, மனைவியைத் தவிர ஒரு துணைவி என்றெல்லாம் இருந்ததை கவனிக்கவேண்டும்.
    மார்க்சின் இந்த செயல்பாடுகள் நியாயப் படுத்தலுக்கு உரியனவா?
    • கலைSeptember 1, 2011 at 11:15 am 
      68.1
      //மூலமும் பிறந்த ஒரு மகன் இருந்தானாம்//
      இருந்தானாம் என்றுதானே சொல்கிறார்கள். இருந்தான் என்று சொல்லவில்லையே. இருந்தானாம் என்ற புரளிக்கெல்லாம் பதில் சொல்ல சொல்ல முடியுமா?
      //ஏழ்மையிலும் இவருக்கு காதல், கலவி, மனைவியைத் தவிர ஒரு துணைவி என்றெல்லாம் இருந்ததை கவனிக்கவேண்டும்
      இதல்லாம் நீங்கள் சொல்வது உங்களுக்கே ஓவராத் தெரியல!//
      • S.IbrahimSeptember 2, 2011 at 9:51 am 
        68.1.1
        வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,
        http://indiancommunism.wordpress.com/2010/02/28/communism-commune-sex-rape-intercourse-etc-2/
      • S.IbrahimSeptember 2, 2011 at 10:00 am 
        68.1.2
        இப்படி பட்ட மார்க்ஸை வைத்துக் கொண்டு பெண் உரிமைகள் பற்றி பேசுவது உங்களுக்கு ஓவராக தெரியவில்லையா?
        • அப்துல்September 2, 2011 at 11:31 am 
          68.1.2.1
          சிந்திக்கும் அறிவு இல்லாத முட்டாள்களிடம் பேசி என்ன செய்வது என்று தெரியவில்லை?.
          மார்க்ஸில் தொடங்கி ஸ்டாலின், மாவோ வரை அனைவரையும் அவதூறு பேசிச் செல்லும் இந்த முட்டாள்கள், அவர்களது சமகாலத்திய ஆதாரம் எதையும் எடுத்துத் தருவதில்லை.
          ஆர்.எஸ்.எஸ் அடிபொடிகள் கூட சொல்லித்திரிகின்றன ”முகம்மது நபி ஒரு ஆண்மையற்றவர் என்றும் அவரது குழந்தைகள் அவருக்கு பிறந்தன அல்ல என்றும் கருத்து நிலவுவதாக”.
          அதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பீர்களா ?..
          ஆதாரம் சரியாக கூறும் போது விளக்கம் சரியாக அளிக்கப்படும் ..

                  • S.IbrahimSeptember 3, 2011 at 8:49 am 
                    68.1.2.1.1
                    ancis Wheen (2000). Karl Marx. W. W. Norton and Company. p. 173.
                    ஆதாரம் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
                    உங்களது கம்யுனிஸ்ட் தலைவர்கள் யாரும் அவர்கள் சொன்ன கொள்கையின்படி வாழவில்லை.தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை பிறருக்கு சொல்லுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.?மார்கசால் குறைந்தது பத்து பேர்களையாவது தன்னுடன் அவரது கொள்கையை பின்பற்ற செய்ய முடியவில்லை.பத்து பேர்களுடன் சேர்ந்து பண்ணை வாழ்க்கையை அவர் வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.அவருக்கு வேலைக்காரியை வைத்துருந்தாரா ?இல்லையா? அவரது மனைவிக்கு வேலைக்காரர் ஏன் வைக்கவில்லை? அவர் ஏன் காதல் பண்ணினார்?அந்த காதல் மற்றவர்களுக்கு தேவை இல்லை என்று சொல்ல அவருக்கு என்ன தகுதி?மாவோவுக்கு எதற்கு இத்தனை மனைவிகள் ?
                    கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி, கற்பு, பாலியல், இத்யாதி – I
                    முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போல் உள்ளது .ஆதலால் அவர்களின் வாழ்க்கை பற்றி எந்த வீணர்களும் சொல்ல வேண்டாம் 
          • S.IbrahimSeptember 1, 2011 at 8:59 am 
            70
            //ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன,///
            நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா?
            உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
            ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?
            • அப்துல்September 2, 2011 at 11:22 am 
              70.1
              //// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா? ///
              ஒரு சிறிய ஆதாரம் அல்லது லின்க் ?.. பிளீஸ் ..
              ///உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
              ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?////
              ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
              மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..
              • S.IbrahimSeptember 2, 2011 at 9:57 pm 
                70.1.1
                ////ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
                மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..////
                ஆசிட் ஊத்துற நாயோடு நிற்க வேண்டும் .எங்கு இஸ்லாத்தினை குறை கூற வாய்ப்பு கிடைக்காதோ என்று நாக்கை தொங்க போட்டு அலைவது போல் உள்ளது உமது அபிமானியின் கட்டுரை.
                • S.IbrahimSeptember 3, 2011 at 11:27 am 
                  70.1.1.1
                  //உங்க ரஷ்யாவில் ஜிம்னாடிக்ஸ் போட்டிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடப்பது ஏன்? நீச்சல் போட்டிகள் ,டென்னிஸ் ,போட்டிகள் ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கும் என்றும் தனித்தனியாக நடப்பது ஏன்?
                  ஆண்களுக்கு மட்டும் மேலாடைகள் இல்லாமல் பல இடங்களில் காட்சி தருகிறார்கள் .பெண்களுக்கு உங்களது கம்யுனிசம் அந்த அனுமதி வழங்கி யுள்ளதா? watchman உள்ளனர்.watchwoman உள்ளனரா? பெண்கள் மட்டுமே கருவுருவதும் பாலூட்டுவதுமாக உள்ளனரே ,ஆண்களும் ஒரு குழந்தைக்கு ஒரு குழந்தை மாற்றாக கருவுறவும் பாலூட்டவும் உங்களது ரஷ்யாவில் ஆய்வுகள் நடக்கிறதா?////
                  ரொம்ப அறிவாளித் தனமா கேக்குறீங்க .. சூப்பர் சார் …
                  மூஞ்சில ஆசிட் ஊத்துற நாயிக்கு வக்காலத்து வாங்க வர்ற ———-மூளை இப்டித்தான் சிந்திக்குமோ ?..
                  அந்த நாய் க்காக நான் வரவில்லை .இஸ்லாத்திர்க்ககவே வந்துள்ளேன்.கம்யுநிசத்தைப் பற்றி கேட்டால் அந்த நாயை சொல்லி திசை திருப்ப வேண்டாம்.ரஷ்யாவில் மேற்கண்ட ஆய்வுகள் நடக்கிறதா?
              • S.IbrahimSeptember 2, 2011 at 11:27 pm 
                70.1.2
                //// நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்நிய நாட்டில் புகுந்து அங்கு அப்பாவி ஆண்களையும் பெண்களையும் சரி சமமாக கொன்றதாக கூற வருகிறீர்களா? ///
                ஒரு சிறிய ஆதாரம் அல்லது லின்க் ?.. பிளீஸ் ..////
                சரி சமமாக கொல்ல  வில்லை .ஆண்களை அதிகமாகவும் பெண்களை குறைவாகவும் கொன்றதாக சொல்ல வருகிறீர்களா?இல்லை ஆண்களை கொன்றும் பெண்களை கற்பழிக்கவும் செய்தோம் .ஆதலால் சரிசமமாக கொல்லவில்லை என்பீர்களா? அங்கிங்கு எனாதபடி இணைய தளத்தில் கொட்டிக்கிடக்கிறது/ டாஸ்மாக் கடையில் நுழைந்ததே போதாதா? உள்ளே சென்று குடித்ததுக்கு வேறு ஆதாரம் வேண்டுமா?

          •                                                                                                                                                                                              

சனி, 23 ஜூலை, 2011

ஒற்றுமை வியாபாரிகள்

ஒற்றுமை வியாபாரிகள் 
                                                                                                                            அபுஷிரின் 
                  நம்மவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏதாவது பிரச்னைகள் வந்தால்," நம்மிடம் ஒற்றுமை இல்லை அதுதான் இந்த கதி" என்ற வார்த்தை எல்லோரிடமும் ஒற்றுமையாக வரும்.தனக்கு வேண்டாதவனுக்கும் அந்நியருக்கும் பிரச்னைகள் வந்து அதில் வேண்டாதவன் பாதிக்கப்பட்டால் இவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்என்பார்கள்.அதே சமயத்தில் அவன் அந்நியரால் பாதிக்கப் பட்டால் நம் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை என்ற கோசத்தை ஓங்கி முழங்குவார்கள்.அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் 'முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கூறி தங்களது அமைப்பில் சேருமாறு அழைக்கின்றனர்.அவர்கள் கூறும் ஒற்றுமை என்பது ஒரு தலைமையின் கீழ் அணைத்தது முஸ்லிம்களும் செயல்பட வேண்டும் என்பதே .ஒவ்வரு அமைப்பிலும் ஒரு தலைவர் இருக்கும் நிலையில் ,அந்த தலைவருக்காக ,அந்த தலைவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும் வரையில் எப்படி ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமை வரும்,?.ஆக அந்த தலைவர்கள் ஒற்றுமை பற்றி பேசுவது தங்களது ஆதாயத்துக்காகவே ஒழிய சமுதாயத்துக்காக அல்ல என்பதே உண்மை. 


ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் மக்களை எளிதில் வெல்ல அவர்கள் கண்ட உத்தி ,உணர்வுகளை தூண்டி விடுவதுதான் .மற்ற மக்களை விட உணர்வுகளுக்கு எளிதில் அடிமையாவதில் முதலிடம் வகிப்பது முஸ்லிம்களே!. தூண்டி விடப்படும் உணர்வுகள் மெல்ல, மெல்லஇளைஞர்களின் உள்ளத்தில் சேர்ந்து உள்ளங்கள் நிரம்பியதும் அது வெடிக்கும் பொழுது சமுதாயம் அதன் பாதிப்பை தாங்குகிறது.ஆனால் சமுதாயத் தலைவர்கள் அதன் ஆதாயத்தை அடைந்து விடுவார்கள்.ஆதாயம் அடைந்த  தலைவர்கள் மெல்ல மறைந்து விடுவார்கள்.பாதிக்கப்பட்ட சமுதாயமோ மீண்டும் ஒற்றுமையை தேடி அலைகிறது.ஆனால் மக்களிடம் உண்மையான ஒற்றுமை எங்கிருந்து வர வேண்டுமோ ,அதை சுட்டி காட்டினாலோ,அதை தட்டி கழிப்பதில் காலத்தை கடத்தி விடுகிறார்கள்..கடந்த சில நாட்களுக்கு முன் நமதூரில் மூன்று இளைஞர்கள் நண்பர் ஒருவரை அவரது வீட்டில் சந்தித்து இரண்டாவது ஜமாத்தை நிறுத்துவது பற்றியும் ஒற்றுமையாக இருப்பது பற்றியும் இரு தரப்பிலும் அமர்ந்து பேசுவோம் என்றும் ஆனால் அங்கு குரான் ஹதீத் பற்றி பேசுவதை தவிர்க்குமாறும் கூறியுள்ளனர்.தவறு அந்தஇளைஞர்களிடம் இல்லை. இன்றைய சமுதாயத்தின் நிலையை இந்த "ஒற்றுமை"இளைஞர்கள் மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றனர்.இவர்களது வாதமெல்லாம் குரான் ஹதித் பற்றி பேசினால் ஒற்றுமை ஒட்டாத மை ஆகிவிடும் என்பதுவே. அவ்வாறெனின்,அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் வரக் கூடிய முஸ்லிம் என்ற பெயருக்கு சொந்தக்காரர்கள் ஒற்றுமையாக வாழவேண்டு மென்றால் குர்ஆனையும் ஹதித்களையும் புறக்கணிக்க வேண்டுமா? என்பதே நமது கேள்வி.
ஒற்றுமையை எங்கிருந்து கொண்டு வர வேண்டுமோ அங்கிருந்து ஆரம்பிப்பதில்லை. அதனாலேயே பாலஸ்தீனத்தில் இத்தனை ஆண்டுகள் போராடியும் வெற்றி கிடைக்க வில்லை"நாரேதக்பீர் " "ஈட்டி முன் நிறுத்தினாலும் ஈமானை இழக்க மாட்டோம்" போன்ற கோசங்கள் மக்களிடம் ஒற்றுமையை நிலைக்க செய்யாது. குர்ஆனை ஒற்றுமையின் அடிப்படையாக்குங்கள்  என்றால் அந்த குரானிலிருந்தே ஒற்றுமையை கயிறாக காட்டி,அதன் அர்த்தத்தை திரித்து, அந்த கயிறு எப்படி இருக்கும்? எங்கிருந்து வரும் என்பதை சொல்ல மறந்துவிட்டார்கள்.குர்ஆன் அல்லாஹ்வின கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கையில் ,இவர்களோ ஒற்றுமை என்னும் கயிறு என்கிறார்கள்.அல்லாஹ்வின் கயிருவை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் என்றால் அல்லாஹ்வுக்கும் நமக்கும் தொடர்பு  ஏற்படுத்தக் கூடிய கயிறு குர்ஆனே என்று ஆழாமாக சிந்திக்க தவறிய மொழி பெயர்ப்பாளர்கள் மேலோட்டமாக ஒற்றுமை என்னும் கயிறு என்ற மொழியாக்கத்தை திணித்து விட்டார்கள். அந்த மொழியாக்கம் தவறு என்பதை அரபு இலக்கண வாயிலாகவும் ஏனைய மொழியாக்கங்களின் வாயிலாகவும் நிருபித்த பிறகும் அதை மறுக்க முடியாதவர்கள் அந்த பழைய தவறான மொழியாக்கத்தை கை விட மறுக்கிறார்கள் என்றால் இவர்கள் மூலம் எப்படி ஒற்றுமையை கொண்டு வர முடியும?[தொடரும் இன்சா அல்லாஹ்]

புதன், 20 ஜூலை, 2011



பதிப்புரை
 ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.
தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.
-கீழைக்காற்று

கேள்வி: “இஸ்லாமிய‘ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்‘ சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால்அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?
பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “”ஜிந்தகிஇநவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.
சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.
ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, “”ஃபிக்இஉமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.
தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “”தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!
தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “”ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்” என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.
அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்’ சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்’ சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், “”முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்’ சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்’ சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்’ சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!
இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது “”அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்” நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் “”நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி “”வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்” என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் “”ஜுலாஹா” என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (“”உதவி செய்பவர்கள்”) என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.
இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.
ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் “மசாவத்இ பகார்இ ஷாரியத்” என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி “”பாஹிஸ்டி ஜேவார்” என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் “மரியாதைக்குரிய மேல்குடி’ (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் “கீழ்’ சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் “”இம்தாத் உல்ஃபடாவா” என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.
இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை “”நவ்முஸ்லிம்கள்” என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்