- "அந்நஜாத் "என்ற பெயருக்கு நீங்கள் கூறிய ஆயத் உங்கள் சொந்த கண்டுபிடிப்புதான் .உண்மையில் அது அபு அப்துல்லாஹ் வின் கடையின் பெயர்தான் ,இது தெரியாது என்றால் இது விஷயத்தில் நீங்கள் பாலகனே . அபு அப்துல்லாஹ் தப்லீக் அனுதாபியாக இருக்கும் போதே எனக்கு நேரிடையாக அறிமுகமுண்டு . தஞ்சாவூரில் நடந்த மாநில உலமாக்கள் சபை நடத்திய வலிமார்கள் சிறப்பு மாநாடு பற்றி விமர்சித்து "நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிடும் சோழவள நாட்டின் தலைநகராம் தஞ்சையில் "என்று தொடங்கும் சிறு புத்தகம் வெளியிட்டதன் மூலம்தான் PJ என்ற மனிதன் வெளி உலகுக்கு தெரிந்தார் .அப்போதே அந்த கையேட்டை படித்த நான் அவரை பாராட்டி கடிதம் எழுதி அதற்கு அவர் நன்றி கூறி பதிலும் எழுதினர் .பின்பு அந்நஜாத் ஆரம்பித்து பிரச்சாரம் செய்த பொது அந்த கொள்கையில் ஏற்பட்ட பல சந்தேகங்களுக்கு அவர் சரியான பதில் சொல்லாமல் மழுப்பியதுண்டு , மட்டுமல்ல ,எனக்கும் PJ உக்கும் நேரிடையாக நடந்த உரையாடலிலும் ,என் நெருங்கிய ,அவருக்கும் நெருக்கமான நண்பர்களிடமும் நடந்த உரையாடலிலும் , தன வாதத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியில் அல்லாஹ்வின் மீது சத்திய மிட்டு கூட பல பொய்களை சொல்லி இருக்கிறார் .ஒரு மிகவும் முக்கியமான ஆலிமிடம்[சம்சுல் ஹுதா] நடந்த விவாதத்தின் பொது ஒரு ஹதீதை லயீப் என்றும் அந்த அறிவிப்பாளர் பலஹீனமானவர் என்றும் ஒரு கிதாபின் பெயரை சொல்லி அந்த கிதாபில் இருப்பதாகவும் அடித்துக் கூறி அந்த வாதத்தில் ஜெயித்து வெளி வந்த பொது PJ இடம் அது எந்த கிதாப் என்று கேட்ட பொது ,யாருக்கு தெரியும் ,நான் அதை சொன்ன உடன் அவர் வாய் மூடி தோற்று விட்டார் அல்லவே ? என்று பெருமையாக கூறிய பொது தான் நான் திடுக்கிட்டு ,விழித்துக் கொண்டேன் , தெளிவு பெற்று விலகி விட்டேன் .அல்லா உங்களுக்கும் அந்த தெளிவை தர வேண்டுகிறேன் .சுன்னத் ,நபில் , அதுகூட இல்லாத விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டு , அதனால் பார்ழான சமுதாய ஒற்றுமையை சீரழித்து ,அடித்துக் கொண்டும் ,வெட்டிக் கொண்டும் ,சமுதாயம் கேவலமான நிலைக்கு போனதற்கு யார் காரணம் ?அன்று ஒன்றாக இருந்து கொள்ளை அடித்தவர்கள் ,இன்று ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்தான் ,பத்திரிகையில் பகிரங்கமாக பேட்டி அழித்தும் வருவது உங்களுக்கு கேவலமாக தெரிய வில்லையா ? "நக்கீரன் "AI எதிர்த்து பெண்களை நடுரோட்டிற்கு அழைத்து வந்து போராட்டம் நடத்துவது கேவலமில்லையா ?நம்மின் ஒற்றுமையை சீரழித்து ,வேட்டையாட நினைக்கும் RSS கும்பலுக்கு இது துணை போவது போல் இல்லையா ? உங்களை போன்றவர்கள் கண்மூடித்தனமாக ஆதரவு தருவதால் தானே இந்த கேவலங்கள் நடக்கிறது ? ரசூலுல்லாஹ் (SAL)வுக்குப் பின் இது வரை இஸ்லாம் எப்படி நிலை பெற்று வந்ததோ அந்த இறைவன் தொடர்ந்து காப்பான் .நீங்கள் ஊர் ஒற்றுமையை காப்பாற்றுங்கள் .அல்லா நம்மை ,நம் சமுதாயத்தை காப்பாற்றுவான் {சம்சுல் ஹுதா ஆலிமிடம் பீ.ஜே மட்டும்தான் சென்றாரா?அபு அப்துல்லாவும் சென்றாரா என்பது தெரியுமா?munavvirul பாய் கொஞ்சம் இதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள் }
செவ்வாய், 24 ஜூலை, 2012
முனவ்விருள் என்ற பெயரில் சம்சுதீன் என்ற ஆலிமுடன் நடந்த விவாதத்தின் ஒரு பகுதி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.