மவ்லவி முஹம்மது முஸ்தபா அவர்களின் பதில்
அன்புள்ள ஆறாம்பண்ணை இப்றாஹீமுக்கு அன்பான வேண்டுகோள்
இப்றாஹீம் அவர்களே! நீங்கள் எனக்கு அனுப்பிய மெயிலுக்கு 2 மாத காலமாகியும் நான் உங்களுக்கு பதிலளிக்கவில்லை என என் மீது ஆதங்கப்பட்டுள்ளீர்கள். அதற்குரிய உண்மையான விளக்கத்தைத் தருகிறேன்.
1 – எனது லேப்டாப் பழுதடைந்திருந்ததால் உடனடியாக பதில் எழுத முடியாமல் போனது.
2 – எனினும் நான் உங்களுக்கு பதிலளிப்பதற்காக கிட்டத்தட்ட நான்கு பக்க A 4 Size பேப்பர் அளவுக்கு எனது செல் போனில் தமிழில் மிகச் சிரமத்துடன் பதில் எழுதிய பொழுது இடையில் அது அழிந்து போனது.
3 – எனது பக்ரீத் விடுமுறையில் எனது வீட்டிலுள்ள கனினியில் உங்களுக்கு நான் பதில் எழுத ஆயத்தமான பொழுது உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே. தூத்துக்குடி விவாதத்தைப் பற்றி பொய்யான தகவல்களை அவரது உணர்வு வார இதழில் புழுகியிருந்தார். எனவே அதற்கு மறுப்பு எழுதி மக்கள் அனைவருக்கும் உண்மையை உணர்த்தும் நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டதால் உங்கள் அண்ணனின் பொய் மூட்டைகளை அம்பலப்படுத்துவதற்காக மறுப்பு எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டமாக எனது மறுப்பின் சிலத் தொகுப்பை “அஹ்லுஸ் சுன்னாஹ்” என்ற மாத இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்த மறுப்புப் பணி இன்னும் எனக்கு முடிவடையவில்லை. தொடர்ந்து அப்பணியில் தான் இருக்கிறேன். அந்தப் பதில் உங்கள் ஒருவருக்காக மட்டும் இல்லாமல் மக்கள் அனைவருக்காகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்படி மாத இதழில் பிரசுரிக்க ஏற்பாடு செய்தேன். மேலும் www.musthafa maslahi.blogspot.com என்ற எனது இணைய தளத்திலும் எனது மறுப்பை தொடராக பதிவு செய்ய ஆரம்பித்துள்ளேன்.
இப்றாஹீம் அவர்களே! எனது இணைய தளத்தில் எனது மறுப்புக் கட்டுரையைப் படித்த நீங்கள் இரு முக்கியமான கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள்.
1 – குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று கூறுவது குர்ஆனையும், அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு, அது யூத, நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்ற தூ.டி. மாந்கர ஜ.உ. சபையின் நிலைப்பாட்டை தவறு என்று த.த.ஜ. தூத்துக்குடியில் நிரூபித்தது என்று கூறியுள்ளீர்கள்.
ஆனால் த.த.ஜ. வின் படுதோல்வியையும், அவர்களின் கொள்கை புதை குழிக்கு அனுப்பப்பட்டதையும் விவாதத்தைப் பார்த்த அனைத்து நடுநிலையான ( பி.ஜே. யிடம் அறிவை அடகு வைக்காத ) மக்களும், குறிப்பாக அரபு மொழியை முறையாக அறிந்த அனைத்து அறிஞர்களும் நன்கு விளங்கியுள்ளார்கள்.
2 – இரண்டு நூன்கள் ஒரு சேர வந்தால், அதில் இரண்டாவது நூனுக்கு சுக்கூன் இருந்தால் இரண்டாவது நூனை கண்டிப்பாக விட வேண்டும் என்பதற்கு தனியாக, நேரடியான ஆதாரம் தரவேண்டும் என்று என்னிடம் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.
உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் “நுஞ்சி” சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
ஆம்! ஏற்றுக் கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.
இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும். எனவே உங்களுக்காக நான் பதில் எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடிக்கமாட்டேன்.
(البقرة 2-18) صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். (அவர்கள் நேரான வழியின் பக்கம்) திரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன். 2/18)
وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ (البقرة 2-171)
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை (கால் நடை) போன்றவர்கள். (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். அவர்கள் எதையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன். 2/171)
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ آَلِهَةً قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ هَذَا ذِكْرُ مَنْ مَعِيَ وَذِكْرُ مَنْ قَبْلِي بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ فَهُمْ مُعْرِضُونَ (الأنبياء 21-24)
அல்லது அவர்கள் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டார்களா? அப்படியாயின் உங்கள் (கொள்கைக்கு) அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள், இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும் (குர்ஆனும்), எனக்கு முன்புள்ளவர்களின் வேதமும் இருக்கின்றன என்று (நபியே!) நீர் கூறும். எனினும் அவர்களில் அதிகமான பேர் சத்தியத்தை அறிந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் (அதைப்) புறக்கணிக்கின்றார்கள். (அல்குர்ஆன். 21/24)
وَآَتَيْنَاهُمْ آَيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ (الحجر 15-81)
நம்முடைய ஆதாரங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (எனினும்) அவற்றை அவர்கள் புறக்கணிக்கக்கூடியவர்களாகவே இருந்தனர். (அல்குர்ஆன். 15/81)
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ (الأعراف 7-199)
(நபியே!) மன்னிப்பைக் கைக்கொள்வீராக! மேலும் நன்மையை ஏவுவீராக! மேலும் மடையர்களைப் புறக்கணித்துவிடும்! (அல்குர்ஆன். 7/199)
எனவே சத்தியத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிப்பது வீண் வேலையாகும்.
எனினும் சத்தியத்தை அறிய விரும்பும் நடு நிலை மக்களுக்காக எனது இணைய தளத்தில் எனது பதிலை இன்ஷா அல்லாஹ் எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.
அல்லாஹ் நன்மைக்கு உதவி செய்வானாக! ஆமீன்!
நான் முஸ்தபா அவர்கட்கு அனுப்பிய மெயில்களும் மற்றும் அவரது பிளாக்கில் இட்ட பின்னூட்டங்களும்
http://arampannai.blogspot.in/2012/11/blog-post_12.html
Ibrahim Sheikmohamed24 December 2012 22:14
முஸ்தபா ////குர்ஆனையும் அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு அது யூத நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்பது தூ.டி மாநகர ஜ.உ. சபையின் நிலைப்பாடாகும்.////
1இந்த உங்களது நிலைப்பாடு தவறு என்று தவ்ஹித் ஜமாஅத் தூத்துக்குடியில் நிருபித்ததா ?இல்லையா?
2இரண்டு நூன்கள் ஒரு சேர வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்று இருந்தால் அதில் இரண்டாவது நூனை விட்டுவிடலாம் என்பதற்கு “அல் இத்கான்” என்ற நூலில் ஆரம்ப கால விதி யை காட்டுங்கள்
///எழுத்து விதியை பேணும் இடங்களில் அவ்விதியையும், கிராஅத்தை பேணும் இடங்களில் கிராஅத்தையும் பேணி மிகக்கவனமாக சரியாகத்தான் எழுதியுள்ளனர்////
இரண்டு நூங்கள் ஒரு சேர வந்தால் அதில் இரண்டாவது நூனுக்கு சுக்கூன் இருந்தால் இரண்டாவது நூனை கண்டிப்பாக விடவேண்டும் என்று அந்தஆரம்பகால விதி கூறுகிறதா?
ReplyDelete
Ibrahim Sheikmohamed24 December 2012 22:18
முஸ்தபா அவர்களே நான் அனுப்பிய மெயில்களுக்கு பதில் ரெடிபண்ணிக் கொண்டு இருக்கிறேன் என்று தாங்கள் போனில் கூறி 2 மாதங்கள் ஆகிவிட்டனவே ,எஏன் இன்னும் பதில் தரவில்லை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.