சனி, 5 ஜனவரி, 2013

மவ்லவி முஹம்மது முஸ்தபாவுக்கு

மவ்லவி முஹம்மது முஸ்தபாவுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் .உங்கள் பதிலை இணையதளத்தில் பார்த்தேன் .அதில் எனக்கு பதில் அளிக்ககாலதாமதம் ஆனதற்கு காரணம் சொல்லியிருந்தீர்கள் .நன்றிகள் .இருப்பினும் போனில் அட்டென் பண்ணி இதை சொல்லியிருக்கலாம் .அப்புறம் "பக்ரீத் லீவில் 'என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அதென்ன பக்ரீத் ? பக்ரீத் என்றால் மாட்டு பொங்கல் என்றுதான் பொருள் வரும் .தியாகத் திருநாள் [ஈதுல் அல்ஹா]என்று குறிப்பிட்டிருக்கலாமே .
பீஜே உணர்வு வார இதழில் தூத்துக்குடி விவாதம் பற்றி பொய்யான தகவல்களை எழுதியுள்ளதால் அதற்கு தாங்கள் பதில் அளிக்க மூழ்கிவிட்டதால் எனக்கு பதில் அளிக்காமல் போயிற்று என்று கூறியுள்ளீர்கள் உங்களது இணைய தளத்தில் அந்த விவாதம் பற்றி எழுதுகையில் உணர்வில் பீஜே பொய்களை கூறியுள்ளதால் அதற்கான மறுப்பாக இதை வெளியிடுகிறேன் என்று குறிப்பிடவில்லையே ஏன்? பீஜே உணர்வில் என்ன பொய் கூறியிருந்தார் என்பதை எடுத்துக்காட்டி அது பொய் என்பதை நிருபித்து உண்மை என்னவென்பதை சொல்லியிருக்க் வேண்டும் அல்லவா?ஆனால அதில் அவ்வாறு சொல்லப்படவில்லை .
உலகத்தில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லிவிட முடியும் .ஆனால் பீஜே பொய் சொல்லிவிட முடியாது.பீஜே என்ன எங்களது கிளையில் கூட அதன் உறுப்பினர்களை சுன்னத் ஜமாஅத் கண்காணித்து வருகிறது .பீஜெ பற்றி அவர் சொல்லாதை எல்லாம் சொன்னதாகஅல்லது சொன்னதை திரித்து  பேசப்பட்டு வருகையில் அவர் பொய் சொன்னால் விட்டு வைப்பார்களா?கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும் அமைப்புகளும் கவனித்து வருகின்றன. அப்படி இருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக முஸ்லிம்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் .அப்படியிருக்க வீடியோ பதிவு உங்களாலும் பதிவு செய்யப்பட்டிருக்கையில் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை நம்ப முடியாது .
உங்களது பதில்களை பார்ப்போம் .
தூத்துக்குடி விவாதத்தில் எழுத்து பிழைகளை யூதர்கள் மட்டுமே இதுவரை சொல்லிவந்தார்கள் என்ற உங்களது வாதத்தை முறியடித்து விட்டார்கள் என்பதை 
விவாதம் முடியும் வரை ஒப்புக் கொள்ளாமல் சஹாபாக்கள் தவறு செய்துவிட்டதாக தவ்ஹித் ஜமாஅத்கூறிவருவதாக பொல்லாங்கு கூறிய நீங்கள்  இங்கே ஒப்புக் கொண்டீர்கள் .உங்களது கண்ணியத்தை மதிக்கிறோம் .புகழ் இறைவனுக்கு மட்டுமே .
////ஆனால் த.த.ஜ. வின் படுதோல்வியையும், அவர்களின் கொள்கை புதை குழிக்கு அனுப்பப்பட்டதையும் விவாதத்தைப் பார்த்த அனைத்து நடுநிலையான ( பி.ஜே. யிடம் அறிவை அடகு வைக்காத ) மக்களும், குறிப்பாக அரபு மொழியை முறையாக அறிந்த அனைத்து அறிஞர்களும் நன்கு விளங்கியுள்ளார்கள்.////இது நீங்கள் எனக்கு எழுதியுள்ளபதிலில் உள்ள வாசகம் .அந்த அனைத்து நடுநிலையான மக்களில் ஒருவரை சொல்லுங்கள் .

////உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் “நுஞ்சி” சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
      ஆம்! ஏற்றுக் கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.////
நீங்கள் எழுதியவற்றில் உங்களிடம் விளக்கம் கேட்டால் விளக்கம் தருவதே அறிஞர்களின் கடமை .நான் சொன்னால் சொன்னதுதான் அதற்கு பதில் சொல்லிவிட்டால் நீ அதை ஏற்றே  தீர வேண்டும் அப்போதுதான் சொல்லுவேன் என்பது எனது அறிவை உங்களிடம் அடகு வைக்க தூண்டுகிறீர்கள் என்று பொருள் .நீங்கள் நான் ஏற்கனவே பீஜெவிடம் எனது அறிவை அடகு வைத்துவிட்டதாக சொல்லியுள்ளீர்கள் .நான் அதை மீட்டால்தானே உங்களிடம் திருப்பி அடகு வைக்க முடியும் .ஆகவே நான் எனது அறிவை மீட்பதற்கு உங்களது ஆதாரத்தை அறிவுக்கு ஒவ்வாத நிபந்தனைகள் இல்லாமல் வையுங்கள் .அதுதான் உங்களை அறிஞர் வரிசையில் சேர்க்கும் .இல்லையெனில் வெறும் மிரட்டல் பேர்வழியாக சமுதாயம் எடுத்துக் கொள்ளும் .


 ////இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும். எனவே உங்களுக்காக நான் பதில் எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடிக்கமாட்டேன்.////
உங்களிடம் நேரடியான ஆதாரங்கள் இருந்தால் அது தான்  இந்த விவாதற்கு அடிப்படையான விஷயம் .அந்த நேரடியான் ஆதாரத்தை தராமல் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்றவைகள் .விவாதத்தில்ஆதாரத்தை வைக்காமல் பொத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன? பீஜே அவர்கள் வெறும் நூலின் பெயரை மட்டும் சொல்லுவதில்லை .எந்த நூல் என்பதையும் பக்கம் என்பதையும் மூல வாசகங்களையும் எடுத்து வைப்பதே அவரது விவாத பாங்கு .நீங்கள் அந்த நேரடியான் ஆதாரத்தை வையுங்கள் அதை சரி பார்த்து ஏற்றுக் கொள்வோம் .நீங்கள் யூதர்கள் மட்டுமே குர்ஆனில் பிழைகள் இருப்பதாக சொன்னது சுத்த பொய் என்று ஏற்கவில்லையா அது போல ஏற்றுக் கொள்வோம் ,ஆனால் ஆதாரத்தை வைக்காமல் கண்மூடித்தனமாக நான் சொன்னால் அது சரி என்று கொள்ளவேண்டும் என்றால் அதென்ன அறிவுடமையா? 
நேரடி ஆதாரம் தந்தாலும் நான் ஏற்க மாட்டேன் என்று நான் கூறவில்லையே ,அந்த ஆதாரம் சரியானதா என்று பார்க்க வேண்டாமா?
ஏனெனில்,அல் இத்கான் என்ற நூலில் உள்ள வாசகத்தை மக்கள் முன் வைத்துதான் நீங்கள் வாதித்திருக்க வேண்டும் .குர்ஆன் வந்து 700 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட அந்த நூலில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று விதி இருக்க வேண்டும் .அவ்வாறு விதிகளை சொல்லுவதற்கு 
குர்ஆனுக்கு முந்தையகாலத்து நூல்களிலிருந்து ஆதாரம் காட்டியிருக்க வேண்டும் .
குர்ஆன் வந்த பிறகு குர் ஆனில் ஏன் அங்ஙனம் எழுதப்பட்டுள்ளது என்பதை அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது .ஆகவே அல்  இத்கான் நூலில் உள்ள விதிகள் நான் சொன்னவாறு இருந்தால் நுஞ்சி என்பது சரியாகத்தான் எழுதியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன் .
அடுத்து 
///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து  அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.

குர்ஆனிலுள்ள அனைத்து யுஹ்யீ (يُحْيِي) களும் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கும். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.////

அடுத்து,நனசக் ,நுன்சிஹா என்ற சொற்கள் ஏன் இதே அடிப்படையில் எழுதப்படவில்லை ?

மேலும் உங்களிடம் கேட்க விழைவது ,நீங்கள் குர்ஆனில் பீஜே எழுத்து பிழைகள் உள்ளதை அல்லாஹ்வுக்காக அதை தவறு என்று எடுத்துக்காட்டி சரிபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் ,பீஜே அவர்கள் அவரது மொழியாக்கத்தில் குர்ஆனில் உள்ள 19எழுத்து  பிழைகளை பட்டியலிட்டுள்ளார். அவைகள் அனைத்தும் எழுத்து பிழைகள் இல்லை என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அவருக்கு நேரிலோ தபாலிலோ அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும் .அதன்பிறகும் அவர் உங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லைஎன்றால் உங்களது அஹ்லு சுன்னா மாத இதழில் அல்லது  இணைய தளத்தில் அதைப்பற்றி எழுதியிருக்க வேண்டும் .அதற்கு அவர் பதில்அளித்திருப்பார் . அதன் பிறகு விவாதத்திற்கு அழைத்திருக்கவேண்டும்.ஆனால் ஒரு நாலைந்து சொற்களில் மட்டும் பிழைகள் இல்லை என்பதை உங்கள் அறிவுக்கு ஏற்றவாறு ஆய்வு செய்துவிட்டு ,அதை வைத்து பீஜெவுடன் விவாதம் நடத்தி தமிழகத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பது உங்களது அற்புத கனவு .நாங்கள் பீஜேவை ஆருயிராக மட்டுமே கருதுகிறோம் .ஆனால் நீங்களோ பீஜெவுடன் விவாதித்தால்தான் தமிழகத்தில் பிரபல ஆகமுடியும் என்று பீஜேமீது வரம்புமீறி நம்பிக்கை வைத்துஉள்ளீர்கள் .அந்த நம்பிக்கையை  அல்லாஹ் தகர்த்துவிட்டான் .அவனுக்கே புகழனைத்தும் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.