செவ்வாய், 8 ஜனவரி, 2013

இணை கற்பித்த இப்றாஹீம் அவர்களே!


இணை கற்பித்த இப்றாஹீம் அவர்களே!

நீங்கள் இணை கற்பித்த தருணத்தை கவனியுங்கள்.

‘உலகில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லிவிட முடியும். ஆனால் பி.ஜே. பொய் சொல்லிவிட முடியாது! பி.ஜே. என்ன! எங்களது கிளையில் கூட அதன் உறுப்பினர்களை சுன்னத் ஜமாஅத் கண்கானித்து வருகிறது............. கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும், அமைப்புகளும் கவனித்து வருகின்றன. அப்படியிருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக முஸ்லிம்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளீர். அப்படியென்றால்

1 – அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் வாழ்ந்த, வளர்ந்த நபிமார்கள் பாவங்கள் செய்ததாக எப்படி கூறுகிறீர்?

2 – உங்களின் கூற்றுப்பிரகாரம் அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் இருந்த நபிமார்களே பாவங்கள் செய்ய முடியும் என்றும், பாவங்கள் செய்தார்கள் என்றும்  கூறுகிற நீங்கள் சுன்னத் ஜமாஅத் மற்றும் பல அமைப்புகளின் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. பொய் சொல்ல முடியாது என்றும், மறந்தும் கூட அவர் பொய் பேச முடியாது என்றும், உலகில் மற்ற யார் வேண்டுமானாலும் பொய் சொல்ல முடியும் என்றும்  கூறியுள்ளீர்களே!

நபிமார்களை விட பி.ஜே. உயர்ந்தவரா?

பி.ஜே.யை விட நபிமார்கள் தாழ்ந்தவர்களா?

பி.ஜே.யின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கூட நபிமார்கள் மீது வைக்கவில்லையே!?

3 – சுன்னத் ஜமாஅத்தினரின் கண்கானிப்பில் பி.ஜே. இருப்பதால் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாது என்கிறீர்!

அப்படியென்றால் அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் இருந்த நபிமார்கள் பாவம் செய்ய முடியும்! மனிதக் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. பாவம் செய்ய முடியாது என்ற உங்களது கொள்கை எவ்வளவு ஆபத்தானது என்பது புரியவில்லையா!?

மனிதக் கண்கானிப்பை விட இறைக் கண்கானிப்பு தரம் தாழ்ந்த்தா!?

மனிதக் கண்கானிப்பின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூட மனிதனைப் படைத்த அல்லாஹ்வின் மீது வைக்கவில்லையே!?

-------------------------------------------------------

பக்ரீத் தான் பதில் என்று நினைத்துக் கொண்டீர்களோ! அது உங்களது அறிவாற்றல் பற்றிய துணுக்கு மட்டுமே! என்று கூறியுள்ளீர்கள்.

இப்றாஹீம் அவர்களே! நான் அதை பதில் என்று நினைக்கவேயில்லை. மாறாக உங்களது அறியாமைக்கு நீங்களே கொடுத்த அத்தாட்சியாகத்தான் கருதுகிறேன். ஏனெனில் பக்ரீத் என்ற சொல்லுக்கு ‘மாட்டுப் பொங்கல்’  என்று நீங்கள் தவறாக பொருள் கொடுத்துள்ளீர்கள். மட்டுமல்ல, அப்படித்தான் பொருள் கொடுக்க வேண்டும் என்றும் இப்பொழுது கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் ஈத் என்ற அரபுச் சொல்லுக்கு ‘பொங்கல்’ என்று தான் பொருளா? அதற்குரிய ஆதாரத்தை முன் வையுங்களேன்!

பக்ரீத் என்றால் மாட்டை இறைவனுக்காக அறுத்து தியாகத்தை வெளிப்படுத்தும் பெருநாள் என்று தான் பொருள். இச்சொல்லுக்கு  இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதற்கு அந்நாளில் முஸ்லிம்கள் செய்கிற செயலே சான்றாகும்.

இறைவனுக்காக எதையும் தியாகம் செய்வேன் என்ற உணர்வை வெளிக்காட்டும் விதத்தில் மாட்டை அறுத்து, அதன் இறைச்சிகளை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து, நாமும் உண்டு மகிழ்கிறோம். எனவே பக்ரீத் என்றச் சொல்லுக்கு மாட்டை இறைவனுக்காக அறுத்து தியாக உணர்வை வெளிப்படுத்தும் பெருநாள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

ஆனால் நீங்களோ பக்ரீத் என்ற முஸ்லிகளின் சொல்லுக்கு மாட்டுப் பொங்கல் என பொருள் கொடுத்துள்ளீர்களே!

மாட்டுப் பொங்கல் என்றால் நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று மாட்டுப் பொங்கல் அன்று மாட்டைக் குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வண்ணமிட்டு, திலகமிட்டு, அதற்கு மாலை சூடி, மாட்டை வணங்குவார்கள். அதனால் அந்நாளை மாட்டுக்குத் திருநாள் என்று சொல்வதுண்டு எனக் கூறியுள்ளீர்கள்.

நீங்கள் மாட்டுப் பொங்கலுக்கு விளக்கம் கூறியதைப் போன்று தான் முஸ்லிம்கள் பக்ரீத் என்று கூறுகிற நாளில் மாட்டுக்குத் திலகமிட்டு, மாட்டை வணங்குகிறார்களா? அப்படி வணங்கினாலல்லவா பக்ரீத் என்றச் சொல்லுக்கு மாட்டுக்குத் திருநாள் என்று கூற முடியும்!?

------------------------------------------------

நன்ஸக், நுன்ஸிஹா வுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகும் மீண்டும் அதைக் கேட்டுள்ளீர்கள்.

------------------------------------------------

நேரடியான ஆதாரத்தை தராமல் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்றவைகள் என்று கூறியுள்ளீர்கள்.

பி.ஜே.யிடம் உங்கள் அறிவை அடகு வைத்ததை ஒப்புக் கொண்ட இப்றாஹீம் அவர்களே! நேரடி ஆதாரத்தை உங்களுக்குத் தந்தாலும் உங்களிடம் செய்கிற வாதங்கள் அர்த்தமற்றவைகள் தான். ஏனெனில் தூ.டி. விவாதத்தில் உங்கள் அண்ணனிடம் நேரடி ஆதாரங்கள் பல கொடுத்தும் அதை அவர் ஆதாரமின்றி மறுத்தாரே!

------------------------------------------------

நான் நேரடி ஆதாரம் தந்தால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? என்ற எனது கேள்விக்கு நீங்கள் எனக்கு அளித்த பதில் ; நீங்கள் நேரடி ஆதாரத்தை வையுங்கள். அதை சரி பார்த்து ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளீர்கள். பின்பு உங்களின் சரிபார்த்தல் என்ற செயலுக்கு பின் வருமாறு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

‘குர்ஆன் அருளப்பட்டு 700 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட அந்த நூலில் (இத்கான்) ‘இப்படித்தான் எழுத வேண்டும் என்று விதி இருக்க வேண்டும். அவ்வாறு விதிகளைச் சொல்வதற்கு குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூல்களிலிருந்து ஆதாரம் காட்டியிருக்க வேண்டும். குர்ஆன் வந்த பிறகு குர்ஆனில் ஏன் அங்ஙனம் எழுதப்பட்டுள்ளது என்பதை அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது. ஆகவே அல்இத்கான் என்ற நூலிலுள்ள  விதிகள் நான் சொன்னவாறு இருந்தால் நுஞ்சி என்பது சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது  என்பதை ஏற்றுக் கொள்வோம்’ என்று கூறியுள்ளீர்கள்.

உங்கள் கூற்றுப்பிரகாரம்

1 - ‘குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இன்றைய காலத்தில் ஒருவர் இருந்து கொண்டு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக அவர் வாதிடுவதாக இருந்தால் அவர் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூல்களிலிருந்து எழுத்து விதிகளைக் கூறி குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக வாதிட்டால் தானே அதை ஏற்க வேண்டும்?

உங்கள் அண்ணன் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூலை குறிப்பிட்டுத்தான் குர்ஆனில் பிழை இருப்பதாக வாதம் செய்தாரா?

2 – குர்ஆன் அருளப்பட்ட 700 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூலில் அதன் ஆசிரியர் குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று சொன்னால் ஏற்கமாட்டீர்கள்!

குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்கிற பி.ஜே. குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்பேன் என்று கூறுகிறீர்களே! இது தான் உங்களின் சரி பார்க்கும் முறையோ! வேறொன்றும் இல்லை. நீங்கள் உங்களது அறிவை முழுவதுமாக பி.ஜே.யிடம் அடகு வைத்துள்ளதை மென்மேலும் மெய்ப்படுத்துகிறீர்கள்.

3 – குர்ஆன் அருளப்பட்டு 700 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருவர் ‘குர்ஆனில் இச்சொல் ஏன் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்று அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது’ என்று கூறியுள்ளீர்கள்.

இப்றாஹீம் அவர்களே! நான் உங்கள் அண்ணனுக்கு அளித்த பதில்களில் குறிப்பிட்ட அரபு அறிஞர்கள் எவரும் அவர்களது அனுமானத்தை வைத்து சட்டம் கூறவில்லை. மாறாக ஏன் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்ற காரணத்தையும், சட்டத்தையும் முறையாக வைத்துத் தான் கூறியுள்ளார்கள்.

4 – ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும் விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும். இப்பேருண்மையை விரும்பியோ, விரும்பாமலோ  உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே.யும் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரத்தை கூடிய விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன். எதிர்பாருங்கள்.

----------------------------------------------------

பி.ஜே. பற்றி அவர் சொல்லாததை எல்லாம் சொன்னதாக, அல்லது சொன்னதை திரித்து பேசப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளீர்கள்.

இது நீங்கள் பி.ஜே.யின் மீது கொண்டிருக்கும் பலமான நம்பிக்கையையும், உங்கள் அறிவை அவரிடம் அடகு வைத்ததையும் காட்டுகிறது. எனவே தான் மலக்குமார்கள், நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக, அல்லது சொன்னதை திரித்து பி.ஜே. பேசினாலும் அவற்றை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

அடுத்து; இப்றாஹீம் அவர்களே! நான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக என் மீது நீங்கள் இட்டுக்கட்டியுள்ளீர்களே?

1 – தூ.டி விவாதத்தில் ‘எழுத்துப் பிழைகளை யூதர்கள் மட்டுமே இது வரை சொல்லி வந்தார்கள் என்ற உங்களது வாதத்தை முறியடித்துவிட்டார்கள் என்பதை விவாதம் முடியும் வரை ஒப்புக்கொள்ளாமல் ஸஹாபாக்கள்  தவறு செய்துவிட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருவதாக பொல்லாங்கு கூறிய நீங்கள்’ இங்கே ஒப்புக்கொண்டீர்கள் என்று கூறியுள்ளீர்கள்.

எதை ஒப்புக்கொண்டேன்? எங்கு ஒப்புக்கொண்டேன்? உங்கள் அண்ணன் செய்த யூதத்தனத்தை அவர் யூதத்தனம் செய்யவில்லை என்று கூறினேனா?

2 – நீங்கள் ‘யூதர்கள் மட்டுமே குர்ஆனில் பிழைகள் இருப்பதாக சொன்னது சுத்த பொய்’ என்று ஏற்கவில்லையா? என்று என் மீது இட்டுக்கட்டியுள்ளீர்கள்.

நான் எப்பொழுது அதை ஏற்றுக் கொண்டேன்? அவ்வாறு நான் ஏற்று இருந்தால் அதற்குரிய ஆதாரத்தை வீடியோவாகவோ, அல்லது எனது எழுத்திலிருந்தோ நிரூபித்துக் காட்டுங்களேன்.

 மிக அவசரப்படாதீர்! இப்றாஹீம் அவர்களே! குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக கூறுவது யூத, நஸாராக்கள் மட்டுமே என்பதையும், தூ.டி. விவாதத்தில் எங்கள் இமாம்கள் மீது பி.ஜே. செய்த இட்டுக்கட்டுகளையும் தூ.டி விவாதத்தில் நாங்கள் விளக்கியுள்ளோம். இன்னும் மிகத்தெளிவாக எனது இணைய தளத்தில் இன்ஷா அல்லாஹ் வெளியிடவுள்ளேன். அதற்குள் அவசரப்படாதீர்கள்.

3 – நீங்கள் எழுதியவற்றில் உங்களிடம் விளக்கம் கேட்டால் விளக்கம் தருவதே அறிஞர்களின் கடமை. ‘நான் சொன்னால் சொன்னது தான். அதற்கு பதில் சொல்லிவிட்டால் நீ அதை ஏற்றே தீரவேண்டும். அப்போதுதான் சொல்லுவேன் என்பது எனது அறிவை உங்களிடம் அடகு வைக்கத் தூண்டுகிறீர்கள்’ என்று பொருள் எனக் கூறியுள்ளீர்.

இப்றாஹீம் அவர்களே! நான் பதில் சொன்னால் அதை ஏற்றே தீரவேண்டும். அப்போதுதான் பதில் சொல்வேன் என்று நான் எப்பொழுது கூறினேன்?

நேரடி ஆதாரம் கேட்கும் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் மனதுடன் கேட்கிறீர்களா? அல்லது மறுத்து விதண்டாவாதம் பண்ணும் நோக்கத்துடன் கேட்கிறீர்களா? என்பதை நான் அறிந்தால்தானே அறிவிலிகளை புறக்கணியுங்கள் என்ற இறை வழிகாட்டுதலை பின்பற்றமுடியும்? எனவே நான் உங்கள் அறிவை என்னிடம் அடகு வைப்பதைத் தூண்டவில்லை. மாறாக என் நேரத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் அதன் பொருளாகும்.

---------------------------------------------------------

ஒரு நாலைந்து சொற்களில் மட்டும் பிழைகள் இல்லை என்பதை உங்கள் அறிவுக்கு ஏற்றவாறு ஆய்வு செய்துவிட்டு அதை வைத்து பி.ஜே.யுடன் விவாதம் நடத்தி தமிழகத்தில் பிரபலம்  ஆகவேண்டும் என்பது உங்களது அற்புத கனவு என்று கூறியுள்ளீர்கள்/

தமிழகத்தில் யாராலும் உங்கள் அண்ணனிடம் விவாதம் பண்ணமுடியாது என்று மனக்கோட்டை கட்டிய  உங்களுக்கும், உங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் அண்ணனின் பித்தலாட்டங்களை அவருடன் நேருக்கு நேர் விவாதித்து அம்பலப்படுத்தியதை நீங்கள் தாங்கிக் கொள்ளமுடியாமல் மேற்கண்டவாறு கூறி உங்கள் மனதை தேற்றிக்கொள்கிறீர்களோ!

வெறும் நாலைந்து சொற்களை தவறாக ஆய்வு செய்து தவறான சட்டம் கூறியவர் உங்கள் அண்ணன் பி.ஜே.தான். அவர் எதை பிழை என்று அவரது மொழிபெயர்ப்பில் பட்டியலிட்டாரோ அவற்றை அவர் தூ.டி. விவாதத்தில் தக்க ஆதாரத்துடன் எடுத்துக்கூறி அவரின் கொள்கை உண்மையென நிரூபித்திருக்கலாம். ஆனால் அதை செய்வதற்கு உங்கள் அண்ணன் பயந்து நடுங்கிவிட்டார். எனவேதான் பட்டியலில் இல்லாத புதிய விஷயங்களை அவரின் அறிவுக்கேற்ப ஆய்வு செய்துவிட்டு அவற்றையும் பிழைகள் என்று கற்பனை செய்து கொண்டு தூ.டி. விவாதத்தில் அவரின் புதிய சரக்குகளை அவிழ்த்து விட்ட பொழுதும் அவற்றிற்கும் முறையாக  தக்க ஆதாரத்தைக் கூறி அவைகளும் சரியாகத்தான் எழுதப்பட்டு இருக்கிறது என்பதை அல்லாஹ்வின் அருளால் நிரூபித்தோம். எனவே அறைகுறை ஆய்வை மேற்கொண்டு தவறாக சட்டம் சொன்னவர் பி.ஜே.தான் என்பது இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை இப்றாஹீம் அவர்களே! உங்களுக்கு எப்படி புரியும்! நீங்கள் தான் அறிவை அடகு வைத்துவிட்டீர்களே!

அடுத்து; நான் பி.ஜே.யிடம் விவாதித்து தமிழகத்தில் பிரபலமடைய கனவு கண்டதாக என் மீது குற்றம் சாட்டியுள்ளீர்கள்.

பி.ஜே. மற்றவர்களை விவாதத்திற்கு அழைத்தால் அதை அவரின் அறிவாற்றல் என த.த.ஜ.வினர் புகழாரம் சூட்டுகின்றனர்.

மற்றவர்கள் பி.ஜே.யின் தவறான கொள்கையை விமர்சித்தால் அவர்களைப் பார்த்து எங்கள் அண்ணனிடம் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று கேள்வி கேட்கிறார்கள்?

சவாலை ஏற்று உங்கள்  அண்ணனுடன் விவாதம் புரிந்தால் விவாதம் செய்தவர்களை பிரபலமடைய கனவு காணக்கூடியவர் என்று குறை கூறுகிறீர்கள்.

இந்தப் போக்கு நீங்கள் முழுமையாக பி.ஜே.வுக்கு அடிமையாகிவிட்டதை காட்டுகிறது.

அடுத்து; இமாம்களையும், ஸஹாபாக்களையும், நபிமார்களையும் விமர்சித்த வந்த உமது அண்ணன், இறுதியாக குர்ஆனிலும் பிழை இருக்கிறது என்று கூறியுள்ளார் என்றால் அவர்தான் பிரபலத்தையும், அதை தக்க வைப்பதையும் விரும்பியுள்ளார் என்பதை காட்டுகிறது.

-------------------------------------------------------------------------

இப்றாஹீம் அவர்களே! யாரை வேண்டுமானாலும் குற்றப்படுத்தி விட்டு அதற்கு தொடர்பான வசனங்களையும், ஹதீஸ்களையும் வரிசைப்படுத்த என்னாலும் முடியும் எனக் கூறியுள்ளீர்கள்.

அதை நீங்கள் அவ்வாறு கூறுவது சரியல்ல. மாறாக அது மட்டும் தான் உங்களுக்கும், உங்கள் அண்ணனுக்கும், தம்பிமார்களுக்கும் தெரியும் என்று கூறவேண்டும். ஏனெனில் நீங்கள் யாரையெல்லாம் குறை கூறுகிறீர்களோ அவர்களை அப்படித்தான் குறை கூறுகிறீர்கள்.

--------------------------------------------------------------------------------

ஆதாரங்களை அள்ளிப்போடுவது தான் ஆலிம்களுக்கு அழகு என்று கூறியுள்ளீர்கள்.

ஆதாரங்களை அள்ளிப்போட்ட பின்பும் விதண்டாவாதமாக மறுப்பது தான் உங்களைப் போன்றவர்களுக்கு அழகோ!!

--------------------------------------------------------------------------

1 – பி.ஜே. உணர்வில் என்ன பொய் கூறியிருந்தார்? என்பதை எடுத்துக் காட்டி அது பொய் என்பதை நிரூபித்து உண்மை என்ன என்பதை சொல்லியிருக்க வேண்டுமல்லவா?

2 – கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும், அமைப்புகளும் பி.ஜே.யை கவனித்து வருகின்றன. அப்படியிருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக மக்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அப்படியிருக்க வீடியோ பதிவு உங்களாலும் பதிவு செய்யப்பட்டிருக்கையில் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை நம்பமுடியாது என்று கூறியுள்ளீர்கள்.

இப்றாஹீம் அவர்களே! மிக அவசரப்படுகிறீர். அவசரப்படாதீர். உங்கள் அண்ணன் உணர்வில் கூறிய பொய்களை இன்ஷா அல்லாஹ் விரைவில் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன். அதன் பின்பு உமது அண்ணன் ‘வீடியோவில் உண்மை நிகழ்வு பதிவாகியிருந்தாலும் துணிந்து பொய் சொல்பவர்தான்’ என்பதை நம்புவீர்கள். மன்னிக்கவும். நீங்கள் நம்பமாட்டிர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டுவிட்டீர்களே! எனவே நடுநிலை மக்கள் நம்புவார்கள். உண்மையை விளங்குவார்கள்.

-------------------------------------------------------------

நடுநிலை மக்கள் என்று இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

அறியாமை காலத்திலிருந்து விடுபட்டதாக வியாக்கியானம் பேசும் இப்றாஹீம் அவர்களே! இன்னும் நீங்கள் அறியாமை காலத்தில்தான் இருக்கின்றீர்கள் என்பதை மேற்கண்ட உமது கேள்வியே பறைசாற்றுகிறது.

காஃபிர்கள் தெளிவான அத்தாட்சி வந்த பின்பும் அவர்களுடைய தலைவர்களின் வசீகரச் சொற்களில் மதிமயங்கி குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருந்து, அவர்களின் வழிகெட்ட தலைவர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்தது போல,

யூத, நஸாராக்கள் அவர்களின் தலைவர்களின் வசீகரப் பேச்சில் மதிமயங்கி குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருந்து, அவர்களின் வழிகெட்ட தலைவர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்தது போல,

த.த.ஜ.வினர்களும், நீங்களும் உங்கள் இயக்கத் தலைவர் பி.ஜே.யின் வசீகரப் பேச்சில் மதிமயங்கி குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் ஆகிவிட்டீர்கள். அதன் வெளிப்பாடாக ‘உலகில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்ல முடியும். ஆனால் பி.ஜே. பொய் சொல்ல முடியாது. ஏன்! மறந்து கூட அவர் பொய் சொல்ல முடியாது. அவர் பொய் சொல்வதாக கூறப்பட்டால் அதை நம்பவும் முடியாது என்று கூறி பி.ஜே.யின் மீது குருட்டு நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.

அது போல் இல்லாமல் நடுநிலையாக இருப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று கூறுவதை விட அப்படியிருப்பதைத்தான் இஸ்லாம் ஏவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

‘நாம் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கியுள்ளோம்’ (அல்குர்ஆன். 2/143) என்று இறைவன் முஸ்லிம்களைப் பற்றிக் கூறுகிறான்.

ஆனால் நீங்களோ நடுநிலை மக்கள் என்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று கேள்வி கேட்கிறீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.