வியாழன், 10 ஜனவரி, 2013

திசைதிருப்ப முயலவேண்டாம்



மவ்லவி முஸ்தபாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .தங்களது பதில்கள பார்த்தேன் .எனது இரண்டு கேள்விகளைத் தவிர மற்ற அனைத்திற்கும்  தவறான பதில் அளித்து கடும் முயற்சியில் திசைதிருப்ப முனைகிறீர்கள் .மாட்டு பொங்கல் இணைவைப்பு ,துணை ஓய்ப்பு ,நடுநிலை பற்றியெல்லாம் நிறைய எழுதுவோம் ,விவாதிப்போம் .
ஆனால் அதற்கு முன்னர்  எனது இரு கேள்விகளும் உங்களுக்கு தெரியும் .
1.குர்ஆனில் எழுத்து பிழை உள்ளது என்பது யூத நாசராக்களின் நச்சு கருத்தாகும் என்பதற்கு ஆதாரமாக answering islam என்ற கிறித்தவர்களின் தளத்திலிருந்து ஆதாரம் காட்டினீர்கள். அதற்கு பீஜே அவர்கள் பாக்கியாநியிளிருந்து பதில் தந்தார் .மேலும் ஆயிசா [ரலி] அவர்களும் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்களும் சொன்ன பிழைகள் சரியில்லாவிட்டாலும் குர்ஆனில் எழுத்து பிழைகள் உள்ளன என்று சொன்னதற்கு ஆதாரம் வைத்தார்கள் .அவற்றை மறுக்க வழி இல்லாமல் திணறி ,ஐயோ ஆயிசா [ரலி] அவர்கள் பற்றியும் அவதூறு சொல்லிவிட்டார்களே என்ற கூச்சலைத் தவிர வேறொன்றும் அதற்கு எதிராக வைக்கமுடியவில்லை .இது குறித்து நான் கேட்டதற்கு ,பொத்தாம் பொதுவில் உங்களது கொள்கைகளை குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று கூறி முடித்துவிட்டீர்கள் .அப்படிஎன்றால் யூத கருத்துக்கள் சம்பந்தமாக மவுனம் .மவுனம் ஒப்புதலே என்பது நியதி .இப்போது சொல்லுங்கள் ,யூதர்கள் மட்டும் சொல்லியிருந்தாலே யூத கருத்துகளாக இருக்க முடியும் .அவ்வாறெனில் பீஜே கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் தவறு என்று நீங்கள் நிரூபித்தே  ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளீர்கள் .நீங்கள் நிருபிக்கவிட்டால் ஒப்புக் கொண்டதாகவே பொருள்.நீங்கள் விவாதத்தில் நிறுபித்தது உண்மை என்றால் அந்த வீடியோவுக்கு இங்கே லிங்க் கொடுங்கள் .
அப்படி காட்டவில்லைஎன்றால் நீங்கள் சொன்ன ஆயத்து உங்களுக்கு முற்றிலும் பொருந்தும் .
"நம்முடைய ஆதாரங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (எனினும்) அவற்றை அவர்கள் புறக்கணிக்கக்கூடியவர்களாகவே இருந்தனர்". (அல்குர்ஆன். 15/81)
2.அல்இத்கான் என்ற நூலில் உள்ள ஆரம்பகால விதியை காட்டுங்கள் .///ஏனெனில் தூ.டி. விவாதத்தில் உங்கள் அண்ணனிடம் நேரடி ஆதாரங்கள் பல கொடுத்தும் அதை அவர் ஆதாரமின்றி மறுத்தாரே!///
தவறான ஆதாரங்கள் என்பதால்தானே மறுத்தார் .ஆதாரங்கள் என்று சொல்லி விட்டால் அதை ஆய்வு இல்லாமல் ஏற்றுக் கொள்ள முடியுமா?உங்கள் ஆதாரத்தை பீஜே மறுத்தால் அதை நீங்கள் மறுத்து உங்களது ஆதாரத்தை நீங்கள் நிலை நிறுத்தியிருக்க வேண்டாமா? பீஜே ஆதாரமின்றி மறுத்தார் .என்று சொல்லியுள்ளீர்கள் .அதைத்தான்  கேட்கிறேன் .ஆரம்பகால விதிகளுக்கு நீங்கள் கொடுத்த நேரடி  ஆதாரத்தையும் பீஜே அதை ஆதாரமின்றி மறுத்ததையும் சொன்னால் எனது கேள்விக்கு பதில் கிடைத்தாயிற்று .

குர்ஆனுக்கு பிறகு 700 ஆண்டுகளுக்கு பின்னர் குர்ஆனில் எழுத்து பிழைகளுக்கு சொல்லப்பட்ட காரணங்களையும் 1400 ஆண்டுகளுக்கு பின்னர் சொல்லப்பட்ட காரணங்களையும் சமளவில் தான் வைத்துத்தான் பார்க்க வேண்டும் .ஆரம்பகால விதிகள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது ஆரம்பகால விதிகளுக்கு ஆதாரம் வைக்கபப்ட வேண்டும் .விதிகள் என்பதற்கான வியாக்கியானமும் அதில் இருக்க வேண்டும் .
///ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும் விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும். இப்பேருண்மையை விரும்பியோ, விரும்பாமலோ  உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே.யும் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரத்தை கூடிய விரைவில் இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன். எதிர்பாருங்கள்..///
பீஜே உங்களுக்கு ஆதரவாக சொல்லியிருந்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள் .அவர் அப்படி சொல்லியிருந்தாலும் தாய் மொழி அறிஞர்களின் கருத்துக்கு மாறாக தக்க ஆதாரங்கள் இருந்தால் அதைத்தான் ஏற்றுக் கொள்ளமுடியும். தாய் மொழி அறிஞர்களைவிட மாரிஸ் புகைல் குர்ஆனில் அரபு சொற்களுக்கு அருமயான மொழிபெயர்ப்புகளை அளித்துள்ளார் .அதில் "அலக் "என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் பிரபல்யம் .பீஜேவிடம்  உங்களுக்கு சாதகமான  விசயங்களில் தாங்களே மூளையை அடகு வைத்துள்ளீர்கள் 

நன்ஸக், நுன்ஸிஹா வுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகும் மீண்டும் அதைக் கேட்டுள்ளீர்கள்என்று கூறி உள்ளீர்கள் ,அந்த பதிலிலிருந்து தான் எனது கேள்விகள் .


///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து  அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.///
அதைப்போல நன்சக் ,நுன்சிஹா விழும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு நூன்கள் அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்றிருப்பதால் ,அந்த இரண்டாவது நூனை விட்டு சஹாபாக்கள் எழுதவில்லையே ஏன்?
//எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.////
எனினும் சட்ட அடிப்படையில் இரண்டாவது சுக்கூன் உள்ள நூனை விட்டு எழுதி ,அந்த சொல்லை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதற்காக ,ஆரம்பகாலத்து எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட நூனை அரபு நாட்டு குர் ஆன் பிரதியில் ஒரு சிறிய  நூனும்,இந்திய நாட்டு பிரதியில் நூனுக்கு கீழ் கடோஜெரும் போடப்படவில்லையே ஏன் ?

///ஆதாரங்களை அள்ளிப்போடுவது தான் ஆலிம்களுக்கு அழகு என்று கூறியுள்ளீர்கள்.

ஆதாரங்களை அள்ளிப்போட்ட பின்பும் விதண்டாவாதமாக மறுப்பது தான் உங்களைப் போன்றவர்களுக்கு அழகோ!!////
ஆதாரம் கேட்டால் இப்படி இழுத்தடித்து ஆதாரம் தராமல் தேவை இல்லாததை எழுதி கொண்டிருக்கும் உங்களது முறைகேட்டை என்னே வென்று சொல்லுவது !!!
ஆரம்பகால விதிகளுக்கு ஆதாரங்களை நுள்ளி கூட போடாமல் அள்ளிப் போட்டத்தாக அவிழ்ப்பது பச்சை பொய்.உங்களது ஆதாரம் விவாதத்திலே அடித்து நொறுக்கப்பட்டது .நொறுங்கிப் போன கண்ணாடிகள் போன்ற உங்களது ஆதாரத்தை மீண்டும் எப்படி வைக்க முடியும்? அதனாலே குரான் வசனங்களையும் ,பக்ரீத் பற்றிய தேவையற்ற விளக்கத்தையும் எழுதி அலட்டிகொண்டுவருகிரீர்கள் .
இன்சா அல்லாஹ் ,பக்ரீத் ,நடுநிலை ,சவால்விட்டது யார்?இணைவைப்பு பற்றி அடுத்து விவாதிக்கலாம் .முதலில் மேற்கண்டவற்றுக்கு உங்களது பதில்களை வையுங்கள் 



மவ்லவி முஸ்தபா ,நான் இணை வைத்துவிட்டதாக கூறியுள்ளீர்.
திருநெல்வேலி காரனுக்கே அல்வா கொடுப்பது போல தவ்ஹித்காரன் மீதே இணை வைப்பு குற்றம் பரேலவி சுமத்துவது வேடிக்கை .

நீங்கள் எழுதிவருவதை அல்லாஹ்வும் பாக்கிறான் ,நானும் பார்க்கிறேன் .இதற்கு பெயர் இணைவைப்பா? என்னால் நெட் கனக்சன் மற்றும் கம்புய்ட்டர் இல்லாமல் உங்கள் எழுத்துக்களை பார்க்க முடியாது .அல்லா எந்த துனையும் இன்றி பார்க்க முடியும் .பீஜே பகிரங்கமாக பேசுவதையும் ,எழுதுவதையும் மட்டுமே நம்மால் கண்காணிக்க முடியும் .ஆனால் அல்லாஹ்வோ பீஜே வின் மறைவான பொய்களையும் பாவங்களையும் கண்காணிக்க கூடியவன் .நபிமார்கள் தவறு செய்யக் கூடியவர்கள் பீஜே தவறே செய்யாதவரா? என்று கேட்டுள்ளீர்கள் .நபிமார்கள் தவறுகளை இறைவனே கூறுகிறான் ,அதிலிருந்து நமக்கு படிப்பினைகள் பெறுவதற்காக .பீஜேயின் பாவங்களையும் அல்லா இப்பொது சொல்லப் போவதில்லை உங்களைப்போல என்னைப்போல மறுமையிலே அவைகள் பற்றி கேட்பான் .நான் இப்படித்தான் பீஜே வை நம்பிக் கொண்டு இருக்கிறேன் அதற்கு மேலும் நீங்கள் பீஜே உங்களை ,உங்கள் கவனங்களை ஆக்கிரமித்து இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?உங்களுக்கு மட்டுமல்ல ,உங்களை போன்ற பலருக்கும் அவர் பெரும் சவாலாகவே உள்ளார் 



மவ்லவி முஸ்தபா ///அப்படியென்றால் ஈத் என்ற அரபுச் சொல்லுக்கு ‘பொங்கல்’ என்று தான் பொருளா? அதற்குரிய ஆதாரத்தை முன் வையுங்களேன்!//
என்று என்னிடம் கேட்டுள்ளீர்கள் அதற்கு முன்னர் முதலில் பக்ரீத் என்று சொன்ன நீங்கள் ஈதுல் அல்ஹாவை ,மாட்டு பெருநாள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் தாருங்கள் .


///சவாலை ஏற்று உங்கள் அண்ணனுடன் விவாதம் புரிந்தால் விவாதம் செய்தவர்களைபிரபலமடைய கனவு காணக்கூடியவர் என்று குறை கூறுகிறீர்கள்.
/////
மவ்லவி முஸ்தபா பீஜே சவால் விட்டாரா? நீங்கள் சவால் விட்டீர்களா?
அபுஜஹ்ளின் வாரிசுகள் என்ற தலைப்பில் சவால் விட்டு அப்புறம் சவடால் ஆகி குர்ஆனில்
எழுத்து பிழைகள் என்று சவால் மாற்றியதும் யார்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.