அறியாமையையும், இணை வைப்பையும் அறியாத இப்றாஹீம் அவர்களே!
நீங்கள் கூறிய கடன் கதை நல்லாத்தான் இருக்கிறது. எனினும் அக்கதையில் உள்ள கடன்வாங்கியவரின் கதாபாத்திரம் முழுக்க உங்களுக்குத்தான் பொருந்தும்.
-------------------------------------------------------
நான் உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கடும் முயற்சியில் திசை திருப்ப முனைந்துமாட்டுப் பொங்கல், இணை வைப்பு, நடு நிலை ஆகியவற்றைப் பற்றி எழுதுவதாககூறியுள்ளீர்!
இப்றாஹீம் அவர்களே! உங்கள் அண்ணனின் யூதக்கொள்கை தூ.டி. விவாதத்தில் அடித்துநொறுக்கப்பட்டு, நொறுங்கிப்போன கண்ணாடிகள் போன்று ஆனதால் தான் எனது கேள்விக்குமுறையான பதிலளிப்பதை விட்டு விட்டு பக்ரீதுக்கு மாட்டுப் பொங்கல் என்றும், பி.ஜே.மறந்து கூட பொய் கூற முடியாத மனிதர் என்றும், அவரை சுன்னத் ஜமாஅத் உலமாக்கள்மற்றும் பல அமைப்புகள் கண்கொத்தி பாம்பாக கண்கானிக்கிறது என்றும் பி.ஜே. புகழ்பாடியும், நடு நிலை மனிதர் என்று இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்றும், இன்னும் இதுபோன்ற தேவையில்லாத பல விஷயங்களைக் கூறி அசல் விஷயத்தை விட்டும் திசைமாறி தப்பிக்க முயல்கிறீர்.
---------------------------------------------------------------
‘உலகில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லிவிட முடியும். ஆனால் பி.ஜே.பொய் சொல்லிவிட முடியாது! பி.ஜே. என்ன! எங்களது கிளையில் கூட அதன்உறுப்பினர்களை சுன்னத் ஜமாஅத் கண்கானித்து வருகிறது............. கண் கொத்திபாம்பாக பல உலமாக்களும், அமைப்புகளும் கவனித்து வருகின்றன.அப்படியிருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழகமுஸ்லிம்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளீர். அப்படியென்றால்
1 – அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் வாழ்ந்த, வளர்ந்த நபிமார்கள்பாவங்கள் செய்ததாக எப்படி கூறுகிறீர்?
2 – உங்களின் கூற்றுப்பிரகாரம் அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் இருந்தநபிமார்களே பாவங்கள் செய்ய முடியும் என்றும், பாவங்கள் செய்தார்கள் என்றும் கூறுகிறநீங்கள் சுன்னத் ஜமாஅத் மற்றும் பல அமைப்புகளின் கண்கானிப்பில் இருக்கிறபி.ஜே. பொய் சொல்ல முடியாது என்றும், மறந்தும் கூட அவர் பொய் பேசமுடியாது என்றும், உலகில் மற்ற யார் வேண்டுமானாலும் பொய் சொல்ல முடியும்என்றும் கூறியுள்ளீர்களே!
நபிமார்களை விட பி.ஜே. உயர்ந்தவரா?
பி.ஜே.யை விட நபிமார்கள் தாழ்ந்தவர்களா?
பி.ஜே.யின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கூட நபிமார்கள் மீதுவைக்கவில்லையே!?
3 – சுன்னத் ஜமாஅத்தினரின் கண்கானிப்பில் பி.ஜே. இருப்பதால் அவர் மறந்தும் கூட பொய்சொல்ல முடியாது என்கிறீர்!
அப்படியென்றால் அல்லாஹ்வின் விஷேசமான நேரடி கண்கானிப்பில் இருந்த நபிமார்கள்பாவம் செய்ய முடியும்! மனிதக் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. பாவம் செய்ய முடியாதுஎன்ற உங்களது கொள்கை எவ்வளவு ஆபத்தானது என்பது புரியவில்லையா!?
மனிதக் கண்கானிப்பை விட இறைக் கண்கானிப்பு தரம் தாழ்ந்ததா!?
மனிதக் கண்கானிப்பின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூட மனிதனைப்படைத்த அல்லாஹ்வின் மீது வைக்கவில்லையே!? என்று நீங்கள் செய்த இணை வைப்பைஉங்களுக்கு விளக்கினேன்.
இறைவனின் விஷேசக் கண்கானிப்பில் இருந்த நபிமார்களே பாவங்கள் செய்துள்ளனர் என்றுகூறுகிற நீங்கள் மனிதக் கண்கானிப்பில் இருக்கிற பி.ஜே. மறந்து கூட பொய்சொல்லமாட்டார் என்று நீங்கள் கூறியது பச்சை ஷிர்க் அல்லவா!
இதை நான் உங்களுக்கு எடுத்துக் கூறும் பொழுது ஷிர்க்கை உணர்ந்து தவ்பா செய்வதைவிட்டு விட்டு திருநெல்வேலிக்காரனுக்கே அல்வாவா? தவ்ஹீத்காரன் மீதே இணை வைப்புக்குற்றமா? என்று ஆணவமாக பதிலளித்துள்ளீர்.
ஷிர்க்கை ஒழிக்க வந்த இறைத்தூதர் நபி யூனுஸ் (அலை) அவர்கள் இணை கற்பித்துவிட்டதாக உங்கள் அண்ணன் மொழி பெயர்ப்பில் எழுதியுள்ளார். ஷிர்க்கை ஒழிக்க வந்தஇறுதித் தூதர் எங்களது உயிரிலும் மேலான பெருமானார் நபி (ஸல்) அவர்களும் இணைவைத்ததாக உங்கள் அண்ணன் பி.ஜே. கூறியுள்ளார். (நவூதுபில்லாஹ்)
இத்தகைய இழி கொள்கையை பரப்புகின்ற நீங்கள் தவ்ஹீத்காரன்களா? உங்கள் மீது இணைவைப்புக் குற்றத்தைக் கூறினால் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லையா?
நபிமார்கள் இணை வைத்துவிட்டதாக உங்கள் அண்ணன் கூறுவதை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது!
இக்கேடுகெட்ட கொள்கையைவுடைய உங்கள் மீது இணை வைத்துவிட்டதாக கூறினால்உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லையோ???
-----------------------------------------------------------------
ஈத் என்ற அரபுச் சொல்லுக்கு பொங்கல் என்று நீங்கள் பொருள் கொடுத்ததால் அதற்குரியஆதாரத்தை வையுங்களேன்! என்று உங்களிடம் கூறினேன்.
அதற்கு நீங்கள் பதிலளிக்கையில் ‘பக்ரீத் என்று சொன்ன நீங்கள் ஈதுல் அழ்ஹாவைமாட்டு பெருநாள் என்று சொல்வதற்கு ஆதாரம் தாருங்கள் என்று கூறியுள்ளீர்.
இப்றாஹீம் அவர்களே! இதுவரை பக்ரீதுக்கு மாட்டுப் பொங்கல் என்று கூறிவந்தஉங்களிடம் நான் ஈத் என்ற அரபுச் சொல்லுக்கு பொங்கல் என்றுதான் பொருளா?அப்படியென்றால் ஈத் என்றச் சொல்லுக்கு பொங்கல் என்று தான் பொருள் என்பதற்கும்,பக்ரீதுக்கு மாட்டுப் பொங்கல் என்று தான் பொருள் என்பதற்கும் ஆதாரங்களைவையுங்களேன்! என்ற எனது கேள்விக்கு உங்களிடம் ஆதாரம் இல்லாததால் இப்பொழுதுபக்ரீதுக்கு மாட்டு பெருநாள் என்று பொருள் கொடுத்துள்ளீர்கள்.
ஆக மொத்தம் ஈத் என்றச் சொல்லுக்கு பொங்கல் என்று பொருள் இல்லை என்றும்,அவ்வாறு பொருள் கொடுப்பது தவறு என்பதையும் ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி!
அடுத்து ஈதுல் அழ்ஹாவுக்கு பக்ரீத் என்று நான் குறிப்பிட்டதால் அவ்வாறு கூறுவதற்குஇப்பொழுது ஆதாரம் கேட்டுள்ளீர்கள்.
பக்ரீத் என்பதற்கு என்ன பொருள் கொடுக்க வேண்டும் என்பதையும், அதற்குரியவிளக்கத்தையும் ஏற்கனவே நான் கூறியுள்ளேன்.
நான் அவ்வாறு கூறியது தவறு என்றால் ஏன் தவறு என்பதற்குரிய ஆதாரத்தை நீங்கள்வையுங்களேன் பார்ப்போம்.
-------------------------------------------------------------
இப்றாஹீம் அவர்களே! குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று கூறுவது யூதர்களின்கொள்கை என்ற எனது வாதத்திற்கு பி.ஜே. அவர்கள் பாக்கிலானீ, ஆயிஷா (ரலி), இப்னுஅப்பாஸ் (ரலி) ஆகியோரின் கூற்றிலிருந்து ஆதாரம் தந்தார் என்றும், அவற்றை மறுக்கவழியில்லாமல் திணறி ஐயோ! ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றியும் அவதூறுசொல்லிவிட்டார்களே என்று கூச்சலைத்தவிர வேறொன்றும் அதற்கு எதிராக நாங்கள்வைக்கவில்லை என்றும். யூதர்கள் மட்டுமே சொல்லியிருந்தால் தான் அது யூதக்கருத்துக்களாக இருக்கமுடியும்! எனவே பி.ஜே. கொடுத்த ஆதாரங்கள் அனைத்தும் தவறுஎன்று நீங்கள் நிரூபித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளீர்கள் என்றும்கூறியுள்ளீர்கள்.
மேலும் நீங்கள் விவாதத்தில் நிரூபித்தது உண்மையென்றால் அந்த வீடியோவுக்கு இங்கேலிங்க் கொடுங்கள் என்றும் கூறியுள்ளீர்.
இன்ஷா அல்லாஹ் அதற்குரிய லிங்கை கூடிய விரைவில் கொடுக்கிறேன். எதிர்பாருங்கள்.
இன்ஷா அல்லாஹ் பாக்கிலானீ (ரஹ்), ஆயிஷா (ரளி), இப்னு அப்பாஸ் (ரளி) ஆகியோர்கள்விஷயமாக உங்கள் அண்ணன் கூறிய பொய், பித்தலாட்டங்களையும் மிகத்தெளிவானஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன். எதிர்பாருங்கள்.
-------------------------------------------------------------------------
குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்பதற்குரிய விதியை குர்ஆன் இறங்கி 700ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்ட நூலில் (இத்கான்) கூறப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், குர்ஆன் இறங்குவதற்கு முன்புள்ள நூலிலிருந்து விதியைக்கூறிகுர்ஆனில் எழுத்துப்பிழை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் நீங்கள்கூறியதால் உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.
அதை மறுபடியும் ஞாபகமூட்டுகிறேன்.
உங்கள் கூற்றுப்பிரகாரம்
1 - ‘குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இன்றைய காலத்தில்ஒருவர் இருந்து கொண்டு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள குர்ஆனில் எழுத்துப்பிழைகள் இருப்பதாக அவர் வாதிடுவதாக இருந்தால் அவர் குர்ஆனுக்கு முந்தைய காலத்துநூல்களிலிருந்து எழுத்து விதிகளைக் கூறி குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாகவாதிட்டால் தானே அதை ஏற்க வேண்டும்?
உங்கள் அண்ணன் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூலை குறிப்பிட்டுத்தான் குர்ஆனில்பிழை இருப்பதாக வாதம் செய்தாரா?
2 – குர்ஆன் அருளப்பட்ட 700 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூலில் அதன் ஆசிரியர்குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று சொன்னால் ஏற்கமாட்டீர்கள்!
குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்கிற பி.ஜே. குர்ஆனில் எழுத்துப்பிழை இருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்பேன் என்று கூறுகிறீர்களே! இது தான்உங்களின் சரி பார்க்கும் முறையோ! வேறொன்றும் இல்லை. நீங்கள் உங்களது அறிவைமுழுவதுமாக பி.ஜே.யிடம் அடகு வைத்துள்ளதை மென்மேலும் மெய்ப்படுத்துகிறீர்கள்.
3 – குர்ஆன் அருளப்பட்டு 700 ஆண்டுகளுக்குப் பின்பு ஒருவர் ‘குர்ஆனில் இச்சொல் ஏன்இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்று அனுமானமாக சொன்னால் அது விதியாகஇருக்காது’ என்று கூறியுள்ளீர்கள்.
இப்றாஹீம் அவர்களே! நான் உங்கள் அண்ணனுக்கு அளித்த பதில்களில் குறிப்பிட்ட அரபுஅறிஞர்கள் எவரும் அவர்களது அனுமானத்தை வைத்து சட்டம் கூறவில்லை. மாறாக ஏன்அவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்ற காரணத்தையும், சட்டத்தையும் முறையாக வைத்துத்தான் கூறியுள்ளார்கள்.
மேற்கண்ட எனது கேள்விக்கு முறையான பதில் உங்களிடம் இல்லை. எனவேகீழ்கண்டவாறு கூறி நழுவியுள்ளீர்கள்.
குர்ஆனுக்கு பிறகு 700 ஆண்டுகளுக்கு பின்னால் குர்ஆனில் எழுத்துப் பிழைகளுக்குசொல்லப்பட்ட காரணங்களையும், 1400 ஆண்டுகளுக்கு பின்னர் சொல்லப்பட்டகாரணங்களையும் சம அளவில் வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.
அந்தப்பதிலையும் கூட உங்களுக்கு எவ்வாறு சொல்லித்தரப்பட்டுள்ளதோ அவ்வாறேஒப்பித்துள்ளீர்கள். ‘குர்ஆனுக்குப் பிறகு 700 ஆண்டுகளுக்கு பின்னால் குர்ஆனில்எழுத்துப் பிழைகளுக்கு சொல்லப்பட்ட காரணங்களையும்’ என்று கூறியுள்ளீர்கள்.ஆனால் நான் தூ.டி. விவாதத்தில் ஆதாரமாக குறிப்பிட்ட இத்கான் என்ற நூலிலும், மற்றநூல்களிலும் குர்ஆனில் எழுத்துப் பிழைகளுக்கு காரணங்கள் கூறப்படவில்லை. மாறாகஎழுத்துப் பிழைகள் இல்லை என்பதற்குத்தான் காரணங்கள் கூறப்பட்டுள்ளன.
----------------------------------------------------------
2 - ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும்விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும்.இப்பேருண்மையை விரும்பியோ, விரும்பாமலோ உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே.யும்ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரத்தை கூடிய விரைவில் இன்ஷாஅல்லாஹ் வெளியிடுவேன். எதிர்பாருங்கள் என்ற எனது நியாமான வாதத்திற்கு எங்கேவீடியோ ஆதாரம் கேட்டால் வெளியிட்டுவிடுவேனோ என்று பயந்துவிட்டீர்களோ!
எனவே தான் எனது அக்கேள்விக்கு பதிலளிக்காமல் கீழ்கண்டவாறு கூறி நழுவமுயற்சித்துள்ளீர்கள்.
பி.ஜே. உங்களுக்கு ஆதரவாக சொல்லியிருந்தால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள்.பி.ஜே.யிடம் உங்களுக்கு சாதகமான விஷயங்களில் தாங்களே மூளையை அடகுவைத்துள்ளீர்கள் என்று கூறியுள்ளீர்கள்.
இப்றாஹீம் அவர்களே! ஷைத்தான் கூட சில சமயங்களில் உண்மையை கூறியுள்ளான்.எனவே ஷைத்தான் கூட உண்மையை ஏற்றுக் கொண்டான் என்று நான் கூறினால் நான்ஷைத்தானிடம் எனக்கு சாதகமான விஷயங்களில் எனது மூளையை அடகு வைத்ததாகஆகாது. அவ்வாறே நான் எனக்கு சாதகமான விஷயங்களில் உங்கள் அண்ணனிடமும் எனதுமூளையை அடகு வைக்கவில்லை. எனினும் நீங்கள் உங்கள் அறிவை அவரிடம் அடகுவைத்துள்ளதால் அவரின் கூற்றை உங்களுக்குத் தந்தாலாவது உண்மையை ஏற்றுக்கொள்வீர்களா என்பதைப் பார்க்கத்தான் உங்கள் அண்ணனின் கூற்றையும் உங்களுக்குக்கூறினேன்.
----------------------------------------------------------
ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும்விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும் என்ற எனது நியாயமான வாதத்தை மறுக்க நிறைய முயற்சி செய்துள்ளீர் இப்றாஹீம் அவர்களே!
உங்களின் அர்த்தமற்ற வாதத்தை நன்கு கவனியுங்கள்.
தாய் மொழி அறிஞர்களின் கருத்துக்கு மாறாக தக்க ஆதாரங்கள் இருந்தால் அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். தாய் மொழி அறிஞர்களை விட மாரிஸ் புகைல் குர்ஆனின் அரபுச் சொற்களுக்கு அருமையான மொழி பெயர்ப்புகளை அளித்துள்ளார். அதில் அலக் என்ற சொல்லுக்கு அவர் தரும் விளக்கம் பிரபல்யம் என்றுக் கூறி உங்கள் அறியாமையை மென்மேலும் வளர்த்துக் கொள்கிறீர் இப்றாஹீம் அவர்களே!
மேற்கண்ட உங்கள் வாதமும், அதற்கு மாரிஸ் புகைலின் உதாரணமும் தவறானதே!.
மனிதக் கருவியலின் முக்கிய அம்சங்கள் என்னும் நூலை டாக்டர் கைத் மூர் எழுதியுள்ளார்.அந்நூலை அறைகுறையாக படித்த டாக்டர் வில்லியம் கேம்பல் என்ற யூதன் ‘அலக்’ என்றச் சொல்லுக்கு இரத்தக்கட்டி என்று பல அரபி அறிஞர்கள் பொருள் கொடுத்துள்ளனர். ஆனால் கருவியலின் பயணத்தில் இரத்தக்கட்டி என்ற ஒரு நிலை கிடையவே கிடையாது.ஆகையால் இந்தப்பொருள் ஒரு மிகப் பெரும் விஞ்ஞான சிக்கலாக உருவெடுத்துவிடுகின்றது என்றும், கருவியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் (உ+ம். 23/12-14) குர்ஆன் தெளிவாக தவறிழைக்கிறது என்றும் டாக்டர் வில்லியம் கேம்பல் என்ற யூதன் கூறியுள்ளான்.
டாக்டர் யூதனுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த பதிலை நன்கு கவனியுங்கள்.
(23/12-14 வசனத்திலுள்ள) அலக்கத் என்ற சொல்லுக்கு மூன்று பொருள்கள் உள்ளன.
1 –வது : ஒட்டிக்கொண்டிருப்பது என்ற பொருள். இது மிகவும் பொருத்தமான, உகந்த பொருளாகும். ஏனெனில் கற்பப்பையின் நேர் சுவற்றோடு அந்த சிசு ஒட்டிக் கொண்டே இருக்கிறது.
2 –வது : அட்டையைப் போன்றது என்ற பொருள். இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.ஏனெனில் கற்பத்திலுள்ள சிசு தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் பார்ப்பதற்கு அட்டையைப் போன்றே காட்சியளிக்கின்றது. வடிவம், உருவம் போன்றவற்றிலும், வேறு சில கோணங்களிலும் அட்டையைப் போன்றே தோற்றமளிக்கின்றது, இரத்தத்தின் மூலமாகத்தான் வளர்ச்சியடைகின்றது.
3 –வது : இரத்தக்கட்டி என்ற பொருள். டாக்டர் வில்லியம் கேம்பல் இந்தப் பொருளைத்தான் ஆட்சேபிக்கிறார். இங்கே குர்ஆன் தவறிழைத்துவிட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார். ஒரு போதும் குர்ஆன் தவறிழைக்காது. டாக்டர் வில்லியம் கேம்பல் தான் தவறிழைக்கிறார். இன்று மருத்துவ விஞ்ஞானம் இந்த அளவுக்கு அபார வளர்ச்சியை அடைந்துவிட்ட பிறகும், டாக்டர் கெய்த் மூர் கற்ப சிசுவின் ஆரம்ப நிலை இரத்தக்கட்டியைப் போன்ற தோற்றத்திலும்காட்சியளிக்கின்றது என்பதை ஒத்துக்கொள்கிறார். கற்ப சிசுவின் படங்களை முன் வைத்து ஒப்பிட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். மூன்றாவது, நான்காவது வாரத்தில் அலக்காவின் தோற்றம் ஏறக்குறைய இரத்தக்கட்டியைப் போன்றே காடிசியளிக்கின்றதா? இல்லையா?
சுருக்கமாகச் சொல்வதென்றால் : கற்ப சிசுவின் பரிணாம வளர்ச்சி நிலைகளை குர்ஆன் ஒப்பீட்டு வார்த்தைகளைக் கொண்டு விளக்குகின்றது. குர்ஆன் எவ்வாறு விவரிக்கின்றதோ அதைப் போலத்தான் கற்ப சிசு காட்சியளிக்கின்றது. முதல் கட்டத்தில் உண்மையிலேயே பார்ப்பதற்கு அது இரத்தக் கட்டியைப் போல, அட்டையைப் போல, ஒட்டிக் கொண்டிருக்கும் பொருளைப் போலவே காட்சியளிக்கின்றது. பிறகு அலக்கா என்பது முல்கா வாக மாறுவதாக குர்ஆன் குறிப்பிடுகிறது. அதாவது மெல்லப்பட்ட சதைக் கட்டியைப் போல் அது உருமாறுகின்றது. இதுவும் சரியான கருத்தே!
டாக்டர் கெய்த் மூர் பிளாஸ்டிக்கின் ஒரு துண்டை எடுத்து வாயில் நன்றாக மென்று அதை ஒப்பிட்டு நோக்கினார். அலக்கா என்பது முல்காவாக உருமாறிய பிறகும் அதாவது ஏறக்குறைய எட்டரை மாதங்கள் கழிந்த பிறகும் மெல்லப்பட்ட சதைக்கட்டியைப் போன்றே அது காட்சி தருவதாக டாக்டர் கெய்த் மூர் தெரிவிக்கிறார்.
மேற்கண்டவாறு டாக்டர் யூதனுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் பதிலளித்துள்ளார். எனவே இப்றாஹீம் அவர்களே! அலக் என்ற அரபுச் சொல்லுக்கு அரபி அறிஞர்கள் சரியான பொருளைத்தான் கொடுத்துள்ளனர் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். டாக்டர் யூதனை போன்று அரபி அறிஞர்கள் மீதும், குர்ஆன் மீதும் வீண் பழி சுமத்தாதீர்.
குறிப்பு : இப்றாஹீம் அவர்களே! டாக்டர் ஜாகிர் நாயக்கின் கூற்றை நான் கூறியதால் நான் அவரிடம் எனது மூளையை அடகு வைத்ததாக தவறாக விளங்கிக் கொள்ளாதீர். அவர் அலக்கா விற்கு கூறிய மூன்று பொருள்களும் அரபி அகராதியில் இருக்கின்றது.
----------------------------------------------------------------
இப்றாஹீம் அவர்களே! தாய் மொழி அறிஞர்களின் கருத்துக்கு மாறாக தக்க ஆதாரங்கள் இருந்தால் அதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறி விஞ்ஞான விஷயங்களை கூறியுள்ளீர். அதற்கும் கூட தவறான உதாரணத்தையே கூறியுள்ளீர்.
ஆனால் நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது விஞ்ஞானக்கூற்றுக்களை அல்ல. மாறாக அரபு மொழியின் இலக்கனத்தைப் பற்றியும், அதன் எழுத்து விதிகளைப் பற்றியுமாகும்.
ஒரு மொழியின் இலக்கனச் சட்டத்தைப் பற்றியும், அதன் எழுத்து விதிகளைப் பற்றியும் அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பது தானே அறிவுடமையாகும். இது கூடவா உங்களுக்குப் புரியவில்லை.
-------------------------------------------------------------------------
இப்றாஹீம் அவர்களே! ஆதாரங்களை அள்ளிப்போட்ட பின்பும் விதண்டாவாதமாக மறுப்பதுதான் உங்களைப் போன்றவர்களுக்கு அழகோ!! என்ற எனது கேள்விக்கு, ஆதாரம் கேட்டால்இப்படி இழுத்தடித்து ஆதாரம் தராமல் தேவையில்லாததை எழுதிக் கொண்டிருக்கும்உங்களது முறை கேட்டை என்னேவென்று சொல்லுவது? என்று கூறியுள்ளீர்.
தூ.டி. விவாதத்தில் நாங்கள் கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆதாரமின்றி மறுத்தஉங்கள் அண்ணனின் பரிதாபத்திற்குரிய நிலையை என்னேவென்று கூறுவது? உங்கள்அண்ணனின் அச்செயலை அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்றும் உங்களின் மிகபரிதாபத்திற்குரிய நிலையை என்னேவென்று கூறுவது??!
-----------------------------------------------------------
ஆரம்ப காலத்து விதிகளுக்கு ஆதாரங்களை நுள்ளி கூட போடாமல் அள்ளிப் போட்டதாகஅவிழ்ப்பது பச்சை பொய் என்று கூறியுள்ளீர்.
குர்ஆனிலுள்ள பல சொற்கள் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது என்று உங்கள் அண்ணன்புளுகிய பொய்களுக்கு மறுப்பாக ஆரம்ப காலத்து விதிகளையும், அதன் ஆதாரங்களையும்லிஸானுல் அரப், அதபுல் கிதாப், அல்இத்கான், அல்புர்ஹான், அல்முக்னிஃவு, புகாரி,தபரீ போன்ற பல நூற்களிலிருந்து நாங்கள் அள்ளிப்போட்டும், நுள்ளி கூட போடவில்லைஎன்று நீங்களும், உங்கள் அண்ணனும், தம்பிமார்களும் கூறுவதுதான் பச்சைப் பொய்யாகும்.
-----------------------------------------------------------------------
இப்றாஹீம் அவர்களே! நான் பி.ஜே.யிடம் விவாதித்து தமிழகத்தில் பிரபலமடைய கனவுகண்டதாக என் மீது குற்றம் சாட்டினீர்.
பி.ஜே. மற்றவர்களை விவாதத்திற்கு அழைத்தால் அதை அவரின் அறிவாற்றல் எனத.த.ஜ.வினர் புகழாரம் சூட்டுகின்றனர்.
மற்றவர்கள் பி.ஜே.யின் தவறான கொள்கையை விமர்சித்தால் அவர்களைப் பார்த்து எங்கள்அண்ணனிடம் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என்று கேள்வி கேட்கிறார்கள்?
சவாலை ஏற்று உங்கள் அண்ணனுடன் விவாதம் புரிந்தால் விவாதம் செய்தவர்களைபிரபலமடைய கனவு காணக்கூடியவர் என்று குறை கூறுகிறீர்கள்.
இந்தப் போக்கு நீங்கள் முழுமையாக பி.ஜே.வுக்கு அடிமையாகிவிட்டதை காட்டுகிறது என்று நான் கூறினேன்.
அதற்கு நீங்கள் பதிலளிக்கையில்; பி.ஜே. சவால் விட்டாரா? நீங்கள் சவால் விட்டீர்களா? அபூஜஹ்லின் வாரிசுகள் யார்? என்ற தலைப்பில் சவால் விட்டு பின்பு சவடால் ஆகி, குர்ஆனில் எழுத்துப் பிழைகளா? என்று சவாலை மாற்றியது யார்? என்று கேள்வி கேட்டுள்ளீர்.
அபூஜஹ்லின் வாரிசுகள் யார்? என்றத்தலைப்பில் நான் உங்கள் அண்ணனை விவாதத்திற்கு அழைத்ததாக கூறியுள்ளீரே! அதற்குரிய ஆதாரத்தை முன் வையுங்களேன்!
வேறொன்றுமில்லை. உங்களுக்கு என்ன சொல்லித்தரப்படுகிறதோ அதை நன்றாக ஒப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் முழுமையாக பி.ஜே.வுக்கு அடிமையாகிவிட்டதையும் மென்மேலும் மெய்ப்படுத்திக் கொண்டிருக்கிறீர்.
------------------------------------------------------
இப்றாஹீம் அவர்களே! எனக்கும், என்னைப் போன்ற பலருக்கும் பி.ஜே. பெரும் சவாலகவே உள்ளார் என்று கூறியுள்ளீர்.
உண்மையைத்தான் உரைத்துள்ளீர் இப்றாஹீம் அவர்களே! எனக்கும், என்னைப் போன்ற பல சுன்னத் ஜமாஅத் அறிஞர்களுக்கும் யூதக்கைகூலிகள் பெரும் சவாலாகவே உள்ளனர்.
--------------------------------------------------------------------------
நன்ஸக், நுன்ஸிஹா வுக்கு பதிலளிக்கப்பட்ட பிறகும் மீண்டும் மீண்டும் அதைக்கேட்டுள்ளீர்கள். உங்களின் இந்த அறியாமைக்குத்தான் தெளிவாக பதில் அளித்துள்ளேன்.அந்தப் பதில் உங்களுக்குப் புரியவில்லையென்றால் உங்களுக்கு குர்ஆனை பார்த்துஓதத்தெரியவில்லை என்பதை அது உணர்த்துகிறது. எனவே உண்மையை விளங்ககுர்ஆனை அரபியில் ஓதக் கற்றுங்கள்.
-----------------------------------------------------------------
‘யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து அதில்இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.
எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும்என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன்பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ்கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.
என்று ‘யுஹ்யீ (يُحْيِي) க்கு கூறப்பட்ட விளக்கத்தை குர்ஆனை பார்த்து ஓதத்தெரிந்த சிறுபிள்ளைக்கு விளக்கினாலும் அது கூட விளங்கிவிடும். உங்களுக்குவிளங்கவில்லையென்றால் குர்ஆனை பார்த்து ஓதக் கற்றுங்கள் என்று தான் நான்உங்களுக்கு கூறமுடியும்
அரபு நாட்டு குர்ஆன் பிரதியில் “யே ((يக்கு அருகில் ஒரு சிறிய “யே ((يயும், இந்திய நாட்டுகுர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் போடப்பட்டிருக்கும் என்ற சிறிய விஷயத்தைக் கூட விளங்குமளவுக்கு போதிய அரபு ஞானம் இல்லாததால் தான் கீழ் கண்டவாறு நீங்கள் நுஞ்சி விஷயமாக கேள்வி எழுப்பியதற்கு காரணமாகும்.
எனினும் சட்ட அடிப்படையில் இரண்டாவது சுக்கூன் பெற்றுள்ள நூனை விட்டு எழுதி, அந்த சொல்லை சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப காலத்து விதியை நாம் அறியாததாலும், விடப்பட்ட நூனை அரபு நாட்டு குர்ஆன் பிரதியில் ஒரு சிறிய நூனும், இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் கடா ஜேரும் ஏன் போடப்படவில்லை?
இப்றாஹீம் அவர்களே! உமது இக்கேள்வி உங்களின் உச்ச கட்ட அறியாமையைமிகத்தெளிவாக காட்டுகிறது. கொஞ்சமாவது குர்ஆனை அரபியில் ஓதக் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மேற்கண்ட உமது கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானதுஎன்பதை புரிந்து கொள்வீர். இந்த இலட்சனத்தில் நீங்கள் அரபு மொழியின் இலக்கனவிதிகளை சரி பார்க்கப் போகிறீர்களா?
மேற்கண்ட உமது கேள்வி எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நீங்கள் உணர்வதற்கு ஒரு சிறு உதாரணத்தைக் கூறுகிறேன். அப்பொழுதாவது உங்களின் உச்சகட்ட அறியாமையை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா என்று பார்ப்போம்.
தமிழ் மொழியில் ‘மா’ ‘தா’ ‘கா’ போன்றவற்றில் நீட்டல் குறியீடாக துணைக்கால் வருகிறது. ஆனால் ‘ஆ’ என்பதற்கு நீட்டல் குறியீடாக துணைக்கால் ஏன் வரவில்லை? என்றும்,
‘கி’ ‘தி’ ‘மி’ ‘யி’ போன்றவற்றில் நீட்டல் குறியீடாக அவற்றிலுள்ள வளைவின் நுனிப்பகுதியை சுருட்டி ‘கீ’ ‘தீ’ ‘மீ’ ‘யீ’ என்று எழுதப்படுகிறது. ஆனால் ‘இ’என்பதின் நீட்டல் குறியீடாக அதிலுள்ள வளைவின் நுனிப்பகுதியை சுருட்டாமல் ‘ஈ’என்று ஏன் எழுதப்படுகிறது? என்றும் தமிழ் மொழி தெரியாதவன் கேள்வி எழுப்பி‘ஆ’ என்பதும், ‘ஈ’ என்பதும் பிழையாக எழுதப்பட்டுள்ளது என்று குறை கூறுவது போல் உள்ளது உங்களின் மேற்கண்ட கேள்வி.
குர்ஆனை அரபி மொழியில் பார்த்துக் கூட ஓதத்தெரியாத நிலையில் இருந்து கொண்டுகுர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருக்கிறது என்று கூறி நீங்கள் கண் மூடித்தனமாகபி.ஜே.யை பின்பற்றுகிறீர்கள் என்று கூறுவதை விட அவருக்கு அடிமையாகவே நீங்கள்ஆகிவிட்டீர்கள் என்பதைத்தான் உங்களின் மேற்படி கேள்வியும், நிலையும் உணர்த்துகிறது.
--------------------------------------------------------
அல்லாஹ் நன்மைக்கு உதவி செய்வானாக! ஆமீன்
முஸ்தபாவுக்கு பதில்கள்
மவ்லவி முஸ்தபா ,அவர்களுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .முதலில் எனது கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் .பின்னர் அதனால் வந்த இடை கேள்விகளை பார்ப்போம் .
////மேலும் நீங்கள் விவாதத்தில் நிரூபித்தது உண்மையென்றால் அந்த வீடியோவுக்கு இங்கே லிங்க் கொடுங்கள் என்றும் கூறியுள்ளீர்.
இன்ஷா அல்லாஹ் அதற்குரிய லிங்கை கூடிய விரைவில் கொடுக்கிறேன். எதிர்பாருங்கள்.
இன்ஷா அல்லாஹ் பாக்கிலானீ (ரஹ்), ஆயிஷா (ரளி), இப்னு அப்பாஸ் (ரளி) ஆகியோர்கள் விஷயமாக உங்கள் அண்ணன் கூறிய பொய், பித்தலாட்டங்களையும் மிகத்தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன். எதிர்பாருங்கள். ///
இவ்வளவு பெரிய கட்டுரை எழுதியவர்க்கு லிங்க் கொடுக்க முடியாதா?ஏற்கனவே அந்தவிவாதத்தை இந்த வலைபதிவில் வெளியிட்டுள்ளார் .அதை பார்த்து லிங்க் கொடுப்பதற்கு எவ்வளவு நேரமாகும்? இருந்தால்தானே தருவதற்கு?
விரைவில் எதிர்பாருங்கள் நான் நிருபிக்கிறேன் ,இதென்ன சினிமாக்காரன் ஸ்டையிலில் ,அவனாவது ட்ரெய்லர் போட்டுத்தான் விரைவில் எதிர்பாருங்கள் என்பான் .விவாதம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது .நிருபித்ததை விரைவில் எதிர்பார்க்க வேண்டுமாம் ..மிகத் தெளிவான ஆதரங்களுடன் நிருபிக்கிறேன் என்று கூறியுள்ளதிலிருந்து ,இதுவரை நிருபிக்கவில்லை என்றுதானே அர்த்தம் .பிறகு நான் சொன்னது எப்படி பொய்யாகும் ?இதை உங்களது பதில் சொல்லியிருந்தாலாவது உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளலாம் ..அப்போது அதற்கு பதில் சொல்லாமல் மவுனம் சாதித்து விட்டு நான் அந்த மவுனத்தை கிளறிய பிறகே ,நிருபிக்கிறேன் என்று சொல்லியுள்ளீர்கள் .இதுவரை நிருபிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டதற்கு மிகுந்த நன்றிகள் .அல்ஹம்துலில்லாஹ் .
அடுத்து யுஹ்யீ என்ற சொல்லை பற்றி நான் கேட்டதற்கு தமிழ் இலக்கணத்தை காட்டி ,உச்சகட்ட அறியாமை ,அரபி வாசிக்க கூட தெரியாது சிறு பிள்ளைக் கூட தெரிந்த விஷயம் என்று அதிகமாகவே அலட்டியுள்ளார் .அரபு இலக்கணம் வேறு தமிழ் இலக்கணம் வேறு .மா 'என்ற உயிர் மெய் நெடிலில் உயிர் நெடில் இல்லாமல் வராது .ம் +ஆ =மா .அதாவது ஆ 'வின் நெடில் இல்லாமல் மா வராது .[ஆவின் பால் இல்லாமல் பால்மாவு வராது என்று நினைத்துக் கொள்ளவேண்டாம் ].."ஆ'வை வைத்துதான் 'மா' வைத்தவிர :'மா'வை வைத்து 'ஆ 'அல்ல .ஆதலின் நீங்கள் கேட்பது போல மா'வுக்குள துணை எழுத்து ஆவுக்கு ஏன் வரவில்லை என்று யாரும் கேட்பதில்லை .நான் கேட்டிருப்பதற்கு பொருத்தமில்லாத உதாரணத்தை கொடுத்து தப்பிக்கவே முயற்சி செய்கிறீர்கள் .
/
///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.
எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில்சிறிய “யே ((يயும் போடப்பட்டிருக்கும் ////
சஹாபாக்கள் ஆரம்பகால விதிகளின்படி ஒரு யெயை விட்டு எழுதியுள்ளதை ,எதை வைத்து கண்டு பிடித்தார்கள்? ஓசையை வைத்துதான் ,யுஹ்யீ என்ற சொல்லில் நெடில் வருகிறது ,எனினும் சட்ட அடிப்படையில் ஒரு யே "விடப்பட்டிருக்கும் .எனவே விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்கவேண்டும் என்பதற்காகவும் ,ஆரம்ப கால் எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட 'யே 'யை யே((ي க்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில்ஒரு சிறிய “யே ((يயும் போடப்பட்டிருக்கும் .அது போலவே ,நன்சக் 'என்ற சொல்லிலும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு நூன்கள் அடுத்து அடுத்து வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்றிருப்பதால் அதை சஹாபாக்கள் ஏன் விட்டுவிடவில்லை.? அப்படி விதியிருந்தால் இங்கேயும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு எழுத்துக்கள் வந்து இரண்டாவது எழுத்து சுக்கூன் பெற்றிருப்பதால் ஒரு நூனை விட்டிருக்க வேண்டும் .அப்படி அவர்கள் விட்டிருந்தாலும் நன்சக் என்றே உச்சரித்து வந்திருப்பார்கள் ...
ஆக நன்சக் என்றே ஓதி வந்திருப்பதால் அந்த விடுபட்ட" நூன் " எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும் ஆரம்பகலாத்து எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட நூன் ஐ ن அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் நூன் க்கு அருகில் அரபு நாட்டு குர்ஆன் பிரதியில் ஒரு சிறிய நூன் ஐ ஏன் போடவில்லை?
இதுதான் எனது கேள்வி .அதற்கு பதில் சொல்லுங்கள் .
இதில் நெடிலுக்காக 'யே " உள்ளதா என்பதல்ல .ஆரம்பகாலத்து விதிகளின்படி ஒரு யே விடப்பட்டிருக்கிறது .அதை உச்சரிப்பை வைத்து அறிந்து ,ஒரு சிறிய யே போட்டுள்ளனர்..அதை போலவே ,நன்சக் ,நுன்சிஹா விலும் ஆரம்பகாலத்து விதிகளின்படி ஒரு நூன் விடப்பட்டிருக்க வேண்டும் .பின்னர் உச்சரிப்பை வைத்து அறிந்து ஒரு சிறிய நூன் போடப்பட்டிருக்க வேண்டும் .அவ்வாறு போடப்படவில்லையே ஏன் என்று கேட்டால் ,உங்களது அரபி மேதாவித்தனத்தையும் தமிழ் அறியாமையும் வைத்து பூச்சாண்டி காட்டுகிறீர்களா?
இவற்றையே முன்னுரிமை கொடுத்து பதில் சொல்லுங்கள் உங்களது மற்ற விமர்சானங்களை தொடர்கிறேன் .
மவ்லவி சாப் ////நீங்கள் கூறிய கடன் கதை நல்லாத்தான் இருக்கிறது. எனினும் அக்கதையில் உள்ள கடன் வாங்கியவரின் கதாபாத்திரம் முழுக்க உங்களுக்குத்தான் பொருந்தும்.////
கடன் வாங்கியவரின் கதாபாத்திரம் உங்களுக்கே உரியது ,உங்களுக்கே பொருந்தும் .
கடன் கொடுத்தவர் கடன் கேட்டார்
அதைப்போலவே ,நான் உங்களிடம் மார்க்க சம்பந்த கேள்விகளை கேட்டேன் .
கடன் வாங்கியவர் பதில் சொல்லவில்லை .
நீங்களும் 2 மாதங்களாக பதில் சொல்லவில்லை .
கடன் கொடுத்தவர் ,நான் கடனை கேட்டுட்டே இருக்கிறேன் ,நீங்கள் வாய் திறக்க மறுக்கிறீர்கள் ?என்று கேட்டார் .அதற்கு அவர் நீங்கள் சொல்லுவது காதில் விழவில்லை என்று சொன்னார் .
நீங்களும் அவரை போலவே பக்ரீத் லீவுக்கு ஊருக்கு போய்விட்டேன் என்றீர்கள் .
கடன் கொடுத்தவர் ,காதில் விழவில்லை என்றால் செவிடா என்று கேட்டார் .
நானும் பக்ரீத் லீவு என்றால் மாட்டு பெருநாளா/ என்று கேட்டேன் .
ஐயோ ,என்னை செவிடு என்று சொல்லிவிட்டார் ,அதை நிறுபித்து காட்டவேண்டும் .இல்லையெனில் கடன் திருப்பி கொடுக்க மாட்டேன் என்றார் .
நீங்களும் மாட்டு பெருநாள் பற்றியே விளக்கம் கேட்டு வருகிறீர்கள் ,அல் இத்கான் பற்றிய விளக்கம்தர மறுத்து வருகிறீர்கள்
இப்போது யாருக்கு பொருந்தும் என்று பாருங்கள்.
////ஷிர்க்கை ஒழிக்க வந்த இறைத்தூதர் நபி யூனுஸ் (அலை) அவர்கள் இணை கற்பித்து விட்டதாக உங்கள் அண்ணன் மொழி பெயர்ப்பில் எழுதியுள்ளார். ஷிர்க்கை ஒழிக்க வந்த இறுதித் தூதர் எங்களது உயிரிலும் மேலான பெருமானார் நபி (ஸல்) அவர்களும் இணை வைத்ததாக உங்கள் அண்ணன் பி.ஜே. கூறியுள்ளார். (நவூதுபில்லாஹ்)/////இந்த குற்றச்சாட்டுகளை பக்கங்களுடன் கூறுவதே நல்ல பண்பு .இணை வைத்ததை சொல்லுங்கள் .புரட்டாதீர்கள் .
இணைவைப்பு பற்றி நான் இவ்வாறு பதில் சொல்லியிருந்தேன் ,இவற்றுக்கு பதில் சொல்லவில்லையே ஏன்?
நீங்கள் எழுதிவருவதை அல்லாஹ்வும் பாக்கிறான் ,நானும் பார்க்கிறேன் .இதற்கு பெயர் இணைவைப்பா? என்னால் நெட் கனக்சன் மற்றும் கம்புய்ட்டர் இல்லாமல் உங்கள் எழுத்துக்களை பார்க்க முடியாது .அல்லாஹ் எந்த துணையும் இன்றி பார்க்க முடியும் .பீஜே பகிரங்கமாக பேசுவதையும் ,எழுதுவதையும் மட்டுமே நம்மால் கண்காணிக்க முடியும் .ஆனால் அல்லாஹ்வோ பீஜே வின் மறைவான பொய்களையும் பாவங்களையும் கண்காணிக்க கூடியவன் .நபிமார்கள் தவறு செய்யக் கூடியவர்கள் பீஜே தவறே செய்யாதவரா? என்று கேட்டுள்ளீர்கள் .நபிமார்கள் தவறுகளை இறைவனே கூறுகிறான் ,அதிலிருந்து நமக்கு படிப்பினைகள் பெறுவதற்காக .பீஜேயின் பாவங்களையும் அல்லாஹ் இப்பொது சொல்லப் போவதில்லை உங்களைப்போல என்னைப்போல மறுமையிலே அவைகள் பற்றி அவரிடம் கேட்பான் .நான் இப்படித்தான் பீஜே வை நம்பிக் கொண்டு இருக்கிறேன் அதற்கு மேலும் நீங்கள் பீஜே உங்களை ,உங்கள் கவனங்களை ஆக்கிரமித்து இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?உங்களுக்கு மட்டுமல்ல ,உங்களை போன்ற பலருக்கும் அவர் பெரும் சவாலாகவே உள்ளார் .
எனது மீது இணைவைப்பு குற்றம் சொன்னீர்கள் .அதற்கு நான் மேல்கண்ட பதிலை சொல்லியுள்ளேன் அந்த பதிலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் .அல்லது அத்துடன் முடித்திருக்க வேண்டும்..ஆனால் மேலும் பீஜே மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள் .அந்த குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்தோடு வைக்கவில்லை .

பீஜே போன்றவர்களுக்கே கிளிபிள்ளை போல பாடம் எடுக்கும் தாங்கள் சாதாரண மக்கள் மற்றும் பிற மத மக்கள் சொல்லுவது போல பக்ரீத் என்று கூறியதை சுட்டிகாட்டியதை பிடித்து தொங்கும் மவ்லவி சாப், நீங்கள் குர் ஆன் ,ஹதிதில் சொல்லபட்டது போல சொல்லாமல் ,இல்லை அடைமொழி என்றால் அரபு நாட்டுபழக்கப்படி ஒட்டகமும் ஆடுகளும் அறுத்து வருகையில் மாட்டு பெருநாள் என்று நீங்கள் சொல்லியது நீங்கள் குர்ஆனையும் ஹதித்களையும் பின்பற்றவில்லை ,வட இந்திய அஜமிகள் எழுதிய ரத்துள் முக்தார் ,ஆலம்கீரி களை பின்பற்றுவது போல வட இந்தியாவில் அதிக மாடுகள் அறுப்பதால் பழக்கத்திற்கு வந்த மாட்டு பெருநாள் என்று சொல்லியுள்ளீர்களே ,என்று குத்தலாக கேட்டுள்ளேன் .
மாட்டு பொங்கல் என்பது மாட்டு பெருநாள் அல்ல என்று அறிவை கசக்கி பிழிந்து உள்ளீர்கள் . தை பொங்கலை ,தமிழர் திருநாள் என்று சொல்லுவதை அறிய மாட்டீர்களா? அவர்களிடம் புது அரிசி பொங்கும் நாளை பொங்கல் என்று சொல்லாமல் திருநாள் என்று சொல்லுவது சரியா என்று கேட்பீர்களா? ஆதலின் மாட்டு பொங்கலை மாட்டு திருநாள் என்று தாரளமாக சொல்லலாம் .மேலும் மாட்டுக்காக யாரும் பொங்க மாட்டார்கள் .மாடு தின்னும் புண்ணாக்கையும் பருத்தி விதைகளையும் யாரும் பொங்க மாட்டர்கள் .ஆதலால மாட்டு பொங்கல் என்பதைவிட மாட்டு பெருநாள் என்று சொல்லுவதே பொருந்தும் .இப்ராஹிம் நபி [அலை] அவர்களின் தியாகத்தை நினைவு கூறாமல்,மாட்டுக்கறி வாசனையை நினைவு கூர்ந்து மாட்டு பெருநாள் என்பதை விட மாட்டுக்கறி பிரியாணியை பொங்கும் நாளை மாட்டு பொங்கல் என்று சொன்னால் உங்களை போன்றவர்களுக்கு என்ன பிழை?
மவ்லவி அவர்களே ////1 - ‘குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இன்றைய காலத்தில் ஒருவர் இருந்து கொண்டு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக அவர் வாதிடுவதாக இருந்தால் அவர் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூல்களிலிருந்து எழுத்து விதிகளைக் கூறி குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக வாதிட்டால் தானே அதை ஏற்க வேண்டும்?
அடுத்து ,
///உங்கள் அண்ணன் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூலை குறிப்பிட்டுத்தான் குர்ஆனில் பிழை இருப்பதாக வாதம் செய்தாரா?/////
1400 ஆண்டுகளுக்கு முன்னரோ ,பின்னரோ அது போன்ற எழுத்து விதிகள் இருந்தால் அல்லவா அந்த விதிகளை கூறி விளக்க முடியும் / ஆரம்பகால விதிகள் இவ்வாறு இருந்தது அதன்படி பீஜே வின் கூற்று தவறு என்று நீங்கள் வாதிடுகையில் அந்த விதிகளை காட்டவேண்டியது உங்களது பொறுப்பல்லவா?
ஓசை வடிவில் குரான் பாதுகாக்கப் பட்டுள்ளது .அந்த ஓசைக்கு மாற்றமாக எழுத்து பிழைகள் 19 உள்ளதால் அந்த இடத்தில் ஓசை கேற்றவாறு அந்த பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது என்று பீஜே கூறி இருக்கிறார் .ஆனால் நீங்களோ அது பிழை இல்லை ஆரம்பகால விதிகளின்படியே எழுதப்பட்டுள்ளது .அது நமக்கு தெரியாததால் விதிகளின் அடிப்படையில் விடப்பட்ட எழுத்துக்கள் அங்கு எழுதப்பட்டுள்ளது என்று கூறி வருகிறீர்கள் .அப்படி என்றால் இப்போது யார் ஆரம்பகால விதிகளுக்கு ஆதாரம் தரவேண்டும் ?
குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்கிற பி.ஜே. குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்பேன் என்று கூறுகிறீர்களே! இது தான் உங்களின் சரி பார்க்கும் முறையோ! வேறொன்றும் இல்லை. நீங்கள் உங்களது அறிவை முழுவதுமாக பி.ஜே.யிடம் அடகு வைத்துள்ளதை மென்மேலும் மெய்ப்படுத்துகிறீர்கள்.////
700 ஆண்டுகளுக்கு முன்னாள் அல்ல 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் சொலப்பட்டாலும் அதற்குரிய ஆதாரம் தரப்படவேண்டும் எனபதே சொல்லுங்கள்
///அந்தப்பதிலையும் கூட உங்களுக்கு எவ்வாறு சொல்லித்தரப்பட்டுள்ளதோ அவ்வாறே ஒப்பித்துள்ளீர்கள். ‘////
எனக்கு சொல்லித்தரப்படவில்லை என்பது உண்மை .அதை நீங்கள் மறுக்க முடியுமா? நன் விவாதத்தை கேட்டு எழுதுகிறேனே தவிர இப்படி எழுதுங்கள் என்று எனக்கு யாரும் சொல்லிதரவில்லை .மேலும் இது தலைமைக்கு தெரியவும் செய்யாது .
//இப்றாஹீம் அவர்களே! ஷைத்தான் கூட சில சமயங்களில் உண்மையை கூறியுள்ளான். எனவே ஷைத்தான் கூட உண்மையை ஏற்றுக் கொண்டான் என்று நான் கூறினால் நான் ஷைத்தானிடம் எனக்கு சாதகமான விஷயங்களில் எனது மூளையை அடகு வைத்ததாக ஆகாது. அவ்வாறே நான் எனக்கு சாதகமான விஷயங்களில் உங்கள் அண்ணனிடமும் எனது மூளையை அடகு வைக்கவில்லை. ////
ஆனால் சைத்தான் யார்?
வரதட்சணை வாங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாத்திஹா ஓதி பிச்சை பெறுபவன் பொய்யனா?
அல்லது அதை கண்டித்து பல் கூட்டங்களில் உரையாற்றி அதை ஒழிக்க பாடுபட்டவன் பொய்யனா?
அல்லாஹ்வின் இல்லத்திலே ,நடைபெறும் வரதட்சனை திருமணத்தில் கலந்து கொண்டு பெண்ணிடம் ஆண் வாங்கிய பெருந்தொகையை மறைத்து ,ஆண் பெண்ணுக்கு குறிப்பிட்ட குறைந்த மஹரை கொடுத்ததாக பச்சை பொய்யை பகிரங்கமாக சபையோர் சாட்சியாக வக்கீலாக இருந்து எழுதுகிறாரே அவர் பொய்யனா?
இல்லை அதை கண்டித்து பல் கூட்டங்கள் நடத்தி அடி ,உதய் வாங்கியவர் பொய்யனா?
திருமண வீட்டில் நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைக்கு மாற்றமாக பெண் வீட்டில் வயிறு புடைக்க சாப்பிட்டு ,பொய் நிக்காஹ் எழுதியதற்கு கைமுடிப்பும் வாங்கி வருகிறவன் பொய்யனா? இல்லை ,அதை ஒழிக்க பாடுபடுபவன் பொய்யனா?
மையத் வீட்டிலும் விருந்துண்டு அல்பாத்திஹா ஓதி கைமுடிப்பும் பெறுபவன் சைத்தானாக தெரியவில்லையா?
உலாமா என்றாலே அதற்குரிய தோற்றத்துடன் ,மவ்லிது ,பாத்திகா ,விருந்து ,ஜும்மாவில் அரபி உடை ,வருடந்தோறும் ஓதும் வழக்கமான சும்மா உரை ,மீலாது விழாவுக்கு ஆளுக்கேற்றதொகை ,கொஞ்சம் நன்றாக பேசிவிட்டால் அவருக்கு பட்டங்கள் பல ,இதைத்தவிர நபிமார்களின் வாரிசுகள் உலமாக்கள் என்று சொல்லும் அளவில் என்ன சாதித்தீர்கள்?
நபி [ஸல்] அவர்கள் ஒருநாள் கூட வயிறு நிறைய சாப்பிட்டதில்லை ,ஆனால் இன்றைய பாத்திகா உலமக்களோ ஒரு நாள் கூட வயிறு குறைய சாப்பிட்டதில்லை ,.
ஆனால் மார்க்கத்தை சொன்னதற்காக நபி[ஸல்] அவர்கள் வழியில் அடி,உதை ,வெட்டு ,குத்து வாங்கிய பீஜெவைத்தவிரஒரு உலமாவை காட்டுங்கள் . .
தொலிக்கொடு தங்களை விட பல மடங்கு செல்வாக்கு உடையவர் பீஜே .ஆனால் தொகொ.தங்கள் அவர்களை பார்க்க கூட முடியாதாமே ,ஆனால பீஜே அவர்கள் ,மாநாட்டில் மக்களோடு மக்களாகவே பழக கூடியவர் ,இரவிலே பந்தலிலே படுத்துகொள்ளக் கூடியவர் .
மார்க்க விசயமாக பீஜே அவர்கள் சொன்ன பொய்களை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளேன் .இதுவரை பதில் தர இயலாமல் நொண்டி கதைகளை பேசி கொண்டு இருக்கிறீர்கள் .இதில் நொண்டியை பிடித்து கொண்டு பதில் சொல்லுவீர்கள் .பீஜே வின் பொய்களை சொல்ல மறந்து விடுவீர்கள்
முஸ்தபாமவ்லவி ///ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும் விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும் என்ற எனது நியாயமான வாதத்தை மறுக்க நிறைய முயற்சி செய்துள்ளீர்///
ஜாகிர் நாயக் அரபு தாய் மொழி கொண்டவரா?
////ஒரு மொழியின் இலக்கனச் சட்டத்தைப் பற்றியும், அதன் எழுத்து விதிகளைப் பற்றியும் அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பது தானே அறிவுடமையாகும். இது கூடவா உங்களுக்குப் புரியவில்லை.///
அந்த விதிகளைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன் .அல்இத்கானில் சொல்லப்பட்ட விதிகளை கேட்டால் இதுவரை சொல்லாமல் அதற்கு அப்பாற்பட்டு எங்கெல்லாமோ வீதி உலா வருகிறீர் தாய் மொழி அறிஞர் சொன்ன விதிகளை சொல்லுங்கள் .
///குர்ஆனிலுள்ள பல சொற்கள் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது என்று உங்கள் அண்ணன் புளுகிய பொய்களுக்கு மறுப்பாக ஆரம்ப காலத்து விதிகளையும், அதன் ஆதாரங்களையும் லிஸானுல் அரப், அதபுல் கிதாப், அல்இத்கான், அல்புர்ஹான், அல்முக்னிஃவு, புகாரி, தபரீ போன்ற பல நூற்களிலிருந்து நாங்கள் அள்ளிப்போட்டும், நுள்ளி கூட போடவில்லை என்று நீங்களும், உங்கள் அண்ணனும், தம்பிமார்களும் கூறுவதுதான் பச்சைப் பொய்யாகும்.///
நான் இதை கேட்கவில்லை .நான் கேட்டது அல் இத்கானில் உள்ள விதிகளை சொல்லுங்கள் .
லிசானுல் அரப் வில் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு எழுத்துக்கள் அடுத்து வந்தாலும் அதில் இரண்டாவது எழுத்து சுக்கூன் பெற்றாலும் இரண்டு எழுத்துக்களையும் எழுதவேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது என்று நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.