- செங்கொடி, on December18, 2010 at 10:14 மாலை said:நண்பர் இப்ராஹிம்,மீண்டும் மீண்டும் உங்களை குற்றம்சாட்ட விரும்பவில்லை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் குற்றம்சாட்டிய பிறகும்கூட நீங்கள் அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதால்தான். என்னால் சுட்டிக்காட்ட மட்டும்தான் முடியும் அதைத்தான் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் வழமையிலேயே தொடர்வீர்களென்றால், இது ஒரு பொதுத்தளம் என்பது உங்கள் நினைவுக்கு, அவ்வளவு தான். என்னுடைய வாதத்தை நான் வலுவாகத்தான் வைத்திருக்கிறேன். அதற்கு உங்கள் பதில்களே சாட்சி.ஒருபக்கம் நான் வலுவான வாதங்களையும், மறுபக்கம் அதற்கு நழுவலான பதில்களும் என்றால் வலுவான வாதம் பயனற்றதாய் ஆகிவிடக் கூடாதல்லவா? அதனாலேயே குற்றச்சாட்டுகள் எழுகின்றன.முதலில் ஒரு வித்தியாசத்தை சுட்டிக்காட்ட வேண்டும். தொடக்க கால மனிதகுல உறவுகள், சமூக வளர்ச்சி குறித்து பலரும் ஆய்வு செய்து தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அவைகள் பல்வேறு தலைப்புகளில் நூல்களாக இருக்கின்றன. கல்லூரிகளில் பாடத்திட்டங்களாக இருக்கின்றன. இவைகளிலிருந்து நான் கூறினால் அதை \\பண்டைக்கால ஆய்வு நூல்களே ஆதாரம் என்று கற்பனை ஆதாரம் தந்துள்ளீர்கள் ஆய்வுகள் அனைத்தும் உண்மைகள் அல்ல//என்று கூறியுள்ளீர்கள். ஆனால், ஹதீஸ்களைத்தவிர வேறு எதிலும் இல்லாத ஆதாரமற்ற கதைகளை கூறும்போது \\இங்கே ஒரு வரலாற்று நிகழ்வை பாருங்கள்// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எது கற்பனைக் காவியம்? எது வரலாறு? பார்ப்பனீயர்கள் புராணத்தை வரலாறாகவும், வரலாற்றை புராணமாகவும் சித்தரிப்பதில் வல்லவர்கள். நீங்களுமா?என்னுடைய கூற்றுக்கு நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க முடியும். ஆனால் அவற்றை நீங்கள் கம்யூனிச நூல்கள் என்று எளிதாக ஒதுக்கிவிடுவீர்கள் என்பதால்தான் பண்டைய சமூக வளர்ச்சி குறித்த எந்த ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் உங்களுக்கு பரிசீலித்துப் பார்ப்பதற்கோ, ஒன்றை தேடி அறிந்து கொள்வதற்கோ, எது சரி என ஆய்வு செய்வதற்கோ துளியும் முயற்சியோ விருப்பமோ கொள்வதில்லை. ஆதாரம் என்ன என்று கேட்பதெல்லாம் பதில் சொல்வதினின்று நழுவும் ஒரு உத்தி. அதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலும் சாட்சியாக இருக்கிறது.உங்கள் பதிலைப் பார்ப்போம். பாலியல் குற்றங்கள் தனியுடமையில் நிலை கொண்டிருக்கின்றன என்றும், அதனால் தான் ஒருவனுக்கு இன்னொரு பெண்ணுக்கு என்ன துன்பங்கள் நேர்ந்தால் என்ன? தனக்கு சுகம் கிடைத்தால் போதும் எனும் ஆணாதிக்க சிந்தனை தோன்றி பாலியல் குற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை விளக்கி; இந்த தனியுடமையும் ஆணாதிக்கமும் இன்னமும் நிலை கொண்டிருப்பதால்தான் என்ன சட்டம் போட்டு எவ்வளவு காலம் நடைமுறைப்படுத்தியிருந்தாலும் பாலியல் குற்றங்களை களைய முடியவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தேன். இதற்கு பதில் சொல்லப் புகுந்த நீங்கள் கூறியிருந்ததென்ன? \\நேற்றைய சோஷலிச ரஷ்யாவில் ஒரு பெண் தலைவரை கூட உருவாக்க முடிய வில்லை.இன்றுவரை உலக பிரபல்ய பெண்களில் ஒருவர் கூட கம்யுனிஸ்ட்களை காணோம்.என்பது வேறு விஷயம்// \\ரஷ்யாவில் இந்த பழைய கலாச்சாரம் பரிசிலனையில் இருந்ததா? இல்லை எனின் அதை நடைமுறை படுத்து முன் சோசலிசம் படுத்து கொண்டதா?// \\உங்கள் ரஷ்யாவில் சோதனைக்காக ஸ்டாலின்.லெனின்.மாவோ போல ஒரு பெண் தலைவரை உலகுக்கு காட்டமுடியவில்லை.எத்தனை பேர் பொலிட் பீரோவில் பெண்கள் அங்கத்தினராக இருந்தார்கள்?அதில் அதிகாரமிக்கவராக ,ஒளிர் விட்டவராக யாரும் உண்டா?// \\உங்களது ம.க.இ..க வுக்கு கிளைகள் தோறும், மாவட்டந்தோறும், மாநிலங்கள்தோறும் பெண்களை தலைவராக்கி பொதுவுடமைக்கு முன்மாதிரியாக வழிகாட்டுங்களேன்.நீங்கள் இப்போதே ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டில் சோசலிசத்தையும் பத்து பில்லியன் ஆண்டில் கம்யுநிசத்தையும் கொண்டுவர முடியும்// \\பழைய பல்லவியைபாடாமல் புது பல்லவியை ம,க,இ,க வில் தொடங்குங்கள்.பாலியல் குற்றத்திற்கு தனியுடமை தான் காரணம் என்றால் உங்களது சோஷலிச தலைவர்கள் பாலியர் குற்றம் செய்தது இல்லையா?இல்லை அங்கே அதிகார வர்க்கத்தில் பெண்கள் பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்]// \\ஸ்டாலின்,லெனின்,போன்ற அதிபதிகளும் பொலிட்பீரோ உறுப்பினர்களும் அனுபவித்த இன்பங்களை ரஷ்ய மக்கள் அனைவரும் அனுபவித்தார்களா? மக்கள் அனுபவித்த துன்பங்களை ஸ்டாலின்.லெனின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் அனைவரும் அனுபவித்தார்களா?// என்ன இது? மெய்யாகவே சோசலிச காலத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தார்களா என்பதை அறிய விரும்பியிருந்தால் அதற்கு ஒற்றைக்கேள்வி போதுமே. ஆனால் உங்களின் நோக்கம் சோசலிச கால ரஷ்யாவையும் மகஇக வையும் இழிவு படுத்தவேண்டும் என்பதாகத்தான் தெரிகிறது. இதே உத்தியைத்தான் கடந்த விவாதத்தில் கலந்து கொண்டவரும் கடைப்பிடித்தார். கேள்விகளுக்கு பதிலோ மறுப்போ அளிக்கமுடியாதபோது இப்படி தேவையில்லாததைப் பேசினால் ஒன்று நான் கோபபடுவேன் அல்லது அவைகளுக்கு விளக்கமளிப்பேன். இரண்டில் எதைச் செய்தாலும் பதில் கூறுவதிலிருந்து நழுவிக்கொள்ளலாம். உங்களின் எதிர்பார்ப்பும் இதுதானா? ஆனால் நான் கோபப்படவும் போவதில்லை, சோவியத்தில் அமைச்சராக இருந்த தோழர் குருப்ஸ்கயா உட்பட யாரைப் பற்றியும் உங்களுக்கு நான் சொல்லவும் போவதில்லை. ஏனென்றால் அதை தெரிந்து கொள்வது உங்களின் நோக்கமுமில்லை.சோவியத் ரஷ்யாவிலோ, மகஇக விலோ எத்தனை பெண் தலைவர்கள் இருந்தார்கள் என்பதற்கும் பாலியல் குற்றங்களின் காரணத்திற்கும் அதை தடுப்பதற்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் விளக்க வேண்டும்? ஒரு வேளை சோசலிச காலத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டிருந்ததா என்பது உங்கள் ஐயமாக இருந்தால்; ஆம். வழங்கப்பட்டிருந்தது. பெண் என்ற காரணத்தினால் எந்த வாய்ப்பும் அங்கு மறுக்கப்படவில்லை, தொழில்துறை தொடங்கி நிர்வாகம் வரை அனைத்திலும் பெண்கள் பங்கு கொண்டிருந்தனர். இன்னும் சாதாரண பெண்களுக்கு குடும்பச்சுமை அவர்களின் வாய்ப்பை தடுத்துவிடக்கூடாது என்பதற்காக சமையல் குழந்தை வளர்ப்பு போன்றவற்றை அரசு ஏற்றுக்கொண்டு எல்லா இடங்களிலும் சமையல் கூடங்களையும், குழந்தை வளர்ப்பு மையங்களையும் தொடங்கியது. நம்முடைய விவாதத்திற்கு இந்தத் தகவல்கள் போதுமானது. இல்லை, சோசலிச காலத்தில் பெண்கள் மதிக்கப்படவில்லை என நீங்கள் கருதினால், அதற்கான சான்றுகளைத் தாருங்கள் பின்னர் பேசுவோம். ஆனால் அதற்காகவேனும் நீங்கள் சோசலிச ரஷ்யாவை படிக்க வேண்டியதிருக்குமே என்ன செய்யப் போகிறீர்கள்?\\தனியுடமை உருவானதற்கு நீங்கள் …….. தனியுடைமைதான் காரணம் என்பது பொது மடமை// பொது மடமை என்று எதைச் சொல்லுகிறீர்கள் நீங்கள்? ஐயா, நான் தனியுடமை எப்படி பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறேன். ஒன்று எதிர் வாதங்களின் மூலம் அதை மறுத்திருக்க வேண்டும், அல்லது தனியுடமை காரணமல்ல என்பதற்கு புது வாதங்களை தந்திருக்க வேண்டும். அதைவிடுத்து சினிமா, பொது மடமை என்று வார்த்தைகளால் கடந்து செல்வது உங்களையல்லவா அம்பலப்படுத்தும். எனக்குத்தேவை பதில் உங்களின் தப்பித்தலல்ல.\\பாலியல் குற்றத்திற்கு தனியுடமை ………. பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்]// இதன் மூலம் நீங்கள் கூற வருவதென்ன? எந்த சோசலிச தலைவர் பாலியல் குற்றம் செய்தார்? கூற முடியுமா உங்களால்? முடியவில்லை என்றால் நீங்கள் செய்திருப்பது அப்பட்டமான அவதூறு. நேர்மையானவர்கள் அவதூறு பரப்பமாட்டார்கள். தவறி செய்துவிட நேர்ந்தால் மன்னிப்பு கேட்பார்கள். நீங்கள்….?\\காமத்திற்கு கண்ணே இல்லாதபோது உள்ளம் எங்கே இருக்கும்?……… குடை பிடிக்க சொல்வீர்கள் போலிருக்கிறது// காமம் என்பது என்ன? கண், உள்ளம் எல்லாம் இருப்பதற்கு அது என்ன தனி உயிரா? புரிந்து தான் உங்கள் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறீர்களா? காமம் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒருவித உணர்ச்சி, ஒருவனுக்குள் இருக்கும் தனியுடமை, ஆணாதிக்க எண்ணங்கள் அந்த உணர்ச்சியை கேடான வழிகளில் பயன்படுத்தி குற்றம் செய்யத்தூண்டுகிறது என்பது தான் நான் கூறியிருப்பது. இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அதென்ன பெண்களின் அசாதாரண நடவடிக்கை? யாருக்கு அசாதாரண நடவடிக்கை? தொடர்புடைய பெண்ணுக்கா? இல்லை அதைக் காணும் ஆணுக்கா? அசாதாரண நடவடிக்கையாக இருந்தால் ஆண் பாய்ந்து விடுவானா? பாலியல் வன்முறை அங்கு நடந்தால் அது யாருடைய குற்றமாக இருக்கும்? யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே புலப்படும் குற்றம் எங்கிருக்கிறது என்பது. அப்புறம், நண்பர் இப்ராஹிம், என்ன இது மழை குடை என்று உவமேயம். இது போன்ற கிண்டலான வார்த்தை விளையாடல்களை தவித்துக் கொள்ளலாமே.\\உமரைப்போன்ற ஒரு ஆட்சியை கொண்டு வந்தால் இஸ்லாமிய சட்டங்களும் ஒழுக்க விதிகளும் பாலியல் வன்முறைகளை அடியோடு ஒழித்துவிடும்// உமரின் ஆட்சியிலேயே பாலியல் வன்முறைகள் நிகழ்ந்ததாகக் கூட ஒரு ஹதீஸ் கதை உண்டு தெரியுமா உங்களுக்கு? பெண்களும் ஆண்களும் ஒரே பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதை (முகம்மது அனுமதித்ததை) உமர் ஏன் தடுத்தார்? என்ற கேள்விக்கு பதிலை தேடிப்பருங்கள். யாருடைய ஆட்சியை கொண்டு வந்தால் பாலியல் வன்முறைகள் அடியோடு ஒழிந்துவிடும் என்கிறீர்களோ அந்த உமரின் ஆட்சியில் பள்ளிவாசல்வரை பாலியல் குற்றங்கள் நீண்டிருந்தது உங்களுக்கு புரியவரும்.\\நமது இந்தியாவில் சுப்பர் பவர் ஒரு பெண்தான் ,……………… எல்லாதுறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்// இன்று பெண்கள் எல்லாத்துறைகளிலும் எங்களால் சாதிக்க முடியும் என்பதை சில இடங்களில் புகுந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்றால் அதன் பொருள் பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதா? ஆண்களுக்கு நிகராய் வந்து விட்டார்கள் என்பதா? உலக மக்கட்தொகையில் ஏறக்குறைய சரிபாதியாய் இருக்கும் பெண்கள் பத்து விழுக்காடு இடத்தைக்கூட பெற்றுவிடவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் \\பெண்களுக்கு இன்னும் என்ன உரிமைகள் வேண்டும் சொல்லுங்கள்?// என்று. இது தான் ஆணாதிக்கப் பார்வை என்று முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன். அடிமையாய் அவர்களை அடக்கிவைத்திருந்ததை எதிர்த்து சில இடங்களில் கிளம்பியிருக்கிறார்கள். இதைத்தான் ஆண்களுக்கு சமமாய் பெண்களும் வந்துவிட்டதாய் காட்டுகிறார்கள். குடியரசு தலைவர், பாராளுமன்றத் தலைவர் போன்ற இடங்களில் பெண்கள் வந்துவிட்டால் சமூகத்தில் பெண்கள் சம உரிமை பெற்றுவிட்டதாக ஆகிவிடுமா? கடந்த பிஜேபி ஆட்சி கூட அப்துல்கலாமை ஜனாதிபதியாக வைத்திருந்தது, அதனால் அந்தக் கட்சி முஸ்லீம்களை மதித்து தலையாய இடம் கொடுத்திருக்கிறது என்று பொருளாகுமா?\\ஒரு காலத்தில் இல்லாததை எல்லாம் இப்போது சொல்லி ………….. குற்றங்களால் யாருக்கும் பாதிப்பில்லை// ஒரு காலத்தில் விளையாடக்கூட பெண்கள் போராட வேண்டியிருந்தது என்பதை புலம்பலாக அல்ல, இப்போதுதான் பெண்கள் வெளிவரத்தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்காக சுட்டிக்காட்டினேன். வெளிவரத்தொடங்கியிருந்தாலும் இன்னும் ஆணாதிக்கத்திலிருந்து சமூகம் விடுபடவில்லை. பெண்கள் நுகர்வுப்பொருளாக இன்று சீரழிந்திருப்பது ஆணாதிக்கத்திற்குப் பயன்படத்தான். பெண்ணியம் பேசும் சில குழுக்கள் கூட மிகக்குறைந்த உடையணிந்து பொது இடத்தில் உலவுவதும், மது அருந்துவதும், விரும்பிய ஆடவருடன் உறவு கொள்வதும் தான் பெண்சுதந்திரத்தின் அடையாளம் என பிதற்றித் திரிவது கூட முதலாளியத்துடன் இயைந்த ஆணாதிக்கத்திற்கு சேவை செய்வதற்குத்தான். இதை எடுத்துக்காட்டி பெண்கள் சமமாகிவிட்டார்கள் என கூறவருகிறீர்கள் என்றால் நீங்கள் சமூகத்தைப் பார்க்கவில்லை என்பது பொருள். இதுபோன்ற பிரபல, மாதிரிப் பெண்களை பயன்படுத்தித்தான் சமூகத்தின் பெரும்பான்மையான பெண்களை ஆண்களின் நுகர்வுக்காக தயார்படுத்துகிறார்கள். இன்றைய முதலாளித்துவ கலாச்சாரத்திற்கு அது அவசியமாக இருக்கிறது. எப்படி மக்களை சுரண்டுவதை மக்களின் முன்னேற்றமாக சித்தரிக்கிறார்களோ அதேபோல ஆண்களின் காமப் பொம்மையாக மாறுவதை பெண்களுக்கான சுதந்திரமாக சித்தரிக்கிறார்கள். இதைத்தான் நீங்களும் பெண்கள் சம உரிமை பெற்றதாகக் கருதுகிறீர்களா?\\செங்கொடி ,பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்து ,…………. குடும்ப சுமைகளை பகிர்ந்து கொள்ளும் நிலையே உள்ளது// இப்ராஹிம், என்னை பார்த்துவரச் சொல்வதை விட நீங்கள் பார்த்துவிட்டு வருவது சிறந்தது. எந்தப்பகுதியில் இதுபோன்று நடக்கிறது? ஓரிரு வீடுகளில் சில கட்டாயங்கள் காரணமாக (நீங்களும் முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்) சில வேலைகளை ஆணும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், சமூகம் அவ்வாறு மாறிடவில்லை. அப்படி கட்டாயம் உள்ள வீடுகளிலும் கூட பெண்ணைப்போல் சமையல் வீட்டு பராமரிப்பை ஆண் செய்வதை காணவே முடியாது.\\ஆண்களில் அனைவரும் இது போன்ற நிலையில் ………… கொண்டுவர முயற்ச்சிக்க வேண்டாம்// மொத்த ஆண்களும் இப்படி இருக்கிறார்கள் என்று நான் எழுதியதாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? எங்கே நான் எழுதியதை எடுத்துக்காடுங்கள் பார்ப்போம். பாலியல் குற்றம் புரிபவர்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். இதை மறுக்க முடியாத நீங்கள், அனைத்து ஆண்களும் இப்படித்தான் என எழுதியதாக பம்மாத்து செய்கிறீர்கள். என்னே உங்கள் புரிதல்.\\ஆதிகாலத்தில் பெண் தலைமையில் ………. குற்றம் நடைபெறாது என்று சொல்ல வருகிறீர்கள்ஆம் இதுதான் வீரியமான கருத்து// ஆம். இது வீரியமான கருத்துதான். திருமணம், பதிவு, இனிசியல் எல்லாம் ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது. தொடரும் விவாதங்களில் இதுகுறித்து விரிவாக பார்க்கலாம், போதுமான வீரியத்துடன் உங்கள் தேடல்கள் இருந்தால்.\\இப்போதைய குடும்ப கட்டமைப்பில் ………. பாலியல் குற்றம் வெகுவாக குறையும்// இதை உங்களின் பாமரத்தனம் என்பதா? இல்லை வரட்டுத்தனம் என்பதா? என்று எனக்கு புரியவில்லை. திருமணம் உட்பட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் ஆண்களின் தீர்மானமே செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். மணமகளையோ, மணமகனையோ தேர்ந்தெடுப்பதில் ஜாதி, அந்தஸ்து, பொருளாதாரம் போன்றவைகளே முக்கியக் காரணிகள். இவைகள் ஆணை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. நீங்கள் கண்ட வெகுசில குடும்பங்களில்(பெரும்பான்மை குடும்பங்களில் அவ்வாறல்ல என்றாலும்) பெண்கள் தேர்ந்தெடுத்தாலுமே ஆணாதிக்கத்திற்கு உட்பட்டுத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். வெகு சில குடும்பங்களில் பெண்கள் குடும்பத்தை நடத்துபவர்களாக இருக்கலாம், அதைக் கொண்டு இக்குடும்பத்தில் ஆணாதிக்கம் இல்லை என்றோ பெண்ணாதிக்கம் என்றோ கூறமுடியாது. ஏனென்றால் நீங்கள் புரிந்து கொண்டிருப்பது போல், ஆண்தலைமை தாங்கினால் ஆணாதிக்கம், பெண் தலைமை தாங்கினால் பெண்ணாதிக்கம் என்பதல்ல, ஆணாதிக்கத்தின் வேர்கள் ஆழமானவை. ஒரு குடும்பத்தில் நிகழ்வுகளில் பெண் தீர்மானிப்பவளாக இருந்தாலும் அவளின் தீர்மானம் ஆணாதிக்கத்தை எதிர்த்து இருக்கமுடியாது. ஒரு குடும்பத்தில் ஆண் பொம்மையாக இருந்து பெண்ணே அனைத்தையும் தீர்மானிக்கிறாள் என்று கொள்வோம், அந்த குடும்பத்தில் நிகழும் ஒரு மரணத்தில் ஆணுக்குப் பதிலாக பெண் கொள்ளிவைக்க முடியுமா? இதையே முஸ்லீம் சமூதாயத்திலும் கூறமுடியும், ஒரு குடும்பத்தை பெண்ணே தலைமை தாங்குகிறாள் என்பதற்காக தன்னுடைய மகளின் திருமணத்தில் அவளால் மந்திரம் சொல்லி நடத்திவைக்க முடியுமா? ஆக ஒரு குடும்பத்தையோ அல்லது குழுவையோ பெண்ணே தலைமை தாங்கி நடத்தினாலும் ஆணாதிக்கத்தை மீறமுடியாது. ஏனென்றால் நீங்கள் நினைப்பது போல் யார் தலைமை தாங்குகிறார் என்பதை வைத்து ஆணாதிக்கம் தீர்மானம் பெறுவதில்லை, சமூகமே ஆணாதிக்க சமூகமாய் இருக்கிறது. அடுத்து நீங்கள் கூறியிருக்கும் கருத்து பாலியல் வன்முறை குறித்த உங்களின் படிமத்தை காட்சிப்படுத்துகிறது. உரிய வயதில் திருமணம் செய்து கொண்டால் பாலியல் குற்றங்கள் குறையுமா? உரிய வயதில் திருமணம் செய்துகொள்வதைப் பொருத்தல்ல, கிடைக்கும் வாய்ப்பைப் பொருத்து, பயன்படுத்திக்கொள்ளும் தருணத்தைப் பொருத்து, தப்பிக்கும் சாத்தியத்தைப் பொருத்துத்தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. இதை உரிய வயதில் திருமணம் செய்தால் வெகுவாக குறையும் என்பது முழுக்க முழுக்க பொருத்தமான கூற்றாக இருக்கமுடியுமா? திருமணம் முடித்தவர்களும் பாலியல் குற்றங்களில் வெகுவாக ஈடுபட்டே வருகின்றனர்.\\இப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இல்லாமல் இருக்கிறாள் ………….. அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்// இப்போது பெண்களுக்கு என்ன உரிமைகள் இருப்பதாக கருதுகிறீர்கள் நீங்கள்? ஆணுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு இருக்கிறதா? மிகுந்த போராட்டங்களின் பயனாக, முதலாளிய தேவைகளின் விளைவாக ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக வேலை செய்ய அனுமதி, சில இடங்களில் தலைமை தாங்க, சொத்துக்களை நிர்வகிக்க என்பன போன்று, ஆனால் இந்த சலுகைகள் ஆணாதிக்க வரம்புக்குள் தான் இருக்கின்றன. இதைத்தான் நீங்கள் பெண்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? எனக் கேட்கிறீர்கள். ஆக இப்படிக் கேட்பதின் மூலம் ஆண்தான் பெண்ணுக்கு சிற்சில சலுகைகளை தேவையைப் பொருத்து வழங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை கோடிட்டுக் காட்டியதன் மூலம் இது ஆணாதிக்க சமூகம் என்பதை நீங்களும் உணர்ந்தே தான் இருக்கிறீர்கள் அல்லவா? முந்திய காலத்தைவிட பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பது பெண்களுக்கு சலுகைகள் கொடுத்தது தான் காரணமா? நிச்சயம் இல்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் ஆணாதிக்கம் நுகர்வுக் கலாச்சாரத்துடன் இணைந்து புதிய தளத்தை அடைந்திருக்கிறது. சுதந்திரம் என்று கூறிக்கொண்டே காலனியாதிக்கத்தை தொடர்வதுபோல, பெண்ணியம் பெண்கள் உரிமை எனக் கூறிக்கொண்டே ஆணாதிக்கத்தை உயர்த்துகின்றன. ஆண்களுக்கான உள்ளாடை விளம்பரங்களில் கூட குறைந்த ஆடையுடன் பெண்ணை தோன்ற வைக்கும் வக்கிரம் பிடித்த அளவுக்கு இன்று ஆணாதிக்கம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் பாலியல் வன்முறை அதிக அளவில் நடப்பதற்கான காரணமாக அமைகிறதேயன்றி பெண்கள் போராடிப் பெறும் சலுகைகளினால் அல்ல.விஜய் டிவி நீயா? நானா? குறித்து பேசியிருக்கிறீர்கள். இதுபோன்ற ‘டாக் ஷோ’க்களைப் பார்த்துத்தான் சமூகத்தின் யதார்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அது மெய்யான யதார்த்தத்திற்கு எதிரானதாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த டாக் ஷோக்கள் சமூகத்திற்கு தேவையானவைகளை எடுத்துக்கொள்வதேயில்லை. விளம்பரதாரர் நிகழ்ச்சியாக நடத்தப்படும் இவைகளின் எல்லை, நடப்பு போக்குகளை தக்கவைக்கும் அமைப்பிலேயே இருக்கும். போகட்டும், உங்களின் கணக்கை பார்ப்போம். \\மிச்சம் இருக்கும் ஆணாதிக்கமும் ………. இங்கே ஆணாதிக்கம் எங்கே உள்ளது?// கணவன் அடக்கியாளும் 20 விழுக்காடும், கணவனே பெருமையாக கருதவைக்கக்கப்பட்டிருக்கும் 30 விழுக்காடும் ஆக சரிபாதி நேரடியாக ஆணாதிக்கத்திற்குள் வந்துவிடுகிறது. கணவனுக்கு சமமாக தங்களைக் கருதும் 30 விழுக்காடு பெண்கள் என்ன அடிப்படையில் சமமாக கருதுகிறர்கள்? ஆணுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் இருக்கிறது என்பதால் சமமாகக் கருதுகிறார்களா? இல்லை. ஆண்களைப் போல் நம்மாலும் வேலைக்கு போக முடிகிறது என்பன போன்ற சலுகைகளை உத்தேசித்துத்தான் சமம் என எண்ணுகிறார்கள். ஆனால் ஆண் தன்னுடைய சம்பளப் பணத்தை சுதந்திரமாக செலவு செய்வது போல் பெண்ணால் செலவு செய்துவிட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினாலே போதும், இந்த சமம் பல்லிளித்துவிடும். கணவனை மீறி செயல்படுவதே உரிமையாக கருதும் 10 விழுக்காடு பெண்களும் என்ன விதத்தில் கணவனை மீறுகிறார்கள்? பாலியல் விவகாரங்கள், ஆடை அணிகலன்கள் எடுப்பது போன்றவற்றில் தான் இருக்கும். கணவனை மீறல் என்பது ஆணாதிக்க மீறலாக, எடுத்துக்காட்டாக பூ, பொட்டு வைக்க மாட்டேன், அல்லது கணவனின் மரணத்தின் பின் எடுக்க மாட்டேன் என்பது போன்ற மீறலாக இருக்குமா? ஆக நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துமே ஆணாதிக்க சமூகம் நிலவுவதைத்தான் சுட்டிகாட்டுகிறது(நீங்கள் விட்டுவிட்ட 10 விழுக்காட்டை நானும் கண்டுகொள்ளவில்லை)\\நான் மழை பெய்கிறது என்று சொன்னது, …………. சினிமாவில் மழை பெய்வதை காட்டியுள்ளீர்கள்// இதில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்காவது புரிகிறதா? இதோ நீங்கள் எழுதிய அந்த வாசகம் \\நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,”கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள்// நீங்கள் இப்போது சொல்வதுதான் சரி என்றால் விளக்கமாக பொருத்திக்காட்டுங்கள் பின்னர் நான் எனக்கு புரியவில்லை என எடுத்துக்கொள்கிறேன்.ஆடைக் குறைவினாலும் பாலியல் குற்றங்கள் ஏற்படும் என்பதை நான் எப்போதும் மறுத்திருக்கவில்லை என்னுடைய முதல் பின்னூட்டத்திலேயே இப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்பது உங்கள் கவனத்திற்கு \\பெண்ணின் ஆடை ஆடவனின் ஆசையை தூண்டுவது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரப் பழக்கங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவைகளை பாலியல் குற்றங்களுக்கான காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவை மேலோட்டமானவை. ….. இவைகள் தற்போது இருக்கும் பாலியல் குற்றங்களின் அளவை வேண்டுமானால் சற்று குறைக்கலாம் …… எனவே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அதாவது இஸ்லாம் கூறும் காரணங்கள் மேம்போக்கானவை// ஆடைக்குறைவு என்பது பாலியல் குற்றத்திற்கான தூண்டுதல்களின் ஒன்று, ஆனால் அதுவே பாலியல் குற்றங்களுக்கான அடிப்படைக் காரணமல்ல என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. அதனால் தான் இஸ்லாமிய காரணம் மேம்போக்கானது என்றும் கூட சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதே போல், இன்ப உணர்ச்சியா இனப்பெருக்கமா என்பதிலும் நன் எழுதியிருப்பதை மீண்டும் படித்துப்பார்த்தால் நீங்கள் நினைப்பது பிழை என்பது உங்களுக்கே தெரியும். இதோ அந்த வாசகம், \\வடிகாலாக இல்லாமல், உடலியல் ரீதியான தேவை அவனை செலுத்தாமல், மனம் சிந்தனை அதைச் செலுத்தும்போதுதான் அங்கு இன்பம், காதல், காமம் என்பது தொடங்கி குற்றமாக முடிகிறது// இவைகளை நீங்கள் சுட்டிக்காட்டிய பின் நான் என் நிலையை மாற்றிக்கொண்டேன் என நினைப்பது உங்களின் பிழை. மட்டுமல்லாது, நான் தவறான நிலையில் இருந்து நீங்கள் சான்றுகளுடன் அதை சுட்டிக்காட்டினால் என்னுடைய நிலையை மாற்றிக்கொள்வதில் என்னிடம் எந்த தயக்கமும் இருக்காது.\\கம்யுனிச ஆரம்பகால கவர்ச்சி கோசத்தில் மயங்கிய மக்கள் …… குற்றமற்ற உலகமாய் மாற்றி காட்டுவோம்// இந்த விவாதம் தொடங்குவதற்குமுன் சோசலிசம் எப்படி நடந்தது எப்படி முடிவுக்கு வந்தது என்பதை தலைப்பாக தேர்வு செய்திருக்கலாம். அப்படியிருந்தால் அதை நாம் விரிவாக விவாதித்திருக்கலாம். ஏனென்றால் அதுகுறித்து நீங்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதை அறிய முடிகிறது. சோசலிச ஆட்சியை மக்கள் நீக்கினார்களா? முதலாளித்துவம் சதி செய்து அதை நீக்கியதா? என்பது நாம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு உட்படாது என்பதால் அதை விட்டுவிட்டு மற்றவைகளைப் பார்ப்போம். சோசலிசம் நீண்ட காலம் நிலவில் இருந்தால் பாலியல் குற்றங்கள் உட்பட அனைத்துவகை குற்றங்களையும் சமூகத்திலிருந்து நீக்கியிருக்கும் என நான் கூறினால் அது வெறும் கற்பனை மட்டுமல்ல, எவ்வாறென்றால் கம்யூனிசத்தின் நோக்கமே அனைத்துவகை அடக்குமுறைகளிலிருந்தும் சமூகத்தை விடுவித்து சம உரிமை, சம வாய்ப்பு, சம வசதிகளுடன் மக்களை வாழவைப்பது தான். அப்படி வாழவைப்பதற்காக, மனித குலத்தின் வரலாற்றை ஆய்ந்து, எங்கிருந்து அடக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் தொடங்கியதோ, அங்கிருந்து தன் சீர்படுத்தலை தொடங்குகிறது. அடக்குமுறைகளுக்கான அடிப்படை எதுவாக இருக்கிறதோ அதை நீக்க புரட்சி நடத்துகிறது. சோசலிசம் நீண்ட காலமாக நடப்பிலிருந்தால் அது எதை தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறதோ அதை அடையும் என்று கூறுவது வெற்றுக்கற்பனையாக ஒருபோதும் இருக்க முடியாது. ஆனால் இஸ்லாத்தின் நோக்கம் என்ன? மக்களை சமத்துவமாக வாழவைப்பது அதன் நோக்கமல்ல. எவ்வாறெனில், மனிதர்களின் குற்றங்களுக்கும், பாவங்களுக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் தண்டனை தருவேன் என கூறுகிறது. அதே நேரம் மறுமைக்கு முன்னால் குற்றமற்ற சமூகம் இருக்கும் என முன்னறிவிக்கவும் இல்லை. ஆகவே கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும், அதற்கு நான் தண்டனை தருவேன் என்பதுதான் இஸ்லத்தின் சாராம்சம். குற்றமற்ற சமுதாயத்தை அமைக்கும் நோக்கத்தை கொண்டிருக்காத ஒன்று ஆயிரமல்ல கோடிக்கணக்கான ஆண்டுகள் நடைமுறையில் இருந்தாலும் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியாது. எனவே நோக்கமாக கொண்டிராத ஒன்றை, முடியாத ஒன்றை உருவாக்கிக்காட்டுவோம் என்று கூறுவது தான் கற்பனையேயன்றி; எதை நோக்கமாக கொண்டிருக்கிறதோ, எதை முடியும் என்று கூறுகிறதோ, எதற்காக போராடுகிறதோ அதை உருவாக்கிக் காட்டுவோம் என்று கூறுவது கற்பனையாக இருக்க முடியாது. எனவே இஸ்லாமிய ஆட்சியில் குற்றங்களில்லாத சமூகத்தை ஏற்படுத்திக் காட்டுவோம் என்பது கற்பனை மட்டுமல்ல கேலிக்கூத்தானதும் கூட. மட்டுமல்லாது உமரின் ஆட்சியில் கூட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது என்பதையும் மேலே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.\\பாலியல் குற்றங்களுக்கு காரணமென்ன ……. நிலவும் பிரச்சனையின் சாராம்சம் தெரியாது// எந்த ஒரு பிரச்சனையிலும் சரியா தப்பா எனும் கோணத்தில்தான் பரிசீலனை இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத இடங்களில் விதிவிலக்காக நடுநிலமை ஏற்படலாம். இதை மீறி நடுநிலமைக் கண்டோட்டம் என்பது நாடகமாகத்தான் இருக்கும். சரி, நீங்கள் கூறியபடி செய்தித்தாள் செய்திகளையோ எடுத்துக்கொள்வோம். பெண்ணின் காம வெறியால் குடும்பநாசம் என்பது என்றாவது வரும் செய்தி தான். ஆனால் ஒரு நாளுக்கு பத்து செய்தியாக வருவது வன்புணர்ச்சி செய்திகள். ஆணாதிக்க வக்கிரவெறியர்களால் குதறப்படும் செய்திகள் முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கின்றன. ஆடையே அணியத் தொடங்காத பச்சிளங் குழந்தை முதல் ஆடை விலகலை அனிச்சைச் செயலாய் மூடமுடியாத கிழவிகள்வரை வன்புணர்ச்சி செய்யப்படுவது தினம் தினம் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. இவைகளுக்கு என்ன காரணம் கூறுவீர்கள்? அண்மையில் கௌரவக் கொலைகள் நாடாளுமன்றம் வரை பேசப்பட்டது. இந்த கௌரவக் கொலைகளின் இலக்கு காதலித்து மணமுடிக்கும் பெண்கள். நீதிமன்றங்கள் கௌரவக் கொலைகளுக்கு ஆதரவாய் தீர்ப்பு வழங்குகின்றன. வட மாநிலங்களில் கௌரவக் கொலைகளை தடுத்தால் ஓட்டு கிடைக்காது என்று மக்கள் பிரதிநிதிகள் வெட்கமில்லாமல் பேட்டியளிக்கிறார்கள். தன் சொந்த மகளையே காதலித்ததற்காக கொல்லத் துடிப்பவர்கள் அதே காரணத்திற்காக மகனை கொல்வதில்லையே ஏன்? தினமும் செய்தித்தாள்களில் வரும் இதுபோன்ற செய்திகளை நீங்கள் ஆழமாக மூழ்கிப் பார்த்தாலும், மேலாக மிதந்து பார்த்தாலும், நடுவாந்திரமாக மூழ்கு நீச்சலில் பார்த்தாலும் ஆணாதிக்கம் எனும் முடிவைத்தான் நீங்கள் வந்தடைய வேண்டியதிருக்கும்.\\இதைவிட வேறு என்ன தெரிந்துகொள்ளுமாறு செயல்பட்டு விட்டீர்கள்? கிரக்கிக்கத் தெரியவில்லை உளவாங்கி கொள்ள தெரியவில்லை,அப்படியெனில் செயல்முறை விளக்கம் வேண்டும் என்றால் நடைமுறை படுத்த முடியாத ஒன்று என சொல்லவருகீறிர்கள்// நான் எடுத்துவைக்கும் வாதங்களை உள்வாங்கிப் பதிலளியுங்கள் என உங்களைக் கேட்டால் கம்யூனிசம் நடைமுறைப் படுத்தமுடியாதது என்று என்மீது ஏற்றிக்கூறுகிறீர்கள். ஓ… இதைத்தான் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சுப்போடுவது என்பார்களோ.தொடரும்
- செங்கொடி, on December18, 2010 at 10:23 மாலை said:தொடர்கிறது\\ஒரு வீட்டுக்காரனுக்கு அழகான குழந்தை ….. உங்களுக்கு புரிதல் இல்லை.என்பீர்கள்// உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது நீங்கள் புரிந்து கொள்ள முனையவில்லை என்பதை நீங்களே அழகாகக் கூறிவிட்டீர்கள். இன்பத்தையும் துன்பத்தையும் பொதுவில் வைப்பது என்பதை உங்களால் இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும் என்றால் உங்களுக்கு புரிதல் இல்லை என்று கூறுவதில் தவறொன்றும் இல்லையே. குழந்தையை வளர்ப்பதும், பராமரிப்பதும், பாதுகாப்பதும் பெற்றொர்களின் கடமையாக இருப்பது விலக்கப்பட்டு அரசு பொறுப்பில் பொதுவில் இருந்தால், புதிய குழந்தையின் வரவுக்கு அனைவரும் மகிழ முடியும், இன்னொரு குழந்தையின் இழப்பிற்காக அனைவரும் வருந்தவியலும். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது என்ன சொல்கிறது என கற்க வேண்டும், அது சரியா தவறா என ஆராயவேண்டும். சரி என்றால் தைரியமாக ஏற்கவும், தவறு என்றால் தயக்கமில்லாமல் தள்ளவும் முடியவேண்டும். ஆனால் இரண்டு நிலைகளிலும்(இஸ்லாம், கம்யூனிசம்) இந்த மனப்பான்மை உங்களைப் போன்றோரிடம் இருப்பதில்லை என்பதுதான் வேதனைக்குறியது.\\சூழ்நிலைகளில் சிக்காதவரை 95 சதவீத மக்கள் கற்புக்கரசர்கல்தான். மனிதனின் காம உணர்வுகளுக்கு முன் பொது உடமையாவது, கத்தரிக்கையாவது// ஆம். சூழ்நிலையில் சிக்காதவரை பெரும்பாலானவர்கள் நேர்மையானவர்கள் தான், சூழ்நிலை நேர்ந்துவிட்டால் வரம்பு மீறிவிடுகிறார்கள். இங்கு சூழ்நிலை என்பது என்ன? காம உணர்வா? அது எல்லோருக்கும் இருக்கிறது, என்றால் சூழ்நிலை என்பதென்ன? செயல்படுத்தும் வசதியும் தப்பிக்கும் வாய்ப்பும் இது தான் சூழ்நிலை என்பது. சரி இந்த சூழ்நிலை அமைந்த எல்லோருமே வரம்பு மீறிவிடுகிறார்களா? இருக்கமுடியாது. ஆணாதிக்கம் எந்த அளவில் ஒருவனை ஆள்கிறதோ, தனியுடமைச் சீரழிவு எந்த அளவுக்கு அவனில் ஆழ்கிறதோ, அந்த அளவிற்குத்தான் ஒருவன் வரம்பு மீறிப்போவான்.சௌதி பாலியல் குற்றங்களில் ஏதோ நான் ஒப்புக்கொள்ள மறுப்பதுபோல் போக்குகாட்டியிருக்கிறீர்கள். ஆனால் நான் மிகத்தெளிவாகவே கேட்டிருக்கிறேன், \\இஸ்லாமியத்தீர்வு என்ன? குரான் குறிப்பிடும் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும், பெண்கள் பிற அன்னிய ஆடவர்முன்னால் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பது தானே. 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக சௌதியில் இது நடைமுறையில் இருக்கிறது. உங்கள் வாதத்தை அப்படியே நான் ஒத்துக்கொள்கிறேன் என்று கூட வைத்துக்கொள்வோம். மற்ற நாடுகளைவிட சௌதியில் பாலியல் குற்றங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்றே கொள்வோம்(ஒரு வாதத்திற்கு) ஆக இஸ்லாமியத் தீர்வினால் பாலியல் குற்றங்களை கொஞ்சம் குறைக்கலாமே தவிர இல்லாமல் செய்ய முடியாது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?// என்று. மீண்டும் கேட்கிறேன், உங்கள் பதில் என்ன?இப்ராஹிம், உங்களைப் போல் கேட்ட கேள்விகளை வேறொன்றாக திரிக்காமல் தெளிவான, நேரிய பதிலை அளித்திருக்கிறேன். தேவைப்படின் இன்னும் அதிக விபரங்களுடன் ஆயத்தமாக உள்ளேன். இவைகளை பரிசீலனை செய்யத் தயாரா நீங்கள்? எது இலக்கு(ஊர்) என்பதையும், அந்த இலக்கை சென்றடையும் திசை(வழி) எது என்பதையும் போதிய உள்ளடக்கத்துடன் எடுத்துவைத்திருக்கிறேன். எது இல்லாத ஊருக்கான வழி என்பதையும் இது எடுத்துக்காட்டியிருக்கிறது. நீங்கள் இஸ்லாமியத்தீர்வை தாராளமாக பின்பற்றலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதுதான் சரியான தீர்வு என்று சொல்லாதீர்கள், சொன்னால் அதற்கான சான்றுகளை, தரவுகளை, விளக்கங்களை எடுத்துவைக்க வேண்டும். அல்லாவிடின் மீள்பார்வை செய்யுங்கள் உங்கள் நிலையை.நீங்கள் மீள்பார்வை செய்யாவிடினும், உங்கள் தவறான நிலைப்பாடுகளால் நீங்கள் இடறும்போது கம்யூனிஸ்ட்கள் எங்கள் கரம் நீளும் உங்களைத் தாங்கிப் பிடிக்க, ஏனென்றால் அது எங்கள் கடமை.
திங்கள், 20 டிசம்பர், 2010
சனி, 18 டிசம்பர், 2010
புதன், 15 டிசம்பர், 2010
இஸ்லாமிய சட்டங்களை செயலாக்கினால் நபி[ஸல்] கற்று தந்த குரானையும் நபி வழி ,,,,,
S.Ibrahim, on December15, 2010 at 9:59 மாலை said:[செந்கோடிக்கு பதில் ]
செங்கொடி ,மீண்டும்,மீண்டும் நீங்கள் குற்றம் சாட்டிவிட்டால்,அது உண்மையாகிவிடாது, வாதத்தை வலுவாக வைத்துவிட்டால்,குற்றம்சாட்ட அவசியமில்லை,நிசாம் போன்று ஒத்து ஊதா வேண்டிய தேவைக்கும் அவசியமில்லை.மனிதகுலத்தின் தொடக்க காலத்தில் பெண்தான் தலைமை தாங்கினாள் என்றும் ஆண்களும்,பெண்களும் தாங்கள் பாலியல் தேவைகளை தாங்கள் விருப்பத்திற்க் கேற்றவாறு நிறை வேற்றிக் கொண்டனர் என்றும்அதனால் பாலியல் குற்றங்கள் இல்லை என்றும் கூறி உள்ளீர்கள்.இதற்க்கு ஆதாரம் கேட்டேன்.இப்போது அதற்க்கு பண்டைக்கால ஆய்வு நூல்களே ஆதாரம் என்று கற்பனை ஆதாரம் தந்துள்ளீர்கள் ஆய்வுகள் அனைத்தும் உண்மைகள் அல்ல.மேலும் .நேற்றைய சோஷலிச ரஷ்யாவில் ஒரு பெண் தலைவரை கூட உருவாக்க முடிய வில்லை.இன்றுவரை உலக பிரபல்ய பெண்களில் ஒருவர் கூட கம்யுனிஸ்ட்களை காணோம்.என்பது வேறு விஷயம்.ஆதிகாலத்தில் பெண் தலைமையில் பாலியல் குற்றங்கள் இல்லாத காலத்தில் ,எவ்வாறு ஆண்களும் பெண்களும் அவரவர் தேவைக் கேற்றவாறு தேவைப்படும் நேரத்தில் தேவைபாட்டோருடன் பாலியல் தேவைகளை நிறைவேற்றி கொண்டதுபோல் [திருமணம்,பதிவு,இனிசியல் எல்லாம் தேவை இல்லாதவைகள்]இப்போதும் நடந்து கொண்டால் பாலியல் குற்றம் நடைபெறாது என்று சொல்ல வருகிறீர்கள்ஆம் இதுதான் வீரியமான கருத்து.ரஷ்யாவில் இந்த பழைய கலாச்சாரம் பரிசிலனையில் இருந்ததா? இல்லை எனின் அதை நடைமுறை படுத்து முன் சோசலிசம் படுத்து கொண்டதா?
///பெண் தலைமை தாங்கியபோது சமூகம் பொதுவுடமையாய் இருந்தது. அதனால் அங்கு பாலியல் குற்றம் உட்பட எந்தக் குற்றங்களுக்கும் இடமில்லாமல் இருந்தது. ஆண் எந்த விதத்திலும் பெண்ணைவிட தாழ்ந்தவனாக கருதப்படவில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொண்டிருந்தனர். இன்று நாம் வளர்த்தெடுத்திருக்கும் விவசாயம், கட்டடக் கலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெண்களின் கண்டுபிடிப்பாய் இருந்தது.///
இந்த விசயத்திற்கு ஆதாரம் பண்டைய நூல்களில் தான் பார்க்கவேண்டுமா?இல்லை என்றால் ‘லிங்க்’ புகழ் சங்கர் தருவாரா? இது உண்மை என்றால் ஏன் உங்கள் ரஷ்யாவில் சோதனைக்காக ஸ்டாலின்.லெனின்.மாவோ போல ஒரு பெண் தலைவரை உலகுக்கு காட்டமுடியவில்லை.எத்தனை பேர் பொலிட் பீரோவில் பெண்கள் அங்கத்தினராக இருந்தார்கள்?அதில் அதிகாரமிக்கவராக ,ஒளிர் விட்டவராக யாரும் உண்டா?
///பெண்ணிடமிருந்து தலைமை பிடுங்கப்பட்டபின்பு சமூகம் தனியுடமைக்கு மாறுகிறது. கிடைக்கும் பலன்களை பொதுவில் பகிர்ந்த நிலை மாறி தனித்தனி உடமைகளாய் மாறின. ///
இது எப்போது நடந்தது? அதற்க்கு,முந்தைய ,பிந்திய காலத்திலிருந்து ஆதாரம் காட்ட முடியுமா ?
தனியுடமை உருவானதற்கு நீங்கள் சொல்லும் இந்த காரணங்கள் எலாம் வெறும் கற்பனை காவியம். “புரட்சி தலைவி ஆட்சியிலே” என்று சினிமா எடுத்தால் நூறுநாள் ஓட்டலாம் ,நூறு ஆண்டு சோ.ர.போல.’. மற்றபடிபாலியல் குற்றத்திற்கு தனியுடைமைதான் காரணம் என்பது பொது மடமை. இல்லையெனின் உங்களது ம.க.இ..க வுக்கு கிளைகள் தோறும்,மாவட்டந்தோறும்,மாநிலங்கள்தோறும் பெண்களை தலைவராக்கி பொதுவுடமைக்கு முன்மாதிரியாக வழிகாட்டுங்களேன்.நீங்கள் இப்போதே ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டில் சோசலிசத்தையும் பத்து பில்லியன் ஆண்டில் கம்யுநிசத்தையும் கொண்டுவர முடியும். மீண்டும் ஆதிகாலத்தில் பெண் தலைமையாய் இருந்தபோது,,,,,,,,,,,என்று பழைய பல்லவியைபாடாமல் புது பல்லவியை ம,க,இ,க வில் தொடங்குங்கள்.பாலியல் குற்றத்திற்கு தனியுடமை தான் காரணம் என்றால் உங்களது சோஷலிச தலைவர்கள் பாலியர் குற்றம் செய்தது இல்லையா?இல்லை அங்கே அதிகார வர்க்கத்தில் பெண்கள் பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்]
///பெண் தலைமை தாங்கியபோது சமூகம் பொதுவுடமையாய் இருந்தது. அதனால் அங்கு பாலியல் குற்றம் உட்பட எந்தக் குற்றங்களுக்கும் இடமில்லாமல் இருந்தது. ஆண் எந்த விதத்திலும் பெண்ணைவிட தாழ்ந்தவனாக கருதப்படவில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொண்டிருந்தனர். இன்று நாம் வளர்த்தெடுத்திருக்கும் விவசாயம், கட்டடக் கலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெண்களின் கண்டுபிடிப்பாய் இருந்தது.///
இந்த விசயத்திற்கு ஆதாரம் பண்டைய நூல்களில் தான் பார்க்கவேண்டுமா?இல்லை என்றால் ‘லிங்க்’ புகழ் சங்கர் தருவாரா? இது உண்மை என்றால் ஏன் உங்கள் ரஷ்யாவில் சோதனைக்காக ஸ்டாலின்.லெனின்.மாவோ போல ஒரு பெண் தலைவரை உலகுக்கு காட்டமுடியவில்லை.எத்தனை பேர் பொலிட் பீரோவில் பெண்கள் அங்கத்தினராக இருந்தார்கள்?அதில் அதிகாரமிக்கவராக ,ஒளிர் விட்டவராக யாரும் உண்டா?
///பெண்ணிடமிருந்து தலைமை பிடுங்கப்பட்டபின்பு சமூகம் தனியுடமைக்கு மாறுகிறது. கிடைக்கும் பலன்களை பொதுவில் பகிர்ந்த நிலை மாறி தனித்தனி உடமைகளாய் மாறின. ///
இது எப்போது நடந்தது? அதற்க்கு,முந்தைய ,பிந்திய காலத்திலிருந்து ஆதாரம் காட்ட முடியுமா ?
தனியுடமை உருவானதற்கு நீங்கள் சொல்லும் இந்த காரணங்கள் எலாம் வெறும் கற்பனை காவியம். “புரட்சி தலைவி ஆட்சியிலே” என்று சினிமா எடுத்தால் நூறுநாள் ஓட்டலாம் ,நூறு ஆண்டு சோ.ர.போல.’. மற்றபடிபாலியல் குற்றத்திற்கு தனியுடைமைதான் காரணம் என்பது பொது மடமை. இல்லையெனின் உங்களது ம.க.இ..க வுக்கு கிளைகள் தோறும்,மாவட்டந்தோறும்,மாநிலங்கள்தோறும் பெண்களை தலைவராக்கி பொதுவுடமைக்கு முன்மாதிரியாக வழிகாட்டுங்களேன்.நீங்கள் இப்போதே ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டில் சோசலிசத்தையும் பத்து பில்லியன் ஆண்டில் கம்யுநிசத்தையும் கொண்டுவர முடியும். மீண்டும் ஆதிகாலத்தில் பெண் தலைமையாய் இருந்தபோது,,,,,,,,,,,என்று பழைய பல்லவியைபாடாமல் புது பல்லவியை ம,க,இ,க வில் தொடங்குங்கள்.பாலியல் குற்றத்திற்கு தனியுடமை தான் காரணம் என்றால் உங்களது சோஷலிச தலைவர்கள் பாலியர் குற்றம் செய்தது இல்லையா?இல்லை அங்கே அதிகார வர்க்கத்தில் பெண்கள் பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்]
///அவளும் நம்மைப்போன்ற சக பிறவிதான் எனும் எண்ணத்தை எது தடுக்கிறது? அவளுக்கும் நமக்கும் தொடர்பில்லை அவள் யாரோ, நாம் யாரோ, நமக்கு சுகம் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான், அதன் பிறகு அவளுக்கு ஏற்படும் பாதிப்புகள் சமூக ரீதியாகவும் உளரீதியாகவும் அவள் அனுபவிக்கும் துன்பங்கள் என்னுடையதல்ல எனும் எண்ணம் தானே அவனை பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. ///
காமத்திற்கு கண்ணே இல்லாதபோது உள்ளம் எங்கே இருக்கும்?அவளுக்கு ஏற்படும் உடற்கூறு,சமூக,உள ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை பற்றி எண்ணுவதற்கு. இது போன்ற பாலியல் வன்முறைகள் பத்தாயிரத்தில் ஒருவராலே ஏற்படலாம்.அதிலும் ஐம்பது சதவீதம் பெண்களின் அசாதாரண நடவடிக்கைகளும் காரணமாக இருக்கலாம்.இதற்காக மொத்த சமூகத்தின் கொள்கையே மாற்றவேண்டும் என்றால் செங்கொடிகளின் ஆசைக்கு அளவே இல்லையா?சினிமாவில் பெய்யும் மழைக்கு தியேட்டரில் இருப்பவனை குடை பிடிக்க சொல்வீர்கள் போலிருக்கிறது.
.////அவரவர்களுக்கு ஏற்படும் இன்பமும் துன்பமும் அவரவர்களுக்கு எனும் எண்ணம் இருப்பதால் தானே வன்முறை செய்யத் தூண்டுகிறது. இதை தனியுடமை என்று கொள்ளலாமா கூடாதா? ஒரு சமூகத்தில் இன்பமும் துன்பமும் பொதுவாக இருந்தால் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது///
ஸ்டாலின்,லெனின்,போன்ற அதிபதிகளும் பொலிட்பீரோ உறுப்பினர்களும் அனுபவித்த இன்பங்களை ரஷ்ய மக்கள் அனைவரும் அனுபவித்தார்களா? மக்கள் அனுபவித்த துன்பங்களை ஸ்டாலின்.லெனின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் அனைவரும் அனுபவித்தார்களா?இங்கே ஒரு வரலாற்று நிகழ்வை பாருங்கள். உமர்[ரலி] அவர்களின் ஆட்சி காலத்தில் அவர் நீண்ட சட்டை அணிந்து மக்களிடையே உரை ஆற்றியபோது,ஒருவர் எழுந்து,ஜனாதிபதியே|நீங்கள் அணிந்திருக்கும் சட்டைக்கான துணி கடந்த போரில் கிடைத்ததுதானே?அவ்வாறெனின், எங்களுக்கு கிடைத்த துணியில்,இடுப்பளவு தான் சட்டை தைக்க முடிந்தது.ஆனால் நீங்களோ கால்கள் வரை சட்டை தைத்து உள்ளீர்கள்.நீங்கள் உங்களுக்கு எங்களைவிட கூடுதலாக துணியை எடுத்து கொண்டீர்களா?என்று கேட்டார்.உடன் உமர்;ரலி]அவர்கள் ,எனது மகனும் கடந்த போரில் கலந்து கொண்டார்.அவருக்கு கிடைத்த பங்கையும் அவர் எனக்கு கொடுத்துவிட்டார். இரண்டு பங்குகளையும் சேர்த்ததே சட்டை தைத்துள்ளேன் என்று கூறினார்.பொது உடமையும் ஜன நாயகமும் ஒருங்கே செயல்பட்டுள்ளதையும் பார்த்தீர்களா?
நபி[ஸல்] அவர்கள்,நீங்கள் வேறு ஒருபெண்ணால் கவரப் பட்டால்,ஆசைகள் கிளர்ந்தால் உடன் உங்கள் மனைவியிடம் செல்லுங்கள்.என்று உணர்வுகளை தணித்திட தவறுகள் நடக்காமல் தடுக்க மனபக்குவத்தை சொல்லித்தருகிறார்கள்.நபி[ஸல்] அவர்களின் அறவுரை,மக்களை பன்படுத்தியதை வெவ்வேறு சம்பவங்களில் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட ஒரு நபித் தோழரும் ஒருபெண் தோழரும் தானாகவே வழிய வந்து தண்டனை பெற்று கொண்டதை ஏற்கனவே இன்னொரு பதிவில் சொல்லியுள்ளேன்.. விவேகானந்த சொன்னதாக சொல்வார்கள்,நூறு இளைஞர் களை தாருங்கள். இந்தியாவை வல்லரசாக மாற்றுகிறேனஎன்று சொன்னதாக கூறுவார்கள்.ஆனால் இன்று நூறென்ன, லட்சம் இளைஞர்கள் தயாராக உள்ளனர்.ஆனால் நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்தது போல் ஒரு உமரை போன்று தலைவரைத்தான் காண முடியவில்லை.உமரைப்போன்ற ஒரு ஆட்சியை கொண்டு வந்தால் இஸ்லாமிய சட்டங்களும் ஒழுக்க விதிகளும் பாலியல் வன்முறைகளை அடியோடு ஒழித்துவிடும் .
. . ///நடப்பு உலகில் நிர்வாகம் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் ஆண்களே ஆதிக்கம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். ///
உங்கள் ரஷ்யாவில் ,ம.க.இ.க.வில் எப்படியோ நமது இந்தியாவில் சூப்பர்பவர் ஒரு பெண்தான் ,ஜனாதிபதி பெண்தான்,பாராளுமன்ற தலைவர் பெண்தான்,எதிர்கட்சிதலைவர் பெண் தான்,நாட்டிலேயே லாபகரமாக உள்ள ரயில் நிறுவனமும் உங்கள் அபிமான பெண் தலைவரின் கையில்தான்,தமிழகத்தின் எதிர்கட்சியும் பெண்தான் நாட்டிலேயே அல்லது உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல் என்று நாரி கொண்டிருப்பதும் பெண்ணாலும் பெண் ப்ரோக்கராளும்தான் .இன்னும் எல்லாதுறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்.சில அரசு துறைகளில் ஆண்களை பார்ப்பதே அரிதாக உள்ளது.ஆரம்ப கல்வி யில் அனைத்தும் பெண்களே ஆசிரியர்கள், குழந்தைகளை வீட்டில் மட்டுமல்ல ,பள்ளியிலும் அவர்களை வருகால தலைவர்களாக உருவாக்கும் பணி கொடுக்கப் பட்டுள்ளது.குழந்தை பருவத்தில் அவர்களது உள்ளங்களை பக்குவபடுத்தி வளைக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? இவை போக பெண்களுக்கு இன்னும் என்ன உரிமைகள் வேண்டும் சொல்லுங்கள்?
///கேவலம் விளையாட்டுப் போட்டிகளில் கூட தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என பெண்கள் போராடியதை உலகம் கண்டிருக்கிறது. இப்போதுதான் கடுமையான கட்டுப்பாடுகளையும் சூழல்களையும் மீறி சில பெண்கள் வெளிவரத் தொடங்கியிருக்கிறார்கள்///ஒரு காலத்தில் இல்லாததை எல்லாம் இப்போது சொல்லி புலம்ப வேண்டாம். காமன் வெல்த் விளையாட்டு போட்டி வீரர்கள் வீராங்கனைகள்,தங்கியிருந்த விடுதிகளில் வைக்கப்பட்டிருந்த ஆணுறைகள் ஓரிரு நாளிலே காலியாகிவிட்டதாம்.பாலியல் குற்றங்களால் யாருக்கும் பாதிப்பில்லை.
/// பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்தாலும் கூட குடும்பச்சுமைகளை பெண்ணே செய்ய வேண்டும், ஆண் பொருளீட்டுபவனாக இல்லாவிட்டாலும் குடும்பச்சுமைகளை அவன் செய்யவேண்டியதில்லை. ஏன் சமூகம் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது///
செங்கொடி ,பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்து ,ஆண் ஈட்டுபவனாக இல்லாத வீட்டின் நிலையை நேரில் பார்த்துவிட்டு எழுதுங்கள்.குழந்தை பெறுதலும்,பாலூட்டுவதும் தவிர ,சில இடங்களில் புட்டிபால் முதல் அனைத்தையுமே கணவன் பார்க்கும் நிலை வந்துவிட்டது.ஆணும் ,பெண்ணும் பொருள் ஈட்டுபவகளாக இருந்தால் இருவரும் குடும்ப சுமைகளை பகிர்ந்து கொள்ளும் நிலையே உள்ளது.
.///ஆணுக்கு காம உணர்வு அதிகம் பெண்ணுக்கு குறைவு என்ற கருதுதலும்,
ஆண்களோ தங்களது சுதந்திர பாலியல் வேட்கைக்காக வாய்ப்பைப் பொருத்து அன்னியப் பெண்களை வேட்டையாடுகிறார்கள். பெண் என்றால் ஆணின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவள் அப்படி ஆணில் கட்டுப்பாட்டில் இல்லாத சமயத்தில் சிக்கிவிட்டால் நம்மால் அனுபவித்துவிட்டு தப்பிவிட முடியும் எனும் ஆணாதிக்க சிந்தனை ஒருவனுக்கு இல்லாவிட்டால் அவனால் ஒரு அன்னியப் பெண்ணை காமப்ப்பார்வை பார்க்கமுடியுமா? ///
ஆண்களில் அனைவரும் இது போன்ற நிலையில் இருப்பவர்களா?ஏதோ ஒரு பத்து சதவீதம் பேர் இயற்கையாக அவனிடம் உள்ள காமஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு தவறு செய்கிறான் என்றால் மொத்த ஆண்களும் காமவேட்கையுடன் எழுதுவது சரியா?உங்கள் வாதத்தை நிலை நிறுத்துவதற்காக ஆண்கள் மீது இப்படி பழிபோடுவது நியாயமா?யார் மீதாவது பழியை போட்டு கற்பனை கோட்டை கம்யுனிசத்தை வலையதலத்திலாவது கொண்டுவர முயற்ச்சிக்க வேண்டாம். [இன்சாஅல்லாஹ் ]
இப்போதைய குடும்ப கட்டமைப்பில் பெயரளவில்தான் ஆண்கள் குடும்ப தலைவராக இருக்கிறார்கள் திருமண நிகழ்ச்சிகளில் முழுக்க பெண்ணாதிக்கம்தான்.பையனை தேர்வு செய்வதும்,பொண்ணை தேர்வுசெய்வதும் மற்ற விசயங்களிலும் பெண்களே முதன்மைபடுத்த படுகிறார்கள். இஸ்லாமியத் திருமணம் [இஸ்லாமியர்களின் திருமணம் அல்ல] .நடந்தால் பெண்ணின் நிலை இன்னும் உயரும்.வரதட்சணை, விருந்து செலவு குறைந்து எளிமையான வாழ்க்கை ஒப்பந்தம் நடைபெறுமானால் பல பெண்கள் உரிய வயதில் திருமணம் செய்துகொள்வார்கள். இதனால் பாலியல் குற்றம் வெகுவாக குறையும்.இப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இல்லாமல் இருக்கிறாள்.?இன்னும் என்ன சுதந்திரம் இல்லாமல் உள்ளது? இன்னும் என்ன உரிமை வேண்டும்?என்ன சுதந்திரம் வேண்டும்? முன்பு உரிமைகள் இல்லாத காலத்தைவிட இப்போதுதான் பாலியல் வன்முறை அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.இன்னும் நீங்கள் விஜய்டிவியின் நீயா?நானா? நிகழ்ச்சிகளை பார்த்தால்,மிச்சம் இருக்கும் ஆணாதிக்கமும் அழிந்துவருவதை பார்க்கமுடியும்.பத்து சதவீத பெண்கள் கணவனை மீறி செயல்படுவதே தனது உரிமையாககொள்ளுகிறார்கள். முப்பது சதவீத பெண்கள் கணவனுக்கு சமமாக தன்னை நினைத்து கொள்ளுகிறார்கள், முப்பது சதவீத பெண்கள் கணவனையே தன்னின் பெருமையாக கொள்ளுகிறார்கள். .இருபது சதவீத பெண்களை கணவன் அடக்கி ஆள்கிறான் இங்கே ஆணாதிக்கம் எங்கே உள்ளது?காலப் போக்கில் மறைந்துவிடும்.ஆனால் பாலியல் குற்றங்கள் ,வன்முறைகள் இப்போதைய விட கூடுமேதவிர நிச்சயம் குறையவே செய்யாது.
நான் மழை பெய்கிறது என்று சொன்னது,ஆடைகுறைவைத்தான் .நீங்கள் பாலியல் குற்றம் ஆடை குறைவினாலும் ஏற்படும் ,என்பதை முதலில் மறுத்து ,பின் அது எவ்வாறு ஏற்படும் என்று விளக்கி ஏற்று கொண்டதைத்தான் அந்த உதாரணம் கூறுகிறது.பாலியல் தேவை இனப்பெருக்கத்திற்கு மட்டும் என்று கூறியநீங்கள் , பின் அது காமம்,இன்பம்,என்பதுதான் பாலியல் தேவை முதலிடம் வகிக்கிறது என்பதை விளக்கத்துடன் ஏற்று கொண்டதைத்தான் மழை உதாரணம் பொருந்தும்.இப்போதும் தனியுடமை,ஆணாதிக்கம் காரணம் இல்லை ,ஆம் ,மழை பெய்யவில்லை என்று சொன்னால்,சினிமாவில் மழை பெய்வதை காட்டியுள்ளீர்கள். நண்பர் சங்கர் காட்டிய சீனா சுட்டியிலும் ஏரிக்கரை மக்கள் மத்தியில் சுற்றுலா பயணிகளை தடை செய்துவிட்டதாக கூறுகிறது.ஒரு ஐந்து வருடங்களுக்கு அங்கு சுற்றுலா பயணிகளை அனுமதியுங்கள் .அப்புறம் ஆணாதிக்கமா,தனியுடமையா ,காம ஆதிக்கமா என்பது தெளிவாக தெரியும்.
///100 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலவில் இருந்த சோசலிசத்தைக் கொண்டு பழைய ஜார் காலத்திய ரஷ்யாவைவிட சோசலிச காலத்து ரஷ்யாவில் பாலியல் குற்றங்களை குறைத்துக்காட்டினோம். 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒரு நாட்டில் சோசலிசம் அமலில் இருந்தால் அது உலகம் முழுவதிலும் தாக்கம் செலுத்தி, மக்களை போராடத்தூண்டி புரட்சியை நடத்தி சோசலிச சமூகமாக மாற்றியிருக்கும்///
கம்யுனிச ஆரம்பகால கவர்ச்சி கோசத்தில் மயங்கிய மக்கள் ,அதன் சுய ரூபம் தெரிய துவங்கியதும் விரட்டிவிட்டார்கள்.நூறாண்டுகளுக்குள் முடிவுக்கு வந்துவிட்ட போலி கம்யுனிஸ்ட் ஆகிவிட்ட கொள்கையை எப்படி சார்,1400 ஆண்டுகளுக்கு கற்பனைபண்ணி கதை சொல்லியுள்ளீர்? நானும் சொல்லுகிறேன் எங்கள் தவ்ஹித் ஜமாஅத் கையில் உலகம் வந்தால்,நூறாண்டுகளுக்கு குறைவான காலத்திலே உமர்[ரலி]ஆட்சியை கொண்டுவந்து இறையருளால் குற்றமற்ற உலகமாய் மாற்றி காட்டுவோம்.
பாலியல் குற்றங்களுக்கு காரணமென்ன என்பதை இணையதலத்தைவிட்டும் ,உங்களது உயரிய கொள்கைகளை விட்டும் ஒழிந்து ,யதார்த்தத்தை பாருங்கள்.ஒவ்வொரு பகுதியிலும் உள்ள லோக்கல் தினசரி செய்தி தாள்களை பாருங்கள் ,இன்று மாலை முரசு தலைப்பு செய்தி "பெண்ணின் காம வெறி;குடும்பமே நாசம்." நீங்கள் ஓராண்டு தினசரிகளில் பாலியல் வன்முறை செய்திகளை ,மேலோட்டமாகவும் ,காண வேண்டாம்,ஆழமாகவும் சிந்திக்க வேண்டாம் நடுநிலையோடு பார்த்தால் உண்மைபுரியும்.ரொம்பவும் ஆழமாக சிந்தித்தால் நிகழ உலகில் நிலவும் பிரச்சனையின் சாராம்சம் தெரியாது.ஏற்கனவே எதை படித்து ஊறியுல்லோமோ அதுவே மனக்கண் முன் தெரியும். பாலியல் குற்றங்களுக்கு கம்யுனிச தீர்வு தீர்வாகாது என்பதை நான் எப்படி நிருபிப்பது? நீங்கள் லோக்கல் தினசரிகளை படித்து அதில் வரும் பாலியல் வன்முறை செய்திகளுக்கு தனியுடமையும் ஆணாதிக்கமும் தான் காரணங்கள் என்று நீங்கள் நிருபித்தாலே போதும்.
சவுதியில் பாலியல் குற்றங்கள் சோஷலிச காலத்திய ரஷ்யாவை விட குறைவு என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்.வெளிநாட்டவர்களின் தாக்கத்தினாலும் அங்கு இன்று பாலியல் குற்றங்கள் பெருகி இருக்கலாம். ஆனாலும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டால் அங்கு குறைவு என்பதை புரிந்து கொள்ள முடியும், சவூதி அரசை நான் எடுத்தது ஏனென்றால் ஓரளவு இஸ்லாமிய சட்டங்களை அமல் படுத்தும் நாடாக இருப்பதாலேயே. 1980 க்கு முந்தைய சவூதி அரசைவிட திறம்பட இஸ்லாமிய சட்டங்களை செயலாக்கினால் நபி[ஸல்] கற்று தந்த குரானையும் நபி வழி சொல்,செயல்.அங்கீகாரங்களை யும் பின் பற்றினால் பாலியல் குற்றங்கள் என்ன அனைத்தும் குற்றங்களும் இல்லாமற்போகும்.{மன்னர் பெயசல் காலத்தில் மன்னர் குடும்பத்து இளம்பெண்ணுக்கு பாலியல் குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது.}
.கம்யுனிசம் என்றால் நூறாண்டு கூட செயல் படுத்த முடியாத ஒன்று .ஆணும் பெண்ணும் சமம் என்பார்கள். ,ஆனால் நூறாண்டு கால ஆட்சியில் ஒருபெண் கூட பெயர் சொல்லுமளவுக்கு தலைவராக முடியாதது.,தனி ஒருமனிதனுக்கு கூட துயர் வராமல் காப்போம் என்று கூறுவது,,ஆனால் அடுத்த நாட்டில் புகுந்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிப்பது, தனி நாடுகேட்டால் குளிர்பிரதேசங்களுக்கு அனுப்பி சாகவிடுவது, சர்வாதிகாரி யாக செயல்படுவது,இதைவிட வேறு என்ன தெரிந்துகொள்ளுமாறு செயல்பட்டு விட்டீர்கள்? கிரக்கிக்கத் தெரியவில்லை உளவாங்கி கொள்ள தெரியவில்லை,அப்படியெனில் செயல்முறை விளக்கம் வேண்டும் என்றால் நடைமுறை படுத்த முடியாத ஒன்று என சொல்லவருகீறிர்கள்.
.///உலகில் பெண்ணாதிக்கம் என்ற ஒன்று எப்போதும் நிலவில் இருந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், அதன் பிறகிலிருந்து இன்றுவரை ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வருகிறான். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? ///
ஆதியில் என்றால் எப்போது பெண் தலைமை தாங்கினாள்?அப்ப்போது பாலியல் வன்முறை இல்லவே இல்லை என்பது போன்றவற்றுக்கு ஆதாரம் கேட்டால்,பண்டைய சமுதாய ஆய்வுநூல்களை பார்க்கசொன்னால் எந்த நூலோ எங்கே பார்ப்பதோ? சீனாவில் ஒரு ஏரிக்கரை யை வைத்து உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்பது நல்ல கற்பனை. காயல்பட்டினம்,கீழக்கரை,அதிராம்பட்டினம் போன்ற ஊர்களில் திருமணம் முடிந்த பின்னர் ஆண் , பெண் வீட்டில்தான் தங்குகிறான்.பெண் கணவரது வீட்டுக்கு வரமாட்டாள். இதை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் அனைவரும் இப்படித்தான் இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?.
///ஒரு சமூகத்தில் இன்பமும் துன்பமும் பொதுவாக இருந்தால் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது.///ஒரு வீட்டுக்காரனுக்கு அழகான குழந்தை பிறந்திருக்கிறது,அடுத்த வீட்டுக்காரனுக்கு அவன் ஒரே பையன் பள்ளிசெல்லும் வழியில் விபத்தில் இறந்துவிட்டான் ,இப்போது இன்பத்தையும் துன்பத்தையும் எப்படி பொதுவாக்குவது?காலையில் இருந்து மதியம் வரை இருவரும் இன்பமாக இருக்கவேண்டும் .மதியத்திலிருந்து மாலை வரை துன்பமாக இருக்கவேண்டும்.என்பது போலவா? இப்படி சொன்னால் ,நீங்கள் மேலோட்டமாக சிந்தித்து உள்ளீர்கள்,உங்களுக்கு புரிதல் இல்லை.என்பீர்கள்.
///அப்படியான பொதுவாக இருந்த சமூகத்திலிருந்து தனியுடமை ரீதியில் சமூகம் பிரிந்து போனதினால் தான் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன/// இப்படி கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்பது வேறு விஷயம்.காட்டில் வாழும் சாமியாரை விட நாட்டில் வாழும் சாமியார் தான் தப்பு தண்டா பண்ணுகிறான். .சூழ்நிலைகளில் சிக்காதவரை 95 சதவீத மக்கள் கற்புக்கரசர்கல்தான். மனிதனின் காம உணர்வுகளுக்கு முன் பொது உடமையாவது, கத்தரிக்கையாவது. உங்கள் வீட்டில் பிறந்த எல்லோருக்கும் ஒரே அறிவில், ஒரே உணர்வில் ,ஒரே பொருளாதரத்தில் ஒரே கொள்கையில் இருக்கிறீர்களா? நீங்கள் யார் என்று சொல்லுங்கள் உங்கள் தனிமனித வாழ்க்கை வைத்துத்தான் உங்கள் எழுத்துக்களை நம்ப முடியும்.
.செங்கொடி ,போகாத ஊருக்கு வழி சொன்னாலும் பரவாஇல்லை.நீங்களோ இல்லாத ஊருக்கு வழி சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.முதலில் கம்யுனிஸ்ட்டை காட்டுங்கள்.பிறகு தீர்வை சொல்லுங்கள்.அதுவரை இஸ்லாமிய தீர்வையே கடைபிடிக்க முயற்ச்சி செய்வோம.. [
செங்கொடி, on December12, 2010 at 11:30 மாலை said:
நண்பர் இப்ராஹிம்,
மீண்டும் மீண்டும் உங்களை குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் உங்கள் பதிலிலிருக்கும் வீரியமின்மை என்னை சோர்வடையச் செய்கிறது. உங்களின் பதிலை பொதுமைப்படுத்திப் பார்த்தால் உலகில் ஆணாதிக்கம் என்ற ஒன்று இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. மட்டுமல்லாது, ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்பதற்கு மாற்றீடாக காமாதிக்கம் எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர்கள். நான் கூறியிருக்கும் பதிலை கிரகித்துக்கொள்ளாமல் பதில் சொல்ல வேண்டும் என்று மட்டுமே முயன்றிருக்கிறீர்கள்.
என்னுடைய December4, 2010 at 10:57 மாலை பின்னூட்டத்தில் முதலிரண்டு பத்திகளில் தனியுடமைக்கும் பாலியல் குற்றங்களும் உள்ள தொடர்பு, உலகில் ஆணாதிக்கமே நிலவிவருகிறது என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறேன். அதற்கு நீங்கள் கேட்டபடி ஆதாரம் தரவேண்டுமென்றால் அது கம்யூனிச நூல்களாகவே இருக்கும் அதனால் பண்டைய உறவுமுறைகள் குறித்த, சமுதாய ஆய்வு நூல்கள் எதனையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம். படித்துப்பார்த்தால் நான் கூறியிருப்பதன் சாரம் கொஞ்சமாவது உங்களுக்கு புரியவரும். சரி தனியுடமை, ஆணாதிக்கம் குறித்த என்னுடைய கருத்துக்கு உங்களின் மறுப்பு என்ன? என்று பார்ப்போம். \\பாலியல் குற்றம் நடப்பதும் ,ஒருவர் மறுப்பின் பாலியல் வன்முறை ஏற்படுவதும் ஆணாதிக்கமும் இல்லை,பெண்ணாதிக்கமும் இல்லை.அது காமஆதிக்கம். ஆணாதிக்கம் இல்லை என்று சொல்லிவிட்டேன்//\\உங்கள் ஆய்வில் ஆணாதிக்கம் தெரிகிறது. எனது ஆய்வில் காமாதிக்கம் தெரிகிறது .இங்கே ஆணாதிக்கம் என்பது மன முரண்டுதான் தவிர,வேறொன்றுமில்லை//\\ஆணினத்திற்கு காம உணர்வு அதிகம் .மிருகங்களில் கூட ஆணினமே பாலியல் தேவையை நாடி அலைகிறது.ஒரு பெண் நாயை பல ஆண் நாய்கள் துரத்துவதை சாதரணமாக காணலாம். இதை நீங்கள் ஆணாதிக்கம் என்பது சரியன்று.காமாதிக்கம் என்பதே சரி// இவைகளில் ஆணாதிக்கம் இல்லை என்பதற்காக நீங்கள் எடுத்துவைத்திருக்கும் மறுப்புவாதம் என்ன? ஒன்றுமில்லை.
பாலியல் குற்றம் என்பதில் நீங்கள் பார்க்கமறுக்கும் பார்வை: ஒருவனுக்கு ஒரு பெண்ணை அவளின் விருப்பத்தை மீறி தன்னுடைய சுகத்தை மட்டும் முன்னிருத்தி செயல்படத்தூண்டும் தூண்டுதல் எப்படி ஏற்படுகிறது என்பதுதான். அவளும் நம்மைப்போன்ற சக பிறவிதான் எனும் எண்ணத்தை எது தடுக்கிறது? அவளுக்கும் நமக்கும் தொடர்பில்லை அவள் யாரோ, நாம் யாரோ, நமக்கு சுகம் கிடைக்க வேண்டும் அவ்வளவுதான், அதன் பிறகு அவளுக்கு ஏற்படும் பாதிப்புகள் சமூக ரீதியாகவும் உளரீதியாகவும் அவள் அனுபவிக்கும் துன்பங்கள் என்னுடையதல்ல எனும் எண்ணம் தானே அவனை பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. அதாவது ஆணும், பெண்ணும் கொள்ளும் கூடலில் (அது வன்முறையிலானதாக இருந்தாலும், இல்லையென்றாலும்) அவரவர்களுக்கு ஏற்படும் இன்பமும் துன்பமும் அவரவர்களுக்கு எனும் எண்ணம் இருப்பதால் தானே வன்முறை செய்யத் தூண்டுகிறது. இதை தனியுடமை என்று கொள்ளலாமா கூடாதா? ஒரு சமூகத்தில் இன்பமும் துன்பமும் பொதுவாக இருந்தால் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது. அப்படியான பொதுவாக இருந்த சமூகத்திலிருந்து தனியுடமை ரீதியில் சமூகம் பிரிந்து போனதினால் தான் பாலியல் குற்றங்கள் ஏற்பட்டன. இந்த தனியுடமை எண்ணம் இன்றுவரை வேரூன்றி நிற்கிறது என்பதால் தான் எவ்வளவு கடுமையான சட்டங்களைப் போட்டு எத்தனை நீண்ட காலம் நடைமுறைப்படுத்தியிருந்த போதிலும் பாலியல் குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்கமுடியவில்லை. ஏனென்றால் பாலியல் குற்றங்கள் தனியுடமையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. தனியுடமையை சமூகத்தில் தக்கவைத்துக்கொண்டு சட்டங்கள், ஒழுக்க விதிகள் என்று எதனைக் கொண்டுவந்து தலைகீழாக நின்றாலும் பாலியல் வன்முறைகளை முற்றிலுமாக நீக்க முடியாது.
ஆணாதிக்கம் என்பது என்ன? நடப்பு உலகில் நிர்வாகம் உள்ளிட்டு அனைத்துத் துறைகளிலும் ஆண்களே ஆதிக்கம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். இயற்றப்படும் சட்டங்கள், செய்யப்படும் வசதிகள் அனைத்தும் ஆணின் வாய்ப்பை உறுதி செய்யும் விதத்திலேயே செய்யப்படுகின்றன. ஒரு ஆண் தனித்தன்மை மிக்கவனாக சுதந்திரமானவனாக இருக்கிறான். இதே சுதந்திரமும், தனித்தன்மையும் பெண்ணுக்கு இருக்கிறதா? நீங்கள் சுலபமாக சொல்லிவிடமுடியும். ஆணுக்கு கொடுக்கும் சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் பெண்ணுக்கும் கொடுத்தால் சமூகம் கெட்டுப் போய்விடும் என்று. ஏன்? ஆண் வெளிப்படுத்தும் வேட்கையைப் போலவே பெண்ணும் வெளிப்படுத்தினால்…..? ஆக சமூக ஒழுங்கே பெண்ணை அடிமைப்படுத்தும் விதத்திலேயே கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண் பாலியல் குற்றத்தை செய்யும் போது அவன் மீது சமூகம் பார்க்கும் பார்வைக்கும், அதே போன்ற பாலியல் குற்றத்தை பெண் செய்தால் சமூகம் அவளைப் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. பெண் எந்த அளவுக்கு கட்டுப்பட்டு நடக்கிறாளோ அந்த அளவுக்கு சமூகம் ஒழுங்குடன் இருக்கிறது என்பதுதான் ஆணின் பார்வையாக இருக்கிறது. எனவே ஆணுடன் ஒப்பிடும்போது பெண் அறிவில் குறைந்தவளாகவும், ஆற்றலில் குறைந்தவளாகவும், எதிர்கொள்ளும் துணிவில் குறைந்தவளாகவும் இருப்பதற்காக குடும்பச்சுமைகள் அனைத்தும் பெண்கள் தலையில் சுமத்தப்படுகிறது. குழந்தை வளர்ப்பு, வீடு சூழல் பராமரிப்பு, சமையல் உள்ளிட்ட பணிகளை பெண்களுக்கென்று ஒதுக்கி, ஆண் பொருளாதரம் ஈட்டல் என்பதை கையிலெடுத்துக்கொண்டான். அதனாலேயே பொருளாதர பலம் மிக்கவனாகவும் ஆனதால் பெண் இன்னும் ஆணைச் சார்ந்தே இருப்பவனாகிப் போனாள். ஆணாதிக்கமும் இல்லை பெண்ணாதிக்கமும் இல்லை எனக் கூறும் நீங்கள், இப்படி சிந்தித்துப்பாருங்களேன். இது பொருளிய உலகாக இருப்பதனால் யார் பொருளாதாரம் ஈட்டுகிறார்களோ அவர்கள் குடும்பச் சுமைகள் அதாவது குழந்தை வளர்ப்பு, வீடு பராமரிப்பு, சமையல் போன்றவற்றை செய்யவேண்டியதில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? ஆனால் நடப்பு உலகில் என்ன மாதிரி இருக்கிறது? பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்தாலும் கூட குடும்பச்சுமைகளை பெண்ணே செய்ய வேண்டும், ஆண் பொருளீட்டுபவனாக இல்லாவிட்டாலும் குடும்பச்சுமைகளை அவன் செய்யவேண்டியதில்லை. ஏன் சமூகம் இப்படி அமைக்கப்பட்டிருக்கிறது? இந்த ஒற்றைக் கேள்வியை நீங்கள் புரிந்துகொண்டால் போதும், ஆணாதிக்கம் என்றால் என்ன? இந்த உலகில் ஆணாதிக்கம் நிலவுகிறதா இல்லையா? என்பதை புரிந்து கொள்ளலாம். இதைத்தான் நீங்கள் உட்பட மதவாதிகள் பெண் இயல்பிலேயே பலவீனமாக படைக்கப்பட்டிருப்பதாக கருதுகிறீகள். ஆணுக்கு காம உணர்வு அதிகம் பெண்ணுக்கு குறைவு என்ற கருதுதலும், பெண்ணே குழந்தையை பெற்றெடுக்க வேண்டியவளாக இருப்பதும் சேர்ந்து பெண்ணை ஆணின் பாதுகாப்பில் இருக்க வேண்டியவளாக கட்டமைக்க, ஆண்களோ தங்களது சுதந்திர பாலியல் வேட்கைக்காக வாய்ப்பைப் பொருத்து அன்னியப் பெண்களை வேட்டையாடுகிறார்கள். பெண் என்றால் ஆணின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவள் அப்படி ஆணில் கட்டுப்பாட்டில் இல்லாத சமயத்தில் சிக்கிவிட்டால் நம்மால் அனுபவித்துவிட்டு தப்பிவிட முடியும் எனும் ஆணாதிக்க சிந்தனை ஒருவனுக்கு இல்லாவிட்டால் அவனால் ஒரு அன்னியப் பெண்ணை காமப்ப்பார்வை பார்க்கமுடியுமா? இந்த ஆணாதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டு ஆண்டவன் போட்ட சட்டத்தைக் கொண்டு தண்டித்தாலும், ஆள்பவன் போடும் சட்டத்தைக் கொண்டு தண்டித்தாலும் பாலியல் வன்முறைகளை சமூகத்திலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட முடியாது.
இவைதான் சமூகத்தில் பாலியல் குற்றங்களுக்கான அடிப்படைகளாக இருக்கின்றன. இந்த அடிப்படைகளை நீங்கள் புரிந்து கொள்ளாதது தான் ஆடை, பழக்க வழக்கங்கள் போன்ற மேம்போக்கான காரணங்களை பாலியல் வன்முறைக்கான காரணமாக எண்ணுகிறீர்கள். இதையே ஒரு உதாரணத்தின் மூலம் தோராயமாக நீங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். \\நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,”கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள்// ஆம். நீங்கள் மழைபெய்யும் காட்சியை மட்டும் கண்டுவிட்டு மழை பொழிகிறது என்கிறீர்கள். நான் அதை நுணுகி ஆய்ந்து அதன் காரணங்களை விளக்குகிறேன். காரணங்களை நீக்கினால் தான் விளைவுகளைத் தடுக்க முடியும் என்கிறேன். இதைக் கொண்டு எளிமையாக ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமும் காரணமாக இருப்பதால் அந்த இரண்டையும் சமூகத்திலிருந்து நீக்குவதுதான் பாலியல் குற்றங்களை நீக்குதற்கான தீர்வு என்கிறது கம்யூனிசம். ஆனால் ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் தக்கவைத்துக்கொண்டு பெண்களை புர்கா அணிய வைப்பதன் மூலமும் கடுமையான சட்டங்களை நடைமுறைப் படுத்துவதின் மூலமும் பாலியல் குற்றங்களையும் நீக்கிவிட முடியும் என்பது இஸ்லாமியத் தீர்வு. இந்த இரண்டில் எது மேம்போக்கானது? எது ஆழமானது? நான் கம்யூனிசத்தீர்வுகளே சரியானதாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது என்பதை இதுவரையிலான பதிவுகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் நீங்கள் இஸ்லாமியத்தீர்வு சரியானது என்பதற்கான ஆழமான வாதங்களை எடுத்துவைக்காமல் என்னுடைய வாதங்களை மேம்போக்காக மறுப்பதிலேயே ஆர்வம் செலுத்துகிறீர்கள்.
\\குறுகியகாலமே நடைமுறையில் இருந்து காணாமல் போகிவிட்ட ,நடைமுறைபடுத்த இயலாத சோசலிசத்தையும் அதன்மூலம் தான் பாலியல் வன்முறைக்கு தீர்வுகாணமுடியும் என்பதையும் மறு பரிசிலனை செய்யத் தயாரா?// நிச்சயமாக. கம்யூனிசம் தரும் தீர்வை தவறு என நீங்கள் நிரூபித்துவிட்டால் அடுத்த கணமே சரியான தீர்வை நோக்கி நகர்ந்து விடுவதில் எந்தப் பிழையும் இல்லை. நான் தயார். நீங்கள் தயாரா என்பதுதான் கேள்வி. இஸ்லாமியத்தீர்வு என்ன? குரான் குறிப்பிடும் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும், பெண்கள் பிற அன்னிய ஆடவர்முன்னால் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பது தானே. 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக சௌதியில் இது நடைமுறையில் இருக்கிறது. உங்கள் வாதத்தை அப்படியே நான் ஒத்துக்கொள்கிறேன் என்று கூட வைத்துக்கொள்வோம். மற்ற நாடுகளைவிட சௌதியில் பாலியல் குற்றங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்றே கொள்வோம்(ஒரு வாதத்திற்கு) ஆக இஸ்லாமியத் தீர்வினால் பாலியல் குற்றங்களை கொஞ்சம் குறைக்கலாமே தவிர இல்லாமல் செய்ய முடியாது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? ஆனால் இதையே 100 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலவில் இருந்த சோசலிசத்தைக் கொண்டு பழைய ஜார் காலத்திய ரஷ்யாவைவிட சோசலிச காலத்து ரஷ்யாவில் பாலியல் குற்றங்களை குறைத்துக்காட்டினோம். 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒரு நாட்டில் சோசலிசம் அமலில் இருந்தால் அது உலகம் முழுவதிலும் தாக்கம் செலுத்தி, மக்களை போராடத்தூண்டி புரட்சியை நடத்தி சோசலிச சமூகமாக மாற்றியிருக்கும். முதலாளித்துவ சீரழிவுகளுக்கு மீண்டும் திரும்ப முடியாத தூரத்தில் சென்று பாலியல் மட்டுமல்ல அனைத்துவித குற்றங்களையும் சமூகத்திலிருந்து நீக்கிக் காட்டியிருக்கும். ஏனென்றால் அது அடிப்படையான விசயங்களைக் கொண்டிருக்கிறது, மதங்களைப் போல் மேம்போக்கானவைகளையல்ல.
இந்தமுறை நான் உங்கள் வாதங்களை வரிக்கு வரி எடுத்துக்கொண்டு பதிலளிக்கவில்லை. பொதுவாக வைத்து நான் தந்திருக்கும் இந்த விளக்கங்களே அவை எல்லாவற்றிற்குமான பதிலை உள்ளடக்கியிருக்கிறது என்பதால் தனித்தனியே மீண்டும் விளக்குவது நேர விரயமாக இருக்கும் என எண்ணுகிறேன். தனித்தனியே விளக்க வேண்டுமென்றாலும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
சனி, 11 டிசம்பர், 2010
- நண்பர் இப்ராஹிம்,நான் நடுவராக மாறவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளீர்கள். நடுவராவதற்கான எந்த எத்தனங்களையும் நான் செய்யவில்லை, செய்வதில்லை. ஆனால் வாதியாக இருந்து வாதங்களை வைப்பதோடு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? எடுத்துவைத்த வாதங்களுக்கு பதிலை எதிர்பார்ப்பதும், கிடைக்காத போது அதை வலியுறுத்துவதும் கூட வாதியின் உரிமைகளில் உள்ளதுதான். அந்த உரிமையில் தான் உங்களின் பதில்கூறும் முறைமையை விமர்சித்தேன். அதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை.உங்கள் மீது நான் வைக்கும் குற்றச்சாட்டு. நான் கேட்கும் கேள்விகளை, விளக்கங்களை வேறொன்றாக திரித்து மறுப்பளிக்கிறீர்கள் என்பது. இரண்டு வேறு வேறு நிலையில் இருக்கும் இருவர், எந்த நிலை சரி என்பது குறித்து விவாதிக்கையில்; ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் கேட்டவிதத்தில் பதில் கூறினால்தான் எது சரி எனும் முடிவை நெருங்க முடியும். மாறாக, கேள்வி ஒரு திசையிலும், பதில் வேறொரு திசையிலுமாக இருந்தால் அதனால் எந்தஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்பதுடன் முடிவையும் அடையமுடியாது. என்னுடைய பதில்களைப் பாருங்கள் உங்களுடைய கேள்வியை நான் திரித்திருக்கிறேன் என கூற முடியுமா நீங்கள்? ஆனால் உங்கள் பதில்……? இதோ எடுத்துக்காட்டுகிறேன்.௧) ஒரு பெண் ஆடையைக் குறைப்பதும், உடலை வெளிக்காட்டிக்கொள்வதே அழகு என நினைப்பதும் ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா? உலகில் பெண்ணாதிக்கம் என்ற ஒன்று எப்போதும் நிலவில் இருந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், அதன் பிறகிலிருந்து இன்றுவரை ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வருகிறான். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? உங்கள் கருத்து சரியானது என நீங்கள் நினைத்தால் அது எப்படி என்பதை விளக்குங்கள்௨) இனப்பெருக்கம் எனும் உண்மையான நோக்கம் மறைந்து ஆசை, இன்பம், காதல், காமம் என உடலுறவின் தளம் மாறியபோதுதான் பாலியல் குற்றங்களாக அது உருத்திரிந்தது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? மறுக்கிறீர்கள் என்றால் எப்படி?௩) இதில் இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? சட்டமும் தண்டனைகளும். 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக இஸ்லாம் கூறும் தீர்வு நடைமுறையில் இருந்தும் பாலியல் வறம்பு மீறல்களை ஒன்றும் செய்யமுடியவில்லை. இதுதான் நீங்கள் சிந்திக்க வேண்டிய இடம். குறுகிய காலமே நடைமுறையில் இருந்த சோசலிச நாடுகளின் மீது கேள்வி எழுப்பும் நீங்கள், நீண்டகாலம் நடைமுறையில் இருந்த பின்னரும் தோல்வியை தழுவியுள்ள இஸ்லாமிய தீர்வு குறித்து பரிசீலனை செய்யத் தயாரா?௪) ……..ஆகவே பாலியல் குற்றங்களுக்கான தொடக்கம் தனியுடமையில் இருக்கிறது. இதை மொட்டைத்தலை, முழங்கால் என நீங்கள் கருதினால், உங்கள் கருத்தை நிருவவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது௫) ……..இப்படி சகல துறைகளிலும் வியாபித்திருக்கும் ஆணாதிக்கம் தான் தன்னுடைய இன்பத்திற்காக, ஆசைக்காக, சுகிப்பிற்காக ஒரு பொருளைவிட அற்பமாக கசக்கி நுகர்ந்து எறிகிறது. ஆணாதிக்கம் இல்லை என்பது உங்கள் நிலைப்பாடாக இருந்தால் இவைகளுக்கு என்ன விளக்கமளிப்பீர்கள்?௬) ……..பெண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சலுகைப் பறிப்பிற்காக ஒரு பெண் போராடியிருக்கிறாள். இது எந்த விதத்தில் பெண்ணாதிக்கமாகும்? ஏற்கனவே தங்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை தொடரவேண்டும் என்பதற்காக ஒரு பெண் குரல் கொடுப்பது உங்களுக்கு பெண்ணாதிக்கமாய் தெரிகிறது என்றால், புரிகிறதா உங்களுக்கு ஆணாதிக்கத்தின் வீரியம் என்ன என்பது.௭) பாலியல் குற்றங்களில் ஆடை பிரதான பங்கு வகிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த நான் கேட்ட மூன்று கேள்விகளையுமே நீங்கள் பதில் கூறாமல் தவிர்த்திருக்கிறீர்கள். நான் கேட்டதற்கு பதில் கூறாமல் அதை வேறொன்றாக மாற்றி விளக்கம் கூறியுள்ளீர்கள்.இன்னும் பட்டியலிடலாம். இவைகளுக்கெல்லாம் முறையான பதிலை நீங்கள் கூறியிருக்கிறீர்களா? கூறியிருந்தால் என்னுடைய கேள்வியும் உங்களுடைய பதிலும் ஒத்திசைந்திருக்கிறதா என ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு விசயத்தை விளக்கி அதிலிருந்து கேள்வியை எடுத்துவைத்தால் நான் எழுதியிருப்பதில் ஒரு வரியை எடுத்துக்கொண்டு அதற்கு நான் கேட்பதற்கு தொடர்பில்லாத விளக்கத்தை அளித்திருப்பீர்கள்.ஆகவே உங்களின் நிலைப்பாட்டிலிருந்து நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் பதிலையும் மறுப்பையும் தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே ஓரிரு முறைகள் உங்கள் பதிலின் தன்மையை சுட்டிக்காட்டிவிட்டு என் பதில்களை தொடர்ந்திருந்தேன், ஆனால் நீங்கள் அவைகளை கண்டு கொள்ளவில்லை என்பதால்தான் நான் பதிலளிப்பதை நிறுத்திவைத்துவிட்டு உங்கள் பதில்களின் மீதான விமர்சனத்தை மட்டும் வைத்திருந்தேன். அதன் பிறகான உங்களின் பின்னூட்டத்திலும் உங்கள் பதில்களை நீங்கள் ஒப்பிடவோ சரிபார்க்கவோ இல்லை என்பதால் தான் மீண்டும் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறேன். புரிந்துகொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.செங்கொடி
செவ்வாய், 7 டிசம்பர், 2010
சைத்தான் தனது வாலை பெண் அதிகாரியிடம் நீட்டிக் கொள்ளும்
செங்கொடி .>>>தனியுடமை என்பது பொருட்களோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல, அது பெண்களோடும் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், ஆண்கள் பெண்களையும் ஒரு பொருளாகவே பாவிக்கிறார்கள்<<< இஸ்லாம் பெண்ணை பொருளாக பார்க்கவில்லை.பெண்ணின் உடல்வாகு வெளிப்படுத்தினால் அது கவர்ச்சியாக ஆணை ஈர்க்கும் காமப் பொருளாக மாறிவிடும் என்பதற்காக தான் அவள் முகங்களையும் கைகளையும் தவிர மற்றவற்றை மறைத்து அவளை பெண்ணாக ,மனுசியாக உலகுக்கு காட்டுகிறது.ஆதலின் இஸ்லாம் பெண்களை பொருளாக பார்க்கவில்லை.உடனே பார்த்தீர்களா ஆணாதிக்கத்தை என்பீர்கள்.நாயைக்கண்டு ஒதுங்கினால் அது நாயாதிக்கம் என்பீர்களா?
>>>பெண் சமூகத்தை தலைமை தாங்கியதை வீழ்த்தி, தலைமைப் பொறுப்பை ஆண் எடுத்துக்கொண்டான். இதுதான் பொதுவுடமையும் தனியுடமையும் பிரியும் காலகட்டம். பெண் தலைமை தாங்கியபோது சமூகம் பொதுவுடமையாய் இருந்தது,<<<உங்களின் இந்த கூற்றுக்கு ஆதாரம் தருவீர்களா?
பொதுஉடமை யிலும் தனி உடமையிலும் ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ ,ஆனால் இஸ்லாம் சொல்லுவதை பாருங்கள் ஆணுககு பெண் ஆடை ,பெண்ணுக்கு ஆண் ஆடை என்கிறது.எத்ததனை அர்த்தமுள்ள வார்த்தை இது .ஆணும் பெண்ணும் சமம் என்பதை இதைவிட எந்த இசமும் தனது கொள்கையை அறிவித்ததுண்டா?
.>>> \\உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையுடன் இருந்தால் ஆணைவிட பெண் முதன்மைப் படுத்தப்படும் சில அம்சங்களைக் கூறமுடியுமா?// என்று கேட்டிருந்தேன்,<<<ஆணைவிட பெண்ணை ஏன்முதன்மை படுத்தவேண்டும் ?.இருபாலரையும் சமமாக வைத்துள்ளது.எல்லாவற்றிலும் ஆண்கள் உயர்ந்தவர்களும் அல்லர்.எல்லாவற்றிலும் பெண்கள் தாழ்ந்தவர்களும் அல்லர்.எல்லாவற்றிலும் இருபாலினரும் சமமானவர்களும் அல்லர். இஸ்லாம். திருமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் .இருபாலரையும் இஸ்லாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறது.இருவரின் சம்மதமும் தேவை என்கிறது.இருவருக்கும் மன விலக்கு உரிமை உள்ளது.மேலும் இஸ்லாம் ஆண்களுக்கு பெண்கள் மீது உரிமைகள் இருப்பது போன்றே பெண்களுக்கும் ஆண்கள்மீது உரிமை இருக்கின்றது.என்பதையும் வலியுறுத்தி கூறியுள்ளது.நபிமொழி வரலாற்று தொகுப்பிலிருந்து நீங்கள் கேட்டாற்போல் பெண்ணை முதன்மை படுத்தும் ஒரு வரலாற்று குறிப்பை பாருங்கள்.ஒரு நபித் தோழர் ,நபி[ஸல்] அவர்களிடம் வந்து ,இறைதூதரே ,உலகில் நான் அதிகமாக யாருக்கு கடமைப் பட்டிருக்கேன் என்று கேட்டார்.நபி [ஸல்] உன் "தாயாருக்கு" என்று பதில் அளித்தார்கள்.மீண்டும் அத்தோழர்,தாயாருக்குப் பின் அடுத்து யாருக்கு என்று கேட்டார்.அடுத்தும் உன் தாயார்தான் என்று [நபி] அவர்கள் கூறினார்கள்.அடுத்ததாக யாருக்கு என்று மூன்றாவது தடவையாக கேட்டார் .அதுவும் உன் தாயார்தான் என்று நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.அதன் பின்னரும் நபிதோழர் "நான்காவதாக நான் யாருக்கு கடமைப் பட்டுள்ளேன்?என்று கேட்டார் அதற்க்கு நபி;ஸல்]அவர்கள் அது உன் தந்தையாவார்.என்று கூறினார்கள்.சரி ஆணைவிட பெண்ணை முதன்மை படுத்தும் அம்சங்களை கம்யுனிசத்தில் உள்ளதா? அதைக் கூறமுடியுமா?
2"]பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமுமே காரணம். கம்யூனிசம் இந்த இரண்டும் இல்லாத சமூகத்தை அமைப்பதில் துடிப்புடன் இருக்கிறது".
'.சோசலிசத்தை நாங்கள் எப்படி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்போகிறோம் அதற்கு எவ்வளவு காலம்பிடிக்கும், சோசலிசப் பாலத்தை நாங்கள் இழந்திருக்கிறோமா இல்லையா என்பன போன்றவையெல்லாம் நம்முடைய விவாதத்திற்கு அப்பாற்பட்ட விசயங்கள் என்பதை மீண்டுமொருமுறை உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்"
மேலே உள்ளது இரண்டும் உங்கள் கூற்று.முதலில் பாலியல் குற்றங்களுக்கு காரணமான ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் இல்லாத சமூகத்தை அமைக்க கம்யுனிஸ்ட் துடிப்புடன் இருப்பதாகக் கூறும் நீங்கள் பிறகு நம் விவாதத்திற்கு அப்பார்ப்பட்ட விஷயம் என்கிறீர்கள்.அவ்வாறெனின் விஜயகாந்த் ரமணா போன்று சினிமா தயாரிப்புதான் கம்யுனிசமா?
"சில நாடுகளில் பெண்களுக்கு காரோட்ட அனுமதியில்லை புரியுமா உங்களுக்கு?"
இது போன்ற அனுமதி கொடுத்த நாடுகளில் அனுமதி கொடுக்காத நாடுகளைவிட பாலியல் வன்முறை கூடுதலா?குறைவா?நீங்கள் கூறும் பெண்ணுரிமைகளை இஸ்லாம் தடுக்கவில்லை.ஹீரா என்ற பெண் தனியாய் ஹஜ் செய்ய குதிரையில் வருவாள் என்று நபி[ஸல்] அவர்களின் முன்னறிவிப்பும் பின் அந்த சம்பவமும் நடந்துள்ளது,என்பது வேறு விஷயம்.இஸ்லாம் இதையெல்லாம் நிர்பந்தமான நேரங்களில் அனுமதிக்கிறது.மேலும் நீங்கள் கூறும் பெண்ணுரிமைகளை இஸ்லாம் மறுக்கவில்லை.ஒரே வேலைக்கு ஆணுககு பெண்ணுக்கு வெவ்வேறு கூலியெல்லாம் இப்போது இருப்பதாக தெரியவில்லை.இது போன்ற பெண்ணுரிமைகள் கிடைத்த பிறகு பாலியல் வன்முறைகள் கூடி இருக்கின்றன.
ஒரு பெண் தங்களுடைய உரிமைக்காக போராடிய வரலாற்று செய்தியை கதை என்று சொல்லுவது சரியா?இஸ்லாம் பெண்களை மதிக்கும் கண்ணியத்தை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை,இந்த எரிச்சல்தான் கதை என்று சொல்லவைத்துள்ளது.[ஜனநாயகத்தைப் பற்றி ஸ்டாலின் ரசிகர் விளக்கத்தேவை இல்லை.]
"மனைவி அழைக்கும்போது கணவன் மறுத்தால்? இந்த விசயத்தின் ஏன் ஹதீஸில் ஒழுக்கவிதி இல்லை"? என்று கேட்டுள்ளீர்கள்.
மனைவி அழைக்கும் போது கணவன் மறுக்கமாட்டான்.என்பது இயல்பு அதனால் அதற்க்கான விதிகள் தேவை இல்லை.பெண்கள் குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் ஊட்டவேண்டும் என்கிறது இஸ்லாம்.பெண்கள் மட்டும்தான் ஊட்ட வேண்டுமா?ஆண்கள் ஓராண்டு,பெண்கள் ஓராண்டு ஊட்டக்கூடாதா?என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள்.ஆண்களுக்கம் பெண்களுக்கும் உடற்கூறு ரீதியாக மனரீதியாக சில வேற்றுமைகள் இருக்கவே செய்கின்றன. ஆணுககு பெண் ஆடை :பெண்ணுக்கு ஆண் ஆடை என்றும் ஆணுககு பெண்ணின் மீதுள்ள உரிமை பெண்ணுக்கும் ஆண்மீதுள்ளது என்று சமத்துவம் பேசும் இஸ்லாம் இந்த வேற்றுமைகளைக் கொண்டு ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக சில விதிகளை கூறுகிறது.நபிகள் காலத்து பெண்கள் எந்த அளவுக்கு உரிமை பெற்று இருந்தார்கள் என்பதற்கு நபி வழி வரலாற்று தொகுப்பிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பை பாருங்கள்."இறைத் தூதரே |உங்களுடன் ஆண்கள் தான் அதிக நேரம் இருக்கிறார்கள் ,அதனால் உங்கள் அறவுரைகளை அவர்கள்தான் அதிகமாக பெறுகிறார்கள். எங்களுக்கு அந்த அளவுக்கு மார்க்க விசயங்கள் கிடைப்பதில்லை.இந்த குறையை நிவர்த்தி செய்யுங்கள் என கோரிக்கை வைக்கின்றனர்.உடன் நபி[ஸல்] அவர்களும் இனி வியாழக் கிழமை தோறும் பெண்களுக்கு அறவுரைக்காக நேரம் ஒதுக்கித் தருவதாக கூறுகிறார்கள். நபிகள் காலத்து பெண்கள் ஆண்களுக்கு சின்ன விசயங்களிலும் போட்டியிடுகிறார்கள் என்றால் ஆண்களுக்கு இணையாய் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கி கொள்ளமுடிகிறது.
பெண்ணின் உணர்வுகளை மதிக்கும் ஒரு நிகழ்வை பாருங்கள்.ஒரு நபி[ஸல்] காலத்திய பெண் ,தனது கணவரிடம் தன்னுடைய பாலியல் உணர்வுகள் திருப்தியடைய வில்லை என்பதை மறைமுகமாகவும் நாசுக்காகவும் வெளிப்படுத்தி தனது கணவரிடம் இருந்து மணவிலக்கு பெறுகிறார்.
பழங்குடியினரின் விசயத்தில் பாலியல் சார்ந்த குற்றங்கள் இருந்தாலும் அங்கு ஆடை முக்கியமானதாக இருக்கவில்லை என கூறியுள்ளீர்கள்.பெண்கள் மேலாடை இல்லாமை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. கீழாடை யை இன்னும் குறைவாகவோ,அது இல்லாமலோ இருந்தால் பழங்குடியினரிடம் அதன் காரணமாக பாலியல் குற்றங்கள் இன்னும் கூடுதலாகக் கூடும்.அல்லது பழங்குடியினர் மேலாடை அணிந்தால் பாலியல் குற்றங்கள் குறைவாகிவிடும்.புர்கா அணிந்த முஸ்லிம் பழங்குடியினர் ஒருவேளை அங்கு இருந்தால் மேலாடை அணியாத பழங்குடியினரை விட பாலியல் குற்றங்கள் முஸ்லிம் பழங்குடியினரிடம் குறைவாக இருக்கும் .
3]நீச்சல் உடை அணிந்த பெண்ணிடமே காம உணர்வு மிகுதியாக ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட தாங்கள் அதன் பின் ஆணாதிக்க கருத்தியல் என்று சப்பைகட்ட முயலுவது சரியா?கம்யுனிஸ்ட் கூண்டில் நின்றுகொண்டு "அக்கக்கோ" என்று பாடிகொண்டிருப்பது போல் தெரிகிறது. நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,"கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள்
+எடுத்துக்காட்டாக சௌதியையே கொள்வோம், இஸ்லாம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக அங்கு இஸ்லாமிய சட்ட தண்டனை முறைகள் தான் அதிகாரத்தில் இருக்கிறது+இது உங்கள் கூற்று..
இஸ்லாத்தின் தீர்வுக்கு சவுதியை எடுத்துக் கொள்வோம் ,கம்யுனிஸ்ட் தீர்வுக்கு சோஷலிச காலத்து ரஷ்யாவை எடுத்துக் கொள்வோம் .சம காலத்தில் பாலியல் குற்றங்கள் எங்கு அதிகமாக நடந்துள்ளது என்பதை விக்கி பிடியா புள்ளிவிவரத்தை ஆதாரமாக கொள்வோமா?சவுதியில் அனைத்து குற்றங்களும் பதிவு செய்யப் படவில்லை என்று கூறும் நீங்கள் சோஷலிச காலத்திய ரஷ்யாவிலும் அதேநிலை இல்லை என்று உங்களால் மறுக்க முடியாது.
2"]பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமுமே காரணம். கம்யூனிசம் இந்த இரண்டும் இல்லாத சமூகத்தை அமைப்பதில் துடிப்புடன் இருக்கிறது".
'.சோசலிசத்தை நாங்கள் எப்படி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்போகிறோம் அதற்கு எவ்வளவு காலம்பிடிக்கும், சோசலிசப் பாலத்தை நாங்கள் இழந்திருக்கிறோமா இல்லையா என்பன போன்றவையெல்லாம் நம்முடைய விவாதத்திற்கு அப்பாற்பட்ட விசயங்கள் என்பதை மீண்டுமொருமுறை உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்"
மேலே உள்ளது இரண்டும் உங்கள் கூற்று.முதலில் பாலியல் குற்றங்களுக்கு காரணமான ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் இல்லாத சமூகத்தை அமைக்க கம்யுனிஸ்ட் துடிப்புடன் இருப்பதாகக் கூறும் நீங்கள் பிறகு நம் விவாதத்திற்கு அப்பார்ப்பட்ட விஷயம் என்கிறீர்கள்.அவ்வாறெனின் விஜயகாந்த் ரமணா போன்று சினிமா தயாரிப்புதான் கம்யுனிசமா?
"சில நாடுகளில் பெண்களுக்கு காரோட்ட அனுமதியில்லை புரியுமா உங்களுக்கு?"
இது போன்ற அனுமதி கொடுத்த நாடுகளில் அனுமதி கொடுக்காத நாடுகளைவிட பாலியல் வன்முறை கூடுதலா?குறைவா?நீங்கள் கூறும் பெண்ணுரிமைகளை இஸ்லாம் தடுக்கவில்லை.ஹீரா என்ற பெண் தனியாய் ஹஜ் செய்ய குதிரையில் வருவாள் என்று நபி[ஸல்] அவர்களின் முன்னறிவிப்பும் பின் அந்த சம்பவமும் நடந்துள்ளது,என்பது வேறு விஷயம்.இஸ்லாம் இதையெல்லாம் நிர்பந்தமான நேரங்களில் அனுமதிக்கிறது.மேலும் நீங்கள் கூறும் பெண்ணுரிமைகளை இஸ்லாம் மறுக்கவில்லை.ஒரே வேலைக்கு ஆணுககு பெண்ணுக்கு வெவ்வேறு கூலியெல்லாம் இப்போது இருப்பதாக தெரியவில்லை.இது போன்ற பெண்ணுரிமைகள் கிடைத்த பிறகு பாலியல் வன்முறைகள் கூடி இருக்கின்றன.
ஒரு பெண் தங்களுடைய உரிமைக்காக போராடிய வரலாற்று செய்தியை கதை என்று சொல்லுவது சரியா?இஸ்லாம் பெண்களை மதிக்கும் கண்ணியத்தை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை,இந்த எரிச்சல்தான் கதை என்று சொல்லவைத்துள்ளது.[ஜனநாயகத்தைப் பற்றி ஸ்டாலின் ரசிகர் விளக்கத்தேவை இல்லை.]
"மனைவி அழைக்கும்போது கணவன் மறுத்தால்? இந்த விசயத்தின் ஏன் ஹதீஸில் ஒழுக்கவிதி இல்லை"? என்று கேட்டுள்ளீர்கள்.
மனைவி அழைக்கும் போது கணவன் மறுக்கமாட்டான்.என்பது இயல்பு அதனால் அதற்க்கான விதிகள் தேவை இல்லை.பெண்கள் குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் ஊட்டவேண்டும் என்கிறது இஸ்லாம்.பெண்கள் மட்டும்தான் ஊட்ட வேண்டுமா?ஆண்கள் ஓராண்டு,பெண்கள் ஓராண்டு ஊட்டக்கூடாதா?என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள்.ஆண்களுக்கம் பெண்களுக்கும் உடற்கூறு ரீதியாக மனரீதியாக சில வேற்றுமைகள் இருக்கவே செய்கின்றன. ஆணுககு பெண் ஆடை :பெண்ணுக்கு ஆண் ஆடை என்றும் ஆணுககு பெண்ணின் மீதுள்ள உரிமை பெண்ணுக்கும் ஆண்மீதுள்ளது என்று சமத்துவம் பேசும் இஸ்லாம் இந்த வேற்றுமைகளைக் கொண்டு ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக சில விதிகளை கூறுகிறது.நபிகள் காலத்து பெண்கள் எந்த அளவுக்கு உரிமை பெற்று இருந்தார்கள் என்பதற்கு நபி வழி வரலாற்று தொகுப்பிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பை பாருங்கள்."இறைத் தூதரே |உங்களுடன் ஆண்கள் தான் அதிக நேரம் இருக்கிறார்கள் ,அதனால் உங்கள் அறவுரைகளை அவர்கள்தான் அதிகமாக பெறுகிறார்கள். எங்களுக்கு அந்த அளவுக்கு மார்க்க விசயங்கள் கிடைப்பதில்லை.இந்த குறையை நிவர்த்தி செய்யுங்கள் என கோரிக்கை வைக்கின்றனர்.உடன் நபி[ஸல்] அவர்களும் இனி வியாழக் கிழமை தோறும் பெண்களுக்கு அறவுரைக்காக நேரம் ஒதுக்கித் தருவதாக கூறுகிறார்கள். நபிகள் காலத்து பெண்கள் ஆண்களுக்கு சின்ன விசயங்களிலும் போட்டியிடுகிறார்கள் என்றால் ஆண்களுக்கு இணையாய் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கி கொள்ளமுடிகிறது.
பெண்ணின் உணர்வுகளை மதிக்கும் ஒரு நிகழ்வை பாருங்கள்.ஒரு நபி[ஸல்] காலத்திய பெண் ,தனது கணவரிடம் தன்னுடைய பாலியல் உணர்வுகள் திருப்தியடைய வில்லை என்பதை மறைமுகமாகவும் நாசுக்காகவும் வெளிப்படுத்தி தனது கணவரிடம் இருந்து மணவிலக்கு பெறுகிறார்.
பழங்குடியினரின் விசயத்தில் பாலியல் சார்ந்த குற்றங்கள் இருந்தாலும் அங்கு ஆடை முக்கியமானதாக இருக்கவில்லை என கூறியுள்ளீர்கள்.பெண்கள் மேலாடை இல்லாமை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. கீழாடை யை இன்னும் குறைவாகவோ,அது இல்லாமலோ இருந்தால் பழங்குடியினரிடம் அதன் காரணமாக பாலியல் குற்றங்கள் இன்னும் கூடுதலாகக் கூடும்.அல்லது பழங்குடியினர் மேலாடை அணிந்தால் பாலியல் குற்றங்கள் குறைவாகிவிடும்.புர்கா அணிந்த முஸ்லிம் பழங்குடியினர் ஒருவேளை அங்கு இருந்தால் மேலாடை அணியாத பழங்குடியினரை விட பாலியல் குற்றங்கள் முஸ்லிம் பழங்குடியினரிடம் குறைவாக இருக்கும் .
3]நீச்சல் உடை அணிந்த பெண்ணிடமே காம உணர்வு மிகுதியாக ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட தாங்கள் அதன் பின் ஆணாதிக்க கருத்தியல் என்று சப்பைகட்ட முயலுவது சரியா?கம்யுனிஸ்ட் கூண்டில் நின்றுகொண்டு "அக்கக்கோ" என்று பாடிகொண்டிருப்பது போல் தெரிகிறது. நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,"கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள்
+எடுத்துக்காட்டாக சௌதியையே கொள்வோம், இஸ்லாம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக அங்கு இஸ்லாமிய சட்ட தண்டனை முறைகள் தான் அதிகாரத்தில் இருக்கிறது+இது உங்கள் கூற்று..
இஸ்லாத்தின் தீர்வுக்கு சவுதியை எடுத்துக் கொள்வோம் ,கம்யுனிஸ்ட் தீர்வுக்கு சோஷலிச காலத்து ரஷ்யாவை எடுத்துக் கொள்வோம் .சம காலத்தில் பாலியல் குற்றங்கள் எங்கு அதிகமாக நடந்துள்ளது என்பதை விக்கி பிடியா புள்ளிவிவரத்தை ஆதாரமாக கொள்வோமா?சவுதியில் அனைத்து குற்றங்களும் பதிவு செய்யப் படவில்லை என்று கூறும் நீங்கள் சோஷலிச காலத்திய ரஷ்யாவிலும் அதேநிலை இல்லை என்று உங்களால் மறுக்க முடியாது.
மன நிலை மாற்றி திருத்திவிடுவோம் என்பது// ,,,,,,,,,,, கம்யூனிசம் கூறும் தனியுடமை, ஆணாதிக்கத்தை ஒழிப்பது என்பது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் என்பதைவிட வேறுபாடானது. அது உங்களுக்கு புரியவில்லை என்றால் கேளுங்கள் விளக்குகிறேன். நான் கூறுவதை வேறொன்றாக திரிக்க வேண்டாம்;
நீங்கள் வானை வில்லாக வளைக்கவும் வேண்டாம்,மணலை கயிறாக திரிக்கவும் வேண்டாம் மனநிலை மாற்றி திருத்திடுவோம் என்பது உண்மை என்றால் முதலில் உங்கள் ம.க.இ.க.வினரை சமநிலை சமுதயாமாக மாற்றி காட்டுங்கள்.
நீங்கள் வானை வில்லாக வளைக்கவும் வேண்டாம்,மணலை கயிறாக திரிக்கவும் வேண்டாம் மனநிலை மாற்றி திருத்திடுவோம் என்பது உண்மை என்றால் முதலில் உங்கள் ம.க.இ.க.வினரை சமநிலை சமுதயாமாக மாற்றி காட்டுங்கள்.
குறைவான ஆடையணிந்த பெண் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கும் சைத்தான்; அந்தப் பெண் ஆணிடம் வேலை செய்யும் வேலைக்காரியாக இருந்தால் வேலையைக் காட்டிவிடும். <<<நான் ஏற்கனவே கூறியுள்ளேன் ,ஒரு பெண்ணுக்கு பாலியல் தேவை ஏற்படும் போது எளிதாக ஆண் கிடைத்துவிடுவான்,நீங்கள் சொல்லும் குறைவானா ஆடை அணிந்த பெண் அதிகாரி,தனது பாலியல் தேவைக்கு தனது கீழ் வேலை செய்யும் ஆணை எதிர்ப்பு இன்றி பயன் படுத்திக் கொள்வாள்.அதாவது சைத்தான் வாலை சுருட்டிக்கொண்டு இருக்காது சைத்தான் தனது வாலை பெண் அதிகாரியிடம் நீட்டிக் கொள்ளும் .மூன்றவதாக இருக்கும் சைத்தான் ஆணிடம் மட்டும் வராது ,பெண்ணிடமும் வரும் இந்த இடத்தில் உங்களிடம் தான் ஆணாதிக்கம் உள்ளது.
. மனிதனின் காம உணர்வு சிந்தனை, அறிவு உள்ளிட்ட அனைத்தும் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஒவ்வொருவரின் சிந்தனை செயல் பேச்சு அனைத்தின் பின்னேயும் வர்க்கம் இருக்கிறது.
உங்கள் ம.க.இ.க.வினர் அனைவருக்கும் ஒரே மாதிரி உணர்வுகளை கொண்டுவந்து விட்டீர்களா? அதுவரை அது ஏட்டுசுரைக்காய் தான் .
உங்கள் ம.க.இ.க.வினர் அனைவருக்கும் ஒரே மாதிரி உணர்வுகளை கொண்டுவந்து விட்டீர்களா? அதுவரை அது ஏட்டுசுரைக்காய் தான் .
"இவைபோன்ற அபத்தங்களுக்கெல்லாம் கம்யூனிசமே முடிவுகட்டும்."
இரண்டாவது திருமணத்திற்கான காரணத்தை கூறியிருந்தேன் அதை மறுக்க இயலாது ,1400 ஆண்டுகளாக செயல் பட்டுகொண்டிருக்கும் இஸ்லாத்தை ஒரே நூற்றாண்டில் முடிவு கட்டப்பட்ட கம்யுனிசம் முடிவுகட்டும் என்பது அபத்தமல்லவா?
இரண்டாவது திருமணத்திற்கான காரணத்தை கூறியிருந்தேன் அதை மறுக்க இயலாது ,1400 ஆண்டுகளாக செயல் பட்டுகொண்டிருக்கும் இஸ்லாத்தை ஒரே நூற்றாண்டில் முடிவு கட்டப்பட்ட கம்யுனிசம் முடிவுகட்டும் என்பது அபத்தமல்லவா?
சட்டம் தான் ஏட்டுச்சுரைக்காயாக, மேலெழுந்தவாரியாக இருக்கிறது என்பதை விளக்கியிருந்தேன்;
எங்கே விளக்கியிருந்தீர்கள்?இஸ்லாமிய சட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது .இஸ்லாமிய சட்டம் அமெரிக்க ஆதிக்கம் இல்லாமல் இருந்தால் இன்னும் சவூதி அரசு இஸ்லாமிய அறிஞரகளின் ஆலோசனையோடு செயல்பட்டால் வட்டி இல்லா வங்கிகளின் செயல்பாடு போல் திறம்பட செயல்பட்டு உலகுக்கு வழிகாட்டலாக இருந்திருக்கும்
எங்கே விளக்கியிருந்தீர்கள்?இஸ்லாமிய சட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது .இஸ்லாமிய சட்டம் அமெரிக்க ஆதிக்கம் இல்லாமல் இருந்தால் இன்னும் சவூதி அரசு இஸ்லாமிய அறிஞரகளின் ஆலோசனையோடு செயல்பட்டால் வட்டி இல்லா வங்கிகளின் செயல்பாடு போல் திறம்பட செயல்பட்டு உலகுக்கு வழிகாட்டலாக இருந்திருக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)