வியாழன், 30 ஜூன், 2011


கம்யுனிசம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்  
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – I,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – III,

வெள்ளி, 20 மே, 2011


பண்ணையில் இஸ்லாம்

பள்ளிவாசலின் உட்புறம்.

பள்ளிவாசலின் வெளித்தோற்றம்


,










அஸ்ஸலாமுஅலைக்கும்.. தப்லீக்ஜமாத்தின் சாதனை:நமதூரில் முப்பது ஆண்டு காலமாக மவ்லவி முஹம்மது மைதீன் பாக்கவி என்பவர் இமாமாக இருந்துவந்தார்.இவரது கம்பீரமான தோற்றமும் குரல்வளமும் மக்களிடம் இவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத்தந்தது.இவரது தந்தையும் ஆலிம்தான் மிகுந்த தக்வாதாரி .கண்ணியமிக்கவர்.தனது தள்ளாத வயதிலும் சிறுவர்களுக்கு கூட முதலில் சலாம் சொல்லும் இயல்பு உடையவர்.ஆனால் அவர் தம் மைந்தரோ அதற்கு நேர் மாற்றம் .இன்னார் எனக்கு சலாம் சொல்லவில்லை என்று புகார் சொல்லும் வழக்கமுடையவர். 1983 இல் இவர் மரணம் அடைந்தபோது அவரது மகனாகிய இமாம் முஹம்மது மைதீன் மௌலவி தனது தந்தையை தனது சொந்த ஊரான  மேலப்பாலயத்தில் அடக்கம் செய்யப்போவதாக சொன்னார். ஆனால் மக்கள் வற்புறுத்தலின்  பேரில் ஆராம்பண்ணைனையில் தனி இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு தனது தந்தையின் கப்ரில் தர்கா கட்ட அனுமதி கேட்டார்.பலர் அனுமதி கொடுக்கமுன் வந்ததும் தப்லீக் ஜமாத்தில் முக்கியமான சிலர் கொதித்தெழுந்தனர்.தர்கா கட்ட அனுமதி மறுத்தனர்.இதனால் இமாம் ஊரைவிட்டு போகப்போவதாக மிரட்டினார்.அவரின் ஆதரவாளர்கள் ஆத்திரமுற்றனர்.தர்கா கட்டுவதற்கு அனுமதி அளிக்குமாறு நிர்வாகத்தை வலியுறித்தி வந்தனர்.இருந்தாலும் நிர்வாகத்தில் இருந்த தப்லீக்ஜமாத்தினர் தர்கா கட்டுவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்ததால் இமாம் ,வேலையைவிட்டு விலகி மேலப்பாளையம் சென்றார்.இவர் விலகியதும் இவரது ஆதரவாளர்கள் பிரிவு உபச்சார விழா நடத்தினார்கள்.அதில் டிஜெஎம்.சலாவுத்தின் ஆராம்பன்னையில் அராஜாகம் நடந்ததால் முஹம்மது மைதீன் மௌலவி ஹிஜ்ரத் செய்ததாக வர்ணித்தார்.கள்ளனுக்கு கள்ளன் புகழாரம் .
மேலாப்பாலயத்தில் தனது தந்தையின் தர்காவை துவங்கி  வருடந்தோறும் முப்பெரும் விழா நடத்தி வருகிறார் .தப்லீக் ஜமாத்தினரின் பெரும் முயற்சியால் நமதூரில் குப்ரியத் தடுக்கப்பட்டது.தப்லிக் ஜமாத்தில் முதன்மையாக இருந்தவர்கள் ,நண்ணி அஹ்மது மைதின் அவர்களும்,காசுலெப்பை மதார் மைதின் அவர்களும் ஆவார்கள். இப்போதைய நமதூர் தப்லிக் ஆக இருந்தால் கர சேவை செய்து தர்கா கட்டியிருப்பார்கள்.மேலும் மவுலவி.முஹம்மது மைதீனின்  தந்தை அவர்களை இறைவன் நல்லடியாராக ஏற்று கொண்டதால்தான் அன்னார் நமதூரில் அடக்கம் செய்யப்பட்டார் போலும் . இல்லையெனில் அவரது கப்ர் சிர்க்குகளும் அனாச்சாரங்களும் நிறைந்த விழா நடைபெறும் இடமாக ஆகியிருக்கும். இறைவனே அனைத்தையும் அறிந்தவன்.
ஆராம்பன்னையில்  21/05/2011 அன்று  நடந்த  இரத்ததான  படங்கள் 

                 

திங்கள், 16 மே, 2011


மதஹபை முழுமையாக விசமி பின்பற்றத் தயாரா?

Sunday, May 15, 2011 10:43 PM Posted by பொய்யன் டிஜே0 comments


மார்க்கத்தை முழுமையாக அறியாத மந்தி, பிஜேவை மட்டும் எதிர்த்தால் போதும் என்ற நோக்குடைய கூட்டத்தில் சேர்ந்து கும்மியடிக்கும் விசமி தான் இந்த சம்சுதீன் காசுமி. இந்த விசமியின் கேடு கெட்டச் செயல்களை பட்டியலிட்டு காட்டி அவரது முகத்திரையை முந்தய பதிவில் கிழித்தோம்.
இந்த விசமி ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளித்த போது, வெறும் குர்ஆன் ஹதீஸை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆனாலும் நாம் தொழுகவே போகவே முடியாது. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றி அவர்களின் விளக்கத்தைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கான வீடியோ காட்சி.

ஒளு செய்வதற்கு எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிக்க வேண்டும் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள தெளிவான ஹதீஸ்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும்மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160
இதை விசமி படித்து விட்டே வேண்டுமென்றே மறைக்கிறார் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. மதஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என அடித்துச் சொல்லும் இவர், அதே இமாம்கள் எழுதிவைத்த குடும்பவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா? என பகிரங்மாக அறிவிக்கத் தயாரா?
1) ஹனபி மதஹபில் ஒரு பெண்ணை கன்னியா என கண்டுபிடிப்பதற்கு முட்டை பரிசோதனை ஒன்று கூறப்பட்டுள்ளது. மதஹபைப் பின்பற்ற வேண்டும் என மற்றவர்களை வலியுறுத்தும் இவர் தன் குடும்பப் பெண்களை யாராவது பெண் பார்க்க வரும் போது இதை அமுல்படுத்துவாரா?
2) ஹஜ்ஜில் இஹ்ராம் அனிந்த ஒரு ஆண் மகன், ஒருகழுதையுடன் உறவு கொண்டால் அவருக்கு ஒளு முறியாது, அதே நேரம் ஒரு பெண் கழுதையுடனோ அல்லது வெட்டிப்போட்ட கழுதையின் ஆண்குறியை வைத்தோ உறவை மேற்கொண்டால் அவளது ஒளு முறியும் என்ற மதஹபுச் சட்டத்தை தன்னுடைய மக்கா ஹஜ் சர்வீஸ் மூலம் சட்டமாக அமுல்படுத்த இந்த மவ்லானா தயாரா?
3) ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போய் விட்டால் அவள் 90 வருடம் இத்தா இருக்க வேண்டும் என்ற அதிபுத்திசாலி மதஹபு சட்டத்தை மக்கா ஷரியத் சார்பில் அமல்படுத்த தயாரா?
4) திருடச்செல்லும் இரண்டு பேர் ஒருவர் வெளியே நிற்க, மற்றவர் உள்ளே செல்ல, உள்ளே சென்றவர் பொருட்களை எடுத்து வெளியே போட, அதை வெளியே இருப்பவர் எடுத்துக் கொண்டு சென்றால் அது திருட்டு ஆகாது என்ற அறிவுப்பூர்வமான மதஹபு சட்டத்தை சம்சுதீன் காசிமி அவர்களின் வீட்டில் வந்து அமல்படுத்தினால் அவர் காவல்துறையில் கம்ப்ளைண்டு கொடுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தயாரா?
5) ஊமைப்பெண்ணைக் கற்பழித்தால் அவனுக்கு தண்டனை இல்லை என சொல்லும் அற்புதமான மதஹபுச் சட்டத்தை அண்ணன் காசிமி அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா?
6) குழந்தையைக் கடத்திச்சென்று நகை பறித்தால் அது குற்றமாகாது என்ற பிரமாதமான மதஹபுச் சட்டத்தை மவ்லானா மௌலவி அவர்களின் வீட்டுக்குழந்தைகள் மீது சோதனை செய்து பார்த்தால் மவ்லானா ரிஸ்க் எடுப்பாரா? அல்லது மவ்லானா என்ற கம்பெனி ரஸ்கைப் போல இருந்து விடுவாரா?
7) கராமத் (அற்புதம்) முறையில் மஸ்ரிக் மற்றும் மஹ்ரிப் (கிழக்கு மற்றும் மேற்கு) திசையில் இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டு 6 மாத்த்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற அற்புத மதஹபுச் சட்டத்தை மவ்லானா ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்திற்கு அமல்படுத்துவாரா?

இதுபோன்ற கேவலமான மதஹபுச் சட்டங்கள் இன்னும் 1000 இருக்கிறது. ஆனால் இது கொஞ்சமே போதும். இதையெல்லாம் அமுல்படுத்தினால் தான் விசமி உண்மையாகவே மதஹபைப் பின்பற்றுகிறார் என்று அர்த்தம். ஆனால் அதை நியாயப்படுத்த மேற்கண்ட கட்டளைகளை அவர் நடைமுறைப் படுத்த வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம். இந்த விசமி என்ன சொல்கிறது என்று!!!

சனி, 30 ஏப்ரல், 2011


நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா

Friday, April 29, 2011 10:12 PM Posted by பொய்யன் டிஜே

மேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?அடுத்த  ஆண்டு ஆறாம்பண்ணை சிந்தாதர்கா கலீபாவும் விழா கமிட்டியினரும் நாகூர் கலிபாவை விட சிறந்த குத்தாட்டம் போட்டு தவ்ஹித் ஜமாத்தினரின் மூக்கை உடைப்பார்களா? 
இன்சா அல்ல்லாஹ் அடுத்த ஆண்டு ஆராம்பன்னையிலும் சிந்தா கலீபாவும் அவர்களது பண்ணை சிஷ்யர்களும் இதை விட சிறப்பாக  குத்தாட்டம் போட்டு தவ்ஹித் ஜமாத்தின் மூக்கை உடைப்பார்கள்.

வியாழன், 28 ஏப்ரல், 2011

நம்மால் முடியும்

        அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திரு பெயரால்,                                                                                                                       

விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக,அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக|உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்'நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.        குர்ஆன்16';125                                                                                                                                                                 அன்பார்ந்த இளைஞர்களே| அஸ்ஸலாமு அலைக்கும்.                                                                                                  பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருப்பதாலோ என்னவோ நமது இளைஞர்கள் அவ்விளையாட்டில் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர்.குக்கிராமத்திலும் இருபதினாயிரம் செலவழித்து டோர்ணமன்ட் நடத்தும் அளவில் ஆர்வமாய் உள்ளனர்.இந்த ஆர்வம் இந்தியன் டீமில் முஸ்லிம்கள் இரண்டு அல்லது மூன்று பேர் சிலசமயங்களில் நான்கு பேர்களை கூட இருக்க வைத்துள்ளது.இது 20percent க்கும் அதிகம்.ஆனால் இந்திய,மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் 2percent க்கும் குறைவு.நாம் எந்த வகையிலும் எவரை விடவும் ஆற்றலில் குறைந்தவர்கள் அல்ல என்பதற்கு கிரிக்கெட் ஒரு சாட்சி.இன்னும் 90 களில் 10th,plus2 ரிசல்ட் ஐ  பார்த்தால் டாப் 10 rank holder களில் ஒரு முஸ்லிம் பெயரைக்கூட பார்க்க முடியாது.2000 க்கு பிறகு பல ஆண்டுகள் state 1st முதல் 10th ரேங் வரை பல முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற ஆரம்பித்தனர்.அது மட்டுமன்று பல ஸ்கூல்கள் தங்களது ஸ்கூலின் டாப்பெர்ஸ் லிஸ்ட் ஐ விளம்பர படுத்தும் போது பார்த்தால் அதில் இருபது முதல் நாற்ப்பது சதவீதம் வரை முஸ்லிம் மாணவர்கள் இடம்பெறுவதை பார்க்கமுடிகிறது.ஆம் ,நாம் படிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதையே இந்த தேர்வு முடிவுகள் காட்டுகின்றன.நாம் கல்வியில் நல்லதொரு வழிகாட்டலுடன் நமது முனைப்பை காட்டினால் இட ஒதுக்கீடு அவசியமே என்பது ஒரு புறம் ,இட ஒதுக்கீடு இல்லாமலே நாம் இருபது சதவீத அரசு வேலைகளில் நுழைய முடியும்.மெடிக்களிலும் பொதுப்பிரிவில் நாம் முன்னூறுக்கும அதிகமான இடங்களில் இடம் பெற்றிட முடியும் அதேப்போன்று ஐ.பீ.எஸ்.'ஐ.எ.எஸ்.;ஐ.ஐ.டி.யிலும் நமது பங்கை நாம் மீட்டெடுக்கமுடியும்.ஆனால் நமது சமுதாயத்தில் உள்ள கல்வியாளர்கள்,அரசு உயர் பதவி வகிப்பவர்கள்,அதிலிருந்து ரிடையர்ட் ஆனவர்கள்,இதில்  கவனம் கடுகளவும் கொள்வதில்லை.தங்களை முஸ்லிம்களாக காட்டிகொள்வதிலேயே சிலர் வெட்கப்பட்டனர்,இன்னும் சிலர் அச்சப்பட்டனர்.யஸ்வந்த் சின்ஹா,ஜக்மோகன் போன்ற உயர் பதவி வகித்தவர்கள் போன்று ஏராளமானோர் ரிடயர்ட் ஆனபிறகும் ரிசைன் பண்ணியும் தங்களது காவி முகத்தை காட்டினர்.ஆனால் நம்மவர்களை நாம் அப்படி இருக்கச்  சொல்லவில்லை.சமுதாயப்பணி ஆற்றினாலே போதும். வருவார்களா?                          

      நமது மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இருக்கிறார்.இன்று சமுதாயம் கொள்கை யளவில் சிதறுண்டு கிடக்கும்போது,கல்வியை மட்டுமே   மையமாக்கி ,டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தலைமை ஏற்று வழிகாட்டினால்,இன்சா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.                         நான் கடந்த ஆண்டு ரமளானில் டி.வி.நிகழ்ச்சியில் பார்த்தேன்.ஈரோடு முஸ்லிம்  கல்விமாநாட்டில்  நீலகிரி மாவட்ட கலைக்டர் சகோதரர் நசீம் என்பவர் சொற்பொழிவைக் கேட்டேன்.யன்காக ஸ்மார்ட்டாக இருத்த அவரின் அந்த பேச்சை எந்த அறிஞர் களிடமும் கேட்கவில்லை.இஸ்லாத்தையும் கல்வியையும் இணைத்து மிக அருமையாக பேசினார்.மேலும் அவர் சக்காத்தை வரைமுறை படுத்த வழி காண வேண்டும்.தனக்கு தெரிந்த வரை கோடிக்கணக்கில் சக்காத் கொடுக்கும் செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். இவற்றை செம்மையாக வரை முறை படுத்தினால்,இந்தியாவில் எந்த முஸ்லிமும் ஏழையாக இருக்கமாட்டான் என்றும் தனது பேச்சினூடே தெரிவித்தார். இவர்களைப் போன்ற கல்வியாளர்கள் கண்ணுக்குதெரியாமல் நிறையவே இருக்கிறார்கள்.இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து டாக்டர் அப்துல் கலாமை சந்திக்க வேண்டும் யார் முயற்ச்சி செய்வார்கள்.அல்லாஹ்விடம்தான் இந்த நல்ல நாளில் துவா செய்ய வேண்டும்.                                                                       
                                 தேசத்திற்கு எதிராக,வலிமை மிக்க ராணுவத்திற்கு,காவல் துறைக்கு எதிராக வெடிகுண்டை தூக்கும் இளைஞன் திருமண விசயத்தில் வரதட்சணைக்கு பெற்றோருக்கு பெட்டிப்பாம்பாய் அடங்குவது ஏன்?  இன்சா அல்லா தொடருவோம்              

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மோடியின் மூடி உடைகிறது


குஜராத் படுகொலை : முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவதற்காக வெண்டுமென்றே அனுமதித்தார் மோடி! – மோடியின் ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட IAS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, April 22, 2011, 17:39
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்று மோடி கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, அவர் மாநில ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார்.
tntj net லிருந்து    

புதன், 20 ஏப்ரல், 2011

மூக்கு உடைந்ததா?மூக்கு சளி உடைந்ததா?pannai mannil piranthawan சொன்னது…



சிந்தா சேகு ஒலியுல்லாவே !முஸ்லிம் மதத்தின் இறைதூதர் என்று சொல்லப்படக் கூடிய முஹம்மது நபி கப்ரின் மேல் கட்டிடம் எழுப்பக் கூடாது என்று சொன்னாராம் அதை புகாரி என்ற கிதாபில் படித்து தர்கா கூடாது என்று எங்கள் ஊரில் சில தவ்ஹித் காரன்கள் உளறி வருகிராரர்கள் .ஆகவே உங்களுக்கு இறந்த இடத்த்தில் கட்டினாலும் போதாது என்று ஹதீதை மட்டம் தட்ட வேண்டும் என்று நாங்கள் ஊருக்கு ஊர் உங்கள் பெயரால் தர்கா கட்டி வருடந்தோறும் கிறித்தவர்கள்போல் ,யூதர்கள் போல் ,மேலும் மற்ற சமுதாயங்களின் கோவில் கொடை போல் உங்களது பிறந்த நாளிலே விழா   நடத்தி வருகிறோம்.
எனது கப்ரை விழா கொண்டாடும் இடமாக மாற்றிவிடாதீர்கள் என்று முஹம்மது நபி கூறியதை கேட்டு இந்த தவ்ஹித் காரர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் .நாங்கள் இதை சும்மா விட்டுவிடுவோமா?சிந்தா நாயகமே  உங்களுக்காக சென்னையிலும் வசூல் செய்து உங்கள் நினைவு கப்ரில் நாங்கள் மிகவும் விமர்சையாக விழா நடத்தினோம்.அதிர்வேட்டுகள் போட்டு ஹதீத்களையும் அதை சொன்னவர்களையும் அதிர வைத்தோம்.யானைக் கொண்டுவந்து அதன் மேல் மூன்று பேரை உட்கார வைத்து உங்களது கொடியை பிடித்து தெருவெல்லாம்  ஊர்வலம் போனோம்.சும்மாவா போனோம் .இசை கருவிகளை உடைத்தெறியுங்கள் என்று இந்த முகமது  நபி சொன்னாராமே,அதை இந்த தவ்ஹித்காரன் மேடை போட்டு பேசுகிறான். ஆகவே இவர்களின் மூக்கை உடைக்க புது புது சினிமா பாடல்களை,மற்றும்  "நான் ரெடி நீங்க ரெடியா,,,"."சக்கரை வள்ளி கிழங்கு,,,"பாட்டேல்லாம் நாயானா இசையில் பாடி,யானையையும் அதன் முன்னாள் பின்னால் வந்த மக்களையும் குதுகாழிக்க செய்தோம்.நாயனகாரர்கள் போதையில் இருந்தால் தான் நல்லபாட்டுக்கள் வரும் என்பதற்காக எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் இல் நன்றாக தண்ணி போட்டு சிந்தா  சேகு ஒலியுல்லாவே உங்கள் கொடியை சிறப்பான  முறையில் வலம் வந்தோமே ,இதனால் த்வ்ஹித் கார்களின் மூக்கை உடைத்தோம் .இதன் பொருட்டால் எங்களுக்கு முஹம்மது நபி அவர்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் அல்லாவிடம் நேரடியாக எங்களுக்கு சிபாரிசு செய்து சுவன பதவி கிடைக்க செய்யுங்கள் .                   ஆ,,மீன் சீலாமீன் 
                                                                                 இவண்
                                                      சிந்தா சேகு ஒலியுல்லா பக்தர்கள் குழு மற்றும் தவ்ஹித் காரனின் மூக்குடைப்புக்குழு ,சிந்தா சேகு மதார் நகர்.சிந்தாபண்ணை.




pannai mannil piranthawan சொன்னது…







அட  எடுவட்ட பயல்களா  என்னடா  அக்கிரமம்  இது .ஒரே  ஊரில்  இருந்து  கிட்டு  நீங்க  அவங்களா  குத்தம்  சொல்வது .அவங்க  உங்களை  குத்தம் சொல்வது இது என்னடா பொழப்பு .அனைவரும்  ஒற்றுமையாக   இருக்க  எப்ப  தான்  கத்துக்க  போகிறீர்கள்? .முதல்ல  அடுத்தவர்களை   பேசும்  முன்பு  தன்னையும்  தன  குடும்பத்தையும்  சரி  செய்து  விட்டு  பொது  விசயத்துல  தலையிடுங்கடா  .எந்த  blogspotளையும்  இந்த  மாதிரி  அசிங்கமாக எழுத  மாட்டார்கள்    .படிக்க  முடியாத  அளவுக்கு அநாகரிகமாக  ,கேவலமாக    எழுதி  உள்ளீர்கள். .முதல்ல தன்னையும் தன குடும்பத்தையும் பாருங்க .அப்புறம்  ஊர்  விசயத்துல தலையிடுங்கள் .அசிங்கமாக திட்டி  எழுதுவதை  தவிருங்கள் .ஏன்  என்றால்  நிறைய  தமிழர்கள்   இதனை  படிக்கிறார்கள். .இந்த வெப்சைட்  இருப்பது  எனக்கே  தெரியாது .மற்ற  ஊர் மக்கள்  சொல்ல  போய்தான்  எனக்கு  தெரியும் .என்னடா நம்மள  சொல்லி  விட்டு இவனே  இப்படி  எழுதுகிறானே    என்று  நினைக்கிறீர்கள். .உங்களிடம்  (athawathu)இந்த ப்ளாக் ஸ்பாட்டில்   இப்படி எழுதினால்  தான் முழுவதும்  படிக்கிறார்கள் .நான்  மரியாதயை   குறைவாக    எழுதியதற்கு  அல்லா உங்களை  மனம்  பொறுத்துக்கொள்ளுங்கள் .