வியாழன், 4 நவம்பர், 2010

மனிதவளம்.

இணை வைப்பவர்கள் ,வைக்காதவர்கள் கப்ர்கள் மீதும் பள்ளிவாசல் கட்டக்கூடாது,என்பதுதான் வரைமுறை.ஏனெனின்  பள்ளிவாசலில் இறைவனுக்காக செய்யும் தொழுகை அந்த இடத்தில் அடங்கப்பட்டவர்களுக்காக ,அவர்கள வணங்கும் தொழுகையாக பிற்காலத்தில் கருத்துகள் உருவாகிடக்கூடாது என்பதற்க்காகத்தான்.அந்த இடத்தின் உரிமையாளரிடம் நாகரிகமான முறையில் அனுமதி கேட்ட பிறகே பள்ளிவாசல் கட்டும் இடத்தில் இணை வைப்பவர்கள் கப்ர் இருந்ததால் அவை அகற்றப்பட்டு வேறிடத்தில் அடக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டது.அந்த இடத்தில் முஸ்லிம் கப்ர் இருந்தாலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டிருக்கும்.ஒரு யூதரின் சவஊர்வலம் வரும்போது அது அவர்களை கடக்கும்  வரை எழுந்து நின்று மரியாதை அளித்தவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி[ஸல்]அவர்கள்.
அடுத்து தொழுகை நடத்த பள்ளிவாசலை தேடியலைய வேண்டியதில்லை. கிடைக்கும் இடத்தில் தொழுது கொள்ளுங்கள்,நேரம் தவறாமை யை இங்கு வலியுறுத்தி யுள்ளார்கள்.
தானும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிற உண்மையும் இங்கு வெளிப்படுகிறது. தலைவர்,தொண்டன்:, குரு,சிஷ்யன் :எஜமான்,வேலைக்காரன் :மன்னர்,மக்கள்;என்ற வேறுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற உயரிய சிந்தனை இங்கே சின்காரிப்பதைப் பாருங்கள்.இன்றைய காலத்தில் கூட பலரால் செயல் படுத்த முடியாத காம்றேடுகளுக்கே முன்மாதிரியாய் நபி,நபித்தோழர்,என்ற பண்பாட்டை பர்ர்த்தீர்களா?பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நாகரிகத்தை ஒரு மனிதரால் எப்படி அறிந்துகொள்ளமுடிகிறது?
அடுத்து பாருங்கள் ,சீறுநீர் கழிக்கும் நாகரிகத்தை,,கோல் சொல்லும் பழக்கத்தை ஒழிக்கவும்  மக்கள் மனதில்  மென்மையாக புகுத்தும் பக்குவத்தை பாருங்கள் .நாகரிகத்தின் உச்சகட்டத்தில் இருப்பதாக கூறிகொள்ளும் இந்த காலத்தில் கூட ஆங்காங்கே நின்று கொண்டு பெண்களைக்கூட சட்டை செய்யாமல் சிறுநீர் கழிக்கும் கேவலமும்  பெண்கள் முகம் சுழிக்கும்அவலமும் அன்றாட நிகழ்ச்சிகள்.உதரணமாக நெல்லை டவுனில் மிக முக்கிய வீதியில் ஒரு தெரு முனையில் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் லட்சணமும் தெருக்குள் செல்லும் பெண்கள் படும்பாடும் பெரிய அவஸ்தை. ஆக நாகரிகம் இல்லாத காலத்திலேயே 'ஐந்து நட்சத்திர " தரத்திற்கு இஸ்லாம் வழி காட்டுகிறது.இன்று பெரிய மருத்துவமனைகளில்,ட்ரெயின் களில் உள்ள டாய்லட்டில் சிறுநீர் கழித்த பிறகு  தண்ணீர் உபயோகிக்கவும் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது .இந்த  21ஆம்நூற்றாண்டு ஆரோக்கியத்தை எங்கள் தலைவர் அப்போவே இதற்க்கு ஒருபடி மேலாகவே கற்று தந்துவிட்டார்.  
தில்லு முல்லே |இருபது குழைந்தைகளை முஸ்லிம்கள் பெறுவதாக எழுதியுள்ளீர்.ஒரு சராசரி இந்தியனைவிட முஸ்லிம்களுக்கு குழந்தைகள் அதிகம் என்பதை அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களை காட்டமுடியுமா? அதனால் தான் தங்களை மனநிலை சரியில்லாதவர் பட்டியலில் சேர்த்துள்ளோம்.பொதுவாக இஸ்லாம் குடும்ப கட்டுப்பாடுக்கு எதிரானது என்ற சங்க பரிவார் பிரச்சாரத்தின் தாக்கமோ,அல்லது அதன் பிரச்சாகராக இவ்வாறு கூறியுள்ளீர்கள்.இஸ்லாம் கு.க வுக்கு எதிரானது என்றாலும் நிர்பந்தநிலைக்கும் வழி சொல்லியுள்ளது.இது ஒருபுறம் இருக்கட்டும் மனித வளமில்லாத கம்யுனிஸ்ட் நாடான ரஷ்யாஇன்று படுத்துவிட்டது.மனிதவளமிக்க சீனா இன்று வெற்றிப்பாதையில்:,மனித வளமில்லாத ஜனநாயக நாடுகளான் அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற  நாடுகள் இன்று பொருளாதரத்தில் தின்றாடுகின்றன.ஆனால் மனித  வளமிக்க ஜனநாயக நாடான பின் தங்கியிருந்த இந்தியா இன்று பொருளாதரத்தில் ஒளி வீசிக்கொண்டு இருக்கிறது.இஸ்லாம் மேலும் மேலும் உண்மைபடுத்தப் படுகிறது.
ஹரியனாவில் செத்தமாட்டை எடுத்து சென்று அறுத்து சாப்பிட்ட நான்கு தலித் மக்கள் sa கொல்லப்பட்டது ,முதல் தலித்திடம் உணவு எடுத்த நாயை விரட்டியது வரை;கோயம் புத்தூரில் நேற்று நடந்த பள்ளி குழந்தைகளை கொலை செய்த கொடுமைகள் போன்று ஏராளமானவைகள் வெறிநாய்கள் யாரென்பதை  உணர்த்தும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.