செங்கொடிக்கு பதில்
////இதற்கு மேலும் ஹதீஸ்கதைகளைப் பற்றி உங்களிடம் பேசுவது வீண் எனக் கருதுகிறேன்///
"சீ,சீ,இந்த பழம் புளிக்கும் "
///இதை நாளையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் நாளையே கம்யூனிச தீர்வு வந்துவிடும்///
இப்படியெல்லாம் எழுதும் உங்களுக்கு குர்ஆனிலுள்ள அற்புதங்கள் பற்றி கேலி பேச வெட்கமாக இல்லையா?
ஒருவாதத்திர்காக கம்யுனிசம் தீர்வு என்று ஒப்புக் கொண்டால்,ஆணாதிக்கத்தை ஒழித்து தாம்பத்திய வாழ்க்கையில் எப்படி பொதுவுடமையை கொண்டு வருவீர்கள்?என்று விளக்கம் கேட்டால் ,அதை சொல்லுவதை விட்டு விட்டு நான் அதை நிறுவி விட்டேன் ,இதை நிறுவி விட்டேன் நீங்கள் கம்யுநிசம்தான் தீர்வு என்று ஒப்பு கொண்டுவிட்டீர்கள் என்று மொட்டை பாப்பாத்தி அள்ளி முடிய ஆசைப்பட்டது போல் பேசினால் வெட்கமாக இல்லையா என்று கேட்டதில் என்ன தப்பு?ஆண்டிகளாக சேர்ந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட ஆசை பட்டது போல் என்று கேட்டதில் என்ன தவறு கண்டு விட்டீர்கள்?
////ஒரு நூலைக் குறிப்பிட்டால் அதை முழுவதும் படித்து விமர்சனங்களை வைக்க வேண்டும். நீங்கள் எழுப்பியுள்ள இரண்டு ஐயங்களுக்குமே யானையை தடவிப்பார்த்த உருவகம் பொருந்தும்////
முதல் கோணலை நேர்செயுங்கள் என்றால் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இருந்து கொண்டு நான் யானையை தடவி சுவர் என்று கூறுவதாக வருகிறீர்கள்.நான் தடவியது சுற்றுலாமையத்திலுள்ள யானை சிலையை. உங்கள் தூரத்து பார்வைக்கு அது அசல் யானையாக தெரிந்துள்ளது.
.////நல்ல நூல்களை இப்போதுதானே படிக்கத்தொடங்கியுள்ளீர்கள், தொடக்கத்தில் கசப்பாகத்தான் இருக்கும், தொடர்ந்து படியுங்கள் பேசுவோம்////
கம்யுனிச ஸ்கூலில் மாதாந்திர தேர்வு,காலாண்டு தேர்வு,அரையாண்டு தேர்வு எல்லாம் கிடையாதா?ஆண்டு இறுதி தேர்வு மட்டுமே உண்டா?நீங்கள் நல்ல நூல்கள் என்று தலையில் தூக்கி வைத்து ஆடினால் அதை நான் ஏற்று கொள்வதற்கு நான் என்ன போலி கம்யுனிஸ்ட்டும் இல்லை.சவடால் கம்யுனிஸ்ட் டும் இல்லை.
. ///ஐயம் என வந்துவிட்ட பிறகு உறுதிப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது என்பதே விவகாரம்///
இது உங்களுக்கு மட்டும்தானா? உங்களுக்கு ஐயம் வந்துவிட்டால் அதை உறுதிபடுத்த வேண்டும்.எனக்கு ஐயம் வந்துவிட்டால் காலத்தை கடத்தி உமர் பற்றிய வராற்று குறிப்பு போல் மறக்கடிக்க வேண்டும்.
////தோராயமாக அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சோழர்கள் ஆட்சி பொற்கால ஆட்சியென்றும், களப்பிரர்கள் காலம் இருண்ட காலமென்றும் அண்மைக்கால வரலாறு கூறிக்கொண்டிருந்தது. ஆனால் சோழர்கள் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம் மீண்டது என்றும் களப்பிரர்களே அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி நடத்தினார்கள் என்றும் சோழர்களின் வரிவிதிப்பு, பிரம்மத்தோயங்கள் குறித்த கல்வெட்டுகள் வெளிவந்து உரைகல்லாகி நிற்கின்றன. இதில் முக்கியமான விசயமே வரலாறு, நீங்கள் கூறும் \/ஹதீஸ்களைப் போல அப்படியே நூறு விழுக்காடு வரலாறு என யாரும் கூறிக்கொள்வதில்லை///
இந்த கல்வெட்டுகள் இருந்து விட்டால் அதை அப்படியே ஏற்றுகொள்ளவேண்டுமா?இப்போது எனக்கு ஐயம் வந்துவிட்டது,அதாவது சோழர் ஆட்சி பற்றிய வரலாறு பார்ப்பனர்கள் எழுதியதாக இருக்கவேண்டும்.களப்பிரார்கள் பற்றிய கல்வெட்டுகளை எழுதியது நமது பெரியாரின் முன்னோடிகளான
அந்தகால பெரியார்களாக இருக்கவேண்டும்.இந்த எனது ஐயத்தை போக்கும் உரைகல்லை சொல்லுங்கள்.
மேலும் ,உங்கள் கல்வெட்டு ஆதாரங்களை 'ஹதீத்கலை'அளவுகோலுடன் ஆய்வு செய்தால் அவை கள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.ராஜ ராஜ சோழன் பற்றி ஒருவர் புகழ்ந்து எழுதி இருந்தால் அந்த கல்வெட்டு யார்காலத்தில் எழுதப்பட்டது? மன்னரே தன ஊழியர்களை வைத்து எழுதினாரா?மன்னரால் பலனடைந்த மக்கள் எழுதி வைக்கப்பட்டதா?அந்த மக்கள் தாங்கள் பகுதிக்கு மட்டும் சாதகமாக இருந்ததால் அவ்வாறு எழுதினார்களா? பொய் அழகர்கள் எழுதிய ஓலை சுவடிகளாக இருந்தால் அவர்கள் வாங்கிய பொற்காசுக்கு தகுந்தவாறு எழுதியுள்ளனரா? வெள்ளிக்காசுகள் கூட கிடைக்காத தால் எழுதி உள்ளனரா?கருணாநிதி பற்றி கண்ணதாசன் அவரோடு குடித்து கொண்டிருந்த காலத்தில் எழுதியதா?அவரை இடித்து கொண்டிருந்த காலத்தில் எழுதியதா?வைரமுத்து, கருணாநிதி பற்றி எழுதியதை அப்படியே ஏற்று கொள்ளாமல் அடுத்த நடுநிலையான தலைமுறை விமர்சர்கள் ஆய்வுசெய்தால் அவர்களின் கருத்து எவ்வாறு இருக்கும் ?வைரமுத்து கவிதைகள் குப்பைக்கு போய்விடும்.
////ஹதீஸ்களில் நீங்கள் விதந்து போற்றும் ஆதாரங்களை நீங்களே ஏற்க மறுக்கிறீர்கள். குரானுக்கு மாற்றமாக இருக்கிறது என்பதால் நீங்கள் ஏற்க மறுக்கும் ஆதாரங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள். ////
நான் இஸ்லாத்தை கற்றுத்தான் எழுதுகிறேன்,என்று ஆரம்பித்தீர்கள் ஆனால் ஹதீஸ் கலை பற்றி ஒன்றுமே தெரியாமல் உளறி கொட்டுகிறீர்கள்.
ஹதீத்களை ஆதாரபூர்வமாக ஏற்று கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகளில் அறிவிப்பாளர் வரிசையை சரி பார்ப்பதும் ஒன்று.அதுமட்டும்தான் நிபந்தனைபோல் கூறியுள்ளீர்கள்.குரானுக்கு முரன்படக்கூடாததும் என்பதும் ஒரு நிபந்தனை .
./// முஸ்லீம்களின் ஒவ்வொரு பிரிவினரும் தமக்கென ஹதீஸ்களைக் கொண்டிருந்து அதுதான் உண்மையானது என நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு பிரிவினரின் நம்பகத்தன்மையற்ற அறிவிப்பாளர்கள் வரிசையை மட்டுமே ஆதாரமாக கொள்வது போதுமானதல்ல////
ஹதீத்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக பலமான ஹதீத் ,பலவீனமான ஹதீத் என்று இல்லை. ஹதீத்களின் அளவுகள் பொதுவானவையே.சிலர் ஸஹிஹ் ஹதீத்களை மட்டுமே பின்பற்றுபவர் .சிலர் ஹசன் ஸஹிஹ் ஹதீத்களையும் பின்பற்றலாம் என்பர்.சிலர் லயிப் [பலவீனமான ]ஹதீத்களையும் பின்பற்றுவார்கள்.இன்னும்சிலர் தங்களுக்கு சாதகமாக இருக்கும் மவ்லூஆ [இட்டுகட்டப்பட்ட]ஹதீத்களையும் பின்பற்றலாம் என்பர்
.///ஒரு பிரிவினரின் நம்பகத்தன்மையற்ற அறிவிப்பாளர்கள் வரிசையை மட்டுமே ஆதாரமாக கொள்வது போதுமானதல்ல////
அது என்ன ஒரு பிரிவினரின் நம்பகத்தன்மையான வரிசை ,ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நம்பகத்தன்மையான வரிசை இருப்பதாக யார் சொன்னார்கள்.?
. ///முகம்மதின் காலத்திலேயே ஹதிஸ்களை எழுதியும் வைத்தார்கள் எனக் கூறும் நீங்கள் அதை எங்காவது பாதுகாத்து வைத்திருக்கிறார்களா எனக் கூறலாமே////
அப்படி எழுதப்பட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டு புகாரி போன்றவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
. ///அப்படியே வரலாற்று என ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் முஸ்லீம்கள் அல்லவே///
நீங்கள் ஏற்று கொண்டால் தான் உண்மை என்றும் வரலாறு என்றும் உங்களது அங்கீகாரத்திற்காக ஹதீஹ்கள் காத்திருப்பது போல பாவனை செய்கிறீர்கள்.
./// தபரி உள்ளிட்டவர்கள் எழுதிய முகம்மதின் வாழ்க்கை வரலாறுகளோடு ஹதீஸ்கள் முரண்படுகின்றன///
இப்போது உங்களது அறியாமை வெளிபடுகிறது, தபரி என்ற நீங்கள் குறிப்பிடும் நூல் ஹதீத்கள் ஆய்வு தெளிவாக்கப்படுமுன் அனைத்து ஹதீதகளை ஆதாரமாக வைத்து எழுதப் பட்டது .இப்போது அதில் பலவீனமான ஹதீத்களை ஆதாரமாக எழுதப்பட்ட வரலாற்றைத் தவிர சஹிஹ்காண ஹதீதகளை ஆதாரமாகக் கொண்டவை ஏற்று கொள்ளப்பட செய்கின்றன..இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.ஹதீத் என்பது வரலாற்று நூல்களை விட பல படித்தரங்கள் உயர்ந்தது.
நெற்கதிர்கள் "தபரி" என்றால் வைக்கோல் நீக்கப்பட்டு சாவிகள் எனப்படும் சோடைகள் அகற்றப்பட்டு,ஆலைகளில் உமி ,தவிடு போன்றவை தவிர்க்கப்பட்டு கல்,கறுப்புகள் நீக்கப்பட்டு சுத்தமான அரிசி தான் ,ஸஹிஹ் ஹதீத்கள்.
நீங்கள் நெற்கதிர்களை சாப்பிடலாம் என கூற வருகிறீர்கள்.
ஷீஆ;பிரிவினர் சாவிகளுடன் கூடிய நெல்லை சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.
மத்ஹப் ஜமாத்தினர் நெல்லை சமைத்து சாப்பிடுகின்றனர்.
சலபி ஜாக் போன்றோ கல்லுடன் கருப்புகளை சேர்த்து சாப்பிடுகின்றனர்.
ஏனையோர் சுத்த அரிசியை சாப்பிட்டு வருகின்றனர்
.///மூன்றாம்வரிடம் கேட்டதைத்தான் நான்கம்வர் ஐந்தாம்வரிடம் கூறினார் என்பதை உறுதிப்படுத்த ஒன்றுமில்லாதபோது, அவரிடமிருந்து இவர் கேட்டார், இவரிடமிருந்து இன்னொருவர் கேட்டார் என அட்டவணையிடுவதில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடமுடியும்////
நான்காமவர்பற்றி அவர் காலத்து மக்கள் அவர் எப்படிபட்டவர் என்பதை கருத்து தெரிவித்திருந்தனர்,அந்த கருத்தின் அடிப்படையிலேயே ஐந்தாமவரிடம் அவர் கூறியது பரிசீலனை செய்யப்பட்டிருக்கும்.ஒரு கருத்துக்கு ஒரே அறிவிப்பாளர் வரிசை மட்டும் இருப்பது இல்லை.ஒவ்வொரு மத்ன்[கருத்து].பகுதிக்கும் மூன்று அல்லது நான்கு அல்லது அதற்க்கும் மேற்ப்பட்ட வெவ்வேறு செட் அறிவிப்பாளர்கள் இருப்பார்கள் ஒரே கருத்துடைய ஹதீதை வேறு வேறு செட் அறிவிப்பாளர்களுடன் ஒப்பிட்டுபார்ப்பதும் ஹதீத் ஆய்வுகளில் ஒன்று.
.////அல் ஜசீரா தொலைக்காட்சி ஈராக்கில் இன்ன பெயருடைய எங்கள் செய்தியாளர் இவரிடம் சொன்னார், இவர் அவரிடம் சொன்னார் அவர் தொலைக்காட்சி நிலையத்திற்கு தொலைபேசியில் சொன்னர் என்று ஒரு செய்தியை ஒலிபரப்பினால்,,,,,,,////
அல் ஜசீரா நிருபர் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் கண்ட வர்களிடம் விசாரித்து செய்தியை விடியோவுடன் நிறுவனத்துக்கு அனுப்ப அது வெளியிடுகிறது. இங்கே ஏன் அவர் தொலைபேசியில் பேசினார்,இவர் பேசினார் என்று நான்கு நபர்களை வலிந்து திணிக்க வேண்டும் .ஒரே நாளில் நடக்கும் செய்தியை சேகரித்து வெளியிட இரண்டு நபர்கள் போதுமே.ஹதீதில் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காலத்திற்குத் தான் ஐந்து நபர்கள் வருகிறாகள் , இப்போது அதிநவீன பதிவு சாதனங்கள் இருக்கும்போது எதற்கு அவர் இவரிடம் சொன்னார், இவர் அவரிடம் சொன்னார் என்று நான்கு நபர்களை திணிக்க வேண்டிய அவசியம் என்ன?மேலும் நீங்கள் சொல்லியதே ஹதீதிர்க்கு ஆதாரமும் கூட . பதிவு உபகரணங்கள் அதிகரித்துள்ள இக்காலத்திலேயே ஒரு செய்தியை சேகரிக்க இரண்டு நபர்களின் பங்கு தேவையாக உள்ளது.அவ்வாறெனின் இமாம் புகாரிக்கு ஐந்து,ஆறு நபர்கள் தேவைப்படாதா? இந்த நிருபர்களின் தரம் ,செய்தி நிறுவனங்களின் தரம் என்று இப்போது ஒரு மதிப்பீடு இருக்கிறதா இல்லையா?இதைத்தான் ஹதீதில் அறிவிப்பாளர்களின் தரம் பற்றிய தனி ஆய்வு நூல்கள் உள்ளன.உங்களது வாதங்களை கொண்டே உங்களது வரலாற்று ஆதாரம் களைவிட ஹதீத்கள் பலமடங்கு உயர்ந்த நிலை ஆதாரங்களாக உள்ளன.
///பல ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதல்ல விவகாரம். டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஒருதடவை மட்டும் சொன்னார்களா? பத்து நாளுக்கு மறு ஒளிபரப்பு செய்தார்களா என்பது பொருட்டே அல்ல. ஐயம் என வந்துவிட்ட பிறகு உறுதிப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது என்பதே விவகாரம்.///
டைம்ஸ் நவ் செய்தி நான் பார்த்தேன் பெரும்பாலானோர் பார்க்கவில்லை .என் சொல்லை நம்பாதவர்களை நான் எப்படி உறுதிபடுத்த முடியும்?
////பாலியல் குற்றங்களை நீக்க முடியாது என்பதையும் தெளிவாக நிருவிவிட்டேன். இவைகளை சுற்றிவளைத்து ஒப்புக்கொள்ளும் நீங்கள், அதை வெளிப்படையாக அறிவிக்க தயங்குகிறீர்கள். காரணம், உங்கள் மதம். அதை மறைப்பதற்காக பண்ணை வாழ்க்கை என்றும், விஞ்ஞானத்தை மறுப்பது போல போக்குக் காட்டுவதும், கட்டை வண்டி காலத்திற்கு திரும்பச் சொல்கிறார் என்றும், சோசலிசம் தோற்றுவிட்டது என்றும், ஸ்டாலின் கொலைகள் செய்தார் என்றும், இரும்புத்திரை ஆட்சி என்றும் ஏதேதோ எழுதி தப்பித்து ஓடப் பார்க்கிறீர்கள். ///
நீங்கள் எதையும் நிறுவ வில்லை.ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் ஒழித்துவிட்டால் பாலியல் வன்முறை குறைந்துவிடும் என்று சொல்லுவது ஒரு நிருபணமா?இதை எப்படி செய்வீர்கள் ?இதற்க்கு முன் செய்ததற்கு ஒரு ஆதாரம் உண்டா?ஒரு குழு அளவிலாவது உங்களது காதல்,காமம் இன்பம் இல்லாமல் இனபெருக்க பொதுவுடைமை வாழ்க்கை யை செயல்படுத்தி காட்டுங்கள் என்றால் மூச் காட்டாத நீங்கள் இஸ்லாத்தை விமர்சிக்க வழி இல்லாமல் மீனையும் குரங்கையும் தூக்கிக் கொண்டு வளைய வருகிறீர்கள்.நிருவிவிட்டாராம் எதை நிறுவினீர்கள்? ஓசி வலைதளத்தை தவிர வேறு எதையும் நிறுவியதை உங்களால் நிருபிக்க முடியாது. ஒரு வாதத்திற்காக உங்களது பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு கம்யுனிச தீர்வுதான் என்று சொன்னால் நான் சுற்றி வளைத்து ஒப்பு கொண்டதாக சொல்லுவது எங்ஙனம் சரியாகும்?இங்கேயே இப்படி கதை விட்டால் உங்களது ஸ்டாலின் இரும்பு திரை ஆட்சியை பற்றி எந்த அளவுக்கு உண்மையை கூறி இருப்பீர்கள்? அப்படியாவது பண்ணை வாழ்க்கை பற்றி வாய் திறப்பீர்கள் என்றால் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டேன் நிறுவிவிட்டேன் என்று ஜமாலியா நடையில் பின்பற்றுவது நியாயமா?
நான் ஒப்புக்கொண்டு விட்டேன் என்று சொன்னதை மட்டும் கூறும் நீங்கள் பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு என்பதை ஏன் சொல்லவில்லை?அந்த பில்லியன் ஆண்டுகள் வரை சோஷலிச காலத்து ரஷ்யாவில் , சீனாவில் ,கிழக்குஜெர்மனி யையும் சேர்த்து கொண்டு அப்போது அங்கு நடந்த பாலியல் வன்முறைகளையும் சம காலத்தில் சவூதி அரபியாவில் நடந்த பாலியல் வன்முறைகளையும் ஒப்பிட்டு பார்த்து எங்கு குறைவோ அதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றால் அதை பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்?
////உலகம் எப்படி இருக்கும் எந்த உலகம் மக்களுக்கானதாக இருக்கும் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளை அடுக்குங்கள். அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய வீரியத்தில் பதிலளிக்கிறேன்///
பதில் இருந்தால் எப்ப கேட்டாலும் எப்படி கேட்டாலும் வெளிக்கொண்டு வந்துவிட வேண்டியதுதானே இப்போது கேட்டதுக்கு இப்போதே பதில் சொல்ல முடியாதவர் பின்னர் கேள்விகளை அடுக்க வேண்டுமாம் அவர் வீரியாமாக பதில் சொல்லுவாராம் .இப்படியெல்லாம் மிடுக்க வேண்டாம் ,பதில் இருந்தால் சொல்லுங்கள் .இல்லையெனில் சோஷலிசபோனது போல் நீங்களும் போங்கள்.
. ///தற்போது கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்ட இவ்விவாதத்தில் உங்கள் வரட்டுத்தனமான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் அதை நீர்த்துப்போக வைப்பதில் நான் ஆர்வம் கொள்வதாக இல்லை///
பதில் சொல்ல வழி இல்லை என்பதற்கு இப்படி ஒரு சப்பை கட்டா?முதலில்எனது வரட்டுத்தனமான கேள்விகளுக்கு உங்கள் வீரியமான பதிலைத் தாருங்கள் நீர்த்துப் போனது,போகப் போவது கம்யுனிசமா?இஸ்லாமா ?என்பது அப்புறம் பார்ப்போம் .அடுத்தவர்கள் பேசினால் சொல்லாடல் ,தாங்கள் பேசினால்,ஒரு வேளை வெல்லாத சாடலா?
- ////உண்மைகள் தெளிவாக வேண்டுமென்றால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டே ஆகவேண்டும். உங்களிடம் தற்போது காணப்படும் கொதிப்பு, பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதால் உண்டாகும் படப்படப்பா?////
ஹதீத் கதை என்னும் உங்கள் கற்பனை உதிப்பெல்லாம் ஆதாரமற்று உதிர்ந்து போன பிறகு படபடப்பா, படபிடிப்பா, பதைப்பா புதைப்பா என்று நிதானம் இழந்து போனதை உங்கள் ஆதங்கம் வெளிபடுத்துகிறது.
////இருப்புக்கு பங்கம் வந்துவிடக்கூடாதே எனும் பதைப்பா? என்பதை நீங்கள் வெளிப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கிறீர்கள்///
கல்வெட்டு ஆதாரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியாமல்.லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்று ஆதாரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்ல வழி இன்றி ;உங்களது வரலாற்று ஆதாரங்களுக்கு பங்கம் வந்துவிட்டதை மறைக்க அடுத்தவர்களமீது பலி கூறி திசை திருப்ப வேண்டாம்.
////பாலியல் குற்றங்களுக்கு இஸ்லாமா? கம்யூனிசமா? எது சரியான தீர்வு? எனும் விவாதத்தில்; ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,. அந்த சட்டமோ அதன் வழியான தண்டனைகளோ பாலியல் குற்றங்களை ஒழிக்கும் நோக்கில் எதையும் செய்ய முடியாது என்பதை நிரூபித்திருக்கிறேனா இல்லையா என்பதற்கு \\ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?// எனும் கேள்விக்கு இன்றுவரை நீங்கள் நேரிய பதில் கூறாமல் இருக்கிறீர்களே. இது நிரூபணம் இல்லையா? இஸ்லாம் கூறும் தீர்வு கவைக்குதவாதது என்பதை நஉங்களின் நிலை என்ன? ஆணாதிக்கம் உலகில் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதா? அல்லது உலகில் ஆணாதிக்கம் இல்லை என்பதா?// இதற்கு பதில் கூறாமல் நழுவி ஓடிக்கொண்டி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, உலகில் இருக்கிறது இஸ்லாத்தில் இல்லை என்றும் உங்களால் கூறமுடியவில்லை, ஏனென்றால் உங்கள் நிலையை தெளிவாகக் கூறிவிட்டால் பதிலளிக்க முடியாத நிலை வரும் என்பதை உணர்ந்திருப்பதால் அல்லவா பதில் கூற மறுக்கிறீர்கள். பின் எதற்கு சவடால்?///
ஒரு வியாபாரி கூடை நிறைய காய்கறிகளை சைக்கிளில் கொண்டு சென்று ஊர்,ஊராக விற்று வந்ததில் 2 சதவீத காய்கறிகள் விற்காமல் திரும்ப கொண்டு வந்ததில் அழுகி விட்டது. அங்கு இருந்த இரண்டு கைகளும் கால்களும் இழந்த ஊனமுற்ற ஒருவர் காய்கறிகளை என்னிடம் கொடுத்து இருந்தால் எல்ல ஊர் மக்களுக்கும் சைக்கிள் வாங்கி கொடுத்து அவர்கள் அனைவரும் சைக்கிளில் வந்து என்னிடம் வாங்கி சென்று இருப்பார்கள். ஒரு துண்டு கூட அழுகி இருக்காது.
முடவரின் சவாலும் உங்களது ஆணாதிக்கம் தனிஉடமை ஒழித்து பாலியல் குற்றம் இல்லாமல் செய்வோம் என்னும் உங்களது வாய் சவடாலும் ஒன்றுதான்.
பிளஸ் டூவில் தனது இளைய மகன் 1185 மதிப்பெண்கள் பெற்றதை பாராட்டினார் தந்தை .உடன் அங்கு இருந்த மூத்த மகன் சொன்னான் ,”அவன் இன்னும் 15 மதிப்பெண்கள் எடுக்க தவறிவிட்டான் .எனனை மட்டும் பரீட்சை எழுத அனுமதித்திருந்தால் 1200 மதிப்பெண்களும் பெற்றிருப்பேன். உடன் தந்தை சொன்னார் .நீதான் ஐந்தாவது வகுப்பிலே பெயிலாகிவிட்டாயே உன்னை எப்படி பரீட்சை எழுத அனுமதிப்பார்கள்?என்றார் தந்தை. இல்லை,இல்லை எனனை பரீட்சை எழுத அனுமதிக்கட்டும் நான் 1200 மார்க் எடுத்து காண்பிக்கிறேன் என்றான் மூத்த மகன் .உடன் தந்தை சொன்னார் ,மகனே உனக்கு ப்ளஸ் டூ தேர்வு பற்றி ஒன்னும் தெரியாது,உந்தம்பிதான் மாநிலத்திலே முதலிடம் ,முழு மதிப்பெண்கள் யாராலும் பெற முடியாது.இன்னும் பில்லியன் ஆண்டுகளானால் ஒருவேளை நீ சொல்லுவது நடக்கலாம் என்றார். உடன் மூத்த மகன் சொன்னார் ,இப்ப.நான் சொன்னதை ஒப்புகொண்டுவிட்டீர்களா”என்று நமது செங்கொடி ஐய்யா சொன்னதை போல் சொன்னானாம்.இதேபோன்றுதான் உள்ளது உங்கள் சவடால்.
///உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான்.///
ஆரம்பத்தில் இருந்தே இதைத்தான் கேட்டுகொண்டே இருக்கிறேன் அதை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது தீர்த்து வைக்க ஆயத்தமாக இருக்கிறேன்,என்றால் தனிஉடமையை எவ்வாறு ஒழிப்பீர்கள் ?ஒழித்த பின் பொது வுடைமை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க செய்யுங்கள்.விவாதம் அது குறித்துத்தான் என்பதை மறக்காமல் இதுவரை கேட்ட கேள்விகட்கு பதில் சொல்லுங்கள்
- செங்கொடி ////ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?////சமூகத்திற்கான பங்களிப்பைத்தான் ஒரு மனிதனோ, தனிக்குழுவோ செய்யமுடியும். சமூகத்தின் பங்களிப்பை ஒரு மனிதனோ, தனிக்குழுவோ செய்துவிடமுடியாது.///
பாலியல் குற்றங்களை குறைக்க முடியுமே தவிர ௦ ௦௦0% ௦பாலியல் குற்றங்களை கொண்டு வர முடியாது.எப்படி சமூகத்தின் பங்களிப்பை தனி மனிதனோ தனி குழுவோ செய்துவிட முடியாது என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ அதை போலவே பாலியல் குற்றங்களே இல்லாமற் செய்ய முடியாது.ஆனால் எனனை பொறுத்தவரை சமூகத்தின் பங்களிப்பை தனி மனிதனோ தனி குழுவோ செய்துவிடமுடியும். அப்படி முடியாது என்று ஒன்று இருந்தால் அதை எப்போதும் யாராலும் முடியாது.
///உங்கள் சொத்தை பொதுவாக எழுதிவைக்க முடியுமா? என்பன போன்ற கேள்விகள் இந்த பேதத்தைப் புரிந்து கொள்ளாமல் எழுகின்றவைகள்///
இயலாமையின் வெளிப்பாடுகள்.////உங்களின் நிலை என்ன? ஆணாதிக்கம் உலகில் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதா? அல்லது உலகில் ஆணாதிக்கம் இல்லை என்பதா?// இதற்கு பதில் கூறாமல் நழுவி ஓடிக்கொண்டிருப்பதிலிருந்தே தெரியவில்லையா?////
தாங்கள் புரிந்து கொண்டே குழப்புவது போல் தெரிகிறது.உலகில் நிலவும் பாலியல் குற்றங்களுக்கு தீர்வு இஸ்லாம் என்ற தலைப்பு. பொதுவாக உலகில் ஆணாதிக்கம் குறைந்துவருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டும் கொள்ளிவைப்பு ,இஸ்லாமே தீர்வு ஆகும்போது இல்லாமற் போய்விடுமே .உலகில் இருக்கும் மிச்ச ஆணாதிக்காங்களுக்கும் இஸ்லாம் தீர்வாகும்போது அவைகள் அறவே இல்லாமற் போகிவிடும்.
பண்ணை வாழ்க்கையில் ஓடி ஒழிந்து கொண்டு இது வேறா?///இது குறித்து மேலதிக விபரங்களுக்கு கேள்வி பதில் பகுதியில் லிவிங் டுகதர் குறித்து நான் அளித்திருக்கும் பதிலைப் பார்வையிடுங்கள்///
லிவிங் டுகெதர் பற்றி படித்துத்தான் பண்ணை வாழ்க்கை பற்றி கேட்டால் மீண்டும் அதை படியுங்கள் இதை படியுங்கள் என்று எழுதி கொண்டிருப்பதை விட உங்களால் வாழ இயலாத ,எழுதுவதற்கே அருவருப்பாக இருக்கும் பண்ணை வாழ்க்கை பற்றி சொன்னால் ,கம்யுனிச த்தால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதை என்னால் நிருபிக்க முடியும். மக்களை அடிமைகளாக்கி பண்ணை வாழ்க்கையில் கசக்கி பிழிந்த கதை யை மக்களிடம் தெளிவாகச் சொன்னால் ,ரபி,நிசாம்,மேலப்பாளையம் மூப்பன் ஹாஜா எல்லாம் ஓடிவிடுவார்களோ என்று பயப்பட வேண்டாம்.
தபரியை ஏற்று கொள்வதில்லை .புகாரியை ஏற்றுக் கொள்ளுகிறோம் என்ற உங்களது வாதம் தவறு .தபரியில் அதிக பலவீனமான ஹதீத்கள் இருப்பதால் அதிலுள்ள ஸஹிஹ் ஹதீத்கள் மட்டும் ஏற்கப்பட்டு மற்றவை புறக்கணிக்கபடுகிறது .புகாரியில் 100ஹதித்களே பலவீனமானவை .ஸஹிஹ் ஹதீத்கள் அதிகாமாக இருப்பதால் புகாரிக்கு முதன்மையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. குர்ஆனுக்கு முரண்படுமானால் குரானுக்கு எதிராக நபி[ஸல்] அவர்கள் ஒருபோதும் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை ஆகையால் குரானுக்கு எதிராக இருப்பின் ஹதீதை நிராகரிக்க வேண்டும்.என்பது
ஹதீத் கலை விதி. இனியாவது ஹதீத் ,உங்களது அறிவியல்பூர்வமான வரலாறுகளை விட உயரியது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.
///கடைசியாக, இதற்குப் பிறகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே வலிக்கவில்லை என நடிக்க முயலாதீர்கள்.///
ஹதீத்களுக்கு எதிராக உங்களது வாதங்கள் தளர்ந்தது கண்டு கண்ணீர் வடிந்தது ,அது ஆனந்த கண்ணீர் அது நல வழி காட்டுமே தவிர வலிக்க செய்யாது
நண்பர் இப்ராஹிம்,
நிகழ் உலகில் நிலவும் பாலியல் பிரச்சனைகளுக்கு எது சரியான தீர்வு இஸ்லாமா? கம்யூனிசமா? என்ற தலைப்பில் வாதம் செய்து வருகிறோம். தோராயமாக இரண்டு மாதங்களைக் கடந்தபின்பு இப்போது நீங்கள் எழுதியிருப்பது \\பாலியல் குற்றங்களை குறைக்க முடியுமே தவிர ௦ ௦௦0% ௦பாலியல் குற்றங்களை கொண்டு வர முடியாது// என்று. அதாவது பாலியல் குற்றங்களைக் களைவதற்கு இஸ்லாமே சரியான தீர்வு என வாதிட வந்த நீங்கள் அதை குறைக்க முடியுமே தவிர நீக்க முடியாது என்கிறீர்கள். இதன் பொருள் என்ன? இஸ்லாம் தீர்வல்ல என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம். ஆனால் இதை நீங்கள் இயல்பாக கூறவில்லை, என்னுடைய வாதங்கள் தவிர்க்கமுடியாதபடி உங்களை இப்படி கூற வைத்திருக்கிறது. இதை உங்களால் மறுக்க முடியாது ஏனென்றால் விவாதத்தின் இடையே இப்படி சவடால் விட்டதும் நீங்கள் தான்,\\ எங்கள் தவ்ஹித் ஜமாஅத் கையில் உலகம் வந்தால்,………. இறையருளால் குற்றமற்ற உலகமாய் மாற்றி காட்டுவோம்// ஆக இஸ்லாமே திர்வு என வாதாட வந்து, நீக்கிக் காட்டுவோம் என சவடால் விட்டு, இப்போது முழுவதும் குறைக்க முடியாது என மென்று முழுங்குகிறீர்கள். இதுதான் தெளிவாக எடுத்துக்காட்டுகிறதே உங்களின் இருப்புக்கு பங்கம் வந்துவிட்டது என்பதை. இதற்கு மேல் என்ன வேண்டும்?
மறுபக்கம், கம்யூனிசத்தீர்வை ஒத்துக்கொள்கிறேன் என கூறியிருக்கிறீர்கள். அதுவும் நேரடியாக ஒத்துக்கொண்டால் உங்கள் ஓரிறைக் கொள்கை என்னாவது அதனால் பில்லியன் ஆண்டு எனும் கிண்டலோடு ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். எப்போது வரும் என்றே தெரியாத மறுமை நாளே அனைத்திற்குமான நியாயத் தீர்ப்பு நாள் என நம்பிக்கொண்டிருக்கும் உங்களுக்கு கம்யூனிசத்தீர்வை பில்லியன் ஆண்டு என கிண்டலடிக்க எந்தவித அறுகதையும் இல்லை என்பது ஒருபுறமிருக்க. நாம் விவாதம் செய்வது எதை முன்னிட்டு? எது சரியான தீர்வு என்பது தானேயன்றி, அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பதையல்ல. கம்யூனிச தீர்வை விமர்சிக்கும் நீங்கள் எந்த அடிப்படையில் அதைச் செய்கிறீர்கள், அது பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுதான் செயல்பாட்டுக்கு வரும் என்பதிலிருந்து. ஆக அது தவறானது என்றோ, தீர்க்க முடியாதது என்றோ உங்களால் கூற முடியவில்லை. தெளிவாகச் சொன்னால் கம்யூனிச தீர்வை குறை சொல்ல உங்களுக்கு துணிவில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் இப்போது செயல்பாட்டுக்கு வராதே என்பது தான். அது நமது விவாதமல்ல.
இப்போது நான் ஏற்கனவே கூறியவற்றை மீண்டுமொருமுறை படித்துப்பாருங்கள், \\ஆணாதிக்கத்தை, தனியுடமையை நீக்காமல் பாலியல் குற்றங்களை ஒழித்துவிட முடியுமா? என்பதிலோ ஆணாதிக்கம் தனியுடமையையை நீக்கிய பிறகும் பாலியல் குற்றங்கள் இருக்குமா என்பதிலோ உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான்// இந்த விவாதத்தில் எதற்கு பதில் கூற ஆயத்தமாக இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். \\இந்த விவாதத்தில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு வேண்டுமானால், ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்கியபிறகு உலகம் எப்படி இருக்கும்; இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக அமல்படுத்திய பிறகு உலகம் எப்படி இருக்கும் எந்த உலகம் மக்களுக்கானதாக இருக்கும் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளை அடுக்குங்கள். அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய வீரியத்தில் பதிலளிக்கிறேன்// எது இந்த விவாதத்திலிருந்து விலகியிருக்கிறதோ அதற்கு இந்த விவாதத்தை முடித்துக்கொண்ட பிறகு உகந்த தலைப்பை எடுத்துக்கொண்டு விரிவாக விவாதிக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
கம்யூனிச தீர்வான ஆணாதிக்கத்தை சமூகத்திலிருந்து நீக்குவது குறித்து \\பொதுவாக உலகில் ஆணாதிக்கம் குறைந்துவருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது// என்று இப்போது கூறியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் விவாதம் நெடுக மீள்வாசிப்பு செய்துபாருங்கள். இந்த உலகில் ஆணாதிக்கம் இல்லை என்பதே உங்களின் வாதமாக இருந்துவந்திருக்கிறது. இப்போதோ குறைந்து வருகிறது இஸ்லாம் வந்தால் அதையும் கிழித்துவிடும் என சால் ஓட்டிப்பார்க்கிறீர்கள். மறந்து விட்டீர்களா நான் முன்னர் கூறியதை, \\உலகில் ஆணாதிக்கம் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதுதான் என் நிலை என்று. இஸ்லாத்தில் இருக்கும் ஆணாதிக்கத்தை நான் உங்கள் கண் முன்னே காட்டுகிறேன்// இப்படி நான் சவால் விடுத்த பின்னர் கள்ள மௌனத்தை அடைகாத்திருந்துவிட்டு, இப்போது சந்தடி சாக்கில் அவிழ்த்து விடுகிறீர்கள் \\உலகில் இருக்கும் மிச்ச ஆணாதிக்காங்களுக்கும் இஸ்லாம் தீர்வாகும்போது அவைகள் அறவே இல்லாமற் போகிவிடும்// என்று. இஸ்லாம் ஒரு ஆணாதிக்க மதமே. எங்கள் ஊரில் ஒரு சொலவடை சொல்லுவார்கள், அறுக்கமாட்டாதவன் இடுப்பில் நூறு கருக்கறிவாள்.
உங்கள் கேள்விகள் எதற்கும் நான் பதில் கூற மறுத்ததில்லை, விலகி ஓடவில்லை. இந்த விவாதத்தின் பாற்பட்டது இப்போது, அப்பாற்பட்டது பின்னர் என்று மட்டுமே கூறுகிறேன். அதில் தவறொன்றுமில்லை. சரி, பின்னர் நான் கூறவிருக்கும் பதில்களை இப்போது ஏன் கூறக்கூடாது? காரணம், உங்கள் போக்கு. பாலியல் குற்றங்களுக்கு எது சரியான தீர்வைக்கொண்டிருக்கிறது எனும் இந்த விவாதத்திலிருந்து நீங்கள் விலகிச் செல்ல விரும்புகிறீர்கள். சுள்ளென்ற வெயிலைப்போல் இந்த விவாதம் உங்கள் முதுகில் உறைக்கிறது. அதனால் அங்கும் இங்கும் இழுத்துச் சென்று தப்பிக்க விரும்புகிறீர்கள். எனவே தான் நான் இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டவைகளை விலக்கி, இந்த விவாதத்தை முழுமை செய்யும் நோக்கில் வேறு எதற்கும் இப்போது பதில் கூற மறுக்கிறேன். இந்த விவாதத்தை அதன் தலைப்பிற்குள் நின்று நகர்த்திச் செல்ல உங்களிடம் சரக்கில்லாவிட்டால், முழுக்க நனைந்தபின் முக்காடெதற்கு, வெளிப்படையாக அறிவித்து விடுங்கள். அதன்பிறகு நீங்கள் கேட்க விரும்புவது எதனைப் பற்றியதென்றாலும் அதை தலைப்பாக நீங்களே தேர்வு செய்யுங்கள்.
நான் தயார்.
செங்கொடி
மீண்டும் ,மீண்டும் தான் தோன்றித்தனமாக எழுதிக் கொண்டு வருகிறீர்கள்.நபி [ஸல்] காலத்திலே எழுத்து மூலம் பதிவு செய்தவர்களும் உண்டு. மனதில் பதிவு செய்தவர்களுமுண்டு. முதல் மூவர்களில் முதலமானவர் நபித்தோழர்கள்..அவர்கள் அனைவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களைப் பற்றி அனைவரும் தெரிந்தே வைத்திருந்தனர். அடுத்து வந்த தாபீன்கள் பற்றியும் அதற்க்கு அடுத்து வந்த தப அத் தாபீன்கள் பற்றியும் குறிப்புகள் அடுத்துஅடுத்து வந்த மக்களிடம் வைத்திருந்தனர்.
புஹாரி தோராயமாக ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அதிலிருந்து 7500 ஐ தேர்ந்தெடுத்திருக்கிறார்
சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை கணக்கிலிடாமல் சேகரிக்கப்பட்ட தங்கத்தை தான் கணக்கிட வேண்டும்.
ஸ்டாலின் பற்றி அன்று காசுக்காக அவதூறு பேசினோம். இப்போது அவ்வாறில்லை ஸ்டாலின் ஜைன பக்தர் என்று அமெரிக்க கோர்ட்டில் சாட்சி சொன்னதை தாங்கள் வேத வாக்காக எடுத்து கொள்வது போல் புகாரி போன்றவர்கள் எடுத்துகொள்வதில்லை.இவ்வாறு பல்டி சாட்சி களை மனம் குழம்பியவர் களாக பதிவு செய்து கொண்டு ஆறு லட்சங்களில் ஒன்றாகக் கொண்டனர்.இந்த பல்டி சாட்சிகள் சொன்னது செவி வழி இல்லாமல் ,அவர்கள் உள்ளத்தை தோண்டி எடுத்தனவா?
///ஹதீஸ்கதைகளுக்கு சொன்னது யாரெல்லாம் என்ற அட்டவணை இருக்கிறது, நடப்பு கதைகளுக்கு அவ்வாறான அட்டவணை இல்லை.///
நபி[ஸல்] காலத்திலிருந்து தொடரும் அட்டவணை இருக்கும்போது அது எப்படி கதையாகும்?லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ள ஓட்டான்கட்டியிலிருந்து இவர்கள் ஆய்வு செய்வது வரலாறாம்.ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வரையும் பற்றி எழுதப் பட்டுள்ள குறிப்புகள் கதை என்றால் ஓட்டையாகிவிட்ட உங்கள் மூளையில் பாலைவன மண்ணாங்கட்டி யை வைத்துத்தான் சரி செய்ய வேண்டும்.
////உலக அளவில் மன்னர்களின் வரலாறுகள் எப்படி எழுதப்பட்டுள்ளன. எழுதிய வரலாற்றுடன் கல்வெட்டுகள், கட்டிய கட்டிடங்கள் போன்றவைகளோடு சரிபார்த்து, பல்வேறு வரலாற்றசிரியர்கள் எழுதியதை ஒப்பீடு செய்து ஒரு தோராயமான உருவம் கொடுக்கப்பட்டுள்ளன. அதையும்கூட அறுதியானது என கூறிவிட முடியாது, இப்பொது இருப்பதற்கு எதிரான ஒரு சான்று கிடைத்தால், ஒரு கல்வெட்டோ, பட்டயமோ கண்டெடுக்கப்பட்டால் அதையொட்டி அந்த வரலாறு திருத்தப்படும்////
இப்போது எதிரான கல்வெட்டோ ,பட்டயமோ சான்று கிடைத்தால் அந்த வரலாறு திருத்தப் படுமா?அப்படி என்றால் முன்னால் கண்டெடுக்கப் பட்டதை தவறு என்றும் இப்போது கண்டெடுக்கப்பட்டது சரியானது என்றும் எதை வைத்து ஆய்வு செய்து திருத்தப்படும்?இந்த கல்வெட்டு பட்டயங்களை விட இதை கூலிக்காக ,அல்லது அவரவர் மனம் போன போக்கில் எழுதப் பட்டுள்ளதை விட,அமெரிக்காவின் உளவாளிகளை விட , உடல் இரு கூறாக பிரிக்கப்பட்ட போதிலும் இஸ்லாத்தை இழக்காத யாசர்[ரலி], போன்று சுமைய்யா[ரலி]போன்று எத்தனையோ உயிர்தியாகிகளால் எழுதப் பட்டுள்ள ஹதீத்கள் ஒன்றும் கதையாகிவிடாது.
///ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாறு என்று கூறினால் அதை அப்படி எடுத்துக்கொள்ளமுடியுமா?///
ஹதீத்கள் மனதளவில் மட்டும் பதிவு செய்யப் படவில்லை. சிலர் தொகுப்பு இல்லாமல் எழுதியும் வைத்திருந்தனர் என்பதை எத்தனை தடவை சொல்லுவது?நான் ஒரு உதாரணத்திற்கு ஜோதிபாசு முப்பதாண்டு காலம் ஆட்சி செய்தார் என்ற செய்தியை மட்டுமே சொன்னேன். அத்துடன் அதை புரிந்து கொள்ளவேண்டும்.அதையே விவகாரமாக்கினால்,நானும் பதில் சொல்ல முடியும்.நபிதோழர்கள் போல் ஜோதிபாசுவிடம் உண்மையானவர்கள் நெருங்கி பழகியவர்கள் இருந்தால் அவர்கள் அவரது வரலாறு பற்றி முழுமையாக கூறி அதை அப்படியே மனனம் செய்தவர்கள் அதவாது ஜோதிபாசு நாடாளுமன்றம் என்ற வார்த்தையை ஒரு இடத்தில் உபோயோகித்திருந்தால் அந்த இடத்தில் நாடாளுமன்றம் என்றே சொல்லே வேண்டும்.இன்னொரு இடத்தில் பாராளுமன்றம் என்ற வார்த்தையை உபோயோகித்திருந்தால் அந்த இடத்தில் பாராளுமன்றம் என்றே உபோயோகித்திருக்க வேண்டும் ,அதை தொடர்ச்சியாக கேட்டவர்களும் அதைபோன்று மனன சக்தி உள்ளவராக இருக்க வேண்டும்.இப்படி இருந்தாலும் கூட இப்போதைய நவீனத்தில் ஏன் எத்தனையோ உபகரணங்கள் இருக்கும்போது அது ஏன் பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வி வரும்.அதற்கும் பதில் சரியாக இருந்தால் அதுதான் ஜோதிபாசு வரலாறு எனக் கொள்வோம். ஜோதிபாசு போலி கம்யுனிஸ்ட் தான்,போலி மக்கள் முப்பதாண்டுகாலம் ஆள ஆதரவு கொடுத்தார்கள். உண்மையான கம்யுனிஸ்ட் களே நீங்கள் எத்தனை பேர் உங்கள் சுய வாழ்க்கையில் உங்கள் உண்மை கொள்கையை கடை பிடிக்கிறீர்கள்?
ஜனவரி 1 ///அறிவியல் ரீதியான ஆய்வுகளை அருகில் வரலாம், பக்கத்தில் உட்காரலாம் என பசப்புகிறீர்கள்///
இந்த உங்கள் கூற்றை நீங்கள் தவறு என்பதை கீழே நிருபித்து உள்ளீர்கள்.
ஜனவரி 8.///இவைகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல்முறையில் செய்யப்பட்ட யூகம் தான் ///
ஜனவரி 8///அந்நூல். முழுவதும் படியுங்கள், பின்னர் பேசுவோம். இன்னும் நல்ல நூல்கள் நிறைய இருக்கின்றன///.
நீங்கள் சொன்னதைப் போன்று எழுப்பிய கேள்விகட்கு பதில் சொல்லுங்கள்.பின்னர் மீதியை படித்து கேட்போம்.
/\\கம்யூனிசத்தின் தீர்வான இந்த அடிப்படைகள் தவறு என்றால், ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?// என்பது தான் நான் வைத்த கேள்வி
கம்யுனிச தீர்வு எது ?பண்ணை வாழ்க்கை ,யாரும் யாரோடும் கூட வேண்டும் ,பொதுவான பிள்ளை பிறக்கும் ,பொதுவான குழந்தைகள் பண்ணையில் அம்மையை மட்டும் தெரிந்த அப்பனை மட்டும் தெரியாத குழந்தைகள் கூடி கூடி விளையாடும் ,பிறகு கூடும் ,அதில் குழந்தை பிறக்க கூடும் ,ஆனால் கூடாது.இவைகள் இஸ்லாத்தில். இஸ்லாத்தின் அடிப்படையில் பார்த்தால் பாலியல் குற்றமே கம்யுனிசத்தின் தீர்வு ஆக உள்ளது .பிறகு இதில் என்ன பதிலை எதிர்பாக்கிறீர்கள்?
///அவர் கூறுவதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டதால்தான் முஸ்லீமாக முடிந்தது//
முகம்மது;நபி[ஸல்]அவர்கள் வார்த்தைகளால் சொல்லவில்லை ,.தன்னுடைய வாழ்க்கையில் செயல்பட்டதே ,செயல் பட்டவாறே சொன்னார் .மக்கள் அதைக் கண்டு ஏற்று கொண்டனர்.
///கம்யூனிசத்தை தவிர யாரிடமும் எந்தத்தீர்வும் இல்லை. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இஸ்லாத்திடம் ஒரு தீர்வும் இல்லை. அது செய்வதெல்லாம் சட்டங்கள் போட்டு நழுக்கிச் செல்வது தான். இதை பரிசீலனை செய்யும் துணிவு ஏன் இல்லை?\\\
பரிசீலித்து பார்த்தேன்.இறைவன் இல்லாவிட்டால் ,முகம்மதுநபி[;ஸல்]அவர்களை தூதராக அனுப்பாவிட்டால், எனது முன்னோர் எனக்கு பிரச்னை அல்ல,நான் இஸ்லாத்தை ஏற்க்காவிட்டால், அதற்காக பணத்தை நான் இழக்க விட்டால் , மறுமையை நம்பாவிட்டால்,உங்கள் பண்ணை தீர்வு சூப்பர் தான் போங்கள்.இருப்பினும் இத்தனை :”விட்டால்” இருக்கிறதே ,அதனால் விடாமல் முட்டாள் ஆகி விடாமல் நான் உங்கள் கம்யுனிச தீர்வை அண்டார்டிக்கா வில் செயல்படுத்த நீங்கள் முயற்சி செய்யுங்கள்..அதற்க்கு முன் உங்கள் தீர்வை உங்கள் குடும்பத்தினரிடம் சொல்ல உங்களுக்கு துணிவு உள்ளதா?என்று பரிசீலனை செய்து பாருங்கள்.உங்கள் தீர்வே இஸ்லாத்தின் அடிப்படையில் பாலியல் குற்றம்.
////விலங்குக்கும் மனிதனுக்கும் கலவியில் உள்ள வேறுபாடு எது என்பதையும், ஆணாதிக்கம் எங்கு தொடங்குகிறது என்பதையும் தெளிவாக இது பிரித்துக்காட்டுகிறது////
விலங்குக்கு பசிக்கிறது,கிடைத்ததை உண்டு பசியாருகிறது.மனிதனுக்கும் பசிக்கிறது ,ருசிப்பதை தேடி உண்கிறான் .விலங்குக்கும் மனிதனுக்கும் பசி என்ற ஒரே உணர்வுதான் ,இருப்பினும் தீர்வுகள் வேறுபடுகின்றன.இதைதான் உடற்பசியிலும் .இது மனித ஆதிக்கமே தவிர ஆணாதிக்கம் அல்ல.பெண் நாய் ஆண் நாயை தேடி அலைவதில்லை. ஆணை தேடி பெண்கள் அலைவதில்லை என்று கூறமுயுமா? ஒற்றுமைக்கு மட்டுமே காகத்தை ‘எடுத்து காட்ட முடியும் .அதை வைத்து கொண்டு எல்ல பிரச்சனைகளுக்கும் காகத்தை ஒப்பிட்டு பேச முடியாது.
///எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் ஆண்கள் நல்ல சட்டையணிந்து தலைவாரிக்கொண்டு சைட் அடிக்கச் செல்வதில்லையா?” என்று கூறாதீர்கள், நான் கேட்பதிலுள்ள அடிப்படையை உணருங்கள்///
உங்கள் கேள்வியே அடிப்படை இல்லாதது பிறகு எதை உணர சொல்லுகிறீர்கள்?.
///இஸ்லாத்தால் பாலியல் குற்றங்கள் ஒழிக்க முடியாது என்று ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். இப்போது கம்யூனிசம் கூறும் தீர்வு குறித்து பேச வேண்டும்,,,,,,,////
கம்யுனிச தீர்வைத்தான் இஸ்லாம் பாலியல் குற்றம் என்கிறதே ,பிறகு கம்யுனிச தீர்வை ஏன் பேசவேண்டும் .?இஸ்லாம் ஒரு மனிதன்; ‘ தான் செய்த விபச்சார குற்றத்திற்காக தானே மனம் வருந்தி தண்டனை கேட்க வைத்திருக்கிறது’ என்றால்,இஸ்லாத்தை செம்மையாக மக்களிடம் செயல்படுத்தினால் பாலியல் குற்றத்த்தை மிக குறைவாக குறைக்க முடியும் என்பதே என்கருத்து.என் கருத்து இறுதி முடிவு ஆகுமா? கம்யுனிசத்தை அன்டார்டிக்காவிலோ இப்போது மகஇக வினர் செயல் படுத்தி பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகுதான் இங்கே நடை முறைபடுத்த சாத்தியக்கூறுகள் உண்டு என்ற என் கருத்தை மறுத்தால் ,தலைப்புக்கு ஏற்றவாறு நிகழ் காலத்தில் பாலியல் தீர்வுக்கு நீங்கள் கூறும் போலி ஆணாதிக்கத்தை ஒழித்து விட்டு தனிஉடமையை நீக்கிவிட்டு ஒரு சினிமா வை ஓட்டி பாருங்கள்.
///தொடக்கத்திலிருந்தே ஆணாதிக்கம் உலகில் இல்லை என மேலோட்டமாக கூறிவருகிறீர்கள். நெருக்கிப்பிடித்தால் இஸ்லாத்தில் இல்லை என்கிறீர்கள். இதில் உங்கள் நிலைபாடு என்ன? தெளிவாக கூறிவிடுங்கள் என்று கேட்டிருந்தேன்,//// தலைப்பு நிகழ்உலகில் நிலவும் பிரச்னைக்கு இஸ்லாமே தீர்வு என்பதே ,தகப்பன் இறந்தால் கொள்ளி வைக்க முடியாததையும் ,கணவன் இறந்தால் மல்லி வைக்கமுடியாததையும் இஸ்லாமே தீர்வாகும்போது தான் இல்லாமல் போகிவிடுமே பிறகு அவற்றை கேள்வியாக ஏன் கொணர வேண்டும்? கேள்வி கேட்ட உங்கள் நிலைபாட்டுக்கு பதில் சொல்லுங்கள் தாங்கள் நிகழ் கால தீர்வை சொல்லுகிறீர்களா?பில்லியன் ஆண்டு காலத்திற்கு பிறகு உள்ள தீர்வை சொல்லுகிறீர்களா?பிலியன் ஆண்டுகளுக்கு பிறகு நிகழ இருக்கும் பாலியல் குற்றங்களுக்கு கம்யுநிசம்தான் தீர்வு என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.இதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால் நானும் அதனுடன் உடன் படுகிறேன் .நேரத்தை வீணாக்காமல் இத்துடன் முடித்து கொள்ளலாம்.
///பதில் கொடுக்க வேண்டுமென்பதுதான் முக்கியமேயன்றி அதில் புரிதல் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பதை பொட்டிலறைந்தாற்போல் முதல் வரியிலேயே உணர்த்தி விட்டுத்தான் உங்கள் பதிவை ஆரம்பித்துள்ளீர்கள்///உலகிலுள்ள அத்தனை பிரச்னைகளுக்கும் ஆணாதிக்கமும் தனியுடமையும்தான் காரணம் என்று தீர்க்கமாக வேதத்தை மனதில் இருத்திகொண்டால் நீங்கள் சொல்லுவது உங்களுக்கு மட்டுமே புரிவது போல் தோன்றும்.மற்றவர்கள் சொல்லுவது உங்களுக்கு புரியாதது போல் தோன்றும்.சரி ஒரு சினிமாவில் பண்ணை வாழ்க்கை யை காட்டி பாலியல் குற்றத்தை ஒழித்து காட்டினால் மக்கள் உங்களை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் [மக்களுக்கு உங்கள் உண்மை கம்யுனிசம் ம.க.இ.க. பற்றி கடுகளவும் தெரியாது என்பது வேறு விஷயம்].
மேலும் இப்போதைய இந்திய சமூக சூழ்நிலைகேற்ப உங்கள் சட்டம் எப்படி இருக்கும் ?என்பதையும் உங்கள் சினிமாவில் சொல்லலாம்.ஒரு நாள் முதல்வன் போல் நீங்களும் பில்லயன் ஆண்டு பிரதமர் என்று ஒரு பெயரில்,,
பி.கு.உமர்;[ரலி']பற்றிய ஹதீத் எண் கிடைத்து விட்டதா?
ஜோதிபாசு உதாரணத்திற்கு முதலில் பதில் அளித்த நீங்கள் இப்போது கைவிட்டது ஏன்?உண்மை கசக்கிறதா? ///நபிதோழர்கள் போல் ஜோதிபாசுவிடம் உண்மையானவர்கள் நெருங்கி பழகியவர்கள் இருந்தால் அவர்கள் அவரது வரலாறு பற்றி முழுமையாக கூறி அதை அப்படியே மனனம் செய்தவர்கள் அதவாது ஜோதிபாசு நாடாளுமன்றம் என்ற வார்த்தையை ஒரு இடத்தில் உபோயோகித்திருந்தால் அந்த இடத்தில் நாடாளுமன்றம் என்றே சொல்லே வேண்டும்.இன்னொரு இடத்தில் பாராளுமன்றம் என்ற வார்த்தையை உபோயோகித்திருந்தால் அந்த இடத்தில் பாராளுமன்றம் என்றே உபோயோகித்திருக்க வேண்டும் ,அதை தொடர்ச்சியாக கேட்டவர்களும் அதைபோன்று மனன சக்தி உள்ளவராக இருக்க வேண்டும்.இப்படி இருந்தாலும் கூட இப்போதைய நவீனத்தில் ஏன் எத்தனையோ உபகரணங்கள் இருக்கும்போது அது ஏன் பதிவு செய்யப்படவில்லை என்ற கேள்வி வரும்.அதற்கும் பதில் சரியாக இருந்தால் அதுதான் ஜோதிபாசு வரலாறு எனக் கொள்வோம்////
இந்த உதாரணத்தை உங்களால் தவறு காண முடியுமா?.
///ஹதீஸிலிருந்தே வார்த்தைகள் கூட மாறாமல் மனனம் செய்யப்பட்டது என்று கூறுகிறீர்கள். அதாவது ஹதீஸின் நம்பகத்தன்மைக்கு அந்த ஹதீஸே சான்று////
ஹதீதின் நம்பகதன்மைப் பற்றி கூறக்கூடியவை அசர் எனப்படும்.அதாவது வரலாற்று குறிப்புகள். இவைகள் மட்டுமே ஆதாரமாக இருக்கும்போது,வேறு ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவைகள் ஆதாரம் அற்றதாகாகிவிடாது. ஹதீத்களுக்கும் அசர்களுக்கும் எதிரான ஆதாரம் இருந்தால் அதை வைத்து பரிசிலிப்பதுதான் அறிவுடைமை .அதை விட்டு ஹதீத்கள் கதை என்பது தான் தோன்றிதனமானது.
\///ஹதீஸ்கள் வரலாறு என நம்பிவிட்டால் அங்கு பிரச்சனை ஒன்றுமில்லை. ஆனால் ஐயம் வந்தால் எந்த வழியில் சோதிப்பது? ஆக சோதித்தறிய எந்த வழிமுறைகளும் இல்லாத, வேறு எதிலும் இடம்பெறாத இவைகளை வரலாறு என்பதா? செவிவழிக் கதைகள் என்பதா?////
ஹதீத் களை நூல்களை படித்தால் இதற்க்கான தெளிவுகள் கிடைக்கும். வேறு எதில் இவைகள் இடம் பெற வேண்டும்?அல் ஜசீரா டி.வீ இல் வரும் சில உண்மை செய்திகள் வேறு எந்த சேனலிலும் வருவதில்லை என்பதால் அவை அனைத்தும் பொய்யாகிவிடுமா?ஐ.எஸ்.ஐ.க்கும் சங்க பரிவாருக்கும் தொடர்பு இருப்பதாக கர்கரே சொன்ன செய்தி ஒரே நாளில் ஒரு தடவை மட்டும் டைம்ஸ் நவ் சேனலில் மட்டும் வந்ததால் அது பொய்யாகிவிடாது.
///குரான் மாற்றப்பட்டிருக்கிறது எனும் பொருளில் கூட ஹதீஸ் இருக்கிறது, பால்குடி வசனம் குறித்து ஆய்ஷா அறிவித்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருக்கிறது. இதை அப்படியே வரலாறு எனக் கொண்டால் குரான் மாற்றப்பட்டுள்ளது என்பது உண்மையாகும். அப்படியில்லை என்றால் ஹதீஸின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும்///
குர் ஆனுக்கு முரண்படுபவை ஆதாரபூர்வமான ஹதீதாக இருந்தாலும் அவை பலவீனமானவை என்பதுதான் ஹதீத் கலை விதி.அதனடிப்டையில் பரிசீலனை செய்தால் கேள்விகுறி கேள்விக்குறியாகிவிடும்.
\\செவிவழிக்கதை கைவழிக்கதை என்பதெல்லாம் எதன் மூலம் பரவியது என்பதைக் கொண்டல்ல, அது அறிவியல் ரீதியாக இருக்கிறதா என்பதைக் கொண்டே முடிவு செய்ய முடியும். ‘ஏ’ யிடமிருந்து ‘பி’கேட்டார், ‘பி’ யிடமிருந்து ‘சி’ கேட்டார் என்பதைவிட ஏயிடமிருந்து கேட்டதைத்தான் பி சியிடம் சொன்னார் என்பதை சரிபார்க்க நம்பிக்கையைத்தவிர வேறொன்றுமில்லை//
அமெரிக்கா வங்கிகள் மீள முடியாத நட்டத்தில் இயங்குகின்றன என்று செங்கொடி சொன்னால் நம்பமுடியாது ,உண்மையாகவும் இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்..பீ .பீ.சி.அறிவித்தது என்றால் நம்பித்தான் ஆகவேண்டும் .பீ.பீ.சி ரஷ்யாவைப் பற்றி ஒரு செய்தி தருகிறது என்றால் செங்கொடியை கேட்டு உறுதிசெய்ய முடியும். செங்கொடி இஸ்லாத்திற்கு எதிராக பணத்திற்காக எழுதுகிறாரா? கொள்கைக்காக எழுதுகிறாரா?என்பதெல்லம் நம்பகத்தன்மைல்தான் இருக்கிறது.ஆனால் செங்கோடியுடன் இருப்பவருக்கு அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வைத்து உண்மை தெரியும்.
///ஒற்றைக் கடவுளை, முகம்மதை நம்புபவர்களிடையே கூட எது உண்மையான ஹதீஸ் என்பதில் பேதமிருக்கிறது. இது தான் உண்மை என கூறுவதற்குக்கூட அந்த அறிவிப்பாளர் வரிசை தான் ஆதாரமாக இருக்கிறது///
வேறுஎன்ன ஆதாரம் வேண்டும்?இந்த ஆதாரங்களுக்கு எதிரான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா?
\\ஹதீஸ்களின் நம்பகத்தன்மைக்கு அறிவிப்பாளர்களின் நடத்தைகள் மட்டும் போதுமானதல்ல. அறிவியல் ரீதியான உரைகல் வேண்டும் என்பதற்கு தான் சேகரித்தவற்றுள் அறிவியலலாத வழிமுறைகளிலேயே 98 விழுக்காடு ஹதீஸ்களை கற்பனை என்று ஒதுக்க வேண்டிய நிலையில் புஹாரி இருந்திருக்கிறார் என்பதே சான்று//
ஆறாம் ஏழாம் நூற்றாண்டு அரபுகள் அல்லாத வரலாற்றுக்கு நீங்கள் கூறும் அறிவியல் ரீதியான உரைகல்லை சொல்ல்லுங்கள்.
இஸ்லாம் எல்லாவற்றிலும் தனித்தே விளங்குகிறது.தனக்கென்று தனி பாணியை அது வரையறுத்துள்ளது.உலகம் முழுவதும் பின்பற்றும் காலண்டரை இஸ்லாம் பின்பற்றவில்லை.அதைப் போன்றே வரலாற்றுக்கும் அதனுடைய ஆதாரம் தனித்தே விளங்குகிறது.இஸ்லாம் கூறும் வரலாற்றுக்கு எதிரான ஆதாரம் இருந்தால் தாருங்கள். வரலாற்று ஆய்வு அத்தனையும் யூகம் என்பதே உண்மை.ஹதீத் போன்று எந்த வரலாறுகளும் உண்மைபடுத்த படவில்லை.
///எது உங்கள் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்கிறது என்பதல்ல, எது சரியானது என்பதே முக்கியமானது. ஆயினும், அறிவியல் யூகத்தைப் பொருத்தவரையில் தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் திருத்தத்திற்கு உள்ளாகக் கூடியது என்பது ஒன்றே அதன் சரியான தன்மைக்கு காவலாய் இருக்கிறது.///
குர் ஆனும் ஹதீத்களும் இதைப் போன்றுதான் ;அவற்றிலுள்ள சில வார்த்தைகளுக்கு ஆதாரத்துடன் சரியான அர்த்தங்கள் கண்டுபிடிக்கபட்டால் திருத்தத்திற்கு உள்ளாகக் கூடியதுதான்.நீங்கள் ஹதீத்கள் கதை என்பதற்கு உங்களது அறிவுபூர்வமான ஆதாரத்தை தாருங்கள் இல்லையெனில் ஹதீத் போன்று லட்சக் கணக்கான மக்களை ஆய்வு செய்து சொக்கத்தங்கமாய் உருபெற்ற ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகாலத்து ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை தாருங்கள்
///நாடகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதல்ல அந்நூல். முழுவதும் படியுங்கள், பின்னர் பேசுவோம். இன்னும் நல்ல நூல்கள் நிறைய இருக்கின்றன//
////வளமான கவித்துவ கற்பனைக்கு பதிலாக இப்போது தன்னுடைய வழக்கை விளக்குகின்ற வழக்கறிஞரின் வளமான வாதங்கள் கிடைக்க்ன்றன என்று பக்கம் 21 இல் மாக் லென்னான் பற்றி கூறுகிறார். தன்னுடைய வழக்குகளை தயாரிப்பதில் எல்லாவிதமான சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் வாதியின் வழக்கறிஞர் ,பிரதிவாதியின் வழக்கறிஞர் மட்டும் தான் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லுக்கும் முறையான ,சட்ட ரீதியில் மிகவும் சரியான ஆதாரங்களை தர வேண்டும் என்று வற்புறுத்துவது போல் உள்ளது.என்று தங்களது ஆசான் பக்கம் 28 இல் கூறுகிரார். பக்கம் 21 க்குபக்கம் 28 இல் முரண்படுகிறார்.நான் படித்தவரையில் உங்களது ஆசான் அதுதான் உண்மை என்பதாகா கூறவில்லை,அவைகள் யூகம் என்பதையும் ஒப்புக்கொள்கிறார். ////
நான் நாடகத்தை மட்டும் கேட்கவில்லை.மேற்கண்டதும் பற்றி கேட்டேன் இதை முழுவதுமாகச் சொல்லாமல் நாடகத்தை பற்றி மட்டும் கேட்டதாக சொல்லுவது திரிபு. முதல் கோணல்களை முதலில் நேர்செயுங்கள்.முற்றும் உள்ள கோணல்களை பிறகு பார்ப்போம்..
\\கம்யூனிசத்தின் தீர்வான இந்த அடிப்படைகள் தவறு என்றால், ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?// நான் உளறத்தான் செய்கிறேன். உங்கள் தீர்வான ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் ஒழித்தால் பாலியல் குற்றங்கள் இருக்காது என்பதை சொல்லத்தான் முடியும் செயல்படுத்த முடியாது.என்பது உளறல் இல்லையா?பண்ணை வாழ்க்கை பற்றி மூச் காட்டாமல் மறைத்தே வருவது ஏன்?தனியுடமை ஒழிப்புதான் பண்ணை வாழ்க்கை என்றால் தயக்கம் இன்றி அதைப் பற்றி சொல்லுங்கள்.சும்மா தனியுடைமையை ஒழிப்போம் என்றால் உங்கள் பொது உடமையில் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும் ?சிரித்துக்கொண்டே அழுவது பற்றியும் அழுதுகொண்டே சிரிப்பதை பற்றியும் கொஞ்சம் விவரியுங்களேன் .
///நீங்களோ முகம்மது ஒரு அழகிய முன்மாதிரி என நீங்கள் கற்ற பாலபாடத்தை திரும்ப ஒப்பித்தீர்கள்////
முகம்மது [ஸல்] அவர்கள் தனது செயல்கள் மூலம் சொன்னதை முதலில் தனது தோழர்கள் மத்தியிலும் பின்னர் மதினாவில் மட்டும் உள்ள தனது குறுகிய ராஜ்யத்தில் நடத்தி காட்டினாரா இல்லையா? இது போன்று நீங்களும் உங்கள் தோழர்கள் மத்தியில் பண்ணை வாழ்க்கை வாழ்ந்து காட்டுங்கள் என்றால் அதை அப்படியே தவிர்த்து விட்டு மற்றதில் சிரமம் எடுப்பது ஏன்?உங்களது தீர்வை விளக்கமாக சொல்லுங்கள். இல்லையெனில் விவாதத்தை நிறுத்தி கொள்ளுங்கள்.கையாலாகாத தீர்வை ஆண்டி களாக சேர்ந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்டும் ஆலோசனை யாருக்கு வேண்டும்?உங்களால் உங்களது கற்பனை ஆணாதிக்கமும் தனியுடமை ஒழித்து ஒரிஜினல் கம்யுனிச வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை ஒரு சினிமாவிலாவது இல்லை ஒரு சீரியளிலாவது எடுத்து காட்ட திராணி இல்லாதவர்களுக்கு அடுத்த கொள்கை கள் பற்றி விமர்சிக்க என்னதகுதி இருக்கிறது?
பண்டைய மக்கள் அவர்களிடம் பெண் தலைமையிலான குடும்ப வாழ்க்கை இருந்தது ஆணாதிக்கம் இல்லை என்று அவர்கள் பற்றி கதை அளக்கிறீர்கள் .பண்டைய மக்கள் அவர்களால் இயன்ற அவர்களுக்கு தெரிந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் .கொள்கையாவது ,கத்தரிக்கையாவது அந்த மக்கள் தங்களுக்கு எது புதுமையாக தெரிகிறதோ அதற்க்கு தகுந்தவாறு தங்களது வாழ்க்கையை மாற்றி கொண்டே வந்தார்கள்.ஒவ்வொரு புதுமை கண்ட பிறகு மனிதன் புதுமையை விட்டு மீண்டும் பழமைக்கு திரும்பியது உண்டா?சோசலிசமும் சில மக்களுக்கு புதுமையாக தெரிந்த போது அங்கு திரும்பிய மக்கள் அதைவிட புதுமையாக இப்போதைய தனி உடமை தெரிந்ததும் மக்கள் இந்த புதுமையான தனியுடமையே ஏற்று கொண்டனர்.தனகளது ஆணாதிக்கமற்ற பொது வுடமையை உங்களது குடும்பத்தார் கூட ஏற்று கொள்ளமறுப்பார்கள். பெண் தலைமையிலான வாழ்க்கையில் பாலியல் வன்முறை இல்லை என்பதக்கு என்ன ஆதாரம்?.
. ///இதை நாளையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் நாளையே கம்யூனிச தீர்வு வந்துவிடும்///
இப்படியெல்லாம் எழுதும் உங்களுக்கு குர்ஆனிலுள்ள அற்புதங்கள் பற்றி கேலி பேச வெட்கமாக இல்லையா?
///[கம்யுனிசம்]நடப்பு உலகிலிருக்கும் ஒவ்வொன்றையும் உரசிப்பார்த்து மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பது எவ்வளவு நுண்ணியதாக இருந்தாலும் அதை உதைத்து வெளியேற்றுகிறது///
மனித குல முன்னேற்றத்திற்கு கம்யுனிச மென்ன அதனுடைய குழந்தை பருவமான சோசலிசமே மனித குல முன்னேற்றத்திற்கு தடைக்கல் என்று தூக்கி வீசப்பட்டுவிட்டது.இனி யார் அதை பரிசீலிக்க போகிறார்கள்?
பாலியல் வன்முறை இப்போதைய மனித குல முன்னேற்றத்தர்க்கு இடையூறாக மலையளவில் நின்று தடுக்கவில்லை.இஸ்லாமிய சட்டங்களை சீரிய முறையில் அமல் படுத்தினால் அது மனித குலமுன்னேற்றத்திர்க்கு ஒரு எறும்பு கடி போல்தான். எறும்பு கடிக்காக ஸ்டாலினின் இரும்புத்திரை ஆட்சிதான் தீர்வு என்பது பைத்தியக் காரத்தனமானது.ஒரு லட்ச மனிதர்களுக்கு ஒரு பாலியல் குற்றம் என்பது ஒன்னும் குடி முழுகி விடும் விசயமன்று. இஸ்லாமிய சட்டப் படி ஒரு லட்சம் கார்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது,எனவே இஸ்லாமிய சட்டங்கள் தீர்வல்ல. இனிஎல்லோரும் கம்யுனிச சட்டமான ஆளுக்கொரு கட்டை வண்டியை வைத்துக் கொள்ளுங்கள் ,இனி விபத்தே நடக்காது.அப்படியே ஒரு சிறு விபத்தாக இருந்தாலும் யாரும் சாக மாட்டார்கள்.ஆகவே கம்யுனிச தீர்வே சரியானது என்று செங்கொடி சொல்ல வருகிறார்.காட்டுமிராண்டி கூட நான்கு நாட்கள் சென்னையில் இருந்து விட்டால் இதை ஏற்று கொள்ளமாட்டான்.தயவு செய்து பண்ணை வாழ்க்கை பற்றி சொல்லி விட்டு உங்களது பாலியல் எரும்புகடியை நிறுத்திக் கொள்ளுங்கள்.
///இஸ்லாம் அதிகபட்சமாக கூறுவது தண்டனைகளைத்தான். தண்டனைமுறைகள் உலகில் தோல்வியடைந்துள்ளன என்பதை ஏற்கனவே நிருவியிருக்கிறேன்///.
///சோசலிச காலத்தில் நடைமுறைக்கு வரும் சட்டதிட்டங்களே தற்காலிக தீர்வாக இருக்கும் தகுதிபடைத்தவை///
நடைமுறையில் இருக்கும் இஸ்லாமிய சட்டம் தோற்றுவிட்டது என்று சொல்லுவதும் ,தோற்று தூக்கி எறியப்பட்ட சோசலிசம் தான் தற்காலிக தீர்வு என்று சொல்லுவதும். உங்களுக்கு ஜோக்காக தெரியவில்லையா? உங்கள் அளவுகோலின்படி ,சோஷலிச காலத்திய ரஷ்யாவில் நடந்த பாலியல் குற்றங்களின் புள்ளி விவரங்களையும் இஸ்லாமிய சட்டமுள்ள சவுதியில் நடந்த பாலியல் குற்றங்களின் புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டு பார்த்து எங்கு குறைவோ அதுவே தற்காலிக தீர்வாகும். கம்யுனிச தீர்வை பெற்றோர் பண்ணை குழந்தைகள் பண்ணை பற்றி நீங்கள் எப்போது விளக்கம் தருவீர்களோ அப்போது பார்த்து கொள்வோம். இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரன்படாவிடின் ஏற்றுக் கொள்வோம்.