திங்கள், 31 ஜனவரி, 2011

19 கோடி பாக்கர்


இதஜவின் தேர்தல் முடிவில் 100 சதவீதம் சமுதாய நலன் இருக்கும் இன்ஷா அல்லாஹ்!


கருணாநிதி இடஒதுக்கீட்டை 3.5% லிருந்து 5% ஆக உயர்த்துவதாக நாடகமாடி அதைவைத்து முஸ்லிம்களின் வாக்கை கவர நினைக்கின்றார். அப்படியே மாற்றி அமைத்தாலும் அதை நாம் வரவேற்க வேண்டுமே தவிர மீண்டும் கருணாநிதியை நம் சகோதரனை போல நினைத்து முஸ்லிம் சமுதாயம் வாக்களிக்க வேண்டுமா? 
பாவம் கருணாநிதிக்கு தோல்வி பயம்வந்துவிட்டது போல அதான் முஸ்லிகளை தக்கவைத்து கொள்ள இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றார். அப்படி மாற்றி அமைத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரும் தேர்தலில் கருணாநிதிக்கு ஆதரவளிக்குமா?
முத்துப்பேட்டை முகைதீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புடன் சகோதரர் முத்துப்பேட்டை முகைதீன் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
சகோதரர் அவர்களே! நம் சமுதாயத்திற்கு நன்மையை செய்யத்தான் நாம் அமைப்புகளை உருவாக்கி செயல்படுகிறோமே தவிர, நாம் சுய விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல.
முதல்வர் நேற்று (30.01.2011) அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றி இடஓதுக்கீட்டின் அளவை மாற்றினால் நிச்சயம் அவருக்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமைதானே. அதுதானே நியாயமும் கூட. 
எல்லா அரசியல்கட்சியுமே தான், தான் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே நோக்கம். தேர்தல் தேதி வெளியான பிறகு இன்ஷா அல்லாஹ் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சமுதாயத்தின் நலன் நாடி நல்ல முடிவை அறிவிக்கும். அதில் நிச்சயமாக சமுதாயம் நலன்தான் 100 சதவீதமும் இருக்கும்.
வஸ்ஸலாம்.
தேவனாதனை  இடைத்தரகராக்கி முனிருடன் பன்னிர்செல்வத்தை சந்தித்து தேர்தல் கமிசனாக 19  கோடியை பெற்றுக்கொண்டு பி,ஜே வை ஏமாற்ற வின் டிவியை ஜெயலலிதா 19 கோடிக்கு வாங்கி விட்டார் என்று நடகமாடியவ்ர் பாக்கர் .பிறகு வின் டிவியில் பங்கு வாங்கிய தனது நெருங்கிய சகாக்கள் தவிர மற்ற சிறு முதலீட்டாளர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் என்று கூறி அவர்களின் பங்குளை திருப்பி கொடுத்து தன்னை வின் டிவி யின் டைரக்டராக பதிவு செய்து கொண்டார்.மீண்டும் பி.ஜே.வையும் டி.ஏன்.டி.ஜே வை ஏமாற்ற ஜெயலலிதா WINடிவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்,பணமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று பொய்யைக் கூறி நாடகத்தின் பிற்பகுதியையும் அரேங்கேற்றி  விட்டார், இனி இவரையும் இவரது ட்ரஸ்ட் ஐயும் யாரும் தேர்தல் ஆதரவுக்காக ஏறெடுத்து கூட பார்க்கமாட்டார்கள். சமுதாயம் நலனே பாக்கர் நலன் என்று சொல்லி சமாளிக்க வேண்டியது தான்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.