செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

செங்கொடி, 
////இதன் பொருள் என்ன? இஸ்லாம் தீர்வல்ல என்பதற்கான‌ ஒப்புதல் வாக்குமூலம். ஆனால் இதை நீங்கள் இயல்பாக கூறவில்லை, என்னுடைய வாதங்கள் தவிர்க்கமுடியாத‌படி உங்களை இப்படி கூற வைத்திருக்கிறது///
பிளஸ் டூவில் 1200 /1200. மார்க் பெற முடியாது என்பதுதான் எனது ஒப்புதல் வாக்கு மூலம் .முடியும் என்றால் பெற்று காட்டுங்கள் என்பதும் எனது வாதம் .அடுத்த வாதம் முதலில் ஐந்தாவதாவது   தேர்வு பெற்று காட்டுங்கள். .

எங்கள் தவ்ஹித் ஜமாஅத் கையில் உலகம் வந்தால்,………. இறையருளால் குற்றமற்ற உலகமாய் மாற்றி காட்டுவோம்// ஆக  இஸ்லாமே திர்வு என வாதாட வந்து, நீக்கிக் காட்டுவோம் என சவடால் விட்டு, இப்போது முழுவதும் குறைக்க முடியாது என மென்று முழுங்குகிறீர்கள். 
உங்கள் வாய்ச்ச்சவடாளுக்கு எனது பதிலடியே நீங்கள் மேற்கோள் காட்டியது. ஆணாதிக்கத்தையும் தனியுடமையும் ஒழித்துவிட்டால் பாலியல் குற்றங்கள் இல்லாமற் போய்விடும் என்ற உங்கள் கூற்றுக்கு பதிலாகவே தவ்ஹித் ஜமாஅத் கையில் உலகம் வந்தால் பாலியல் குற்றங்கள் இல்லாமற் செய்ய முடியும் என்று கூறி இருந்தேன்.இது எப்படி சவடாலாகும் .சவடாலுக்கு சவடாலாகும்.


 ///கம்யூனிசத்தீர்வை.................. பில்லியன் ஆண்டு எனும் கிண்டலோடு ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள்///
.////தீர்க்க முடியாதது என்றோ உங்களால் கூற முடியவில்லை. தெளிவாகச் சொன்னால் கம்யூனிச தீர்வை குறை சொல்ல உங்களுக்கு துணிவில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் இப்போது செயல்பாட்டுக்கு வராதே என்பது தான். அது நமது விவாதமல்ல////
விமான நிலையத்தில் விமானத்தை பார்த்த குழந்தை ,அதைப் போன்று தனக்கும் வேண்டும் என்று சாப்பிடாமல் அடம் பிடித்தது. நீ முதலில் .சாப்பிடு கடைத்தெருவில் வாங்கித்தருகிறேன் என்று சொன்னதை நம்பிய குழந்தை போல் தாங்கள் பேசுவது உள்ளது.அவ்வாறு சொன்னாலாவது தனிஉடமை வாழ்க்கை ஒழிப்பதையும் பொதுஉடமை வாழ்க்கை பற்றியும் கூற மாட்டீர்களா என்று எதிர் பார்த்துத்தான் கூறினேன் .ஆனால் அதைப் பற்றி வாய் திறக்க மாட்டிருக்கிறீர்கள்.அது பற்றி சொல்ல துணிவு இல்லாத நீங்கள் அடுத்தவர் பற்றி துணிவை பற்றி பேசுவது வேடிக்கை.அந்த தீர்வை சொன்னால் அல்லவா அதனுடைய குறைகளை அடுக்க முடியும் .10 கோடி ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் என்பது ஒப்புக்கொண்டதாக  அர்த்தமா?. சர்க்கஸ் சாகசவீரராக வந்து  பப்பூனாக மாறிவிட்டீர்கள்.


 ///ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்கியபிறகு உலகம் எப்படி இருக்கும்; இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக அமல்படுத்திய பிறகு உலகம் எப்படி இருக்கும் எந்த உலகம் மக்களுக்கானதாக இருக்கும் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளை அடுக்குங்கள். அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய வீரியத்தில் பதிலளிக்கிறேன்///
 நீங்கள் கூறும் ஆணாதிகத்தினால் பாலியல் குற்றங்கள் நடைபெறவில்லை , இரு பாலரிடமும் உள்ள காம ஆதிக்கத்தினால் தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதும் தனியுடைமையை ஒழிக்க முடியாது என்பதும்தான் எனது வாதம் .ஆதலின் தனியுடைமையை ஒழிப்பேன் என்று சினிமாவில் சொல்வதுபோல் சொல்வதை ஏற்று கொள்ளமுடியாது.இதற்க்கு பதில் சொல்லி யோதொடு நிற்காமல் உங்களது இயக்க அளவிலாவது ஒழித்து காட்டுங்கள் .அதன் உலகம் எப்படியிருக்கும் என்று நான் கேள்விகளை அடுக்குகிறேன்,நீங்கள் வீரியத்தில் அப்புறம் பதில் சொல்லுங்கள்.


///ஆனால் உங்கள் விவாதம் நெடுக மீள்வாசிப்பு செய்துபாருங்கள். இந்த உலகில் ஆணாதிக்கம் இல்லை என்பதே உங்களின் வாதமாக இருந்துவந்திருக்கிறது. ////
நான் மீள் வாசிப்பதற்கு முன் கீழே நீங்கள் எடுத்து காட்டியதிலிருந்தே எனது நிலையில் தவறு இல்லை என்று புரிய முடியும்.
////உலகில் ஆணாதிக்கம் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதுதான் என் நிலை///


அடுத்து உங்களது சவாலைப் பார்ப்போம் 


///இஸ்லாத்தில் இருக்கும் ஆணாதிக்கத்தை நான் உங்கள் கண் முன்னே காட்டுகிறேன்///
ஆணாதிக்கத்திற்கு உங்கள் இலக்கணத்தையும் அத்துடன் சொல்லி காட்டுங்கள் .கள்ள மவுனம் பண்ணை வாழ்க்கை சொல்லுவதிலா\?அல்லது இஸ்லாத்தில் உங்களால் கூறப்படும் ஆணாதிக்கத்திலா? என்பதை அப்புறம் பார்ப்போம்.


////இந்த விவாதத்தை அதன் தலைப்பிற்குள் நின்று நகர்த்திச் செல்ல உங்களிடம் சரக்கில்லாவிட்டால், முழுக்க நனைந்தபின் முக்காடெதற்கு, வெளிப்படையாக அறிவித்து விடுங்கள்.////
ஆணாதிக்கத்தையும் தனியுடமை ஒழித்தால் பாலியல் குற்றங்கள் தீர்ந்துவிடும் என்ற  வரிகளைத்தான் சோஷலிச காலத்து கீறல் விழுந்த ரிக்கர்டுபோல் இரண்டு மாதங்களாக கூறியதை தவிர வேறென்ன சரக்கை இறக்குநீர்கள்.?இஸ்லாமிய சட்டம் என்னவென்று வெளிப்படையாக குர் ஆனிலும் சவுதியில் நடைமுறையிலும் இருக்கிறது அதனால் உங்களால் விமாசிக்க முடிகிறது . சமூக சூழ் நிலைக்கேற்ப சட்டம் வகுப்போம் என கூறியுள்ளீர்கள்.இப்போதைய இந்திய சமூக சூழ்நிலைக்கேற்ப எப்படி சட்டம் வகுப்பீர்கள் என்று கேட்டால் மூடு மந்திரம் .
உங்களது தீர்வை செயல்படுத்தும் லட்சணத்தை சொன்னால் அல்லவா உங்களது தீர்வு உளுத்து போனதா? உறுத்து உள்ளதா ? என்று பதில் சொல்ல முடியும் பழைய சாலை ஓரத்து மந்திரவாதி போல் குதிரை முட்டை இடுவதை காட்டுகிறேன் என்று கூறி துட்டை பறித்துவிட்டு ரத்தவாந்தி என்று மிரட்டுவது போல் பேசுவதை நிறுத்தி விட்டு பொதுவுடைமை வாழ்க்கை பற்றி சொன்னால் உங்க தீர்வு  செல்லாக்காசு என்பதை நிருபிக்கிறேன்.இறைவன் அருளால்.


பசு கன்றுக்காக மகனை தேர்க்காலில் இட்டு கொன்றது போல் உள்ள உங்களது வரலாற்று ஆதாரங்களை விட 1975 ஆம் ஆண்டில் சவூதி மானராக இருந்த பைசல் காலத்தில் மன்னர் குடும்பத்து இளம்பெண்ணும் அனைவருக்கும் சம நீதி என்ற அடிப்படையிலேயே மரணதண்டனை வழங்கப்பட்டது போல உண்மை சம்பவங்களை கொண்டுள்ளது இஸ்லாம். மற்றும் உமர்[ரலி]அவர்களுடைய ஆட்சியையும் சொல்லியிருந்தேன் .உமருடைய காலத்தில் பெண்களுக்கு பள்ளியில் தொழுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி பின்னர் அதை திரும்ப பெற்றுக் கொண்டீர். இது போன்று நடந்ததை நடந்து  கொண்டிருப்பதை கொண்டு உங்களது வாதத்தை வையுங்கள்.பத்து கோடி ஆண்டுகளுக்கு பிறகு உள்ள பிரச்னைக்கு இப்போது தீர்வு  தேவையா? இப்போது தீர்வு யாருக்கு தேவை? சமூக சூழ்நிலைக்கு ஏற்றவாறு சட்டம் சொல்லும் நீங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு பிறகு சமூக சூழ்நிலை எப்படி இருக்கும் என்று எவ்வாறு இருக்கும் ,என்றெல்லாம் பார்க்கவேண்டாமா? நிகழ் உலகத்திற்கான தீர்வை தலைப்பாக வைத்து கொண்டு பத்து கோடி ஆணடுகளுக்கு பிறகு எங்கள் தீர்வை ஒப்புக்கொண்டதாக கூறுவது தாங்கள் கையில் இப்போதைய தீர்வுக்கு சரக்கு இல்லை என்றே பொருள்.அழுகிப்போன கம்யுனிச சரக்கை தூக்கி கொண்டு தெருவில் கூவி விற்க உங்களைப்போல உள்ள கற்பனை வியாபாரிகளால் தான் முடியும்.என்ன கேட்டாலும் எங்களது பண்ணை வாழ்க்கை பற்றி சொல்லவே மாட்டேன் என்றால் வேறு தலைப்புக்கு செல்லலாம்.



  1. நண்பர் இப்ராஹிம்,

    பாலியல் குற்றங்களுக்கான இஸ்லாமியத் தீர்வான சட்டத்தண்டனை என்பது பாலியல் குற்றங்களை தடுக்க பயன்படாது என்பதை நீங்கள் மறுக்க முடியாத அளவுக்கு நிறுவியிருக்கிறேன். இதுவரையான உலகில் ஏன் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை? எனும் கேள்வியை பலமுறை கேட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் பதில் சொல்லவில்லை. ஆனால் மீண்டும் சட்டம் போட்டோம் தண்டனை கொடுத்தேன் என்கிறீர்கள். கேள்வி கேட்ட இடத்தில் பதில் சொல்லாமல் சந்து பொந்துகளில் ஒளிந்துகொண்டு வேறொரு இடத்தில் மீண்டும் சட்டம் போட்டோம் தொண்டனை கொடுத்தோம் என்று கூவுவது அறிவுள்ளவர்களின் செயலல்ல‌.

    பாலியல் குற்றங்கள் ஆணாதிக்க, தனியுடமை சிந்தனைகளாலேயே நடைபெறுகின்றன என்பதை நீங்கள் எடுத்துவைத்த வாதங்களைக் கொண்டே முறியடித்துக் காட்டியிருக்கிறேன். நீங்கள் பதில் சொல்லாமல் விட்டிருக்கும் கேள்விகளை, வாதங்களை மீண்டும் படித்துவிட்டு வாருங்கள். ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்காதவரை பாலியல் குற்றங்களை நீக்கமுடியாது என்பதை பலமாகவே எடுத்துக்காட்டியிருக்கிறேன். உங்களால் முடிந்தால் அவை இல்லாதிருக்கும்போதும் பாலியல் குற்றங்கள் நிகழமுடியும் என்பதை விளக்கிக் காட்டுங்கள். அவ்வாறு உங்களால் முடியாவிட்டால் ஆணாதிக்கமும், தனியுடமையுமே பாலியல் குற்றங்களுக்கு அடிப்படை என்பது உறுதி. இந்த என் நிலையிலிருந்து நான் மாறியதில்லை. இந்த உறுதியிலிருந்துதான் பாலியல் குற்றங்களில்லாத உலகை அமைத்துக்காட்ட கம்யூனிசத்தால் மட்டுமே முடியும் கூறியிருந்தேன் இது சவடாலல்ல. ஆனால் இஸ்லாமே தீர்வு என்றும், டிஎன்டிஜே வந்தால் நீக்கிக்காட்டுவோம் என்றும், நீக்க முடியாது குறைக்கத்தான் முடியும் என்றும் புறண்டு புறண்டு பேசுவது நீங்கள் தான். எது சவடால்? தெளிவாக நின்று விளக்கமளிப்பதா? நேரத்திற்கு ஒன்றாக பேசுவதா?

    \\நான் மீள் வாசிப்பதற்கு முன் கீழே நீங்கள் எடுத்து காட்டியதிலிருந்தே எனது நிலையில் தவறு இல்லை என்று புரிய முடியும். ////உலகில் ஆணாதிக்கம் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதுதான் என் நிலை///// இதில் நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள் என்று உங்களுக்காவது புரிகிறதா? புரியாமல் இப்படி குழப்புவதற்கு திருட்டுத்தனம் வேறா?  உலகில் ஆணாதிக்கம் இருக்கிறது, இஸ்லாத்தில் இல்லை என்பதுபோல் தெளிவாக‌ உங்கள் நிலையை இதுவரை நீங்கள் கூறவே இல்லை. அது நான் கூறியது. அதாவது, உலகில் ஆணாதிக்கம் இல்லை என்று கூறுவது, இருக்கிறது என்று நான் எடுத்துக்காட்டினால் இஸ்லாத்தில் இல்லை என்று மான்கராத்தே வாங்குவது உங்கள் வழக்கமாக இருந்ததினால், நான் உலகில் ஆணாதிக்கம் இல்லை என்றால் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் அல்லது உலகில் இருக்கிறது இஸ்லாத்தில் இல்லை என்று கூறிவிடுங்கள் பின்னர் இஸ்லாத்தில் ஆணாதிக்கம் நிறைந்திருக்கிறது என்று உங்களுக்கு நான் எடுத்துக்காட்டுகிறேன் என்று கூறியிருந்தேன். இப்போதுவரை நீங்கள் அதை தெளிவுபடுத்தவில்லை. மாறாக நான் கூறியதை நீங்கள் கூறியதுபோல மாற்றியிருக்கிறீர்கள். உங்களுக்கு வலிக்கவே இல்லையென்று ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். மரக்கட்டைகளுக்கு எப்படி வலிக்கும்? இப்போதும் சொல்கிறேன், உங்கள் நிலையை தெளிவாய் உங்கள் வார்த்தைகளால் சொல்லுங்கள். இஸ்லாத்தில் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை உங்கள் கண்முன் உரித்துக்காட்டுகிறேன்.

    பண்ணை வாழ்க்கை என்று ஒன்றை அடிக்கடி கூறிவருகிறீர்கள். அதை நான் கூற வேண்டும், அப்படி நான் கூறிய‌ பிறகு நான் கூறியதிலிருந்து இரண்டு வரிகளை பிரித்து எடுத்துப்போட்டு உங்கள் விளக்கெண்ணெய் விளக்கங்களை அளித்து வழுக்கிச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். இதைத்தானே நீங்கள் தொடக்கத்திலிருந்து செய்து வருகிறீர்கள். இது நம்முடைய விவாதத்தலைப்பில் இல்லை என்று பலமுறை கூறிவிட்டேன். அது என்ன பண்ணை வாழ்க்கை, நீங்கள் உங்கள் மனவிகாரங்களை கம்யூனிசத்திற்குள் திணிக்க வேண்டாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், என்னிடம் பாடம் கேட்க‌ இந்த விவாதக் களத்திற்கு நீங்கள் வரவில்லை. என்னுடன் விவாதம் செய்ய வந்திருக்கிறீர்கள். இஸ்லாம் பற்றி எனக்கு நீங்கள் கூறுங்கள் அதன்பிறகு அதிலிருந்து நான் கேள்விகள் கேட்கிறேன் என்று நான் கூறியதில்லை. ஏனென்றால் எதை விவாதம் செய்யப்போகிறோம், எதை எதிர்த்து விவாதம் செய்யப்போகிறோம் என்ற இரண்டையும் அறிந்து கொண்டு தான் விவாதக் களத்திற்கு வரவேண்டும். கம்யூனிசம் குறித்த எந்த அடிப்படையையும் தெரிந்துகொள்ளாமல் இஸ்லாமே தீஈஈஈஈஈஈஈஈஈஈஈர்வு என விவாதிக்க வந்திருப்பதே முட்டாள் தனமானது என்பது விளங்கவில்லையா உங்களுக்கு? உங்கள் மனவிகாரங்களில் நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால் கம்யூனிசத்தில் இப்படி இருக்கிறதே நீங்கள் எப்படி பாலியல் குற்றங்களை நீக்கமுடியும் என்று கேள்வி எழுப்பிப் பாருங்கள். அதைத்தான் நான் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறேன். \\ஆணாதிக்கத்தை, தனியுடமையை நீக்காமல் பாலியல் குற்றங்களை ஒழித்துவிட முடியுமா? என்பதிலோ ஆணாதிக்கம் தனியுடமையையை நீக்கிய பிறகும் பாலியல் குற்றங்கள் இருக்குமா என்பதிலோ உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான்//

    இஸ்லாமா? கம்யூனிசமா? என்பதில் இஸ்லாம் தான் என எடுத்துவைக்க ஒன்றுமில்லை இருக்கும் ஒரே சட்டத்தண்டனையையும் நான் கிழித்தெறிந்துவிட்டேன். சட்டத்தண்டனை குறித்து மேலே நான் குறிப்பிட்டிருக்கும் கேள்விக்கு பதில் கூறாதவரை உங்களால் பேசமுடியாது. ஆனால் கம்யூனிசம் என்றதும் பில்லியன் ஆண்டு என்ற உங்கள் கிண்டலை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருக்கிறீர்கள். கம்யூனிசம் எப்படி தீர்வாக இருக்கமுடியாது என்பதைத்தான் நீங்கள் கூறவேண்டும், அதுதான் விவாதம். அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், இந்த விவாதம் முடிந்து விட்டது. எனென்றால் கம்யூனிசமே தீர்வு என்று நான் காட்டியிருக்கிறேன், அதை உங்களால் மறுக்க முடியவில்லை. இஸ்லாம் தீர்வல்ல என்றும் நான் காட்டியிருக்கிறேன், அதையும் உங்களால் மறுக்க முடியவில்லை. ஆக எதை நீங்கள் செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்யவில்லை. அப்படி முடியாதபோது எதிர்த்தரப்பை ஒப்புக்கொள்ள வேண்டும் அதை செய்வதற்குப் பதிலாகத்தான் கண்டதையும் பேசி திசை திருப்பிக்கொண்டிருக்கிறீர்கள்.

    எனவே, நீங்கள் நேர்மையாக பதிலளிக்க முன்வராத பட்சத்தில், நீங்கள் திரைபோட்டு மறைத்து தேடும் அந்த தப்பிக்கும் வாய்ப்பை நானே உங்களுக்கு வழங்குகிறேன், எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உறங்குவதுபோல் நடிக்கும் உங்களை எழுப்பும் முயற்சியில் என்னுடையை நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.

    செங்கொடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.