ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

விளக்கெண்ணை விளக்கம்




செங்கொடி  ///நீங்கள் நேர்மையாக பதிலளிக்க முன்வராத பட்சத்தில், நீங்கள் திரைபோட்டு மறைத்து தேடும் அந்த தப்பிக்கும் வாய்ப்பை நானே உங்களுக்கு வழங்குகிறேன////
புற முது காட்டுவதற்கு இப்படி ஒரு சப்பைகட்டா?
,////இதுவரையான உலகில் ஏன் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை? எனும் கேள்வியை பலமுறை கேட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் பதில் சொல்லவில்லை////
 குளோனிங் முறையில் மனிதனை உருவாக்கும் உச்சகட்ட அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டும் இன்னும் ஊன முற்ற பிறப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியவில்லையே ஏன்?
எத்தனை மருத்துவமனைகள் ,எத்தனை டாக்டர்கள் .எத்தனை ஆராய்ச்சிகள் இருந்து என்ன பலன்? இன்னும் எந்த நோயும் யாருக்கும் வராமல் தடுக்கமுடியவில்லையே ஏன்?.
எத்தனை டி.ஜி.பி ,ஐ.ஜி எத்தனையோ காவல் துறையினர் இருந்தும் கொலை, கொள்ளைகளை ஒழிக்க  முடிகிறதா? இது வரை ஒழிக்க முடியவில்லையே ஏன்/? 
இதற்க்கெல்லாம் நான் உங்களைப்போல் நான் பதில் சொல்லவேண்டு மென்றால் நான் மட்டும் டாக்டராக இருந்தால் உலகம் முழுவதும் யாருக்கும் எந்த நோயும் வராத ஒரு "ஒன்னே முக்கா துட்டு"க்கு மாத்திரையை கண்டுபிடித்து உலகம் முழுவதும் நோய் இல்லாமல் ஆக்கியிருப்பேன்.என்று சொல்லி விட்டு நான் உலகில் யாருக்கும் எந்த நோயும் வராத தீர்வை  நிருவிட்டேன் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா? 
யார் வேண்டுமானாலும் எந்த பொருள் தேவைப் பட்டாலும் அந்த பொருளை எங்கே பார்த்தாலும்  அதன் உடமையாளர்கள் அனுமதியின்றி காசு செலுத்த தேவை இன்றி எடுத்து கொள்ளலாம் என்று ஒரு தீர்வின் மூலம் திருட்டை உலகம் முழுவதும் ஒழித்து விடலாம் .உங்களது கம்யுனிச பண்ணை வாழ்க்கை தீர்வை விட இது மோசமா?
கம்யுனிச பாதையான சோசலிசமே படுத்த  படுக்கையாகி விட்டது அதாவது ஐந்தாவது வகுப்பிலே பெயிலாகிவிட்ட ஒருவன் ப்ளஸ் டூவில் 1200 /1200 மார்க் எடுத்து காண்பிக்கிறேன் என்றால் எந்த கிறுக்கனாவது நம்புவானா?

கம்யுனிச தீர்வை அப்புறம் பார்ப்போம் அதற்க்கு முன் தனி அமைப்புகளாலோ, தனி ஒரு நாட்டாலோ செயல்படுத்த முடியாத கம்யுனிசத்தை உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்த முடியும் ? 
வெறும் விவாதத்திர்க்குத்தான் தீர்வு எனின் நானும்  டி.என்.டி.ஜே கையில் உலகம் வந்தால் பாலியல் குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டு நான் நிறுவிவிட்டேன் என்று கூச்சல்  போட முடியும். அத்துடன் விவாதத்தை முடித்து விட முடியும் .ஆனால் 
நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றை இது மட்டுமே தீர்வு என்று நிறுவிவிட்டேன்,என்று கூச்சல் போடுவதின் பயன் என்ன? விவாதத்தில் நான் பெரியவனா ? நீ பெரியவனா? என்று விவாத போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டி செல்ல நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. 
ஒன்று நீங்கள் மீண்டும் இஸ்லாத்திற்குள் வரவேண்டும் அல்லது இஸ்லாத்தை விட கம்யுனிச தீர்வால் உலகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது, என்பதையாவது ஏற்று கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.  
நீங்கள் எவ்வளவு பெரிய வாழைப்பழ சோம்பேறி என்பதை உங்கள் பெயர் மாற்றம் செய்யாமைக்கு சொல்லியிருக்கும் காரணத்தில் இருந்தே தெரிந்து கொண்டேன் .இப்படிப்பட்ட நீங்கள் உழப்பை பற்றியும் உழைப்பாளிகளை பற்றியும் எழுத வெட்க பட வேண்டும்..நீங்கள் ஊழல் பற்றி எழுதிவிட்டால் ,வேண்டுமானால் நாலைந்து அடிவருடிகள் சிங்கடிக்கலாம். இதைவைத்துக்கொண்டு ஊழலின் ஊற்றுக்கண்ணில் அனுவளவாது மாற்றத்தையோ கொண்டு வரமுடியுமா? நாங்கள் எங்களால் இயன்ற வரை மக்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி அவர்களின் அரசு தேவைகளை லஞ்சம் அதிகாரிகளுக்கு கொடுக்காமல் நிறைவேற்றி கொடுக்கிறோம் 
பெயரை மாற்றாததர்க்கு காரணம் சோம்பேறித்தனம் மட்டும் அன்று. தங்களது மகன் ,மகள் புரட்டு திருமணத்திற்கு தகுதி வாய்ந்த முஸ்லிம் மணமகள்,மணமகன்,கிடைக்கவேண்டும் என்பதுதான் உண்மையான காரணம்.ஏனெனின் உங்கள் "சவடால் கம்யுனிச" கொள்கைப்படி உலகம் முழுவதும் மாறினால்தான் கம்யுனிசத்தை அமல் படுத்த முடியும்,அதுவரை  தனியுடமையின் சுகத்திலே வாழ்வோம் என்பதே.
ஒரு குடிகாரனும்,உலகம் முழுவதும் மதுவிலக்கை கொண்டு வாருங்கள் ,நான் குடிப்பதை நிறுத்தி விடுகிறேன் என்றுதான் கூறுவான்.
ஒரு திருடனும் நான் மட்டுமா திருடுகிறேன்,உலகம் முழுவதும் திருட்டு தொழில் நடக்கிறது அது நிறுத்தம் படும்போது நான் நிறுத்துவிடுகிறேன் என்றுதான் சொல்லுவான் .
ஊழல் அரசியல் வாதிகளும் அப்படித்தான் சொல்லுவார்கள் ,.
ஒரு குடும்பத்தில் ஒற்றுமையை கொண்டு வருவதற்கே ஒரு போராட்டமே நடத்த வேண்டியுள்ள்ளது.உலகம் முழுவதும் ஒரே கொள்கையை கொண்டு வர பெயரை கூட மாற்ற இயலாத சோம்பேறிகளால் முடியுமா?ஒரு பில்லியன் ஆண்டென்ன பத்து பில்லியன் ஆண்டுகளானாலும் நடக்கக்கூடியது அல்ல .  
கொள்கைக்காக தனது பெயரை மாற்ற கையாலாகாத சோம்பேறியான  நீங்கள் உலகம் முழவதும் கம்யுனிச மானால்  பாலியல் குற்றங்கள் இல்லாமல் செய்துவிடலாம் என்ற தங்களது கூற்று பிலியன் ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறும் என நான் கூறியது கேலி அல்ல. யதார்த்தமே .பக்கம் பக்கமாக உங்க இசத்தை எழுதிய உங்கள் ஆசான் ஒருவேளை சோற்றுக்கு கூட உழைக்காத வாழைப்பழ சோம்பேறி என்பதை சிஷ்யனாகிய நீங்கள் நிருபிக்கிறீர்கள்.கீபோர்டை தட்டுவது எளிதினும் எளிது.

...////தனியுடமையையும் நீக்காதவரை பாலியல் குற்றங்களை நீக்கமுடியாது என்பதை பலமாகவே எடுத்துக்காட்டியிருக்கிறேன்////
இப்படித்தான் சொல்லிக்கொண்டே வருகிறீர்கள்.,எதை எடுத்து காட்டினீர்கள்?வாழ்க்கையில் தனியுடமை என்பது திருமணம் என்றால் பொதுவுடைமை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கேட்டால் சொல்ல மறுத்துவருகிறீர்கள்? திருமணம் கூடாது .லிவிங் டுகெதர் அதுவும் அந்த கால லிவிங் டுகெதர்  இஸ்லாத்தில் திருமணம் செயாமல் கூடி வாழ்வது பாலியல் குற்றம் அல்லவா? உங்களது பொது வுடைமை வந்தால் அதுவே  இஸ்லாமிய சட்டப்படி பாலியல் குற்றம் ஆகிவிடும் பிறகு  எப்படி ஒழித்துவிட்டதாக நிறுவமுடியும்  ? அந்த கால பண்ணை வாழ்க்கைதான் தீர்வு என்றால்,நீவிர் கதை விடும் பெண்ணை தலைமையாக கொண்ட  அந்த காலத்தில் பாலியல் குற்றம் நடக்கவே இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் கேட்டால் பதிலை காணோம் . 
///நீங்கள் எப்படி பாலியல் குற்றங்களை நீக்கமுடியும் என்று கேள்வி எழுப்பிப் பாருங்கள். அதைத்தான் நான் திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறேன்////
பாலியல் குற்றங்களை முற்றிலுமாக நீக்கவே முடியாது என்றுதான் நான் திரும்ப,திரும்ப கூறிக் கொண்டிருக்கிறேன்.நீங்களல்லவா எப்படி நீக்குவோம் என்பதை சொல்லவேண்டும்.
///இஸ்லாத்தில் நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை உங்கள் கண்முன் உரித்துக்காட்டுகிறேன்///
நீங்கள் உரிப்பதை: அது ஆணாதிக்கம் அல்ல, என்பதையும் உங்களது வெங்காய மூளைக்கு புரிய வைக்கிறேன். 
///பண்ணை வாழ்க்கை என்று ஒன்றை அடிக்கடி கூறிவருகிறீர்கள். அதை நான் கூற வேண்டும், அப்படி நான் கூறிய‌ பிறகு நான் கூறியதிலிருந்து இரண்டு வரிகளை பிரித்து எடுத்துப்போட்டு உங்கள் விளக்கெண்ணெய் விளக்கங்களை அளித்து வழுக்கிச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்////
வாழ்க்கையில் தனி வுடமையை ஒழிக்க வேண்டுமெனின் அது பண்ணை வாழ்க்கைதானே.அது இல்லையெனின்  உங்கள் தீர்வை சொல்ல வேண்டியதுதானே அதில் என்ன வெட்கம் ? நீங்கள் இப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா? என்று  கேட்ப்போம் என்று பயப்பட வேண்டாம் .அல்லது விளக்கெண்ணை விளக்கத்தில் நீங்கள் வழுக்கி விழுந்து கம்யுனிச இடுப்பு ஒடிந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமா? சரி இதற்க்கு முன் எந்த  இரண்டு வரிகளை நான் எடுத்து போட்டு என்ன விளக்கெண்ணை விளக்கம் தந்தேன்? 
.////என்ன பண்ணை வாழ்க்கை, நீங்கள் உங்கள் மனவிகாரங்களை கம்யூனிசத்திற்குள் திணிக்க வேண்டாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்/////
எனது  விகாரங்களை நீங்களாகவே யூகிக்க வேண்டாம் பொதுவுடைமை வாழ்க்கை பற்றித்தான் சொல்லுங்களேன் 
 ////எதை விவாதம் செய்யப்போகிறோம், எதை எதிர்த்து விவாதம் செய்யப்போகிறோம் என்ற இரண்டையும் அறிந்து கொண்டு தான் விவாதக் களத்திற்கு வரவேண்டும். கம்யூனிசம் குறித்த எந்த அடிப்படையையும் தெரிந்துகொள்ளாமல் இஸ்லாமே தீஈஈஈஈஈஈஈஈஈஈஈர்வு என விவாதிக்க வந்திருப்பதே முட்டாள் தனமானது என்பது விளங்கவில்லையா உங்களுக்கு?///
இஸ்லாம் என்னும் நெய்யை கையில் வைத்து கொண்டு பிரியாணியை சமைக்க முனைந்த போது, இஸ்லாம் என்பது விளக்கெண்ணெய் என்று உமது தளத்தில் எழுதப்பட்டு வருவதைக்கண்ட நான் கம்யுனிச பற்றிய கேள்விகள் எழுப்பி இருந்தேன் .அதற்க்கு பதில் சொல்ல வழியின்றி எனது கேள்விகளை வெளியிடாமல் மறைத்து,விவாதத்திற்கு அழைத்தது தாங்களே .
மாமேதையே,விவாதத்திற்கு அழைக்கும் அளவில் ஒருவரின் கேள்விகள் இருந்தால் விவாதத்திற்கு அழைத்தவர் முட்டாளா?கேள்விகள் கேட்டவர் முட்டாளா? நீங்களே முடிவு பண்ணிகொள்ளுங்கள். 
///கம்யூனிசம் குறித்த எந்த அடிப்படையையும் தெரிந்துகொள்ளாமல்///
என்கையில் நெய் இருக்கும் போது அதைப் பார்த்து ஒருவன் விளக்கெண்ணை என்று சொன்னான் .அப்படி எனின் உன்  கையில் மூடி வைத்திருப்பதை காட்டு அதுதான் விளக்கெண்ணை என்று நான் நிருபிக்கிறேன் என்றால்; ம்ஹூம் ,காட்டமாட்டேன் ,நீ கம்யுனிஸ்ட் ஸ்டோரில் வாங்கி பார்த்துவிட்டு அப்புறம் பேசு என்று ஒருவன் கூறினால் அவனை நான் என்னவென்பது? இந்தியன்,சங்கர்,மற்றும் ரபி  நீங்கள் சொல்லுங்கள் நான் ஏற்று கொள்கிறேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.