புதன், 26 அக்டோபர், 2011

வினவு இணைய தளத்திலிருந்து


tamilOctober 11, 2011 at 1:23 pm 
22.1.2
/// மேற்குறிப்பில் உள்ள விஷயம் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இஸ்லாம் பர்தா போட்டால் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு! ஆண்களின் தீய பார்வை-இலிருந்து உங்களை பாதுககிறது என்று சொல்கிறதே தவிர.. ///
புர்க்கா எப்படி பெண்களை பாதுகாக்கிறது என்பதை தெளிவாக சொல்லவும்
  • s.ibrahimOctober 12, 2011 at 7:57 am 
    22.1.2.1
    இந்திரா பார்த்த சாரதி தனது ஒரு நாவலில் ,மிக கண்ணியமான கதாநாயகி ,தினசரி அலுவலகத்திற்கு பஸ்ஸில் செல்லும் வேளையில் ஆண்களின் பார்வையில் தனது சங்கடங்களை எண்ணி வருந்தும் பொழுது புர்கா ஆடை அணிந்திருந்தால் தனக்கு இது போன்ற கஷ்டங்கள் வராதே என்று எண்ணுகிறார்.ஆக புர்காவின் பாதுகாப்பு அது போன்ற பெண்களுக்குத்தான் தெரியுமே ஒழிய தங்களைப் போன்ற ஆண்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
    • krishnaOctober 13, 2011 at 8:36 am 
      22.1.2.1.1
      இந்திரா பார்த்த சாரதி எப்ப பெண்ணானாரு?
      • s.ibrahimOctober 13, 2011 at 4:18 pm 
        22.1.2.1.1.1
        கிருஷ்ணா ,கிருஷ்ணா ,நான் அவரை பெண் என்று எங்கே சொல்லியுள்ளேன் .அந்த கதாபாத்திரம் மூலம் சொல்லியுள்ளதாகவே கூறியுள்ளேன்
    • kadavulOctober 13, 2011 at 7:58 pm 
      22.1.2.1.2
      சரி அதை பாதுகாப்பாக கருதி பெண்கள் அணியட்டும். அது அவர்களின் விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து அணியவில்லை என்றால் ஆசிட் என்பதும், அணிய சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஆணாதிக்கமும் எப்படி சரியாகும்?
      • s.ibrahimOctober 13, 2011 at 11:29 pm 
        22.1.2.1.2.1
        ///அதை விடுத்து அணியவில்லை என்றால் ஆசிட் என்பதும், அணிய சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஆணாதிக்கமும் எப்படி சரியாகும்?///
        இங்கே பர்தா அணியாமைக்காகவா ஆசிட் ஊற்றப்பட்டது? சிகரெட்டின் தீமைகளை சொல்லி அதனை புகைப்பதை தவிர்க்குமாறு நீங்கள் நெருங்கிய உறவினர்களை கட்டாயப் படுத்த மாட்டீர்களா?
        • kadavulOctober 14, 2011 at 4:45 pm 
          22.1.2.1.2.1.1
          என்னங்க இது கொடுமையா இருக்கு…நீங்க எதுக்கு பெண்களை மட்டும் இந்த உடை தான் போடனும்னு சொல்றீங்க? அவங்களுக்கு எது பாதுகாப்புன்னு தெரியும். அவங்க பாத்துப்பாங்க பாஸ்.
          • s.ibrahimOctober 15, 2011 at 6:47 am 
            22.1.2.1.2.1.1.1
            கடவுள் ////என்னங்க இது கொடுமையா இருக்கு…நீங்க எதுக்கு பெண்களை மட்டும் இந்த உடை தான் போடனும்னு சொல்றீங்க? அவங்களுக்கு எது பாதுகாப்புன்னு தெரியும். அவங்க பாத்துப்பாங்க பாஸ்.////
            ஆண்களும் முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை மறைத்துத்தான் உடை அணிகிறோம்.முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு இதுதான் பாதுகாப்பு என்று கருதியே அந்த உடை அணிகிறார்கள் .இதி உங்களுக்கு எதற்கு தேவை இல்லாத அக்கறை?கம்யுனிஸ்ட் யூனியனில் உள்ளவர்கள் சிவப்பு ஆடைதான் அணிய வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது சரியா?
            • KadavulOctober 16, 2011 at 7:53 pm 
              22.1.2.1.2.1.1.1.1
              என்ன இப்ராகிம், கம்யூனிஸ்ட் எல்லாம் சிவப்பு ஆடைதான் அணியனுனம்னு யாரும் கட்டாயப் படுத்தலையே! ஆனா உங்க ஆளுங்க பர்தா அணிய கட்டாயப் படுத்துறீங்களே???? கம்யூனிஸ்டுகள் எல்லோரும் சிவப்பு ஆடை அணிவதில்லை.
              • s.ibrahimOctober 19, 2011 at 7:37 am 
                22.1.2.1.2.1.1.1.1.1
                ///கம்யூனிஸ்டுகள் எல்லோரும் சிவப்பு ஆடை அணிவதில்லை.///
                பணக்கார கம்யுனிஸ்ட் அணிவதில்லை என்பது உண்மைதான் .கூலிகளை கட்டாயப்படுத்துவது யார்?
                பர்தா அணிய கட்டாயாபடுத்துவது யாருமில்லை.பெண்களின் ஆடையாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளதை அவர்கள் விரும்பி அணிகிறார்கள்.ரோட்டில் பர்தா அணிந்து செல்பவர்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என்று நினைத்துக் கொண்டால் அது உங்களது உங்கள் தவறு.
        • kadavulOctober 14, 2011 at 4:47 pm 
          22.1.2.1.2.1.2
          ஏன் நீங்க உங்க சொந்தக் காரங்க கிட்ட இப்புடி கட்டாயப் படுத்த கூடாது.. “இங்க பாருப்பா நம்ம வீட்டு பொண்ணுங்களும் நம்மள மாதிரி மனுசங்க தான். அதனால அவங்க உரிமையில நாம தலையிடக் கூடாது.” ட்ரைப் பண்ணி பாருங்களேன்.
          • s.ibrahimOctober 15, 2011 at 6:58 am 
            22.1.2.1.2.1.2.1
            முஸ்லிம் பெண்கள் எல்லாம் எங்களுக்கு பர்தா வேண்டாம் என்று உங்களிடம் முறையிட்டதுபோல் நீங்கள் வாதம் வைக்க வேண்டிய அவசியம் என்ன?பெண்களின் கவர்ச்சி மையங்களை மறைப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம்?பெண்களை கவர்ச்சி பொருளாக்காமல் ,அவளை மனுசியாக காட்டுவதிலே உங்களுக்கு என்ன கோளாறு? மது ,சிகரெட் ,கார் விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் பெண்களை காட்டுவது ஏன்?இதைவிட பெண்களுக்கு வேறு என்ன இழிவு இருக்கிறது?அதை தடுப்பதிலோ கண்டிப்பதிலோ இல்லாத அக்கறை முஸ்லிம் பெண்கள் மீது ஏற்பட்டிருப்பது ஏன்?அலுவலகங்களில் ஆண்கள் டவுசர் ,டி சர்ட் அல்லது பனியன் ,லுங்கி என்று அவரவர் விருப்பபடி உடை அணிந்து வர அனுமதிக்கலாம் அல்லவா? ஏன் உயர் அலுவலகங்களில் கோர்ட் ,சூட் கழுத்து கூட தெரியாத அளவி டை,கால் விரை தெரியாத அளவில் சூ,சாக்ஸ் அணிந்து வரவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்?அவரவர் விருப்பபடி ஆடை அணிந்து வர அனுமதிக்க வேண்டியது தானே

திங்கள், 10 அக்டோபர், 2011

தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி

அஸ்ஸலாமு அலைக்கும், 
                                                             சென்னையில் இருந்து வந்த ஒரு சுன்னத் ஜமாஅத் தீவிர ஆதரவாளர் பெரியவர் சொன்னார், சமிபத்தில் மரணம் அடைந்த சுன்னத் ஜமாஅத் துனைதலைவரின் கத்தம் பாத்தியாவில் கலந்து கொள்ள வந்ததாகவும் தனக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறியுள்ளார்.மேலும் இங்கே யார் புகுந்தார்கள்?பழைய து.த வுக்கு ஒரு தவ்ஹித் மவ்லவி நெருங்கிய உறவினர் என்றார்கள்.மேலும்,தனக்கும் ஓத மாட்டார்களோ ,தனது சந்தூக்கிலும் மாலை போட மாட்டார்களோ,அடக்கம் முடிந்த பிறகு முசாபாஹ் இருக்காதோ  என்ற ஆதங்கப் பட்டதாக கேள்விபட்டேன்.
அல்ஹம்துலில்லாஹ்..இதுதான் தவ்ஹித் ஜமாத்தின் வெற்றி .
எந்த தவ்ஹித் ஜமாத்தை ஒழிக்கப் போவதாக மக்களிடம் பொல்லாங்கு கூறி ஜமாஅத் தேர்தல் கொண்டு வந்தார்களோ அந்த ஜமாத்தாலே இன்று தவ்ஹித் வளர்கிறது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல் நிர்வாகத்தை மாற்றப் போகிறோம் என்று கையெழுத்து வேட்டை நடத்தி வக்ப் வாரியத்திற்கு மனுக்கள் அனுப்பினார்கள் .வக்ப் போர்டின் வழிகாட்டுதலின் படி அப்போது சூப்ரண்டாக இருந்த உதுமான் மைதீன் தலைமையில் தேர்தல் இல்லாமல் நிர்வாகத்தினரை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்திய பொழுது இரு தரப்பிலும் உறுப்பினர் பட்டியல்களை கேட்டார். அப்போது அப்துல்பாரி அவர்கள் தலைமையில் ஒரு அணியும் யாக்கூப்  தலைமையில் ஒரு அணியும் பட்டியல் கொடுக்கப்பட்டது இரு தரப்பினரையும் கலந்து நிர்வாகிகளை தேர்வு செய்யலாமா என்பது பற்றி பரிசீலனை செய்தபோது யாக்கூப் தரப்பினர் மறுத்துவிட்டனர்.கூட்டம் தீர்வற்ற நிலையில் இருந்த பொழுது ,நாங்கள் .ஒரு தீர்வை சொன்னோம்.அதாவது பள்ளியில் வைத்து மவ்ளுத் ஓதக்கூடாது ,மவ்லூத் ஒதுபவரை இமாமாக நியமிக்கக் கூடாது என்று எழுதித் தந்துவிட்டு யாக்கூப் அணியினர் மட்டுமே நிர்வாகிகளாக இருந்து கொள்ளட்டும் என்று கூறினோம்.அதற்கு ஒரு சிலர் தவிர மற்றவர்களும் எதிர்த்து தேர்தல் கொண்டு வந்தனர்.எப்படியோ வென்றனர்.ஆனால் நாங்கள் எதை எழுதி  கேட்டோமோ,அதை கண்ணியமான முறையில் பள்ளிவாசலில் வைத்து  எழுதி தராதவர்கள் போலிஸ் ஸ்டேசனில் வைத்து எந்த  காலத்திலும்  மவ்ளுத்  ஓதும் இமாம்களை நியமிக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தனர். இதுதான் எங்களுக்கு வெற்றி .இதைத்தானே அன்று நாங்கள் கேட்டோம் அப்போதே கொடுத்தால் நமது டெப்பாசிட் காசு மிஞ்சியிருக்கும்.தேர்தல் செலவுகள் இரு பக்கமும் ஆகியிருக்காது மேலும் நீங்க சென்னைக்கும் நெல்லைக்கும் பல முறைகள் படை எடுத்திருக்க வேண்டாம்.நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்த பெருநாள் திடல் தொழுகைக்கு அப்துல் பாரி அவர்களை ஏற்பாடு செய்யுமாறு வேண்டிய போது எங்களது ஆதரவாளர் என்று கூறப்பட்ட அவர் மறுத்தார். ஆனால் இன்று நபி[ஸல்]அவர்கள் கூறியவாறு நாங்கள் நடத்தி காட்டியது போன்று நீங்களும் திடல் தொழுகைக்கு வந்து விட்டீர்கள். இதுதான் எங்களுக்கு வெற்றி .நாங்கள் ஓட்டுகளை எண்ணி அடையும் அற்ப வெற்றியை விட இது போன்ற வெற்றியை எதிர்பாக்கிறோம்.தேர்தலில் நீங்கள் யார் வெற்றி பெற்றாலும் எங்களுக்கு அதில் ஒன்றும் இல்லை.ஆனால் நீங்கள் அனைவரும் தவ்ஹித் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு.அதுவே எங்கள் வெற்றி.
நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்கவோ ,ஆதரிக்கவோ மாட்டோம் என்று அறிவித்த பிறகும் உங்களது தேர்தல் ஆதாயம் கருதி வேண்டுமென்றே எங்களை எதிர்த்து போட்டியிடுவதாக கூறிவந்ததோடு எஸ்.பீ யூனூஸ் மருமகன் அப்துல் சலாம் என்பவரை நிஜாம் என்ற மது சப்ளையரை தோற்கடிக்க நாங்கள் நாற்பதினாயிரம் கொடுத்து நிறுத்தியுள்ளதாக தொழ வராத செயலாளர் உட்பட சில கழுகுகள் வதந்தி பரப்பி வந்தனர்.சலாம் ஏன் அடுத்தவர்களிடம் பணம் எதிர்பாக்க வேண்டும்?பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லவேண்டுமா?மோசடி மன்னன் நிஜாமின் சிறப்புகளை சொல்லி ஓட்டு கேட்க வழியில்லாததால் இவ்வாறு பொய்யை பரப்பி இப்படி ஒரு உள்ளூர்காரனை தோற்கடிக்க வெளியூர்காரனுக்கு பணம் கொடுக்க வேண்டுமா?ஐயோ பாவம் நிஜாம். ஆதலால் அவருக்கு சுன்னத் ஜமாத்தினரே ஓட்டு போடுங்கள் ,என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பொய்யர்கள் கூறுவதை எல்லாம் உண்மை என்று நம்பி வந்த ஒரு பெரியவர் சுன்னத் ஜமாஅத் வெறியர் , இன்று பிரச்சாரம் செய்ய வந்த அப்துல் சலாமிடமும் அவரது மாமாவிடமும் நாற்பதினாயிரம் பற்றி கேட்டுள்ளார்.விடுவார்களா அவர்கள்? செமையாக வாங்கி கட்டிகொண்டார்.ஆக பெரும் பொய்யர்களே நய வஞ்சகர்களே நாங்கள் உள்ளாட்சி தேர்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்னும் நிலையில் எங்களை வம்புக்கு இழுப்பது நியாயமா? உங்களது ஸ்பெசல் சுன்னத் ஜமாஅத் கொள்கைப் படி அண்ணன் நிஜாம் வழியில் சாராயம் கொடுத்து நாடார் தெருவில் ஓட்டு கேட்டது போல் தெருக்களிலும் ஏதாவது பாமாயில் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே ! ஏன் தவ்ஹித் ஜமாத்தையும் சுன்னத் ஜமாத்தையும் உங்கள் அற்ப அரசியல் ஆதாயங்களுக்கும் சேர்மன் வேட்பாளர் போடும் லட்சங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்? [இறைவன் நாடினால் தொடரும்]

வியாழன், 6 அக்டோபர், 2011

மானங்கெட்ட மத்ஹப் சட்டங்கள்


இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றிருக்கின்றோம்.
இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் அடிப்படையில் பின்வரும் மத்ஹபுச் சட்டம் அமையப் பெற்றிருப்பதைப் பாருங்கள்.
MATHHAB-1ஒரு நாய் அல்லது பன்றி மனித இனத்தைச் சார்ந்த பெண் மீது பாய்ந்து உடலுறவு கொண்டு அவள் ஒரு மனிதக் குழந்தையைப் பெற்று விட்டால் அந்தக் குழந்தை அசுத்தம்தான். இவ்வாறு அசுத்தமாக இருப்பதுடனே தொழுகை மற்றும் இதர கடமைகள் அவன் மீது கடமையாக்கப்பட்டுவிட்டன.  அக்குழந் தையை (தொடக்கூடாது இருப்பினும்) தொடுவது நிர்ப்பந்தமாக இருப்பதால் மன்னிப்பு உண்டு. அவன் மேல் ஈரம் இல்லாவிட்டால் பள்ளிக்கு வருவது கூடும். (நூல் பத்ஹுல் முயீன் ஷரஹுகுர்ரதுல் ஐன் பாகம்-1 பக்கம்-34)
எவ்வளவு மடமைத்தனமான விடயத்தைப் போதிக்கிறது இந்த ஷாபி மத்ஹபு நூல் பார்த்தீர்களா? இப்படி யாராவது சிந்திப் பார்களா? நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனையுடன் ஆபாசம் ஆரம்பமாகிறது. அப்படியென்றால் நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் நாயும் பன்றியும்தான் பெண்ணின் வயிற்றில் வளரும் என்று இந்நூலாசிரியர் சொல்ல வருகின்றாரா?
அதனால்தான் மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனை போட்டார் போலும். இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் இதை அறிந்தால் இஸ்லாத்தைப் பற்றி எப்படி கணிப்பிட்டுக் கொள்வார்கள். மேலும் அக்குழந்தை அசுத்தம் என்று கூறி விட்டு தொழலாம் என்று கூறுவது எவ்வளவு மடமைத்தனம். சிந்தியுங்கள் இச்சட்டம் எவ்வளவு பைத்தியகாரத்தன மாகவும் ஆபாசமாகவும் உள்ளது என்பது விளங்கும். கிறுக்குத் தனமானதும் முட்டாள் தனமானதுமான மற்றுமொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
MATHHAB_2
உண்ணத்தக்க பிராணி இரண்டும் உடலுறவு கொண்டு மனித வடிவில் குழந்தை பெற்றால் அவன் தூய்மையான வனாவான். அவனை உண்ணலாம். இவன் குர்ஆனை மனனம் செய்து கதீபாக பணிபுரியலாம். நமக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை இவன் நடத்தலாம். தொழுகை முடிந்த பிறகு அவனையே குர்பானியும் கொடுக்கலாம். (நூல்: இஆனதுத் தாலிபீன்      பாகம்-1 பக்கம்-113)
ஆடும் ஆடும் சேர்ந்தால் ஆடுதானே பிறக்கும் மனிதன் பிறப்பானா? பிறக்கக் கூடும் என மத்ஹபு கூறுகிறது. ஒரு ஆடு மாட்டுடனோ அல்லது மாடு ஆட்டுடனோ சேர்ந்தால் மனித வடிவில் குழந்தை பிறக்கலாம் என மத்ஹப் கூறுகிறது. இது நடைமுறைச்சாத்தியமா? அறிவியல் இதை நம்புமா? இஸ்லாம் இப்படிப்பட்ட உளறலை கூறியிருக்குமா? அறிவுடையோர் இதை ஒப்புக் கொள்வார்களா? சிந்தியுங்கள். மிருகமும் பெண்ணும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை அசுத்தமாம் மிருகமும் மிருகமும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை சுத்தமாம் வித்தியாசம் ஏதேனும் தெரிகிறதா? அறிவுள்ளவன் எவனாக இருந்தாலும் இச்சட்டத்தைப் பார்த்தால் கொதித்தெழவே செய்வான்.மனிதப் பண்புகளை வேரோடு தகர்த்தெறியும் இச்சட்டத்தை ஏற்க எந்த மனிதனாவது முன்வருவானா? மத்ஹப் வாதிகளே சிந்தியுங்கள்!
இச்சட்டத்தை நீங்கள் ஏற்பீர்களா? இனியும் இந்த மத்ஹபு தேவைதானா?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும்  மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
mathhab_3ஆணுறுப்பு என்ற வார்த்தை தன்னுடைய ஆணுறுப்பையும் குறிக்கும். எனவே ஒருவன் தன்னுடைய ஆணுறுப்பைத் தனது பின் துவாரத்தில் விட்டான் என்றால் அதற்காக அவனுக்குத் தண்டனை கொடுக்கப்படும். (நூல்: இஆனதுத் தாலிபீன்     பாகம்-4 பக்கம்-162)
எப்படி சிந்தித்துள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள் பார்த்தீர்களா? மிருகஜாதிக்கு மட்டுமே தோன்றக்கூடிய கற்பனைகளை மார்க்க சட்டங்கள் என்ற பேரில் இவர்கள் எழுதி வைத்துள்ளனர். குர்ஆன் ஹதீஸில் இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கூட கேட்க முடியாத அளவுக்கு நா கூசுகின்ற அருவருக்கத் தக்க ஆபாசங்களை உள்ளடக்கியுள்ள இந்த மத்ஹபு நூற்களை என்ன செய்வது?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும்  மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
மார்க்கக் கடமைகள் விதியாக்கப்பட்ட வயதினன் தனது ஆணுறுப்பை ஒரு சிறுமியின் பெண்ணுறுப்பில் நுழைத்து விடுகிறான். அந்தச் சிறுமி ஒருநாள் குழந்தையாக இருப்பினும் அவ்வாறு நுழைந்ததற்காக அவனுக்கு (விபச்சாரத்திற்கான) தண்டனை வழங்கப்படும். அதுபோல் ஒரு பெண் தனது பெண்ணுறுப்பில் ஒரு சிறுவனுடைய ஆணுறுப்பை நுழைத்து விடுகிறாள். அந்த சிறுவன் ஒருநாள் வயதுப் பையனாக இருப்பினும் அவ்வாறு அவள் நுழைத்ததற்காக அவளுக்கு விபச்சாரத்திற்கான தண்டனை வழங்கப்படும். (நூல் இஆனதுத் தாலிபீன் பாகம்-4 பக்கம்-162) இச்சட்டங்களை எழுதுவதற்குக்கூட கை கூசுகிறது என்ன செய்வது மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு மத்ஹபுகளிலுள்ள அபத்தங்களை எடுத்துக் கூறியாவது அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பது எமது கடமை என்பதால் இவைகளைக் கூறுகின்றோம். மேற்கூறப்பட்ட ஆபாசச் சட்டங்கள் அனைத்தும் எமது நாட்டிலுள்ள அறபு மத்ரஸாக்களில் போதிக்கப்படும் ஷாபி மத்ஹபு நூற்களில் காணப்படுபவைகளாகும்.
இதைவிட மோசமாகவும் கேவலமாகவும் நாங்களும் சளைத்தவர்களல்ல என்ற அடிப்படையில்  ஹனபி மத்ஹபுக்காரர்கள் சிந்தித்திருப்பதை நாம் இப்போது சொல்லும் தகவலை வைத்து நீங்கள் புரிந்து கொள்லாம்.
ஒருவன் தனது ஆணுறுப்பை ஒரு மிருகத்திடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் இந்திரியம் வெளிப்படாதவாறு செலுத்தினால் அல்லது மிருகத்தின் (பெண்) உறுப்பைத் தொட்டால் அல்லது தன்னுடைய ஆணுறுப்பின் துவாரத்தில் தண்ணீரை அல்லது எண்ணையை சொட்டவிட்டு அது உள்ளே இருக்கும் மூத்திரப் பையை அடைந்தாலும் சரி நமது மத்ஹபின் படி (நோன்பு முறியாது) (நூல்: அத்துர்ருல் முக்தார் பாகம்-2 பக்கம்-439)
எப்படி கற்பனை பார்த்தீர்களா? இப்படியெல்லாம் ஒருவன் கற்பனை செய்வானா? எவ்வளவு ஆபாசமாக இம்மத்ஹபுச் சட்டம் உள்ளது. சிந்தியுங்கள் இனியும் மத்ஹபுப் பிடிவாதம் தேவைதானா?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
mathhab_4தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லின் பிரகாரம் பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் அல்லது ஒரு மிருகத்திடம் உடலுறவு கொள்வதால் வுழு நீங்க மாட்டாது. ஆண் குறியை மாத்திரம் கழுவி விட வேண்டும். (நூல்: அத்துர்ருல் முக்தார்: பாகம்-1இ பக்கம்-179)
இவ்வளவு ஆபாசமாகக் கூட கற்பனை செய்ய முடியுமா? மத்ஹப்வாதிகள் கறபனை செய்தது போன்று கற்பனை செய்யலாம் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சட்டங்களுக்கு ஆதாரமாக அமைந்த அல்குர்ஆன் வசனங்கள் யாவை? அல்லது ஹதீஸ்கள் யாவை? அடுத்து இவர்கள் கூறும் மேற்கூறப்பட்ட சட்டத்திற்கு ஒத்த மற்றொரு சட்டத்தைப் பாருங்கள்.
பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் உடலுறவு கொள்வதால் குளிப்பு கடமையாகாது. வுழுவும் நீங்காது. இதைச் செய்தால் குளிப்பு கடமையில்லை என்று கூறும் போது இது செய்யத்தக்க காரியம் என்ற கருத்து மறைந்துள்ளது. இப்படி நடக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இதனால் குளிப்பு கடமையில்லை என்று எப்படிக் கூற முடியும்? அதற்கான ஆதாரம் என்ன?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
mathhab_5ஒருவர் தனது மறைவுறுப்பில் துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடுகிறார். அப்போது உடலுறவின் இன்பத்தை அவர் அடைந்தால் குளிப்புக் கமையாகும். இல்லையெனில் குளிப்புக் கடமை இல்லை.
உறுப்பிலே துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடும் சாத்தியம் உண்டா? சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும் உடலுறவு இன்பத்தை அடைந்தால் மட்டும் குளிப்புக் கடமை என்று கூறுவது சரியா? இந்த ஹதீஸை வாசித்துப் பாருங்கள் பதில் கிடைக்கும்.
‘ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே!) என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-291)
இதே ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஹதீஸ் தெளிவாக குளிப்பு கடமை என்று கூறியிருக்க மத்ஹப் கூறும் கற்பனைச் சட்டம் கூடாது என்கிறது எதை நாம் பின்பற்ற வேண்டும். தீய சிந்தனை கொண்டவர்களையும் வக்கிர எண்ணம் கொண்டவர்களையும் உருவாக்கிவிட முனையும் வகையில் ஆபாசத்தைத்தான் மதஹபுகள் போதிக்கின்றன என்பதை இனியாவது இந்த மத்ஹபு வாதிகள் சிந்தித்து மத்ஹபுகளை உதறித் தள்ளி விட்டு குர்ஆன்இ ஹதீஸின் பக்கம் வருவார்களா?