/// மேற்குறிப்பில் உள்ள விஷயம் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இஸ்லாம் பர்தா போட்டால் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு! ஆண்களின் தீய பார்வை-இலிருந்து உங்களை பாதுககிறது என்று சொல்கிறதே தவிர.. ///
புர்க்கா எப்படி பெண்களை பாதுகாக்கிறது என்பதை தெளிவாக சொல்லவும்
- இந்திரா பார்த்த சாரதி தனது ஒரு நாவலில் ,மிக கண்ணியமான கதாநாயகி ,தினசரி அலுவலகத்திற்கு பஸ்ஸில் செல்லும் வேளையில் ஆண்களின் பார்வையில் தனது சங்கடங்களை எண்ணி வருந்தும் பொழுது புர்கா ஆடை அணிந்திருந்தால் தனக்கு இது போன்ற கஷ்டங்கள் வராதே என்று எண்ணுகிறார்.ஆக புர்காவின் பாதுகாப்பு அது போன்ற பெண்களுக்குத்தான் தெரியுமே ஒழிய தங்களைப் போன்ற ஆண்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
- இந்திரா பார்த்த சாரதி எப்ப பெண்ணானாரு?
- கிருஷ்ணா ,கிருஷ்ணா ,நான் அவரை பெண் என்று எங்கே சொல்லியுள்ளேன் .அந்த கதாபாத்திரம் மூலம் சொல்லியுள்ளதாகவே கூறியுள்ளேன்
- சரி அதை பாதுகாப்பாக கருதி பெண்கள் அணியட்டும். அது அவர்களின் விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து அணியவில்லை என்றால் ஆசிட் என்பதும், அணிய சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஆணாதிக்கமும் எப்படி சரியாகும்?
- ///அதை விடுத்து அணியவில்லை என்றால் ஆசிட் என்பதும், அணிய சொல்லிக் கட்டாயப் படுத்தும் ஆணாதிக்கமும் எப்படி சரியாகும்?///இங்கே பர்தா அணியாமைக்காகவா ஆசிட் ஊற்றப்பட்டது? சிகரெட்டின் தீமைகளை சொல்லி அதனை புகைப்பதை தவிர்க்குமாறு நீங்கள் நெருங்கிய உறவினர்களை கட்டாயப் படுத்த மாட்டீர்களா?
- என்னங்க இது கொடுமையா இருக்கு…நீங்க எதுக்கு பெண்களை மட்டும் இந்த உடை தான் போடனும்னு சொல்றீங்க? அவங்களுக்கு எது பாதுகாப்புன்னு தெரியும். அவங்க பாத்துப்பாங்க பாஸ்.
- கடவுள் ////என்னங்க இது கொடுமையா இருக்கு…நீங்க எதுக்கு பெண்களை மட்டும் இந்த உடை தான் போடனும்னு சொல்றீங்க? அவங்களுக்கு எது பாதுகாப்புன்னு தெரியும். அவங்க பாத்துப்பாங்க பாஸ்.////
ஆண்களும் முகம் கைகளை தவிர மற்ற அவயங்களை மறைத்துத்தான் உடை அணிகிறோம்.முஸ்லிம் பெண்கள் தங்களுக்கு இதுதான் பாதுகாப்பு என்று கருதியே அந்த உடை அணிகிறார்கள் .இதி உங்களுக்கு எதற்கு தேவை இல்லாத அக்கறை?கம்யுனிஸ்ட் யூனியனில் உள்ளவர்கள் சிவப்பு ஆடைதான் அணிய வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது சரியா?- என்ன இப்ராகிம், கம்யூனிஸ்ட் எல்லாம் சிவப்பு ஆடைதான் அணியனுனம்னு யாரும் கட்டாயப் படுத்தலையே! ஆனா உங்க ஆளுங்க பர்தா அணிய கட்டாயப் படுத்துறீங்களே???? கம்யூனிஸ்டுகள் எல்லோரும் சிவப்பு ஆடை அணிவதில்லை.
- ///கம்யூனிஸ்டுகள் எல்லோரும் சிவப்பு ஆடை அணிவதில்லை.///பணக்கார கம்யுனிஸ்ட் அணிவதில்லை என்பது உண்மைதான் .கூலிகளை கட்டாயப்படுத்துவது யார்?பர்தா அணிய கட்டாயாபடுத்துவது யாருமில்லை.பெண்களின் ஆடையாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளதை அவர்கள் விரும்பி அணிகிறார்கள்.ரோட்டில் பர்தா அணிந்து செல்பவர்கள் மட்டும் தான் முஸ்லிம்கள் என்று நினைத்துக் கொண்டால் அது உங்களது உங்கள் தவறு.
- ஏன் நீங்க உங்க சொந்தக் காரங்க கிட்ட இப்புடி கட்டாயப் படுத்த கூடாது.. “இங்க பாருப்பா நம்ம வீட்டு பொண்ணுங்களும் நம்மள மாதிரி மனுசங்க தான். அதனால அவங்க உரிமையில நாம தலையிடக் கூடாது.” ட்ரைப் பண்ணி பாருங்களேன்.
- முஸ்லிம் பெண்கள் எல்லாம் எங்களுக்கு பர்தா வேண்டாம் என்று உங்களிடம் முறையிட்டதுபோல் நீங்கள் வாதம் வைக்க வேண்டிய அவசியம் என்ன?பெண்களின் கவர்ச்சி மையங்களை மறைப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம்?பெண்களை கவர்ச்சி பொருளாக்காமல் ,அவளை மனுசியாக காட்டுவதிலே உங்களுக்கு என்ன கோளாறு? மது ,சிகரெட் ,கார் விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் பெண்களை காட்டுவது ஏன்?இதைவிட பெண்களுக்கு வேறு என்ன இழிவு இருக்கிறது?அதை தடுப்பதிலோ கண்டிப்பதிலோ இல்லாத அக்கறை முஸ்லிம் பெண்கள் மீது ஏற்பட்டிருப்பது ஏன்?அலுவலகங்களில் ஆண்கள் டவுசர் ,டி சர்ட் அல்லது பனியன் ,லுங்கி என்று அவரவர் விருப்பபடி உடை அணிந்து வர அனுமதிக்கலாம் அல்லவா? ஏன் உயர் அலுவலகங்களில் கோர்ட் ,சூட் கழுத்து கூட தெரியாத அளவி டை,கால் விரை தெரியாத அளவில் சூ,சாக்ஸ் அணிந்து வரவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்?அவரவர் விருப்பபடி ஆடை அணிந்து வர அனுமதிக்க வேண்டியது தானே