சனி, 5 நவம்பர், 2011

இஸ்லாத்தை பற்றி அதிகமாக விமர்சிக்கும் செங்கொடி ,


இஸ்லாத்தை பற்றி அதிகமாக விமர்சிக்கும் செங்கொடி ,அவர்களே அதற்கு ஒரு மாற்று தீர்வு கம்யுனிசம் என்று ஏட்டளவில் புலம்பிக் கொண்டு வருகிறீர்கள் .எங்கே நடை முறையில் உள்ளது என்று கேட்டால் உலகம் முழுவதும் கம்யுனிச கொள்கையை ஏற்கும் போது அது வரும் என்று உளறுவதை வாடிக்கையாக கூறி வருகிறீர்கள். குறைந்த பட்சம் உங்களது கொள்கைவாதிகள் அளவிலாவது நடைமுறை படுத்தியதை காட்டுங்கள் என்று சொன்னால் ,அது இயலாத ஒன்று எனவும் சொல்லப் படுகிறது. மேலும் நாங்கள் இப்படி இஸ்லாத்தை விமர்சித்துத்தான் கம்யுனிசத்தை உலகம் முழுவதும் கொண்டு வரப்போகிறோம் என்கிறாரோ?இந்தியாவில் அதிகமான கம்யுனிஸ்ட்கள் உள்ளனரே என்றால் அவர்கள் போலிகள் என்கிறார்கள். முதலில் அந்த போலிகளை ,உண்மைகளாக மாற்றிவிட்டு அதன் பின்னர் நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக ,ஏற்கனவே காணாமல் போன கம்யுனிச பாதை சோஷலிசத்தை ரஷ்யாவில் சென்று நல்ல வேலைகளில் இருந்து கொண்டு இணைய தள மூலமாக நடைமுறைகளுக்கு கொண்டு வர முயற்ச்சி செய்யலாம். இதையெல்லாம்  செய்ய  திராணி அற்று  இஸ்லாத்தை விமர்சிப்பதை நேரடியாக செய்ய வாருங்கள் என்றால் திரை மறைவே எனக்கு வசதி எனவும் கூறி வருகிறீர்கள். ஆக நீங்களும் போலி கம்யுனிஸ்ட் என்பதில் சந்தேகம் இல்லை.
முகம்மது  நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கைப் பற்றி விமர்சிக்குமுன் தாங்கள் நியாயவாதியாக இருந்தால் தாங்கள் முதலில் நன்கு அரபியை தெரிந்து அதன் மூல நூல்களை ஆய்வு செய்து இருக்க வேண்டும்.ஹதீத் கலை பயின்று இருக்க வேண்டும் உலகில் எந்த மனிதரின் வாழ்க்கையும் இத்தனை வெளிப்படையாக வைக்கப் படவில்லை .உங்கள் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் வெளி உலகிற்கு தாங்கள் ஒரு சிறந்த கம்யுனிச சித்தாந்த வாதியாக தெரியும் .ஆனால் அந்த சித்தாந்தத்திற்கு மாறாக எப்படியெல்லாம் இருந்துள்ளீர்கள் என்பது உமது நெருங்கிய நண்பர்களுக்கு தெரியலாம்..அதைவிட உங்கள் குடும்பத்தினருக்கு தெரியலாம்.இன்னும் உங்களது மனைவிக்கு தெரிவதோடு ஏனைய தவறுகளும் உங்கள் மனைவிக்கு தெரியலாம்.உங்கள் மனைவிக்கு தெரியாத உங்களது மனவிகாரங்களும்  இருக்கலாம்.  உதாரணமாக எம்ஜியார் பற்றி வரலாற்று குறிப்புகள் அவரை சிறந்த மனிதராகவே காட்டும் .அவரது பலவீனங்கள் மறைக்கப்படும்.அவரை விமர்சிக்கும் நூல்கள் இரண்டாந்தர நூலாக கூறுவார்கள்.பிரபல்யங்கள் எழுத மாட்டார்கள்.அவர் தனது எழுபது வயதில் பதினாலு வயது பெண்களுடன் கூத்தடித்ததை யாரும் நினைவு கூறமாட்டார்கள் .திரை மறைவு விஷயங்கள் வெளிவராது. வெளிவந்தாலும் நம்பத்தகுந்தவைகள் அல்ல என்று தூற்றிவிடுவார்கள். டிஜிபியாக இருந்து ஒய்வு பெற்ற மோகன் ,தனது நூலில் ,1971  இல் அவர் சிபிஐ அதிகாரியாக இருந்தபொழுது இந்திராகாந்தியின் உத்தரவின் பேரில் திமுகவை உடைக்க எம்ஜியார் வீட்டில் ரைடு நடத்த ரகசியமாக சென்றதாக கூறுகிறார்.இதை எத்தனை பேர் எடுத்து காட்டுகிறார்கள்? இப்படி பார்த்தால் அனைத்து தலைவர்களையும் பார்த்தால் அவர்களது அந்தரங்க வாழ்க்கை மறைக்கபட்டிருக்கும் .அல்லது பிரபலய மற்றவர்கள் எழுதி இருப்பார்கள்.உங்கள் தன மானத்தலைவர் பற்றிய Young Stalin by Simon Sebag Montefiore என்பவர் எழுதிய நூலில் அவரைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
1907 இல் ஸ்டாலின் முன்னின்று நடத்திய திபிலிசி வங்கிக்கொள்ளையை மாண்டபியோரி ஹாலிவுட் ஸ்டைலில் விவரிக்கிறார். பட உரிமைகள் விற்கப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்படும் அந்த கொள்ளையில் சிக்கிய கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபிள்கள் பெருமளவு லெனின் வசம் சென்று சேர்கிறது. அதனால் லெனின் ஸ்டாலினிடம் பெருமதிப்பு கொள்கிறார். முதலில் தன்னோடு போட்டியிட்ட, பின்னர் தன் தலைமையை ஏற்ற ட்ராட்ஸ்கியை ஒப்பு நோக்க ஸ்டாலினிடம் நெருக்கமாக இருக்கிறார்.
திபிலிசி கொள்ளைக்குப்பின் எண்ணெய் வளம் கொப்பளிக்கும் பாகு நகரத்திற்கு போல்ஷெவிக் கட்சியை வளர்த்தெடுக்க ஸ்டாலின் வருகிறார். கண்ட இடமெல்லாம் எண்ணெய் பீறி அடிக்கும் பாகு, அசெர்பைஜானின் தலைநகர். அக்காலத்தில் ஐரோப்பியப் பெரும் பணமுதலைகள் ( ஆல்ஃப்ரெட் நோபெல் உட்பட ), மத்திய ஆசியத் தொழிலாளர்கள், ரஷ்ய ராணுவம் என்று வினோதமான கலவை நிறைந்த நகரம். நகரில் திடீர்ப் பணக்காரர்கள் குழுமியுள்ளனர். இவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே ஸ்டாலினின் வேலை. இதில் இவருக்கு உடந்தை பெரும் செல்வந்தரான ஒரு ஜெர்மானியரின் மனைவி. ஆம். ஸ்டாலின் ’அந்த விதத்திலும்’ சளைத்தவர் அல்ல. இரு மனைவிகள் உட்பட ஏறத்தாழ ஒரு டஜன் பெண்களை ஸ்டாலினோடு இணைத்துப் பட்டியல் போடுகிறார் மாண்டபியோரி. இதில் 14 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். பிற்காலத்தில் இந்தக் காதலிகள் எழுதிய ‘மலரும் நினைவுகள்’ பிரசுரத்திற்கு முன்பே தேடித்தேடிப் பறிமுதல் செய்யப்படுகிறது.புத்தக விவரங்கள்: Young Stalin : by Simon Sebag Montefiore Paperback
Pubished by: Phoenix / Orion Books ltd, London2007/ ISBN: 978-0-7538-2379-8
இரும்புத்திரை ஆட்சியிலிருந்து இத்தனை விஷயங்கள் வெளிவந்துள்ளன என்றால் இன்னும் மூடி மறைக்கப்பட்ட ஸ்டாலின் ரகசியங்கள் எத்தனை இருக்கக் கூடும்?

வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – I,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – III,
இந்த லிங்கில் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆதாரத்தை ஆதாரங்களுடன் மறுக்காமல் பொத்தாம் பொதுவாக மறுத்தது சரியான மறுப்பாகுமா?  


கம்யுனிச தலைவர்களின் இரும்புத்திரைக்குள் நடந்த காம களியாட்டங்களை மூட்டை கணக்கில் வைத்துக் கொண்டு ,கம்யுனிசம் பற்றி ஜோக் சொன்னாலே சிறைக்கு அனுப்பிய மனிதாபிமான அற்றவர்களை ஆட்சியை பெருமையடிக்கும் நீங்கள் பெண்ணுரிமை ,ஆணாதிக்கம் பற்றி கற்பனை உலகில் உழலுவது நியாயமா? முஹம்மது நபி[ஸல்] அவர்கள் தன்னை கண்டிக்கும் வசனங்களையும் வெளிப்படுத்த வில்லையா? அவர்களின் தலையில்  எத்தனை வெள்ளை முடிகள் இருந்தன என்று கூட வரலாற்றில் எழுதப் பட்டட்டுள்ளது, விதந்தோம்பல் அல்ல .முஹம்மது[நபி]அவர்களின் வாழ்க்கையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.எனபதையே அது போன்றே ஹதீத்கள் மூலம் தெரிய முடிகிறது.

புகாரி ஹதீஸ் 5081
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் – மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.


நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் அது ஆதாரப்பூர்வமானது அல்ல ஏனெனில் இதை அறிவிக்கும் உர்வா அவர்கள் ஆயிஷா அரலி அவர்களின் திரும்ணத்தின் போது பிறக்கவே இல்லை. நபிகள் நாயகத்தின் காலத்தில் இவர் வாழவும் இல்லை. அதன் மூலத்தைக் கீழே தந்துள்ளேன்
حدثنا عبد الله بن يوسف حدثنا الليث عن يزيد عن عراك عن عروة أن النبي صلى الله عليه وسلم خطب عائشة إلى أبي بكر فقال له أبو بكر إنما أنا أخوك فقال أنت أخي في دين الله وكتابه وهي لي حلال
இந்த மாதிரியான ஆதாரமற்ற ஹதீத்களை வைத்துக் கொண்டு கோடிகணக்கான மக்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மாமனிதரை விமர்சிப்பது தங்களை சிந்தனையாளர் என்று வெளிபடுத்துமா?அல்லது ஒரு மதத்தின் மீது உங்களுக்கு  இருக்கும் வெறுப்பு உணர்வுகளை வெளிப்படுத்த கிடைக்கும் ஆதாரமற்ற செய்திகளை பயன்படுத்தி அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கமா?இதன் மூலம் தங்கள் புகழை கம்யுனிஸ்ட்கள் மத்தியில் உயர்த்தி கொள்ளும் நோக்கமா? 
///முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ///
நீங்கள் ஹதீத் கலை அறிஞர் போல் தெளிவாக உறுதி செய்யப்பட ஹதீஸ் என்று எந்த அடிப்படையில் முடிவு செய்து உள்ளீர்கள்?
///ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல்  எப்படி ஒரு பொய்யை  கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.///
இது உங்களுக்குத்தானே பொருந்தும்.ஒரு ஹதீஸின் தரம் தெரியாமல் அதை வைத்து கதை எழுதுவதற்கு உங்களுக்கு என்ன அப்படி ஆத்திரம்?
///‘அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா    அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான  நபி   அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி   அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?///
இது ஒரு மடத்தனமான வாதம் .நபி [ஸல்]காலத்திலும் முந்தைய பழக்க வழக்கப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் மது பானம் அருந்தியவர்களாக இருந்தனர் .முதலில் தொழுகையில் மட்டுமே மது பானம் தடை செய்யப் பட்டது,அதன் பின்னர் முழுமையாக தடை செய்யப் பட்டது.உங்களை போல் எழுதுபவர் முந்தைய செய்திகளை மட்டும் பார்த்துக் கொண்டு குர்ஆனில் தொழுகை தவிர மற்ற நேரங்களில் மது அருந்த அனுமதி உள்ளதே ,அதை ஏன் நீங்கள் பிரச்சாரம் செய்ய வில்லை,இதை வைத்து ஒரு பொது விவாதம் நடத்தக் கூடாதா?என்றெல்லாம் கேப்பது  போல் உள்ளது உங்களது வாதம்.
நம்பிக்கை கொண்டோரே !பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.[அல் குர்ஆன்]
கன்னிப் பெண்ணாயினும் ,விதவை பெண்ணாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள்[ஸல்] அவர்கள் கூறியபொழுது ,கன்னிப் பெண் [சம்மதம் தெரிவிக்க ] வெட்கப்படுவாளே என்று கேட்டேன்.அதற்கு நபி[ஸல்] அவர்கள் அவளது மவுனமே அவளது சம்மதம் என்று கூறினார்கள்.புகாரி 6971 , 6964 
எனது தந்தை எனது சம்மதம் பெறாமலே எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள் .அதனை விரும்பாத நான் நபி[ஸல்] அவர்களிடம் வந்து இதை கூறியபோது அந்த திருமணத்தை ரத்து செய்தார்கள் .அறிவிப்பவர் கன்ஸா பின்த் kitham      [rali  ]
புகாரி 5139,6945,6969
அவதூறு  எழுதுவதற்காக  சியாக்களின்  ஹதீத்களை  தேடி  சென்று  எழுதும்  உங்களுக்கு இந்த  ஹதீத்கள்  ஏன் கிடைக்கவில்லை ?அபூபக்கர் [ரலி] அவர்கள் கதிஜா  இறந்த  பிறகு ,நபி[ஸல்] அவர்களிடம் உங்களுக்கு பணிவிடைகள்; செய்ய ஆயிஷா[ரலி] அவர்களை திருமணம் செய்ய வேண்டிய ஹதீத்கள் கிடைக்காமல் உங்கள் கண்ணை மறைத்தது எது? ஆயிஷா [ரலி] அவர்கள் தனது ஒன்பதாவது வயதில் ஷவ்வால் மாதத்தில் பருவம் அடைந்த பிறகு இல்வாழ்க்கை தொடங்கியதாக கூறும் ஹதீத்கள் ஏன் உங்கள் பார்வைக்கு எட்டவில்லை?
பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கை எடுத்துள்ளார்கள் [குர்ஆன்4;21]
திருமண ஒப்பந்தத்தை கடுமையான ஒப்பந்தம் என்கிறது குர்ஆன் .கடுமையான ஒப்பந்தம் என்றால் ஒப்பந்தம் போடும் அந்த கடுமையின் அர்த்தம் தெரிந்தவர்களாக் இருப்பார்கள் அல்லவா?
[தொடரும்]

allurmuzhakkamநவம்பர் 5, 2011 இல் 11:49 பிற்பகல் #
நண்பர் இப்ராஹிம்,
அரபு மொழியில் புலமையில்லாவிட்டால் இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது என்கிறீர்களா? என்றால் இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நீங்கள் மறுப்பதாகாதா?
புஹாரியும், முஸ்லீமும் ஆதாரபூர்வமானவை என்றுதான் நீங்களே பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆனால் தேவைப்படும் போது அதிலும் நம்பமுடியாத ஹதீஸ்கள் இருப்பதாக கூறுகிறீர்கள். உர்வா அறிவிக்கும் பல ஹதீஸ்கள் புஹாரியில் இருக்கின்றன. புஹாரி தன்னுடைய தொகுப்பை போதுமான கவனத்துடன் தொகுக்கவில்லை என்பது உங்களின் கருத்தா? என்றால், முதலில் இவை நம்பகமானவை இவை நம்பகமற்றவை என தொகுத்து அறிவியுங்கள். கூடவே ஏன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹதீஸ்களை புதிதாக தொகுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பதையும் விளக்கிவிடுங்கள்.
ஆய்ஷாவின் சகோதரி மகனான உர்வா அறிவிக்கும் குறிப்பிட்ட அந்த ஹதீஸில் திருமணத்தில் அபூபக்கருக்கு தயக்கம் இருந்ததை மட்டுமே கூறுகிறது. ஆனால் ஆறு வயதில் திருமணம் நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. என்றால் யாரிடம் சம்மதம் வாங்கப்பட்டது? ஆறு வயது சிறுமிக்கு திருமணம் குறித்து என்ன தெரியும்? ஐம்பதுக்கும் அதிகமான வயதுடைய கிழவனுக்கு ஆறுவயது சிறுமியிடம் உள்ள தொடர்புக்கு பெயரென்ன? விளக்குங்களேன்.
இஸ்லாத்தை விமர்சித்தால் கம்யூனிச அவதூறுகளை தூக்கிக் கொண்டுவருவது தானே உங்களைப் போன்றோரின் ஒரே எதிர்வினை. சொந்த சகோதரி மகன் கூறியதை திருமணத்தின் போது பிறந்திருக்கவில்லை என்று கூறி மறுக்கும் நீங்கள், 1965 ல் இங்கிலாந்தில் பிறந்த சைமன் மண்டேபியாரே, தான் பிறப்பதற்கு 60 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் நடந்ததாக ஒன்றை ஹாலிவுட் பாணியில் விவரிப்பதை எந்த அடிப்படையில் உண்மை என்கிறீர்கள்?
நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் என்ன என்பதை சொடுக்கிப் பார்த்தீர்களா? கம்யூனிசத்தை எதிர்த்து எழுதியிருப்பதை பார்த்ததும் அப்படியே புழகமடைந்து விட்டீர்களோ. விரைவில் இது குறித்து செங்கொடியில் கட்டுரை வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.