புதன், 9 நவம்பர், 2011


செங்கோடிக்கு பதில் 
அரபி மொழியில் புலமை இல்லாதவர்கள் மட்டுமல்ல கல்வியறிவு இல்லாதவர்கள் கூட வேண்டுமானாலும் இஸ்லாத்தை விமர்சிக்கலாம்.ஆனால் அவைகள் விமர்சனமா அவதூறுகளா?என்பதை அந்த மூல நூல்களின் மொழியறிவு இல்லாமல் ஆய்வு செய்து எழுதுவது அரைவேக்காட்டுத்தனமாகவே இருக்கும். அடைப்புக் குறிக்குள் விளக்கம் தருவது அந்த மொழியை அறிந்தவர்கள் மட்டுமே சரியான விளக்கம் தர முடியும்.ஹதீத் அறிவிப்ப்பாளர்கள் பற்றியும் தரமறிந்து ஹதீத்கள் நிலை அறிந்து ஆய்வுக்கட்டுரைகள் காண முடியும்.
புகாரியும் முஸ்லிமும் ஆதாரப் பூர்வமானவைகள் என்று யாரும் பிரச்சாரம் செய்ய வில்லை.
ஹதீத் கலையின் அடிப்படையில் ஒரு ஹதீத் ஸஹிஹ் ஆதாரப் பூர்வமானது என்று முடிவு செய்ய பல விதிகள் உள்ளன ,அந்த விதி முறைகளுக்கு உட்பட்டு ஸஹிஹ் என்று முடிவு செய்யப்பட ஹதித்கள் ,99 சதவீதம் உள்ள நூலாக புகாரியும் ,அதற்கடுத்தபடியாக முஸ்லிம் நூலும் உள்ளதால் அந்த நூலகள் முக்கியத்துவம் பெறுகின்றன.புகாரியிலும் முஸ்லிமிலும் ஹதீத்கள் நம்பத் தகுந்தவைகள் என்பது ஹதித்கலை விதிமுறைப் படிதான் செய்யப்படுகின்றன.நூல்கள் அடிபடையில் முடிவு செய்யப்படவில்லை.
///முதலில் இவை நம்பகமானவை இவை நம்பகமற்றவை என தொகுத்து அறிவியுங்கள். கூடவே ஏன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஹதீஸ்களை புதிதாக தொகுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பதையும் விளக்கிவிடுங்கள்//
இவை உங்கள் அறியாமை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இஸ்லாத்தை பற்றி ஓரளவு அறிந்தால் கூட இப்படி எழுதி இருக்க மாட்டீர்கள்
1965 இலும் ஒன்பதாம் நூற்றாண்டிலும் தகவல் திரட்டும் வாய்ப்புகள் பற்றி ஒப்பிட்டுத்தான் இப்படி எழுதி உள்ளீர்களா?

  1. செங்கொடியின் பதில் 
    நண்பர் இப்ராஹிம்,
    பேசப்படவேண்டிய இலக்கை விட்டுவிட்டு அலங்காரங்களை பேசுவது தான் எப்போதுமே உங்கள் உத்தியா?
    “தாங்கள் நியாயவாதியாக இருந்தால் தாங்கள் முதலில் நன்கு அரபியை தெரிந்து அதன் மூல நூல்களை ஆய்வு செய்து இருக்க வேண்டும்.ஹதீத் கலை பயின்று இருக்க வேண்டும்”
    ”அரபி மொழியில் புலமை இல்லாதவர்கள் மட்டுமல்ல கல்வியறிவு இல்லாதவர்கள் கூட வேண்டுமானாலும் இஸ்லாத்தை விமர்சிக்கலாம்.ஆனால் அவைகள் விமர்சனமா அவதூறுகளா?என்பதை அந்த மூல நூல்களின் மொழியறிவு இல்லாமல் ஆய்வு செய்து எழுதுவது அரைவேக்காட்டுத்தனமாகவே இருக்கும்”
    இந்த மேற்கோள்களில் நீங்கள் கூறவருவது என்ன? மொழிபெயர்ப்புகள் எல்லாம் மேம்போக்காக தெரிந்து கொள்வதற்கு மட்டும் தான். முழுமையாக தெரிய வேண்டுமென்றால் அரபு மொழியில் தான் படிக்க வேண்டும் என்கிறீர்களா? இது தான் மடக்கி மடக்கி நீங்கள் கூறும் கருத்து என்றால், இஸ்லாம் அனைத்து மொழியினருக்கும் என்பதை மாற்றி அரபு மொழியினருக்கு மட்டும் என்று மாற்றுங்கள். அல்லது அரபு மொழியின் முழுமைப் பொருளுக்கு ஈடாக எல்லா மொழியிலும் மொழிமாற்றம் செய்யுங்கள். இவைகளைச் செய்யாமல் அனைவருக்கும் பொது என்று கூற முடியாது. அனைவருக்கும் பொது என்பது, விமர்சனம் செய்தால் மூல மொழியைப் படித்துவா என்பது. என்ன பித்தலாட்டம் இது.
    இது போல் தான் ஹதீஸ்களும். இஸ்லாத்திற்கு குரானைப்போல் ஹதீஸ்களும் முக்கியமானதா? இல்லையா? ஆம் என்றால், அதை ஏன் நம்பக்கூடியதையும், நம்பக்கூடாததையும் கலந்து வைத்திருக்கிறீர்கள். முதலில் இவைதான் நம்பக்கூடியவை என பிரியுங்கள். பின் அதிலிருந்தே நாங்கள் எடுத்துக் காட்டுகிறோம். அப்படி முன்னர் பிரிக்கப்பட்டவைகள் தான் ஆறு நூல்களும் பின்பும் அதிலிருந்து புஹாரியும் முஸ்லீமும். இன்றோ அதிலும் கலப்படம் இருக்கிறது என்று உங்களைப் போன்றோர். 1200 ஆண்டுகளாக இது சரி இது தவறுஎன்று தெளிவாக பிரிக்க முடியாமல் என்ன பணிதான் செய்திருக்கிறார்கள் உங்கள் மதவாதிகள்? இதைக் கேட்டால் நாங்கள் அரை வேக்காடுகளா?
    அட கரிந்து தீய்ந்ததுகளே, எல்லோருக்கும் பொது என்று கூப்பாடு போடுவது விமர்சித்தால் அரபு தெரியுமா என்று உதார்விடுவது. குரானும் ஹதீஸும் முக்கியம் என்பது ஆனால் ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டினால் ஆதாரமில்லாத ஹதீஸ் என்று ஜல்லியடிப்பது. அன்றிலிருந்து இன்றுவரை இது தானே உங்களின் வழிமுறை. முதலில் உங்களை சரிப்படுத்துக் கொண்டு வாருங்கள். அதுவரை எங்களின் விமர்சனம் காத்திருக்கும்.
    சரி இப்போது முதன்மையானதிற்கு வருவோம். முகம்மது ஆய்ஷாவை திருமணம் செய்தது சரியா தவறா? திருமணத்திற்கு மணப்பெண்ணின் அனுமதி வேண்டுமென்றால் ஆறு வயது ஆய்ஷாவுக்கு திருமணம் குறித்து என்ன தெரியும்? தவறுஎன்றால் உரத்துக் கூறுங்கள். சரி என்றால் எப்படிசரி விளக்குங்கள். ஆட்டின் தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டு அது சிலுப்பியவுடன் வெட்டுவதற்கு ஆடு சம்மதம் கொடுத்து விட்டது என்பதைப்போல் ஆய்ஷாவிடம் சம்மதம் வாங்கினாரா முகம்மது. பதில் கூறுங்கள்.
    ஒன்பதாம் நூற்றாண்டைவிட இருபதாம் நூற்றாண்டில் தகவல் பெறும் முறை மேம்பட்டது தான். அதனால் இருபதாம் நூற்றாண்டில் இருப்பவர்கள் அனைவரும் கூறுவது உண்மையாகிவிடுமா?

    • S.Ibrahimநவம்பர் 10, 2011 இல் 5:10 மு.பகல் #
      கம்யுனிசத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் கயுநிசத்தை செங்கொடி அளவுக்கு அறிந்தவர்களா?பலர் மேம்போக்காகவே பின்பற்றுகின்றனர்.தங்களது வழிகாட்டிகள் தவறான தகவல்களை தரமாட்டார்கள்,மேலும் அவர்களுக்கு அனைத்து புத்தகங்களையும் படிக்கும் ஆர்வமோ நேரமோ இருக்காது.ஆதலால் தலைவர்கள் தரும் செய்திகளை நம்பியே பின்பற்றும் மக்கள் அனைத்து கொள்கைகளிலும் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.இதை செங்கொடி மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
      ஒரு மதத்தை கடுமையான முறையில் விமர்சிக்க ஒருவர் முனைந்தால் அடைப்புக் குறிக்குள் வருபவற்றை தன தோன்றித்தனமாக விமர்சிக்க வரும் வேளையில் மூலநூல்கள் என்ன சொல்லுகின்றன என்பதை அறிந்துதான் விமர்சிக்க முடியும்.இல்லைஎனில் தங்களை விமர்சகாரக பார்க்க முடியாது.பகடு போன்ற இஸ்லாமிய எதிரிகளின் பகடை காய்களாகவே இருக்க முடியும்.ஹதீத் கலை பற்றிய நூல்கள் ஆங்கிலத்தில் தமிழில் உள்ளன.ஹதீத்களின் தரம் ஒவ்வொரு ஹதீதிலும் அதனை பதிவு செய்தவர்கள் பதிவு செய்துள்ளனர்.அத்தனை நூல்களும் மொழியாக்கம் செயப்பட்டுள்ளனவா என்பது தெரியாது.ஆனால் ஒரு அறிஞர் ஒரு ஹதீதை விமர்சனம் செய்யும்பொழுது அவரின் விமர்சன வரிகளில் ஒரு சொல் கூட தவறாக இருந்தால் பல அறிஞர்களிடமிருந்து மாற்று கருத்துகள் ,முந்தயவரின் விளக்கம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு இஸ்லாத்தை முழுமையாக அரபிமொழி அறிவு இல்லாமலே அறிந்து கொள்ள முடியும்.இந்த அறிஞர்களின் கருத்துக்களையும் ஏற்காமல் விமர்சனம் செய்ய விரும்பினால் மூல நூல்கள் அறிய அரபி மொழி அவசியம்.இஸ்லாத்தினை விமர்சிக்க முனைந்த பலமேல்நாட்டு அறிஞர்கள் அரபி மொழி கற்றே முன்வந்தனர்..
      கரிந்து தீய்ந்தது கம்யுனிசம் என்பதை சீன.ரஷ்யாமக்கள் உட்பட உலக மக்கள் அறிவார்கள் .அலங்காரங்களை பேசுவது உங்கள் உத்தியா என்று கேட்டுவிட்டு அதே அலங்கார வார்த்தைகளை பயன்படுத்துவது சரியா?
      ///குரானும் ஹதீஸும் முக்கியம் என்பது ஆனால் ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டினால் ஆதாரமில்லாத ஹதீஸ் என்று ஜல்லியடிப்பது. அன்றிலிருந்து இன்றுவரை இது தானே உங்களின் வழிமுறை. முதலில் உங்களை சரிப்படுத்துக் கொண்டு வாருங்கள். அதுவரை எங்களின் விமர்சனம் காத்திருக்கும்.///
      முதலில் உங்களது கம்யுனிசத்தை உங்களது வாழ்க்கை அளவிலாவது நடைமுறைபடுத்திவிட்டு கம்யுனிசம் பற்றி இணைய தளங்களில் மலிந்து கிடக்கும் விமர்சங்களுக்கு பதில் சொல்லிவிட்டு .அதன் பிறகு நீங்கள் போலி கம்யுனிஸ்ட் கள் என்று கூறுபவர்களை உங்களைப் போன்ற போலி கம்யுநிச்ட்களாக மாற்றிவிட்டு ,பிறகு நீங்கள் எல்லோரும் உண்மை கம்யுனிஸ்ட் களாக மாறிய பிறகு இஸ்லாத்தை பற்றி விமர்சிக்க வாருங்கள் .அப்போதுதான் உங்களை உண்மையான சமூக நலவாதியாக கொள்ள முடியும்.இல்லையெனில் காசுக்காகவோ அல்லது புகழுக்காகவோ ஒரு சமயத்தை விமசிக்கும் நய வஞ்சகராகவே கொள்ள முடியும்.
      ஆயிசாவின் திருமணத்திற்கு சம்மதம் பெறப்பட்டாதா என்று மீண்டும் செங்கொடி எனும் மெகா அறிஞர் கேட்டுள்ளார்.முதலில் தொழுகை அல்லாத நிலையில் மது அருந்த அனுமதிக்கப்பட்டது.அதற்கு பின்னரே முழு மது விலக்கு வந்தது என்பதை விளக்கியுள்ளோம்.அதன் பின்னர் மது குடித்தவர்களே குற்றவாளிகள்.மது தடை சட்டம் முழுமையாக வருமுன் குடித்தவர்கள் குற்றவாளியாக மாட்டார்கள்.இஸ்லாத்தில் அனைத்து சட்டங்களும் ஒரே நாளில் வரவில்லை .அறியாமையில் இருந்த மக்களை படிப்படியாக நேரிபடுத்தினார்கள் .மனவிருப்பம் கேட்பது ஆயிஷா[ரலி]அவர்களின் திருமணத்திற்கு பிறகு வந்ததே என்பதற்கு ஆதாரங்கள் உள்ளளன .ஆதலின் தங்களின் அறியாமையை மீண்டும் வெளிப்படுத்தவேண்டாம்.
      //ஒன்பதாம் நூற்றாண்டைவிட இருபதாம் நூற்றாண்டில் தகவல் பெறும் முறை மேம்பட்டது தான். அதனால் இருபதாம் நூற்றாண்டில் இருப்பவர்கள் அனைவரும் கூறுவது உண்மையாகிவிடுமா?////ஆதலின் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கூறும் செங்கொடி கூற்றும் உண்மையாகாது.
      மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.