செவ்வாய், 24 ஜூலை, 2012

முனவ்விருள் என்ற பெயரில் சம்சுதீன் என்ற ஆலிமுடன் நடந்த விவாதத்தின் ஒரு பகுதி


    கருப்பு எழுத்துக்கள் சம்சுதீன் ஆலிமுக்குரியது .சிவப்பு எழுத்துக்கள் எனது பதில்கள் 
munavvirul
 சொன்னது…
"அந்நஜாத் "என்ற  பெயருக்கு  நீங்கள்  கூறிய  ஆயத்  உங்கள்  சொந்த  கண்டுபிடிப்புதான் .உண்மையில்  அது  அபு  அப்துல்லாஹ்  வின்  கடையின்  பெயர்தான் ,இது  தெரியாது  என்றால்  இது  விஷயத்தில்  நீங்கள்  பாலகனே . அபு  அப்துல்லாஹ்  தப்லீக்  அனுதாபியாக  இருக்கும்  போதே  எனக்கு  நேரிடையாக  அறிமுகமுண்டு . தஞ்சாவூரில்  நடந்த  மாநில  உலமாக்கள்  சபை  நடத்திய  வலிமார்கள்  சிறப்பு  மாநாடு  பற்றி  விமர்சித்து  "நஞ்சையும்  புஞ்சையும்   கொஞ்சிடும்  சோழவள  நாட்டின்  தலைநகராம்  தஞ்சையில் "என்று  தொடங்கும்  சிறு  புத்தகம்  வெளியிட்டதன்  மூலம்தான்  PJ என்ற  மனிதன்  வெளி  உலகுக்கு  தெரிந்தார் .அப்போதே  அந்த  கையேட்டை  படித்த  நான்  அவரை  பாராட்டி  கடிதம்  எழுதி  அதற்கு  அவர்  நன்றி  கூறி  பதிலும்  எழுதினர் .பின்பு  அந்நஜாத்  ஆரம்பித்து  பிரச்சாரம்  செய்த  பொது  அந்த  கொள்கையில்  ஏற்பட்ட  பல  சந்தேகங்களுக்கு  அவர்  சரியான  பதில்  சொல்லாமல்  மழுப்பியதுண்டு , மட்டுமல்ல ,எனக்கும்  PJ உக்கும்  நேரிடையாக  நடந்த  உரையாடலிலும் ,என்  நெருங்கிய ,அவருக்கும்  நெருக்கமான  நண்பர்களிடமும்  நடந்த  உரையாடலிலும் , தன  வாதத்தில்  ஜெயிக்க  வேண்டும்  என்ற  வெறியில்  அல்லாஹ்வின்  மீது  சத்திய  மிட்டு  கூட  பல  பொய்களை  சொல்லி  இருக்கிறார் .ஒரு  மிகவும்  முக்கியமான ஆலிமிடம்[சம்சுல் ஹுதா] நடந்த  விவாதத்தின்  பொது  ஒரு  ஹதீதை  லயீப்  என்றும்  அந்த  அறிவிப்பாளர்  பலஹீனமானவர்  என்றும்  ஒரு  கிதாபின்  பெயரை  சொல்லி  அந்த  கிதாபில்  இருப்பதாகவும்  அடித்துக்  கூறி  அந்த  வாதத்தில்  ஜெயித்து  வெளி  வந்த  பொது  PJ இடம்  அது  எந்த  கிதாப்  என்று  கேட்ட  பொது ,யாருக்கு  தெரியும் ,நான்  அதை  சொன்ன  உடன்  அவர்  வாய்  மூடி  தோற்று  விட்டார்  அல்லவே ? என்று  பெருமையாக  கூறிய  பொது  தான்  நான்  திடுக்கிட்டு ,விழித்துக்  கொண்டேன் , தெளிவு  பெற்று  விலகி  விட்டேன் .அல்லா  உங்களுக்கும்  அந்த தெளிவை தர  வேண்டுகிறேன் .சுன்னத் ,நபில் , அதுகூட  இல்லாத  விஷயத்தில்  கருத்து  வேறுபாடு  கொண்டு , அதனால்  பார்ழான  சமுதாய  ஒற்றுமையை சீரழித்து ,அடித்துக்  கொண்டும் ,வெட்டிக்  கொண்டும் ,சமுதாயம்  கேவலமான  நிலைக்கு  போனதற்கு  யார்  காரணம் ?அன்று  ஒன்றாக  இருந்து  கொள்ளை  அடித்தவர்கள் ,இன்று  ஒருவரை  ஒருவர்  காட்டிக்  கொடுத்தான் ,பத்திரிகையில்  பகிரங்கமாக  பேட்டி  அழித்தும்  வருவது  உங்களுக்கு  கேவலமாக  தெரிய  வில்லையா ? "நக்கீரன் "AI எதிர்த்து  பெண்களை  நடுரோட்டிற்கு  அழைத்து  வந்து  போராட்டம்  நடத்துவது  கேவலமில்லையா ?நம்மின்   ஒற்றுமையை  சீரழித்து ,வேட்டையாட  நினைக்கும்  RSS கும்பலுக்கு  இது  துணை  போவது  போல்  இல்லையா ? உங்களை  போன்றவர்கள்  கண்மூடித்தனமாக  ஆதரவு  தருவதால் தானே  இந்த  கேவலங்கள்  நடக்கிறது ? ரசூலுல்லாஹ் (SAL)வுக்குப்  பின்  இது  வரை  இஸ்லாம்  எப்படி  நிலை  பெற்று  வந்ததோ  அந்த  இறைவன்  தொடர்ந்து  காப்பான் .நீங்கள்  ஊர்  ஒற்றுமையை  காப்பாற்றுங்கள் .அல்லா  நம்மை ,நம்  சமுதாயத்தை  காப்பாற்றுவான் {சம்சுல் ஹுதா ஆலிமிடம் பீ.ஜே மட்டும்தான் சென்றாரா?அபு அப்துல்லாவும் சென்றாரா என்பது தெரியுமா?munavvirul பாய் கொஞ்சம் இதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்கள் }

திங்கள், 16 ஜூலை, 2012

காசிமி அவர்களே அன்று மத்ஹப் பற்றி போனில் விளக்கம் கேட்டதற்கு மிரட்டலாக பதில் சொன்னது கிட்டத்தட்ட இதுபோன்றுதானே


கப்ரு வணங்கிகளின் கொலைவெறி தாக்குதல்

சென்னை மக்கா மஸ்ஜித் மீதும், தலைமை இமாம் மீதும் கொலைவெறி தாக்குதல்

அஸ்ஸலாமு அலைக்கும் வ'ரஹ்மத்துல்லாஹ்,
கேரளாவில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு மத்தியிலே கப்ரு வணக்கம், ஷிர்க், அனாச்சாரம், காலில் விழுவது, முரீத், காலை பாலால் கழுவி குடிப்பது போன்ற எல்லா ஷிர்கியத்தான சீரழிவுகளையும் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வரும்  A.P. அபூபக்கர் முசலியார் என்பவர் தற்பொழுது தமிழகத்திலும் அதே போன்ற ஷிர்கியத்தான சீரழிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில் களம் இறங்கி  இதற்காக தமிழகத்தில் தனக்கு சில அடிவருடிகளை பிடித்து சூழ்ச்சி விதிகளை விதைக்க ஆரம்பித்துள்ளார்.
இதற்காக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி, அக்ரம் கான், மேலை நாசர், ஆமிர் கலிமீ, அத்தாவுர்ரசூல் போன்ற தீயவர்களின் கூட்டணியுடன் ,  மன்சூர் ஹாஜியார் என்ற செல்வந்தரை தூண்டிவிட்டு தமிழகத்திலே சுன்னத்வல் ஜமாஅத் என்ற பெயரிலே உண்மையான  சுன்னத் ஜமாத்திற்கு மாறாக தர்கா வழிபாடு, உருஸ் கொண்டாட்டங்கள், முரீத், காலில் விழுவது,  போன்ற ஷிர்க்கான காரியங்களுக்கு மக்களை வழிகெடுக்க ஆரம்பித்துள்ளார் .
இந்த சீரழிவுகளை கண்டித்து  6.7.2012 அன்று ஜும்மாவில் முஸ்லி யார்(காண இங்கே சொடுக்கவும்) என்ற தலைப்பில் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மௌலானா ஷம்சுதீன் கசிமீ மீது கொலை வெறி தாக்குதல் முயற்சி செய்யப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை 13.7.2012 அன்று சுமார் 300 கூலிப்படை ரவுடிகளுக்கு பணம் கொடுத்து மேலை நாசர் மற்றும் அகரம் கான் ஆகியோர் தலைமையில் கத்தி போன்ற  பயங்கர ஆயுதங்களுடன் மது அருந்திய ரவ்டிகள்  ஜும்மா தொழுகையின் போது பள்ளிவாசலில் நுழைந்து அத்துமீறி தாக்க வந்தார்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும், மக்கா பள்ளியின் தொளுகையாளிகளின்  சமயோசித நடவடிக்கையாலும் சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மவ்லான அவர்கள் பாதுகாப்பாக தங்கள் அறைக்கு அழைத்து வரப்பட்டார்கள் .அதனால்  மிகப்பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். (இது  பற்றி காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது .)
கொலைவெறியோடு தாக்க வந்தவர்கள் அவர்களுடைய குருநாதர்களான அஹ்மது ரசா கான் பரேலவி பற்றியோ, அபு பக்கர் முஸ்லியாரை பற்றியோ, தர்காவில் நடக்கும்  அனாச்சாரங்களை பற்றியோ பேசக்கூடாது என்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்கள். மேலும் அசிங்கமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க, சாதாரண மனிதர்களே சொல்வதற்கும் கேட்பதற்கும் நாகூசும் அளவுக்கு கேவலமான வார்த்தைகளால்  மலக்குமார்கள் நிறைந்திருக்கும் அல்லாஹ்வின் இறையில்லத்தையும் அசிங்கப்படுத்தி விட்டார்கள்.
இந்த மிரட்டலுக்கு மௌலானா அவர்கள்"நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பேர்களையும் பற்றியும் அடுத்த ஜும்மாவில் (20.7.2012) இன்ஷா அல்லாஹ் இன்னும் தெளிவாக பேசுவேன்" என்று தொழுகயாளிகளுடைய இடி முழக்க தக்பீருடன் அறிவித்தார்கள்.
அதன்படி, இன்ஷா அல்லாஹ் அடுத்த வார ஜும்ஆவில்  இன்றும் விரிவாக பித்அத் மற்றும் அனாச்சாரங்களை பற்றியும் அதனை இந்தியாவில்  உருவாக்கிய அஹ்மத் ரசா கான் பறேலவியின் வண்டவாளங்களையும் 20.7.2012  அன்று பேசவுள்ளார்கள் என்பதை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 


செவ்வாய், 3 ஜூலை, 2012

தூத்துக்குடியில் விவாதம்

அன்புடையீர் ,அஸ்ஸலாமு அழைக்கும் ,
                                
                                இன்சா அல்லாஹ் வரும் செப்டம்பர் 29, 30 [சனி ,ஞாயிறு ]ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்துக்கும் ,தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலாமா சபைக்கும் இடையே  விவாதம் நடை பெற உள்ளது இவ்விவாதம் தூத்துக்குடியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது விவாதத்தில் குர் ஆனில் எழுத்து பிழைகள் உள்ளது என்ற தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் நிலைப்பாடு தவறு என்ற தலைப்பிலும் ,குர்ஆனை  பின்பற்றுவதில தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலாமா சபையின் தவறுகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது .விவாத ஒப்பந்தம் கடந்த ஜூன் 20 அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் வைத்து கையெழுத்தானது..விரிவான தகவல் பின்னர் அறிவிக்கப் படும் .விவாத ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்பாஸ் ,மாவட்ட பொருளாளர் மீரான் ,நகர தலைவர் அப்துல் ஹமித் ஆகியோர் டிஎன்டிஜே சார்பாக செய்து வருகின்றனர்..

சனி, 30 ஜூன், 2012

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலிலும் ஏகத்துவ கொள்கை பின்பற்றப் படுகிறது .வழக்கம்போல பள்ளிவாசலில் நடைபெறும் மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறவில்லை .அல்ஹம்துலில்லாஹ் 

வியாழன், 28 ஜூன், 2012


ஓய்ந்துபோன கொடிகட்டை ஒய்யாரமாக தூக்கி பிடிக்கும் அடிகட்டைகள்

கருத்துகள் இல்லை:

வல்லமை மிக்க இறைவனுக்கு புகழனைத்தும் .அவன் மகாத்தானவன்.கடந்த மாதத்தில் ஆராமபன்னையில் நடந்த ஒன்றிரண்டு திருமணங்கள் தவிர மற்ற திருமணங்கள் அனைத்தும் நபி வழியிலும் நபி வழியை நெருங்கும் வகையிலும் நடந்த திருமணங்களே .மிகுந்த வரவேற்ப்புக்கும் இறைவனை பெருமிதம் கொள்ளுவதற்கும் உரிய விசயங்களே .இவர்கள் அனைவரும் தவ்ஹித் ஜமாத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல .யார் சொன்னாலும் நபி வழியை பின்பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
மணமகன் மாலை அணிந்து வருவது வெட்கத்திற்குரிய செயலாகிவிட்டது .இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாலை அணிவதை சரி என்று வாதிட்ட ,அதை தாங்கி பிடிக்க மார்க்க அறிஞர்கள் என்னும் மார்க்க முட்டாள்கள் படாதபாடு பட்டனர்.அவர்களால் கூட மாலை அணிவதை எதிர்த்து நிற்க முடியாமல் மாலைக்கும் பாத்திகா ஓதி தங்கள வாலை  ஆட்டி வந்தனர்.ஆனால் இன்று அவர்கள் கண்கள் முன்பே அந்த மாலை தூக்கி வீசப்பட்டுவிட்டது.தங்களது திருமணங்களில் மாலை அணிவது நபி வழிக்கு மாற்றம் என்று தெரிந்து இருந்தும் அதை தவிர்க்க திராணியற்று ,அதை கழுத்திலும் நாவிலும் தாங்கி பிடித்தவர்கள் ,இன்று சாதாரண இளைஞர்களால் ஒழிக்கப் பட்டுள்ளதை அறிந்து வெட்கி தலை குனிய வேண்டும் .யூசுப்நபிக்கும் சுலைகா என்ற பெண்ணுக்கும் திருமணமே நடவாத பொழுது அவர்களைப் போல வாழ்த்துவது யோக்கியமா?என்று கேட்டால் ,இது என்ன முல்லை பெரியாரா? கூடங்குளம் ரசியரா?என்று சினக்கிறது ஒரு மவுலவி சிந்தனை செல்வம்.இவர்கள் எதை எங்கு சிலாய்க்கிறார்களோ அங்குதானே அதற்கு பதில் அளிக்க முடியும்.அதல்லாமல் திருமண குத்பாவில் எதை பற்றி பேச பேச வேண்டுமோ அதைத்தான் பேசியுள்ளோம் ..முல்லை பெரியாறு ஆராம்பண்ணைக்கு  ஒன்றும் தலை வெடிக்கும் விவகாரம் அல்ல.அது எங்கு பேசப்பட வேண்டுமோ அங்கு அதைப் பற்றி பேசுவோம்.சரிவர பஸ் ஓடாமல் இருக்கையில்,அதையே கண்டு கொள்ளாத நாம்  முல்லை பெரியாறு பற்றி ஏன் பேசவேண்டும்? இந்த மவுலவி கூட்டம் இதுவரை எத்தனை பொது பிரச்சனைகளில் தலையிட்டுள்ளது ?இதுவரை எத்தனை பொது பிரச்னைகளில் போராட்டம் பண்ணியுள்ளது? ஆக ஆறாம்பண்ணையில் அனைத்து மக்களும் நபி வழியில் திருமணம் செய்ய நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.பாவம் மவ்லவிகள் கூட்டத்திற்கு வேறு வழியில்லாமல் கிடைத்த வாய்ப்பை மனம்போன போக்கில் பயன்படுத்தியுள்ளனர்.
அடுத்து ,கொடிகட்டு .கடந்த சில வருடங்களாக பொய்த்துப் போன கொடி கட்டை மீண்டும் இரு வருடங்களாக சிலர் உயிர்பிக்க முனைந்தனர்,அணையப் போகும் விளக்கைப் போல அது மீண்டும் ஜொலித்தது .இப்போது முற்றிலுமாக அணைந்து விட்டது.அல்லாவை புகழ் வோமாக !அவனிடமே மன்னிப்புக் கோருவோம்.ஒரு காலத்தில் கொடியை உழு செய்து ஏற்றும் நிலை.இன்றோ முஸ்லிம் அல்லாதவரே ஏற்றும் கராமத்துகள்  நிகழ்கின்றன
கொடிகட்டை  ஒய்யாரமாக தூக்கி பிடிக்கும் சில அடிக்கட்டைகள் ,யானை ஊர்வலம் மேளதாளங்கள் கொண்டு வந்து சைத்தானை திருப்திபடுத்தியே ஆக வேண்டும், என்ற முனைப்பில் சென்னையிலிருந்து வசூல் திரட்ட     பொய்ஜிகள் முனைந்தனர். அடிகட்டைகள் இல்லாமல் வசூல் செய்யும் இவர்களிடம் காசு கொடுக்க மறுத்த ஜமாலிய ஜமாஅத் செல்வந்தர்கள் ஒரு தகரடப்பா கச்சேரி படையை அனுப்பி அந்த குழுவின் பாட்டு கேட்டு காஜா பந்தே நவாஸ் உரூசை முடித்துக் கொள்ளுமாறு வேண்ட , அடிகட்டைகள் அதிகம் காசு பார்க்க வழியின்றி போனது பரிதாபம்.இந்த டப்பாக்கள் ஒலிக்கும் முன்னர் அதோடு வந்த ஒரு சைத்தான் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறது.அந்த சொற்பொழிவில் முஸ்லிம்களின் கடமைகள் ஐந்து அல்ல என்றும் ஆறு கடமைகள் உண்டு என்றும் ஆறாவது கடமை வலிமார்களை பின்பற்றுவது என்றும் நச்சு கக்கியுள்ளது.ஒருவர் ஐவேளை தொழுதாலும் ,நோன்பு வைத்தாலும் ஹஜ்ஜுக்கு சென்றாலும் சொர்க்கம் செல்ல முடியாது.இத்தனைக்கும் பிறகு வலிமார்களை பின்பற்றினாலே அவன் சொர்க்கம் செல்ல முடியும் என்று பேசியிருக்கிறார்.இன்சா அல்லாஹ் இனி வரும் காலங்களில் இப்படி பட்டவர்கள் பேச வந்தால் அடித்து விரட்டப்பட்ட வேண்டியது நமது கடமையாகும்.
                                                                                                                

திங்கள், 4 ஜூன், 2012

முல்லா சொன்ன சுலைகா கதையும்'


27/5/12 அன்று தூத்துக்குடி ஆறாம்பண்ணை கிளை TNTJ சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் கோடைக் கால பயிற்சி வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட தாஈ சகோதரர் அமீர் தலைமை தாங்கினார். அடுத்ததாக ஆறாம்பண்ணை கிளை மதரச மாணவி ராபியத்துல் பார்ஹானா 'முல்லைப் பெரியாரும் முல்லா சொன்ன சுலைகா கதையும்' என்றத் தலைப்பிலும்,  சென்னை அம்பத்தூர் கிளை TNTJ பள்ளி இமாம் "ஷேய்க் முஹம்மத் பாசி" அவர்கள் 'திருமணம் நபி வழியிலா? நம் வழியிலா?' என்றத் தலைப்பிலும், சிறப்புப் பேச்சாளராக மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்னாள் இமாம் "மசூத் யூசுபி" அவர்கள் 'நபிமார்கள் போல வாழ வாழ்த்துதலும், ஆலிம்கள் வாழும் லட்சணமும். என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும் கோடைக் கால பயிற்சி வகுப்பில் முதல் மார்க்குகள் பெற்றவர்களுக்கு தகுதி அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டது. 

சனி, 28 ஏப்ரல், 2012

 மர்கசில் நடந்த மாதந்திர அழைப்பு பணி பயிற்சி