செவ்வாய், 3 ஜூலை, 2012

தூத்துக்குடியில் விவாதம்

அன்புடையீர் ,அஸ்ஸலாமு அழைக்கும் ,
                                
                                இன்சா அல்லாஹ் வரும் செப்டம்பர் 29, 30 [சனி ,ஞாயிறு ]ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்துக்கும் ,தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலாமா சபைக்கும் இடையே  விவாதம் நடை பெற உள்ளது இவ்விவாதம் தூத்துக்குடியில் உள்ள ஒரு மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது விவாதத்தில் குர் ஆனில் எழுத்து பிழைகள் உள்ளது என்ற தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் நிலைப்பாடு தவறு என்ற தலைப்பிலும் ,குர்ஆனை  பின்பற்றுவதில தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலாமா சபையின் தவறுகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது .விவாத ஒப்பந்தம் கடந்த ஜூன் 20 அன்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் வைத்து கையெழுத்தானது..விரிவான தகவல் பின்னர் அறிவிக்கப் படும் .விவாத ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்பாஸ் ,மாவட்ட பொருளாளர் மீரான் ,நகர தலைவர் அப்துல் ஹமித் ஆகியோர் டிஎன்டிஜே சார்பாக செய்து வருகின்றனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.