சனி, 6 நவம்பர், 2010

இணைய தளத்தில் விவாததிற்கு அழைக்கும் செங்கொடி

  1. இப்ராஹிம்,
    நீங்கள் இந்தப்பகுதியில் வைத்த அனைத்து பின்னூட்டங்களையும் தடுத்து வைத்திருக்கிறேன். இந்த கேள்வி பதில் பகுதியை தாண்டி நீங்கள் விவாதிக்க விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஆமோதிப்பு இருக்கும்பட்சத்தில் அதை தெரிவியுங்கள் விவாதத்திற்கென்று தனிப்பகுதியை உருவாக்கி அதில் விவாதிக்கலாம். இந்தப்பகுதியில் நான் எழுதியதை வெட்டி ஒட்டாமல் உங்கள் கேள்வியை மட்டும் ஒவ்வொன்றாய் கேளுங்கள். (ஒன்றுக்கு பதில் கூறிய பின் அடுத்தது) புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பை உங்களிடம் எதிர்நோக்குகிறேன்.
  2. செங்கொடியின் கூற்றுக்கு நான் பச்சை கொடி காட்டுகிறேன்.விவாதிக்க வாருங்கள்.
  3. நன்றி இப்ராஹிம்,
    என்ன தலைப்பில் விவதிக்க விரும்புகிறீர்கள். விவாதத்தை நடத்துவது குறித்து நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் விதிமுறைகள் போன்றவைகுறித்து விளக்கமாக ஒரு பின்னூட்டமிடுங்கள். அதன் பிறகு விவாதத்திற்கென்று தனிப்பகுதி தொடங்கி அதில் நாம் தொடரலாம்
    செங்கொடி தடுத்து வைத்து உள்ளவை 
    தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்<<<
    "செங்கொடியோனே" ரசித்த நீங்கள் செங்கோடியே என்பதை கண்டு கொள்ளாமைக்கு  காரணம் உண்மை கசப்பதால் அன்றோ . 
    தனியான  மனிதர்களால் அமல் படுத்த முடியாத;அதாவது தமிழகத்தில் உங்கள் இயக்கத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்களா?இவர்களிடையே அமல் படுத்த முடியாத இசத்தை ஒரு நாட்டில் எப்படி அமல் படுத்த முடியும்? உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்துவது?ஆயின் கம்யூனிசம் ஒரு கற்பனை கோட்டை என்பது தெளிவாகிறது.உங்கள் கொள்கை வந்து நானூறு ஆண்டுகள் இருக்குமா ?இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆயிரம்பேரை வைத்து முன்னுதாரணத்தை காட்டுங்கள் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டி சமமாக்கிடலாம் என்று சொல்வீர்கள் போல் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் .ஆக கம்யுனிசம் நடைமுறை சாத்தியமற்றது என்பதை ஒப்பு கொண்டீர்கள்.நீங்கள் இவ்வாறான கற்பனைகோட்டை மீது நம்பிக்கை வைக்கும்போது நாங்கள் மறுமை நாள் மீது வைக்கும் நம்பிக்கை பற்றி ஏன் கேள்விகள் வைக்கவேண்டும்?  
     .ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்?<<< சக்காத் ஏழ்மையை போக்கும் .ஓரளவு சவுதியில் போக்கியுள்ளது.இன்னும் சிலதனியார் நிறுவனகள் ,தங்களின் சக்காத் பணமாக வருகின்ற அயிந்து லட்சம்,பத்து லட்சங்கள் வரை தாங்கள் உறவினர்களில் ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் தொழில் புரிந்து ஏழ்மை அகண்டு உள்ளதை கண்கூடாக காணமுடியும் .இதைபோன்று ஒவ்வொருஆண்டும் செய்துவருகிறார்கள்.ஒரு நாடு இல்லாமல் ஒரு அமைப்பு இல்லாமல் தனி நபர்களாக அவர்களால் இயன்ற அளவில் இஸ்லாமிய அடிப்படையில் ஏழ்மை ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.
    >>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<&lt;<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில்  ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.
    ;உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான்<&lt;<
    எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை  இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுறை படுத்திகாட்டுங்கள். அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும்  அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற  விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி  இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
      .>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.