வெள்ளி, 25 நவம்பர், 2011

சைத்தானை கல்லெறிவதும்,மகரஜோதி காண்பதும் ஒன்றா?


செந்தோழன்நவம்பர் 23, 2011 இல் 11:48 பிற்பகல் #
நண்பர் இப்ராஹிம்
நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியன பதில் கூறவில்லை அதை விட்டுட்டு வேறு எதெல்லாமோ சொல்றீங்க.இந்துகளின் சடங்குகளும்,முஸ்லீம் சடங்குகளும் ஒன்றாக இருப்பதாக சொல்லியிருந்தேன் அதற்கு நேரடியான பதில் இல்லை.இப்ராஹிம் நபி நரபலி கொடுப்பதும்,பூசரி நரபலி கொடுப்பதும் ஒன்றா?கோவிலை சுற்றுவதும்,காபாவை (மெக்கா)சுற்றுவதும் ஒன்றா?கங்கை நீரும் ஜம் ஜம் நீரும் ஒன்றா?சைத்தானை கல்லெறிவதும்,மகரஜோதி காண்பதும் ஒன்றா?இதுபோல் இன்னும் எத்தனையோ ஒற்றுமைகளை என்னால் விளக்கமுடியும்.இவை அனைத்தும் ஒன்றென்றால் இஸ்லாத்தின் தனித்துவம் என்ன? விளக்க முடியுமா ?
\\ இன்னும் பிச்சைகாரர்கள் பிச்சையெடுக்க தேர்ந்தெடுத்த நாள் வெள்ளிக்கிழமை\\ என்று கூறியிருந்தீர்கள்.
ஏன் ஒரு வர்க்கம் பிச்சையெடுக்க வேண்டுமென்று யோசித்தீர்களா? சரி உங்க கூற்றுப்படியே கேட்கிறேன் சதக்கா என்று சொல்லி தர்மம் 1400 ஆண்டுகளாக செய்கிறீர்கள் அதனால் பயனடைந்தவர் உண்டா?பிச்சை எடுக்கதா (இல்லாத) சமூகத்தை உருவாக்கியிருக்கீங்களா?குறைந்த பட்சம் இஸ்லாமிய நாட்டிலாவது அந்த மாற்றத்தை கொண்டுவர முடிந்ததா !முகம்மது நபி பிறந்த தேசத்தில்கூட முற்றாக ஒழிக்கமுடியவில்லை.1400 ஆண்டுகளாக பிச்சையெடுக்கும் சமூகம் எந்த மாற்றமில்லாமல் அப்படியேதான் இருக்கிறது நீங்களும் அப்படியேதான் வைத்துள்ளீர்கள் இனியும் அப்படியேதான் வைத்துக்கொண்டிருபீர்கள்.ஏனென்றால் நீங்கள் பிச்சை போட (நீங்க தர்ம பிரபுவாக காட்டிக்கொள்ள) ஒரு சமூகம் தேவை.இல்லையென்றால் அல்லாவுடைய கூற்று தவறாக போய்விடுமல்லவா?
ஏழையில்லாத,பிச்சைகாரர் இல்லாமல் ஒழித்த ஒரு இஸ்லாமிய தேசத்தை உங்களால் அடையாளம் காட்டமுடியுமா? ஆனால் என்னால் அடையாளம் காட்டமுடியும்.சோவியத் ரஷ்யாவில்(இப்போதுள்ள ரஷ்யா அல்ல),கியூபாவில்,இன்னும் சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஏழையில்லை,பிச்சைகாரன் இல்லை இவைகளை முற்றிலும் ஒழித்துள்ளது.
அங்கே எல்லோருக்கும் வேலை,எல்லோருக்கும் உணவு,எல்லோரும் சமம்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பாகுபாடுயில்லை,மனிதர் அனைவரும் சமம்.
இப்போதாவது புரிகிறதா தனி ஒரு மனிதர் தர்மம் செய்து ஏழ்மையை ஒழிக்கமுடியாதென்று உன்னதமான,உயர்ந்த இலட்சியம் கொண்ட கம்யூனிச அரசால் மட்டுமே முடியுமென்று புரிகிறதா.
நாங்கள் வீதி நாடகம் போடுவது மக்கள் பிரச்சினையை அவங்க மொழியில் சொல்லி அவங்களை அரசுகெதிராய் போராட தூண்டுவதற்க்குதான்
\\பசிப்பவனுக்கு மீனை கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதே
மிக சிறந்ததாகும்\\ இதுதான் எங்கள் நிலை.
வாருங்கள் நண்பரே! நம் பாட்டாளி வர்க்கத்திற்காக ஒண்றினைந்து போராடுவோம்.ஏழ்மையை இல்லாமல் செய்வோம். புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.ஒண்றினைந்து செயலாற்றுவோம்.போராடுவோம்,வெல்வோம்.!
  • S.Ibrahim
  • நவம்பர் 25, 2011 இல் 5:27 மு.பகல் #
    செந்தோழன் ,
    இப்ராஹீம் நபி[அலை] அவர்கள் தனது மகனை அறுத்து பலியிட முனைந்ததற்கு காரணங்கள் உண்டு.அது பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தும் பூசாரி பலியிடுவதற்கும் இதற்கும் வெகு தூரம் என்பதை அறிந்தும் வேண்டுமென்றே இரண்டையும் ஒப்பிட்டு காண்பித்தாலே கம்யுனிசத்தை காக்க முடியும் என்ற உங்களது நம்பிக்கைக்கு குறுக்கே நான் இல்லை.
    "உமர் [ரலி ]அவர்கள் ஹஜ்ஜின் போது தவாபில் அதாவது கஹ்பாவை சுற்றுகையில் ஹஜ்ருல் அஸ்வத் ஐ நோக்கி ,அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீ கல்தான் ,உன்னால் எந்த நன்மையையும்,எந்த தீமையும் செய்ய முடியாது என்பதை நான் அறிவேன்.நபி[ஸல்]அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் உன்னை முத்தமிட மாட்டேன் என்று கூறி அந்த கல்லை முத்தமிட்டார்கள் பிறகு நாம் இப்போது ஏன் இப்படி தோள்களை குலுக்கியவாறு ஓட வேண்டும்?.நான் அன்று செய்தது நம் பலத்தை இணை வைப்பவர்களுக்கு காட்டுவதர்க்காகத்தானே.ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான் பிறகு ஏன் செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டு,எனினும் நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள்.அதை விட்டுவிட நாம் விரும்பவில்லை என்று கூறினார்கள்"{.நூல்.புகாரி}
    முதன்மையான பள்ளிவாசல் என்பதால் ,இப்ராஹீம்[அலை] அவர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்பதாலும் இறைவனிடம் ,"எங்களை இந்த உலகிலும் மறுமையிலும் அருள்புரியுமாறு" பிரார்த்தனையை செய்தவாறு ஏழுமுறை சுற்றுவது கடமை என்பதால் மட்டுமே .
    ///கங்கை நீரும் ஜம் ஜம் நீரும் ஒன்றா?///
    இல்லை .மேலும் இந்த இணைப்பில் பார்த்து ஜம்ஜம் நீரும் கங்கை நீரும் ஒன்றா ?வேறா என்பதை அறிந்து கொள்ளுங்கள்; http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/438_zamzam_neer/
    இந்த சிறப்புகள் கங்கை நீருக்கு இருக்கிறதா? மேலும் ஜம்ஜம் நீர் குடிப்பதினால் பாவங்கள் அழியும். சுவர்க்கம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் அல்ல.முஹம்மது நபி[ஸல்] அவர்கள் ஹஜ்ஜில் அதை கொண்டு வந்தார்கள் .அதை அருந்தினார்கள் .அதற்காகவே இப்போதும் அவ்வாறு செய்யப்படுகிறது .அவ்வாறு கொண்டு வரப்படாவிட்டாலும் ஹஜ் கடமையில் குறைவு ஏற்படாது.
    ////சைத்தானை கல்லெறிவதும்,மகரஜோதி காண்பதும் ஒன்றா?////
    மகர ஜோதி என்பது கேரளா அரசுவின் மின்வாரியத்தினால் மக்களுக்கு தெரியாத வண்ணம் மறைமுகமாக ஏற்றப்படுவது .மேலும் அது இறைவன் புறத்தே வெளிப்படுவதாக ஐயப்ப பக்தர்கள் நம்புகிறார்கள். வெகு நாட்களாக மறைக்கப்பட்ட இந்த உண்மையை  கடந்த ஆண்டு கேரளா அரசு ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டது.அதை காணுவதுதான் விரதத்தின் உச்சகட்ட வணக்கமாக செய்யப்படுகிறது.ஆனால் சைத்தானை கல்லெறிவது என்பது எத்தனை செங்கொடிகள் வந்தாலும் மனஉறுதியை தளரவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி உறுதி எடுக்கும் நிகழ்வு.
    //இதுபோல் இன்னும் எத்தனையோ ஒற்றுமைகளை என்னால் விளக்கமுடியும்.///
    இதுபோல் நீங்கள் கூறும் அனைத்து ஒற்றுமைகளும் தவறு என்றும் என்னால் விளக்க முடியும்.
    ///இவை அனைத்தும் ஒன்றென்றால் இஸ்லாத்தின் தனித்துவம் என்ன? விளக்க முடியுமா ?///
    இஸ்லாத்தின் தனித்துவம் கம்யுனிசமும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் எதைக் கண்டு அஞ்சி இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளார்களோ அதுதான் இஸ்லாத்தின் தனித்துவம்.
    ///ஏழையில்லாத,பிச்சைகாரர் இல்லாமல் ஒழித்த ஒரு இஸ்லாமிய தேசத்தை உங்களால் அடையாளம் காட்டமுடியுமா? ஆனால் என்னால் அடையாளம் காட்டமுடியும்.சோவியத் ரஷ்யாவில்(இப்போதுள்ள ரஷ்யா அல்ல),கியூபாவில்,இன்னும் சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஏழையில்லை,பிச்சைகாரன் இல்லை இவைகளை முற்றிலும் ஒழித்துள்ளது.///
    நீங்கள் ஏழைக்கு என்ன வரையறை வைத்துள்ளீர்களோ தெரியவில்லை.ஆனால் தனி நபர் வருமானத்தில் க்யுபா வை விட சவூதி,குவைத் ,யு.எ .இ ,புருனை ,கத்தார் போன்ற நாடுகள் தனிநபர் சராசரி வருமானத்தில் முன்னிலை வகிக்கின்றன .
    ///அங்கே எல்லோருக்கும் வேலை,எல்லோருக்கும் உணவு,எல்லோரும் சமம்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பாகுபாடுயில்லை,மனிதர் அனைவரும் சமம்..///
    ஆனால் காஸ்ட்ரோவின் மகன்களுக்கு இதிலிருந்து விதி விலக்குகள் உண்டு அல்லவா?சமிபத்தில் அவர்கள் ஏராளமான சொத்துக்கள் சேர்த்துவைத்துள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே .ஆனால் இது போன்று நிகழ்ச்சியை கொஞ்சம் கவனியுங்கள் .முஹம்மது நபி[ஸல்] அவர்கள் தனது சொத்துக்களை பொதுவுடமை ஆகிவிட்டதால் ,அவர்கள் மரணத்திற்கு பின்னர் அவரது மகள் இதயத்துண்டாக வர்ணிக்கப்பட்ட பாத்திமா [ரலி] தனது வறுமை நிலையில் அடுத்த கலிபாகவாக இருந்த அபுபகர்[ரலி] தனது தந்தையின் சொத்தில் பங்கு கேட்டபொழுது அவரது வாக்குறுதிக்கு மாற்றமாக் செயல்பட முடியாது என்பதால் பாத்திமா[ரலி] அவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.அதைப்போலவே உமர்[ரலி] ஆட்சி காலத்தில் உமர் அவர்கள் நீண்ட அங்கி அணிந்து பயான் பண்ணிக்கொண்டு இருக்கையில் ஒரு தோழர் எழுந்து கேட்கிறார் , ஜனாதிபதி அவர்களே! தாங்கள் அணிந்து இருக்கும் இந்த ஆடை கடைசியாக நடந்த போரில் கைப்பற்ற பொருளில் இருந்து கிடைத்தது தானே ,அப்படியெனில் எங்களுக்கு கிடைத்த பங்கில் இடுப்பு அளவுக்கே சட்டை தைக்கும் அளவுக்கே துணி இருந்தது ஆனால் உங்களுக்கு மட்டும் முழங்கால் கீழ் வரை அங்கி தைக்க துணி கிடைத்தது எப்படி?தாங்கள் அதிக பங்கு எடுத்துள்ளீர்களா?என்று கேட்டார். உடன் அவர்கள் நான் ஜனாதிபதி என்னை பார்த்து இப்படிகேட்பதா?என்றெல்லாம் கேட்கவில்லை.உமர்[ரலி]அவர்கள் பொறுமையாகவே பதில் சொன்னார்கள்,எனது மகன் இப்னு உமர் அவர்களும் அந்த போரில் கலந்து கொண்டார்,அவருக்குரிய பங்குக்கான துணியையும் எனக்கு அன்பளிப்பாக தந்துவிட்டார் என்று கூறினார். இந்த சமத்துவத்தை ,இந்த ஜனநாயகத்தை நீவிர் இன்றளவும் எங்கும் கண்டதுண்டா?
    ///சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஏழையில்லை,பிச்சைகாரன் இல்லை இவைகளை முற்றிலும் ஒழித்துள்ளது.
    அங்கே எல்லோருக்கும் வேலை,எல்லோருக்கும் உணவு,எல்லோரும் சமம்,உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பாகுபாடுயில்லை,மனிதர் அனைவரும் சமம்.
    இப்போதாவது புரிகிறதா தனி ஒரு மனிதர் தர்மம் செய்து ஏழ்மையை ஒழிக்கமுடியாதென்று உன்னதமான,உயர்ந்த இலட்சியம் கொண்ட கம்யூனிச அரசால் மட்டுமே முடியுமென்று புரிகிறதா///
    வீதி நாடக போதையில் இருப்பது புரிகிறது.பசிப்பவனுக்கு கைகளே இல்லாதபொழுது மீன்பிடிக்க நாங்கள் கற்று கொடுப்பது இல்லை .மீனைத்தான் நாங்கள் கொடுக்கிறோம். அவனை கால்களால் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள கட்டாயபடுத்துவதும் , இல்லையெனில் சைபிரியாவுக்கு அனுப்புவதும் நாங்கள் செய்யவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.