புதன், 1 டிசம்பர், 2010

அரஃபா நோன்பென்பது ஹாஜிகளின் அரஃபா தினம் தான்.

meera சொன்னது…


சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்.
பிறை கண்டு நோன்பு வைக்கவும் பிறை காணாவிட்டால் ஷஃபான் மாதத்தை 30 நாட்களாகவும் கனக்கில் எண்ணவும் அடுத்து வரும் மாதமாகிய ரமலான் மாதமாகிய நோன்பைப் பற்றியே நமக்கு தெரிவிக்கின்றது. ஆனால் அரஃபா நோன்பென்பது ஹாஜிகளின் அரஃபா தினம் தான்.
இந்த வருட அரஃபா தினம் என்பது ஸவுதியில் ஹாஜிகள் கூடும் தினமான 15/11/2010 திங்கள் கிழமை. அன்றைய தினம் ஹாஜிகளுக்கு சங்கையான நாளாகவும் ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு வைக்கவும் தான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் தாங்களின் ப்ளாக்கரில் 17/11/2010 அன்று தான் அரஃபா நோன்பு என குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில் அரஃபா நோன்பு என்பது எதற்க்காக வைக்கப்படுகிறது, அரஃபா நோன்பா? அல்லது துல் ஹஜ் பிறை 9 நோன்பா? துல் ஹஜ் பிறை 9 நோன்பென்றால் ஏன் அரஃபா நோன்பென்று குறிப்பிட்டுள்ளீர்கள். அரஃபா நோன்பென்றால் ஏன் ஹாஜிகளின் அரஃபா தினமான 15/11/2010 அன்று நோன்பு இல்லை என்று, தாங்களின் விளக்கம் தந்தால் தெரியாத அனைவருக்கும் விளங்க வாய்ப்புள்ளது. வஸ்ஸலாம்
இப்படிக்கு
ஸவுதி அல்கோபரில் இருந்து நன்னி அப்துல் வஹாப்.தங்களது கருத்தை நான் நேற்றுதான் பார்த்தேன். ரமலானை மட்டுமல்லாமல் மாதம் என்பது 29 நாட்கள்தான் மேகமூட்டம் இருந்தால் முப்பது நாட்களாக்கி கொள்ளுங்கள்  என்பது பற்றியும் ஹஜ்ஜு பெருநாள் பிறை பார்ப்பது பற்றியும் ஹதீத்கள் உள்ளன.
அரபா நாளில் ஹாஜிகள் நோம்பு வைக்க தடை உள்ளது .மற்றவர்கள் நோம்புவைப்பது ஒரு வருட முன்னாலும் பின்னாலும் உள்ள பாவங்கள் மன்னிக்கப்படும் 
அரபா நாளில் நோம்பு வைக்கச்சொன்ன நபி[ஸல்] அவர்கள் மக்காவுக்கு ஆள் அனுப்பி அங்கே எந்த நாளில் அரபாவில் கூடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயன்றதாக தெரியவில்லை.மதினாவில் பிறை பார்த்தபடியே பிறை ஒன்பதில் அரபா நோம்பு வைத்தார்கள்.மக்காவில் பிறை பார்க்கப் பட்ட பின் ஓரிரு நாளில் தெறித்து கொள்ள வசதி இருந்தும் அதற்க்கான முயற்சிகள் செயவில்லை. எப்போது சூரியன் மறைந்ததோ அப்போதுதான் மக்ரிப் வருகிறதோ ,அதுபோல் எப்போது பிறை பார்த்தோமோ ,அதிலிருந்து ஒன்பதாவது நாள் தான் அரபா நாள் ஆகும் .   

திங்கள், 29 நவம்பர், 2010

யார் அது கவ்வா தானே? S.Ibrahim

 >.>>கம்யூனிசத்தின் பார்வையான தனியுடமை, ஆணாதிக்கம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கம்யூனிசத்தின் நிலைபாடு சரியானது என்கிறேன்<<<
நிலைபாடு என்பது ஏட்டு சுரைக்காய்..செயல்பாடுவைச் சொல்லுங்கள்.உங்களது சோஷலிச காலத்திய ரஷ்யா, சீனாவில் பாலியல் குற்றம் எவ்வாறு இருந்தது? சமூக சூழ்நிலைக் கேற்ப சட்டங்களை,நடைமுறைகளை வகுத்துக்கொண்டு அங்கு என்ன தீர்வு மூலம் பாலியல் குற்றங்களை குறைத்து காட்டினீர்கள்.?அனைத்து பாலியல் வன்முறைகளும் பதிவு செய்யப்பட்டனவா?
நீங்கள் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நுகர்பொருட்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் என்றால் அது எப்படி என்று கூறமுடியுமா? என்று கேட்டு உளீர்கள்.பல பெண்கள் ஆண்களை அழைப்பது நுகர்வுக்காக அல்லாமல் வேறு எதற்கு?மேலும் பெண்ணுக்கு ஆண் நுகர்பொருள் என்பதற்கு பாலியல் இணைய தளங்களே சாட்சி.
 ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், யார் அது கவ்வா தானே? உலகில் ஆணாதிக்கமும் இல்லை .பெண்ணாதிக்கமும் இலை.இருபாலரும் இடத்துக்கு தகுந்தவாறு ஆதிக்கம் செலுத்துகின்றனர். பாலியல் தேவை என்பது ஆசையாக இன்பமாகத்தான் நுகரப்படுகிறது இன்றைய உலகில்.ஆனால் இனப்பெருக்கம் தான் உண்மையான நோக்கம் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.ஆசை,இன்பம் காதல்,காமம், இவைகள்தான் பாலியல் தேவைக்கான காரணங்கள் .இனபெருக்கம் என்பது எதிர்விளைவே.ஆதி மனிதன் பாலியல் உணர்வுக்கு வடிகாலாகத்தான் பெண்ணை  தேடி இருப்பான்.பெண்ணும் அதற்காகவே இணங்கி இருப்பாள்.அதைப்போலவே பெண்ணின் தேவை மிகைத்திருந்தாலும் ஆணை அவள் அழைத்திருப்பாள்.எல்லா காலத்திலும் பாலியல் தேவை ஆசை இன்பத்திற்கு தான் முதலிடம்.
  மேலாடை அணியாத ..................................................................................ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?// 
இதில் உங்கள் இலக்கு என்ன?இது உங்கள் கேள்வி .மேலாடை அணியாத பழங்குடிகளிடம் பாலியல் வன்முறை இல்லை என சொல்ல வருகிறீர்கள். கேட்டது ,கேட்ட இடத்தில் கிடைக்கிறது.அவர்களை பொறுத்தவரை ருசியான உணவுகள் வாழ்க்கை வசதிகள் ஆகியவை கிடைக்காது.அது அறுதியாக கிடைக்கும்போது அதை அனுபவித்துவிட்டால் அதன் தேவைக்காக வன்முறை வரும்.மற்றபடி பாலியல் தேவை நினைத்த மாத்திரத்தில் அதை நிறை வேற்றிக் கொள்ளுகிறார்கள்.மேலாடை அணிவது அவர்களுக்கொரு பொருட்டல்ல.மேலும் அதன் மூலம் ஏற்படும் பாலியலும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்லவே,நீங்கள் அவர்களை உதாரணம் காட்டுவது புரட்சி மூலம் வரும் சோஷலிச ஆட்சியில் பழங்குடி மக்களை போல் வரம்பு எது மின்றி மனம் போன போக்கில் வாழ்வதற்கு அதாவது பழங்குடியின் சமூக சூழ்நிலைக்கு  ஏற்றவாறு சட்டம் வகுப்பீர்களா?என்பதற்க்காகத்தான் கேட்டேன்.ஆனால் நீங்கள் சோசலிசம்   நவீன பயன்பாடுகளை முதலாளிய சீரழிவுகள் எதுமின்றி கற்பிக்கும்.  என்று கூறுகிறீர்கள்.அப்படி என்றால் அவர்களும் நம்மைப்போல் ஆகி பாலியல் வன்முறைக்கு உட்படுவார்களே.ஆகவே மேலாடை அணியாவிட்டாலும் பாலியல் வன்முறை இல்லை என்பது தவறு.புர்கா அணிந்தவர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்றால் தினசரி சாலை விபத்து நடைபெறுகிறது என்பதற்காக சாலை விதிகள் தேவையிலை என்பீர்களா?  
ஒன்றில் எச்சரித்து ஆடையை சரிசெய்யவும், மற்றதில் காம வேட்கையும் கொண்டால் ஆடை தவித்து வேறொன்று அதில் செயல்படுகிறது எனலாம். நீங்கள் சொல்லுவதைப்போலவே தான் சொல்லுவான் .இரண்டு பேரிடத்திலும் காமவேட்கை  கொண்டால் அவன் மிருக நிலையை எய்துவிடுவான்.அதனால் தான் தன சகோதரியை குறைந்த ஆடையில் காணும் வேறு ஆடவன் காம வேட்கை கொண்டால் தன சகோதரி அதற்க்கு பலியாகிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் அவளை எச்சரித்து ஆடையை சரிசெய்ய சொல்லுகிறான்..பிறர் சகோதரியை பார்த்து தனக்கு வரும் காம உணர்வுதான்  தனது சகோதரியை பார்த்து பிறர்க்கும் வரும் என எண்ணுகிறான். ஆக ஆடை பாலியல் வன்முறைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்கள் உதாரணம் மெய்ப்பிக்கிறது.
ஆடம்பரத்தின் காரணமாக ஏற்படும் பொருளாதார சுரண்டல் வீரியமே இருபாலரையும் வேலைக்கு செல்லும் நிர்ப்பந்தத்தை உருவாக்கி உள்ளது .இது தவிர்க்ககூடியதே.வேறு வழியே இல்லாத நேரத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.இன்றைய கலாச்சார சீரழிவுக்கு காரணம் ஆண்கள் வேலை இல்லாமல் பலர் இருக்க பெண்கள் வேலைக்கு சென்றறது தான் என்பதை மூடி மறைக்க முடியாது.பெண்களுக்கு சமஉரிமை என்று சொல்லும் ஏட்டளவில் முற்போக்கு பேசும் பென்பித்தர்களே இந்த சமூக சீர்கேட்டிற்கு காரணம் . ..
   இது மற்ற நாடுகளில் பதிவாகாமல் இருப்பதைவிட வெகு அதிகம் என்பதால்தான் மற்ற நாடுகளின் பாலியல் குற்றங்களை விட ஒப்பீட்டளவில் சௌதியில் ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிறேன்.
இது உங்கள் யூகம்.யூகம் உண்மை ஆகிவிடாது .இதை ஒப்புக் கொண்டால் நம் வாதம் முழுமை பெற்றுவிடும் என்ற பயத்திற்காக தவறான தகவலை தருவதை விட உங்கள் கூற்றுக்கு ஆதாரத்தையோ சரியான வாதத்தையோ சொல்லுங்கள்.
பி.கு.ஜெயகாந்தன் எழுத்துக்களை இலக்கியவாதிகள் மட்டுமே புகழ முடியும் .சாதாரண மக்களுக்கு புரியாதது மட்டுமல்ல.நடைமுறைக்கும் ஒவ்வாதவை.

சுத்தமான கலப்படமற்ற ஆணாதிக்கப் பார்வை. senkodi

நண்பர் இப்ராஹிம்,
புதிய சட்டங்கள் எதையும் இஸ்லாத்தில் இணைக்க முடியாது என்பதும், கம்யூனிசத்தில் இணைத்துக்கொள்ளமுடியும் என்பதும் இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள முதன்மையான ஒரு வித்தியாசம். இது புரிதலுக்காக, விவாதத்திற்கானதன்று. ஏனென்றால் இந்தத்தலைப்பை நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே எதை எடுத்துக்கொண்டோமோ அதில் தொடர்வோம்.
பாலியல் குற்றங்கள் தொடர்பாக இஸ்லாம் கொண்டிருக்கும் நிலைபாடு மேலோட்டமானது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. ஏனென்றால் பாலியல் குற்றம் என்பது ஆடை அணியும் விதம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. அது தனியுடமையையும், ஆணாதிக்கத்தையும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இந்த ஆணாதிக்க எண்ணங்களால் தான் பாலியல் குற்றங்கள் உருவெடுக்கின்றன. இதற்கு பழக்கவழக்கம்,ஆடை போன்றவை வாய்ப்பை ஏற்படுத்தித்தருகின்றன. ஆனால் ஆடை குறித்துப் பேசும் இஸ்லாம் ஆணாதிக்கம் குறித்து பேசவில்லை, இன்னும் சொல்லப் போனால் அதை அங்கீகரிக்கிறது. அதனால் தான் இஸ்லாமின் நிலைபாடு மேம்போக்கானது என்கிறேன். மேம்போக்கான பார்வையிலிருந்து எழும் தீர்வுகள் சரியானவையாக இருக்க முடியாது. இதில் கம்யூனிசத்தின் பார்வையான தனியுடமை, ஆணாதிக்கம் போன்றவற்றை சமூகத்திலிருந்து நீக்குவது ஆழமானது என்பதுடன் பாலியல் குற்றங்களை சமூகத்திலிருந்து முழுமையாக நீக்கும் இலக்கையும் கொண்டிருக்கிறது என்பதாலும் கம்யூனிசத்தின் நிலைபாடு சரியானது என்கிறேன்.
\\ஆணுககு எப்படி பெண் நுகர்பொருளோ,அதுபோல் பெண்ணுக்கும் ஆண் நுகர்பொருள். இன்றைய பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடே என்பதையும் மறுக்க முடியாது// இன்றைய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த உங்களின் இந்தப்பார்வை தவறானது. ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருளாக, நுகர்பொருளாக, பாலியல் பண்டமாக இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய உலகின் நிலை. இந்த ஆணாதிக்க கருத்தியலை அனைத்து செயல்களிலும் நீங்கள் கவனிக்கலாம். இதை நீங்கள் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நுகர்பொருட்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் என்றால் அது எப்படி என்று கூறமுடியுமா? அதுமட்டுமல்லாம்ல் பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு பெண் ஆடையைக் குறைப்பதும், உடலை வெளிக்காட்டிக்கொள்வதே அழகு என நினைப்பதும் ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா? உலகில் பெண்ணாதிக்கம் என்ற ஒன்று எப்போதும் நிலவில் இருந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், அதன் பிறகிலிருந்து இன்றுவரை ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வருகிறான். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? உங்கள் கருத்து சரியானது என நீங்கள் நினைத்தால் அது எப்படி என்பதை விளக்குங்கள்.
\\பாலியல் தேவைகள் என்பது இனபெருக்கம் ,ஆசை,இன்பம் அத்தனையும் உள்ளடக்கியதே.இன்னும் சொல்லப்போனால் இனபெருக்கத்தின் தேவையை விட ஆசை,இன்பத்தின் வடிகாலாகத்தான்”பாலியல் தேவை” அதிக பங்கு வகிக்கிறது// என நீங்கள் குறிப்பிட்டிருப்பது இன்றைய நிலை. ஆம் பாலியல் தேவை என்பது ஆசையாக இன்பமாகத்தான் நுகரப்படுகிறது இன்றைய உலகில். ஆனால் நான் குறிப்பிட்டது இதையல்ல, “பாலியல் தேவைகள் என்பது உடல்சார்ந்து இனப்பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இனப்பெருக்கம் மட்டுமே நோக்கமாக இருக்கும்வரை அங்கு குற்றம் என்பது இயல்பில் இருக்காது. ஆனால் அது நுகர்வாக மாறும்போது அதாவது ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது” என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன். அதாவது இனப்பெருக்கம் எனும் உண்மையான நோக்கம் மறைந்து ஆசை, இன்பம், காதல், காமம் என உடலுறவின் தளம் மாறியபோதுதான் பாலியல் குற்றங்களாக அது உருத்திரிந்தது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? மறுக்கிறீர்கள் என்றால் எப்படி?
\\பாலியல் வன்முறைக்கான கிரியா ஊக்கிகளாக கவர்ச்சியான உடைகளுடன் பெண்ணியம் இழந்தவர்களாக கவர்ச்சி பொருள்களாக பெண்கள் பவனி வரும்போது ஆண்களை எப்படி குறைகூற முடியும்?// இது சுத்தமான கலப்படமற்ற ஆணாதிக்கப் பார்வை. பெண்கள் கவர்ச்சியான உடையணிந்தால் ஆண்கள் பாய்ந்துவிடுவார்கள், அப்படி நேரும்பட்சத்தில் அதில் ஆண்களை குறைகூறக் கூடாது என்கிறீர்கள். இஸ்லாம் கூறும் உடையணிந்த பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதே இல்லையா? உள்ளாகிறாள் என்றால் உடை தவிர்த்த வேறு ஏதோ ஒன்று பாலியல் வன்முறையில் தொழிற்படுகிறது என்பது உறுதி. ஒருவனுக்கு நெருங்கிய உறவில் சகோதரி முறையில் ஒரு பெண்ணை குறைந்த ஆடையில் ஒருவன் காண நேர்கிறது என்று கொள்வோம், அதே அவன் அதே அளவு குறைந்த ஆடையில் அன்னிய பெண்ணை காண நேர்கிறது. இந்த இரண்டு நிகழ்வில் எந்த நிகழ்வில் அவனுக்கு பாலியல் வேட்கை கிளர்ந்தெழும்? இரண்டு நிகழ்விலும் ஒரே மாதிரியான பாலியல் வேட்கை அவனுக்கு உண்டாகுமென்றால் ஆடை காரணம் எனலாம், மாறாக ஒன்றில் எச்சரித்து ஆடையை சரிசெய்யவும், மற்றதில் காம வேட்கையும் கொண்டால் ஆடை தவித்து வேறொன்று அதில் செயல்படுகிறது எனலாம். இதில் இரண்டாவதான் மனநிலைதான் ஒருவனுக்கு ஏற்படும் என்றால் அதில் செயல்படும் வேறொன்று என்ன?
இஸ்லாத்தில் நிலைபாடு சரியானதல்ல என்பதற்கு இரண்டு கேள்விகளை உங்களிடம் எழுப்பியிருந்தேன். “ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில், பெண் ஆணின் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக இருக்கும் சைத்தானின் முயற்சிகள் பலனளிக்காது. மேலாடை அணியாத பழங்குடியின சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமூகத்தில் இருக்கும் ஆண்கள் ஆடைகுறைவு என்ற காரணத்தினால் பாலியல் அத்துமீறல்களைச் செய்வதில்லை” இந்த இரண்டுமே ஆடை என்பது பாலியல் வன்முறையில் தகுந்த காரணியல்ல என்பதை நிரூபிக்கப் போதுமானது. ஆனால் இதற்கு பதிலளிக்கப் புகுந்த நீங்கள் \\மேலாடை அணியாத பழங்குடியினரின் சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களையே முன் மாதிரியாகக் கொண்டு அவர்களைப் போலவே அவர்களின் சமுக சூழ்நிலைக்கேற்ப இயங்கியலின் அடிப்படையில் சட்டங்களை ,நடைமுறைகளை வகுத்துககொள்வீர்களா?அல்லது புரட்சி மூலம் சோஷலிச ஆட்சியை எப்போது உலகம் முழுவதும் கொண்டு வருவது சாத்தியமா? சாத்தியமற்ற ஒன்றை சபையில் சொல்லிவைத்தால் ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?// என்று கூறியிருக்கிறீர்கள். இதில் உங்கள் இலக்கு என்ன? அந்த இலக்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பிற்கு எந்த விதத்தில் பொருத்தமானது? மேலாடை அணியாத பழங்குடியினத்தில் சோசலிச ஆட்சி ஏற்படாது. புதிய ஜனநாயகப் புரட்சிகான தேவை அந்த சமூகத்தில் இருந்தால், அதற்கான தயாரிப்புகளே அந்த பழங்குடியின சமூகத்தை நடப்பு உலகோடு தொடர்பை ஏற்படுத்தி வேண்டிய நவீன பயன்பாடுகளை முதலாளிய சீரழிவுகள் எதுமின்றி கற்பிக்கும். எதையுமே தட்டையாக புரிந்துகொள்ளாமல் எடுத்துவைத்திருக்கும் வாதங்களை உள்வாங்கி பதிலளிப்பது நல்லது.
அடுத்து,\\வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருக்கலாம்.வெகுசில நிகழ்வுகளே வெளிவரும். அதை பொருட்படுத்த தேவை இல்லைஎன்றால் நீங்கள் சொல்லுவதுபோல் ஆண்பெண் தனித்திருப்பது சரியான ஒன்றாகவே இருக்கட்டும்// என்று ஆண் பெண் தனித்திருக்கும் விசயத்தில் பதிலளித்திருக்கிறீர்கள். நடப்பு உலகில் பொருளாதார சுரண்டலின் வீரியம் காரணமாக ஆண் பெண் இருவருமே வேலைசெய்து பொருள் ஈட்டியாகவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இதனால் ஆண் பெண் வேலை நிமித்தம் கலந்து பழக வேண்டியதிருப்பதும், தனித்திருக்க வேண்டியதிருப்பதும் அவசியமாகியிருக்கிறது. தனித்திருக்கும் எல்லாருமே தங்களுக்குள் பாலியல் இணக்கங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்பது தவறானது. சிலர் அவ்வாறு இருக்கின்றனர், அது விதிவிலக்கானது. இந்த விதிவிலக்குகளுக்காக தனித்திருப்பது கூடாது என்பது சரியான தீர்வாக இருக்க முடியாது.
சௌதியில் பாலியல் குற்றங்களைக்கொண்டு சௌதி முழுவதும் இப்படித்தான் என்றோ, சௌதிகள் அனைவரும் இப்படித்தான் என்றோ நான் கூறவரவில்லை. ஒப்பீட்டளவில் சௌதியில் பாலியல் குற்றங்கள் குறைவு என்பதைத்தான் நான் மறுக்கிறேன். காரணம் ஒரு நாட்டின் பாலியல் வன்முறைக்கான புள்ளிவிபரம் என்பது அந்த நாட்டின் முழுமையான வன்முறைகளின் தொகுப்பாக இருக்காது. பதிவு செய்யப்பட்டவைகளை அடிப்படையாகத்தான் இருக்கும். எந்த நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகல் அனைத்தும் பதிவு செய்யப்படுவதும் இல்லை. ஆனால் சௌதியைப் பொருத்தவரை அங்கு பணிபுரியும் பெண்களே அதிகம் பாலியல் வன்முறைக்கு ஆளாவதால் அது வெளிவருவதே இல்லை. இது மற்ற நாடுகளில் பதிவாகாமல் இருப்பதைவிட வெகு அதிகம் என்பதால்தான் மற்ற நாடுகளின் பாலியல் குற்றங்களை விட ஒப்பீட்டளவில் சௌதியில் ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிறேன்.
செங்கொடி
பின்குறிப்பு: நான் எழுதுவதில் உங்களுக்கு புரியாத இடம் என்று ஏதாவது இருந்தால் கேளுங்கள் விளக்க முற்படுகிறேன். மாறாக ஜெயகாந்தன், சாகித்ய அகாதமி போன்ற சொல்லாடல்கள் குறிப்பாக வாதம் செய்வதினின்று நம்மை குலைக்க முற்படும். எனவே பரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறேன்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

எனது பதில்

  1. இஸ்லாம் எந்தக்காலத்திலும் வரும் புதியவைகளுக்கும் தன்னுள் தீர்வை கொண்டுள்ளது.புதியவைகளை இணைக்க முடியாது என்று நீங்கள் எதை சொல்லுகிறீர்கள் என்பது புரியவில்லை. கம்யுனிஸ்ட் சமுக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை வகுத்து கொள்ளும் என்கிறீர்கள் .அவ்வாறெனின் அது நியாயத்தின் அடிப்படையில் இருக்காது.இப்போதைய தமிழகத்தின் சமூக சூழ் நிலை மதுவிலக்கு ரத்து,அதைப்போல் மும்பையின் சமூக சூழ்நிலை பெண்கள் உடலை வியபரத்தலமாக்கி கொண்டதுக்கான அங்கீகாரம் .சமூக சூழ்நிலை என்பது நியாயத்தின்,தர்மத்தின் அடிப்படையிலா?இல்லை மெஜாரிட்டியின் அடிப்படையிலா?
    சமுகத்தை மாற்றுவதை தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்கமுடியும் .நீங்கள் ஜெயகாந்தன் கட்டுரை போல் எழுதுவது சாகித்ய அகடமி பெறுவதற்குத்தான் சிபாரிசு செய்ய முடியுமே தவிர உலக வாழ்க்கைக்கு நடை முறையில் கொண்டு வர முடியாது.தனி மரம் தோப்பாகாது என்றாலும் தோப்பை உருவாக்க ஒரு மரத்தி லிருந்துதான் கணக்கிடமுடியும்.பாலியல் குற்றங்கள் ஆணாதிக்கத்தினால் மட்டும் ஏற்படவில்லை.மேலும் ஆணுககு எப்படி பெண் நுகர்பொருளோ,அதுபோல் பெண்ணுக்கும் ஆண் நுகர்பொருள். இன்றைய பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடே என்பதையும் மறுக்க முடியாது. .
    ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது<<<பாலியல் தேவைகள் என்பது இனபெருக்கம் ,ஆசை,இன்பம் அத்தனையும் உள்ளடக்கியதே.இன்னும் சொல்லப்போனால் இனபெருக்கத்தின் தேவையை விட ஆசை,இன்பத்தின் வடிகாலாகத்தான்"பாலியல் தேவை" அதிக பங்கு வகிக்கிறது..
    ஆதலின் ,புரட்சி மூலம் சோசலிச நடைமுறைக்கு வரும் ஒரு நாடு, அதன் சமூக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை நடைமுறைகளை வகுத்துக்கொள்ளும்.பாலியல் குற்றங்களை தவிர்த்து விடமுடியாது என்பதால் ,சமுக சூழ்நிலைக்கு ஏற்ப பாலியல் தேவைகளை எப்படி வேண்டுமானாலும் நிறை வேற்றிக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டுவந்து விடலாம் .மேலாடை அணியாத பழங்குடியினரின் சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களையே முன் மாதிரியாகக் கொண்டு அவர்களைப் போலவே அவர்களின் சமுக சூழ்நிலைக்கேற்ப இயங்கியலின் அடிப்படையில் சட்டங்களை ,நடைமுறைகளை வகுத்துககொள்வீர்களா?அல்லது புரட்சி மூலம் சோஷலிச ஆட்சியை எப்போது உலகம் முழுவதும் கொண்டு வருவது ?சாத்தியமா? சாத்தியமற்ற ஒன்றை சபையில் சொல்லிவைத்தால் ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?
    ;
    ஆணும் பெண்ணும் தனித்திருப்பது இன்றைய சமூகத்தில் சாதாரணமானது தான்.அப்படியெனின் அவர்களிடையே பாலியல் நடவடிக்கைகளும் சாதரணமானதுதான்.
    >>>வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதால் ஆண் பெண் தனித்திருப்பதையே தவிர்க்கவேண்டும் என்பது சரியற்ற ஒன்றாகவே இருக்கும். <<<
    வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருக்கலாம்.வெகுசில நிகழ்வுகளே வெளிவரும் .அதை பொருட்படுத்த தேவை இல்லைஎன்றால் நீங்கள் சொல்லுவதுபோல் ஆண்பெண் தனித்திருப்பது சரியான ஒன்றாகவே இருக்கட்டும்.
    பாலியல் வன்முறைக்கான கிரியா ஊக்கிகளாக கவர்ச்சியான உடைகளுடன் பெண்ணியம் இழந்தவர்களாக கவர்ச்சி பொருள்களாக பெண்கள் பவனி வரும்போது ஆண்களை எப்படி குறைகூற முடியும்? நேற்று கூட டெல்லியில் நடுஇரவில் வேலைமுடித்துசென்ற இரு பெண்களில் ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.
    ஆண்கள்,சட்டை அணிந்து ,கழுத்துகூட தெரியாதவாறு டை கட்டி,அதற்க்கு மேல் கோட் அணிந்து,கால்கள்,கால் இன்ச் கூட தெரியாதவாறு சாக்ஸ்,சூட்,சூ அணிந்து முகம் மட்டும் தெரியுமாறு உடை அணிந்து வரும்போது பெண்கள் மட்டும் அரைகுறை ஆடையுடன் காட்சிதரவேண்டுமேன்பதை எங்ஙனம் சரிகாணமுடியும்? இஸ்லாம் பெண்களை முகம் கைகள் தெரியும் அளவுக்கே உடை அணிய சொல்லுகிறது.முகம் கைகள் தவிர மற்ற உடலை மறைத்து எந்த ஆடைகள் வேண்டுமானாலும் அணிந்து கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
    .
    பணத்தால் உடல் கொழுத்தவர்கள் வேறு வேலையே இல்லாதவர்கள் சிலரை மட்டுமே வைத்து சவூதி முழுவதையும் கணிப்பது தவறு.சவூதியில் மற்ற நாடுகளை ஒப்புநோக்கின் பாலியல் குற்றங்கள் குறைவு என்பதே இதுவரை வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

செங்கொடியின் பதில்

  1. நண்பர் இப்ராஹிம்,
    முதலில் இஸ்லாத்திற்கும் கம்யூனிசத்திற்கு இடையிலுள்ள ஓர் அடிப்படையான வித்தியாசத்திலிருந்து தொடங்குகிறேன். இஸ்லாத்தின் வேதமான குரானில் சிலவகைக் குற்றங்களுக்கு இன்னின்ன தண்டனைகள் என்று சட்டவியல் தொகுப்பு இடம்பெற்றிருக்கும். இதைப்போல கம்யூனிசத்தில் சட்டங்கள் இடம்பெற்றிருக்காது. கம்யூனிசமானது சமூகத்தை நடப்பிலிருக்கும் அமைப்புமுறையை புரட்சிகரமாக மாற்றியமைப்பது குறித்த அழைப்பு. அந்த அடிப்படையில் புரட்சி மூலம் சோசலிச நடைமுறைக்கு வரும் ஒரு நாடு, அதன் சமூக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை நடைமுறைகளை வகுத்துக்கொள்ளும். சூழலுக்கேற்ப புதிய நடைமுறைகளை சேர்த்துக்கொள்வது இயங்கியலுக்கு அடிப்படையாகிறது. இஸ்லாத்தில் ஏற்கனவே குரானில் கூறப்பட்டவைகளை விரித்துக்கொள்ளலாமேயன்றி புதியவைகளை இணைக்கமுடியாது. இந்த வித்தியாசத்தை நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.
    பாலியல் குற்றங்கள் தற்போதைய சமூகத்தில் மட்டும் நடப்பவையல்ல. ஆணாதிக்கச் சிந்தனை என்று தொடங்கியதோ அன்றிலிருந்தே பாலியல் குற்றங்களும் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் பாலியல் குற்றங்களின் தன்மையும் வடிவங்களும் மாறிவந்திருக்கின்றன. பாலியல் மட்டுமல்ல எந்த ஒரு குற்றச்செயலையும் முழுக்கமுழுக்க தனிமனிதன் சார்ந்ததாக கம்யூனிசம் பார்ப்பதில்லை. குற்றம் புரிவதற்கான சூழல் சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும்வரை தனிமனிதனை மட்டுமே அதற்கு காரணமாக்கிவிட முடியாது. எனவே சமூகத்தை மாற்றுவதிலிருந்துதான் இதைத் தொடங்க முடியும். பாலியல் தேவைகள் என்பது உடல்சார்ந்து இனப்பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இனப்பெருக்கம் மட்டுமே நோக்கமாக இருக்கும்வரை அங்கு குற்றம் என்பது இயல்பில் இருக்காது. ஆனால் அது நுகர்வாக மாறும்போது அதாவது ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது. ஆணாதிக்கம் எனும் சிந்தனை தோன்றாதவரை பெண்ணுடல் ஆசையாக, இன்பமாக, நுகர்வாக ஆகியிருக்காது. எனவே பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமுமே காரணம். கம்யூனிசம் இந்த இரண்டும் இல்லாத சமூகத்தை அமைப்பதில் துடிப்புடன் இருக்கிறது. தனியுடமையிலும், ஆணாதிக்கத்திலும் தங்கியிருக்கும் எந்தச் சமூகத்தாலும் பாலியல் குற்றங்களைத் தவிர்த்துவிடமுடியாது என்பதுதான் கம்யூனிசத்தின் பார்வை. தனியொரு மனிதனுக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது நடந்துவிட்ட செயலுக்கான எதிர்வினையாகத்தான் அமையுமேயன்றி சமூக நோக்கில் அதன் காரணியை களைவதற்குப் பயன்படாது.
    இனி நீங்கள் கூறியிருக்கும் இஸ்லாமிய நிலைபாடு சரியானதா எனப்பார்க்கலாம். இஸ்லாம் பாலியல் குற்றங்களுக்கான காரணமாக தனிமனிதனையே கூறுகிறது. இது அடிப்படையிலேயே தவறானதாகும். ஆணும் பெண்ணும் தனித்திருப்பது, பெண்ணின் ஆடை ஆடவனின் ஆசையை தூண்டுவது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரப் பழக்கங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவைகளை பாலியல் குற்றங்களுக்கான காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவை மேலோட்டமானவை. சமூகத்திலிருந்து இந்தக் காரணங்களை நீக்கிவிட்டால் பாலியல் குற்றங்கள் நீங்கிவிடுமா? இவைகள் தற்போது இருக்கும் பாலியல் குற்றங்களின் அளவை வேண்டுமானால் சற்று குறைக்கலாம். ஆனால் பாலியல் முறைகேடுகளை இவை நீக்கிவிடாது. இந்தக் காரணங்களுக்கு நடப்பிலிருந்து நீங்கள் எடுத்துக்காட்டுகள் தந்திருப்பதுபோலவே, இதற்கு எதிரான எடுத்துக்காட்டுகளையும் தரமுடியும். ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில், பெண் ஆணின் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக இருக்கும் சைத்தானின் முயற்சிகள் பலனளிக்காது. மேலாடை அணியாத பழங்குடியின சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமூகத்தில் இருக்கும் ஆண்கள் ஆடைகுறைவு என்ற காரணத்தினால் பாலியல் அத்துமீறல்களைச் செய்வதில்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அதாவது இஸ்லாம் கூறும் காரணங்கள் மேம்போக்கானவை.
    \\மூன்றவதாக அங்கு சைத்தான் இருக்கிறான்” என்ற நபிமொழி பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தீர்வுகளையும் ரத்தின சுருக்கமாக சொல்லும்//
    \\ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது// இந்த இரண்டு இடங்களிலும் குரான் குறிப்பிடும் தீர்வு என நீங்கள் முன்மொழிந்திருப்பது ௧) ஆணும் பெண்ணும் தனித்திருக்கக்கூடாது, ௨) பெண்கள் புர்கா அணிந்துகொள்வது. இந்த இரண்டுமே அடிப்படையற்றது. ஆணும் பெண்ணும் தனித்திருப்பது என்பது இன்றைய முதலாளிய சமூகத்தில் சாதாரணமானது. வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதால் ஆண் பெண் தனித்திருப்பதையே தவிர்க்கவேண்டும் என்பது சரியற்ற ஒன்றாகவே இருக்கும். பாலியல் குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் ஆணாதிக்கப் பார்வைதான் பெண்கள் புர்கா அணிவதை தீர்வு என்று சொல்ல முடியும். பாலியல் வன்முறைக்கான குற்றத்தை ஆண்களிடம் வைத்துக்கொண்டு பெண்களை புர்கா அணியச் சொல்வது எப்படி தீர்வாக முடியும்?
    பிற நாடுகளைப்போலவே சௌதியிலும் பாலியல் குற்றங்கள் மலிந்துதான் கிடக்கின்றன. சௌதியில் பாலியல் குற்றங்களை பதிவு செய்வது அரிது என்பதால் குறைவானதாகத் தோன்றுகிறது.
    செங்கொடி

வெள்ளி, 26 நவம்பர், 2010

சென்கொடியுடன் விவாதம்

அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திருப் பெயரால்,
                           அன்புமிக்கவர்களே,இங்கே சகோதரர் செங்கொடியின் அழைப்பை ஏற்று விவாதத்தை தொடங்குகிறேன்.அவர் தேர்ந்தெடுத்த விவாதத் தலைப்பிலே, துணை தலைப்பையும்,அதை பல பிரிவாக்கி அவற்றில் முதலில் பாலியல் குற்றங்கள்,அதற்க்கான காரணங்கள்,தீர்வுகள் என்பது பற்றி இஸ்லாத்தின் பார்வை பற்றி கேட்டுள்ளார்.நான் பல நூல்களை ஆயிந்து அறிந்தவன் அல்ல. நான் கடந்த பல வருடங்களாக சகோதரர் பீ.ஜே அவர்களின் சொற்பொழிவுகள் ,எழுத்துக்கள் மூலம் அறிந்தவற்றில் ,மனதில் தங்கியதை வைத்தே இங்கு விவாதம் செய்ய விழைகிறேன் இறைவனின் துணையோடு. ஆதாரங்கள்,மேலதிகமான விளக்கங்கள் தேவை ஏற்படும்போது காலதாமதம் ஏற்படாத வண்ணம் மூன்று நாட்களுக்குள்ளே பதிலளிக்க முயலுகிறேன்.  
                    "ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது மூன்றவதாக அங்கு சைத்தான் இருக்கிறான்" என்ற நபிமொழி பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தீர்வுகளையும் ரத்தின சுருக்கமாக சொல்லும் முகமாய்  நம் முன் காட்சி தருகிறது.ஒரு பெண்ணை சந்திக்கும் வேளையில் இயல்பான பார்வை மிகைக்கும்போது பாலியல் குற்றம் தனது கணக்கை துவங்க தயாராகிறது.ஒரு உயர் அதிகாரி,சக பெண் அதிகாரியின் பின்னழகை எத்தனை தடவைகள் தான் கண்களால் ரசிப்பது என்ற நிலையின் அனிச்சை செயலாக  கைகள் தாண்டவமாடும்போது பாலியல் குற்றம் செயலாக்கம் பெறுகிறது.பாலியல் குற்றங்கள் அங்கு இங்கு என்றல்லாமல் எங்கெங்கும் நடந்து கொண்டிருக்கும் பரவலான செயலாகிவிட்டது. இஸ்லாம் ஒரு பெண்ணை இயல்பான பார்வையை விட கூடுதலாக பார்வை அதிகரிப்பதையே கண் செய்யும் பாலியல் குற்றமாக சொல்லுகிறது.உடைகளும் அது அணியப்படும் விதங்களும் பாலியல் குற்றத்திற்கு கதவுகளை திறந்துவிடுகின்றன. சினிமாவிலும் ,டிவிகளிலும் உடலழகை காட்டும்  நடிகைகளின் உடைகளைப் போலவே டிசைன் செய்யப்பட்ட உடைகளை பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளுக்கு அணிந்து அழகு பார்க்க துணிந்து விட்டனர்.  
             பஸ்ஸில்,ட்ரெயினில்,விழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் பாலியல் தவறுகளை விரும்பாதவனுக்கும் அழைப்பிதழ் கொடுக்கிறது.செல்போன்களும் இன்டர்நேட்களும் பாலியல் குற்றங்களை நண்பர்கள் கூடிக்குலாவும் டி பார்ட்டிகளாக்கிவிட்டன.அவர்கள் மத்தியில் பாலியல் குற்றங்கள் நட்பின் நடவடிக்கைகளாகி விட்டன.ஐ.டி.யின் தாக்கம் பெற்றோரர்களை துச்சமென மதிக்க ஊக்கம் தந்துவிட்டது.பெற்றோரும் பணம் போதும் என்ற மனம் கொண்டோராக மாறிவிட்டனர்.சமிபத்தில் ஒரு பெண்டாக்டர் தன்னிடம் பிளஸ் டூ மாணவி தனது பள்ளி தோழனுடன் டி அன்சி செய்யவந்ததையும் அதற்க்கு அவர் மறுத்தபோது தன்னை இன்று மாலை பெண்பார்க்க மாப்பிள்ளை விட்டார் வர இருப்பதாகவும் கூறியதை கேட்கும்போது பாலியல் குற்றங்கள் தடுக்க இயலாத குற்றங்களாக விசுவ ரூபம் எடுத்துள்ளது.டெல்லி,பெங்களூரில் தினசரி நடக்கும் கற்பழிப்புகள் போலீசாரின் பார்வைக்கு வராமலே மறைக்கப்படுகின்றன.பாலியல் பாவங்கள் அன்றாட டி,காப்பி குடிப்பது போல் ,வாக்கின்க் போல், கிரிக்கெட் ஆடுவதுபோல் பாவத்திற்கு அப்பாற்ப்பட்ட செயலாக மாறிவிட்டது.
             இருபாலினரும் மனம் ஒருமித்து பார்வைகளை பகிர்ந்து கொண்டாலுமே அதை பாலியல் குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.ஆனால் இன்றைய சமுதாயமோ இருவரில் ஒருவர் முரண்பட்டாலே அதனால் வரும் விளைவுகளையே பாலியல் குற்றமாக கருதுகிறது.கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்பது போல் ஒட்டு மொத்த சமுதாயமும் பாலியல் குற்றம் நடை பெறுவதற்கான காரணங்களை,சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை தேடினால் அது எங்கிருந்து ,எப்படி கிடைக்கும் ?பாலியல் தீர்வுகளை சொன்னால் அது பெண்ணடிமை,என்ற கோசம் ஓங்கி ஒலிப்பதை காணமுடிகிறது.இஸ்லாம் மிக மென்மையாகவும்,கடினம் காட்ட வேண்டிய இடத்தில் கடினமாகவும் பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை சொல்லுகிறது.ஆனால் இன்று அந்த தீர்வுகளை சவூதி அராபியாவைதவிர மற்ற இஸ்லாமிய நாடுகளே கைவிட்டுவிட்டன.அதை ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது.ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்,சவுதிஅரபியாவை பின்பற்றினால் பாலியல் குற்றங்களை வெகுவாக குறைத்திடலாம் என்று.நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்?
                  முகம்மதுநபி[ஸல்]அவர்கள்,மக்களை எந்த அளவுக்கு பண்படுத்தினார்கள் என்பதற்கு ஓரிரு சம்பவங்களை சொல்லுகிறேன்.ஒரு நபிதோழர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து   தான் விபச்சாரம் செய்துவிட்டதாகவும் அதற்குரிய தண்டனை வழங்குமாறும் வேண்டுகிறார். நபி[ஸல்] அவர்கள் புன்னகைத்தவாறு இருந்தார்கள். அவரோ மீண்டும் தவறைச்சொல்லி தண்டனை கேட்கிறார்.மீண்டும் புன்னகைத்தே இருக்க,மூன்றாவது முறையாக கேட்கப்படவே அந்த நபித் தோழருக்கு தண்டனை நிறை வேற்றப்படுகிறது.இதே போன்றே ஒரு பெண்ணும் தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் குழந்தை உண்டாகி விட்டதாகவும் தனக்கு தண்டனை வழங்குமாறும் வேண்டினார்.நபி[ஸல்]அவர்கள் குழந்தை பெற்று விட்டு வருமாறு வேண்டுகிறார்.குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் அந்த பெண் தண்டனை கேட்கிறார். அக்குழந்தைக்கு பாலூட்டும் காலம் முடித்துவிட்டு வருமாறு வேண்டுகிறார்.பாலூட்டும் காலம் முடிந்த பிறகு அதாவது இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் நபி[ஸல்] அவர்களிடம் தானாகவே வழிய வந்து தண்டனை பெறுகிறார். இவ்வாறாகவே முகம்மதுநபி[ஸல்] அவர்களால் மக்களை பண்படுத்தியது எந்த சட்டங்களோ,எந்த வழிமுறைகளோ,அவற்றினை மக்கள் மத்தியில் படிப்படியாக நடைமுறை படுத்தினால் பாலியல் குற்றங்களுக்கு அதுவே தீர்வாக அமைந்துவிடும்.     

வியாழன், 25 நவம்பர், 2010

ஹஜ்ஜு பெருநாள் கூட்டுகுர்பானி –வரவு -செலவு

2010 - நவம்பர்
ஹஜ்ஜு பெருநாள்  கூட்டுகுர்பானி  –வரவு -செலவு

வரவு
&
ig
செல்வு
&
ig
பங்கு 1 க்கு    rs.1100.வீதம்  112 பங்குகள்
123200
-
17 மாடு களுக்கான  கிரயம் 
108757
-
1 மாட்டுக்கு தனி  நபர்  கொடுத்தது
  6000
-
போக்குவரத்து  செலவு .
1210

தமாம்  கூடுதல்  வரவு

   595
-
3 நபருக்கான  சம்பளம்
900
-
12 ஆட்டு  தோல்  விற்றுவரவு 
 1800
-
17 மாட்டு  உறிப்பு,வெட்டு  கூலி
14320
-
17 மாட்டு  தோல்  விற்றுவரவு
 8925
-
மண்டப வாடகை 
500
-
மொத்தம்
140520
-
மொத்தம்
125692
-
மீதி  இருப்பு
14828
-
 தகுதி வாய்ந்த நபருக்கு தோல் விற்ற பணம் உதவி செய்யப் பட்டு பின்னர் அறிவிக்கப்படும்                                                                             பொருளாளர்,TNTJ.