ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

எனது கேள்விகளைப் போடாமல் அவருடைய பதிலை மட்டுமே போட்டுள்ளார்.எனது கேள்விகளுடன் இவருக்கு பதில் சொல்வோம்.

பக்தி உங்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளதே!

 அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
திருச்சி-8
ஹி. 28.06.1431
ஈ.: 11.06.2010
அன்புச் சகோதரர் S. இப்றாஹீமுக்கு அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க துஆ செய்கிறேன்!
பழனி உமர் உங்களுக்கு வீம்பர் போல் தெரிகிறது. ஆனால் பீ.ஜை. பக்தராகிய உங்களுக்கு உங்களின் வீம்பு நிலை தெரியவில்லையே. பரிதாபம்! நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அந்நஜாத்தில் 2500 தடவை எழுதியும் பீ.ஜை. பக்தர்களின் பித்தம் தெளியவில்லையே! உங்களுக்கே இன்னும் பித்தம் தெளியவில்லையே!பாக்கருக்கும்,இலாகிக்கும் ஹாமித் பக்ரிக்கும் தெளித்த பித்தம் எங்களுக்கு தெளியவேண்டிய அவசியமில்லை.,அது பித்தமாகவே இருந்து விட்டு போகட்டும். இன்னும் 2500 தடவை எழுத வேண்டியிருக்கிறதே. ஈ.வே.ரா. சொன்னது போல் பீ.ஜை.பக்தி உங்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளதே.பித்தம் பிடித்தவன் தான் சொன்னதேயே சொல்லிகொண்டிருப்பான்.நீவிர் 25000 தடவை வேண்டுமானாலும் சொல்லி கொண்டே இருங்கள்.அப்புறம் யாரும் கல்லை கொண்டு உஎரியாமல் இருந்தால் சரி.
இல்லை என்றால் 1987லிருந்து 2010 வரை பீ.ஜை. எத்தனை புதிய இயக்க மத்ஹபுகளை உண்டாக்கி இருக்கிறார். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று தெளிவு பெற்று வந்த வாலிபர்களை எந்த அளவு வழிகெடுத்துள்ளார் என்பதை ஒரு நடுநிலை பாமரன் விளங்குவதை உங்களால் விளங்க முடியாமல் இருக்குமா?எந்த நடுநிலை பாமரன் விளங்கியுள்ளான்? பழனி உமரா?
பித்தம் தெளிந்தவர்கள் பொய்யன் பீ.ஜை.யை அதிகமாக அடையாளம் காட்டச் சொல்கின்றனர்.நீங்கள் பித்தம் தெளிந்த தகாக் கூறும்  நபர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப் பட்டவர்கள்.பாக்கரால் முக்கியத்துவம் இழந்த இலாகி மீண்டும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றால் ஓடோடி வந்துவிடுவார். கடந்த பல ஆண்டுகளாக அவர் பலரைப் பற்றிப் பரப்பி வரும் அவதூறுகள், குற்றச்சாட்டுக்களை பொது மக்கள் முன்னிலையில் நிரூபித்துக்காட்ட முன் வரும்படி நாம் அழைத்தும் முன்வராத அவர், உங்கள் பார்வையில் யோக்கியர்.பலரைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்வீர்கள்?அவர்களுக்கு நீவிர்என்ன பதில் சொல்லும்ஏஜென்டா?
சுமார் 100 பேருக்கு முன்னால் பாக்கர் பற்றி பகிரங்கமாகக் கூறியவற்றை நான் கூறவில்லை என்று முபாஹலா செய்தவர் உங்கள் பார்வையில் யோக்கியர்.
ஒரு வருடத்திலேயே பல்ட்டி அடித்து “நான் அவ்வாறு கூறவில்லை” என்று முபாஹலா செய்ததற்கு முரணாக அதே குற்றச் சாட்டுகளை இப்போது கூறி வருகிறவர் உங்கள் பார்வையில் யோக்கியர்.
அல்லாஹ் மீது ஆணையிட்டு அவதூறு பரப்புகிறவர் உங்கள் பார்வையில் யோக்கியர்; நேரடியாக வாருங்கள் உரிய ஆதாரம் தருகிறோம்.இது பற்றிய சி.டி யை பார்த்தால் உண்மை புரியும்.
1987லிலிருந்து இன்று 2010 வரை அவரது வளர்ச்சிக்கும் பேர் புகழுக்கும் காரணமாக இருந்தவர்களை எப்படி எல்லாம் இழிவு படுத்தியுள்ளார். எந்த அளவு அவதூறு பரப்பி இருக்கிறார் என்பதை நேரடியான உரிய ஆதாரங்களுடன் காட்டுகிறோம். நேரில் வாருங்கள்.முன்பு ஒருதடவை நேரில் வந்தபோது ஒரு மோசமான குற்றச்சாட்டை கூறுனீர்கள்.ஆதாரம் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்.
எந்த அளவு பீ.ஜை. பக்தி உங்களை மயக்கி இருந்தால் 90க்கு முன்பே முடிந்துவிட்ட ஒரு பிரச்சினை என அப்பட்டமான பொய்யை எழுதியிருப்பீர்கள். பீ.ஜை. அது பற்றி ஏதும் எழுதவில்லை என்றும் ஓர் அப்பட்டமான பொய்யை எழுதியிருப்பீர்கள். 1999ல் கோவை வெடிகுண்டு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகி அப்பட்டமான பொய்யைக் கூறிவிட்டு, நாம் தொடுத்த வழக்கிலிருந்து விடுபட லஞ்சம் கொடுத்து எனது வக்கீலையும் சரி செய்து குறுக்கு விசாரணை இல்லாத நிலையில் “நான் அப்படிச் சொல்லவில்லை” என பொய் வாக்குமூலம் கொடுத்ததையும், சமீபத்தில் திருப்பூர் P. நாசருக்காக வசூலித்து அவர் குடும்பத்திற்குக் கொடுக்காமல் நான் மோசடி செய்து விட்டதாக பகிரங்கமான பொய்யை உணர்வில் எழுதியதையும் பீ.ஜை. பக்தி உங்கள் கண்ணை விட்டு மறைத்துவிட்டது.
அவரது வலைதளங்களில் போய் பாருங்கள். எப்படி எல்லாம் அவதூறு பரப்புகிறார் என்பது விளங்கும். அப்படிப் பார்த்தாலும் நீங்கள் உணரப் போவதில்லை.நாங்கள் அதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் உங்களுக்கு பதில் சொல்லி கொடிருக்கிறோம். அந்த அளவு பீ.ஜை. பக்தியில் மூழ்கி இருக்கிறீர்கள். நீங்கள் அவரோடு சில நாட்களாவது தங்கி இருக்கிறீர்களா? பிரயாணம் செய்திருக்கிறீர்களா? கொடுக்கல் வாங்கல் செய்து பார்த்திருக்கிறீர்களா? இதில் எது ஒன்றையும் செய்யாத நீங்கள் எதை வைத்து பீ.ஜை. பக்தியில் இருக்கிறீர்கள்? அவரது பேச்சு நடிப்பில் – பயான் சூன்யத்தில் மயங்கி அவரது பக்தராக இருக்கிறீர்கள். அப்படித்தானே?
நாம் அவரோடு 15 மாதங்கள் தங்கி பழகி இருக்கிறோம். பல நாட்கள் பிரயாணம் செய்திருக்கிறோம். கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறோம்.25 ஆண்டுகளுக்கு முன் பழகியதை வைத்து இன்னும் அதையே சொல்லி கதையை ஓட்ட வேண்டாம்.நீங்கள் 15 மாதங்கள்தான் பலகியுள்ளீர்கள் நான் 23 வருடங்களுக்கு மேலாக பழகியுள்ளேன்.ஐங்காலக் கட்டாயத் தொழுகைகளைப் பாழ்படுத்துவதை கண்கூடாகப் பார்த்துக் கண்டித்திருக்கிறோம். நம்மை விட்டு அவர் வெளியேறியதற்கு அதுவும் ஒரு காரணம்.
தர்கா, தரீக்கா, மத்ஹபுகளை விட்டு விடுபட்டு வந்த இளைஞர்களை இயக்க மத்ஹபுகளில் சிக்க வைத்து, அதிலும், ஆக், ஜாக், முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் பேரவை, ஒருங்கிணைந்த தவ்ஹீத் ஜமாஅத், ததஜ என பல இயக்க மத்ஹபுகளை உண்டாக்கி, இப்போது இதஜ உருவாகக் காரணமாக இருந்தவர் உங்கள் பார்வையில் நேர்மையாளர், சீர்திருத்தவாதி, நபிமார்களின் தாவா பணி செய்கிறார்; அப்படித்தானே?இதஜ  ஆரம்பிக்க அவர்காரனமாக இருந்தாரா ?இதன் மூலம் நீவிர் எவ்வளவு பெரிய போயர் என்பதையும் அறிந்து கொள்ளமுடியும்.
பீ.ஜை. பக்தி எந்த அளவு உங்களது புத்தியை மழுங்கச் செய்துள்ளது என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.
சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ் ரீன் போன்றவர்களையும் பல நாடுகள் தங்கள் நாடுகளில் நுழைய விடாமல் திருப்பி அனுப்புகின்றன. வெட்டு, குத்து, அடி, உதை என விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அவர்களது பக்தர்கள் இப்போது நீங்கள் சொல்வது போல்தான் சொல்கிறார்கள். அதையும் ஏற்கிறீர்களா? சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ் ரீன்  போன்றோராவது ஏற்கனவே வழிகேட்டில் இருப்பவர்களைத்தான் மேலும் வழிகெடுக்கிறார்கள். ஆனால் உங்களது பக்திக்குரிய பீ.ஜை. குர்ஆன், ஹதீஸை பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன்வந்தவர்களை இயக்க மத்ஹபுகள் என்ற வழிகேட்டில் இட்டுச் செல்கிறார். பெருத்த வழிகேட்டில் இருப்பது யார்? சொல்லுங்கள்!பீ.ஜே மீதான வெறி உங்களை எவ்வளவு கேவலமாக  எழுத வைத்திருக்கிறது என்பதற்கு இது இரு உதாரணம்,
அல்குர்ஆன் 3:7 வசனத்தில் பல பொருள் தரும் முத்தஷாபிஹாத் வசனங்களை ஒரே பொருளான முஹ்க்கமாத் வசனங்களாக மாற்றும் வல்லமை அல்லாஹ்வுக்கு இருப்பது போல் அறிவில் சிறந்தவர்களுக்கும் இருக்கிறது என்றும், “தஃவீல்” என்ற அரபி பதத்திற்கு அந்த இடத்தில் முடிவு என்ற பொருளை எடுக்காமல் விளக்கம் என்ற பொருளை எடுத்து அல்லாஹ்வையும் விளங்கும் மனித கீழ் நிலைக்கும், மனிதனை அல்லாஹ்வின் உயர் நிலைக்கும் உயர்த்தி மிக மோசமான கொடிய ஷிர்க்கை ஏற்படுத்தும் செயலை செய்துள்ள மாபாவி பீ.ஜை. உங்கள் பார்வையில் நபிமார்களின் பிரசார பணியைச் செய்கிறார்.முத்தசாபிஹத் வசனங்கள் பற்றி அந்த சமயத்தில் என்னுடைய சந்தேகங்களுக்கு பதில் சொல்லாத நீங்கள் நேரில் வரச்சொல்லி முத்தசாபிஹாத் வசனங்களுக்கு பதில் சொல்லாமல்,பீ.ஜே. பற்றி அவதூறு கூறி ஆதாரம் தர மறுத்தபோதே உங்கள் நிலை அறிந்துகொண்டேன்.
அல்குர்ஆன் 2:102லுள்ள பாபிலில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகள் என அல்லாஹ் நேரடியாகச் சொல்லியிருப்பதை மறுத்து ஹாரூத், மாரூத் இரண்டு ஷைத்தான்கள் என எழுதி 49:16ல் அல்லாஹ் சொல்வது போல், அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கத் துணிந்த மாபாவி உங்கள் பார்வையில் நபிமார்களின் பிரசார பணியைச் செய்கிறார். இதுபோல் பல குர்ஆன் வசனங்களை 2:159-162 கூறுவதுபோல் திரித்து வளைக்கிறார். இளைஞர்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்.
உண்மை என்ன தெரியுமா? ஷைத்தானின் நேரடி ஏஜண்டாக இருந்து, குர்ஆன், ஹதீஸ் என்று சொல்லியே வாலிபர்களையும், இளைஞிகளையும், நரகில் தள்ளும் கேடுகெட்ட புரோகிதராகச் செயல்படுகிறார் நீங்கள் பக்தி செலுத்தும் உங்கள் அபிமான பீ.ஜை. இன்றைய நிலையில் அவரைவிட ஒரு கேடுகெட்ட புரோகிதர் இப்புவியில் இல்லை. அதனால்தான் தொடர்ந்து அவரை அடையாளம் காட்டி வருகிறோம்.பொறாமையின் உச்சகட்டம் 
பீ.ஜை. பக்தி உங்களுக்கு முற்றிப் போய் அவர் வாந்தி எடுத்ததையே வாந்தி எடுக்கிறீர்கள். நீங்கள் பழுதான பழைய சகோதரன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே அவர் 1987ல் உங்களை விட அதிகமாக பீ.ஜை. மீது பக்தி வெறி கொண்டு என்னை மிகக் கடுமையாக விமர்சித்துக் கடிதங்கள் உங்களைப் போல் எழுதியவர்தான்.அவர் 87 முதல் இப்போது பீ,ஜே மீது அவதூறு கூறுவது போல் தான் எழுதி இருப்பார்.ஆனால் நான் அச்சமயத்தில் எழுதிய  மார்க்க விசயங்களுக்கு பதில் தராமல் நேரில் அழைத்து அவதூறுதான் கூற முடிந்தது.
1987ல் பீ.ஜை. அந்நஜாத்தை விட்டு வெளியேறியவுடன் அரபு நாடுகளின் பட்டி தொட்டி எல்லாம் பீ.ஜை. பேசி வெளியிட்ட ஆடியோ கேஸட்டுகளை எல்லாம் பரப்பி பீ.ஜை.யை அறிமுகப்படுத்த பெரும் கடின முயற்சிகள் எடுத்தவர்தான். பீ.ஜை.யை பிரபலப்படுத்தியவர்தான். இலாகியை மேலாப்பாலயம் தவிர வேறு யாருக்கும் தெரியாது.அவர்தான் பீ.ஜே.யை பிரபலபடுத்தினார் என்றால் உம்மைப்போல் கோமாளி வேறு யாரும் இருக்கமுடியாது.இப்போது பீ.ஜை. பக்தி தெளிந்து உண்மை நிலையை வெளியிடுகிறார்.பாக்கரால் காசு சம்பாதிக்க வழி இல்லாமல் போனதால் அவர் வெளியேறினார். தற்போதைய பீ.ஜை. பக்தராகிய நீங்கள் அதை ஜீரணிக்க முடியாமல் அது யாருடையது என்று நன்கு தெரிந்திருந்தும் மொட்டைக் கடுதாசி என பிதற்றி இருக்கிறீர்கள். யார் எழுதியது என்று தெரியாமல் மறைத்து வெளியிடுவதுதான் மொட்டைக் கடுதாசி என்பதை அறிந்து கொள்ளுங்கள். பீ.ஜை. பக்திதான் உங்களை இப்படி எல்லாம் தடுமாற வைக்கிறது. பிதற்ற வைக்கிறது.நீங்கள் சொல்லும் இலாகி தனக்காக தன்னை முன்னிலை படுத்தவேண்டும் என்பதற்காக பீ.ஜே வுடன் நெருக்கமாக இருந்தார்.அதனால் காசு சம்பாதிக்க வழி இல்லைஎன்றதும் உங்களிடம் அழுது புலம்பி பொய்யை பறை சாற்றுகிறார்.அன்று ஓர்நாள் மேலாப்பலயத்தில் பீ.ஜே.வெட்டுப்பட்ட இரவில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பீ.ஜே.உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் தனது பயணத்தை ரத்து செய்யாமல் இரவிலே வெளிநாட்டிற்கு  ஓடிவிட்டார்.அன்று நானும் இன்னொரு மௌளவியும்தான் இரவும் முழுவதும் அவருடன் கழித்தோம்.அன்று இரும்புக்கட்டிலில் இரவு முழுவதும் அவர் பட்ட அவஸ்தையை சொல்லமுடியாது.வீர வசனம் பேசும் ஹாமித் பக்ரி கூட அவருடன் தங்கவில்லை.உயிருக்கு பயந்து தன்னால் அழைக்கப்பட்டு வந்த ஒருவரை உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் காசு சம்பாதிக்க ஓடோடிப் போனவர்தான் இந்த இலாகி.பட்டி,தொட்டியெல்லாம் இப்போது உங்களையோ மூஜிபையோ,இன்னும் மற்றவர்களையோ இவர் அறிமுகப்படுத்த வைக்க வேண்டியது தானே.பீ.ஜே.கூட்டத்தை மேலபலயத்தில் மட்டும்தான் நடத்தினர். வேறு எந்த பட்டி ,தொட்டியில் இலாகி கூட்டம் போட்டார்?அடுத்தவர்கள் கொடுக்கும் காசிலும் தன பெயரை விளம்பர படுத்திக் கொள்ளும் இவரைப்பற்றி உங்களை விட எனக்கு நன்கு தெரியும்.
ததஜ மட்டும்தான் நேர்வழியில் இருக்கிறது. ததஜ பள்ளிகள் மட்டும்தான் ஓறிறைவனை வணங்கும் பள்ளி. இதர பள்ளிகள் அனைத்தம் மஸ்ஜிதுர்ழிரார், மற்றவர்கள் பின்னால் தொழக்கூடாது. ததஜ மேடைகளில் மட்டும்தான் நாங்கள் ஏறுவோம். மற்றவர்களின் மேடைகளில் நாங்கள் ஏறமாட்டோம். வேறு யாரையும் எங்கள் ததஜ மேடையில் ஏற்றமாட்டோம், இப்படி எல்லாம் யாருடைய வாயிலிருந்து வெளிவரும். அப்படியும் நபி என்று கூறிவிடுவாரோ என்றுதான் நாம் எழுதியிருக்கிறோம்.ஃபத்வா கொடுக்கவில்லை.
இதை, அவதூறு கூறுவது நபி வழியா? என்று கேட்டிருக்கிறீர்கள். அவர் மரணிக்கும் வரை அவ்வாறு கூறாவிட்டால் உங்கள் பாவத்தை, பீ.ஜை. மன்னிக்காதவரை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? என்று எழுதியிருக்கிறீர்கள் பக்தியால் புத்தி பேதலித்து. உங்கள் அபிமான பீ.ஜை. இதுவரை எத்தனை பேர் மீது எப்படிப்பட்ட கடுமையான அவதூறுகளைப் பரப்பி இருக்கிறார். வல்லம் மாநாட்டில் “நம்மோடிருந்து தடம் புரண்டவர்கள்” என 65 நபர்களைக் குறிப்பிட்டிருந்தாரே. இதஜ தோன்றியபின் அந்த, எண்ணிக்கை 100 ஐத் தாண்டியிருக்குமே!
நபி என்று கூறிவிடுவாரோ என்று கூறுவது அவதூறு கூறுவது நபி வழியா? என்று கேட்கும் நீங்கள், உங்கள் அபிமான பீ.ஜை. பலரை பெயர் குறிப்பிட்டுத் தடம் புரண்டுவிட்டார்கள் என்று உறுதிப்படுத்தியும், பலரை காஃபிர்-முஷ்ரிக் என்றும் அவர்கள் பின்னால் நின்று தொழுவது கூடாது என்றும் ஃபத்வாவே கொடுக்கிறாரே, அல்லாஹ் மீது ஆணையிட்டுப் பலர் மீது அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகிறாரே? அவரிடம் இவை எல்லாம் அவதூறு; நபிவழியல்ல; 42:21, 49:16படி ஷிர்க்-குஃப்ர் ஏற்படுத்தும் செயல்கள் என்று சொல்லும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பீ.ஜை.யை மன்னிக்காதவரை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? என்று பீ.ஜை.யிடம் கேட்டிருக்கிறீர்களா? நபி என்று கூறிவிடுவாரோ? என்று சந்தேக அடிப்படையில் நாம் கூறுவது பெருங்குற்றம். பீ.ஜை. 65 நபர்களைக் குறிப்பிட்டுத் தடம் புரண்டுவிட்டார்கள் என்று (ஃபத்வா) தீர்ப்பளித்ததோடு, மாநாட்டில் பகிரங்கப்படுத்தியது, 42:21, 49:16ல் அல்லாஹ் கண்டித்துக் கூறுவது உங்களுக்குப் பெருங்குற்றமாகத் தெரியவில்லை. எந்த அளவு பீ.ஜ. பக்தியில் மூழ்கித் தடுமாறுகிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியாது.
அரபி மொழி கற்றவர்களுக்கு மட்டுமே மார்க்கம் சரியாக விளங்கும் அதை நான் நிரூபிப்பேன் என்று எனக்குக் கடிதம் எழுதினாரே இது அவர் புரோகிதர்தான் என்பதற்கு ஆதாரமில்லையா?
இன்று பல புரோகித மதரஸாக்களை ஆரம்பித்து, நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை என்று 1986ல் அந்நஜாத்தில் எழுதியதற்கு முரணாக இன்று பல்ட்டி அடித்து புரோகிதர்களை சப்ளை செய்வது அவர் புரோகிதர் என்பதற்கு ஆதாரமில்லையா?
நபி(ஸல்) அவர்களது காலத்தில் இன்றைய முஸ்லிம்களைவிட கேடுகெட்ட முஸ்லிம்கள் (முனாஃபிக்குகள்) இருந்தார்கள் என்று உங்கள் அபிமான பீ.ஜை.யைப் போல் சுய கருத்துக்களை எழுதவில்லை. குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் கொடுத்தே எழுதி இருந்தோம். அந்த முனாஃபிக்குகள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்று நாம் கூறியதாக எழுதியுள்ளீர்கள். ஆம்! அப்படிக் கூறினோம். ஏன் தெரியுமா? பீ.ஜை.யின் மூடத்தனமான கேள்வியை அவரது பக்தராகிய நீங்கள் அப்படியே வாந்தி எடுத்ததால்தான் அப்படிக் கூறினோம். எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதற்குத்தான் ஆதாரம் கேட்கவேண்டும்; எதையெல்லாம் சாப்பிடலாம் என்பதற்கு ஆதாரம் கேட்பவன் மூடன், எதை எல்லாம் உடுத்தக் கூடாது என்பதற்கு ஆதாரம் கேட்கலாம், எதை எல்லாம் உடுத்தலாம் என்பதற்கு ஆதாரம் கேட்பவன் அறிவிலி. அதேபோல் அன்று நபி(ஸல்) காலத்தில் இணை வைக்கும் நிலை இருந்ததில்லை என்று உங்கள் அபிமான பீ.ஜை. எழுதியதற்கு மறுப்பாக நபி(ஸல்) காலத்தில் கொடிய இணை வைக்கும் முனாஃபிக்குகள் இருந்தார்கள் என்று குர்ஆன் வசனங்களைக் கொண்டு எடுத்துக் காட்டியதை உங்களால் உணர முடியவில்லை.அவர்கள் இமாமத் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.கொடிய முனாபிக்குகள் என்று சுட்டிகாட்டியபின் அவர்கள் எங்ஙனம் இமாமத் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்?சாப்பிடுவதும் உடுத்துவதும் உலக விஷயம்.அதில் எதெல்லாம் கூடாது என்று தான் பார்க்கவேண்டும்.இமாமத் செய்வது மார்க்க விஷயம்.ஆயின் நபி[ஸல்]காலத்தில் முனாபிக்குகள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் இருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டும்.தன்னை பெரிய மார்க்க அறிஞர் நினைத்துகொண்டு மார்க்கத்தில் பீ.ஜே.வை எதிர்க்கவேண்டும் என்பதற்காக உளறி கொட்டாதீர்கள். அந்த அளவு பீ.ஜை. பக்தி உங்களின் மூளையை மழுங்கச் செய்துள்ளது. பீ.ஜை. எழுதியதே வேத வாக்காக(?) உங்களுக்குத் தெரிகிறது. தொழக்கூடாது என்று கூறும் பீ.ஜை.தான் அதற்குரிய ஹதீஸ் ஆதாத்தைக் காட்ட வேண்டும். சுய கருத்தை அல்ல. இந்த அற்பமான அறிவும் உங்களுக்கு இல்லை என்பதை நீங்களே வெளிப்படுத்துகிறீர்கள்.
நபி(ஸல்) காலத்தில் இணை வைக்கும் முனாஃபிக்குகள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தது குர்ஆனைக் கொண்டு (2:8-20) உறுதிப்படுகிறது. அப்படியானால் அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று தெளிவுபடுத்தக் கடமைப்பட்ட நபி(ஸல்) அப்படித் தெளிவுபடுத்தத் தவறிவிட்டார்கள். ததஜ மத்ஹபு நவீன இமாம் தான் அப்படியொரு சட்டம் சொல்லி தெளிவுபடுத்த வேண்டும் என்று எண்ணும் நீங்கள் எந்த அளவு அறியாமையில் இருக்கிறீர்கள் என்பதைச் சிந்திக்கவும்.அப்படி தெளிவுபடுத்தப்பட்டவர்கள் எந்த காரியங்களிலாவது முன்னிலை படுத்தியதற்கு ஆதாரம்  உண்டா?
உங்கள் அபிமான பீ.ஜை. சொல்லுவது போல், நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம், நாங்கள் சொல்வதுதான் நேர்வழி என்று 1986லிருந்து இன்றுவரை எப்போதாவது சொல்லி இருக்கிறோமா? ஒருபோதும் சொன்னதில்லையே! அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதுதான் நேர்வழி. அந்நஜாத்தில் வருவதை குர்ஆன், ஹதீஸில் பார்த்து விளங்கிச் செயல்படுங்கள்; அந்நஜாத்தில் வருவதை வேதவாக்காக(?) எடுக்காதீர்கள். அந்நஜாத்தை ஒருபோதும் தக்லீது செய்யாதீர்கள் என்றல்லவா தொடர்ந்து எழுதி வருகிறோம். “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்பது பேச்சில் மட்டுமல்ல; அந்நஜாத்திலும் அந்தக் கருத்தையே எழுதுகிறோம். அதுவும் எங்கள் சுயவிருப்பப்படி அல்ல. அல்லாஹ் அல்குர்ஆன் 25:63, 28:55, 39:64 இறைக் கட்டளைக்கு அடிபணிந்தே அவ்வாறு கூறுகிறோம்.
சொந்த உபயோகத்திற்காக உள்ள கட்டிடமாக இருந்தால் மட்டுமே ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. வாடகை வருமானம் நோக்கமாக இருந்தால், வருமானம் கருதி கடையில் முதலீடு செய்யும் பொருள்களுக்கு ஒரு வருடம் பூர்த்தியான பின்னர் அப்போதிருக்கும் பொருள்களின் மதிப்பிற்கும், அந்த வருடம் வந்த வருமானத்தில் செலவுகள் போக எஞ்சியிருக்கும் பணத்திற்கும் வருடா வருடம் ஜகாத் கடமையாவது போல், வருமானத்தை நோக்கமாகக் கொண்ட கட்டிடங்களுக்கும் வருடா வருடம் ஜகாத் கடமை என்பதையே குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் பார்க்க முடிகிறது. இதுபற்றி அந்நஜாத்தில் தெளிவாக ஆதாரங்களுடன் எழுதியுள்ளோம்.
வரும் வாடகை குறைவாக இருக்கிறது. செலவுக்கே போதவில்லை. இந்த நிலையில் எப்படி வருடாவருடம் ஜகாத் கொடுப்பது என்ற கேள்விக்கு பதிலாக ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும். வருடா வருடம் கொடுக்கத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளிப்பதற்கு மனிதர்களில் யாரும் எந்த அல்லாமாவும் அதிகாரம் பெறமாட்டார். 42:21 எச்சரிக்கைக்கு முரணாக நாம் ஒருபோதும் தீர்ப்பு அளிக்க மாட்டோம்.
வீம்பர் கேட்ட கேள்வி என சகோ. பழனி உமரின் கேள்வியை விமர்சித்து விட்டு அதைவிட வீம்புத்தனமாக கேள்விகளை நீங்கள் கேட்டுள்ளதால் இந்தப் பதில் தரப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் அந்நஜாத்திலும், வலைதளத்திலும் இடம் பெறச் செய்ய எமக்கு மறுப்பு இல்லை. கேள்விகள் தொடரும் என்றும் எழுதியுள்ளீர்கள். தொடருங்கள். பதில் அளிக்கிறோம்.
வஸ்ஸலாம்.
 சகோ. இப்றாஹீம் வேண்டுகோளுக்கு இணங்க இது ஏற்றப்படுகிறது.
Comments Off
Comments are closed.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.