திங்கள், 20 செப்டம்பர், 2010

முனவ்விருள்  சொன்னது {மேலும்  பதில்கள் baranikaraipannaiyar  ப்ளாக்கரில் }
1,நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.2,ஒரு செய்தியின் உண்மை நிலை அறிய இரு தரப்பு கருத்துக்களையும் ஆய்வு செய்தால் உண்மையை ஓரளவுக்கு உணர முடியும்.இந்த வாசகங்களை  படிக்கவும் ,கேட்கவும்  நன்றாக  இருக்கிறது .ஆனால்  உண்மையில்  எத்தனை    விஷயத்தில்  மத்கப்  (உங்கள்  பாஷையில் )ஆலிம்களின்  கருத்தை  ஏற்றுக்கொண்டு ,இந்த (மார்க்க]விஷயத்தில்  PJ சொல்வது  தவறு  என்று  நம்புகிறீர்கள்?ஒரு  உதாரணம்  கூற  முடியுமா ? வார்த்தை  ஜாலம்  வேண்டாம் .உண்மையை  கூறுங்கள் .இரண்டு  தரப்பு  கருத்தையும்  கேட்ட  பின்  எது  உண்மை  என்று  எந்த  அதரத்தை , புத்தகத்தை  படித்து  தெரிந்து  கொள்கிறீர்கள் ? மத்கப்  ஆலிம்  கூறும்  ஒரு  ஹதீதை , PJ "லயீப் "என்று  சொல்லிவிட்டால் ,இந்த  அறிவ்ப்பாளர்  பலஹீனமானவர்  என்று  PJ சொல்லிவிட்டால்  அவர்  உண்மையில்  அப்படித்தானா ? அந்த  ஹதீது  "லயீப் "தானா ?என்று  எந்த  கிதாபை  பார்த்து  தெரிந்து  கொள்கிறீர்கள்?   இது  வரை  PJ சொன்னதில்  இதை  ஏற்றுக்கொள்ள  முடியாது  என்று  நீங்கள்  முடிவெடுத்த  ஒரு  விஷயத்தை  ஆதாரத்துடன்  கூறுங்கள் . நீங்கள்  நியாய  வாதிதான்  என்பதை  ஏற்று  கொள்ள  வசதியாக  இருக்கும் நான்  குர் ஆனின் குரல் ,ரஹ்மத்,சிராஜ்,ஜமாத்துல் உலாமா ,மறுமலர்ச்சி,நர்கிஸ் போன்ற இதழ்களையே  படித்து வந்தேன்.அதன் பின் வெளிவந்த அல்ஜன்னத்,நஜாத்,புரட்சி மின்னல் போன்ற இதழ்களையும் படித்துவருகிறேன்.ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறினால் அது ஒரே தலாக்ககத்தான் கருதப்படும் என்று பீ.ஜே. எழுதியதை அறிந்த சமயத்தில் கு.குரலில்,ஒரு உத்தமபாளையத்தை சேர்ந்த உமர் என்ற டாகடர் ,நான் எனது மனைவியை கோபத்தில் ஒரே சமயத்தில்  மூன்று தலாக் கூறிவிட்டேன். ஆனால் அது தவறு என உணர்ந்து ஆவலுடன் வாழ விரும்புகிறேன்.நான் வாழுவது கூடுமா? என்று கேள்விகேட்டார்[1989octobar இதழ்]என்று நினைக்கிறேன்,. அதற்க்கு அந்த முப்தி மூன்றே எழுத்துக்களில் பதில் சொல்லுகிறார்,கூ டா து  என்று. ஒருஆதாரமும் காட்டப்படவில்லை. நான் அந்த கு.குரலுக்கு எழுதி கேட்டேன். எந்த பதிலும் இல்லை. அதில் வேறொரு கட்டுரைத் தொடர் எழுதிக் கொண்டிருந்த முஹம்மது கான் பாகவி ,அப்போது வேலூர் பாகியத்துஸ் சாலிஹாத் மதரசாவில் பேராசிரியராக இருந்தார்.அவரிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன்.அவர் உமர்[ரலி] காலத்தில் உள்ள நிகழ்வுவைக்கூறி ஒரே சமயத்தில் முத்தலாக் கூடும் என பதில் எழுதினார்.பின் இது பற்றி பீ.ஜே. விடம் விளக்கம் கேட்டேன். அவர் பாத்திமா பிந்து கைஸ் [ரலி] அவர்கள் தனது கணவர் ஒரே சமயத்தில் முத்தலாக் கூறியதை பற்றி  நபி[ஸல்] அவர்களிடம் கேட்டார்கள். நபி [ஸல்] அவர்கள் ஒரே சமயத்தில்  முத்தலாக் கூறினாலும் அது ஒரே தலாக் ஆகவே கருதப்படும்,என்ற ஹதீதை எடுத்து காட்டியதுடன் கான் பாக்கவி கூறிய உமர்[ரலி] சம்பவம் லயிப் என்பதற்கும் ஆதாரங்களை எடுத்து வைத்தார். இவற்றினை கான் பாகவியிடம் அனுப்பி விளக்கம் கேட்டேன். அவர்  கு குரலில் இதற்க்கு ஒரு கட்டுரை எழுதுகிறேன் அதை படித்து பார்த்துகொள்ளுங்கள்.என்று பதில் அனுப்பினார்.அந்த கட்டுரையிலும் அறிவிப்பாளர் வரிசையைத்தான்  நியயாப்படுத்தினார் .நபி[ஸல்] காலத்தில் அவ்வாறு இருந்தாலும் உமர்[ரலி] மாற்றப்பட்டதை ஏற்கவேண்டும் என்றே எழுதினார்.முனவ்விருள் அவர்களே,நபி [ஸல்] காலத்து  ஆதாரம் தெளிவாகவும்  குரான் வசனத்திற்கு பக்க பலமாகவும் இருக்கும்போது குர் ஆன் க்கும் ஹதீதுக்கும் முரணாக ,அதுவும் சந்தேகத்திற்குரிய  ஒரு சம்பவத்தை ஆதாரம் காட்டி ஒரு தம்பதியை பிரிப்பது தான் மார்க்கமா? இதே சம்பவம் நமதூரிலும் நடந்து அவரிடம் மீண்டும் வாழ வழி இருக்கிறது  என்று கூறி வற்புறுத்தினோம்.இது விசயமாக பத்வா வாங்கித் தருகிறோம் என்றோம், ஆனால் அவர் வேறு யாரின் ஆலோசனைக் கேட்டு கு.குரலுக்கு மீண்டும் சேர்ந்து வாழ வழி உள்ளதா என்று கேட்டபோது,அதேபோன்றே கூடாது என்ற பதில்தான்.இந்த விஷயம் இப்போதைய பள்ளிவாசல் துணை தலைவருக்கும் தெரியும்.        2 அடுத்து ஒரு சின்ன விஷயம்.டி.ஜே.எம். சலாவுத்தீன் மவ்லவி  நமதூரில் ஒரு கல்யாண வீட்டில் சொற்பொழிவு பண்ணும்போது  'யூசுப் -சுலைகா" திருமணம் நடந்தது என்றும் அவர்களைப்போல் வாழ  துவா செய்யலாம் .என்றும் பேசினார். அவர் பள்ளிவாசலுக்கு தொழ வந்த  சமயம் நானும் சலிமும் டி.ஜே.எம்.இடம் யூசுப்-சுலைகா வுக்கு ஆதாரம் கேட்டோம் அப்போது அவர் "வந்த இடத்தில் போன இடத்தில் எல்லாம் சொல்லமுடியாது நீங்கள் திருநெல்வேலியில் தானே இருக்கிரரீகள்.வீ.ம.பள்ளிக்கு எதிரில் உள்ள ரகீம் பிரஸ்க்கு வாருங்கள் ஆதாரம் தருகிறேன் "என்றார். அப்போது அவருடன் எஸ்.ஏ,காலேஜ் பள்ளிவாசல் இமாம் சேக்கத்து மவ்லவியும் கபூர் மிஸ்பாகியும் [அப்போது அவர் மத்ஹபில் ]உடன் இருந்தனர்.  பின்னர் டி.ஜே.எம். நான் நிருபித்தால் என்ன செய்வீர்கள் ?என்று கேட்டார். நீங்கள் என்னசொன்னாலும் கட்டுபடுகிறோம் என்றோம்.  அதன்பின் நெல்லையில்  அவர் சொன்ன ரகீம் பிரஸ்க்கு இரண்டு நாட்கள் அலைய வைத்தார். மூன்றாவது நாளில் என்னிடம் இது விசயமாக பேசுவதற்கு நீங்கள் ஒரு ஆள் மட்டும்தான் வரவேண்டும் என்றார்.மேலும் ஒரு தலைவரையும் ,ஒரு நடுவரையும் அவர்தான் ஏற்பாடு செய்வேன் என்றார் .  அவர்கள் யாரென்று நாளைக்கு ரகீம் பிரசில் வந்து கேட்டு கொள்ளுங்கள்.என்றார். அனைத்திற்கும் சம்மதித்துவிட்டு மறுநாள் ரகீம் பிரசில் கேட்டால் தலைவராக கோட்டூர் சிந்தாவும் நடுவராக ஹம்சா தங்களும் வருவார்கள் .நீங்கள் வரத்தயாரா? என்று கேட்டார். சிந்தாவும் ஹம்சா தங்களும்  எப்படிப்பட்டவர்கள்  உங்களுக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.ஒரு மார்க்க அறிஞரின் ரவுடியிசத்தை பார்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு மில்லத் இஸ்மாயில் [1991 ] இல் வைத்து மிரட்டினார்.                                                                                                                 3.ரஹ்மத் முன்னால் ஆசிரியர் கலீலுர் ரஹ்மான் ரியாஜி அவர் கட்கும் பீ.ஜே வுக்கும் மத்ஹப் குப்பைகளை பற்றி ரஹ்மத்-அல் ஜன்னத் வாயிலாக விவாதம் நடந்தது.88,89 ,ஆம் ஆண்டுகளின் ரஹ்மத் -ஜன்னத் இதழ்களை படித்தாலே பல உண்மைகளை அறியமுடியும்.அபுஹனிபா இமாமுக்கு கிதாபுகள் இருப்பதாக வாதாடிய அவரால் அதற்கான ஆதாரம் காட்டமுடியவில்லை.அவர் மரணமடையும் தருவாயில் கடைசியாக வந்த ரஹ்மத்தில் [89may or90may] அபுஹனிபாவுடைய கிதாபுகள் அனைத்தும் அவரது மாணவர் அபுயுசுப்  பெயராலே விளங்கின என்று எழுதுயுள்ளார். மேலும் இப்போது மதரசாக்களில் நாற்பெரும் இமாம்களின் கிதாபுகள் கற்று கொடுப்பதில்லை.அரபிகள் அல்லாத  அஜமிகளின் கிதாபுகள்தான் கற்று கொடுக்கப்படுகிறது.இது கண்டிக்கத்தக்கது. என்று கூறி முடித்துள்ளார்.அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானகா|                                                                                                                                               4.2006 ஆம் ஆண்டில் நடந்த மீலாது விழா.இதில் சுன்னத் ஜமாஅத் என்ற தலைப்பில் மவ்லவி முஹம்மது முஸ்தபா ரசாதி பேசினார்.ஆனால் சுன்னத் ஜமாஅத் பற்றி பேசவில்லை.அவர் பீ.ஜே. என்ற தனி நபர் பற்றி ,அவர் விவாதத்துக்கு வராமல் ஓடிவிட்டதாக பேசினார். நாங்கள் கேள்விகள தொகுத்து கொடுத்த நோட்டிஸ்க்கு எந்த பதிலும் சொல்லவிலலை. கூட்டமுடிவில் அவரிடம் நாங்கள் பீ.ஜெயை அழைத்து வருகிறோம் நீங்கள் வருவதற்கு எழுதி தாருங்கள்.என்று,கேட்டோம்.அவர்,ஏற்கனவே கூறிய நிபந்தனைகளின் அடிப்படையில் பீ.ஜே.வுடன் விவாதிக்கத் தயார் என்று எழுதி கொடுத்தார்.நாங்கள் அந்த நிபந்தனை பற்றி கேட்டோம்.அவர் இதுதான் சத்தியம் என்ற புத்தகத்தையும் சத்தியம்வந்துவிட்டது என்ற புத்தகத்தையும் கொடுத்தார்.அதிலுள்ள நிபந்தனைகள் பற்றியும் அதிலுள்ள விசயங்கள் பற்றியும் அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன்.அதற்க்கு அவர் பதில் எழுதாமல் அவரது மாத இதழின் துணை ஆசிரியர் மீரான் முஹைதீன் ரஷாதி என்பவர் பதில் எழுதினார். அதன் நகலை ஜாபர் ஆலிமுக்கும் அனுப்பிவைத்தார். ஊரில் ஜாபர் ஆலிமை காண நேரிடுகையில் கடிதம் வந்ததா படித்தீர்களா?என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார். நானும் படித்தேன் .விரைவில் பதில் தருகிறேன் ,என்று கூறினேன்.மீரான் ரசாதிககு பதில் அனுப்பியதோடு ஜாபர் ஆலிமுக்கும் நகல் அனுப்பினேன்.அவரை மீண்டும் காணும்போது எனது பதிலை படித்தீகளா? என்று கேட்டபோது ,எனக்கு வேறு வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்.[என்னை மீலாது விழாவுக்கு அழைத்ததும் இவர்தான்] அந்த கடிதத்திற்கு இது வரை பதில் இல்லை.பலமுறை போனில் கேட்டும் பதில் தருகிறேன் என்று கூறினாரே ஒழிய பதில் தரவில்லை. ஒருமுறை முஸ்தபா ரஷாதி கோபமாக பதில் சொன்னார்.உங்களுக்கு பதில் தரவேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்.அதன் பின்னர் நமதூர் ஆலிம்சாக்கள் குழு தடம் புரண்ட ஹாமித் பக்ரியை அழைத்து வந்து எங்களுக்கு பதில் சொல்லப்போவதாக கூட்டம் நடத்தினர்.அந்த கூட்டத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்லப்படும் என்றும் விவாதத்திற்கு வரத்த் தயார் என்றும் முதலில் பேசிய மவ்லவி .கோசு.சாகுல் ஹமித் பேசினார். ஆனால் ஹாமித் பக்றியோ இங்கு யாரும் கேள்விகள் அனுப்ப வேண்டாம்.மேலும் விவாதம் என்பது அருவருக்கத்தக்கது எனக்  கூறிவிட்டார்.கூட்ட இறுதியில் ஜாபர் ஆலிம் ,பீ.ஜே விவாதத்துக்கு வராமல் ஓடிவிட்டதாக கூறினார்.நான் அந்தகூட்டத்தில் உடன் பதில் சொன்னேன். விவாதத்திற்கு தேவை அற்ற முறையில் நிபந்தனை வைத்துள்ளதை புரியும்வண்ணம் ,அதாவது,அவருடைய நிபந்தனை எப்படி இருக்கிறது என்றால்,கிரிக்கெட்டில் ஒரு டீம் ஆடும்போது ஸ்டம்ப்ஸ் வைக்க வேண்டும் .மற்றொரு டீம் ஆடும்போது ஸ்டம்ப்ஸ் வைக்கக்கூடாது  என்றால் சரியாக யுருக்குமா?என்பதை பதிலாக கூறிக்கொண்டு இருக்கும்போதே மைக்கை அனத்துவிட்டனர்.                                                                                                             அதன்பிறகும் ஜாபர் ஆலிம் ,பீ.ஜே கூட்டத்துக்கு வராமல் ஓடிவிட்டார் என்று கூறி வந்தார். ஒருநாள் அவரை சந்தித்து  யார் ஓடினார்? என்று கேட்டபோது  இசாவுக்கு பிறகு பேசலாம் என்று கூறியவாறு இசாவிர்க்கு பிறகு பள்ளிவாசல் முன்பு பேசி விளக்கம் கேட்டோம் பீ.ஜெமீது அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தோம். இது போக இன்னும் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறினார். கொண்டுவாருங்கள் பதில் தருகிறோம் என்று கூறினோம் இதுவரை பதில் இல்லை. முனவ்விருள் அவர்களே நீங்களாவது ஜாபரை அழைத்து வரத்தயாரா? மீரான் ரசாதி கடிதமும் எனது பதில் கடிதமும் வெளியிடுகிறேன் .பார்த்து சொல்லுங்கள்.    

3 கருத்துகள்:

  1. சகோ முனவ்விருள் அவர்களே
    இரண்டு நபர்களால் தமிழகத்தில் துவக்கப்பட்ட ஏகத்துவ பிரச்சாரம் (பி.ஜே &பி.எஸ் .அலாவுதீன் ) இன்று
    லட்சகணக்கான மக்களை சென்றடைந்திருக்கிறது என்றால் இரு தரப்பு ஆலிம்களின் கருத்துகளையும் மக்கள்
    கேட்டு சிந்தித்த காரணத்தினால் தான்.இது சகோ.இப்ராகிம் அவர்களுக்கு மட்டும் அல்ல மத்ஹபில் இருந்து மீண்ட
    அணைத்து மக்களுக்கும் பொருந்தும் .முனவ்விருள் அவர்களே ,சகோ :பி ஜே .சொன்னதை கேட்டு கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் குர் ஆணையும் ஹதீதையும் படித்து சரி பார்த்து மக்கள் நம்புகின்ற காரணத்தினால்தான் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தவ்ஹீத் ஜமாஅத் வளர்ந்து கொண்டிருக்கிறது .ஆனால் உங்களை போன்றோர் முன்னோர்களை பின்பற்றுகிறோம் என்ற பெயரில் எதனையும் சிந்திக்காமல் இன்னமும் மத்ஹப் இருளிலே
    மூழ்கி கிடக்கின்றீர்கள் .மத்ஹபுக்கு எதிராக பி. ஜே .வைக்க கூடிய ஆதாரங்களையும் மத்ஹபுக்கு ஆதரவாக
    சுன்னத் ஜமாஅத் வைக்க கூடிய ஆத்ராங்களையும் நீங்கள் நடு நிலையோடு சிந்தித்து பார்த்தால் சத்தியம் எது என்பதை உங்களால் விளங்கி கொள்ள முடியும் .
    2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
    rafick
    from abuthabi
    visit my blog:www.icadtntj.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. மத்ஹப் நூல்களில் உள்ள பொய்களில் சில...

    சஹாபாக்களுக்கு நிகராம் இந்த அபு ஹனீபா!!

    அவர் (அபூ ஹனீஃபா இமாம்) அபூ பக்கர் (ர ) அவர்களைப் போன்றவராவார் (நூல் : துர்ருல் முஹ்தார் பா : 1 ப : 57 )

    ரசூல் (ஸல்) அவர்களுக்கும் இல்லாத தனி சிறப்பா???

    அபூ ஹனீஃபா இமாம் அவர்கள் இஷாவினுடைய ஒலுவுடன் 40 வருடங்கள் ஃபஜ்ரைத் தொழுதுள்ளார். 55 ஹஜ் செய்துள்ளார். நூறுதடவை அல்லாஹ்வை கனவில் பார்த்துள்ளார்.(துர்ருல் முஹ்தார் பா : 1 ப : 51 )

    அட்வான்ஸ் மன்னிப்பு !

    அல்லாஹ் கூறினானாம் : அபூ ஹனீஃபாவே நீ நம்மை அறிய வேண்டிய முறைப்படி அறிந்து விட்டாய். அழகிய முறையில் நமக்கு பணிவிடை செய்து விட்டாய். எனவே உம்மையும், கியாமத் நாள்வரை உம்முடைய மத்ஹபில் உம்மை பின்பற்றியோரையும் மன்னித்து விட்டோம் . முஸாஃபிர் பின் கிராம் என்பவர் கூறுகிறார் யார் தனக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தயில் அபூ ஹனீஃபாவை ஆக்குகிறாரோ அவர் எவ்வித கவலையும் இல்லாமல் ஈடேற்றம் பெறுவார் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 52)

    அவரை கண்டு ரசூல் (ஸல்) அவர்களே பெருமை கொண்டார்களாம் !!

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதம் என்மூலம் பெருமை கொண்டார். நான் என்னுடைய உம்மத்தில் ஒருவரைக் கொண்டு பெருமை கொள்கிறேன். அவர் பெயர் நுஃமான். அவருடைய பட்டப் பெயர் அபூ ஹனீஃபா. அவர் என்சமுதாயத்தின் விளக்காவார்.

    அவருக்கு நிகர் யாருமே இல்லையாம் !!

    மொத்தத்தில் பற்றற்ற வாழ்க்கையிலும் பேணுத லும், வணக்கத்திலும் , கல்வியிலும் விளக்கத்திலும் அபூ ஹனீஃபாவிற்கு நிகரானவர் யாருமில்லை (துர்ருல் முஹதார் பா : 1 ப : 61)

    ஈசா நபி இறுதியில் தீர்ப்பளிப்பதே இவருடைய சட்டத்தின் படி தானாம் !

    அபூ ஹனீஃபாவின் காலம் முதல், இன்றைய காலம் வரை அல்லாஹ் அவரை பின்பற்றக் கூடியவர்களுக்கும், அவருடைய தோழர்களுக்கும் ஞானத்தை வழங்கிவிட்டான்.. அவருடைய மத்ஹபைக் கொண்டுதான் ஈஸா (அலை) அவர்கள் தீர்ப்பளிப்பார்கள் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 56 )

    நபியின் அந்தஸ்தா?

    ஸஹ்ல் பின் அப்தில்லாஹ் என்பவர் வழியாக ஜ‎ýர்ஜானி அவர்கள் தன்னுடைய நூ ல் அறிவித்திருக்கிறார் : என்னுடைய உம்மத்தில் அபூ ஹனீஃபாவைப் போல் மூஸா , ஈஸா இருந்திருந்தால் அவர்கள் யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்க மாட்டாரர்கள் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 53 )

    ஒளு செய்வதில் வினோத சட்டம் !!

    (உளுவில்) அவன் ஒரு உறுப்பை கழுகவில்லை என்பதை அறிந்தால், அது எது என்று குறிப்பாக்குவதில் சந்தேகம் கொண்டால் தன்னுடைய இடது காலை கழுக வேண்டும். ஏனென்றால் இதுதான் அவனுடைய கடைசி செயல் ஆகும் (துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 150

    பாங்கா தேசிய கீதமா?

    பாங்கு சப்தத்ததைக் கேட்கும் போது எழுந்து நிற்பது சிறப்பிற்குரியதாகும் (துர்ருல் முஹ்தார் : பா : 1 பக் : 397 )

    ஆபாசக்களஞ்சியம் !

    ஆசையில்லாத சிறிய குழந்தைகளை உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை. இன்னும் உளூவும் முறியாது ( ரத்துல் முஹ்தார் பா : 1 பக் : 146

    மதஹப் என்னும் அசிங்கத்தை நம்பி நம் ஈமானை இழக்க வேண்டாம் சகோதரர்களே, குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மட்டுமே மார்க்கம்! இவை இரண்டுமே நம்மை சொர்க்கத்தில் கொண்டு சென்று சேர்க்கும்.
    இவை அல்லாத அனைத்துமே வழிகேடு என்பதை நினைவில் கொள்வோம், வெற்றி பெறுவோம்..!!

    பதிலளிநீக்கு
  3. மத்ஹப் நூல்களில் உள்ள பொய்களில் சில...

    visit.www.icadtntj.blogspot.com

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.