Oct 4
| ||||
பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,
எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்
ஆறாம்பண்ணை .
அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும்
பீஜே அவர்களுடன் நீங்கள் நடத்திய இரண்டு நாள் விவாதத்தில் கலந்து கொண்டேன்.அவ்விவாதத்தில் இரண்டு வருடங்களாக போராடி அழைத்து இன்று இங்கு அமர வைத்துள்ளேன் .நான் கேட்பதற்கு பதில் இல்லாமல் மற்றொன்றை விவாதித்திக் கொண்டிருப்பது சரியா என்ற முறையில் ஆதங்கப்பட்டீர்கள்.லாக்கின்ன,லி தஸ்லூவ ,லி யப்லூவ ,வ நப்லூவ போன்ற சொற்களில் உள்ள பிழைகளை கூறுமாறு வற்புறுத்தி வந்தீர்கள்.
நீங்கள் இரண்டு வருடங்களாக போராடியது அவர்களிடமிருந்து பிழைகளை தெரிந்து அதன் பிறகு நிருபிக்காவா?
பீஜே அவர்கள் 19 பிழைகளை தனது தர்ஜுமாவில் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.இரண்டு வருடங்களாக அழைத்தீர்கள் என்றால் அதற்கு முன்பே அப்பிழைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறீர்கள் என்று பொருள்.பீஜே வுக்கே பாடம் எடுப்பதாக அலட்டிக் கொண்ட நீங்கள் ,பலவருடங்களாக ஆய்வு செய்த பிழைகள் பற்றி மக்கள் மத்தியில் போட்டு உடைக்காமல் ,அவர்களிடமே அதிலுள்ள பிழைகளை கூறுங்கள் என்று கெஞ்சி கொண்டிருந்தது எங்ஙனம் சரியாகும்?
நீங்கள் இரண்டு வருட போராட்டத்திற்கு பின்னர் அழைத்து வரப்பட்டவர்களிடம் டாஸ் கூட போட விடாமல் ,நீங்களாகவே முதலில் 19 பிழைகளையும் மக்கள் மத்தியில் வைத்து அவற்றில் பிழைகள் இல்லை என்ற உங்களது வாதங்களை நிறுவியிருக்க வேண்டும் .அதன் பிறகு அவர்கள் வைத்த நுஞ்சி என்ற சொல்லிலும் பிழைகள் இல்லை என்று நிருபித்திருக்க வேண்டும்.ஆனால் ஆரம்பத்தில் தாங்கள் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக அவர்கள் நுஞ்சி பற்றி பேசியபொழுது அதற்கு விளக்கம் இல்லாமல் நஞ்சி போன உங்களுக்கு நீங்கள் வேண்டியவாறு லாக்கின்ன என்ற சொல்லில் உள்ள பிழை பற்றி கடைசியாக கூறினார்கள் .உங்களுக்கு பலவருட ஆய்வு போதாது என்று இரவில் கூடுதலாக நேரம் தந்த பிறகும் மறுநாளும் உங்களால லாகின்ன வில் பிழை இலை என்பதை நிறுவ முடியவில்லை.முட்டுக்கட்டைகளை வைத்தே வீடுகட்ட முயற்சித்தீர்கள்.வீடு கட்டும் வேளையில் முட்டுக்கட்டை கொடுத்து பின்னர் எடுத்து விடுவார்கள் ஆனால் தங்களோ முட்டுகட்டைகளை வைத்தே வீடுகட்ட முயல்வது சரியா? அடுத்து பீஜே தரப்பினர் நப்லூவ என்ற சொல்லை சொன்னதும் அங்கிருந்து லாகின்ன அப்புறம் பார்ப்போம் என்று நப்லூவ வுக்கு வந்தீர்கள் .அதோடு லாகின்ன முடிந்தது.திரும்ப லாகின்ன பற்றி பேசவே இல்லை .நுஞ்சி பற்றி பேசவில்லை.அப்படியெனில் முதலில் வைக்கப்பட்ட இரு பிழைகளும் பீஜே வால் பிழைகள் என்று நிருபிக்கப்பட்டது என்பதே விவாதம் வெளிப்படுத்தும் உண்மையை உங்களால் மறுக்க முடியுமா?
அடுத்து முதல் கட்டமாக யூதர்கள் தான் குர்ஆனில் எழுத்து பிழை உள்ளதாகவும் அதன் பின்னர் பீஜெதான் அவ்வாறு கூறியிருப்பதாகவும் வாதம் வைத்துள்ளீர்கள்.அவ்வாதம் தவறு என்று பாக்கியான் முதல் ஆயிசா [ரலி] அவர்கள் வரை கூறியுள்ள கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டு உங்கள் வாதம் தகர்க்கப்பட்டது.அதை ஒப்புக் கொண்டிருப்பதுதான் நாகரிகம் .ஒப்புக் கொண்டதை பகிரங்கமாக சொல்லாவிட்டாலும் மவுனியாக இருந்து இருக்க வேண்டும். ஆனால் ஆரம்பம் முதல் கடைசி வரை சஹாபாக்கள் மீது அபாண்டம் சொல்லிவிட்டார்கள் என்று அபாண்டமாக முழங்கியதும் உங்களது மனசாட்சி ஏற்றுக் கொள்கிறதா?
Oct 14
| ||||
பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,,,
எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,
ஆறாம்பண்ணை .
அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் .
நான் உங்களுக்கு முன்பு மெயில அனுப்பி போனிலும் விளக்கம் கேட்டேன்.நீங்கள் அதற்கு குர்ஆனை பார்த்து வாசிக்க சரளமாக தெரியுமா?வாசிக்க தெரியாதவரா? இல்லை ஆலிமா ? என்று கேட்டீர்கள்.உங்கள் தரப்பில் பார்வையாளராக அனுமதித்தவர்களை இந்த கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில்தான் உங்களது வாதங்களை கேட்க அனுமதி கொடுத்தீர்களா?
இல்லையெனில் உங்களது பில்டப் வார்த்தைகளை கேட்டு கை தட்ட அழைத்து வந்தீர்களா?
நீங்கள் நான் கேட்டதற்கு எனக்கு விளக்கம் அளித்துவிட்டு அதிலிருந்து கேள்விகள் கேட்டிருந்தால் எனக்கு புரிந்துள்ளதா ?இல்லையா என்பது தெரிந்துவிடும் .அதற்கு தாங்கள் தயங்குவது ஏன்?எனக்கு அரபு தெரியாது .ஆனால் அரபுமொழியில் பீஜே பிழை என்று கூறியுள்ளதை அவைகள் பிழை இல்லை என்று விளக்கம் அளித்தால் அதை புரிய முடியும் .இது போன்று உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியாவிட்டாலும் சொல் என்பதற்கும் வார்த்தை என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் அச்சொற்களை பயன்படுத்தினாலும் அதை நான் விளக்கினால் உங்களுக்கு புரியும்.
னுஞ்சி என்ற சொல்லில் உள்ள பிழையை உங்களால் மறுக்க முடியவில்லை .இரண்டு நூன் வந்தால் ஒரு நூனை விட்டுவிட்டு எழுதுவது பழையகாலத்து நடைமுறை என்றால் நுன்சிய என்ற சொல்லிலும் நனசஹு என்ற சொல்லிலும் இரண்டு நூன்கள் வருகிறதே என்பதற்கு அது கிராதுக்காக அங்ஙனம் எழுதினார்கள்என்று வாதித்தீர்கள்
உங்களது வாதப்படியே நசஹு, நுசிய என்று எழுதி அதன் பின்னர் நூன் ஐ சிறிதாக போட்டிருக்கலாமே.
மேலும் நீங்கள் பழையகாலத்து எழுத்து சட்டம் என்று சொல்லிவிட்ட அதற்கு ஆதாரமாக தகவல் தரும் நூலை கூறினீர்கள் சட்டம் என்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று இருக்க வேண்டும் .அப்படி சொல்லாமல் இங்ஙனம் எழுதப் பட்டுள்ளது என்று தகவல் ஆக தருகிறார்,இமாம் மாலிக் அவர்களும் எங்ஙனம் எழுதப் பட்டுள்ளதோ அவ்வாறே எழுதுங்கள் என்கிறார்.இங்கு மாலிக் அவைகள் பிழை இல்லை என்று மறுக்கவில்லை .
லில்லதி என்ற சொல்லும் ஒரு இடத்தில் மட்டும் அளிப் சேர்க்கப் பட்டு எழுதப்பட்டிருப்பதை அது பிழை தான் என்பதற்கு ஆதாரம் என்பதை நான்கு இடத்தில் அவ்வாறு இருக்கிறது என்ற உங்களது வாதம் மிகத் தெளிவாக நிருபிக்கிறது
குர்ஆனில் எழுத்து பிழைகள் இருக்கிறது என்பதை இவர்கள் ஆய்வு செய்யாமல் ஈ அடிச்சான் காப்பியாக எழுதியுள்ளதாக ஜமாலி கடைசியில் கூறுகிறார்.யூதர்களை தவிர வேறு யாரும் பிழைஉள்ளது என்று யாரும் சொல்லவில்லை என்றால் யாரைப்பார்த்து காப்பி அடித்தார்கள் ?
முன்பக்கம் பின் பக்கம் தாருங்கள் என்று சொன்னவர் நான்கு பக்கங்கள் கொடுத்த பின்னரும் ஏன் வாசிக்கவில்லை?
786 ஐ கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டே 786 விமர்சனத்திற்கு சிரிக்கும் அளவில் நான் இல்லை.ஆதலின் நீங்கள் விளக்கம் தருவீர்களானால் அதில மிக தெளிவாக புரிந்து கொள்ள எனக்கு இறைவன் அறிவைத் தந்திருக்கிறான் .ஏற்கனவே நீங்கள் கிளிப் பிள்ளைக்கே பாடம் சொல்லிகொடுக்கும் திறனுடையவர்.அதையாவது நிருபியுங்கள்
நன்றிகள் . அன்புடன் ,
எஸ்.இப்ராஹீம்
Oct 16
| ||||
பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம்,
எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத்
ஆறாம்பண்ணை .
அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .
நான் உங்களுக்கு இதுவரை இரண்டு மெயில்கள் அனுப்புயுள்ளேன் தங்களிடம் எந்த பதிலும் இல்லை ,ஏற்கனவே போனில் பேசிய பொழுது நாங்கள் சிடி வெளியிட்ட பிறகு விளக்கம் தருவதாக கூறினீர்கள் .நீங்கள் வெளியிட்டுவிட்டீர்களா? பீஜே அவர்கள் ஆன்லைன் பீஜே வில் ஒரு வாரத்திகு முன்பே வெளியிட்டு உள்ளார்கள் .அதில் ஏதும் கூடுதல் குறைவு உள்ளதா? அவ்வாறெனின் நீங்கள் அதை வைத்தே விளக்கம் தரலாமே ,கிளிபிள்ளைக்கே விளக்கம் அளிக்கும் விரிவுரை மார்க்க அறிஞர் பெருந்தகையே! ,இந்த அவாமுக்கு கொஞ்சம் விளக்கம் தர மறுப்பது மார்க்க முரணாகாதா?
அன்புடன் ,
எஸ்.இப்ராஹீம்
Nov 3 (9 days ago)
| ||||
பிஸ்மில்லா ஹிரஹ்மா நிரஹீம் ,,,,,,,, 3.11.2012
எஸ்.இப்ராஹீம் .,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்,
ஆறாம்பண்ணை .
அன்பு சகோதரர் முஹம்மது முஸ்தபா ஆலிம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .
தங்களிடம் போனில் மீண்டும் தொடர்பு கொண்ட சமயத்தில் உங்களுக்கான பதிலைத்தான் ரெடி பண்ணிக் கொண்டு இருக்கிறேன் .விரைவில் பதில் தருகிறேன் என்று கூறி பல நாட்கள் சென்றுவிட்டன .ஆக பதில் கொடுத்து ,தங்கள் மீதுள்ள கடமையை காலம் தாழ்த்தாது செய்யுமாறு வேண்டுகிறேன் .
அன்புடன் ,
எஸ்.இப்ராஹீம்
இப்போது போன் பண்ணினாலும் அட்டென் பண்ண மறுக்கிறார்.பலமுறைகள் போன் பண்ணியும் அவர் பதில் தரவில்லை .முஸ்தபாவுக்கு மார்க்கம் பற்றி உங்களிடம் கேட்டால் பதில் சொல்லாதவர்களுக்கு நெருப்பிலான கடிவாளம் இடப்படும் என்ற ஹதீதை உங்களுக்கு ஞாபகப்படுத்தி கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.