V.S.T.அமானுல்லாவின் பதில் .
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
மேலாப்பாலயம் கிளை செயலாளர்
V.S .T அமானுல்லா , D.C
34-H,V.S.T.தாசின் பஜார்,மேலாப்பலயம்,திருநெல்வேலி -627005 PH9843745238
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாவின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.ஸலாத்தும் சலாமும் அகிலங்களின் அருட்கொடை ,அழகிய முன்மாதிரி ,கருணையே வடிவான காருண்யா நபி சல்லலாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீது, அவர்களின் குடும்பத்தார் கள்,நபிமார்கள் ரசூல்மார்கள் ,உத்தம திரு தோழர்கள், மத்ஹபுடைய நாற்பெரும் இமாம்கள்,ஹதீஸ் தொகுப்பாளார்களான இமாம்கள் [ தாபியீன்கள்,,தபவுத்தாபீன்கள்] இறைநேசச்செல்வர்கள் மீதும் உண்டாகட்டும். சகோதரர் S இப்ராஹீம் அவர்கட்கு 12 .08 .2010 அன்று நான் தங்களுக்கு எழுதிய தபாலுக்கு நீங்கள் 16 .09 .2010 இல் தபால் எழுதி [post at 13.10 .2010 ]அன்று எழுதி நேற்று கிடைக்கப்பெற்றது.எனது 18 03.2010 கடிதத்திற்கு உங்களது 11 .04 .2010 தபாலில் எனது தபாலை தேதியிடப்படாத கடிதம் என்று குறிப்பிட்டதை எனது ௧௨.௦௬.௨௦௧௦ கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.அதற்க்கு உங்களது நிலைப்பாட்டை இது வரை கூறவில்லை.
அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற விஷயம் தங்களது கொள்கை சகோதரர்களுக்கு தெரியவில்லை என்பதை பீ.ஜே கூறியதை நான் குறிப்பிட காரணம் குரான் ஹதீஸை அப்படியே பின்பற்றுபவர்கள் நாங்கள்தான் எங்களை விட்டால் ஆளில்லை என்று கடந்த 25வருடங்களாக கூறினீர்களே இந்த அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போய்விட்டதே [அனைவரையோ அல்லது பலரோ]என்பதுதான் கேள்வி .அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரித்தது,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது ?.
மவ்லுத் பெயரால் வயிற்று பிழைப்பு விவகாரம் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள் ,.இதுவரை யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ?
சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு தனது தோழர்கள் சிலர் ,நரகத்திற்கு செல்வார்கள் என்பது தெரியாது என்று ஹதீஸ் இருப்பதை நீங்கள்
நீங்கள் கூறுகீறார்களே எந்த சஹாபி நீங்கள் எந்த காரியத்திற்காக நரகம் செல்வார்கள், நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? நான்கு இமாம்களின் பாடத்திட்டங்கள் மதரசாக்களில் உள்ளன. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும் பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?சக்காத்.பித்ரா போன்ற நல்ல அமல்களை ஏவாமல் மக்களின் உணர்வுகளை தூண்டி மீலாது விழா,,,, என்று குறிப்பிடும் நீங்கள் 'இவரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 'என்ற சிடி யை பார்த்தால் தூய வடிவில் இஸ்லாத்தை பின்பற்றும் அவலம் தெரியும்.பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது ,எந்த அமைப்பின் பெயரை சொல்லி கட்டினீர்கள்?தற்போது எந்த அமைப்பின் பெயரில் உள்ளது என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
எனவே சகோதரர் அவர்களே நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் உண்மை நிலையை புரந்து கொள்ளுங்கள்.இவ்வுலக வாழ்க்கையை மட்டுமல்லாமல் நிரந்தரமான மறு உலக வாழ்க்கையும் உண்டு.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டும் சல்லலாஹு அலைகிவசல்லம் அவர்களின் ஷபாஹ் த்தையும் கொண்டும் நற்பேறுகளை நாம் பெறவேண்டும் என்றால் நல்லோர்கள் காட்டித் தந்த வழியில் செல்வோம்.
அல்லாஹ் அல் குர்ஆன் பாத்திஹா சூராவில் குறிப்பிட்டது போல் எவர்களுக்கு நீ அருள்புரிந்தயோ அவர்களுடைய வழியில் [நடத்துவாயாக][அவ்வழி உன்] கோபத்திற்கு உள்ளானோர்கலுடையதும் அல்ல,வழி தவறியவர்களுடையதும் அல்ல.
அல்லதை வெறுப்போம் நல்லதை செய்வோம்
ஒற்றுமையாக இருப்போம் நலமாக வாழ்வோம் இப்படிக்கு
துல்கயிதா 6 ஹிஜ்ரி 1431
வெள்ளி 15 .10 .2010 இப்படிக்கு
V.S.T அமானுல்லா
அருளும் அன்பும் மிக்க அல்லாவின் திருபெயரால்,,,
அன்பு சகோதரர் வீ.எஸ்.டி.அமானுல்லாவுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களுடைய தபால் கிடைக்கப் பெற்றேன்.நன்றிகள்.
அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற செய்தி பீ.ஜே வுக்கு எப்போது,எப்படி,தெரிந்தது ,இந்த தகவலை முதலில் எப்போது தெரிவித்தார்,தாங்கள் கொள்கை சகோதரர்களுக்கு எந்த ஆண்டு இச்செய்தி தெரிந்தது? என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்.எப்போது தெரிந்தது ,எப்படி தெரிந்தது என்பது விவகாரம் அன்று .விவாதத்தில்பீ .ஜே இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு ஆதாரம் வைத்துள்ளார்.பீ.ஜே அவர்களின் ஆதாரங்களை மறுப்பதற்கான ஆதாரம் இருந்தாலோ ,அல்லது இறைவனுக்கு உருவம் இல்லை என்பதற்கான ஆதாரம் உண்டு என்றாலோ அதை வைப்பதுதான் அறிவுடைமை..இஸ்லாத்தில் உருவ வழிபாடு கிடையாது தானே தவிர இறைவனுக்கு உருவம் இல்லை என்பது உங்களுக்கு எப்போது ,எப்படி தெரிந்தது ?நாகூர் ஹனிபா பாட்டை தவிர வேறு எதை வைத்து இறைவனுக்கு உருவம் இல்லை என்று நம்பியுள்ளீர்கள்?
குர்ஆனில் 28 ;88 இல் வரக்கூடிய வசனமும் 55 ;26 இல் வரக்கூடிய வசனமும் இறைவனின் முகத்தைத்தவிர மற்றவை அழிந்துவிடும் என்ற சொல்லுகிறதே ,தாங்கள் குர் ஆன் மட்டுமே படிப்பீர்களா?அதன் தர்ஜுமாவை பார்ப்பது கிடையாதா?இறைவன் முகம் என்று சொல்லப்படுவது எது?முகம் என்று சொன்னால் அது மட்டும்தான் உள்ளது என்றும் எண்ண வேண்டாம், எப்படி தலையை எண்ணுங்கள் என்று சொன்னால் தலை என்பது ஒருமனிதரை குறிக்கும் என்று புரிந்து கொள்வோமோ அதுபோன்று இங்கே இறை முகம் அழியாது என்றால் அவன் மட்டுமே இருப்பான் என்று பொருள்.;உங்களில் ஒருவர் சண்டையிடும் போது முகத்தைத் [தாக்குவதை விட்டும்]தவிர்த்து கொள்ளட்டும்.ஏனெனில் அல்லாஹுத்தாலா ஆதமை தன்னுடைய முகத் தோற்றத்திலேயே படைத்திருக்கின்றான்.;என்று அல்லாஹ்வின் தூதர்[ஸல்]அவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லிம் 473 அறிவிப்பாளர் அபூஹுரைரா[ரலி] இந்த ஹதீதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டீர்கள் ?அல்லது புரிந்து கொள்வீர்கள்? இதற்க்கான உங்களின் பதிலைப் பார்த்து விட்டு இது பற்றி அடுத்து பேசுவோம்.
யார் யார் மவ்லுத் பெயரால் கோடிகோடியாய் சம்பாதித்துஉள்ளார்கள்.மவ்லிது ஷிர்க் என்று கூறுபவர்களின் இன்றைய நிலை என்ன?அவர்கள் சம்பாதித்தது என்ன வழி ? மவ்லித் வயிற்று பிழைப்பு என்றுதான் சொன்னேன்.பெட்டிக்கடையும் வயிற்று பிழைப்புதான் அதனால் அதில் கோடி,கோடி யாக சம்பாதிக்கமுடியுமா? இந்த பதில் மூலம் மவ்லித் மார்க்கம் இல்லை என்பதை சரிகண்டுள்ளீர்கள். மவ்லிதில் ஷிர்க் நிரம்பியுள்ளது என்று கூறுவோரும் நிலையும் அதுதான்.யார் கோடி,கோடியாக சம்பாதித்துள்ளார்கள்.? நீங்கள் சொல்லும் ஹதீசுக்கு அறிவிப்பாளர் யார்?ஆதாரம் நூல் எது? கீழே உள்ள ஹதீஸை பார்த்துகொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள்,என் சமுதாயத்தில் சிலர் கொண்டுவரப்படுவரப்பட்டு ,இடபக்கத்[உள்ள நரகத்]திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான்,என் இறைவா,[இவர்கள்]என் தோழர்களில் சிலர் என்று சொல்வேன்.அதற்க்கு ,இவர்கள் உங்களுடைய மரணத்துக்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக,உருவாக்கினார்கள் என்று உங்களுக்கு தெரியாது என்று கூறப்படும்.அப்போது நான்,நல்லடியார் ஈஸா[அலை] சொன்னதைப் போன்று ,"நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களை கண்காணிப்பவனாக இருந்தேன் .நீ என்னை திரும்ப அழைத்துகொண்ட போது நீயே அவர்களை கண்காணிப்பவனாக இருந்தாய்."என்று பதிலளிப்பேன்.அதற்க்கு "இவர்களை நீங்கள் பிரிந்ததிலிருந் இவர்கள் தாங்கள் குதிகால் சுவடுகளின் வழியே தம் மார்க்கத்தில் இருந்து வெளியேறி கொண்டு இருக்கிறார்கள்."என்று கூறப்படும்..அறிவிப்பவர்,இப்னு அப்பாஸ்[ரலி] நூல் புகாரி 4625,4740,6526,6572,6582,6585,6586.முஸ்லிம் 365,4247,4250,4259,5104
. இது ஷாபி,ஹனபி இமாம்களுக்கும் தொடர்பு இல்லை.இக்கிதாபுகள் ஷிர்க்,ஆபாசங்களும் நிறைந்த நம்பர் ஒன கழிசடைகள் என்று கூறும் நீங்கள் 'நீங்கள் பெரிதும் மதித்து கொண்டிருபவர்கள் மேலே கூறப்பட்ட மதரசாக்களில் படித்து பட்டம் வாங்கி கொண்டுத்தான் உலவி ரஹ்மானி ,,,,இன்னும் பல சனது பட்டங்களை தங்களின் பெயருக்குப் பின்னால் இன்று வரை போட்டுக் கொண்டு பெருமைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இது குறித்து நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?அங்கே படித்து பட்டம் வாங்கி வந்தவர் களை பற்றி நாம் பேசவில்லை .உங்கள் வாக்குமூலத்தை வைத்து பார்த்தால் அவை கழிசடைகள் என்பதில் உங்களுக்கு மாற்று கருத்து இல்லை என்பதை நீங்கள் ஏற்றுகொண்டீர்கள்.நன்றிகள் அந்த பட்டங்கள் இல்லாவிட்டால் ,இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்பீர்கள்.நாங்களும் அங்குதான் படித்துவிட்டு அவை கழிசடைகள் என்பதை உணர்ந்து மக்கள் மத்தியில் வைத்திட ,மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட ஆரம்ப காலங்களில் உலவி ரஹ்மானி எல்லாம் பயன் படுத்தப்பட்டது.இப்போது அவை தவிர்க்கப்பட்டு வருகிறது.இப்போதைய எங்களது கல்லூரிகளில் பட்டம் பெரும் மாணவர்களுக்கு இந்த கழிசடைகளை பற்றி தெரியவில்லை. இந்த உலவி.ரஹ்மானி களால்தான் இந்த கிணத்துக்குள் நாறிய பிணம் வெளியே வந்தது..இதற்க்கு மேல் இதில் சிந்திக்க என்ன உள்ளது? இவரைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ,அவரைப்பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் போன்ற சிடி க்களை பார்த்துவிட்டுத்தான் மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களை குர் ஆன் ஹதீத்களை பின்பற்றிட அழைக்கின்றோம்.டி.என்.டி.ஜே வுக்கு அல்ல.பீ.ஜே என்ற தனி நபர் துதி பாடுவதை விட்டுவிட்டு அவர் சொல்லும் குர் ஆன் வசனங்களையும் ஹதீத்களையும் மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள்.
பள்ளிவாசல் பெயரில் சொத்து என்று அங்கலாய்க்கும் நீங்கள் ,தற்போது உங்கள் ஜமாத்தால் நிருவகித்துவரும் பள்ளிவாசல்கள் எப்போது கட்டப்பட்டது
இப்போது உள்ள அனைத்து மத் ஹப் ஜமாஅத் பள்ளிகளும் நாங்களும் எங்களின் முன்னோர்களும் கட்டியதுதான் இன்று எங்களை அதிலிருந்து விரட்டிவிட்ட நீங்கள் இதைப்பேசுவது நியாயமில்லை.நீங்கள் கூறும் பள்ளிவாசல் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்க்கு மாற்றமாக ஏதும் அங்கே நடை பெறவுமில்லை.இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை நீங்கள் சொல்ல முடியாது.மேலும் வழக்கு உள்ளது பாபரி மஸ்ஜித் தீர்ப்பு போல் இல்லாமல் சத்திய தீர்ப்பு வெளிவரும். கடித தேதி யில் எனது நிலை பாடு கேட்டுள்ளீர்கள்.பொதுவாக தனிநபர் கடிதங்களில் முதல் பக்கத்தில் தேதியிடுவதுதான் வழக்கம்.மனு,விண்ணப்பங்கள்,அறிவிப்புகள் ஆகியவற்றில் தான் கடைசில் தேதியிடுவார்கள் நீங்கள் இந்த இரண்டாவது முறையை பின்பற்றுவதை கவனிக்கவில்லை.தவறுதான் .நான் வருத்தம் தெரிவிக்கவேண்டிய நிலைபாட்டைத்தான் கேட்டிருப்பீர்கள் . கடித விசயத்தில் அக்கறை எடுத்துள்ள நீங்கள்,தர்கா பற்றியும் வரதட்சணை கல்யாணத்திற்கு பள்ளிவாசலில் வைத்து பொய் மகர் எழுதுவது பற்றியும் கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது மார்க்கத்தை பின்தள்ளி தனி நபர் மேட்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஏற்புடையதா? .இன்சால்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் சத்தியத்தை காட்டுவான் என்ற நம்பிக்கை உள்ளது. எது நேர் வழியோ அதேயே உங்களுக்கும் எனக்கும் காட்டுவானாக| அல்ஹம்துலில்லாஹ்
வஸ்ஸலாம்.. அன்புடன்,
Sஇப்ராஹீம்
அமானுல்லா கூறியது இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஏராளம்உள்ளன.அதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலுமா?இயன்றால் கூறுங்கள்.கேள்விகளை தொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
அமானுல்லாவே எனது பதில்கள் வந்த பிறகும் இதுவரை பதில் சொல்லாத நீங்கள் எண்ணற்ற கேள்விகளை எங்கே? பதில் சொல்ல காத்திருக்கிறோம்
அஸ்ஸலாமு அழைக்கும் ,
பதிலளிநீக்குhttp://senkodi.wordpress.com/ என்ற கம்யுனிச இணையத்தளத்தில் இஸ்லாத்தை பற்றியும் குறிப்பாக
குர் ஆனை பற்றியும் செங்கொடி என்பவன் விமர்சித்து நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளான் .
அவனை பி. ஜெ வோடு விவாததிற்கு அழைத்து அழைத்து மக்கள் ஒய்ந்தே போகி விட்டார்கள் .
அவன் பி. ஜெ வோடு விவாதம் செய்ய தயாராக இல்லை .ஆனாலும் பல முஸ்லிம் நண்பர்கள்
கருத்துரைகள்(feedback) மூலம் அவனோடு விவாதம் செய்து வருகிறார்கள் .முனவிருளின் சொத்தை வாதங்களுக்கு மட்டுமே பதில் சொல்லி கொண்டிருக்காமல் ,சிறந்த எழுத்தாற்றலும் ,நல்ல மார்க்க
அறிவும் உள்ள நீங்கள் அவனோடு எழுத்து வாதத்தில் பங்கேற்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் .அவனது இனைய தலத்தில் இஸ்லாம் கற்பனை கோட்டை என்ற பகுதிக்கு சென்று பார்வையிடவும் .நன்றி அல்லாஹ் போதுமானவன் ..