சனி, 5 ஜனவரி, 2013

மவ்லவி முஹம்மது முஸ்தபாவுக்கு

மவ்லவி முஹம்மது முஸ்தபாவுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் .உங்கள் பதிலை இணையதளத்தில் பார்த்தேன் .அதில் எனக்கு பதில் அளிக்ககாலதாமதம் ஆனதற்கு காரணம் சொல்லியிருந்தீர்கள் .நன்றிகள் .இருப்பினும் போனில் அட்டென் பண்ணி இதை சொல்லியிருக்கலாம் .அப்புறம் "பக்ரீத் லீவில் 'என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அதென்ன பக்ரீத் ? பக்ரீத் என்றால் மாட்டு பொங்கல் என்றுதான் பொருள் வரும் .தியாகத் திருநாள் [ஈதுல் அல்ஹா]என்று குறிப்பிட்டிருக்கலாமே .
பீஜே உணர்வு வார இதழில் தூத்துக்குடி விவாதம் பற்றி பொய்யான தகவல்களை எழுதியுள்ளதால் அதற்கு தாங்கள் பதில் அளிக்க மூழ்கிவிட்டதால் எனக்கு பதில் அளிக்காமல் போயிற்று என்று கூறியுள்ளீர்கள் உங்களது இணைய தளத்தில் அந்த விவாதம் பற்றி எழுதுகையில் உணர்வில் பீஜே பொய்களை கூறியுள்ளதால் அதற்கான மறுப்பாக இதை வெளியிடுகிறேன் என்று குறிப்பிடவில்லையே ஏன்? பீஜே உணர்வில் என்ன பொய் கூறியிருந்தார் என்பதை எடுத்துக்காட்டி அது பொய் என்பதை நிருபித்து உண்மை என்னவென்பதை சொல்லியிருக்க் வேண்டும் அல்லவா?ஆனால அதில் அவ்வாறு சொல்லப்படவில்லை .
உலகத்தில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லிவிட முடியும் .ஆனால் பீஜே பொய் சொல்லிவிட முடியாது.பீஜே என்ன எங்களது கிளையில் கூட அதன் உறுப்பினர்களை சுன்னத் ஜமாஅத் கண்காணித்து வருகிறது .பீஜெ பற்றி அவர் சொல்லாதை எல்லாம் சொன்னதாகஅல்லது சொன்னதை திரித்து  பேசப்பட்டு வருகையில் அவர் பொய் சொன்னால் விட்டு வைப்பார்களா?கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும் அமைப்புகளும் கவனித்து வருகின்றன. அப்படி இருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக முஸ்லிம்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் .அப்படியிருக்க வீடியோ பதிவு உங்களாலும் பதிவு செய்யப்பட்டிருக்கையில் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை நம்ப முடியாது .
உங்களது பதில்களை பார்ப்போம் .
தூத்துக்குடி விவாதத்தில் எழுத்து பிழைகளை யூதர்கள் மட்டுமே இதுவரை சொல்லிவந்தார்கள் என்ற உங்களது வாதத்தை முறியடித்து விட்டார்கள் என்பதை 
விவாதம் முடியும் வரை ஒப்புக் கொள்ளாமல் சஹாபாக்கள் தவறு செய்துவிட்டதாக தவ்ஹித் ஜமாஅத்கூறிவருவதாக பொல்லாங்கு கூறிய நீங்கள்  இங்கே ஒப்புக் கொண்டீர்கள் .உங்களது கண்ணியத்தை மதிக்கிறோம் .புகழ் இறைவனுக்கு மட்டுமே .
////ஆனால் த.த.ஜ. வின் படுதோல்வியையும், அவர்களின் கொள்கை புதை குழிக்கு அனுப்பப்பட்டதையும் விவாதத்தைப் பார்த்த அனைத்து நடுநிலையான ( பி.ஜே. யிடம் அறிவை அடகு வைக்காத ) மக்களும், குறிப்பாக அரபு மொழியை முறையாக அறிந்த அனைத்து அறிஞர்களும் நன்கு விளங்கியுள்ளார்கள்.////இது நீங்கள் எனக்கு எழுதியுள்ளபதிலில் உள்ள வாசகம் .அந்த அனைத்து நடுநிலையான மக்களில் ஒருவரை சொல்லுங்கள் .

////உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் “நுஞ்சி” சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
      ஆம்! ஏற்றுக் கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.////
நீங்கள் எழுதியவற்றில் உங்களிடம் விளக்கம் கேட்டால் விளக்கம் தருவதே அறிஞர்களின் கடமை .நான் சொன்னால் சொன்னதுதான் அதற்கு பதில் சொல்லிவிட்டால் நீ அதை ஏற்றே  தீர வேண்டும் அப்போதுதான் சொல்லுவேன் என்பது எனது அறிவை உங்களிடம் அடகு வைக்க தூண்டுகிறீர்கள் என்று பொருள் .நீங்கள் நான் ஏற்கனவே பீஜெவிடம் எனது அறிவை அடகு வைத்துவிட்டதாக சொல்லியுள்ளீர்கள் .நான் அதை மீட்டால்தானே உங்களிடம் திருப்பி அடகு வைக்க முடியும் .ஆகவே நான் எனது அறிவை மீட்பதற்கு உங்களது ஆதாரத்தை அறிவுக்கு ஒவ்வாத நிபந்தனைகள் இல்லாமல் வையுங்கள் .அதுதான் உங்களை அறிஞர் வரிசையில் சேர்க்கும் .இல்லையெனில் வெறும் மிரட்டல் பேர்வழியாக சமுதாயம் எடுத்துக் கொள்ளும் .


 ////இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும். எனவே உங்களுக்காக நான் பதில் எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடிக்கமாட்டேன்.////
உங்களிடம் நேரடியான ஆதாரங்கள் இருந்தால் அது தான்  இந்த விவாதற்கு அடிப்படையான விஷயம் .அந்த நேரடியான் ஆதாரத்தை தராமல் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்றவைகள் .விவாதத்தில்ஆதாரத்தை வைக்காமல் பொத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன? பீஜே அவர்கள் வெறும் நூலின் பெயரை மட்டும் சொல்லுவதில்லை .எந்த நூல் என்பதையும் பக்கம் என்பதையும் மூல வாசகங்களையும் எடுத்து வைப்பதே அவரது விவாத பாங்கு .நீங்கள் அந்த நேரடியான் ஆதாரத்தை வையுங்கள் அதை சரி பார்த்து ஏற்றுக் கொள்வோம் .நீங்கள் யூதர்கள் மட்டுமே குர்ஆனில் பிழைகள் இருப்பதாக சொன்னது சுத்த பொய் என்று ஏற்கவில்லையா அது போல ஏற்றுக் கொள்வோம் ,ஆனால் ஆதாரத்தை வைக்காமல் கண்மூடித்தனமாக நான் சொன்னால் அது சரி என்று கொள்ளவேண்டும் என்றால் அதென்ன அறிவுடமையா? 
நேரடி ஆதாரம் தந்தாலும் நான் ஏற்க மாட்டேன் என்று நான் கூறவில்லையே ,அந்த ஆதாரம் சரியானதா என்று பார்க்க வேண்டாமா?
ஏனெனில்,அல் இத்கான் என்ற நூலில் உள்ள வாசகத்தை மக்கள் முன் வைத்துதான் நீங்கள் வாதித்திருக்க வேண்டும் .குர்ஆன் வந்து 700 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட அந்த நூலில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று விதி இருக்க வேண்டும் .அவ்வாறு விதிகளை சொல்லுவதற்கு 
குர்ஆனுக்கு முந்தையகாலத்து நூல்களிலிருந்து ஆதாரம் காட்டியிருக்க வேண்டும் .
குர்ஆன் வந்த பிறகு குர் ஆனில் ஏன் அங்ஙனம் எழுதப்பட்டுள்ளது என்பதை அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது .ஆகவே அல்  இத்கான் நூலில் உள்ள விதிகள் நான் சொன்னவாறு இருந்தால் நுஞ்சி என்பது சரியாகத்தான் எழுதியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன் .
அடுத்து 
///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து  அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.

குர்ஆனிலுள்ள அனைத்து யுஹ்யீ (يُحْيِي) களும் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கும். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.////

அடுத்து,நனசக் ,நுன்சிஹா என்ற சொற்கள் ஏன் இதே அடிப்படையில் எழுதப்படவில்லை ?

மேலும் உங்களிடம் கேட்க விழைவது ,நீங்கள் குர்ஆனில் பீஜே எழுத்து பிழைகள் உள்ளதை அல்லாஹ்வுக்காக அதை தவறு என்று எடுத்துக்காட்டி சரிபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் ,பீஜே அவர்கள் அவரது மொழியாக்கத்தில் குர்ஆனில் உள்ள 19எழுத்து  பிழைகளை பட்டியலிட்டுள்ளார். அவைகள் அனைத்தும் எழுத்து பிழைகள் இல்லை என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அவருக்கு நேரிலோ தபாலிலோ அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும் .அதன்பிறகும் அவர் உங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லைஎன்றால் உங்களது அஹ்லு சுன்னா மாத இதழில் அல்லது  இணைய தளத்தில் அதைப்பற்றி எழுதியிருக்க வேண்டும் .அதற்கு அவர் பதில்அளித்திருப்பார் . அதன் பிறகு விவாதத்திற்கு அழைத்திருக்கவேண்டும்.ஆனால் ஒரு நாலைந்து சொற்களில் மட்டும் பிழைகள் இல்லை என்பதை உங்கள் அறிவுக்கு ஏற்றவாறு ஆய்வு செய்துவிட்டு ,அதை வைத்து பீஜெவுடன் விவாதம் நடத்தி தமிழகத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பது உங்களது அற்புத கனவு .நாங்கள் பீஜேவை ஆருயிராக மட்டுமே கருதுகிறோம் .ஆனால் நீங்களோ பீஜெவுடன் விவாதித்தால்தான் தமிழகத்தில் பிரபல ஆகமுடியும் என்று பீஜேமீது வரம்புமீறி நம்பிக்கை வைத்துஉள்ளீர்கள் .அந்த நம்பிக்கையை  அல்லாஹ் தகர்த்துவிட்டான் .அவனுக்கே புகழனைத்தும் 




புதன், 2 ஜனவரி, 2013

அன்புள்ள ஆறாம்பண்ணை இப்றாஹீமுக்கு அன்பான வேண்டுகோள்


மவ்லவி முஹம்மது முஸ்தபா அவர்களின் பதில்

அன்புள்ள ஆறாம்பண்ணை இப்றாஹீமுக்கு அன்பான வேண்டுகோள்
இப்றாஹீம் அவர்களே! நீங்கள் எனக்கு அனுப்பிய மெயிலுக்கு 2 மாத காலமாகியும் நான் உங்களுக்கு பதிலளிக்கவில்லை என என் மீது ஆதங்கப்பட்டுள்ளீர்கள். அதற்குரிய உண்மையான விளக்கத்தைத் தருகிறேன்.
1 – எனது லேப்டாப் பழுதடைந்திருந்ததால் உடனடியாக பதில் எழுத முடியாமல் போனது.
2 – எனினும் நான் உங்களுக்கு பதிலளிப்பதற்காக கிட்டத்தட்ட நான்கு பக்க A 4 Size பேப்பர் அளவுக்கு எனது செல் போனில் தமிழில் மிகச் சிரமத்துடன் பதில் எழுதிய பொழுது இடையில் அது அழிந்து போனது.
3 – எனது பக்ரீத் விடுமுறையில் எனது வீட்டிலுள்ள கனினியில் உங்களுக்கு நான் பதில் எழுத ஆயத்தமான பொழுது உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே. தூத்துக்குடி விவாதத்தைப் பற்றி பொய்யான தகவல்களை அவரது உணர்வு வார இதழில் புழுகியிருந்தார். எனவே அதற்கு மறுப்பு எழுதி மக்கள் அனைவருக்கும் உண்மையை உணர்த்தும் நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டதால் உங்கள் அண்ணனின் பொய் மூட்டைகளை அம்பலப்படுத்துவதற்காக மறுப்பு எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டமாக எனது மறுப்பின் சிலத் தொகுப்பை “அஹ்லுஸ் சுன்னாஹ்” என்ற மாத இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்த மறுப்புப் பணி இன்னும் எனக்கு முடிவடையவில்லை. தொடர்ந்து அப்பணியில் தான் இருக்கிறேன். அந்தப் பதில் உங்கள் ஒருவருக்காக மட்டும் இல்லாமல் மக்கள் அனைவருக்காகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்படி மாத இதழில் பிரசுரிக்க ஏற்பாடு செய்தேன். மேலும் www.musthafa maslahi.blogspot.com  என்ற எனது இணைய தளத்திலும் எனது மறுப்பை தொடராக பதிவு செய்ய ஆரம்பித்துள்ளேன்.
      இப்றாஹீம் அவர்களே! எனது இணைய தளத்தில் எனது மறுப்புக் கட்டுரையைப் படித்த நீங்கள் இரு முக்கியமான கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள்.
1 – குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று கூறுவது குர்ஆனையும், அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு, அது யூத, நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்ற தூ.டி. மாந்கர ஜ.உ. சபையின் நிலைப்பாட்டை தவறு என்று த.த.ஜ. தூத்துக்குடியில் நிரூபித்தது என்று கூறியுள்ளீர்கள்.
ஆனால் த.த.ஜ. வின் படுதோல்வியையும், அவர்களின் கொள்கை புதை குழிக்கு அனுப்பப்பட்டதையும் விவாதத்தைப் பார்த்த அனைத்து நடுநிலையான ( பி.ஜே. யிடம் அறிவை அடகு வைக்காத ) மக்களும், குறிப்பாக அரபு மொழியை முறையாக அறிந்த அனைத்து அறிஞர்களும் நன்கு விளங்கியுள்ளார்கள்.
2 – இரண்டு நூன்கள் ஒரு சேர வந்தால், அதில் இரண்டாவது நூனுக்கு சுக்கூன் இருந்தால் இரண்டாவது நூனை கண்டிப்பாக விட வேண்டும் என்பதற்கு தனியாக, நேரடியான ஆதாரம் தரவேண்டும் என்று என்னிடம் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.
      உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் “நுஞ்சி” சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
      ஆம்! ஏற்றுக் கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.
      இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும். எனவே உங்களுக்காக நான் பதில் எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடிக்கமாட்டேன்.
 (البقرة 2-18)   صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். (அவர்கள் நேரான வழியின் பக்கம்) திரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன். 2/18)
وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ  (البقرة 2-171)
 அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை (கால் நடை) போன்றவர்கள். (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். அவர்கள் எதையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன். 2/171)
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ آَلِهَةً قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ هَذَا ذِكْرُ مَنْ مَعِيَ وَذِكْرُ مَنْ قَبْلِي بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ فَهُمْ مُعْرِضُونَ  (الأنبياء 21-24)    
அல்லது அவர்கள் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டார்களா? அப்படியாயின் உங்கள் (கொள்கைக்கு) அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள், இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும் (குர்ஆனும்), எனக்கு முன்புள்ளவர்களின் வேதமும் இருக்கின்றன என்று (நபியே!) நீர் கூறும். எனினும் அவர்களில் அதிகமான பேர் சத்தியத்தை அறிந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் (அதைப்) புறக்கணிக்கின்றார்கள். (அல்குர்ஆன். 21/24)
وَآَتَيْنَاهُمْ آَيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ  (الحجر 15-81)  
நம்முடைய ஆதாரங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (எனினும்) அவற்றை அவர்கள் புறக்கணிக்கக்கூடியவர்களாகவே இருந்தனர். (அல்குர்ஆன். 15/81)
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ  (الأعراف 7-199)
 (நபியே!) மன்னிப்பைக் கைக்கொள்வீராக! மேலும் நன்மையை ஏவுவீராக! மேலும் மடையர்களைப் புறக்கணித்துவிடும்! (அல்குர்ஆன். 7/199)
எனவே சத்தியத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிப்பது வீண் வேலையாகும்.
       எனினும் சத்தியத்தை அறிய விரும்பும் நடு நிலை மக்களுக்காக எனது இணைய தளத்தில் எனது பதிலை இன்ஷா அல்லாஹ் எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.
       அல்லாஹ் நன்மைக்கு உதவி செய்வானாக! ஆமீன்!


நான் முஸ்தபா அவர்கட்கு அனுப்பிய மெயில்களும் மற்றும் அவரது பிளாக்கில் இட்ட பின்னூட்டங்களும்
http://arampannai.blogspot.in/2012/11/blog-post_12.html

Ibrahim Sheikmohamed24 December 2012 22:14
முஸ்தபா ////குர்ஆனையும் அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு அது யூத நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்பது தூ.டி மாநகர ஜ.உ. சபையின் நிலைப்பாடாகும்.////

1இந்த உங்களது நிலைப்பாடு தவறு என்று தவ்ஹித் ஜமாஅத் தூத்துக்குடியில் நிருபித்ததா ?இல்லையா?
2இரண்டு நூன்கள் ஒரு சேர வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்று இருந்தால் அதில் இரண்டாவது நூனை விட்டுவிடலாம் என்பதற்கு “அல் இத்கான்” என்ற நூலில் ஆரம்ப கால விதி யை காட்டுங்கள்

///எழுத்து விதியை பேணும் இடங்களில் அவ்விதியையும், கிராஅத்தை பேணும் இடங்களில் கிராஅத்தையும் பேணி மிகக்கவனமாக சரியாகத்தான் எழுதியுள்ளனர்////

இரண்டு நூங்கள் ஒரு சேர வந்தால் அதில் இரண்டாவது நூனுக்கு சுக்கூன் இருந்தால் இரண்டாவது நூனை கண்டிப்பாக விடவேண்டும் என்று அந்தஆரம்பகால விதி கூறுகிறதா?

ReplyDelete

Ibrahim Sheikmohamed24 December 2012 22:18
முஸ்தபா அவர்களே நான் அனுப்பிய மெயில்களுக்கு பதில் ரெடிபண்ணிக் கொண்டு இருக்கிறேன் என்று தாங்கள் போனில் கூறி 2 மாதங்கள் ஆகிவிட்டனவே ,எஏன் இன்னும் பதில் தரவில்லை?



செவ்வாய், 1 ஜனவரி, 2013


  1. தோழர் இப்ராகிம்
    நீங்க மட்டும் சரி காண்பது எப்படி?
    அந்த காலத்துல நடந்தா தப்பு இல்லைன்னு ஆகி விடுமா?
    பதிலளிநீக்கு
  2. சகோதரன் நீண்ட நாட்களாக மறைந்து மீண்டும் தொடர்கிறார் 
    சகோதரன் ///திருமண உறவையே கொச்சைபடுத்தி தன்னுடைய மனைவியை அடுத்தவனுக்கு தலாக் சொல்லி திருமணம் செய்தார்கள் என்கிறேன் செய்தது அந்த காலம் அந்த கால அல்லாவுக்கு இதெல்லாம் தெரியாது, நீங்க இந்த காலம், இப்ப உள்ள நிலையில் வைத்து பார்க்காதிர்கள் என்று கூறுகிறீர்களே உங்கள் என்னத்த சொல்ல?///
    அந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியாமல் அரைகுறையாக உலர வேண்டாம் என்பதே எனது கருத்து..
    ஜைதுவுக்கும் அவரது மனைவி ஜைனபுக்கும் அடிக்கடி சண்டைகள் வருகிறது .இந்த பிரச்னை முகம்மது நபி[ஸல்] அவர்களிடம் பஞ்சாயத்து வருகிறது .இதற்கு தீர்வு விவாகரத்து என்று முடிவானபிறகு விவாகரத்து செய்து தனது மாமி மகளான ஜைனபை முஹம்மது நபி[ஸல்] அவர்கள் திருமணம் செய்கிறார்கள்
    முஹம்மது நபி[ஸல்] அவரகள் திருமணம் செய்வதற்காக ஜைது விவாகரத்து செய்தது போல இந்த சம்பவத்தை உங்களைப் போன்றோர் திரிக்கிறார்கள் .
    முகம்மது நபி[ஸல்] ஜைனபை திருமணம் செய்ய விரும்பினால் அவரது மாமி மகளான ஜைனபை முன்பே திருமணம் செய்திருக்க முடியும் .மேலும் முகம்மது நபி[ஸல்] அவரகள இன்னொருவர் மனைவியை விவாகரத்து செய்துதான் பெண்களை அடையமுடியும் என்ற நிலையம் இல்லை .அவர்கள் விரும்பிய கன்னி பெண்கள் அவரை திருமணம் செய்ய தயாராகவே இருந்தார்கள் ./இது அந்த காலத்தில் மக்கள் நடைமுறையில் இருந்தது .இப்போது 4 மனைவிகள் மனம் புரிவது இயல்புக்க மாற்றமாகிவிட்தது. அந்த காலத்தில் அதாவது 60 வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொருவரும் 10 முதல் 15 குழந்தைகள் பெற்றதை பெருமையாக சொல்லுவார்கள் .அந்த காலம் என்ன இந்த கலாம் என்ன இப்போது 10 க்கு மேற்பட்ட குழந்தைகள் பெறுவதற்கு என்ன தயக்கம் ?சட்டம் ஒன்றும் தடுக்கவில்லையே ?
    பதிலளிநீக்கு

வியாழன், 27 டிசம்பர், 2012

திங்கள், 26 நவம்பர், 2012

கூட்டு குர்பானிதோல் விற்ற பணம்



ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாஅத் கிளை சார்பாக நடத்திய கூட்டு குர்பானி யில் மாடு ,ஆடு தோல் விற்ற பணம் 22000/=த்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நடத்தும் முதியோர் இல்லத்திற்கு ரூ.10000/=வழங்கப்பட்டது .23.11.1012 அன்று அந்த பணத்தை தூத்துக்குடி மாவட்டத் தலைமையகத்தில் வைத்து ஆராம்பண்ணை கிளை தலைவர் முஹம்மது சலீம் ,மாவட்ட தலைவர் அப்பாஸிடம் வழங்குகிறார்.


திங்கள், 12 நவம்பர், 2012

கிளிப்பிள்ளை முஸ்தபா பதில் தர மறுக்கிறார்.


Ibrahim Sheikmohamed asaina7g@gmail.com
Oct 4
to nicemusthafa
பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,
எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் 
ஆறாம்பண்ணை .
அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் 
                                               பீஜே அவர்களுடன் நீங்கள் நடத்திய இரண்டு நாள் விவாதத்தில் கலந்து கொண்டேன்.அவ்விவாதத்தில் இரண்டு வருடங்களாக போராடி அழைத்து இன்று இங்கு அமர வைத்துள்ளேன் .நான் கேட்பதற்கு பதில் இல்லாமல் மற்றொன்றை விவாதித்திக் கொண்டிருப்பது சரியா என்ற முறையில் ஆதங்கப்பட்டீர்கள்.லாக்கின்ன,லிதஸ்லூவ ,லி யப்லூவ ,வ நப்லூவ போன்ற சொற்களில் உள்ள பிழைகளை கூறுமாறு வற்புறுத்தி வந்தீர்கள்.
நீங்கள் இரண்டு வருடங்களாக போராடியது அவர்களிடமிருந்து பிழைகளை தெரிந்து அதன் பிறகு நிருபிக்காவா?
பீஜே அவர்கள் 19 பிழைகளை தனது தர்ஜுமாவில் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.இரண்டு வருடங்களாக அழைத்தீர்கள் என்றால் அதற்கு முன்பே அப்பிழைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறீர்கள் என்று பொருள்.பீஜே வுக்கே பாடம் எடுப்பதாக அலட்டிக் கொண்ட நீங்கள் ,பலவருடங்களாக ஆய்வு செய்த பிழைகள் பற்றி மக்கள் மத்தியில் போட்டு உடைக்காமல் ,அவர்களிடமே அதிலுள்ள பிழைகளை கூறுங்கள் என்று கெஞ்சி கொண்டிருந்தது எங்ஙனம் சரியாகும்?
நீங்கள் இரண்டு வருட போராட்டத்திற்கு பின்னர் அழைத்து வரப்பட்டவர்களிடம் டாஸ் கூட போட விடாமல் ,நீங்களாகவே முதலில் 19 பிழைகளையும் மக்கள் மத்தியில் வைத்து அவற்றில் பிழைகள் இல்லை என்ற உங்களது வாதங்களை நிறுவியிருக்க வேண்டும் .அதன் பிறகு அவர்கள் வைத்த நுஞ்சி என்ற சொல்லிலும் பிழைகள் இல்லை என்று நிருபித்திருக்க வேண்டும்.ஆனால்  ஆரம்பத்தில் தாங்கள் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக அவர்கள் நுஞ்சி பற்றி பேசியபொழுது அதற்கு விளக்கம் இல்லாமல் நஞ்சி போன உங்களுக்கு நீங்கள் வேண்டியவாறு லாக்கின்ன என்ற சொல்லில் உள்ள பிழை பற்றி கடைசியாக கூறினார்கள் .உங்களுக்கு பலவருட ஆய்வு போதாது என்று இரவில் கூடுதலாக நேரம் தந்த பிறகும் மறுநாளும் உங்களால லாகின்ன வில் பிழை இலை என்பதை நிறுவ முடியவில்லை.முட்டுக்கட்டைகளை வைத்தே  வீடுகட்ட முயற்சித்தீர்கள்.வீடு கட்டும் வேளையில் முட்டுக்கட்டை கொடுத்து பின்னர் எடுத்து விடுவார்கள் ஆனால் தங்களோ முட்டுகட்டைகளை வைத்தே வீடுகட்ட முயல்வது சரியா? அடுத்து பீஜே தரப்பினர் நப்லூவ என்ற சொல்லை சொன்னதும் அங்கிருந்து லாகின்ன அப்புறம் பார்ப்போம் என்று நப்லூவ வுக்கு வந்தீர்கள் .அதோடு லாகின்ன முடிந்தது.திரும்ப லாகின்ன பற்றி பேசவே இல்லை .நுஞ்சி பற்றி பேசவில்லை.அப்படியெனில் முதலில் வைக்கப்பட்ட இரு பிழைகளும் பீஜே வால் பிழைகள் என்று நிருபிக்கப்பட்டது என்பதே விவாதம் வெளிப்படுத்தும் உண்மையை உங்களால் மறுக்க முடியுமா?
அடுத்து முதல் கட்டமாக யூதர்கள் தான் குர்ஆனில் எழுத்து பிழை உள்ளதாகவும் அதன் பின்னர் பீஜெதான் அவ்வாறு கூறியிருப்பதாகவும் வாதம் வைத்துள்ளீர்கள்.அவ்வாதம் தவறு என்று பாக்கியான் முதல் ஆயிசா [ரலி] அவர்கள் வரை கூறியுள்ள கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டு உங்கள் வாதம் தகர்க்கப்பட்டது.அதை ஒப்புக் கொண்டிருப்பதுதான் நாகரிகம் .ஒப்புக் கொண்டதை பகிரங்கமாக சொல்லாவிட்டாலும் மவுனியாக இருந்து இருக்க வேண்டும். ஆனால் ஆரம்பம் முதல் கடைசி வரை சஹாபாக்கள் மீது அபாண்டம் சொல்லிவிட்டார்கள் என்று அபாண்டமாக முழங்கியதும் உங்களது மனசாட்சி ஏற்றுக் கொள்கிறதா?
Ibrahim Sheikmohamed asaina7g@gmail.com
Oct 14
to mohamed
பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,,,

எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,
ஆறாம்பண்ணை .

அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் .
                                                      
                                           நான் உங்களுக்கு முன்பு மெயில அனுப்பி போனிலும் விளக்கம் கேட்டேன்.நீங்கள் அதற்கு குர்ஆனை பார்த்து வாசிக்க சரளமாக தெரியுமா?வாசிக்க தெரியாதவரா? இல்லை ஆலிமா ? என்று கேட்டீர்கள்.உங்கள் தரப்பில் பார்வையாளராக அனுமதித்தவர்களை இந்த கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில்தான் உங்களது வாதங்களை கேட்க அனுமதி கொடுத்தீர்களா?
இல்லையெனில் உங்களது பில்டப் வார்த்தைகளை கேட்டு கை தட்ட அழைத்து வந்தீர்களா? 

நீங்கள் நான் கேட்டதற்கு எனக்கு விளக்கம் அளித்துவிட்டு அதிலிருந்து கேள்விகள் கேட்டிருந்தால் எனக்கு புரிந்துள்ளதா ?இல்லையா என்பது தெரிந்துவிடும் .அதற்கு தாங்கள் தயங்குவது ஏன்?எனக்கு அரபு தெரியாது .ஆனால் அரபுமொழியில் பீஜே பிழை என்று கூறியுள்ளதை அவைகள் பிழை இல்லை என்று விளக்கம் அளித்தால் அதை புரிய முடியும் .இது போன்று உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியாவிட்டாலும் சொல் என்பதற்கும் வார்த்தை என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் அச்சொற்களை பயன்படுத்தினாலும் அதை நான் விளக்கினால் உங்களுக்கு புரியும்.

னுஞ்சி என்ற சொல்லில் உள்ள பிழையை உங்களால் மறுக்க முடியவில்லை .இரண்டு நூன் வந்தால் ஒரு நூனை விட்டுவிட்டு எழுதுவது பழையகாலத்து நடைமுறை என்றால் நுன்சிய என்ற சொல்லிலும் நனசஹு என்ற சொல்லிலும் இரண்டு நூன்கள் வருகிறதே என்பதற்கு அது கிராதுக்காக அங்ஙனம் எழுதினார்கள்என்று வாதித்தீர்கள் 
உங்களது வாதப்படியே நசஹு, நுசிய என்று எழுதி அதன் பின்னர் நூன் ஐ சிறிதாக போட்டிருக்கலாமே.
மேலும் நீங்கள் பழையகாலத்து எழுத்து சட்டம் என்று சொல்லிவிட்ட அதற்கு ஆதாரமாக தகவல் தரும் நூலை கூறினீர்கள் சட்டம் என்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று இருக்க வேண்டும் .அப்படி சொல்லாமல் இங்ஙனம் எழுதப் பட்டுள்ளது என்று தகவல் ஆக தருகிறார்,இமாம் மாலிக் அவர்களும் எங்ஙனம் எழுதப் பட்டுள்ளதோ அவ்வாறே எழுதுங்கள் என்கிறார்.இங்கு மாலிக் அவைகள் பிழை இல்லை என்று மறுக்கவில்லை .
லில்லதி என்ற சொல்லும் ஒரு இடத்தில் மட்டும் அளிப் சேர்க்கப் பட்டு எழுதப்பட்டிருப்பதை அது பிழை தான் என்பதற்கு ஆதாரம் என்பதை நான்கு இடத்தில் அவ்வாறு இருக்கிறது என்ற உங்களது வாதம் மிகத் தெளிவாக நிருபிக்கிறது 
குர்ஆனில் எழுத்து பிழைகள் இருக்கிறது என்பதை இவர்கள் ஆய்வு செய்யாமல் ஈ அடிச்சான் காப்பியாக எழுதியுள்ளதாக ஜமாலி கடைசியில் கூறுகிறார்.யூதர்களை தவிர வேறு யாரும் பிழைஉள்ளது என்று யாரும் சொல்லவில்லை என்றால் யாரைப்பார்த்து காப்பி அடித்தார்கள் ?
முன்பக்கம் பின் பக்கம் தாருங்கள் என்று சொன்னவர் நான்கு பக்கங்கள் கொடுத்த பின்னரும் ஏன் வாசிக்கவில்லை?
786 ஐ கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டே 786 விமர்சனத்திற்கு சிரிக்கும் அளவில் நான் இல்லை.ஆதலின் நீங்கள் விளக்கம் தருவீர்களானால் அதில மிக தெளிவாக புரிந்து கொள்ள எனக்கு இறைவன் அறிவைத் தந்திருக்கிறான் .ஏற்கனவே நீங்கள் கிளிப் பிள்ளைக்கே பாடம் சொல்லிகொடுக்கும் திறனுடையவர்.அதையாவது நிருபியுங்கள் 
                                                            நன்றிகள் .                                                         அன்புடன் ,
                                                                                                                                              எஸ்.இப்ராஹீம்
Ibrahim Sheikmohamed asaina7g@gmail.com
Oct 16
to mohamed
பிஸ்மில்லா  ஹிரஹ்மாநிர் ரஹீம்,

எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் 
ஆறாம்பண்ணை .

அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம்  அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .


நான் உங்களுக்கு இதுவரை இரண்டு மெயில்கள் அனுப்புயுள்ளேன் தங்களிடம் எந்த பதிலும் இல்லை ,ஏற்கனவே போனில் பேசிய பொழுது நாங்கள் சிடி வெளியிட்ட பிறகு விளக்கம் தருவதாக கூறினீர்கள் .நீங்கள் வெளியிட்டுவிட்டீர்களா? பீஜே அவர்கள் ஆன்லைன் பீஜே வில் ஒரு வாரத்திகு முன்பே வெளியிட்டு உள்ளார்கள் .அதில் ஏதும் கூடுதல் குறைவு உள்ளதா? அவ்வாறெனின் நீங்கள் அதை வைத்தே விளக்கம் தரலாமே ,கிளிபிள்ளைக்கே விளக்கம் அளிக்கும் விரிவுரை  மார்க்க அறிஞர் பெருந்தகையே! ,இந்த அவாமுக்கு கொஞ்சம் விளக்கம் தர மறுப்பது மார்க்க முரணாகாதா?
                                                                                                                         அன்புடன் ,
                                                                                                                        எஸ்.இப்ராஹீம் 
Ibrahim Sheikmohamed asaina7g@gmail.com
Nov 3 (9 days ago)
to mohamed
பிஸ்மில்லா ஹிரஹ்மா நிரஹீம் ,,,,,,,,                                                            3.11.2012

எஸ்.இப்ராஹீம் .,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்,
ஆறாம்பண்ணை .


அன்பு சகோதரர் முஹம்மது முஸ்தபா ஆலிம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .

                                            தங்களிடம் போனில் மீண்டும் தொடர்பு கொண்ட சமயத்தில் உங்களுக்கான பதிலைத்தான் ரெடி பண்ணிக் கொண்டு இருக்கிறேன் .விரைவில் பதில் தருகிறேன் என்று கூறி பல நாட்கள் சென்றுவிட்டன .ஆக பதில் கொடுத்து ,தங்கள்  மீதுள்ள கடமையை காலம் தாழ்த்தாது செய்யுமாறு வேண்டுகிறேன் .
                                                                          அன்புடன் ,
                                                                             எஸ்.இப்ராஹீம் 
இப்போது போன் பண்ணினாலும் அட்டென் பண்ண மறுக்கிறார்.பலமுறைகள் போன் பண்ணியும் அவர் பதில் தரவில்லை .முஸ்தபாவுக்கு மார்க்கம் பற்றி உங்களிடம் கேட்டால் பதில் சொல்லாதவர்களுக்கு நெருப்பிலான கடிவாளம் இடப்படும் என்ற ஹதீதை உங்களுக்கு ஞாபகப்படுத்தி கொள்கிறேன் 

வெள்ளி, 2 நவம்பர், 2012



நந்தன் ,செங்கொடி யில் எழுத விருப்பமில்லை .நீங்கள் விரும்பினால் இங்கு வந்து விவாதித்துக் கொள்ளுங்கள்
///சொத்தை,வீடை,தோட்டத்தை,பங்குவைத்ததை போன்று தங்கள் மனைவியையும் ஓடிவந்த சஹாபிகளுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை விவாகரத்து செய்து மணமுடித்து வைத்த கதை உங்களுக்கு ஹதீதாக சொல்லப்படவில்லையா?
உங்களுக்கு இது கிறுக்குத்தனமாக தெரியவில்லை போலும்!////


கம்யுனிசத்தில் திருமண வாழ்க்கை என்பது ஆணாதிக்கத்தனம் .எனவே அங்கு திருமணம் இன்றி எங்ஙனம் வாழவேண்டும் என்று கேட்டு பாருங்கள் .அந்த கிறுக்குத்தனத்தை படித்தீர்களானால் இந்த ஹதித்கள் சொல்லும் விஷயங்கள் புரியும்.

நீங்கள் உங்களுடைய இப்போதைய மனோபாவத்துடன் தவிர்க்க முடியாத ,நிர்பந்தமான காலகட்டத்தில் நடந்ததை ஒப்பு நோக்காதீர்கள்.
ஒருவரை அறிமுகமாகும் வேளையில் ,
உங்களுக்கு மனைவி இருக்கிறாரா?
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
உங்களிடம் வீடு ,கார் இருக்கிறதா?

என்றெல்லாம் கேட்கிறோமே ,இதெல்லாம் ஆணாதிக்கமா?

அந்நபர் ,எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் என்று கூறினார் என்று வைத்துக் கொள்வோம் .இந்த சமயத்தில் உங்களது உள்ளத்தில் ஏற்படும் தாக்கமும்  ,
இதே கேள்விக்கு ;ஒரு பெண் ,எனக்கு இரண்டு கணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களது உள்ளத்தில் ஏற்படும் தாக்கமும் வேறுபடுமா?வேறுபடாதா? 
அப்படியெனில் அதற்கு பெயர் ஆணாதிக்கமா?


////முகம்மதின் வளர்ப்பு மகன் ஸைது தனது மனைவியை விவகாரத்துச் செய்து முகம்மது நபிக்கே திருமணம் செய்துவைத்த நிகழ்வும் உள்ளது.////
நடந்த சம்பவத்தை தவறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு கூறியுள்ளீர்கள்.
சைதுவுக்கும் அவரது மனைவிஜைனபுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது .இதனால் அவர்கள் செய்வதறியாது திளைத்தனர் .
அதனாலேயே அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள முஹம்மது நபி[ஸல்] அவர்கள் அனுமதித்தார் .ஜைனப் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் மாமி மகளாவர் .அவர் அதன் பின்னர் முகம்மதுநபி[ஸல் அவர்களை விரும்பவே அவரை திருமணம் செய்து கொண்டார்கள் .