சனி, 12 பிப்ரவரி, 2011



நண்பர் இப்ராஹிம்,

பாலியல் குற்றங்கள் ஏன் ஆண்களால் பெண்கள் மீது நடத்தப்படுகிறது என்பதற்கு \\பெண்ணுக்கு பாலியல் தேவை ஏற்படும்போது அவளுக்கு தேவையான ஆண் இலகுவாக கிடைத்துவிடுவான்// என்பதாக பதில் கூறியிருக்கிறீர்கள். அதாவது பெண் ஆணை பலவந்தப்படுத்துவதற்கான தேவை இல்லாததாலேயே ஆண்கள் குற்றம் செய்பவர்களாக இருக்கிறார்கள், அதனால் ஆணாதிக்கமில்லை என்பதாக விளக்கமளித்துள்ளீர்கள். இதை நான் தவறு என்கிறேன். இதை நான் மூன்று வழிகளில் மறுக்கிறேன்.

முதல் வழியின்படி, பெண்ணுக்கு ஆண் எளிதாக கிடைத்துவிடுவான் ஆனால் ஆணுக்கு பெண் எளிதாக கிடைக்க மாட்டாள் என்றால் அதன் பொருள் என்ன? பெண் விருப்பப்படும் போது ஆண் விருப்பத்துடனே இசைகிறான். ஆண் விருப்பப்படும்போதோ பெண்ணின் விருப்பம் புறக்கணிக்கப்படுகிறது. பெண்ணின் அழைப்புக்கு ஆண் இணங்கும் போது ஆணின் அழைப்புக்கு பெண் ஏன் இணங்க மறுக்கிறாள்? ஏனென்றால் கலவியின் பிறகான விளைவில் ஆண் பங்கு கொள்ள‌ விரும்புவதில்லை. தெளிவாகச் சொன்னால் இன்பத்தை அனுபவிக்கத் தயாராக இருக்கும் ஆண், பொறுப்பேற்க தயாராக இருப்பதில்லை. ஆனால் பெண்ணோ ஆணின் பொறுப்பேற்காத தன்மையையும், சமூகத்தில் பெண்ணிற்கு காத்திருக்கும் பாதிப்பையும் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே பாலியல் குற்றத்திற்கு தயாராகிறாள். இத்தகைய கடினத்தன்மையுடன் அதை மீறி பாலியல் குற்றத்திற்கு பெண் தயாராகிறாள் என்றால் அதன் பின்னணியில் அதற்கியைந்த காரணம் அவசியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இத்தகைய எதுவும் அவசியமின்றியே ஆண் தயாராக இருக்கிறான் என்றால்; பெண்ணுக்கு தேவை, ஆணுக்கு அது வெறும் நுகர்வு. யோசித்துப் பாருங்கள், தகுந்த காரணமோ, அவசியமோ இன்றி எப்படி ஒரு ஆணால் எந்த அன்னியப்பெண்ணுடனும் கலவிக்கு தயாராகிவிட முடிகிறது? பெண்ணுக்கு ஏற்படவிருக்கும் சமூக ரீதியான சுமைகளோ, உடல்ரீதியான பாதிப்புகளோ எதுவும் ஒரு ஆணை சலனப்படுத்தாமல் அன்னியப் பெண்ணுடன் கலவியில் ஈடுபடும் சிந்தனை எப்படி ஏற்பட்டது? சக மனிதப் பிறவியான பெண்ணின் துன்பங்கள் அனைத்தையும் அலட்சியப்படுத்தும் சிந்தனை ஆணுக்கு எப்படி ஏற்பட்டது? இருவருக்கும் சமமான இன்பத்தைத்தரும் கலவியில் அதன் பிறகான பெண்ணின் பொறுப்புகளை அலட்சியப்படுத்தும் சிந்தனை ஆணாதிக்கச் சிந்தனையல்லாது வேறொன்றாக இருக்கமுடியுமா? பெண்ணுக்கு ஆண் எளிதாக கிடைத்துவிடுவான் ஆணுக்கு அவ்வாறு பெண் கிடைக்கமாட்டாள் என்பதன் பின்னணியிலிருக்கும் இந்த சிந்தனையோட்டத்தை விலக்கிவிட்டு பெண்ணுக்கு எளிது ஆணுக்கு சிரமம் என்பது சாரத்தை தள்ளிவிட்டு சக்கையை எடுத்துக்கொள்வது போன்றது. நீங்கள் சக்கையை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள், நான் சாரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறதா உங்களுக்கு?

இரண்டாவது வழியின்படி, பெண்ணுக்கு எளிதில் ஆண் கிடைத்துவிடுவான், ஆணுக்கு பெண் எளிதில் கிடைக்க மாட்டாள் என்பது சமன்பாட்டு ரீதியில் சமமில்லாதது. பெண் தனக்கு வேண்டிய பொழுதில் ஒரு ஆணை அடைய முடிகிறது என்றால் அதே நோக்கில் ஆணுக்கு எளிதாகவே அந்தப் பெண் கிடைத்திருக்கிறாள் என்பது தான் பொருள் அல்லவா? ஆக ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட விழுக்காடு பெண்ணுக்கு சுலபமாக ஆண் கிடைக்கும் அதே வேளை அதே விழுக்காடு ஆண்களுக்கும் சுலபமாக பெண் கிடைத்திருக்கிறாள். சமூகத்திலுள்ள மொத்த பெண்களும் இவ்வாறு இருக்க மாட்டார்கள் சிலர் மட்டுமே ஒழுக்கத்தை மீறுகிறார்கள் எனும்போது எந்தச் சமூகத்தில் எடுத்துக்கொண்டாலும், எந்தக் காலகட்டத்தில் எடுத்துக்கொண்டாலும் பெண்களின் விழுக்காட்டோடு ஒப்பிடும் போது பலமடங்கு ஆண்கள் ஒழுக்கத்தை மீற தயாராக இருக்கிறார்கள் என்பது ஏன்? பெரும்பாலான பெண்கள் ஒழுக்கத்தை மதிக்கும்போது பெரும்பாலான ஆண்களை ஒழுக்கத்தை மீறவைத்த சிந்தனை எது? ஒப்பீட்டளவில் ஆணைவிட பெண்களுக்கே சமூகக் கட்டுப்பாடுகள் அதிகம். ஆணைவிட அதிக சமூக கட்டுப்பாடுகளை மதித்து பெண்கள் ஒழுங்கு காக்கும்போது, குறைவான கட்டுப்பாடுகளைக் கூட காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஆண் ஒழுக்கம் கெட்டுப்போவதேன்? ஆணுக்கு கிடைப்பது கடினம் என்று சுலபமாக சொல்லிவிட்டு அதில் உள்ளாடியிருக்கும் அம்சங்களை விட்டுவிடுவது சரியானதா?

மூன்றாவது வழியின்படி, பெண்ணுக்கு ஆண் கிடைப்பது எளிது ஆணுக்கு பெண் கிடைப்பது கடினம் என்பதன் பின்னணியிலுள்ள வித்தியாசம் என்ன? குழந்தை பிறப்பு என்பது தான். குழந்தை பிறப்பு என்பதை மட்டும் தவிர்த்துவிட்டால் எளிது கடினம் என்பது மறைந்து சமமாகிவிடும். இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் குழந்தை பிறப்பை தவிர்ப்பதென்பது வெகு சுலபமானது. அப்படியென்றால் ஆணுக்கு கடினம் பெண்ணுக்கு எளிது என்பது தற்காலத்தில் செல்லுபடியாகும் சூத்திரமாக இருக்க முடியது. ஆனால் யதார்த்தம் அப்படி அல்ல. முந்தைய சமூகங்களில் எப்படி சில பெண்களும், பெரும்பாலான ஆண்களும் ஒழுக்கம் மீற தயாரானார்களோ, அதுபோலவே இப்போதும் சில பெண்களும், பெரும்பாலான ஆண்களும் ஒழுக்கம் மீற தயாராகிறார்கள். இது எப்படி? எப்போதையும் போலவே இப்போதும் ஆண்கள் எந்த கவலையுமின்றி பெண்ணை புணர தயாராக இருக்கிறார்கள் என்பது உங்கள் சூத்திரத்திற்குள் உள்ளடங்காமல் இருக்கிறது என்பதை கவனிக்கவில்லையா நீங்கள்? (முந்தைய சமூகத்தை விட முதலாளித்துவம் ஆண் பெண் தனித்திருக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தியிருப்பதால் பெண்களின் விகிதம் சற்று அதிகமாகியிருப்பது போல் தோன்றலாம், ஆனால் இதே விகிதத்தில் ஆணையும் அது அதிகப்படுத்தியிருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்)

ஆக எதையுமே மேலெழுந்தவாரியாக கருத்துக்கூறுவதை விடுத்து ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் காம ஆதிக்கம் என நீங்கள் கூறுவது வெற்று வார்த்தை, ஆணாதிக்கம் என்பதே சரியான கூற்று என்பது விளங்கும். இதை விளங்கிக் கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதுதான் பிரச்சனை.

நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதியில் நான் எழுதியிருப்பதை மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள், அதில் எங்கிருந்து பாலியல் குற்றங்கள் தொடங்கியிருக்கிறது என கூறியிருக்கிறேனேயன்றி மீண்டும் அதற்கு செல்லவேண்டும் என நான் குறிப்பிட்டிருக்கவில்லை. ஆகவே தான் கூறுகிறேன் உங்கள் கற்பனைகளை என்மீது திணிக்காதீர்கள்.

ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் நீக்குவது சாத்தியம்தான் என்பதற்கு பொது உலகின்பாற்பட்டு தான் என் கருத்தை எடுத்துவைத்திருந்தேனேயன்றி மதம் சார்ந்து அல்ல. இதற்கு நீங்கள் மறுப்பு கூற வேண்டுமாயின் பொதுவாகவேதான் கூறியிருக்க வேண்டும். ஆணால் இஸ்லாம் என்று இதில் மதத்தை இழுத்துவந்தது ஏன்? இஸ்லாத்தின் பாகப்பிரிவினை சமாச்சாரங்கள் தனியுடமையை நோக்கியா பொதுவுடமையை நோக்கியா என்பது இங்கு கேட்க்கப்படாத ஒன்று. மதத்தில் கேள்வி எழுப்பும் போது மட்டும் மதத்தை கொண்டு வாருங்கள். பொதுவான கேள்விகளுக்கான பதில் பொதுவானதாகவே இருக்க வேண்டும். முன்பு இவ்வாறு திரித்ததை உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறேன், மறக்க வேண்டாம்.

இதுவரை இருந்த அரசுகள் தனியுடமை, ஆணாதிக்கம் ஆகியவற்றை ஒழிக்க எந்த முயற்சியும் மேற்கொண்டதில்லை, மாறாக சட்டம், ஒழுக்கவிதிகள், மரபு, கலாச்சாரம் ஆகிய அனைத்திலும் ஆணாதிக்க தனியுடமை கருத்துகளையே விதைத்து வைத்திருக்கின்றன. இப்படி எல்லா வகையிலும் அவற்றை பாதுகாக்கும் முயற்சிகளையும் மீறி பொதுவுடமை சிந்தனைகள் நீடித்திருக்கின்றன. சோசலிச அரசு மட்டும் தான் தனியுடமை ஆணாதிக்க கருத்துகளை அதன் அனைத்து வழிகளிலிருந்தும் நீக்கும் வகையில் செயல்படும். நீங்கள் என்ன தான் செத்துவிட்டது வீழ்ந்துவிட்டது என கத்தினாலும் சோசலிசம் வந்தே தீரும் என்பதற்கு டுனீசியா, எகிப்து வழியாக அல்ஜீரியா ஏமன் வரை கண்முன்னே சான்றுகள் இருக்கின்றன. உறவின் முறைப் பெண்களுடன் ஆணாதிக்கம் அன்னியப் பெண்களிடம் போல் வீரியத்துடன் செயல்படுவதில்லை என்பதற்குப் பதிலாக யாரோ ஒருவர் கூறியதைக் கூறியிருக்கிறீர்கள். நேரடியாகவே கூறுங்களேன். இதில் அன்னியப் பெண்ணுக்கும் உறவுப் பெண்ணிற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா? விதிவிலக்குகளை பதிலாகக் கூறி தப்பிக்க வேண்டாமே. உலகில் மத நம்பிக்கையாளர்களே அதிகமிருக்கிறார்கள் என்பதால் எதிலும் மத நம்பிக்கையாளர்களின் விழுக்காடு அதிகமிருக்கத்தான் செய்யும். ஆணாதிக்கம் தனியுடமைக்கு எதிரான போக்குகளில் மட்டுமா இறை நம்பிக்கையாளர்கள் அதிகமிருக்கிறார்கள்? பாலியல் குற்றவாளிகளில் கூட இறை நம்பிகையாள‌ர்கள் அதிகம் தான். ஆணாதிக்கம், தனியுடமைக்கு எதிரான போக்குகள் மக்களிடம் இருக்கிறது என்பதுதான் விசயமேயன்றி அவர்கள் இறை நம்பிக்கையாளர்களா? அல்லர்களா? என்பதல்ல. தவிரவும் இறை நம்பிக்கை தத்துவங்கள் தனியுடமையை நோக்கித்தான் இருக்கிறதேயன்றி பொதுவுடமையை நோக்கியல்ல. அதையும் மீறித்தான் பொதுவுடமைப் போக்குகள் மக்களிடம் தங்கியிருக்கின்றன, அவர்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தாலும் கூட. லிவிங் டுகதரில் வாழ்பவர்களெல்லாம் இறை நம்பிக்கையில்லாதவர்கள் என்று கூற வருகிறீர்களா நீங்கள். லிவிங் டுகதர் மட்டுமல்ல, ஓரினப் புணர்ச்சியாளர்களும்கூட கட்டுப்பெட்டியான மதங்களில் இருப்பவர்களே.

கூட்டுக்குடும்பம் உடைகிறது, நன்நெறியாளர்களை மக்கள் முன்மாதிரியாகக் கொள்வதில்லை இவைகளெல்லாம் சோசலிசத்தை நோக்கியே மக்களைத் தள்ளும். உலகம் தனிமனிதர்களாகச் சிதறச் சிதற சுரண்டல் அதிகரிக்கும், அதிகரிக்கும் சுரண்டலே மக்கள் ஒன்றிணைவதைத்தவிர வேறு வழியில்லை எனும் நிலையை ஏற்படுத்தும், ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய நாள்களில் போராட்டச் செய்தியில்லாத நாளிதழ்களில்லை. கூட்டு இல்லை, நல்லவர்களை முன்மாதிரியாக கொள்வதில்லை என்று எந்த உலகத்தை நீங்கள் கூறுகிறீர்களோ அதே உலகத்தில் தான் மக்கள் ஒருங்கிணைந்து போராட்டமில்லாத நாளில்லை என்றாகியிருக்கிறது. நீங்கள் மடக்கி மடக்கி நான்கைந்து முறை சாத்தியமில்லை என்று கூறிவிட்டால் அது சாத்தியமில்லாமல் போய்விடாது. எதிர்கால உலகம் சோசலிசத்திற்கே என்பதை நேபாள, கிரீஸ் போராட்டங்கள் மட்டுமல்ல, மத்திய கிழக்கின் மக்களும்கூட கட்டியம் கூறுகிறார்கள்.

ஒரே நடைமுறையை உலகமெங்கும் அமல் படுத்த முடியும் என்பதை என்னிடமல்ல கண்விழித்தால் நீங்களே கூட உணர்ந்துகொள்ள‌ முடியும். பலவாறான கொள்கைகள் உலகெங்கும் இருந்தாலும் திருமணம் என்பது உடலுறவிற்கான அங்கீகாரம் எனும் நடைமுறை உலகெங்கும் இருக்கிறது. எந்தச் சட்ட விதிமுறைகளும் தேவையின்றி காலையில் பல்துலக்க வேண்டுமென்பது உலகெங்கும் நடைமுறை. இர‌வு தூக்கத்திற்கானது என்பது உலகெங்கும் நடைமுறை. எதை மனிதன் புரிந்து கொள்ளாமலிருக்கிறானோ அதில் தான் கொள்கைகள் சார்ந்து பேதமிருக்கும். எதை புரிந்து கொண்டானோ அதில் பேதம் தீர்ந்து நடைமுறையாகிவிடும். புரிந்துகொள்ளும் மனோநிலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதே பிரச்சனை.

விளக்கெண்ணெய் விசயத்தில் உங்களைப் போல உயவுத்தன்மையுடன் யாரும் இருக்க முடியாது என்பதை உங்கள் விளக்கெண்ணெய் விளக்கங்கள் தெள்ள‌த்தெளிவாக நிரூபிக்கின்றன. உங்கள் அம்மாவிடமிருந்து நீங்கள் கொண்டுவந்திருந்தாலும் அல்லது வேறு எந்த எம்மாவிடமிருந்து நீங்கள் கொண்டு வந்திருந்தாலும் உங்கள் கையிலிருப்பது நெய்யா விளக்கெண்ணையா என்பது தான் பிரச்சனை. உங்கள் கையை விரித்துக்காட்டுங்கள்?, நீங்கள் எந்தக்கடையில் வாங்கினீர்கள்? அதை நீங்கள் நெய் என அழைக்கிறீர்களா, விளக்கெண்ணெய் என்றா? என்பதையெல்லாம் நான் உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக உங்கள் கையில் நீங்கள் வைத்திருப்பது இன்னின்ன விதங்களில் விளக்கெண்ணையாக இருக்கிறது என என்னுடைய வாதங்களை தெளிவாக தனித்தனி தலைப்பிட்டு விளக்கியிருக்கிறேன். அதை நீங்கள் ஏற்பதும் மறுப்பதும் உங்களைச் சார்ந்தது. ஆனால் நீங்கள் திடீரென என்கையில் இருப்பது விளக்கெண்ணெய் என்றீர்கள். அப்படியென்றால் இன்னின்ன விதங்களில் என் கையிலிருப்பது விளக்கெண்ணெயாக இருக்கிறது என விளக்க வேண்டியது உங்களுடைய கடமை. என்னுடைய கையிலிருப்பது விளக்கெண்ணெயா நெய்யா என உங்களுக்கு தெரியவில்லை என்றால், தெரியவில்லை என்று தான் கூறவேண்டுமே தவிர விளக்கெண்ணை என்று கூற முடியாது. ஏனென்றால் துருவெடுக்கும் தேவைகளுக்காக நான் மண்ணெண்ணையைக் கூட வைத்திருக்கலாம். அதை தெரிந்து கொள்வதற்கு கையைக்காட்டு என என்னிடம் நீங்கள் கேட்க முடியாது. ஏனென்றால் உங்கள் கையை விரித்துப்பார்த்து அது விளக்கெண்ணை என நான் கூறவில்லை. அது விளக்கெண்ணெய் தான் என நான் அறிந்திருப்பதனாலேயே கூறினேன். நான் கையை விரித்துக் காட்ட வேண்டுமென்றால், என் கையிலிருப்பது என்ன என்று உங்களுக்கு தெரியாது எனும் உண்மையை முதலில் வெளிப்படையாகக் கூறுங்கள். அதன் பிறகு நான் கையை விரித்துக் காட்டுகிறேன். இல்லையென்றால் தள்ளிநின்று விளக்கெண்ணெய் என்றோ, நெய் என்றோ, மண்ணெண்ணை என்றோ, அல்லது வெறுங்கை என்றோ நீங்கள் கத்திக் கொண்டிருக்கலாம் எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. ஏனென்றால் உங்களிடம் சான்றிதழ் வாங்க வேண்டுமெனும் அவசியம் எனக்கில்லை.

\\நீங்கள் விதந்தோதும் இசத்தின்படி …….. குற்றம் ஏதும் எந்த நாளும் எங்கும் நிகழாது// மீண்டும் மீண்டும் நான் கூறிக்கொள்வது இதைத்தான். உங்கள் வக்கிரங்களை என்மீது திணிக்காதீர்கள்.

பெய்சல் மன்னனின் ஆட்சியோ, விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தலோ சட்டங்கள் உதவாது என்பது தான் கூறவருவது.

உதாரணங்கள், உவமேயங்கள் யார் எப்படி வேண்டுமென்றாலும் கூறலாம். வாத்தியாருக்கே பாடம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு புத்திக்கூர்மையுள்ள மாணவனை தேர்வு எழுதிக்கொண்டிருக்குபோதே இழுத்துவந்து கையை காலை அடித்து உடைத்து வீட்டில் போட்டு விட்டு ஐந்தாம் வகுப்பையே தாண்டவில்லை குரூரமாய் கிண்டல் செய்தால் என்னவென்பது. விளக்கங்கள் விளங்கவில்லை என்றால் எடுத்துக்காட்டு சொல்லி விளங்கச்செய்ய முயலலாம், அதில் தவறில்லை. உதாரணத்தையே விளக்கமாய் சொல்ல உங்களைப் போன்றவர்களால் தான் முடியும்.

செங்கொடி
....................................................................................................................................................................

செங்கொடி  . ////இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் காமத்தின் ஆதிக்கத்தினால் தான் பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன என்றால் நடக்கும் பாலியல் குற்றங்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஆண் பெண்ணின் மீது செய்யும் பாலியல் குற்றமாகவே இருப்பது ஏன்? இந்தக் கேள்விக்கு பதில் கூறிப்பாருங்கள்////
இந்த கேள்விக்கு நான் ஏற்கனவே டிசம்பர் 2  இல் பதில்  கூறி இருக்கிறேன். ////மேலும் பாலியல் வன்முறையில் ஆணாதிக்கம் இருக்க காரணம் ,ஒரு பெண்ணுக்கு பாலியல் தேவை ஏற்படும்போது அவளுக்கு தேவையான ஆண் இலகுவாக கிடைத்துவிடுவான் .இதனால் வன்முறைக்கு வழி இல்லை.ஆனால் ஒரு ஆணுககு பாலியல் தேவை ஏற்படும்போது பெண் கிடைப்பது அரிது ,இதனால் இயற்கையில் பெண்ணைவிட உடல் சார்ந்த பலம் பெற்ற அவன் வன்முறையில் இறங்குகிறான்.இங்கே ஆணாதிக்கம் இல்லை. பெண்ணும் கிடைக்கும் வாய்ப்பு ஆணுககு கிடைக்காதபோது அவன் நிலைகுலைந்து விடுகிறான் .இப்படி பட்டவனை தண்டனை கொடுத்துத்தான் திருத்த முடியும் என்பது வரலாறு கண்ட உண்மை.மன நிலை மாற்றி திருத்திவிடுவோம் என்பதுகாகிதத்தில் எழுதப்படும் தத்துவம்/////பெண்ணுக்கு கிடைக்கும் அதே வாய்ப்பு ஆணுககு கிடைப்பதில்லை.இதனால் ஆண்கள் அதிகமாக குற்றவாளியாகி விடுகிரார்கள்.

////பெண் தலைமையிலான சமுதாயம் திரும்ப ஏற்படுத்தப்படவேண்டும் என எங்கு நான் கூறியிருக்கிறேன். மேற்கோள் காட்ட முடியுமா?////
 டிசம்பர் 4////அப்போது சமூகத்தை தலைமை தாங்கி நடத்தியவள் பெண். இந்தக்காலகட்டத்தில் பாலியல் குற்றங்கள் இல்லை. ஆனால் இந்த நிலை மாறி வேட்டைக் கருவிகள் தனிப்பட்ட மனிதனுக்கு சொந்தமாகத் தொடங்கியபோது அதாவது தனியுடமை ஆரம்பமானபோது கருவிகளைப் போலவே பெண்களையும் ஆண் சொந்தம் கொண்டாடத் தொடங்கினான். ஏனென்றால் பெண் சமூகத்தை தலைமை தாங்கியதை வீழ்த்தி, தலைமைப் பொறுப்பை ஆண் எடுத்துக்கொண்டான். இதுதான் பொதுவுடமையும் தனியுடமையும் பிரியும் காலகட்டம். பெண் தலைமை தாங்கியபோது சமூகம் பொதுவுடமையாய் இருந்தது. அதனால் அங்கு பாலியல் குற்றம் உட்பட எந்தக் குற்றங்களுக்கும் இடமில்லாமல் இருந்தது. ஆண் எந்த விதத்திலும் பெண்ணைவிட தாழ்ந்தவனாக கருதப்படவில்லை. அவரவர் பங்களிப்பை அவரவர் செய்து கொண்டிருந்தனர். இன்று நாம் வளர்த்தெடுத்திருக்கும் விவசாயம், கட்டடக் கலை, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் பெண்களின் கண்டுபிடிப்பாய் இருந்தது. ஆனால் பெண்ணிடமிருந்து தலைமை பிடுங்கப்பட்டபின்பு சமூகம் தனியுடமைக்கு மாறுகிறது. கிடைக்கும் பலன்களை பொதுவில் பகிர்ந்த நிலை மாறி தனித்தனி உடமைகளாய் மாறின. இந்த வழியில் தனக்கு பிடித்த பெண்ணை தன்னுடைய சொத்தாக கருதத்தொடங்கினான். பிற பொருட்களைப் போலவே பெண்ணையும் தன்னுடைய சொத்தாக கருதத்தொடங்கிய அந்தக் கணத்திலிருந்துதான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடங்கியது. பெண் தலைமை தாங்கியபோது ஆண் எந்தவிதத்திலும் அடிமைப்படுத்தப்படவில்லை. ஆனால், ஆண் தலைமை தாங்கியபோது படிப்படியாக பெண் என்பவள் ஆணின் தேவைகளுக்காவே பிறந்தவள் எனும் கருத்தாக்கம் நிறுவப்பட்டு, அடிமையாக்கப்பட்டாள். ஆகவே பாலியல் குற்றங்களுக்கான தொடக்கம் தனியுடமையில் இருக்கிறது ////
இதனுடைய பொருள் பெண் தலைமை ஏற்படுத்த வேண்டும் என்பது இல்லையா?
////வாழைப்பழத்தை நேரடியாக வயிற்றில் போட்டுவிடவேண்டும் என எதிர்பார்ப்பது முறையல்லவே.////
பிறகு உங்களைப்போல மூக்கை சுற்றி சாப்பிட வேண்டுமா?
////பழங்கால வாழ்முறை பற்றிய உங்கள் புரிதல் என்ன? உங்கள் கருத்து என்ன? அவற்றை நீங்கள் கூறலாமே. வெறுமனே நான் கூறுவதிலிருந்து சிலவற்றை எடுத்து பதில் கூறுவதோடு முடித்துவிடாமல், உங்கள் கருத்தையும் கூறினால் தானே வாதத்திற்கு முழுமையாகும்///
ஆதம் [அலை]காலத்தை பற்றியா?அதற்க்கு பிறகு உள்ள காலத்தைப் பற்றியா?இவர்களது காலத்தை பற்றியும் குர்ஆன் ஹதித்களில் உள்ளதைத் தவிர மற்றவற்றில் எனக்கு எந்த ஈடு பாடும் இல்லை.எங்களது வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை சாராம்சங்களும் இஸ்லாத்தில் உள்ளன .இவற்றினைக் கொண்டு நிகழ் காலத்தில் நிலவும் பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம் ?வரும் காலத்தை எங்ஙனம் எதிர் கொள்ளலாம் ?என்பதிலே எங்களது சிந்தனைகள் உள்ளன. மற்றபடி பண்டைய மக்கள் அவர்களுக்கு இருந்த அறிவைக் கொண்டு ,கிடைத்த வாழ்வு ஆதாரங்களைக்  கொண்டு  வாழ்ந்து உள்ளார்கள்.கிடைக்கும் சுகங்களை நழுவ விடாமல் தனதாக்கிக்கொண்டார்கள்  .ஒழுங்கற்ற முறையில் பாலியல் தேவைகளை நிறைவேற்றி வந்த அவர்களிடையே இறைத்தூது கிடைத்தபின்னரே குற்றங்கள் பற்றிய வரைமுறை வந்திருக்கும்.இறைத் தூதர்கள் வரவில்லைஎனின் சீனத்து ஏரிக்கரை கிராம வாழ்க்கையே உலகமாக இருந்திருக்கலாம்.இப்போது அந்த கிராமத்துக்கு சுற்றுலா பயணிகள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளனர்? கொஞ்சம் தடை நீக்கி பாருங்கள் .மூன்றாண்டில் அல்லி ராஜ்ஜியம் என்ன ஆகும் என்று பார்த்து விடலாம். ஒரு பெண்ணின் பேட்டியை வைத்து அனைத்து மக்களையும் தீர்மானிக்க முடியாது.  
 ////ஒரு குடும்பமாக பொதுவுடமையை பேணுகிறார்கள். தனியுடமை என்பது நேரடியாக வாரிசு என்ற அடிப்படையில் மட்டும் நில்லாது, சொத்து விரியும்போது, அனுபவரீதியாக இன்னும் அதிகம் பேர் அதனால் பலனடைவதை அனுமதிக்கிறார்கள். ஆக இங்கு தனியுடமை என்பது குறைந்த அளவிலேனும் பொதுவுடமையை நோக்கிப் ப‌யணிக்கிறது. இதை விரிவடையச் செய்யமுடியும்////
இது குரான் கூறும் பாகப் பிரிவினை சட்டம் சொத்து ஒருவரிடாமே குவிவதை தடுக்கறது.இஸ்லாமிய பாகப் பிரிவினை சட்டம் ஒருவனின் தந்தை தாய் மற்றும் சகோதரி ,சகோதரன் வரை நீளுகிறது ஆனால் மற்றசட்டங்களோ  ஒருவனின் மனைவி மகன் மகள் களோடு சுருங்கி விடுகிறது.இனி விரிவடைய வாய்ப்பு இல்லை.இஸ்லாமியர்களே இப்போது சட்டத்தின் அளவில் சொத்தை பிரிக்காமல் மனைவி மகன்,மகள் அளவில் சுருங்கி வரத் துவங்கிவிட்டனர்..ஆக மிச்சமிருந்த குறைந்த அளவு பொதுவுடமைகூட இப்போது தனிஉடமை யாக பயணிக்கிறது. இன்று பெருமளவில் பொருளீட்ட துவங்கிவிட்ட  இளைஞர் களும்.திருமணமாகாதவர்கள் கூட சொத்துக்களை தங்களது பெயரிலேயே பதிவு செய்கிறார்கள் .தந்தை அல்லது தாயாரின் பெயரில் இருந்தால் மற்ற சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் பங்கு போய்விடக் கூடாது எனப் பயப் படுகிறார்கள் 
   
////நெருக்கமான, உறவின் முறையுள்ள, அறிமுகமான பெண்கள் எனும்போது அங்கு ஆணாதிக்கம் அனீயப் பெண்கள் போல வீரியத்துடன் செயல்படுவதில்லை////
தயவு செய்து இணையதளங்கள் வந்த பிறகு வீரியமேல்லாம் அதிகரித்து விட்டது.சமிபத்தில் தினமணியில் பார்த்த ஒரு கட்டுரையாளர் ,வீட்டில் தனியாக மகன் மகளை விட்டு செல்வதே எச்சரிக்கை அற்ற செயலாக உள்ளதாக குறிப்பிடுகிறார்.
.///ஆணாதிக்கமும் தனியுடமையும் நிறைந்த மனிதர்களிடமும் அதற்கு எதிரான தன்மைகளும் இன்னும் மிச்சமிருக்கிறது////
அவர்களில் மத நம்பிக்கையாளர்களே அதிகம். மிச்சமிருப்பதை தக்க வைப்பதையே பெரிய சாதனை.ஆயின் சாத்தியமில்லை சாத்தியமில்லை  பொதுவுடைமை, என்பது சாத்தியமில்லை."லிவ்விங் டுகெதர்" வேண்டுமானால் தரங்கெட்டு அதிகரிக்க வாய்ப்பு உண்டு அது இன்னும் சமுதாய சீரழிவை அதிகரிக்கும் இறை நம்பிக்கை அற்றவர்களால் பாலியல் வன்முறை இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
///சாத்தியப்படாது என எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்பதை விளக்கமுடியுமா உங்களால்?///
பண்டைக்கால ஆய்வுகள் ,மார்க்ஸ் ,ஏங்கல்ஸ் படிப்பதை  ஓரம்கட்டிக் கொண்டு  சிந்தனைகளை நிகழ் காலத்தோடு ஒட்டினால் சாத்தியமே படாது என்ற அடிப்படை நீங்கள் அறிந்த ஒன்றாகவே இருக்கும். உலகில் எந்த அரசும் தனியுடைமையை எதித்து எந்த அடியும் எடுத்து வைக்கவில்லை. மாறாக ஊட்டி வளர்த்திருக்கின்றன.உங்களது விரக்தியே சாத்தியபாடாததை வெளிகாட்டுகின்றன. கொள்கை செம்மலாகிய நீங்களோ குழு அளவில் கூட இயன்றவரை உங்களது சோஷலிச பாதையை செயல் படுத்த முடியாது என்று  கருதுகிறீர்கள். வல்லரசுகளாக திகழ்ந்த சோஷலிச நாடுகளே முதலாளித்துவத்தை நோக்கி திரும்பிவிட்ட  போது உங்களை போன்ற சிலர் போடும் வெற்று கூச்சலில் யாருக்கு நம்பிக்கை வரும்? கூட்டு குடும்பமே உருக்குலைந்து விட்ட பிறகு கூட்டு நாடு,கூட்டு உலகம் என்பது எப்படி சாத்தியம்?
ஒருவன் சுரண்டலின் மூலம் செல்வந்தராவதைக் கண்டு மக்கள் கொதித்தார்கள். அவனின் செல்வத்தை குப்பை என கருதினார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களிடம் அவன் சுரண்டி செல்வம் சேர்ப்பது போல் தானும் செல்வம் சேர்க்கவேண்டும் என்று சுரண்டல் பேர்வழியை ரோல் மாடலாக கொள்ளும் கயமை முதன்மை பெற்றுள்ளது.. மகாராஸ்ட்ராவில் கிராமங்களில் விவசாயத்தில் ,சுற்றுப்புற சூழ்நிலையில் ,சமூக ஒழுக்கத்தில் மறு மலர்ச்சியை  ஏற்படுத்திய அன்ன ஹசாரே பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ? மேலும்,திராட்சை விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது மூலம் இறக்குமதியாக இருந்த திராட்சையை ஏற்றுமதியாக மாற்றினார். தன்னால் இந்தியாவிற்கு லாபத்தை எற்படுத்தியவரைப் பற்றி யாருக்கும் தெரியாது.ஆனால் இந்தியாவின் மக்கள் செல்வத்தால் சூதாட்டக் காரரிடமிருந்து 25 லட்ச ரூபாய் வைர நெக்லசை கல்யாண பரிசாக பெற்றுக் கொண்டது முதல் கோடியாக கோடியாக லாபம் ஈட்டும் டெண்டுல்கரை தெரியாதவர்கள் உண்டா? இப்படி மக்கள் இருக்கும் போது சோசலிசமாவது ,மண்ணாங்கட்டியாவது l  
. . ///எங்கள் கொள்கைகளை எந்த மத நம்பிக்கையுடையவர்களையும் விட தீவிரத்தன்மையுடன் நாங்கள் பின்பற்றுகிறோம்///
மாவோயிஸ்ட்கள்,ரெட் டாக்ஸ் போல்  அல்லதவாறு இருந்தால் வரவேற்ப்போம்.ஆனால் கண்ணால் காண முடியவில்லையே 
கொள்கை அன்று நடைமுறை என்றே வைத்துக் கொள்வோம் .ஒரே நடைமுறையை ,அதாவது ஒரு மதத்தின் நடைமுறையை ,அல்லது மதமற்றவர்களின் பல நடைமுறைகளில் ஒரு நடைமுறையை உலகம்  முழுவதும். அமல்படுத்த முடியுமா\?
////முதலில் அது நெய்தான் என நீங்கள் நிருபியுங்கள், திறந்து காட்டுங்கள். பிறகு அதை நான் விளக்கெண்ணெய் என காட்டுகிறேன் என்றீர்கள். இப்போதோ உங்கள் கையிலிருப்பதை நான் ஏன் ஆராயவேண்டும் என்கிறீர்கள். நீங்கள் கூறுவது என்ன என்பது உங்களுக்காவது புரிகிறதா? தொடக்கத்திலிருந்து இதைத்தான் நான் கூறிக்கொண்டிருக்கிறேன். பதில் கூறவேண்டும் என்பதற்காக எதையாவது உளறிவைக்காதீர்கள்.////
உங்கள் அம்மா வீட்டு நெய்யை விளக்கெண்ணை என்று கருதி கம்யுனிச கடையில் வாங்கிய விளக்கெண்ணையை நெய் என்று செங்கொடி யில் கூறி வந்தீர். 
உங்க அம்மா வீட்டு  நெய்யும் என்கையில் இருக்கும் நெய்யும் ஒரே பிராண்டு என்பதால் நீங்க வாங்கியது நெய் அல்ல ,விளக்கெண்ணை தான் என்றேன்.
மேலும்,இல்லை அது நெய்தான் என்று நீங்கள் நிருபிக்கையில் நான் அதை விளகெண்ணை என்பதை நிருபிக்கிறேன் என்றேன் .
ஆனால் ,நீங்கள் அதை மறுத்து ,நீங்களே கம்யுனிச கடையில் வாங்கி நிறுவி காட்டுங்கள் என்று கூறியதால்,
என் கையில் நெய் இருக்கும்போது நான் வெண்ணைக்கே அலைய வேண்டியதில்லை. பிறகு நான் ஏன் விளக்கெண்ணையை வாங்கி அதை நெய்யா விளக்கெண்ணையா என்று ஆராய வேண்டும்?
இது உங்களுக்கு புரியாது அல்ல .இருந்தும் மட்டந்தட்டவேண்டும் என்பதே உங்கள் இலக்கு .
முதலாளித்துவ சமூகத்தில் லிவிங் டுகெதர் சாத்தியமில்லை.மற்றும் கம்யுனிச கொள்கையின்படி ஒரு நடைமுறை கூட செயல் படுத்த சாத்தியமில்லை என கூறி வருகிறீர்கள்.பிறகு ஏன் குர்ஆனில் அற்புதங்களாக சொல்லப்பட்டவைகளை ஏன் சாத்தியமில்லை என்று பக்கம்  பக்கமாக  எழுத வேண்டும்?
இஸ்லாமிய சட்டப்படி லிவிங் டுகெதர் என்பது பாலியல் குற்றம் .இந்திய சமூகமும் இதை ஏற்றுக் கொள்ளாது.நீங்கள்  விதந்தோதும் இசத்தின்படி ஆணாதிக்கமும் பெண்ணாதிக்கமும் இல்லாத ஆட்சியில் எந்த ஆணும் எந்த பெண்ணை பாலியல் தேவைக்கு அழைத்தால் உடன்படவேண்டும். எந்த பெண்ணும் எந்த ஆணை பாலியல் தேவைக்கு அழைத்தாலும் உடன்படவேண்டும்.என்று அறிவித்துவிட்டால் பாலியல் வன்முறை ,குற்றம் ஏதும் எந்த நாளும் எங்கும் நிகழாது.
நான் பெய்சல் மன்னரின் ஆட்சியை பற்றி கூறினால் நீங்கள் வீக்கிலீக்ஸ் சொல்லியுள்ளீர்கள்.முன் மாதிரியை நல்லவர்களின் ஆட்சியைத்தான் சொல்லமுடியும் .உங்களுக்கு இதற்க்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதற்காக விக்கிலீக்ஸ் உதவி தேவைப் படுகிறது.சரி அதெல்லாம் இருக்கட்டும். நான் எதையும் உதாரணமாக வைத்து கேட்கவில்லை.நான் கேட்பது என்னவெனின்,ஐந்தாவது வகுப்பு தேறாதவன் ப்ளஸ் டூ தேர்வு எழுத தன்னை அனுமதித்தால் 1200 /1200 மதிப்பெண்கள் எடுத்து காட்டுகிறேன் என்று சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?