வெள்ளி, 20 மே, 2011


பண்ணையில் இஸ்லாம்

பள்ளிவாசலின் உட்புறம்.

பள்ளிவாசலின் வெளித்தோற்றம்


,










அஸ்ஸலாமுஅலைக்கும்.. தப்லீக்ஜமாத்தின் சாதனை:நமதூரில் முப்பது ஆண்டு காலமாக மவ்லவி முஹம்மது மைதீன் பாக்கவி என்பவர் இமாமாக இருந்துவந்தார்.இவரது கம்பீரமான தோற்றமும் குரல்வளமும் மக்களிடம் இவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத்தந்தது.இவரது தந்தையும் ஆலிம்தான் மிகுந்த தக்வாதாரி .கண்ணியமிக்கவர்.தனது தள்ளாத வயதிலும் சிறுவர்களுக்கு கூட முதலில் சலாம் சொல்லும் இயல்பு உடையவர்.ஆனால் அவர் தம் மைந்தரோ அதற்கு நேர் மாற்றம் .இன்னார் எனக்கு சலாம் சொல்லவில்லை என்று புகார் சொல்லும் வழக்கமுடையவர். 1983 இல் இவர் மரணம் அடைந்தபோது அவரது மகனாகிய இமாம் முஹம்மது மைதீன் மௌலவி தனது தந்தையை தனது சொந்த ஊரான  மேலப்பாலயத்தில் அடக்கம் செய்யப்போவதாக சொன்னார். ஆனால் மக்கள் வற்புறுத்தலின்  பேரில் ஆராம்பண்ணைனையில் தனி இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு தனது தந்தையின் கப்ரில் தர்கா கட்ட அனுமதி கேட்டார்.பலர் அனுமதி கொடுக்கமுன் வந்ததும் தப்லீக் ஜமாத்தில் முக்கியமான சிலர் கொதித்தெழுந்தனர்.தர்கா கட்ட அனுமதி மறுத்தனர்.இதனால் இமாம் ஊரைவிட்டு போகப்போவதாக மிரட்டினார்.அவரின் ஆதரவாளர்கள் ஆத்திரமுற்றனர்.தர்கா கட்டுவதற்கு அனுமதி அளிக்குமாறு நிர்வாகத்தை வலியுறித்தி வந்தனர்.இருந்தாலும் நிர்வாகத்தில் இருந்த தப்லீக்ஜமாத்தினர் தர்கா கட்டுவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்ததால் இமாம் ,வேலையைவிட்டு விலகி மேலப்பாளையம் சென்றார்.இவர் விலகியதும் இவரது ஆதரவாளர்கள் பிரிவு உபச்சார விழா நடத்தினார்கள்.அதில் டிஜெஎம்.சலாவுத்தின் ஆராம்பன்னையில் அராஜாகம் நடந்ததால் முஹம்மது மைதீன் மௌலவி ஹிஜ்ரத் செய்ததாக வர்ணித்தார்.கள்ளனுக்கு கள்ளன் புகழாரம் .
மேலாப்பாலயத்தில் தனது தந்தையின் தர்காவை துவங்கி  வருடந்தோறும் முப்பெரும் விழா நடத்தி வருகிறார் .தப்லீக் ஜமாத்தினரின் பெரும் முயற்சியால் நமதூரில் குப்ரியத் தடுக்கப்பட்டது.தப்லிக் ஜமாத்தில் முதன்மையாக இருந்தவர்கள் ,நண்ணி அஹ்மது மைதின் அவர்களும்,காசுலெப்பை மதார் மைதின் அவர்களும் ஆவார்கள். இப்போதைய நமதூர் தப்லிக் ஆக இருந்தால் கர சேவை செய்து தர்கா கட்டியிருப்பார்கள்.மேலும் மவுலவி.முஹம்மது மைதீனின்  தந்தை அவர்களை இறைவன் நல்லடியாராக ஏற்று கொண்டதால்தான் அன்னார் நமதூரில் அடக்கம் செய்யப்பட்டார் போலும் . இல்லையெனில் அவரது கப்ர் சிர்க்குகளும் அனாச்சாரங்களும் நிறைந்த விழா நடைபெறும் இடமாக ஆகியிருக்கும். இறைவனே அனைத்தையும் அறிந்தவன்.
ஆராம்பன்னையில்  21/05/2011 அன்று  நடந்த  இரத்ததான  படங்கள்