ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013




அன்பு சகோதரர் பெய்சல் அஸ்ஸலாமுஅலைக்கும் .
                                   
                                முகநூலில் பீஜே அவர்களை பொய்யன் என்று கடுமையாக விமர்சித்ததால் கமெண்ட் கொடுத்தேன் .உடனே நேரடி விவாதத்திற்கு வரத்தயாரா?என்று சவால் விட்டீர்கள் .நேரடி விவாதம் வேண்டாம் முகநூலிலே விவாதிப்போம் என்று அழைத்தால் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என்று அழைத்தீர்கள .சரி வருகிறேன் என்றதும் பதில் இல்லாமல் 5 மாதங்கள் கழித்து அதை ஞாபகப் படுத்திய பின்னர் மீண்டும் நேரடி விவாதத்திற்கு ஒப்பந்தம் பண்ண வாருங்கள் என்று அழைத்தீர்கள் .ஒபந்தம் போட்டு விவாதம் பண்ணும் அளவுக்கு நானோ நீங்களோ மார்க்க அறிஞர்கள் இல்லை .அதனால் எங்களது ஆறாம்பண்ணை சுன்னத் ஜமாஅத் பள்ளியிலே வைத்து அவரவர் தங்களது மார்க்க அறிஞர்கள் மூலம் மார்ர்கம் அறிந்ததில் எது சரி என்று விவாதிப்போம் வாருங்கள் என்றேன் .
முக நூலில் விவாத சாட்டை பாருங்கள்
Ibrahim Sheikநீங்கள் உண்மையாளராக இருந்தால் இணைய தளத்திலே விவாதித்திருக்க  முடியும் ஆனால் மவ்லவி முஸ்தபா மஸ்லஹி நேரடி விவாதத்தில் பெரிய அறிஞர்களிடம் சொதப்பியது போல் சாதாரண என்னிடம் எழுத்து விவாதத்தில் சொதப்ப முடியாமல் மாட்டிக் கொண்டார் .ஏனெனில் எழுத்து விவாதத்தில் உண்மை வெட்ட வெளிச்சமாகிவிடும் .ஆகவே யார் வெற்றியாளர் என்பதில் போட்டி நடக்கவில்லை .எது உண்மை என்பதை அறிந்து கொள்ள எழுத்து விவாதமே போதுமானது .ஆனால் நீங்களோ நேரடிவிவாதத்துக்கு ஜகாத் சூனியம் என்றெல்லாம் அழைப்பது நகைப்புக்கு உரியது .அது சம்பந்தப்பட்ட ஒரு ஹதிதுவை உங்களால அரபியில் கூற முடியுமா? சூனியம் ஜக்காத் போன்ற முக்கிய பிரச்னைகளை விவாதிக்கும் அளவுக்கு எனக்கு மார்க்க அறிவுகள் இல்லை .
நீங்கள் ஜக்காத் பற்றி விவாதிக்க அழைக்கும் முன் எனது சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
ஒருவர் வருட வருமானத்தில் சக்காத் கொடுத்த பிறகு அந்த வருமானத்தை கொண்டு ஒரு லாரி வாங்குகிறார் .மறு வருடம் அந்த லாரியினால் கிடைக்கும் வருமானத்திற்கு ஷக்காத் கொடுத்தால் மட்டும் போதுமா?
இதற்கு பதில் சொல்லுங்கள் .நீங்கள் ஒப்பந்தம் பண்ணி விவாதிக்கக் தகுதியான ஆள் என்பதையும் எனக்கு அந்த தகுதி இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்
July 27 at 10:16pm · Like

July 27 at 10:16pm · Like

Faizal Mak அன்பான சஹோதரரே
நீங்கள் ஒரு கேள்வியல்ல ஆயிரம் கேள்விகளை சத்தியம் தெரிய வேண்டும் என்ற முறையில் கேட்டல் நிட்சயம் வரிக்கு வரி பதில் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் .....
நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்வியை சற்று தெளிவாகவும் புரியும் படியாகவும் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில்
தருகிறேன் உங்களுது கேள்வி தெளிவாக இல்லை தெளிவாக கேளுங்கள்

அடுத்து நேரடியான விவாதம் நடத்த அழைப்பு விடுத்தால் வர முடியாது என்று குற வேண்டியது தானே அதற்கு எதற்கு இத்தனை உலப்பல் பதில்கள் இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சூனியம் சமந்தமாக உங்கள் தலைவர் திரு P .J .வுடன் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதம் நடத்த எங்கள் உலமாக்கள் தயார் நீங்கள் தயாரா தலைமையிடம் கேட்டு விபரம் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதையும் நடத்தி விடுவோம்
July 29 at 1:32am · Like
Ibrahim Sheik ////நீங்கள் இப்பொழுது கேட்ட கேள்வியை சற்று தெளிவாகவும் புரியும் படியாகவும் கேளுங்கள் இன்ஷா அல்லாஹ் பதில்
தருகிறேன் உங்களுது கேள்வி தெளிவாக இல்லை தெளிவாக கேளுங்கள் /////தெளிவாகத்தான் கேட்டுள்ளேன் ,இன்னும் தெளிவாக சொல்லுகிறேன்
ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
Faizal Mak அன்பான சஹோதரரே 
உங்களது கேள்வி =ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
பதில் =
நீங்கள் போதுமா என்று மட்டும் கேட்டதினால் போதும் என்ற பதிலோடு நிறுத்தி கொள்கிறேன் மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கேளுங்கள் சொல்ல தயாராக உள்ளேன் 
அடுத்து 
கூட்டு துவா என்றால் என்ன ? அதன் பொருள் என்ன ? என்று கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதற்கும் பதில் ரெடியாகத்தான் உள்ளது அடுத்து எங்களின் குருவும் ஜமாலியின் குருவும் எங்களின் உயிருனும் மேலான கண்மணி நாயகம் நபிﷺ அவர்கள் தாமே தவிர வேற யாரும் இல்லை
July 30 at 2:26pm · Edited · Like
Ibrahim Sheik போதுமா என்று கேட்டால் போதும் என்பதற்கு காரணங்களையும் தெளிவாக சொல்லுவதுதான் நல்லது
July 30 at 4:59pm · Edited · Like
uly 30 at 4:59pm · Like

Ibrahim Sheik ஐவேளை தொழுகைக்கு பிறகு மத்ஹப் ஜமாத்தினர் ஓதும் கூட்டு துஆ பற்றி த்தான் கேட்டுள்ளேன் 
அதற்கு ஆதாரம் காட்டுங்கள்
July 30 at 5:01pm · Like
இதன் பின்னர் பைசல் பதில் சொல்ல வரவே இல்லை .ஆயிரம் கேள்வியானாலும் கேளுங்கள் .பதில் தருகிறோம் /பதில்கள் ரெடியாக இருக்கின்றன என்று சொன்னவர் 2 கேள்விகளுக்கே பதில் அளிக்காமல் பதுங்கிவிட்டார் .இப்படி 2 கேள்விகளுக்கே பதில் தராமல் ஓடியவர் ஒப்பந்தம் போட்டு எங்கிருந்து விவாதம் நடத்த ?
அவர் ஷக்காத் பற்றி தந்த பதிலை பார்ப்போம்
Faizal Mak அன்பான சஹோதரரே 
உங்களது கேள்வி =ஒருவரின் வியாபாரத்தில் 20 லட்ச ரூபாய் லாபம் வருகிறது .அதற்கு அவர் 2.5% ஷக்காத் கட்டிய பிறகு மீதி பணத்தில் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்குகிறார்.9.5 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார் .இப்போது ஒரு ஆண்டு ஓடிவிட்டது .அவர் லாரியின் வருமானத்திற்ற்கும் வீட்டு வாடகை வருமானத்திற்கும் ஷக்காத் கொடுத்தால் போதுமா?
பதில் =
நீங்கள் போதுமா என்று மட்டும் கேட்டதினால் போதும் என்ற பதிலோடு நிறுத்தி கொள்கிறேன் மேலும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கேளுங்கள் சொல்ல தயாராக உள்ளேன் .
லாரியின் வருமானத்திற்கும் வீட்டு வாடகைக்கும் ஷக்காத் கொடுத்தால் போதும் என்கிறார் .பைசல் ,பீஜே அவர்களும் அப்படித்தான் கூறுகிறார் .பிறகு விவாதிக்க என்ன வேண்டிக் கிடக்கிறது ?லாரி வாங்கிய லாபத்திற்கும் வீடு வாங்கிய லாபத்திற்கும் ஒருதடவை ஷக்காத் கொடுத்தல் போதும் .வருடந்தோறும் லாரியின் மதிப்பிற்கும் வீட்டின் மதிப்பிற்கும் தங்க நகையாக இருந்தால் அதன் மதிப்பிற்கும் கொடுக்க வேண்டியதில்லை .லாரியாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கும் வீடாக இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்திற்கும் ஷக்காத்  கொடுக்க வேண்டும் தங்க நகையாக இருந்தால் அதிலிருந்து வருமானம் வர வாய்ப்பில்லை அதனால் வராத வருமானத்திற்கு ஷக்காத் கொடுக்க வேண்டியதில்லை என்கிறார் .அதைத்தானே நீங்களும் சொல்லுகிறீர்கள் பிறகு விவாதம் தேவையில்லையே .இதில் ஒப்பந்தம் போட்டு விவாதிக்க வ்வேறு என்ன இருக்கிறது?
இன்ஷா அல்லாஹ் நீங்கள் விரும்பினால் இஸ்லாத்தில் சூனியம் சமந்தமாக உங்கள் தலைவர் திரு P .J .வுடன் வேண்டுமானாலும் மக்கள் மன்றத்தில் பகிரங்க விவாதம் நடத்த எங்கள் உலமாக்கள் தயார் நீங்கள் தயாரா தலைமையிடம் கேட்டு விபரம் கூறுங்கள் இன்ஷா அல்லாஹ் அதையும் நடத்தி விடுவோம்.
பீஜே அவர்கள் கிறித்தவர்களுடன் பைபிள் இறைவேதமா?இயேசு இறைமகனா? என்ற தலைப்புகளில் விவாதம் பண்ணுவார் 
காதியானிகளுடன் காத்தமுன் நபி போன்ற தலைப்புகளில் விவாதம் பண்ணுவார்கள் 
எங்கள் கொள்கையுடன் நெருங்கியுள்ள ஜாக் அறிஞர்களுடன் ஷக்காத் சூனியம் போன்ற சட்ட பிரச்னைகள் பற்றி விவாதம் பண்ணுவார்கள் .
உங்களுடன் அவ்ளியாகக்ளிடம் உதவி தேடலாமா?மதஹப் கிதாபுகளில் உள்ள ஆபாசம்கள் பற்றியே விவாதிப்பார்கள் .இவற்றிலிருந்து நீங்கள் மீண்டே பிறகே ஷக்காத் சூனியம் பற்றி உங்களிடம் விவாதிப்பது பற்றி பரிசீலனை செய்வார்கள் .ஆதலால் உங்களது சவாலை நான் எங்களது தலைமைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்