அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திரு பெயரால்,
விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக,அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக|உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்'நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். குர்ஆன்16';125 அன்பார்ந்த இளைஞர்களே| அஸ்ஸலாமு அலைக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருப்பதாலோ என்னவோ நமது இளைஞர்கள் அவ்விளையாட்டில் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர்.குக்கிராமத்திலும் இருபதினாயிரம் செலவழித்து டோர்ணமன்ட் நடத்தும் அளவில் ஆர்வமாய் உள்ளனர்.இந்த ஆர்வம் இந்தியன் டீமில் முஸ்லிம்கள் இரண்டு அல்லது மூன்று பேர் சிலசமயங்களில் நான்கு பேர்களை கூட இருக்க வைத்துள்ளது.இது 20percent க்கும் அதிகம்.ஆனால் இந்திய,மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் 2percent க்கும் குறைவு.நாம் எந்த வகையிலும் எவரை விடவும் ஆற்றலில் குறைந்தவர்கள் அல்ல என்பதற்கு கிரிக்கெட் ஒரு சாட்சி.இன்னும் 90 களில் 10th,plus2 ரிசல்ட் ஐ பார்த்தால் டாப் 10 rank holder களில் ஒரு முஸ்லிம் பெயரைக்கூட பார்க்க முடியாது.2000 க்கு பிறகு பல ஆண்டுகள் state 1st முதல் 10th ரேங் வரை பல முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற ஆரம்பித்தனர்.அது மட்டுமன்று பல ஸ்கூல்கள் தங்களது ஸ்கூலின் டாப்பெர்ஸ் லிஸ்ட் ஐ விளம்பர படுத்தும் போது பார்த்தால் அதில் இருபது முதல் நாற்ப்பது சதவீதம் வரை முஸ்லிம் மாணவர்கள் இடம்பெறுவதை பார்க்கமுடிகிறது.ஆம் ,நாம் படிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதையே இந்த தேர்வு முடிவுகள் காட்டுகின்றன.நாம் கல்வியில் நல்லதொரு வழிகாட்டலுடன் நமது முனைப்பை காட்டினால் இட ஒதுக்கீடு அவசியமே என்பது ஒரு புறம் ,இட ஒதுக்கீடு இல்லாமலே நாம் இருபது சதவீத அரசு வேலைகளில் நுழைய முடியும்.மெடிக்களிலும் பொதுப்பிரிவில் நாம் முன்னூறுக்கும அதிகமான இடங்களில் இடம் பெற்றிட முடியும் அதேப்போன்று ஐ.பீ.எஸ்.'ஐ.எ.எஸ்.;ஐ.ஐ.டி.யிலும் நமது பங்கை நாம் மீட்டெடுக்கமுடியும்.ஆனால் நமது சமுதாயத்தில் உள்ள கல்வியாளர்கள்,அரசு உயர் பதவி வகிப்பவர்கள்,அதிலிருந்து ரிடையர்ட் ஆனவர்கள்,இதில் கவனம் கடுகளவும் கொள்வதில்லை.தங்களை முஸ்லிம்களாக காட்டிகொள்வதிலேயே சிலர் வெட்கப்பட்டனர்,இன்னும் சிலர் அச்சப்பட்டனர்.யஸ்வந்த் சின்ஹா,ஜக்மோகன் போன்ற உயர் பதவி வகித்தவர்கள் போன்று ஏராளமானோர் ரிடயர்ட் ஆனபிறகும் ரிசைன் பண்ணியும் தங்களது காவி முகத்தை காட்டினர்.ஆனால் நம்மவர்களை நாம் அப்படி இருக்கச் சொல்லவில்லை.சமுதாயப்பணி ஆற்றினாலே போதும். வருவார்களா?
நமது மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இருக்கிறார்.இன்று சமுதாயம் கொள்கை யளவில் சிதறுண்டு கிடக்கும்போது,கல்வியை மட்டுமே மையமாக்கி ,டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தலைமை ஏற்று வழிகாட்டினால்,இன்சா அல்லாஹ் வெற்றி கிடைக்கும். நான் கடந்த ஆண்டு ரமளானில் டி.வி.நிகழ்ச்சியில் பார்த்தேன்.ஈரோடு முஸ்லிம் கல்விமாநாட்டில் நீலகிரி மாவட்ட கலைக்டர் சகோதரர் நசீம் என்பவர் சொற்பொழிவைக் கேட்டேன்.யன்காக ஸ்மார்ட்டாக இருத்த அவரின் அந்த பேச்சை எந்த அறிஞர் களிடமும் கேட்கவில்லை.இஸ்லாத்தையும் கல்வியையும் இணைத்து மிக அருமையாக பேசினார்.மேலும் அவர் சக்காத்தை வரைமுறை படுத்த வழி காண வேண்டும்.தனக்கு தெரிந்த வரை கோடிக்கணக்கில் சக்காத் கொடுக்கும் செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். இவற்றை செம்மையாக வரை முறை படுத்தினால்,இந்தியாவில் எந்த முஸ்லிமும் ஏழையாக இருக்கமாட்டான் என்றும் தனது பேச்சினூடே தெரிவித்தார். இவர்களைப் போன்ற கல்வியாளர்கள் கண்ணுக்குதெரியாமல் நிறையவே இருக்கிறார்கள்.இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து டாக்டர் அப்துல் கலாமை சந்திக்க வேண்டும் யார் முயற்ச்சி செய்வார்கள்.அல்லாஹ்விடம்தான் இந்த நல்ல நாளில் துவா செய்ய வேண்டும்.
தேசத்திற்கு எதிராக,வலிமை மிக்க ராணுவத்திற்கு,காவல் துறைக்கு எதிராக வெடிகுண்டை தூக்கும் இளைஞன் திருமண விசயத்தில் வரதட்சணைக்கு பெற்றோருக்கு பெட்டிப்பாம்பாய் அடங்குவது ஏன்? இன்சா அல்லா தொடருவோம்