திங்கள், 16 மே, 2011


மதஹபை முழுமையாக விசமி பின்பற்றத் தயாரா?

Sunday, May 15, 2011 10:43 PM Posted by பொய்யன் டிஜே0 comments


மார்க்கத்தை முழுமையாக அறியாத மந்தி, பிஜேவை மட்டும் எதிர்த்தால் போதும் என்ற நோக்குடைய கூட்டத்தில் சேர்ந்து கும்மியடிக்கும் விசமி தான் இந்த சம்சுதீன் காசுமி. இந்த விசமியின் கேடு கெட்டச் செயல்களை பட்டியலிட்டு காட்டி அவரது முகத்திரையை முந்தய பதிவில் கிழித்தோம்.
இந்த விசமி ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளித்த போது, வெறும் குர்ஆன் ஹதீஸை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆனாலும் நாம் தொழுகவே போகவே முடியாது. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றி அவர்களின் விளக்கத்தைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கான வீடியோ காட்சி.

ஒளு செய்வதற்கு எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிக்க வேண்டும் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள தெளிவான ஹதீஸ்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும்மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160
இதை விசமி படித்து விட்டே வேண்டுமென்றே மறைக்கிறார் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. மதஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என அடித்துச் சொல்லும் இவர், அதே இமாம்கள் எழுதிவைத்த குடும்பவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா? என பகிரங்மாக அறிவிக்கத் தயாரா?
1) ஹனபி மதஹபில் ஒரு பெண்ணை கன்னியா என கண்டுபிடிப்பதற்கு முட்டை பரிசோதனை ஒன்று கூறப்பட்டுள்ளது. மதஹபைப் பின்பற்ற வேண்டும் என மற்றவர்களை வலியுறுத்தும் இவர் தன் குடும்பப் பெண்களை யாராவது பெண் பார்க்க வரும் போது இதை அமுல்படுத்துவாரா?
2) ஹஜ்ஜில் இஹ்ராம் அனிந்த ஒரு ஆண் மகன், ஒருகழுதையுடன் உறவு கொண்டால் அவருக்கு ஒளு முறியாது, அதே நேரம் ஒரு பெண் கழுதையுடனோ அல்லது வெட்டிப்போட்ட கழுதையின் ஆண்குறியை வைத்தோ உறவை மேற்கொண்டால் அவளது ஒளு முறியும் என்ற மதஹபுச் சட்டத்தை தன்னுடைய மக்கா ஹஜ் சர்வீஸ் மூலம் சட்டமாக அமுல்படுத்த இந்த மவ்லானா தயாரா?
3) ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போய் விட்டால் அவள் 90 வருடம் இத்தா இருக்க வேண்டும் என்ற அதிபுத்திசாலி மதஹபு சட்டத்தை மக்கா ஷரியத் சார்பில் அமல்படுத்த தயாரா?
4) திருடச்செல்லும் இரண்டு பேர் ஒருவர் வெளியே நிற்க, மற்றவர் உள்ளே செல்ல, உள்ளே சென்றவர் பொருட்களை எடுத்து வெளியே போட, அதை வெளியே இருப்பவர் எடுத்துக் கொண்டு சென்றால் அது திருட்டு ஆகாது என்ற அறிவுப்பூர்வமான மதஹபு சட்டத்தை சம்சுதீன் காசிமி அவர்களின் வீட்டில் வந்து அமல்படுத்தினால் அவர் காவல்துறையில் கம்ப்ளைண்டு கொடுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தயாரா?
5) ஊமைப்பெண்ணைக் கற்பழித்தால் அவனுக்கு தண்டனை இல்லை என சொல்லும் அற்புதமான மதஹபுச் சட்டத்தை அண்ணன் காசிமி அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா?
6) குழந்தையைக் கடத்திச்சென்று நகை பறித்தால் அது குற்றமாகாது என்ற பிரமாதமான மதஹபுச் சட்டத்தை மவ்லானா மௌலவி அவர்களின் வீட்டுக்குழந்தைகள் மீது சோதனை செய்து பார்த்தால் மவ்லானா ரிஸ்க் எடுப்பாரா? அல்லது மவ்லானா என்ற கம்பெனி ரஸ்கைப் போல இருந்து விடுவாரா?
7) கராமத் (அற்புதம்) முறையில் மஸ்ரிக் மற்றும் மஹ்ரிப் (கிழக்கு மற்றும் மேற்கு) திசையில் இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டு 6 மாத்த்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற அற்புத மதஹபுச் சட்டத்தை மவ்லானா ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்திற்கு அமல்படுத்துவாரா?

இதுபோன்ற கேவலமான மதஹபுச் சட்டங்கள் இன்னும் 1000 இருக்கிறது. ஆனால் இது கொஞ்சமே போதும். இதையெல்லாம் அமுல்படுத்தினால் தான் விசமி உண்மையாகவே மதஹபைப் பின்பற்றுகிறார் என்று அர்த்தம். ஆனால் அதை நியாயப்படுத்த மேற்கண்ட கட்டளைகளை அவர் நடைமுறைப் படுத்த வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம். இந்த விசமி என்ன சொல்கிறது என்று!!!

9 கருத்துகள்:

  1. விளக்கம் தேவை

    http://nanmaivirumbi.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

    பதிலளிநீக்கு
  2. மத்ஹப்கள் தேவையில்லை என்றால் கீழ்க்கண்ட குர் ஆன் ஆயத்தில் உள்ள யகீன் என்ற வார்த்திக்கு குர் ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நேரடி விளக்கம் தரவும். இஜ்மா - ன் படி இந்த ஆயத்தில் உள்ள யகீன் என்ற வார்த்திக்கு மரணம் என்று அர்த்தம். பீஜேயின் தர்ஜுமாவிலும் இதே அர்த்தம் தான் செய்துள்ளார். யகீன் என்ற சொல்லுக்கு மரணம் என்று எங்கிருந்து எடுத்தீர்கள். குர் ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து மட்டும் விளக்கம் தரவும்.

    1. “உமக்கு யகீன் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக.” (15:99)

    பதிலளிநீக்கு
  3. மேலே நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸில் முகத்தை கழுவ வேண்டும் என்று உள்ளது. முகத்தை எது வரை கழுவ வேண்டும் அளவு என்ன? இதனால் தான் சம்சுதீன் காசிமி அவர்கள் ஒளுவினுடைய முழுமையான விஷயத்தை ஆய்வு செய்யாமல் சொல்லி விட முடியாது என்று கூறுகின்றார்கள். இதிலென்ன தவறு உள்ளது. இது தவிர onlinepj இணைய தளத்தில் தொழுகை (http://onlinepj.com/books/tholugai/) என்ற நூலில் கீழ்க்கண்ட தலைப்புகளில் விளக்கம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்ட ஒரு ஹதீஸ் மட்டும் போதுமே?
    1. கடல் நீரை கொண்டு ஒளு செய்யலாமா?
    2. பயன்படுத்திய தண்ணீர் கொண்டு ஒளு செய்யலாமா?
    3. வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர் கொண்டு ஒளு செய்யலாமா?
    4. சூடாக்கப்பட்ட தண்ணீர் கொண்டு ஒளு செய்யலாமா?
    5. உளூச் செய்யும் முறை

    பதிலளிநீக்கு
  4. உஸ்மான் அஸ்ஸலாமு அழைக்கும் ,உங்கள் கருத்துரைகளை நேற்றே பார்க்க நேர்ந்தது .முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு மாக்க கொள்கை களை எவ்வாறு பின்பற்ற வேண்டும்? உலக விசயங்களில் எதையெல்லாம் ஏற்கக் கூடாது என்பதை குரான் ஹதீத் அடிப்படையில் மட்டுமே ஆதாரம் கொள்ள வேண்டும்.குரான்ஹதில் உள்ள சொற்களுக்கு விளக்கங்கள் குரான் ஹதிதில் கிடைக்காவிட்டால் முஞ்சித் என்ற அரபுஅகராதியிளிருந்தும் பொருள் எடுத்துக் கொள்ளவதை தவறு காண முடியாது.ஆனால் எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு எதிராக குரான் ஹதித்கள் இருக்கக் கூடாது.இது ஒருபுறம் இருக்கட்டும்.தாங்கள் கூறிய யகீன் என்ற வார்த்தைக்கு ,தப்சீர் இப்னு கதிர் தமிழாக்கத்தில் பக்கம் 1071 இல் விளக்கம் உள்ளது."இங்கு யகீன் [உறுதி]என்பது இறப்பைக் குறிக்கும் என்று சாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர் [rah]அவர்கள் கூறினார்கள். ஸஹிஹ் புகாரி தமிழாக்கம் ஹதித் எண் 4706

    பதிலளிநீக்கு
  5. ///மேலே நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸில் முகத்தை கழுவ வேண்டும் என்று உள்ளது. முகத்தை எது வரை கழுவ வேண்டும் அளவு என்ன? இதனால் தான் சம்சுதீன் காசிமி அவர்கள் ஒளுவினுடைய முழுமையான விஷயத்தை ஆய்வு செய்யாமல் சொல்லி விட முடியாது என்று கூறுகின்றார்கள்.///
    முகத்தை கழுவ வேண்டும் என்று தெளிவாக உள்ளது .இதன் பின்னர் முகத்தை எதுவரை கழுவ வேண்டும் என்பது தேவையற்ற கேள்வி.முகத்தை என்றால் முகம் முழுவதும் கழுவ வேண்டும் என்பதை தெளிவாக புரிய முடிகிறது .இதில் ஆய்வு செய்ய என்ன வேண்டி கிடக்கிறது?
    எதை ஆய்வு செய்ய வேண்டுமோ அதை ஆய்வு செய்வதை விட்டு விட்டீர்களே !.ஹனபி மத்ஹபில் உள்ள ஏழு விசயங்களை காசிமி ஆய்வு செய்தாரா? அல்லது அவரை ஆய்வு செய்யுமாறு நீங்கள் வேண்டிநீர்களா? ஹதீதில் தெளிவாக கூறப்பட்டதை ஆய்வு செய்ய வேண்டும்
    மத்ஹபில் உள்ள மடத்தனத்தை அப்படியே ஏற்க வேண்டும் எனக் கூறும் ஹனபி இமாமுக்கு சம்பந்த மற்ற மத்ஹப் மயக்கம் உங்களுக்கு என்று தீருமோ ? காசிமியை நம்பாதீர்கள் பீஜெவையும் நம்பாதீர்கள் /குரான் ஹதித்கள் ஆங்கிலம் தமிழில் வந்துவிட்டன .அவற்றினை புரட்டுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. //இது தவிர onlinepj இணைய தளத்தில் தொழுகை (http://onlinepj.com/books/tholugai/) என்ற நூலில் கீழ்க்கண்ட தலைப்புகளில் விளக்கம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்ட ஒரு ஹதீஸ் மட்டும் போதுமே?
    1. கடல் நீரை கொண்டு ஒளு செய்யலாமா?
    2. பயன்படுத்திய தண்ணீர் கொண்டு ஒளு செய்யலாமா?
    3. வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர் கொண்டு ஒளு செய்யலாமா?
    4. சூடாக்கப்பட்ட தண்ணீர் கொண்டு ஒளு செய்யலாமா?
    5. உளூச் செய்யும் முறை///
    குறிப்பிட்ட ஒரு ஹதீது போதுமே என்று கூறியுள்ளீர்கள் .எதற்கு ஒரு ஹதீத் போதும் மற்ற ஹதீத்கள் தேவையில்லை என்று சொல்ல வருகிறீர்கள் என்பது புரிய வில்லை.கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. விளக்கம் தேவை

    http://nanmaivirumbi.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
    6 ஆகஸ்ட், 2011 3:12 am
    இங்கே பழைய விசயங்களை எடுத்து காட்டியுள்ளீர்கள்.இதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அதை சுருக்கமாக கேட்டால் பதில் சொல்லலாம் .பீ .ஜே பற்றி இந்த ஒரு தளத்தில் மட்டுமல்ல ,இன்னும் பல இணையதளங்களில் பலவாறு பக்கம் பக்கமாக எழுதியுள்ளார்கள் .அவற்றில் முக்கியமான பலருக்கு ஆன்லைன் பீஜே வில் பதில் சொல்லப்பட்டுள்ளது.இருப்பினும் னங்கள் கூறவரும் குற்றச்சாட்டை சுருக்கமாக சொன்னால் பதில் அளிக்க தயாராக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  8. வ அழைக்கும் ஸலாம்,
    இந்த ஆயத்திற்கு விளக்கம் குர் ஆன் ஹதீஸில் நேரடியாக இல்லை, மாறாக இஜ்மாவை(உலமாக்களின் கருத்து ) கொண்டுதான் விளங்க முடியும் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. இது மட்டுமல்ல இது போன்று பல சட்டங்கள் உள்ளன. இது உதாரணத்திற்கே.

    பதிலளிநீக்கு
  9. ///Usman சொன்னது…

    வ அழைக்கும் ஸலாம்,
    இந்த ஆயத்திற்கு விளக்கம் குர் ஆன் ஹதீஸில் நேரடியாக இல்லை, மாறாக இஜ்மாவை(உலமாக்களின் கருத்து ) கொண்டுதான் விளங்க முடியும் என்று ஒத்து கொண்டதற்கு நன்றி. இது மட்டுமல்ல இது போன்று பல சட்டங்கள் உள்ளன. இது உதாரணத்திற்கே.////
    9 ஆகஸ்ட், 2011 8:37 am /
    உங்களை அறியாமலே நான்கு மத்ஹப் இல்லாமல் குரானை விளங்க முடியும் என்பதை ஒப்புக் கொண்டீர்கள் .நன்றி என்று நான் சொல்ல விரும்பவில்லை.மாநபி வழியில் மத்ஹப்கள் என்று சொல்லிவிட்டு இப்படி உளறி கொட்டுவது சரியா?நான்கு மத்ஹப்களின் இமாம்கள் ஆய்வுகள் இல்லாமல் யகீன் என்ற சொல்லுக்கு அர்த்தம் காண முடியாது.என்பதை நிருபித்திருக்க வேண்டும் .இன்னும் நான் ஷகபாக்களின் விளக்கத்தை தந்தாலும் சஹாபாக்களின் இஜ்மாவை வைத்துத்தான் விளங்க முடியும் என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி என்றே தப்பி ஓடுவீர்கள் .
    ///1. “உமக்கு யகீன் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக.” (15:99)///
    நபி [ஸல்]அவர்கள் ஒரு முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியாசம் தொழுகைதான் என்று
    கூறியுள்ளார்கள்.இந்த ஹதிதின்படி பார்த்தால் முஸ்லிமாக இருப்பவன் சாகும் வரை இறைவனை வணங்க வேண்டும், ஆக இங்கே மரணத்தை குறிக்கும் முகமாகவே யகீன் என்ற சொல் வந்துள்ளது என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும் .இருப்பினும் அறிஞர்களின் கருத்தை முற்படுத்தும் நோக்கிலே தப்சீர் இப்னு கதிரில் உள்ளதை எடுத்துக் காட்டியுள்ளேன்.இன்னும் நாம் அரபு இலக்கணம் படித்து அதில் பாண்டித்தியமும் பெற்றிருந்தால் குரான் ஹதீதை விளங்கிக் கொள்ளமுடியும்.
    மத்ஹப் இல்லாமல் ஒழு செய்ய முடியாது என்று காசிமி கூறியது பச்சை பொய் என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டீர்கள்.ஹதிதில் தெளிவாக உள்ளதையே மறைக்கும் காசிமி விசமியா இல்லையா?
    மதஹபில் மயங்கும் உஸ்மானே ஹனபி இமாமின் கிதாபை காட்ட முடியுமா?
    பத்வா ஆலம்கீரி ,துர்ருல் முக்தார் ,ரத்துள் முக்தார் ஹிதாய போன்ற குப்பைகளை மார்க்கத்தின் பேரால் அரேங்கேற்றியுள்ள கொடுமைகளுக்கு என்ன பதில் சொல்ல வருகிறீர்கள்?
    ///இது மட்டுமல்ல இது போன்று பல சட்டங்கள் உள்ளன. இது உதாரணத்திற்கே.////
    இது சட்டமல்ல ,இது போன்ற எந்த சட்டங்களையும் நான்குமத்ஹப் இல்லாமல் விளங்க முடியும் என்பதற்கு யகீன் ஆயத்து ஒரு உதாரணமே .[இன்சா அல்லாஹ் தொடரும் ]

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.