வெள்ளி, 22 மார்ச், 2013

நல்ல?அடியார்களின் பொய்கள்


////காசியார் கூறிய பிரிந்து சென்றவர்கள் .  //
பிரிந்து சென்றவர்கள் அல்ல.ஒற்றுமை கோசத்தில் அல்லது வேசத்தில் பிரித்து சென்றவர்கள் எழுதியுள்ளார்கள் என்பதுதான் உண்மை .
////ஆனாலும் இதை ஒரு வேலைன்னு பழைய போட்டோ ஒன்றை எடுத்துட்டு வந்து, அதோடு இப்ப அடிச்ச நோட்டிசையும் இணைத்து இவரு சொந்தமா ஒரு தலைப்பு போட்டு கதைரெடி பண்ணி போட்டுள்ளார்./////
 நிர்வாகி இல்லாமல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் அதிக பங்கெடுக்கும் வைஸ் இப்ராஹிம் [அவர் உட்பட அனைத்து கமிட்டி உறுப்பினர்களுக்கும் வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளதை மறைத்து விட்டார்கள்] முகநூல் பதிவுகளிலிருந்து தான் வெட்டி ஒட்டியுள்ளேன் .அவர் இந்த ஆண்டில் நடந்த விழாவில் தொழ வராத வட்டி நிர்வாகி படமே வெளியாகியிருக்கையில் தனது தந்தையின் படம் வெளியிடப்படவில்லை என்பதால் பழைய படத்தை வெளியிட்டிருக்கலாம் .அதில் இப்திகார் இருப்பதை நான் கவனிக்கவில்லை தவறுதான் .வருத்தம் தெரிவிக்கிறேன் .இதில் பொய் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை .பொய்யும் இல்லை
ஆனால் இதில் ஆவேசப்பட்டுள்ளவர்கள் ,அந்த விழாவில் மவ்லவி .ஷேக் அப்துல் காதரும் ஷிர்க்கின் சிகரம் பைஜி ஆகியோர் என்ன பேசினார்கள் என்பதை தெரிந்து கொண்டு மார்க்க விழிப்புணர்வு கூட்டம் என்று நாடக மாடலாமா?
நபி[ஸல்] அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடக் கூடாது என்று எதில் கூறப்பட்டுள்ளது .இது மீளாது விழா அல்ல .மீண்டும் மீண்டும் நடக்கும் மீளும் விழாஎன்று  சதக்  கல்லூரி இமாம் பேசினாரா ,இல்லையா?
வாயில் பொய்யைத் தவிர வேறொன்றும் வராத ஷிர்க்கின் சிகரம் சர்க்காரின் சிஷ்யன் பொய்ஜி அவர்களை மேடையில் ஏற்றிவிட்டு பொய்யை பற்றி பேசலாமா? தவ்ஹீதை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்கிறதா?
மீலாது விழாவின் மகத்துவம் பற்றியும் அதன் அருமை பெருமைகளை ஆவேசமாக பேசினாரே ,அதை கண்டும் காணமல் இருந்த ஏகத்துவ நடிகர்களே !
ஏகத்துவ கொள்கைகளுக்கு மாற்றமாக பேசிய அவர்களை இடைமறிக்கும் தைரியம் உங்களுக்கு இருந்ததா?
இல்லையெனில் ,அவர்கள் பேசி முடித்ததும் நீங்களோ ,அல்லது இமாமைவைத்தோ அதே மேடையில் பதில் அளிக்கும்  தைரியம் இருந்ததா?

அல்லாஹ்வின் நல்லடியார்கள் இப்படி இஸ்லாத்திற்கு விரோதமான பேச்சை ரசித்து கொண்டிருப்பார்களா? அப்படியெனில் நீங்கள் நல்லடியார்களா ?கள்ள அடியார்களா?
நாங்கள் ஏகத்துவத்திற்கு எதிராக ,பீஜேவுக்கு எதிராக பள்ளிவாசலில் மற்றும் மீலாது விழாக்களில் சொற்பொழிவுகள் நடந்த பொழுது மேடையேறி எதிர்வாதம் வைத்திருக்கிறோம் .பேச்சை தொடர விடாமல் ஜமாலியின் சிஷ்யன் தாஜுத்தின் என்பவரை விரட்டிஅடித்திருக்கிறோம் .இன்னும் தர்கா மேடையிலே ஏறி ஹாமித் பக்ரிக்கு நேரில்  பதிலடி  கொடுத்திருக்கிறோம் .முஸ்தபா ரசாதி என்பவரை மேடையிலே விவாத ஒப்பந்தம் எழுதி ,அதன் பின்னர் அவர் விவாதத்திற்கு வராமல் இருத்ததை தொடர்கடிதம் எழுதி கடைசியில் பதில் தராமல் ஓடியதை அறிவீர்களா? உங்களை நம்பி மோசம் போன ஹாபிளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .
கடந்த ஆண்டு உள்ள போட்டா என்றால் ,கடந்த ஆண்டில் எப்படி நோட்டிஸ் வெளியிட்டீர்கள் என்பது தெரியவில்லை .அது பற்றிய உண்மையை சொல்லவேண்டும்.ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு சன்மார்க்க விழிப்புணர்வு கூட்டம் என்று நோட்டிஸ் பிரசுரித்து ,விழா மேடையில் மீலாது விழா என்று பேனர் கட்டவில்லையா?
அப்போது அல்லாஹ்வின் நல்லடியார்கள் ,கள்ள அடியார்களாக இருந்தார்களா?
/////Ø  பள்ளியில் ஒதப்பட்ட மௌலூதை நிறுத்த முடிந்ததா...?

Ø  பள்ளியில் மௌலூது ஓதாதவரை இமாமாக வைத்தாரா...?
Ø  பெருநாள் தொழுகையை திடலில் வைத்து நடத்த முடிந்ததா.....?(ஆனால் அவர் மட்டும் போய் தொழுவாராம்.)
Ø  ரமளானில் இறுதி பத்தில் தஹஜ்ஜத் தொழுகையாவது நடத்தினாரா...?
Ø  மீலாது விழா என்று இல்லாமல் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் என்றாவது மாற்ற முடிந்ததா...?  ///
இவற்றில் உள்ள பொய்களை இன்சாஅல்லா நாளை தோலுரிப்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.